பின்பற்றுபவர்கள்

1 நவம்பர், 2007

மதன் சாவலின் சக்கர வியூகம் !

குழந்தை வயிற்றுக்குள்ளேயே கதை கேட்ட கதை வடமொழி இதிகாசத்தில் இரண்டு இருக்கிறது. இரண்ய கசிபுவின் மகன் பிரகலாதனும், அர்சுனன் மகன் அபிமன்யுவும் கருவாக இருக்கும் போதே கதை கேட்டவர்களாம். பிரகலாதன் நாரதரிடம் கதை கேட்டு தந்தை சொல் மந்திரத்தை விட நாராயண நாமம் சிறந்ததாக சொன்னான், அதனாலேயே தன் தந்தை அழிவுக்கு காரணமாக இருந்தான். அந்த கதையின் முடிவில் தான் நரசிம்ம அவதாரம். மற்றொரு கதை அபிமன்யு பற்றியது, மகாபாரத கிருஷ்ணன் அபிமன்யுக்கு தாய்மாமன். கிருஷ்ணனின் தங்கையும் அர்சுனனின் மனைவியுமான சுபத்திரா கர்பமுற்று இருந்த போது கிருஷ்ணன் போர் முறைகள் பற்றியும், வகுக்கும் வியூகங்கள் பற்றியும் கதை சொல்லிக் கொண்டிருந்தார். அதில் சக்ரவியூகம் பற்றி சொல்லும் போது ... சக்ர வியூகம் என்பது சக்கர வடிவில் இருக்கும்... போர் வீரர்கள் வட்டமாக சூழ்ந்து கொண்டு உள்ளே சிக்கியவர்களை ரவுண்டு கட்டி அடிப்பது. அதில் வெற்றிகரமாக நுழைந்து, தந்திரமாக போர் செய்தால் வியூகத்தை உடைத்து அனைத்து வீரர்களையும் கொன்று விடமுடியுமாம். மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான். சக்ர வியூகத்தில் உள்ளே எந்த பக்கமாக ... லாவகமாக நுழைவது எப்படி என்று சொல்லிக்கொண்டிருந்தார். அப்படி சக்கர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும் போதே கேட்டுக் கொண்டிருந்த சுபத்திரா நன்றாக தூங்கிவிட்டாள்,

ஆனால் கதை போக்கை 'உம்...' கொட்டி கேட்கும் ஒலி மட்டும் வந்து கொண்டிருந்ததாம். திடுக்கிட்ட கிருஷ்ணன் ஞான திருஷ்டியில் பார்த்த போது வயிற்றில் இருக்கும் குழந்தை கேட்டுக் கொண்டிருந்த்தை அறிந்து சுதாரித்தாராம். 'இவன் அபிமன்யு...மாபெரும் வீரனாக வருவான்...வரும் பாரத போரில் எதிரிகள் அனைவரையும் அழிக்கும் ஆற்றல் பெற்றவன்...இவனுக்கு சக்கர வியூகத்தை அழிப்பது என்று சொல்லிவிட்டால் பதினெட்டு நாள் யுத்தம் ஒரு பொழுதில் முடிந்துவிடும்.மேலும் அழிக்க முடியாத சக்தி ஆகிவிடுவான் என்று எண்ணி கதையை சொல்வதை நிப்பாட்டிவிட்டாராம். ( சிலர் பத்ம வியூகம் என்றும் சொல்கிறார்கள் எது சரி என்று தெரியவில்லை

அதுபோல் பாரத போர் நடந்த போது 13 ஆம் நாள் யுத்தத்தில் அபிமன்யு தந்திரமாக சக்கர வியூகத்தினுள் நுழைந்துவிட்டான். ஆனால் உள்ளே சென்றதும் தாக்குதல்களை தாக்குபிடிக்க முடியாமல் ஆயுதங்களை கீழே எறிந்துவிட்டு நிராயுதபாணியாக நின்றான். இதுதான் சமயம் என்று சூழ்ந்து பல்முனை தாக்குதல் செய்து அவன் கதை முடிக்கப்பட்டது. அபிமன்யு தானாகவேதான் சென்று சிக்கிக் கொண்டான். அனால் உள்ளே நுழைந்து அழிந்ததற்கு பின்னால் சக்கர வியூக உத்தியை பற்றி சொல்லும் போது பாதியில் நிறுத்திய கிருஷ்ணனின் சூழ்ச்சியும் இருக்கிறது.

******

எந்த பாவமோ, போரோ செய்யாத அப்பாவிகளை, இஸ்லாமிய சமயம் சார்ந்தவர்கள் என்பதற்காகவே ... அவர்கள் பயத்தில் கையெடுத்து கும்பிட்டு ... நிராயுதபாணியாக நின்றவர்களை நிர்வாணப்படுத்தி, வயிற்றை கிழித்து, உறுப்பை சீவி கொன்றதை ... வியூகம் அமைத்துக் (ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டு) கொன்றதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்... கர்பினிப் பெண்ணின் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை கதையை கேட்டு நாளை தங்களை அழித்துவிடும் என்று நினைத்திருப்பார்களோ ?

மதன் சாவல் பா.ஜ.க. தொண்டர்:
முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஓடினோம். அவர்களை எல்லாம் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாப்ரி தன்னுடைய வீட்டுக்குள் அழைத்துப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். உடனே நாங்கள் ஆயுதங்களுடன் அந்த வீட்டை முற்றுகையிட்டோம். உடனே அவர் பணத்தைக் கொண்டுவந்து கொடுத்து எங்களையெல்லாம் கலைந்து போகச் சொன்னார். நாங்களும் சரி என்றோம். அவர் பணத்தைத் தருவதற்காகக் கதவைத் திறந்ததும் விருட்டென வீட்டுக்குள் நுழைந்துவிட்டோம். உடனடியாக இருவர் அவரை மடக்கிப் பிடிக்க, அவருடைய கையை நான் வெட்டினேன். அவருடைய ஆண்குறியையும் வெட்டினேன். பிறகு அவரைத் துண்டு துண்டாக வெட்டி வீசிவிட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். மோடியின் முயற்சியால்தான் எங்களால் சிறையில் இருந்து வெளியே வர முடிந்தது. நீதிபதிகளை இடமாற்றம் செய்து, வசதியான நீதிபதிகளை பணியிலமர்த்தியதால் எங்களுக்கு சுலபமாக ஜாமீன் கிடைத்தது.

பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி:

வழியில் தென்பட்ட கர்ப்பிணிப் பெண் முஸ்லிம் என்று தெரிந்ததும் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அவளுடைய வயிற்றில் குத்தினேன். உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து வீசி எறிந்தேன்.
பேய் நாடாண்டால் பிணம் தின்னும் ... :(

4 கருத்துகள்:

Veera சொன்னது…

இவங்களுக்கெல்லாம், "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" சட்டம்தான் சரி. அவங்க அப்பாவி மக்களுக்கு என்ன செஞ்சாங்களோ, அதயே அவங்களுக்கு திரும்ப செய்யனும். அப்பத்தான், இதே தப்ப அடுத்தவன் பண்ண மாட்டான்.

குமரன் (Kumaran) சொன்னது…

கர்ப்பிணிப் பெண்ணோ யாரோ, நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பை அறுத்துக் கொன்றார்களோ ஒரே வீச்சில் வாள் வீசிக் கொன்றார்களோ எப்படி இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியாது. கேட்பவருக்கும் படிப்பவருக்கும் பெருந்துன்பத்தைக் கொடுக்கக் கூடியது. அப்படியிருக்க கர்ப்பிணியைக் கொன்றதையும் நிர்வாண/மானபங்கப்படுத்திக் கொன்றதையும் படிக்கும் போது பெருந்துன்பத்தோடு வெறுப்பும் மூண்டு எழுகிறது.

இவன் செய்கிறான் என்று அவனும் அவன் செய்கிறான் என்று இவனும் என்று எந்த மதத்தவராயினும் எந்தப் பிரிவினராயினும் இப்படி வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்; தவிர்க்க வேண்டும்; கண்டிக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

Collapse comments

//வீர சுந்தர் said...
இவங்களுக்கெல்லாம், "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" சட்டம்தான் சரி. அவங்க அப்பாவி மக்களுக்கு என்ன செஞ்சாங்களோ, அதயே அவங்களுக்கு திரும்ப செய்யனும். அப்பத்தான், இதே தப்ப அடுத்தவன் பண்ண மாட்டான்.
//

வீர சுந்தர்,
ஓட ஒட விரட்டினாலே போதும், அதன் பிறகு துணியைக் காணும் என்று ஓடுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
கர்ப்பிணிப் பெண்ணோ யாரோ, நிர்வாணப்படுத்தி ஆணுறுப்பை அறுத்துக் கொன்றார்களோ ஒரே வீச்சில் வாள் வீசிக் கொன்றார்களோ எப்படி இருந்தாலும் கொலையை நியாயப்படுத்த முடியாது. கேட்பவருக்கும் படிப்பவருக்கும் பெருந்துன்பத்தைக் கொடுக்கக் கூடியது. அப்படியிருக்க கர்ப்பிணியைக் கொன்றதையும் நிர்வாண/மானபங்கப்படுத்திக் கொன்றதையும் படிக்கும் போது பெருந்துன்பத்தோடு வெறுப்பும் மூண்டு எழுகிறது.

இவன் செய்கிறான் என்று அவனும் அவன் செய்கிறான் என்று இவனும் என்று எந்த மதத்தவராயினும் எந்தப் பிரிவினராயினும் இப்படி வன்முறையில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும்; தவிர்க்க வேண்டும்; கண்டிக்க வேண்டும்.
//

குமரன்,
சரியான கருத்து, மதம் என்ற மையை கண்ணுக்குள் போட்டுக் கொண்டு இருந்தால் மனிதம் செத்துவிடும். மனிதர்களே இல்லாத போது மதம் ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்