
உயிரினங்களில் தாய்மை இனப்பெருக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதுடன் பெருக்கும் தன் இனங்களை தன்னிச்சையாக செயல்படும் வரை காப்பதற்கும் பொறுப்பேற்றுக் கொள்வதும் அதே இயற்கைத் தன்மை வழி சொல்லிக் கொடுக்காமல் நடைபெறும் ஒரு வியப்பு. ஒரு சில உயிரினங்களில் குட்டிகளை, குஞ்சுகளை ஆண் இனமும் பேணிக் காப்பது உண்டு. அவை

மனித இனத்தின் சிக்கல், ஆண் சமூகக் கட்டமைப்புதான். சமூகமாக வாழ்வதும், அதை அடையாளப்படுத்திக் கொள்வதும், அதையே முன்னிலைப் படுத்துக் கொள்வ விளைவதும் இதன் தொடர்ச்சிக்கு சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு தங்கள் சமூகப் பெண்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். ஆண் பெண் வேறுபாடுகள் சமூகத்தின் முதன்மைக் காரணியாக இருக்கின்றன. ஆண் பெண்ணிற்கு இயல்பாக இருக்க வேண்டிய ஈர்ப்பு, இந்த ஆணியக் கட்டமைப்புகளினால் ஆட்டம் கண்டு போனாதால் ஏற்பட்டதே மனித சமூகத்தில் ஓரின சேர்க்கைக்கான ஈர்ப்புகள் என்று கருதுகிறேன்.

பொதுவானவர்களிடம் ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ ஈர்ப்புகள் இருப்பது இல்லை என்றே சொல்ல முடியாது, பெரும்பாலும் தலைமை விசுவாசிகள் தலைவனின் செயல்பாட்டின் வழி தலைவன் மீது ஈர்ப்பு கொண்டிருப்பார்கள், ஆனால் அவை பாலியல் வேட்க்கையில் அடங்கும் ஈர்ப்பாக இருக்காது. அழகான ஆண்கள் யார் என்று கேட்டால் ஓரின பால் நாட்டம் இல்லாத ஆண்கள் கூட சில ஆண்களைக் குறிப்பிட்டு இவர்களெல்லாம் அழகானவர்கள் என்று சொல்வார்கள். அது அவர்களை மனதுக்குள் பாலியல் சார்ந்த ஈர்பாக நினைத்துக் கொள்கிறார்கள் என்று பொருள்படாது. மற்றபடி அவர்களின் உடலமைப்புடன், திறமை, நடவெடிக்கை ஆகியவற்றில் எதோ ஒன்றில் அவர்களைப் பிடித்திருக்கிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வகை ஒத்தபாலினர் ஒருவர் மீதான ஈர்ப்பு அவருடைய திறமையின் காரணாமாக ஏற்படும் ஒருவகை ரசனைத் தனமான ஈர்ப்பு அதன் பெயரில் அவர் மீது வைக்கும் அன்பு, அது மிகுதியாகும் போது வெறித்தனமான ரசிகர் ஆகிவிடுவார்கள். மற்றபடி பாலியல் ஈர்ப்பு என்ற உணர்வுக்குள் ஒத்த பாலினர் மீது கொண்டுள்ள ரசனை வந்துவிடாது, எவை எவையெல்லாம் தற்பால் நாட்டத்தில் வராது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
ஓரிணப் புணர்ச்சி விருப்பர்கள் ஒத்தப் பாலினரை விரும்புவதற்கான காரணங்கள் சமூக, உளவியல் காரணிகளை உள்ளடக்கியது. ஒரினப் புணர்ச்சியின் மீதான நாட்டம் சிலருக்கு ஏற்படுவது இயற்கைதான், அவர்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கொடுக்கலாம் என்கிறார்கள்,

சில நாடுகளில் கொடுத்தும் இருக்கிறார்கள். ஓரின புணர்ச்சி நாட்டம் இயற்கை என்று சொல்வதை ஏற்றுக் கொள்வது கடினாமாக இருக்கிறது, மனித வாழ்க்கையே இயற்கைக்கு எதிரான பல்வேறு போராட்டம் தான், இயற்கை நமக்கு எதிராக இருக்கும் போது மாற்றி அமைத்துக் கொண்டு அல்லது அதிலிருந்து பாதுகாத்துக் கொண்டே வாழ்கிறோம். ஓர்பாலின ஈர்ப்பு இயற்கை என்றாலும் அதைத் தொடர்வது சமூகத்திற்கும், இயற்கையில் அமைந்த ஆண்/பெண் உடலமைப்புகள், இனப்பெருக்கம் மனித இனத் தொடர்ச்சி இவற்றிற்கு எதிரானது என்றே கருதுகிறேன். இவை பற்றி தொடர்ந்து பேசுவோம்
தொடரும்...
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
22 கருத்துகள்:
சரிங்க...
அருமையான ஒரு பதிவு
இது போன்ற பதிவுகள் தொடர்ந்து போடுங்க
நல்லா இருக்கு
வாங்க என் பக்கத்துக்கு
பேசுவோம்!!
///ஓர்பாலின ஈர்ப்பு இயற்கை என்றாலும் அதைத் தொடர்வது சமூகத்திற்கும், இயற்கையில் அமைந்த ஆண்/பெண் உடலமைப்புகள், இனப்பெருக்கம் மனித இனத் தொடர்ச்சி இவற்றிற்கு எதிரானது என்றே கருதுகிறேன்.///
நீங்கள் சொல்வது சரி தான் என்றாலும், ஓரினச்சேர்க்கயாளர்கள் தங்கள் விருபத்திற்க்கு இணைகிறார்கள், அப்படி அவர்களுக்கு குழந்தை வேண்டுமென்றால் இப்பொழுதிருக்கும் நிலையில் பல அனாதை மற்றும் ஏழை குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ளலாம்...ஓரின சேர்க்கயாளர்கள் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறார்கள், எனக்கு தெரிந்து இது வரை மக்கள்தொகை பெருத்திருக்கிரதே ஒழிய குறைந்தபாடில்லை, இருந்தாலும் இதை பற்றிய உங்கள் பிற பதிவகளை எதிர்பார்க்கிறேன்..
கடந்த ஒரு வாரமாக வலையுலகில் ஒரினச்சேர்க்கை பற்றியே விவாதம் நடக்கிறது.
//இது போன்ற பதிவுகள் தொடர்ந்து போடுங்க
நல்லா இருக்கு //
நல்லாருக்கா? என்னது இது?
ஓர்பாலின ஈர்ப்பு இயற்கை என்றாலும் அதைத் தொடர்வது சமூகத்திற்கும், இயற்கையில் அமைந்த ஆண்/பெண் உடலமைப்புகள், இனப்பெருக்கம் மனித இனத் தொடர்ச்சி இவற்றிற்கு எதிரானது என்றே கருதுகிறேன். //
இந்த சமூகம், மனித இனத் தொடர்ச்சின்னு சொல்றதெல்லாம் வெறும் Hypocrisy கண்ணன். இரண்டு உடல்கள் இணைவதால் கிடைக்கும் இன்பத்திற்கும் இவற்றிற்கெல்லாம் என்ன தொடர்பு? ஒன்றுமேயில்லை.
//தன்னுடைய உணர்ச்சிகளே முதன்மை வாய்ந்தவை என்கிற தன்னலம், //
இயற்கையின் வழி செல்லாமல், ஓரினச் சேர்க்கை என்பது கனியிருக்க
காயை விரும்புவது போல என நினைக்கிறேன்.,
தங்களின் கருத்துகளை பாராட்டுகிறேன்
ஓரின சேர்க்கை பற்றி எனக்கு ஒரே குழப்பம்தான்.. இது ஒரு மன சம்ந்தப்பட்ட வியாதியா? இதில்தான் ஒரு குழப்பம். இதை முழுமையாக யாரும் தீர்வு சொல்லவில்லை ஏன் என்றே புரிவதில்லை.. அதே போல் திருநங்கைகளை பற்றியும் சரியாக சொல்லவில்லை.. ஆண்கள் மட்டுமே மாற்று பாலில் ஈர்ப்பு இருப்பதாக சொல்கின்றார்கள். பெண்களில் ஏன் இல்லை. இருந்தாலும் ஏன் தெரிவதில்லை? எல்லாமே இன்னும் விடையில்லா குழப்பங்கள்......
//ஆ.ஞானசேகரன் 8:39 PM, July 06, 2009
ஓரின சேர்க்கை பற்றி எனக்கு ஒரே குழப்பம்தான்.. இது ஒரு மன சம்ந்தப்பட்ட வியாதியா? //
என் கருத்து நிச்சயமாய் மனவியாதிதான்., கோவியாரின் கருத்துக்கு காத்திருப்போம்
நல்ல அலசல்,
தொடருங்கள் , எதிர்பார்க்கிறோம்.
நம்ம பக்கமும் வாங்க.
ஓரினச்சேர்க்கையில் யாரும் விரும்பி ஈடுபடவில்லை என்றே கருதுகிறேன். அப்படியான ஒரு உறவுக்குள் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். நான் நினைக்கிறேன் "பயர்(Fire)" திரைப்படம் அந்த காரணிகளை மிகவும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளது. ஒவ்வொருவரின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு அளிக்கின்ற போது இப்படியான சில சமூக பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லாமல் போய்விடுமல்லவா?
இனப்பெருக்கம் உடல் தேவையின் விளைவு. ஆனால் உடல் தேவைக்கு புணர்ச்சி ஒன்றே வடிகால் அல்ல. இருவர் சேர்ந்து உடல் தேவையை நிறைவேற்றிக் கொண்டால் புணர்ச்சி, இது சரியா தவறா இட்டீடு செய்கிறோம். தானே தன் தேவையை நிறைவேற்றிக் கொண்டால்? தவறு இல்லை என்றே மருத்துவம் சொல்கிறது.
இயற்கைக்கு மாறானது என்பதை விட இயற்கையை உணராது இருந்திருக்கிறோம் என்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது அல்லவா?
தானே இன்பம் காண்பது, கூட்டுப் புணர்ச்சி சிம்பன்சிகளிடம் மிக இயல்பானது. விலங்கு மனிதன் வேறுபாட்டைக் காண்பித்தால் ஜோசப் சொன்ன மறுமொழி தான் விடை.
அடிப்படை ஒன்றே ஒன்று தான். அடுத்தவருக்கு இடையூறு இல்லாது உன் வழியைப் பார்த்துக் கொள்.
/விஜய் ஆனந்த் said...
சரிங்க...
//
சரிடா...
:)
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான ஒரு பதிவு
இது போன்ற பதிவுகள் தொடர்ந்து போடுங்க
நல்லா இருக்கு
வாங்க என் பக்கத்துக்கு
//
பாராட்டுக்கு நன்றி ஸ்டார்ஜன்
//அப்பாவி முரு said...
பேசுவோம்!!
2:52 PM, July 06, 2009
//
அடுத்த அடுத்த பகுதிக்கு ஆளைக்காணுமே ஏன் ?
//Vinod's DB2/Z Page said...
நீங்கள் சொல்வது சரி தான் என்றாலும், ஓரினச்சேர்க்கயாளர்கள் தங்கள் விருபத்திற்க்கு இணைகிறார்கள், அப்படி அவர்களுக்கு குழந்தை வேண்டுமென்றால் இப்பொழுதிருக்கும் நிலையில் பல அனாதை மற்றும் ஏழை குழந்தைகளை தத்தெடுத்துக்கொள்ளலாம்.//
இவர்களை நம்பி யாரும் தத்துக் கொடுக்கத் ஆயத்தமாக மாட்டார்கள் என்பது தான் உண்மை. இவர்களுக்கு குழந்தைவளர்ப்பில் ஆர்வம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.
//..ஓரின சேர்க்கயாளர்கள் மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருக்கிறார்கள், எனக்கு தெரிந்து இது வரை மக்கள்தொகை பெருத்திருக்கிரதே ஒழிய குறைந்தபாடில்லை, இருந்தாலும் இதை பற்றிய உங்கள் பிற பதிவகளை எதிர்பார்க்கிறேன்..
//
மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஓரினசேர்க்கையாளர்கள் காரணம் இல்லை. கட்டுபடுவதற்கு வேண்டுமானால் (மறைமுக) காரணமாக இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.
நான் அறிந்தவற்றை தொடர்ந்து எழுதுகிறேன். பின்னூட்டத்திற்கு நன்றி !
//ஷாகுல் said...
கடந்த ஒரு வாரமாக வலையுலகில் ஒரினச்சேர்க்கை பற்றியே விவாதம் நடக்கிறது.
//
இந்த தொடரில் அதுபற்றியும் வரும் ஆனால் அதுமட்டுமே வராது.
:)
//டி.பி.ஆர் said... இந்த சமூகம், மனித இனத் தொடர்ச்சின்னு சொல்றதெல்லாம் வெறும் Hypocrisy கண்ணன். இரண்டு உடல்கள் இணைவதால் கிடைக்கும் இன்பத்திற்கும் இவற்றிற்கெல்லாம் என்ன தொடர்பு? ஒன்றுமேயில்லை.
6:38 PM, July 06, 2009
//
டிபிஆர் ஐயா,
அதுபற்றியும் சுட்டிக்காட்டி எழுதுவேன்.
///நிகழ்காலத்தில்... said...
இயற்கையின் வழி செல்லாமல், ஓரினச் சேர்க்கை என்பது கனியிருக்க
காயை விரும்புவது போல என நினைக்கிறேன்.,//
மனைவி இருக்க மாற்றாளை நாடுவதும் சரியா ? நாம வசதிக்கேற்ப பழமொழிகளை சொல்கிறோம். பால் உணர்வுகள் மனம் தொடர்புடையது ஒரேடியாக சரி/தவறு என்று சொல்லிவிட முடியாது.
//தங்களின் கருத்துகளை பாராட்டுகிறேன்
7:28 PM, July 06, 2009
//
தங்களுக்கும் பாராட்டுகள்.
// அக்பர் said...
நல்ல அலசல்,
தொடருங்கள் , எதிர்பார்க்கிறோம்.
நம்ம பக்கமும் வாங்க.
//
நன்றி !
//கதியால் said...
ஓரினச்சேர்க்கையில் யாரும் விரும்பி ஈடுபடவில்லை என்றே கருதுகிறேன். அப்படியான ஒரு உறவுக்குள் அவர்கள் தள்ளப்படுகிறார்கள். நான் நினைக்கிறேன் "பயர்(Fire)" திரைப்படம் அந்த காரணிகளை மிகவும் ஆணித்தரமாக பதிவு செய்துள்ளது. ஒவ்வொருவரின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு அளிக்கின்ற போது இப்படியான சில சமூக பிரச்சினைகள் எழ வாய்ப்பில்லாமல் போய்விடுமல்லவா?
//
ஒருவர் தன்னிச்சைபடி அப்படி ஆனார்கள் என்று சொல்வதைவிட
பிறரால் ஈடுபடுத்தப்பட்டு, அல்லது தூண்டப்பட்டு ஓரின சேர்கையாளர்களாக மாறுவதே மிகுதி என்றே சொல்கிறார்கள்.
//முகவை மைந்தன் said...
இனப்பெருக்கம் உடல் தேவையின் விளைவு. ஆனால் உடல் தேவைக்கு புணர்ச்சி ஒன்றே வடிகால் அல்ல. இருவர் சேர்ந்து உடல் தேவையை நிறைவேற்றிக் கொண்டால் புணர்ச்சி, இது சரியா தவறா இட்டீடு செய்கிறோம். தானே தன் தேவையை நிறைவேற்றிக் கொண்டால்? தவறு இல்லை என்றே மருத்துவம் சொல்கிறது.
இயற்கைக்கு மாறானது என்பதை விட இயற்கையை உணராது இருந்திருக்கிறோம் என்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது அல்லவா?
தானே இன்பம் காண்பது, கூட்டுப் புணர்ச்சி சிம்பன்சிகளிடம் மிக இயல்பானது. விலங்கு மனிதன் வேறுபாட்டைக் காண்பித்தால் ஜோசப் சொன்ன மறுமொழி தான் விடை.
அடிப்படை ஒன்றே ஒன்று தான். அடுத்தவருக்கு இடையூறு இல்லாது உன் வழியைப் பார்த்துக் கொள்.
1:01 PM, July 07, 2009
//
நல்ல கருத்துகள் தான், ஆனால் அவை ஏன் தவறு என்று சொல்லப்படுகிறது என்பதிலும் சரியான சமூக காரணங்கள் உண்டு.
கருத்துரையிடுக