பின்பற்றுபவர்கள்

8 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 3

பகுதி 1 பகுதி 2

பண்டைய மேற்கத்திய ஐரோப்பிய கிரேக்க மற்றும் ரோமன் பேரரசுகளின் இல்லங்களில் ஆண்கள் பெண்களுடன் தனது வாரிசுகளை உருவாக்க வேண்டுமென்ற காரணத்தினால் கூடினார்கள். உடலின்பத்திற்கு பல ஆண்கள் மற்ற ஆண்களை சார்ந்திருந்தார்கள் என்பது வராலாற்று வழி அறியவருவதாகும்.

ஆசிய நாடுகளில் பெண்களை உயர்வாக நடத்தினார்களா ? ஆசிய ஆண்களின் ஆண்மையின் பெருமை அவனுடைய அறிவுத் திறமை, உடல்பலம் மற்றும் எத்தனை மனைவியைக் கொண்டிருக்கிறான், எத்தனை குழந்தைகளைக் கொண்டிருக்கிறான் என்பதாக கட்டமைக்கப்பட்டிருந்தது. மற்றபடி ஆசிய ஆண்களும் பெண்களை சமாக நடத்தி இருக்கவில்லை. போரில் தோற்கும் இனங்களது பெண்களை அடிமையாகவும், மணந்து கொள்ளவும் முற்பட்டனர். அரபு நாடுகளில் இன்றும் பலதாரமணத்துக்கு வருமானத் தடைகள் தவிர்த்து மனதளவில் கூட தடையேதும் இல்லை.

இந்திய சமூகச் சூழலில் இராமயணம் மகாபாரதம் போன்றக் கதைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் பலதார மணம் இயல்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. (சீதை) பெண்களை கவர்ந்து செல்வதும், (பாஞ்சாலி)அவமானப்படுத்துவதும் செயல்களைக் காட்டி இருப்பதால் பெண் ஆணுக்கு அடிமைப்பட்டவளாகவே இருந்ததாள் என்று சொல்லாமல் தெரியவரும் செய்திகள். பெண்கள் நிறைந்திருக்கும் அந்தப்புரம் இல்லாத அரண்மனைகளே இல்லை என்பது போல் தான் கதைகளில் படிக்கிறோம். இந்திய சூழலில் தாய்மைக்கு முதன்மைத்துவம் கொடுத்திருந்தாலும் பெண் ஆணின் சொத்து என்பதாக நினைத்து கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏறச் செய்வது தமிழ் சூழலில் கூட இருந்ததற்கு சங்க இலக்கிய குறிப்புகள் உண்டு. ஆசிய ஆண்கள் பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாகவே நடத்தினர். தமிழ்ச் சூழலில் பலதார மணம் தவறு என்பதை சிலப்பதிகாரமும், கம்பைராமாயணமும் வழியுறுத்தி கட்டுபடுத்த முயன்றது.

மேற்கு நாடுகளில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக பெண்கள் சமமாக நடத்தப்படும் நிலையும் வளர்ந்தது, வெள்ளையர்கள் எங்கெல்லாம் ஆட்சியைப் பிடித்தார்களோ அங்கெல்லாம் அவர்களைப் பார்த்து பிற இனத்தினரும் ஒருதார மணத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டனர். கூடவே அவர்களிடம் இருந்த தற்பால் புணர்ச்சி வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிற இனத்தினரிடையேயும் பின்னபற்றப் பட்டது. ஆனால் இன்றும் கூட கிரமாத்தினரிடையே 'தற்பால் புணர்ச்சி செயல்கள் நகரங்களில் இருக்கிறது' என்று செய்தியாகச் சொன்னால் உடனடியாக முகம் சுளிப்பார்கள். கிராமத்தினரைப் பொருத்த அளவில் அது நினைத்துக் கூட பார்க்காத செயல்.

மேற்கத்திய நாகரீகத்தில் நாகரீகம் என்பது தனிமனித சுதந்திரம் என்று முன்வைக்கப்பட்டு, அது முதன்மையாக்கப்பட்டதால் அவர்களிடையே முன்பு இருந்த ஓர் பால் சேர்க்கை குறித்த சமூகக் கருத்துகளில் மாற்றம் ஏற்படவில்லை, அல்லது மாற்றுக்கருத்தே ஏற்படவில்லை என்றும் சொல்லலாம். பிறரை துன்புறுத்தவில்லை என்றால் பொது இடத்தில் நிர்வாணமாக நடக்க நினைப்பவருக்கு அந்த உரிமை உண்டு என்றே சொல்லுவார்கள். தனிமனித சுதந்திரம் பற்றிய மேற்கத்திய நாடுகளின் கொள்கை பிறநாடுகளுக்குப் பிடித்திருந்தாலும் தற்பால் சேர்க்கைகள் சமூகத்தில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கையில், முதலில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை, அப்படியே செய்து கொண்டாலும் குடும்பத்தில் நாட்டம் வைத்திருக்கமாட்டார்கள் என்று கருதி சமூக வளர்ச்சிக்கும் இன வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றெல்லாம் எண்ணி, தற்பால் புணர்ச்சிக்கு ஆசிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து மதங்களின் வழியான தடைகளை போட்டு வைத்திருந்தனர். வெளிப்படையாக் தற்பால் சேர்க்கையினர் செயல்படாவிட்டாலும், அரசாங்கம் எவருடைய படுக்கை அறையையும் கண்காணிக்கும் அளவுக்கெல்லாம் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்பதால் தற்பால் புணர்ச்சியினர் மறைமுகமாகவே இயங்கி வருகின்றனர்.

தற்பால் விருப்பர்கள் மறைமுகமாக செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. என்றாவது ஒரு நாள் வெளியே தெரியும் போது அது அவர்கள் சார்ந்துள்ள குடும்பத்திற்கே பெரிய தலைகுனிவு ஏற்படுத்தி உறவுச் சிக்கலை ஏற்படுத்துவதுடன், அத்தகைய விருப்பர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல்களை ஏற்படுத்திவிடும். நல்ல உடல் நிலையுடன், பொருளாதாரக் குறை எதுவும் இல்லாத ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் 1. காதல் / திருமணம் தோல்வி, 2. இரத்த சொந்தங்களிடம் / சிறுவர்களுடன் முறையற்ற பால் உறவு, 3 வெளியே தெரிந்த போன தற்பால் தொடர்புகள் இவற்றில் ஒன்று காரணமமக இருக்கும்.

பல்லாண்டு பழகிய மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர், வெளிநாடு செல்வதை முன்னிட்டு அவரை சந்தித்து, ஒரு மாலை பொழுதில் ஒரு உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே

"நாம நெருகமானவர்கள் தான் என்றாலும் என்கிட்ட எதாவது மறைத்து இருக்கியா ?" என்று கேட்டேன்

யோசித்துப் பார்த்துவிட்டு மெதுவாக

"ஆமாம்.....ஆனால் அதை நான் வெளியே சொல்ல முடியாது" என்றான்

"ம் நான் ஊகமாகச் சொல்கிறேன்....நண்பர்களிடம் மறைக்கக் கூடியது தனிப்பட்ட செக்ஸ் நடவடிக்கை அதுவும் சொல்லக் கூச்சமான பிரச்சனையாகத் தான் இருக்கனும்" என்றேன்

என்னை வியப்புடன் பார்த்தான்

"ஆமாம்.....நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன்..." என்றாலும், தயக்கத்துடன்

"தனித்து இருக்க வேண்டிய சூழலில் என்னுடைய 19 வயதில், என்னைவிட ஒரு வயது குறைந்த எனக்கு தங்கை முறை உள்ள சித்தியின் மகளுடன்.... முறை தவறி நடக்க முயற்சித்தேன்... அவள் இணங்கவில்லை, அதுவுமில்லாமல் வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டாள் தெரிஞ்சு போய் அவமானமாகிவிட்டது... முழுதாக தப்பு செய்யவில்லை என்றாலும் 'தங்கை முறை உள்ளவளிடம்....' அதை மறந்து நான் நார்மலாக ரொம்ப நாள் ஆச்சு" என்று சொன்னான்

வெகு சிலரே சட்டசிக்கல் இல்லாத அல்லது சிக்கலில் சிக்காத முறையற்ற, பால் உறவுகள் வெளியே தெரிந்துவிட்டால் அவமானத்துடன் மன அழுத்தத்துடன் மீண்டு வருவார்கள். பலர் தற்கொலை செய்து கொள்வதுண்டு. ஆண் பெண் ஈர்ப்புகளுக்கே சமூகம்/குடும்ப நல நோக்கில் இவ்வளவு சமூகக் கட்டுப்பாடு என்றால் தற்பால் புணர்ச்சி இந்திய சமூகத்தில்? முதலில் சமூகம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் கூட அதைப் பற்றி மூச்சுவிட முடியாது என்பதே அவர்களின் நிலை. உளவியல் பூர்வமாக அறிவுறுத்தி தடுக்க வேண்டியதை உணர்ச்சி பூர்வமாக அணுகினால் பெரும் சிக்கலும் உயிர் இழப்பும் தான் ஏற்படும். இரு பருவ வயதினரிடையே விருப்பத்துடன், சம்மதத்துடன் கூடிய தற்பால் புணர்ச்சி தவறா ? என்பதை தொடர்ந்து பேசுவோம்

தொடரும்...

பின்குறிப்பு : சமூக சூழலைப் பற்றிப் பேச உளவியல் படித்தவராக இருக்க வேண்டியதில்லை, எதையும் வழியுறுத்தவோ, அறிவுரையாகவோ சொல்லவில்லை, கண்டது கேட்டது படித்தது என்ற வகையில் சில மேற்கோள்களுடன் எழுதிவருகிறேன். தொடரில் தவறான தகவல்கள் / தகவல் பிழைகள் இருந்தால் குறிப்பிடும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

12 கருத்துகள்:

mraja1961 சொன்னது…

arumaiyaana pathivu vaazhthukkal.
anpudan
maharaja

ஷாகுல் சொன்னது…

//கோவியார் குத்து !
பஞ்சு பஞ்சாக இருக்கிறவரைக்கும் மரத்தின் சின்ன அசைவுக்கும் பறக்கும்...
அதுவே கயிறாக மா(ற்)றிவிட்டால் அந்த மரத்தையே இழுத்து சாய்க்கும்.//

என்னோட குத்து,

குஞ்சு குஞ்சாக இருக்கும் வரைதான் அதற்க்கு இரை. அதுவே (வளர்ந்து) பெரியதாகி விட்டால் நமக்கு இரைகுஞ்சு means கோழி குஞ்சு.

Chittoor Murugesan சொன்னது…

அருமையான முயற்சி. நீங்கள் 2009 க்கு வந்து இன்றைய கசப்பான உண்மைகளையும் எழுத வேண்டும். உதாரணமாக ஹோமோ செக்ஸுவல்ஸ்,சுய இன்பம்,ஆண்களில் ஆண்மை இழப்பு, பெண்கள் செக்ஸில் கடும் அதிருப்தியுற்று சேடிஸ்டுகளாக மாறும் நிலை, செக்ஸ் வர்க்கர்ஸுக்கு லைசென்ஸ் வழங்கலாமா கூடாதா போன்ற விஷயங்களையும் எழுதலாமே

பதி சொன்னது…

//கூடவே அவர்களிடம் இருந்த தற்பால் புணர்ச்சி வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிற இனத்தினரிடையேயும் பின்னபற்றப் பட்டது.//

தற்பால் புணர்ச்சி வழக்கங்களைப் பற்றி வெளிப்படையாக பேசுவது, மற்றும் அதுவும் தனது உரிமை சார்ந்த விசயமே போன்ற எண்ணங்களை வேண்டுமானால் மேற்கத்தியர்கள் பிற நாட்டினரிடம் ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், பழக்கத்தையே அவர்கள் தான் ஏற்படுத்தினார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

ஐயப்பனின் பிறப்பைக் குறித்த புராணக் கதைகள் வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம், ஆனால், தற்பால் புணர்ச்சி வழக்கங்கள் இல்லாத சமூகத்தில் அது போன்ற கற்பனை வாதக் கதைகள் சாத்தியமில்லையே???

நீங்கள் தற்போதைய நிலையை குறிக்க பயன்படுத்திய

//அரசாங்கம் எவருடைய படுக்கை அறையையும் கண்காணிக்கும் அளவுக்கெல்லாம் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்பதால் தற்பால் புணர்ச்சியினர் மறைமுகமாகவே இயங்கி வருகின்றனர்.//

வாக்கியம், பண்டைய சமூகத்திற்கும் பொருந்தும் என்பது என்னுடைய எண்ணம்...

பீர் | Peer சொன்னது…

கோ, நீங்க தைரியமா 'சிங்கை சித்த வைத்திய சாலை' ஆரம்பிக்கலாம்.

மணிகண்டன் சொன்னது…

முதல் பதிவும் மூணாவது பதிவும் சூப்பர். படம் எல்லாம் நல்லா இருக்கு. ரெண்டாவது பதிவு சரியில்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//mraja1961 said...
arumaiyaana pathivu vaazhthukkal.
anpudan
maharaja

4:44 PM, July 08,
//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஷாகுல் said...
//கோவியார் குத்து !
பஞ்சு பஞ்சாக இருக்கிறவரைக்கும் மரத்தின் சின்ன அசைவுக்கும் பறக்கும்...
அதுவே கயிறாக மா(ற்)றிவிட்டால் அந்த மரத்தையே இழுத்து சாய்க்கும்.//

என்னோட குத்து,

குஞ்சு குஞ்சாக இருக்கும் வரைதான் அதற்க்கு இரை. அதுவே (வளர்ந்து) பெரியதாகி விட்டால் நமக்கு இரைகுஞ்சு means கோழி குஞ்சு.
//

ஷாகுல் மைனர் குஞ்சை சொல்லவில்லை என்பது விளங்கிக் கொண்டேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//chittoor.S.Murugeshan said...
அருமையான முயற்சி. நீங்கள் 2009 க்கு வந்து இன்றைய கசப்பான உண்மைகளையும் எழுத வேண்டும். உதாரணமாக ஹோமோ செக்ஸுவல்ஸ்,சுய இன்பம்,ஆண்களில் ஆண்மை இழப்பு, பெண்கள் செக்ஸில் கடும் அதிருப்தியுற்று சேடிஸ்டுகளாக மாறும் நிலை, செக்ஸ் வர்க்கர்ஸுக்கு லைசென்ஸ் வழங்கலாமா கூடாதா போன்ற விஷயங்களையும் எழுதலாமே
//

நீங்கள் சொல்வது போன்றவற்றை உளவியளார்கள் பொது ஊடகங்களில் விவாதமாக நடத்தலாம். எனக்கு அது பற்றிய முழுமையான தகவல்கள் தெரியாது

கோவி.கண்ணன் சொன்னது…

//ஐயப்பனின் பிறப்பைக் குறித்த புராணக் கதைகள் வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம், ஆனால், தற்பால் புணர்ச்சி வழக்கங்கள் இல்லாத சமூகத்தில் அது போன்ற கற்பனை வாதக் கதைகள் சாத்தியமில்லையே???//

இது ஒரு தவறான திரிப்பாகத் தான் தெரிகிறது. ஐயப்பன் பிறப்பு ஆணும் ஆணும் கூடியதால் ஏற்பட்டது போன்று சொல்லப்படவில்லை. கிருஷ்ணன் முழுப்பெண்ணாக (மோகினியாக) மாறிதான் கூடியதாகச் சொல்கிறார்கள். ஆணும் ஆணும் வழக்கம் இருந்திருந்தால் மோகினி என்று சொல்லத் தேவையே இருக்காது

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
கோ, நீங்க தைரியமா 'சிங்கை சித்த வைத்திய சாலை' ஆரம்பிக்கலாம்.
//

:) எனக்கு களி / நூடுல்ஸ் திங்க ஆசை இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
முதல் பதிவும் மூணாவது பதிவும் சூப்பர். படம் எல்லாம் நல்லா இருக்கு. ரெண்டாவது பதிவு சரியில்ல.

3:51 AM, July 09, 2009
//

உங்களின் நேர்மையான கருத்துக்கு பாராட்டுகள். என் கருத்தக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் நானும் வழியுறுத்துவதில்லை. எண்ண ஓட்டங்களில் உள்ளவற்றை எழுதுகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்