பின்பற்றுபவர்கள்

23 அக்டோபர், 2012

ராஜன்லீக்ஸ் செய்த தவறு !


பிரபலங்கள் டிவிட்டுகிறார்கள், பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் அவர்களை பாலோ செய்யும் வழக்கம் எனக்கு இல்லை, தொலைகாட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு பிரபலங்களின் கருத்து முக்கியமானதாக இருக்கலாம், ஊடகங்கள் பிரபலங்களின் பின்னால் செல்லட்டும், நமக்கு தேவை நம்மைப் போன்றவர்களின் கருத்துகள் எத்தகையது என்று அவர்களிடம் நம் கருத்தை பகுர்ந்து கொள்ளலாம் என்பதால் தான் வலைப்பதிவில் எழுதுவதை விருப்பத்துடன் பொழுது போக்காகவும் செய்துவருகிறேன், வலைப்பதிவு போன்ற பொது ஊடகத்தில் கருத்து செல்பவர்கள் பிரபலங்கள் என்றாலும் அவர்களுடைய கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து முன்வைக்கப்படும் பொழுது அதை எதிர்கொள்வார்கள் என்ற மனநிலையில் பிரபலங்களைப் பின் தொடருவர்கள் பட்டியல் மிகப் பெரியது, அதற்கான பலனைத்தான் இராஜன் மற்றும் பிறர் எதிர் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது, 

சாமானியர்கள் காவல் துறையிடம் தங்கள் பிரச்சனைகளை முறையிட்டால் காது கொடுத்துக் கேட்டு நடவடிக்கை எடுக்க நேரமில்லாமல் இருக்கும் காவல்துறை பிரபலங்கள் முறையிட்டால் உடனேயே நடவடிக்கை எடுத்துவிடுமாம், எனக்கு தெரிந்து காவல் துறையினருக்கு ஊதியம் கொடுப்பது பிரபலங்கள் இல்லை, பொதுமக்கள் வரிப்பணம் தான் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது, ஆனால் பிரபலங்களுக்கு சேவை செய்வதற்கு கொடுக்கும் முன்னிரிமையை மற்றவர்களுக்கு கிஞ்சித்துக் கொடுப்பதில்லை, எனவே வலைப்பதிவு அல்லது டிவிட்டர் போன்ற ஊடகங்களில் இடம் பெறும் பிரபலங்களைச் சீண்டுவது அல்லது எதிர்கருத்து சொல்வதெல்லாம் யோசித்து செய்ய வேண்டிய ஒன்றே நடந்த நிகழ்வு பாடமாக ஆக்கியுள்ளது.

"பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது." - சின்மயி

இட ஒதுக்கீடு குறித்து இவர் டிவிட்டரில் பகிர்ந்த தனிப்பட்ட கருத்துகளுக்கு இவர் வருத்தம் தெரிவித்தது போலவும், இட ஒதுக்கீடு குறித்து இவர் தவறாக விளங்கிக் கொண்டது போலவும் எந்தக் கருத்தும் இவரது விளக்கங்களில் இல்லை, மாறாக நீங்களும் அப்படித்தான் நினைக்கக் கூடும் என்றே எழுதி இருக்கிறார், இட ஒதுகீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்பட்டவர்களுக்கும் பிடிங்கிக் கொடுக்கப்படும் அல்லது பார்பனர்களிடம் அபகரிக்கப்பட்ட சொத்து போன்று தான் இவர்கள் கருத்து கொண்டிருக்கிறார்கள், இத்தகைய புரிந்துணர்வு உள்ளவர்களிடம் விவாதம் செய்வதும் பின் தொடர்வதனாலும் சமூகத்திற்கு என்ன பலன் ?  திராவிட இயக்கங்கள் காலம் காலமாக இது பற்றிப் பேசி வந்திருந்தாலும் பார்பனர்களின் எத்தனை பேர் இட ஒதுக்கீடு பற்றி சரியான புரிந்துணர்விற்கு வந்திருக்கிறார்கள், இராஜன் போன்றவர்கள் ஏன் இவர்களிடம் போய் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும் ? மாறாக முற்றிலுமாக புறக்கணித்திருக்கலாமே. தினமலர் போன்ற பார்பன ஊடகங்களைப் படிக்கும் பொழுது நமக்கு தேவையற்ற இரத்த அழுத்தம் ஏற்படலாம் என்று நான் அவற்றைப் படிப்பதை முற்றிலும் தவிர்த்தே வருகிறேன், வலைப்பதிவிலும், கூகுள் ப்ளஸிலும் பார்பனிய கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள் இணைந்திருந்தாலும் நான் அவர்களை பின் தொடர்வது கிடையாது,

சமூகத்தில் பெண்ணுக்கு எதிரான அதுவும் பெண் பிரபலமென்றால் உடனேயே நடவடிக்கை அரசு எந்திரங்கள் உண்டு, காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கைதி காவல் துறையினாலே பாலியல் வண்முறை செய்யப்படும் நாட்டில் தான் இத்தகைய பெண் உரிமைகாவலர்களும் இருக்கிறார்கள் என்று நாம் பெருமைப் பட வேண்டும்.

பிரபலங்களை அதுவும் பெண் பிரபலங்களை பின் தொடர்ந்து சூடுபோட்டுக் கொள்ளாதீர்கள், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இருக்கும் பொழுது அரசு எந்திரங்களை காவலாக வைத்திருப்பவர்களிடம் உங்கள் உரையாடல்கள் தேவை தானா ?

வலைப்பதிவில் பெண்கள் அதிக அளவில் எழுதுவது மகிழ்ச்சி அளித்தாலும் ஒரு பெண்ணாக நான் அசிங்கப்பட்டேன், ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறார்கள் என்கிற பரப்புரைகள் உண்மையிலேயே பெண்கள் எழுதுவதை முடக்கிவிடும். எதாவது பிரச்சனை என்று வரும் பொழுது அதை எளிதாக திசைத் திருப்பும் ஆபத்தாக 'பெண்ணென்றும் பாராமல் என்னை இழிவு படுத்திவிட்டார்கள்' என்று உங்களை நோக்கிச் சொல்லப்படும் குற்றச் சாட்டுகளை உங்களால் எதிர்கொள்ள முடிந்தால் நீங்கள் பிரபல பெண்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்து சொல்லலாம்.

வலைப்பதிவில் கருத்து சுதந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் பிரபலங்களிடம் விவாதம் செய்யாதீர்கள், இங்கு மருத்துவர் ருத்திரன் கூட மனநலமில்லாத மருத்துவர் என்று கிண்டல் செய்யப்பட்டார், மிகவும் கேவலமாகப் பேசப்பட்டார், இருந்தும் அவர் தன்னைப் போன்ற பிரபலத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் புலம்பியது போல் தெரியவில்லை, பொது ஊடகங்களில் மாற்றுக் கருத்து என்ற பெயரில் வசைச் சொற்கள் வழக்கமானது என்று தான் ருத்ரன் போன்ற பிரபலங்கள் நம்புகிறார்கள், திமுகவின் அழுகிய நாக்குகளான நன்னிலம் நடராஜனும் தீப்பொறி ஆறுமுகமும் பொதுவாழ்க்கைக்கு வந்த முதல்வர் ஜெ வைப் பேசாத பேச்சா ? 

வலைப்பதிவர் இராஜன் தனிப்பட்ட முறையில் பாடகி சின்மயியை தரக்குறைவாக பேசி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இவ்வாறு இல்லாமல் வெறும் கருத்து மோதல்களுக்காக இராஜன் தண்டிக்கப்பட்டால் பாடகி சின்மயியின் செயலுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும், இராஜன் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

இது தேவையா இது தேவையா என்று எழவு விழுந்த வீடுபோல் அவரவருக்குள் பேசுவதை விட்டு வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட்டு. இது குறித்த ஸ்கிரீன்சாட்டுகள், டுவிட்டுகள் எல்லாம் வெளியே வந்தால் தான் உண்மை தெரியவரும். பிரபலத்தை எதிர்த்த ஒரே காரணத்தால் வலைப்பதிவர்கள், ட்விட்டர்களின் கருத்து சுதந்தரம் பறிக்கப்படுவதும். அவர்கள் முடங்குவதும் தான் முடிவு என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்

136 கருத்துகள்:

Chittoor Murugesan சொன்னது…

வழி மொழிகிறேன். இட ஒதுக்கீடு என்பது பறிக்கப்பட்ட ஒன்றல்ல. கடந்த கால இழப்புகளுக்கு கொடுக்கப்பட்ட கு.ப நஷ்ட ஈடு மட்டுமே..

பொன் மாலை பொழுது சொன்னது…

/// வலைப்பதிவு போன்ற பொது ஊடகத்தில் கருத்து செல்பவர்கள் பிரபலங்கள் என்றாலும் அவர்களுடைய கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து முன்வைக்கப்படும் பொழுது அதை எதிர்கொள்வார்கள் என்ற மனநிலையில் பிரபலங்களைப் பின் தொடருவர்கள் பட்டியல் மிகப் பெரியது, அதற்கான பலனைத்தான் இராஜன் மற்றும் பிறர் எதிர் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது, ///

// பார்பனர்களின் எத்தனை பேர் இட ஒதுக்கீடு பற்றி சரியான புரிந்துணர்விற்கு வந்திருக்கிறார்கள், இராஜன் போன்றவர்கள் ஏன் இவர்களிடம் போய் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும் ? மாறாக முற்றிலுமாக புறக்கணித்திருக்கலாமே ///

முற்றிலும் சரிதான் கண்ணன்.

கண்மூடித்தனமான ஆர்வக்கோலாறே இதற்கெல்லாம் காரணம்.
ஆனாலும் யார் கேட்பார்கள்?

வருண் சொன்னது…

எனக்கென்னவோ எந்த ஒரு பெண்ணும் தன் தாயுடன் சென்று என்னை "கொலை பண்ணுவேன்" "கற்பழிப்பேன்" என்று மிரட்டுகிறார்கள்னு ட்வீட்ஸை காட்டிச் சொன்னால் காவல் துறை அதற்காக ஆக்சன் எடுப்பாங்கனுதான் தோணுது.

என்னைப் பொறுத்தவரையில் பெரிய பெரிய பெருச்சாளிகளே இட ஒதுக்கீடு பத்தி புரிஞ்சுக்க மறுக்கிறாங்க. இந்தம்மா ஒரு "சின்னப்பொண்ணு". இதுட்டப்போயி இதைப் பேசி, விவாதிச்சு..

Women are different. அவங்க பதிவுலகில் ஏர்படும் தாக்குதலுக்கு எளிதில் உடைந்து விடுவார்கள் என்பதுதான் நான் பார்த்தவரைக்கும்.

"குரைக்கிற நாய் கடிக்காது" இதுபோல் வார்த்தை ஜாலங்ககளுக்கெல்லாம் அர்த்தம் இல்லை னு இதுலயே புரள்பவர்களுக்குத் தெரியும். ஆனால், I did not mean it னு குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொல்லியே ஆகனும்னு நெனைக்கிறேன்

K.MURALI சொன்னது…

//இது தேவையா இது தேவையா என்று எழவு விழுந்த வீடுபோல் அவரவருக்குள் பேசுவதை விட்டு வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட்டு. இது குறித்த ஸ்கிரீன்சாட்டுகள், டுவிட்டுகள் எல்லாம் வெளியே வந்தால் தான் உண்மை தெரியவரும்.//

http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=1

புதிய கோணங்கி ! சொன்னது…

கோவி சார்,
நீங்க சொல்வதெல்லாம் சரிதான் ஆனாலும் மாற்று கருத்து கொண்ட பெண்களிடத்தில் கண்ணியமாக விவாதம் செய்ய வேண்டும்.
இவர் அப்படி செய்திருப்பார் என் தோன்றவில்லை காரணம் இவரின் ட்வீட்ஸ்கள்
உதாரணத்திற்கு 2 கீழே

http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=9
http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=10

KARMA சொன்னது…

இட ஒதுகீட்டுக்கு ஆதரவு நிலையை நீங்கள் கொண்டிருப்பதைப் போலவே
சிலர் அதற்க்கு எதிர் நிலையை எடுத்திருக்கலாம். இது வெறும் கருத்து மட்டுமே. இதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை.

இதன் பிண்ணனியில் உங்களின் பின் வரும் கருத்து சகிக்க முடியவில்லை.

//இட ஒதுக்கீடு குறித்து இவர் டிவிட்டரில் பகிர்ந்த தனிப்பட்ட கருத்துகளுக்கு இவர் வருத்தம் தெரிவித்தது போலவும், இட ஒதுக்கீடு குறித்து இவர் தவறாக விளங்கிக் கொண்டது போலவும் எந்தக் கருத்தும் இவரது விளக்கங்களில் இல்லை//

நீங்கள் கொண்டுள்ள கருத்து மற்றவரிடமிருந்து மாறுபட்டிருப்பதற்காக யாரிடமும் வருத்தம் தெரிவித்திருக்கிரிர்களா ?
அல்லது உங்கள் புரிதல் தவறு என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமா ?

IlayaDhasan சொன்னது…

http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=4

இவனுங்கலெ போட்டுக் கொடுத்ருக்கானுங்க!

ப.கந்தசாமி சொன்னது…

பின்புலம் தெரியாததால் பிரச்சினையின் பரிமாணம் புரியவில்லை.

தணல் சொன்னது…

ராஜன் போன்றவர்கள் சின்மயி இடஒதுக்கீடு குறித்துச் சொன்ன கருத்துக்கு எதிர் கருத்து சொன்னதை வைத்து அவர்கள் மீது சின்மயி வழக்கு தொடுத்திருக்கிறார் என்றா நினைக்கிறீர்கள்? ஆனாலும் அப்பாவி சார் நீங்க.

நம்பள்கி சொன்னது…

வருண் அய்யா கூறிக் கொண்டிருக்கும், அந்த ' we would rape her and murder her." ட்வீட்டை, தயவு செய்து எனக்கு point பண்ணுங்கள்! நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் கொண்டுள்ள கருத்து மற்றவரிடமிருந்து மாறுபட்டிருப்பதற்காக யாரிடமும் வருத்தம் தெரிவித்திருக்கிரிர்களா ?
அல்லது உங்கள் புரிதல் தவறு என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டுமா ?//

நான் பிராமின் நீ சூத்திரவாள் என்று சொல்வது என் கருத்துரிமை என்று சொன்னால் கேட்பவன் செருப்பைத் தூக்கத்தான் செய்வான்.

இடஒதுக்கீடு என்பவை ஒரே இரவில் கொடுப்பட்ட சலுகை அல்ல, அதற்கு முன்பு பல்வேறு ஆய்வுகளை நடத்தி இவர்களுக்கு ஏன் கல்வி வேலைவாய்ப்பு புறக்கணிக்கப்பட்டது அதன் பின்புலன்கள் என்ன என்றெல்லாம் ஆலோசித்தே அரசு ஆணையாக செயல்பட்டுவருகிறது, சும்மா கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று கருத்து சொன்னால் அது குறித்து கேள்வி எழுப்புவர்களுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

எல்லோரும் சமம் இட ஒதுக்கீடு எதற்கு ? என்று கேட்கும் அபிஸ்டுகள் அர்சகர் வேலைக்கு மட்டும் ஆகமத்தை துணைக்கு அழைப்பது ஏன் ?

தணல் சொன்னது…

கோவி, இந்த இடுகையில் விவரமாக இருக்கிறது. வாசித்துவிட்டு வாருங்கள்.

http://hollywoodraj.blogspot.com/2012/10/blog-post.html

அங்கு போட்டது, பொருத்தமாக இருப்பதால் இங்கும் பதிகிறேன்.

இங்கு நிறைய பேர் என்னவோ சின்மயி சொன்ன கருத்துக்கு இவர்கள் எதிர்கருத்தை முன்வைத்ததும் அவர் வழக்கு தொடுத்துவிட்டார் என்பதைப் போல உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். எதையும் உளருவதற்கு முன் கொஞ்சம் அவர்கள் ஆபாசமாக என்னென்னவற்றை பேசியிருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வந்தால் தேவலாம். ராஜன், முதல்வர் குறித்து சொன்ன ஒரே ஒரு சாம்பிள் தருகிறேன். அந்தக் கேவலமான இலங்கை கார்ட்டூனை வைத்து, புரட்சித் தலைவிக்கு என்ன கலரில் இருக்கும் என்று மன்மோகன் சிங்கை கேட்டால் தெரியும் என்று ட்விட்டியிருந்தார்.

அதுவும் இந்த பரிசல்காரன் செய்வதெல்லாம் படு கேவலமாக இருக்கிறது. குழந்தையைக் காட்டி பரிதாபம் சம்பாதித்து பிச்சை எடுப்பார்கள் இல்லையா அந்த மாதிரி பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அறிவு முன்பே இருந்திருக்கவேண்டும். சின்மயி குறித்து அசிங்கமாக ட்விட்டுகள் வெளியான போது இவரெல்லாம் என்னத்தைப் புடுங்கிக்கொண்டிருந்தார்? இன்று தனக்கு தனக்கு என்றவுடன்---

பேசித் தீர்க்கலாம் என்று சின்மயியின் தாயார் இவர்களை தொடர்பு கொண்டதையடுத்து அவரையும் ஆபாசமாகப் பேசியிருந்தார்கள். இன்று என்னவோ அரெஸ்ட் என்றதும் நாளைக்கே அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்துவிட்டது போன்று கதறிக்கொண்டிருக்கிறார்கள்.

All of these should undergo the stress and pressure of arrest and jail. Sinmayi may or may not win the case. But these guys and their families should undergo that pain and humiliation that they were trying to incite on sinmaiyi and her family - at least for this moment of time! Let this incident serve as a check on those who continuously target and pass such vulgar comments against a particular person in a public place!

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி, இந்த இடுகையில் விவரமாக இருக்கிறது. வாசித்துவிட்டு வாருங்கள். //

அதை வாசித்துவிட்டு தான் எழுதி இருக்கிறேன், அதில் சின்மயின் அறிக்கை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதன் பகுதையையும் பதிவில் இணைத்திருக்கிறேன்.

சின்மயி அந்த அளவிற்கு விளக்கம் எழுதக் கூடியவர் என்று நான் நம்பினால் பிரச்சனையைத் தீர்க்க காவல்துறையை நாடி இருப்பார் என்று நான் நம்பவும் முடியவில்லை.

காலம் காலமாக இட ஒதுக்கீடு எதிராக கருத்து கொண்டு இருப்பவர்களின் திருவிளையாடல்களில் இந்தப் பிரச்சனை லாவகமாக கோர்த்துவிடப்பட்டிருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

******

முதல்வரோ, பிரதமரோ கார்டூன் உலகால் கிண்டல் அடிக்கப்படாதவர்கள் கிடையாது, கிசு கிசு என்ற பெயரில் வார இதழ்கள் நடிகைகளைப் பற்றி ஆபாசமாகவே தான் எழுதுகின்றனர். இங்கு பிரச்சனைகள் என்பது யாரும் சொந்த அடையாளத்தோடு ஆபாசமாக எழுதினால் சிக்கிக் கொள்ள முடியும் என்பது மட்டும் தானே.

தணல் சொன்னது…

இந்த விவகாரம் குறித்து செல்வேந்திரன் அவரது பதிவில் எழுதி இருந்தது.

//இவ்விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருபவன் என்கிற முறையில் இணையத்தில் சின்மயி எவ்வளவு தூரம் ஒடுக்கப்பட்டார் என்பதை அறிவேன். அந்தந்த தருணங்களில் இந்த சல்லித்தனத்தை கண்டித்தும் வந்திருக்கிறேன். விவகாரம் இந்த அபாய எல்லையை அடைந்து விடக்கூடாது என்கிற அக்கறையில் சில முறை இருதரப்பிற்கும் இடையே சமாதான முயற்சியையும் எடுத்திருந்தேன். ஆணாதிக்க கும்பல் மனோபாவத்தின் முன் எதுவும் எடுபடவில்லை. சின்மயியின் தன்னிலை விளக்கத்தோடு வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். உங்கள் பார்வைக்கு பகிர்கிறேன்.//

குழலியும் இது குறித்து எழுதியிருந்தார். முடிந்தால் அதையும் வாசித்துப் பாருங்கள்.

அவ்வளவு நேரம் இல்லை என்றால், இதை மட்டுமாவது பாருங்கள்.

http://www.use.com/0579a6a74773f1b6118e#photo=28

தணல் சொன்னது…

//முதல்வரோ, பிரதமரோ கார்டூன் உலகால் கிண்டல் அடிக்கப்படாதவர்கள் கிடையாது, கிசு கிசு என்ற பெயரில் வார இதழ்கள் நடிகைகளைப் பற்றி ஆபாசமாகவே தான் எழுதுகின்றனர்.//

கழிவறைச் சுவர்களில் கூடத்தான் அசிங்கமாக எழுதி வைக்கிறார்கள் என்று கேட்காமல் விட்டுவிட்டீர்கள்.

கார்ட்டூன்களில் கிண்டலடிக்கப்படலாம், ஆனால் செயல்பாடு/செயலின்மை குறித்த அரசியல் ரீதியான கிண்டலுக்கும் பாலியல் வக்கிரத்தைக் கக்குவதற்கும் வித்தியாசம் உண்டு.

அடுத்ததாக அசிங்கமான கிசுகிசுகளின் மீதும் பாய வேண்டும் என்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கழிவறைச் சுவர்களில் கூடத்தான் அசிங்கமாக எழுதி வைக்கிறார்கள் என்று கேட்காமல் விட்டுவிட்டீர்கள்.

கார்ட்டூன்களில் கிண்டலடிக்கப்படலாம், ஆனால் செயல்பாடு/செயலின்மை குறித்த அரசியல் ரீதியான கிண்டலுக்கும் பாலியல் வக்கிரத்தைக் கக்குவதற்கும் வித்தியாசம் உண்டு.

அடுத்ததாக அசிங்கமான கிசுகிசுகளின் மீதும் பாய வேண்டும் என்கிறேன்.

செவ்வாய், 23 அக்டோபர், 2012 9:21:00 am GMT+08:00 //

இராஜன் தரப்பு விளக்கம் கேட்காமல் இதுபற்றி பேச ஒன்றும் இல்லை, இராஜன் தரக் குறைவாகப் பேசி இருந்தால் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றே எழுதியுள்ளேன்.

இராஜன் தான் டிவிட்டினார் என்பதற்கு ஸ்க்ரீன் சாட்டுகள் தயார் செய்வது அவ்வளவு கடினமான வேலையா என்ன ? இஸ்லாமிய அமைப்புகள் தான் குண்டு வைத்தன என்று நம்ப வைக்கும் மலேக்கான் டைப் மோசடிகளெல்லாம் நாட்டில் வெகு சகஜம் தானே

தணல் சொன்னது…

//இட ஒதுக்கீடு எதிராக கருத்து கொண்டு இருப்பவர்களின் திருவிளையாடல்களில் இந்தப் பிரச்சனை லாவகமாக கோர்த்துவிடப்பட்டிருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து.//

மீனவர் மற்றும் இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையையும் தாண்டி சில மாதங்களுக்கு மேலாக நடந்திருக்கின்றன இந்தத் தாக்குதல்கள்.

தணல் சொன்னது…

//இராஜன் தரக் குறைவாகப் பேசி இருந்தால் மன்னிப்புக் கேட்கவேண்டும் என்றே எழுதியுள்ளேன்.//

அப்படிப் பேசியதாகவே டிவிட்டரில் இருக்கும் நமக்கு நன்கு தெரிந்த பதிவர்களும் கூறியுள்ளனர்.

நம்பள்கி சொன்னது…

[[காலம் காலமாக இட ஒதுக்கீடு எதிராக கருத்து கொண்டு இருப்பவர்களின் திருவிளையாடல்களில் இந்தப் பிரச்சனை லாவகமாக கோர்த்துவிடப்பட்டிருக்கிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து.]]

உங்க வாய்க்கு சர்க்கரை: நீங்கள் சொல்வது தான் சரி. பலர் திருவிளையாடல்கள் இதில் உள்ளது..

நான் என் குட்டிக் குழந்தைகளுடன் சிங்கப்பூர் வந்தது 1993-ல்..சம்பந்தம் இல்லாத கேள்வி! இருந்தாலும்...

ஏன் கோமள விலாஸ் அவ்வளவு திராபையாக ஒரு கிராமத்து ஹோட்டல் மாதிரி இருந்தது! இப்போ எப்படி?

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படிப் பேசியதாகவே டிவிட்டரில் இருக்கும் நமக்கு நன்கு தெரிந்த பதிவர்களும் கூறியுள்ளனர். //

இராஜனை பலமாதங்களுக்கு முன்பே சின்மயி டிவிட்டரில் தடை செய்துவிட்டதாகத்தான் தகவல்கள் இருக்கின்றன, தடை செய்யப்ப்பட்ட ஒருவர் அதன் பிறகு தன்னைப் பற்றி என்னப் பேசுகிறார் என்று தோண்டித் துருவ என்ன இருக்கிறது ?

உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்று விலகுகிறீர்கள், அதன் பிறகு அவருடை வீட்டிற்குள் உங்களைப் பற்றி என்னப் பேசுகிறார்கள் என்று அவர்கள் வீட்டின் பக்கம் காதை வைத்து காத்திருப்பீர்களா ? அவ்வாறு காத்திருப்பது தெரிந்தால் அவர்கள் உங்களைப் பற்றிப் பேசாமல் தான் இருப்பார்களா ?

சார்வாகன் சொன்னது…

வணக்கம் நண்பரே,
நல்ல நடுநிலையான அலசல். எனினும்நண்பர் இராஜன் தேவையில்லாமல் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார் எனவே நினைக்கிறேன். சின்மயி ஏதோ சொன்னால் சொல்லி விட்டு போகட்டும்,என ஒதுக்கி விட்டுப் போய் இருக்க்லாம்.

ஏதோ கருத்துகளை மறுக்க போய் வாதம் திசை மாறி விட்டது. இராஜன் தரப்பு வாதமும் அறிவது நல்லது.சின்மயியின் தரப்பு வாதமே இணையத்தில் எங்கும் ஒலிக்கிறது.

இரு தரப்பு வாதமும் அறியாமல் ,இராஜன் மீது மட்டும் குற்றம் சாட்டுவதை நண்பர்கள் தவிர்க்க வேண்டுகிறேன்.

//வலைப்பதிவர் இராஜன் தனிப்பட்ட முறையில் பாடகி சின்மயியை தரக்குறைவாக பேசி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இவ்வாறு இல்லாமல் வெறும் கருத்து மோதல்களுக்காக இராஜன் தண்டிக்கப்பட்டால் பாடகி சின்மயியின் செயலுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும், இராஜன் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்.//

இதுவே நம் கருத்தும்!!

இப்பிரச்சினை சுமுகமாக முடிவது தமிழ் இணைய உலகிற்கு நல்லது!!.

நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏன் கோமள விலாஸ் அவ்வளவு திராபையாக ஒரு கிராமத்து ஹோட்டல் மாதிரி இருந்தது! இப்போ எப்படி?//

என்னது கிராமத்து ஹோட்டல் போல் இருப்பது திராபையா ? நாங்களெல்லாம் மண் மணம் வேண்டும் என்று அவற்றையெல்லாம் வரவேற்கிறோம்.

கோமள விலாஸ் எனக்கு பிடித்த உணவகங்களில் முதன்மையானது
:)

தணல் சொன்னது…

// தடை செய்யப்ப்பட்ட ஒருவர் அதன் பிறகு தன்னைப் பற்றி என்னப் பேசுகிறார் என்று தோண்டித் துருவ என்ன இருக்கிறது ?

உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்று விலகுகிறீர்கள், அதன் பிறகு அவருடை வீட்டிற்குள் உங்களைப் பற்றி என்னப் பேசுகிறார்கள் என்று அவர்கள் வீட்டின் பக்கம் காதை வைத்து காத்திருப்பீர்களா ? அவ்வாறு காத்திருப்பது தெரிந்தால் அவர்கள் உங்களைப் பற்றிப் பேசாமல் தான் இருப்பார்களா ? //

முட்டாள்த்தனமான கருத்து. இது டிவிட்டர்! பொதுவெளி! ராஜன் வீட்டுக் கழிப்பறை அல்ல.

நிகழ்காலத்தில்... சொன்னது…

கருத்து மோதல்கள் எப்போது தாக்குதல்களாக மாறிப்போகிறதோ அப்போது இது போன்ற நடவடிக்கைகள் அவசியம்தான்...

காமம் பேச்சில் எழுத்தில் இயல்பாக வெளிப்படுவது வேறு.. வக்கிரமாக வெளிப்படுவது வேறு.

ராஜன் மீதான நடவடிக்கை தேவைதான்..இனியேனும் தமிழ் இணைய உலகம் திருந்தினால் சரி :)

கோவி.கண்ணன் சொன்னது…

//முட்டாள்த்தனமான கருத்து. இது டிவிட்டர்! பொதுவெளி! ராஜன் வீட்டுக் கழிப்பறை அல்ல.//

அதைத்தான் எல்லோரும் சொல்கிறார்கள், இட ஒதுக்கீடு போன்ற சமூக நலன் சார்ந்த விசயங்களில் எதிராக கருத்து சொல்லிவிட்டு என் கருத்தைத் தான் நான் சொன்னேன் எனது கருத்துரிமை என்று சொல்லி நழுவ முடியாது. தனிமனிதனைப் பாதிக்கும் ஆபாச வசைகளைவிட ஒரு சமூகத்தையே சீரழிக்கும் நச்சுக்கருத்துகள் மிகவும் ஆபத்தானவை. புரியாதது போல் நடிப்பவர்களுக்கு விளக்கம் செல்லுபடியாகாது என்பது எனக்கும் தெரியும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜன் மீதான நடவடிக்கை தேவைதான்..இனியேனும் தமிழ் இணைய உலகம் திருந்தினால் சரி :)//

எழவு வீட்டின் முதல் ஒப்பாறி போல் இருக்கிறது உங்கள் கருத்து

:)

என்னைப் பொருத்த அளவில் ஆபாசமின்றி எதையும் எதிர்கொள்ளும் எழுத்து சுதந்திரம் இது போன்ற பூச்சாண்டிகளால் பறிக்கப்பட்டுவிடக் கூடாது

தணல் சொன்னது…

// புரியாதது போல் நடிப்பவர்களுக்கு விளக்கம் செல்லுபடியாகாது என்பது எனக்கும் தெரியும்.//

இது உங்களுக்கும் பொருந்தும். :-)

இடஒதுக்கீடு குறித்த எதிர் கருத்துகளை அவ்வப்போது எதிர்கொள்ளவே செய்கிறோம். ஆனால் அதற்கு பாலியல் வக்கிரங்கள் பதிலாகாது. இடஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்களும் இதையே கூறியிருக்கின்றனர்.

நம்பள்கி சொன்னது…

[[என்னது கிராமத்து ஹோட்டல் போல் இருப்பது திராபையா ? நாங்களெல்லாம் மண் மணம் வேண்டும் என்று அவற்றையெல்லாம் வரவேற்கிறோம்.

கோமள விலாஸ் எனக்கு பிடித்த உணவகங்களில் முதன்மையானது
:) ]]

தேடித்தேடி அங்கு சென்றேன்; உங்கள் மனது புண்படகூடாது என்று கிராமத்து ஹோட்டல் என்று சொன்னேன்; சுத்தம் சுகாதாரம்----சுத்தம்; அப்போ நாங்க சாப்பிட்ட இடத்தின் பக்கத்கதிலேயே ஒரு தொட்டி, வாளி, தண்ணி..அங்கயே கை கால் கழிவி...சாப்பிட முடியவில்லை...போதும்...வேண்டாம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//தேடித்தேடி அங்கு சென்றேன்; உங்கள் மனது புண்படகூடாது என்று கிராமத்து ஹோட்டல் என்று சொன்னேன்; சுத்தம் சுகாதாரம்----சுத்தம்; அப்போ நாங்க சாப்பிட்ட இடத்தின் பக்கத்கதிலேயே ஒரு தொட்டி, வாளி, தண்ணி..அங்கயே கை கால் கழிவி...சாப்பிட முடியவில்லை...போதும்...வேண்டாம்...//

ஹலோ தமிழகத்தில் கூட பார்க்க முடியாத நமக்கு நாமே சாப்பிட்ட இலையை எடுத்துப் போடும் திட்டத்தில் நிறைய தமிழ் உணவகங்கள் இங்கு செயல்படுகின்றன.

சாப்பிட்ட இலைகளைப் பார்த்து நான் அருவெறுப்பு அடைவதில்லை.
:)

எல் கே சொன்னது…

//தமிழகத்தில் கூட பார்க்க முடியாத நமக்கு நாமே சாப்பிட்ட இலையை எடுத்துப் போடும் திட்டத்தில் நிறைய தமிழ் உணவகங்கள் இங்கு செயல்படுகின்றன//


நெறைய கடைகள் இருக்கே. சென்னையில் கூட உண்டு. வடபழனி ஏவிஎம் அருகே...

எல் கே சொன்னது…

அனைவருக்கும் அவரவர் கருத்தை சொல்ல உரிமை உண்டு.

நம்பள்கி சொன்னது…

///தேடித்தேடி அங்கு சென்றேன்; உங்கள் மனது புண்படகூடாது என்று கிராமத்து ஹோட்டல் என்று சொன்னேன்; சுத்தம் சுகாதாரம்----சுத்தம்; அப்போ நாங்க சாப்பிட்ட இடத்தின் பக்கத்கதிலேயே ஒரு தொட்டி, வாளி, தண்ணி..அங்கயே கை கால் கழிவி...சாப்பிட முடியவில்லை...போதும்...வேண்டாம்...//

ஹலோ தமிழகத்தில் கூட பார்க்க முடியாத நமக்கு நாமே சாப்பிட்ட இலையை எடுத்துப் போடும் திட்டத்தில் நிறைய தமிழ் உணவகங்கள் இங்கு செயல்படுகின்றன.///

[[சாப்பிட்ட இலைகளைப் பார்த்து நான் அருவெறுப்பு அடைவதில்லை.]]

இதை நான் சொல்லவில்லையே! நாம் சாப்பிட்ட இலைகளை நாமே எடுப்பது தான் முறை!

என் வருத்தம் எச்சை இலைகள் அல்ல! காரிக்காரி உமிழ்ந்தது...சாப்பிடும் இடத்திற்கு பக்கமே எல்லாம்; கை கால் கழவி...குளிக்கவில்லை அவ்வளவு தான்...இதை நான் நினைத்த சிங்கப்பூரில் எதிர்பார்கவில்லை! என் கேள்வி அதுதான்.

நான் தங்கியிருந்த ஹோட்டல் சுத்தத்திற்க்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை! அதைத்தான் சொல்லவந்தேன். எப்படி இது மாதிரி ஹோட்டல்களுக்கு (சுகாதாரம் இல்லாத) லைசென்ஸ் கொடுக்கிறார்கள்; அது தான் என் கேள்வி!

உணவு அமிர்தம்...சுத்தம்...ஹும்...படு சுத்தம்...

KARMA சொன்னது…

//நான் பிராமின் நீ சூத்திரவாள் என்று சொல்வது என் கருத்துரிமை என்று சொன்னால் கேட்பவன் செருப்பைத் தூக்கத்தான் செய்வான்.//

நீங்கள் சொல்வது தீண்டாமை, ஒரு பாவச்செயல், சட்டப்படி குற்றம் ....கருத்து சொல்கிறேன் என்றால் யாரும் விடப்போவதில்லை.
அதற்கு செருப்பெடுக்க வேண்டிய அவசியமுமில்லை.

இடஒதுக்கிடு - இது தீண்டமையுடன் தொடர்பு உடையதாயினும், தீண்டமையினின்ரும் சற்று வேறுபட்டது. இது இன்றைய காலத்தில்பொருளாதாரத்துடன் மிக நெருங்கிய (தீண்டாமையை விடவும்) தொடர்புடையது

கருத்துக்கு உடன்படவோ, மாற்றுக்கருத்துக்கோ இடமுண்டு. செருப்பெடுக்க வேண்டியதில்லை, நிதானத்துடனேயே கருத்து பரிமாறிக்கொள்ள முடியும்.

ssk சொன்னது…

//தினமலர் போன்ற பார்பன ஊடகங்களைப் படிக்கும் பொழுது நமக்கு தேவையற்ற இரத்த அழுத்தம் ஏற்படலாம் என்று நான் அவற்றைப் படிப்பதை முற்றிலும் தவிர்த்தே வருகிறேன், வலைப்பதிவிலும், கூகுள் ப்ளஸிலும் பார்பனிய கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள் இணைந்திருந்தாலும் நான் அவர்களை பின் தொடர்வது கிடையாது// நீங்கள் சொன்னது மிக சரியான ஒன்று. இதே நிலை தான் தினமணிக்கும், டோண்டுவிற்கும்.
எவ்வளவு உண்மைகள் கண் முன் தெரிந்தாலும் நூல் பாசத்தால் எதிர்பார்கள்.
உயர்ந்த சமுகமாக சொல்லப்பட்ட வீட்டு பெண்களும் பெரியாரால் ஓரளவிற்கு விடுதலை பெற்றார்கள் என்பதை ஏற்க மறுப்பார்கள்.

நன்னயம் சொன்னது…http://twitter.com/MaruPurujothTha/status/260190510096982017/photo/1/large

"BTW MEENAVARKAL MEENKALAI KOLRADHU UNKALUKKU PAVAMILAYA?"

மேற்படி வசனம் புரட்சி தலைவி சின்மயி உதிர்த்த முத்து

நன்னயம் சொன்னது…

அது சரி ராஜனின் பாலியல் வசைகள் தொடர்பான ஸ்க்ரீன் சாட் ஒன்னையும் காணோம்.

k.rahman சொன்னது…

அந்த அய்ந்து, ஆறு பேர் அவ்வளவு ஆபாசமாக பேசியது மிக தவறு.

gd naidu என்ற பெயரில் வந்த ட்வீட் பாருங்கள் எவ்வளவு திமிர். ஒரு பெண் என்ன செய்து விட முடியும் என்ற அலட்சியம் தானே. பேசியதற்கு கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். இனி மேல் வார்த்தைகளை ஜாக்கிரதையாக கை ஆளுவார்கள்.

Pandian R சொன்னது…

சிஞ்சா!

சார்வாகன் சொன்னது…

இது சின்மயியின் இணைய தளம். 2005ல் இருந்து அக்டோபர் 19,2012 வரை எழுதி இருக்கிறார்.சுமார் 15 இலட்சம் பேர் . இவரது கருத்துகளை(?) படித்து இருக்கின்றனர். நமக்கு வரும் கேள்விகள் இரண்டு.
http://www.chinmayisripada.com/

1.அவரது பதிவுகளில் ட்விட்ரில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் பற்றியோ, ஆபாச விமர்சனங்கள் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை. சின்மயியின் தன்னிலை விளக்கமாக வெளியிடப்படும் கருத்துகளும் இதில் இல்லை.ஏன்?

2.இவரது பதிவுகளைப் படித்தாலே இவரது மேட்டுக் குடி சிந்தனைகள் புரிந்துவிடும். வாழும் சூழல் சார்ந்து இவர் இப்படி இருப்பதிலும் வியப்பில்லை. இவரை ஒரு பொருட்டாக எடுத்து இட ஒதுக்கீடு, மீனவர் பிரச்சினை என விவாதித்து ஆதரிக்க கேட்பது எவ்வளவு அறிவார்ந்த செயல்?

நன்றி


பெயரில்லா சொன்னது…

நீங்கள் புரிந்து கொண்டளவில் ஒரு பதிவு...
சரி, இப்பொழுது கேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னும் சிங்கள கார்டுனிஸ்ட் நாயிற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவர்களும் அந்த நாய்களின் கூடாரத்தை சேர்ந்தவர்களோ? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே?

R.Puratchimani சொன்னது…

நல்ல பதிவு,
யார் ஒருவரையும் ஆபாசமாக பேசுவது தவறுதான். ஆனால் இது தமிழகத்தில் மேடைகளிலும் சரி இணையத்திலும் சரி சில இடங்களில் சர்வ சாதாரணமாக நடக்கின்றது. இதை அனைவருமே நிறுத்த வேண்டும்.

சின்மயி பற்றி ஆபாசமாக எழுதியவர்களை கண்டிக்கும், காவல் துறையின் உதவியுடன் தண்டிக்கும் உரிமை அவருக்குண்டு.

ஆனால் அவர்களுக்கு எப்படியாவது தண்டனை வாங்கி கொடுத்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிற பிரபலங்களையும் ஆபாசமாக திட்டியதை இங்கே ஆதாரமாக காட்டுவது போல் காவல் நிலையத்திலும் அவர்கள் காட்டியிருந்தால் இது நல்ல செயல் அல்ல. இது கண்டனத்திற்கு உரியது. அவர்கள் சின்மயி சம்பந்தமான ஸ்க்ரீன்ஷாட் தான் கொடுக்கவேண்டுமே தவிர மற்றவற்றை அல்ல. இது பொது நல வழக்கு அல்ல. பிரபலங்களை ஆபாசமாக திட்டியதாக கைது செய்யவேண்டும் என்றால் பலரை கைது செய்யலாம்.

தமிழக மீனவர்கள் கொலைகளை பற்றி பேசும்பொழுது சின்மயி "மீன்களை கொல்வது பாவம் இல்லையா" என்று கூறியதும்
"நாங்கள் மீன்களை துன்புருத்துபவர்களும் இல்லை,வெட்டி சாப்பிடுபவர்களும் இல்லை" என்று கூறியதும் கண்டிப்பாக கண்டிக்கத்தக்கது. விருப்பம் இருந்தால் அதில் கையொப்பம் இடலாம் அல்லது விட்டுவிடலாம் அதற்காக இந்த கருத்து சரியானது அல்ல.

ஆபாசமான வார்த்தைகளை அனைவரும் அறவே தவிர்க்க வேண்டும். இணையத்திலும் சரி, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி. இதுவே நாட்டிற்கும், வீட்டிற்கும், தமிழிற்கும் நல்லது.

Unknown சொன்னது…

ராசன் லீக்சுக்கும் சின்மயிக்கும் என்ன தகராறு என்பதை பலரும் பலவாறாய் திரித்து வருகின்றனர்..டுவிட்டரில்

பல ஆண்டுகளாய் இருந்து பார்த்ததால் நானறிந்ததை தெரிவிக்க்a வேண்டியது கடமையாகிறது..

நிகழ்வு 1: ராசன் லீக்சுக்கும் சின்மயிக்கும் உண்மையில் நேரடியாக நிகழ்ந்த வாக்குவாதம் பின்வரும் இணைப்பில்

உள்ளது மட்டுமே..

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

அதில் விவாதத்தை ராசன் துவங்கவுமில்லை.. இடையில் வந்து பிறகு இடையிலேயே போய் விடுவார். இந்த

விவாதத்தில் ராசன் மட்டுமல்ல.. நிறைய பேர் பங்கெடுத்தனர். உண்மையில் மிக தீவிரமாக விவாதம் செய்தது

ராசனல்ல. வேறு சிலர்..

இந்த விவாதம் முடிந்த பின்னரும் கூட ராசனுக்கும் சின்மயிக்கும் எந்த சண்டையோ கோபமோ இருந்ததாகத்

தெரியவில்லை..

இது முடிந்ததும் ஒருவரையொருவர் கிண்டல் செய்து டுவீட் போடுவதும் நடந்து கொண்டுதான் இருந்தது.... (Con...)

Unknown சொன்னது…

நிகழ்வு 2:

இந்துஸ்தான் டைம்ஸ் என்கிற பத்திரிக்கையின் ”தி அதெர் வாய்செஸ்” என்கிற கட்டுரையில் அச்சு ஊடகங்கள்,

காட்சி ஊடகங்கள் தவிர்த்து மக்களின் மீது இப்போது இணைய ஊடகங்கள் மூலமாக மக்கள் செய்தியாளர்கள்

(சிட்டிசன் ஜர்னலிஸ்ட்ஸ்) பெருகியுள்ளனர் என மகேஷ் மூர்த்தி என்பவர் (வட இந்தியர்) மார்ச் 10, 2012ல்

எழுதியிருந்தார். மகேஷ் மூர்த்தியும் டுவிட்டரில் உள்ளார். அதில் பொழுதுபோக்குப் பாதுஷாக்கள் என்கிற

தலைப்பில் 5 பேரில் நான்காவதாக சின்மயியையும் ஐந்தாவதாக ராசனையும் குறிப்பிட்டிருந்தார். மற்ற மற்ற

தலைப்புகளில் பல்வேறு பிரபலங்கள் டுவிட்டர் கணக்கை வகைப்படுத்தியிருந்தார். மார்ச் 10, 2012

http://www.hindustantimes.com/Brunch/Brunch-Stories/The-other-voices/Article1

-823273.aspx

ராசனின் நண்பர்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்ததுடன், தமிழ் நாட்டில் வசிப்பவர் என்கிற முறையில்

சின்மயிக்கும் பாராட்டு தெரிவித்து விட்டனர்.

ஆணவத்தில தலைகால் புரியாத சின்மயிக்கு வந்ததே ஆத்திரம்.. தனது பெயர் வெளியிட்ட ஒரு பக்கத்தில் ராசன்

என்கிற தமிழில் டுவிட்டும் 2000 ஃபாலோயர் (அப்போது) கூட இல்லாத டுவிட்டரின் பெயர் வரலாமா என்று

கட்டுரையை எழுதிய மகேஷ் மூர்த்தியிடம் கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக டுவிட்டரில்

சண்டையிட்டார். மகேஷ் மூர்த்தியும் பல்வேறு விளக்கங்களை கொடுத்துப் பார்த்தார். சின்மயி கேட்கவில்லை..

ஒன்று ராசன் பெயரை நீக்க வேண்டும் அல்லது தனது பெயரை நீக்க வேண்டுமென தொல்லை கொடுத்தார்.

கட்டுரை எழுதிய மகேஷ் மூர்த்தி மீது வழக்கு தொடரப் போவதாக மிரட்டினார்..

மகேஷ் மூர்த்தி தனது கட்டுரையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என சின்மயியிடம் இறுதியாகச் சொல்லி

உன்னால் முடிந்ததைப் பார் எனச் சொல்லி விட்டார்..

இந்த முழு உரையாடலும் டுவிட்டரில் இருந்த ராசன் மற்றும் அவரது நண்பர்கள் கவனித்து வந்தனர். அடுத்துக்

கெடுக்க நினைத்த சின்மயி முடிவில் மூக்கறுபட்டவுடன் #அசிங்கப்பட்டாள்சின்மயி என்கிற #போட்டு கிண்டல்

செய்து டுவீட்டுகள் போட்டு சின்மயியின் சின்ன புத்திக்கு செருப்படி கொடுத்தனர்.

இந்த #ல் பதிவு செய்த அத்தனை பேரையும் ப்ளாக் செய்துவிட்டார். அதுவும் சரியானதுதான். அது அவரது

உரிமையும் கூட.

இதை தீராத வன்மமாக பழி உணர்ச்சியாக மனதில் பதியம் போட்டு வந்தனர் சின்மயியும் அவரது தாயும்.

இப்போதுதான் அவர்களுக்கு நேரம் கிட்டியதோ என்னவோ தெரியவில்லை #அசிங்கப்பட்டாள்சின்மயி என்கிற #ல்

யாரெல்லாம் டுவிட்டினார்களோ அவர்களின் தனித்தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்படும்போது ஒளிந்திருந்து

பார்ப்பது, போலிக் கணக்குகள் துவங்கி இவர்களை வேவு பார்ப்பது போன்ற வேலைகளைத் துவங்கினர்.


ராசன் உள்ளிட்ட அவரது நண்பர்களுக்குள் ஏதேனும் உரையாடல், ஆபாசப் பேச்சுகள் வரும்போது அதனை

படமாக்கிவைத்தனர்.
(Cont...)

Unknown சொன்னது…

நிகழ்வு 3: பழி உணர்ச்சியை மனதில் தேக்கிவைத்த சின்மயியின் அம்மா ராசனுடன் பேசும் அவரது நண்பர்கள்

ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டும் வேலையை கடந்த 10-20 நாட்களுக்கு முன்னர்

துவங்கினார். வலுவான ஆதாரங்களைத் திரட்டச் சொல்லி யாரேனும் சொல்லியிருக்க வேண்டும்..

தொலைபேசியில் மிரட்டப் பட்ட பரிசல்காரன் போன்ற பிரபலங்கள்(?) வெளியில் சொல்லிக் கொள்ளவில்லை..

ஆனால் தனிப்பட்ட முறையில் ராசனிடம் சொல்லிவிட்டார்கள் போல.. ராசன் உசாராகி எந்த வித சீண்டலுக்கும்

பதிலளிக்காமல் ”ஜென்” என்று போட்டுவிட்டு அமைதிகாத்துவிட்டார்..

செந்தில்நாதன் என்பவர் இதுபோல சின்மயி அம்மா தொலைபேசியில் பேசினார் என்று டுவிட்டரில் பகிர்ந்து

கொண்டார். எல்லோரும் என்னவிசயம் என்று கேட்க.. அட்வைஸ் செய்வது போல மிரட்டினார்.. நான் உங்கள்

மகளுக்கு அட்வைஸ் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன் என்று சொன்னார்..

அதன்பின் அவர் போட்ட டுவீட்டும் பின்னர் உதவி பேராசிரியர் சரவணக் குமார் கேலி செய்வது போல

பேசிவிட்டார்.. (பேராசிரியர் சரவணக்குமார் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் மலையாளிகள் இணையத்

தாக்குதலை நடத்திய போது சிவில் எஞ்சினியர் என்கிற முறையில் வலுவான ஆதாரங்களுடன் அவ்ர்களின்

பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்தார்.. அப்போதுதான் எனக்கு அறிமுகமானார்) அவரது சில டுவீட்டுகள்

காட்டமாகத்தான் இருக்கும்..

அந்த உரையாடல் இதோ..

@senthilchn: டுவிட்டர்ல எதாவது பொண்ணுங்க பேசும்னு போன்நம்பர் கொடுத்தால் இப்படியா?
@sharankay: என்னய்யா ஆச்சு ஆம்பிளைங்க யாராவது போன் பண்ணிட்டாங்களா?
@senthilchn:ம்க்கும்..இல்ல தல.. சின்மயி அம்மானு சொல்லிக்கிட்டு ஒருத்தவங்க போன் பன்ணினாங்க..
@sharankay:கொஞ்சம் வயசாயிருச்சே பரவாயில்லை.. உனக்கு செட்டாகும்.. யூஸ் பண்ணிக்கோரும்
@senthilchn:ம்க்கும்.. எதுக்கு தல..
@sharankay: கடலைக்குத்தான்யா..

சீண்டிவிட்டு இவர்களைப் பேச வைக்க வேண்டுமென்பதுதானே நோக்கம்.. அதற்காகத்தானே வலை விரிக்கப்

பட்டிருந்தது.. சிக்க வைக்க நினைத்த ராசன் சிக்கவில்லை.. ஆனால் அவரிடம் பேசிய குற்றத்திறாக

வழிபோக்கர்கள் ரெண்டுபேர் சிக்கிக் கொண்டனர்.

உடனே சின்மயியின் அபிமானிகள் என்ற பெயரில் சாதித்துவேசத்திற்குப் பெயர்போன,, தமிழ் டுவிட்டர்கள்,

உணர்வாளர்களை கொச்சைப் படுத்திவரும் இருவர் @மாயவரத்தான் @கேஎஸ்நாகராசன் இருவரும் அவர்களது

முன்பகையைத் தீர்த்துக் கொள்ள இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள எத்தனித்து சின்மயி மற்றும் அவரது

தாயாருடன் தொடர்பு கொண்டு உதவி செய்வதாகக் கூறி ராசனது நேரக்கோட்டில் போலிக் கணக்குகளில்

நுழைந்து படமெடுத்து யூஸ்தமிழ் இணையத்தில் பதிவேற்றினர். அவ்வப்போது சின்மயியையும் அவரது

அம்மாவையும் தூண்டிவிட்டு உசுப்பேற்றி பழிதீர்க்க இதுவே தருணம் என சகுனி வேலை செய்தனர்..
(Cont...)

Unknown சொன்னது…

@மாயவரத்தானின் சாதிவெறி டுவீட் உங்கள் பார்வைக்கு..

http://t.co/X4FmAvAB

@sharankay சிறையில் இருக்க வேண்டுமானால் @மாயவரத்தான் எங்கேயிருக்க வேண்டுமென உங்கள்

தீர்வுக்கே விட்டுவிடுகிறேன்.

ராசனின் டுவீட்டுகள் சில ஆபாசமாகத்தான் இருக்கும்.. பொது வாழ்க்கையில் இருக்கும் சிலரை அவர் கேலி

செய்வது உண்மைதான்.. ஆனால் டுவிட்டரிலும் முகநூலிலும் பிற இணைய ஊடகங்களிலும் சாமானியர்களின்

குரல் ஒலிக்கவில்லையென்றால், ஊரைக்கொள்ளையடித்து உலையில் போடும் அரசியல்வாதிகளையும்

அவர்களிடம் வாங்கிப் பிழைக்கும் ஊடகங்களையும் யார் கேட்பது.. சாமானியனின் குரல் சவுக்கடிபோலத்தான்

இருக்கும். அதை நசுக்குவதே ஆதிக்க சக்திகளின் நோக்கம்..

ஆபாச எழுத்துக்களை ஆதரிப்பதற்கில்லை.. ஆனால் ஆபாசம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.. ராசன்

சின்மயிடம் ஆபாசமாகப் பேசியதாக எந்த ஆதாரமுமில்லை.. அவர்கள் குற்றச்சாட்டு ராசன் பொதுவாக

ஆபாசமாகப் பேசினாரென்றால் அதற்குரிய பிரிவில் நடவடிக்கையெடு.. அவர் ஆபாசமாகப் பேசுவதால்

சின்மயிக்கும் அவரது அம்மாவுக்கும் என்ன கேடு.

ஏன் இந்த பொய் வழக்கு?

ஆபாசப் படங்கள் வெளியிட்டார்கள், செக்ஸ் தொல்லை கொடுத்தனர் என பொய் வழக்கு. ஆதாரம் கேட்டால்

அவர் ஜெயலலிதாவைப் பேசினார், கருணாநிதியைப் பேசினார் என ஸ்கிரீன் ஷாட்டுகள். என்ன

நேர்மையிருக்கிறது இது போன்ற சாதி வெறியர்களிடம்....

சின்மயி தமிழில் எழுதுவதையே அவமானமாக நினைப்பவர்.. மீனவர் பிரச்சினை, இட ஒதுக்கீடு குறித்த அவரது

பிற்போக்கான கருத்துகளுக்கு பரவலாக விமர்சனம் வந்துவிடவும் ”மறவர் சீமையாம் பரமக்குடியில் பிறந்த

தமிழச்சி” என அடைமொழி கொடுத்துக் கொள்கிறார். பரமக்குடி மறவர் சீமையென எவர் சொன்னது.. அது

பாண்டிய நாட்டின் ஒரு அங்கம்.. பாண்டிய நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்தப் பெருமை சொந்தமானது..

இதிலும் சாதியைப் புகுத்திவிட்டால் தமிழர்களை பிளவு படுத்திவிடலாம். என்னே நுண்ணரசியல்...

ஏதோ பெரியாரோடு முடிந்து விடவில்லை பணி.. இன்றைய தலைமுறைக்கும் எதிர்கால சந்ததிக்கும் இன்னும்

எக்கச்சக்கமான வேலை காத்திருக்கிறதென்பதை உணர்த்துவதே இது போன்ற சாதி வெறியர்களின் ஆதிக்கம்..

அவர்களது நோக்கம் இணையத்தில் தமிழர்களுக்கு பிரச்சினயென்றால் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.. அதைச்

சிதைக்க வேண்டும்.. இனிமேல் எவனாவது பேசுவான்.. பேசினாலும் அனுமதி வாங்கிவிட்டல்லவா பேசவேண்டும்..

பின் குறிப்பு: ராசன் லீக்சு எனது நண்பரல்ல.. அவரை நானோ என்னை அவரோ டுவிட்டரிலோ முகநூலிலோ

தொடரவில்லை.. (End.)

வருண் சொன்னது…

///சீண்டிவிட்டு இவர்களைப் பேச வைக்க வேண்டுமென்பதுதானே நோக்கம்.. அதற்காகத்தானே வலை விரிக்கப்

பட்டிருந்தது.. சிக்க வைக்க நினைத்த ராசன் சிக்கவில்லை..///

இதெல்லாம் ஒரு "ப்ளாட்"!! நீங்க பேசாமல் ஏதாவது கதை எழுதப் போகலாம்!

ஒரு விவாதம் எப்படி தடம் புரண்டு ஓடும்னு எங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன?

ஏங்க சும்மா இஷ்டத்துக்கு கதை விடுறீங்க?

வருண் சொன்னது…

இது ஏற்கனவே ஒரு தளத்தில் போட்ட பின்னூட்டம்.. என் கருத்தை சொல்வதற்காக இங்கேயும் இடுகிறேன். (ஆங்கிலம் கலந்து இருக்கு.. மன்னிக்கவும்..:)) )

--------

///அந்தம்மாக்கு பாடத் தெரியும். ஏதோ கடவுள் கடவுள்னு சொல்லிண்டே இருக்கு. கூடவே அவங்க அம்மா வேற இருக்காங்க..

மீனவர், ஈழத்தமிழர், இட ஒதுக்கீடு சம்மந்தமாகவெல்லாம் திறம்படப் பேச அதற்கு தகுதியோ அனுபவமோ கெடையாது.. ஏதோ சின்னப்பொண்ணு விபரம் அறியாமல் பேசுதுனு விட்டுட்டுப் போயிடலாம்.

எனக்கென்னவோ நெறையா பேசி பஞ்சாயத்து வைக்க முயற்சித்ததுபோல இருக்கு. "பரிசல்" பேரெல்லாம் இதிலே வருது!!! இருந்தும் இவர்கள் அந்தப் பெண்ணோட மனநிலையை புரிந்துகொள்ளவில்லை. வேற வழிதெரியாமல் போலிஸிடம் சென்றிருக்கலாம்..

இப்போ போலிஸிடம் போனபிறகு உடனே பரிதாபப்பட்டு வித்ட்ரா பண்ணினாலும் பிரச்சினை.

* நம்ம ஆளுக ஒண்ணும் எங்களை கிழிக்க முடியலைனு பேச ஆரம்பிப்பார்கள்

* போலிஸ் வேற எதுக்கு சும்மா வந்து கம்ப்ளையின் கொடுத்து எங்க நேரத்தை விரயம் செய்ற.. அப்புறம் வித்ட்ரா பண்ணூறனு எரிச்சல் அடையலாம்.

See, if someone is not able to take it, you should leave her alone! That is the basic decency. Her political views are half-baked. SO WHAT? I dont think that we have many forward class people who accepts reservation. They wont accept but they keep quiet. Because she is immature she spit out words.

நம்மாளுக இப்போ ரொம்ப அநாகரிகமாக நடந்துவிட்டு, அதைக் காரணமாகக் காட்டி ஊரைக்கூட்டி நியாயம் கேட்பதெல்லாம் எடுபடாது. She can have her opinion and share her opinion even if her opinion is "not correct". That is not a crime! But getting personal and threatening her is not the correct way to deal with that! Women get scared at times. They would not know how to deal with it. May be that is the case here.

I dont believe it gives her good publicity. It will only give her bad publicity. But people claim that she uses this to get "publicity". I disagree on that! :)///

சார்வாகன் சொன்னது…

வருண் அய்யா,
உங்களின் கருத்துகளோடு ஒத்துப் போனாலும்,இந்த ஒரு வரிதான் விளக்கம் தேவை
/But getting personal and threatening her is not the correct way to deal with that!/
ராஜன் லீக்ஸ் தனிப்பட்ட விதத்தில் சின்மயியை எப்போது என்ன விமர்சித்தார், மிரட்டல் விடுத்தார் என இணையத்தில் மட்டுமே தகவல் அறியும் நமக்கு சரியாக தெரியவில்லை. இணையத்தில் சில ட்வீட்டுகள் யூஸ்.காம் ஸ்க்ரீன்ஷாட்டுகள் வெளியிடப்பட்டவை ஆதாரபூர்வமானதா?.சில ஆபாசமாக இருப்பினும் மிரட்டல் இல்லை.
ஆகவே ராஜன்லீக்ஸ்தான் சின்மயியை நோக்கி ஆபாச கருத்து யாரிடன்,எப்போது எதற்கான மறுமொழியாக தெரிவித்தார் என்பதும் தெளிவாக்கப்பட வேண்டும்.
ஒருவேளை ஆபாச கருத்து உறுதிப்படுத்தப் பட்டால் மட்டுமே அதற்கான சட்டரீதியான விளைவுகளை சந்திக்கலாம்.இதில் இந்திய சட்டம் என்ன சொல்கிறது என்பதும் தெரியவில்லை.

மிரட்டல் விடுத்ததன் ஆதாரம் எதுவுமே இல்லை!! நன்றி!!

k.rahman சொன்னது…

@பொதிகைச் செல்வன்
சரியானா பிளாட் . ஏன்னா த்ரில் ச்சே. கோடம்பாக்கத்தில் எதாவது திரைகதை ஆசிரியர் வேலைக்கு முயற்சி செய்கிறீர்களா?

வருண் சொன்னது…

***ராஜன் லீக்ஸ் தனிப்பட்ட விதத்தில் சின்மயியை எப்போது என்ன விமர்சித்தார், மிரட்டல் விடுத்தார் என இணையத்தில் மட்டுமே தகவல் அறியும் நமக்கு சரியாக தெரியவில்லை.***

சார்: இப்போ சின்மயி சும்மா பொய் கேஸு போட்டிருந்தால், பாதிக்கப்பட்டவங்க, "மான நஷ்ட ஈடு" வழக்குப்போட்டு தங்கள் இழப்புக்கு அவமானத்துக்கு ஈடு கட்டச் சொல்லலாம்.

ஆனால் உங்க "மேட்டுக்குடி" தியரி எல்லாம் "வொர்க் அவ்ட் ஆகாது. சின்மயிவுடைய பொலிட்டிக்கல் வியூஸை வச்சு நீங்க சட்ட ரீதியாக எதுவும் செய்ய முடியாது! அதனால் இந்த "மேட்டுக்குடி" தியரியை விட்டுவிட்டு ஒரு பெண், அவள் துன்புறுத்தப் பட்டதாகப் பார்க்க கத்துக்கோங்க! நன்றி

வருண் சொன்னது…

***@senthilchn: டுவிட்டர்ல எதாவது பொண்ணுங்க பேசும்னு போன்நம்பர் கொடுத்தால் இப்படியா?
@sharankay: என்னய்யா ஆச்சு ஆம்பிளைங்க யாராவது போன் பண்ணிட்டாங்களா?
@senthilchn:ம்க்கும்..இல்ல தல.. சின்மயி அம்மானு சொல்லிக்கிட்டு ஒருத்தவங்க போன் பன்ணினாங்க..
@sharankay:கொஞ்சம் வயசாயிருச்சே பரவாயில்லை.. உனக்கு செட்டாகும்.. யூஸ் பண்ணிக்கோரும்
@senthilchn:ம்க்கும்.. எதுக்கு தல..
@sharankay: கடலைக்குத்தான்யா..

***

சார்: முடிந்தால் உங்க சகோதரி யாரையாவது இந்த சின்மயி நிலையில் போட்டு யோசிச்சுப்பாருங்க. இது ஹராஸ்மெண்ட் டா இல்லையா?

பதில் சொன்னால் நல்லாயிருக்கும். நன்றி

சார்வாகன் சொன்னது…

வருண் அய்யா,
அந்த பெண் சின்மயி மாற்றுக் கருத்து கொண்டிருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.
சின்மயியுடன் வாதம் செய்தது தேவையற்றது. எனினும் நடந்த விடயத்தில் சரியாக அறிந்த விடயங்களை மட்டும் விவாதிப்பது நல்லது.

1. சில ட்வீட்டுகள் இரட்டை அர்த்தத்தில் இருக்கிறது.

2. மிரட்டல் என்பது இல்லை
*******
நீங்கள் சொன்ன ட்வீட்டில் என்ன ஆபாசம்? இரட்டை அர்த்தம் வரும் வகையில் ட்விட்டினார் என சொல்லலாம். எனினும் இது கைது செய்யும் அளவுக்கு பெரிய த்வறு இல்லை எனவே கூறுவேன்.
***
//சார்: முடிந்தால் உங்க சகோதரி யாரையாவது இந்த சின்மயி நிலையில் போட்டு யோசிச்சுப்பாருங்க. இது ஹராஸ்மெண்ட் டா இல்லையா?

பதில் சொன்னால் நல்லாயிருக்கும். நன்றி //
ந‌ம்க்கு இந்த‌ ஃபேஸ் புக்,ட்விட்ட‌ர் இவை‌க‌ளில் ஈடுபாடு இல்லை!!

ஹராஸ்மென்ட் இல்லை . போய் உன் வேலையைப் பாரும்மா,என்றுதான் என் சகோதரியாக இருந்தால் சொல்வேன். நீங்கள் யாரையும் இணையத்தில் கெட்ட வார்த்தையில் திட்டியதே இல்லையா? அல்லது திட்டப் பட்டது இல்லையா?

***
நான் தெளிவாக அறிந்த விடயங்களைப் பேசுவோம் என்றவுடன் உன் வீட்டுப் பெண்களை சொன்னால் சும்மா இருப்பியா என்று சொல்கிறீர்கள் அல்லவா,இதுதான் அங்கேயும் விவாதித்தது பெண்ணாக இருப்பதால் திசை திரும்பி இருக்கலாம்.

இப்போது உங்க‌ளின் சில‌ ப‌திவுக‌ள் ப‌ற்றி ஒரு பெண் வ‌ந்து அப்ப‌டி எழுதாதீர்க‌ள் என்றால் என்ன‌ சொல்வீர்க‌ள்? அதுபோல்தான்.
ம‌ற்ற‌வ‌ர்க‌ளை குற்ற‌‌ம் சாட்டும் அளவுக்கு நான் தகுதியானவன் என நினைப்பது இல்லை!!!

***
தமிழ் நாட்டு சட்டசபையிலேயே ஆபாசப் பேச்சு நடந்தது வரலாறு, சட்டசபையில் என்ன நடந்தது என்பதும் அறிவோம்.

ஆகவே இணையத்தில் மட்டுமே தகவல் அறியும் நாம் முழுத் தகவல்கள் அறியும் வரை பொறுமையாக இருப்போம்!!

ந‌ன்றி!!!

வருண் சொன்னது…

***நீங்கள் யாரையும் இணையத்தில் கெட்ட வார்த்தையில் திட்டியதே இல்லையா? அல்லது திட்டப் பட்டது இல்லையா?***

நான் ஒரு இண்ணொசண்ட் ஆளை இஷ்டத்துக்குப் போயி திட்டி ஹராஸ் பண்ணினால், நானும் அதன் விளைவை சந்தித்துத்தான் ஆகனும். இந்த நிலைமை எனக்கும் நாளைக்கு வரலாம்! இங்கே நான் யோக்கியன் என்று வாதாட வரவில்லை! புரிஞ்சுக்கோங்க!

///நீங்கள் சொன்ன ட்வீட்டில் என்ன ஆபாசம்? இரட்டை அர்த்தம் வரும் வகையில் ட்விட்டினார் என சொல்லலாம். எனினும் இது கைது செய்யும் அளவுக்கு பெரிய த்வறு இல்லை எனவே கூறுவேன்.///

இல்லைங்க, சார்வாகன். இது என் பார்வையில் ஹராஸ்மெண்ட்தான். இதை நானே செய்திருந்தாலும் இது ஆபாசம்தான்! அதை சரி என்று என்னால் வாதாட முடியாது.

Unknown சொன்னது…

@வருண்

கதையாமுல்ல.. அங்கேயிருந்து பார்த்திருந்தா உங்களுக்கு தெரிந்திருக்கும்..

நீங்க நான் சொல்றதை நம்ப வேண்டாம்.. ஏனா எதோ உள்நோக்கத்துடனே கருத்து சொல்லி வருவது தெரிகிறது.

ராசன் ஆபாசமா பேசலனு சொல்லலை.. ஆனா அவர் ஆபாசமா பேசினது தவறுன்னுதான வழக்கு இருக்கணும்..

ராசன் ஆபாசமா பேசினதிலே சின்மயிக்கும் அவங்க அம்மாவுக்கும் என்ன நோவு..

அவங்களுக்கு ஏற்கனவே தகறாறு இருக்கு. சின்மயி அவரை ப்ளாக் பண்ணி ரொம்ப நாளாச்சு.. டுவிட்டர்ல ஒருத்தரை ப்ளாக் பண்ணிட்டா அவரோட டுவீட் எதுவும் இவர் டைம்லைன்ல வராது.

பிறகு எப்படி அவரோட டுவிட்ட இவங்க தேடிப்போயி படிக்கிறாங்க? ஒண்ணு போலிக்கணக்கு துவங்கி அவங்களை பின் தொடர்ந்திருக்கணும். இல்லை வெறும் ப்ரௌசர்ல டுவிட்டர்ல லாகின் பண்ணாம ராசனோட டைம்லைனயே வெறிச்சு பார்த்துகிட்டிருந்துருக்கணும். அவர் பூட்டு போடிருந்தா அதுவும் பார்க்க முடியாது.

சரி இவங்க கலாச்சார போலீசுல சேர்ந்துட்டாங்கனே வச்சுகிட்டாகூட டுவிட்டர்ல ஆபாச டுவீட் போட்டாருன்னுதானே வழக்கு தொடரணும்.. அதை விட்டுவிட்டு ஆபாசப் படங்களை மார்ஃப் பண்ணி அப்லோடு பண்ணாங்க.. செக்ஸ் தொல்லை கொடுத்தாருன்னு ஏன் பொய்ப்புகார் கொடுக்கணும்..அதன் மூலம் இவங்க அதிகாரபலம், பணபலம், பிரபலம் பயன்படுத்தி ஆறுபேர் குடும்பத்தையும் சீரழிக்கணும்.

சரி இந்த கலாச்சார போலீசு “மையா மையானு” ஆபாசப் பாடல் பாடும்போது தொப்பியைக் கழட்டி வச்சுட்டு போயிட்டாங்களோ?

சினிமாவில் ஆபாச வசனம், முக்கல், முனகல், கிளுகிளுப்பு காட்சி வரும்போதெல்லாம் அதை பேச இன்னொரு டப்பிங் ஆர்டிஸ்ட் வச்சாங்களாமா? டப்பிங்குக்கே டப்பிங்கா?

சினிமாவுல வர்ற ஆபாசத்தைத் தட்டிக் கேட்டா வேலை போயிருமோ?

ஆனா இவங்க குடுக்கிற பொய்ப்புகார்ல யாருக்காச்சும், தண்டனை கிடைச்சு வேலை போனா அவங்க விடுதலையாகி வந்து மானநட்ட வழக்கு போட்டு அதுல நிரூபிச்சு பணம் வாங்கிட்டு பேயாம இருந்துக்கணும். நல்லா நியாயம் பேசுறீங்களே.. இது தான் உங்க ஊர் நியாயமா? உங்க ஊர்ல பொய்ப் புகார் குடுத்தால் டபுள் தண்டணைனு ஆர்த்திராவும் நித்தியும் மாத்தி மாத்தி பேட்டி குடுக்கிறாங்க.. சும்மா டூப்பா?

எல்லாத்துக்கும் கடைசியா கேட்டீங்களே ஒரு கேள்வி..:) நீங்க எங்கே போனாலும் உங்க அம்மா, அக்கா, தங்கச்சியெல்லாம் கூடவே கூட்டிட்டுதான் போவீங்க போல.

உங்களுக்கு பதில் சொல்லவே உங்க ப்ளாகைப் போயிப் பார்த்தேன்.. அதிலே பள்ளிப் பிள்ளைகளை அடிப்பது தொடர்பான பதிவில் ஒரு பொண்ணு இன்னோரு பொண்ணோட புட்டத்துல கை வைக்கிறமாதிரி படம் போட்டுறுக்கீங்களே.. உங்க வீட்டுப் பொண்ணுங்க அந்த மாதிரி புட்டத்துல கைவைக்கிற மாதிரி படமெடுத்து போட்டிருக்கலாமே சார்..

உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயம்தானே சார் பேசுவீங்க.. இல்லையா?

நாகரீகம் கருதி வேற என்னலாம் எழுதிருக்கீங்க, படம் போட்டுருக்கீங்கனு டீப்பா எறங்கல..

இந்த லட்சணத்துல கேள்வி கேட்டுட்டு பதிலை ப்ராம்ப்ட் பண்ணி கேட்டு வாங்குறாரு...

ராஜ நடராஜன் சொன்னது…

இந்த பின்னூட்டமிடும் சில மணி நேரங்களுக்கு முன்பு வரை சின்மயி என்ற பெண் பற்றியே தெரியாது!

இன்று தமிழ்மணம் திறக்க முடியாத காரணத்தால் வில்லங்கம் ஏதாவதோ என்ற தேடலில் அட்ரா சக்க சிபி ராஜன் பற்றி பதிவிட்டது கண்டு அதிர்ச்சியடைந்தேன்.ராஜனின் கருத்தாடல்களில் புத்திசாலித்தனத்தோடு சில சமயங்களில் முக சுளிப்பும் ஏற்படுமென்றாலும் மொத்த இணைய கட்டற்ற கருத்தில் அது ஒரு சிறு புள்ளியே என்பதோடு பல கருத்து தளங்களையும் தொட்டு செல்பவர்.

அட்ராசக்கை பின்னூட்ட குறிப்பு ட்விட்டுகளை தொடரும் போது சின்மயி என்ற பெண்ணின் முதிர்ச்சியற்ற தன்மைக்கு கம்யூனிசம்,சாதி கட்டமைப்பு பற்றிய தீவிர ட்விட்கள் தேவைதானா என்ற கேள்வியே எழுகிறது.இதனை சவுக்கு தளம் ஓரளவுக்கு சொல்லி வைக்கிறது என்பதோடு சார்வாகன் தொடுப்பின் சின்மயி ஆங்கில கனவுகள் அதனை உறுதிப்படுத்துகிறது.

இது வரை ஒரு பக்கத்து வழக்கின் மீதான கருத்துக்களே வலம் வருகின்றன. சார்வாகன் சொல்லியது போல் ராஜன் குழுவின் கருத்துக்களையும் அறிவது அவசியம்.

திட்டுபவர்க்ளே இன்று கருத்து கட்டப்பஞ்சாயத்து செய்யும் இணைய சூழலில் கருத்துக்களையோ அல்லது கருத்தாளர்களையோ உள்வாங்காமல் சின்மயி ராஜன் தோழர்களையும் கையாளத்தெரியாமல் தனது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி கொண்டார் என்றே நினைக்கின்றேன்.

ஆமா!அதெப்படி ட்விட்டரில் மனவெளியின் மொத்த பிரதிபலிப்பையும் கொண்டு வந்து விட முடிகிறதா? கோழி கிறுக்கின மாதிரி எழுத்து என ஆரம்ப பள்ளி வாத்தியார் புகழாரம் சூட்டுவது மாதிரிதான் ட்விட்டர் கோழி கிறுக்கலும்:)

வருண் சொன்னது…

***உங்களுக்கு பதில் சொல்லவே உங்க ப்ளாகைப் போயிப் பார்த்தேன்.. அதிலே பள்ளிப் பிள்ளைகளை அடிப்பது தொடர்பான பதிவில் ஒரு பொண்ணு இன்னோரு பொண்ணோட புட்டத்துல கை வைக்கிறமாதிரி படம் போட்டுறுக்கீங்களே.. உங்க வீட்டுப் பொண்ணுங்க அந்த மாதிரி புட்டத்துல கைவைக்கிற மாதிரி படமெடுத்து போட்டிருக்கலாமே சார்.. ***

ஐயா: நான் யாரையும் படம் பிடிக்கலை. அது டைம் பத்திரிக்கையில் வந்த படம். ஒரு தாய் மகளை அடிப்பதுபோல. அதன் தொடுப்பு அந்தப் பதிவிலேயே கொடுத்து இருக்கேன்.

வருண் சொன்னது…

***உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவங்களுக்கு ஒரு நியாயம்தானே சார் பேசுவீங்க.. இல்லையா?

நாகரீகம் கருதி வேற என்னலாம் எழுதிருக்கீங்க, படம் போட்டுருக்கீங்கனு டீப்பா எறங்கல..***

ஒரு பிரச்சினையில் கருத்துச் சொன்னால் புதுசா ஒரு ப்ரஃபைல்ல வந்து உங்கள மாரி யோக்கியர்கள், கருத்துச் சொல்றவன் யோக்கியதையைப் பேசுவதே வேலையாப்போச்சு!

இப்போ வருண் யோக்கியன்னு எவனும் பேசவரவில்லை. டாப்பிக்கை விட்டு தாவ வேண்டாம். மறுபடியும், வருண் யோக்கியன் என்று சொல்லவில்லை! புரியுதா???

வருண் சொன்னது…

///பொதிகைச் செல்வன்

On Blogger since October 2012

Profile views - 6///

I know you just started this ID for defending the "case". LOL

Where were you all these years?

What all the other ids you have. Let me know!

இதுல ஏதோ பதிவுலக்த்துக்கே புதுசு மாரி ஒரு ட்ராமா வேற! :)))

வருண் சொன்னது…

ஒரிஜினல் யோக்கியன் ஐ டியை தூக்கி ஓரமா வச்சுட்டு. "பொய்கைச் செல்வன்" மண்ணாங்கட்டினு ஒரு "முகமூடி ஐ டி" யை ஆரம்பிச்சு அனானிமஸா வர்ரது. வந்து ஊருப்பய யோக்கியதையெல்லாம் பேசுறது!

Unknown சொன்னது…

//நான் யாரையும் படம் பிடிக்கலை. அது டைம் பத்திரிக்கையில் வந்த படம்.// அதுதான் ஏன் அடுத்தவங்க படத்தை ஏன் உங்க ப்லாக்ல போட்டீங்க.. எப்பவுமே கூடவே கூட்டிக்கிட்டு திரியுற உங்க வீட்டுப் பெண்கள் படம் போட்டிருக்கலாமே? நீங்க என் வீட்டுப் பெண்ணை வச்சு பார்க்கச் சொன்னீங்க. நான் உங்க வீட்டுப் பெண்ணை வச்சு பாருங்கனு சொன்னேன்.


சின்மயி அம்மாவுக்கு முன்பின் தெரியாத செந்தில்நாதனோட என்ன தொலைபேசியில் பேச்சு வேண்டிக் கிடக்கு? அது மிரட்டலா? இல்லை அவர்கள் பேசிக்கொண்டதுபோல கடலையா?

அவங்க பேசினப்புறம்தான் இவங்க கடலை போடுறதைப் பத்திப் பேசுறாங்க..

யாரோ யாரையோ கடலை போடுறதைப் பேசுறாங்கனா உங்க வீட்டுப் பெண் பிள்ளைகளை கடலை போட்டா எப்பிடி இருக்கும்னு அடுத்தவங்களை மட்டும் திறமையாக் கேக்குறீங்களே? உங்களைக் கேட்டா மட்டும் ஏன் சார் பொத்துக்கிட்டு வருது?

பதில் இல்லைனா உடனே யோக்கியதைம்பீங்க.. ப்ரொஃபைல் ஆராய்ச்சி பண்ணி ரிசல்ட் போட்டு உங்களை ஒரு துப்பறியும் புலினு காட்டிக்குவீங்க.. அதே மாதிரி எல்லாத்தையும் கண்டு பிடிச்சுக்கிட வேண்டியதுதானே.. ;)

டாபிக் யாரும் மாத்திட்டு ஃப்ரொஃபைல் ஆராய்ச்சி பண்ணச் சொல்லலை..

உணர்ச்சிவசப்படாம மொதல்ல இருந்து திரும்பவும் படிச்சுட்டு கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க...

வருண் சொன்னது…

***டாபிக் யாரும் மாத்திட்டு ஃப்ரொஃபைல் ஆராய்ச்சி பண்ணச் சொல்லலை..

உணர்ச்சிவசப்படாம மொதல்ல இருந்து திரும்பவும் படிச்சுட்டு கேட்ட கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்க...***

அனானியாக வந்து ஊரை ஏய்க்கும் உமக்கெல்லாம் இவ்வளவு பதில் சொன்னதே அதிகம்! ஒரிஜினல ஐ டி யில் வாரும், பிறகு பார்க்கலாம்! :)

Unknown சொன்னது…

@வருண்

ரைட்டு அப்பிடித்தான் இருக்கணும்.. பட் ஐ லைக் திஸ் டீல் வெரி மச்... இந்த டீல் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு..

;))))

தணல் சொன்னது…

//பிறகு எப்படி அவரோட டுவிட்ட இவங்க தேடிப்போயி படிக்கிறாங்க? ஒண்ணு போலிக்கணக்கு துவங்கி அவங்களை பின் தொடர்ந்திருக்கணும். இல்லை வெறும் ப்ரௌசர்ல டுவிட்டர்ல லாகின் பண்ணாம ராசனோட டைம்லைனயே வெறிச்சு பார்த்துகிட்டிருந்துருக்கணும். அவர் பூட்டு போடிருந்தா அதுவும் பார்க்க முடியாது.//

நீங்களே போட்ட ப்ளாட்டோட முடிச்ச நீங்களே அவிழ்க்கிரீங்களோ? சின்மயி வேற வேலை வெட்டியே இல்லாது ராஜன் பின்னாடியே சுத்திக்கொண்டிருந்தார். அதானே உங்க அவிழ்ப்பு?

விடை சிம்பிள். சின்மயிக்கு தெரிந்தவர் யாராவது இப்படி உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்று தகவல் சொல்லியிருக்கலாம்.

தணல் சொன்னது…

//சரி இந்த கலாச்சார போலீசு “மையா மையானு” ஆபாசப் பாடல் பாடும்போது தொப்பியைக் கழட்டி வச்சுட்டு போயிட்டாங்களோ?

சினிமாவில் ஆபாச வசனம், முக்கல், முனகல், கிளுகிளுப்பு காட்சி வரும்போதெல்லாம் அதை பேச இன்னொரு டப்பிங் ஆர்டிஸ்ட் வச்சாங்களாமா? டப்பிங்குக்கே டப்பிங்கா?

சினிமாவுல வர்ற ஆபாசத்தைத் தட்டிக் கேட்டா வேலை போயிருமோ?//

சினிமாவில் பாடுவதும் குரல் கொடுப்பதும் இணையத்தில் அவரை நேரடியாக அசிங்கமாகப் பேசுவதும் ஒன்றா 'பொத்து'கை? அசிங்கமா இல்ல இப்படியெல்லாம் தவறை நியாயப்படுத்த?

தணல் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
தணல் சொன்னது…

//அதிலே பள்ளிப் பிள்ளைகளை அடிப்பது தொடர்பான பதிவில் ஒரு பொண்ணு இன்னோரு பொண்ணோட புட்டத்துல கை வைக்கிறமாதிரி படம் போட்டுறுக்கீங்களே.. உங்க வீட்டுப் பொண்ணுங்க அந்த மாதிரி புட்டத்துல கைவைக்கிற மாதிரி படமெடுத்து போட்டிருக்கலாமே சார்.. //

இந்த மாதிரி தான் எல்லா நியாயங்களும் பேசிக்கொண்டு பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்கிறாயா தம்பி? ங்கொய்யால!

கோவி.கண்ணன் சொன்னது…

//விடை சிம்பிள். சின்மயிக்கு தெரிந்தவர் யாராவது இப்படி உங்களைப் பற்றி பேசுகிறார்கள் என்று தகவல் சொல்லியிருக்கலாம்.//

உங்களமாதிரி அம்புட்டு நல்லவங்களெல்லாம் இருக்காங்களா ?

பிரச்சனை இராஜன் பாடகியை ஆபாசமாகப் பேசினாரா ? என்பது தான், முதல்வரைப் பேசினார், மன்மோகனைப் பேசினார் என்றெல்லாம் சொல்லக் கூடாது. முதல்வரையும் பிரதமரையும் பேசுறவங்களைக் கணக்கெடுத்தால் நாட்டுல பாதிபேர் சிக்குவாங்க, மின்சாரம் இல்லாமல் புழுங்கும் கொசுக்கடி இரவுகளில் மன்மோகனையும், ஜெ-விற்கும் வாழ்த்துப் பா பாடி இருப்பாங்க ஜனங்க என்றா நம்புகிறீர்கள் ?

பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு நடிகைகள் பத்திரிக்கை உலகால் நாரடிக்கப்படுகிறார்கள், ஒரு தனிப்பட்ட மனிதன் தரக் குறைவாகப் பேசினான் என்று காவல்துறை வரைக் கொண்டு சென்றது முதிர்ச்சியான அணுகுமுறை போன்று தெரியவில்லை.

உடனே எங்க அக்கா தங்கச்சின்னு சுட்டி விளக்கம் சொல்வதை நிறுத்துங்கள், எங்க அக்கா தங்கச்சி பொது சமூகத்திற்குள் நுழைந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கும்.

இது தெரிஞ்சு தான் பல நடிகர்கள் தங்கள் மகள்களை களத்தில் இறக்கிவிடுவதில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

///fundoo சொன்னது…
சிஞ்சா!//

சிண்டு தெரிகிறது.

சிண்டு முடிவது என்றால், இருக்கிறவங்க முடிஞ்சிக்கிறதா ? இருக்கிறவர்களுக்கு முடிஞ்சு விடுவதா ?

வருண் சொன்னது…

கோவி: நீங்க ஏன் ராசனை பிரிக்கிறீங்க? 6 பேர் என்னை ஹராஸ் பண்ணினாங்க என்பதுதான் குற்றச்சாட்டு. இங்கே யாரும் ராஜன் இந்தத் தப்பு செய்தார்னு சொல்லவில்லை. அந்த 6 பேரில் ராஜன் ஏதோ வகையில் தொல்லை கொடுத்து இருக்கார் என்பதே புரிதல்.

தணல் சொன்னது…

//பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு நடிகைகள் பத்திரிக்கை உலகால் நாரடிக்கப்படுகிறார்கள், ஒரு தனிப்பட்ட மனிதன் தரக் குறைவாகப் பேசினான் என்று காவல்துறை வரைக் கொண்டு சென்றது முதிர்ச்சியான அணுகுமுறை போன்று தெரியவில்லை.//

அதாவது எவன் என்ன பேசினாலும் மூடிக்கொண்டு இருந்தால் அது மெச்சூரிட்டி. தட்டிக்கேட்டால் முதிர்ச்சி இல்லை? இன்று இந்தத் தரப்பு சமாதானத்துக்கு முயல்வது போல அவர்களும் முயன்றிருக்கிறார்கள். இவர்களுடைய நண்பர்கள் இவர்களுடைய செய்கையைக் கண்டித்தும் அது தொடர்ந்திருக்கிறது. அதன் பிறகே காவல்துறையை நாடியுள்ளனர்.

உணர்ச்சிவயப்பட்டு ஒரு முறை பேசி பிறகு மன்னிப்பு கேட்டு இருந்தால் பரவாயில்லை. பின்னூட்டங்களிலேயே நடப்பது தான். குழு சேர்த்து பேசுவதெல்லாம் ஹராஸ்மென்ட், உன்னால் எங்களை என்ன செய்துவிட முடியும் என்கிற திமிர்.

//எங்க அக்கா தங்கச்சி பொது சமூகத்திற்குள் நுழைந்தால் இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டித்தான் இருக்கும்.//

உங்களது அக்காள் தங்கைக்காகவும் தான் ராஜன்/மற்றும் சிலர் செய்தது தவறு என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். சின்மயிக்காக மட்டும் அல்ல.

//உங்களமாதிரி அம்புட்டு நல்லவங்களெல்லாம் இருக்காங்களா ?//

அதனால் தான் தொடர் மழை பெய்கிறதாம்!

தணல் சொன்னது…

//பிரச்சனை இராஜன் பாடகியை ஆபாசமாகப் பேசினாரா ? என்பது தான், முதல்வரைப் பேசினார், மன்மோகனைப் பேசினார் என்றெல்லாம் சொல்லக் கூடாது. //

சின்னாத்தா என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் சொன்னது…
கோவி: நீங்க ஏன் ராசனை பிரிக்கிறீங்க? 6 பேர் என்னை ஹராஸ் பண்ணினாங்க என்பதுதான் குற்றச்சாட்டு. இங்கே யாரும் ராஜன் இந்தத் தப்பு செய்தார்னு சொல்லவில்லை. அந்த 6 பேரில் ராஜன் ஏதோ வகையில் தொல்லை கொடுத்து இருக்கார் என்பதே புரிதல்.//

இராஜன் பிர்ச்சனை ஆனதும் விளக்கப் பதிவு போட்டுவிட்டு விலகிவிட்டார், அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது இராஜனைக் கோர்த்துவிட்டிருப்பதன் காரணம் புரியவில்லை, இணையத்தில் அனாநிமசாக எதையும் எழுதலாம் ஆனால் முகம் தெரிந்து எழுதுவது தான் பிரச்சனையாக்கப்படுகிறது.

இங்கே கூட தணல் என்பவர் யார் எதற்காக பக்க சார்பாகப் பேசுகிறார் என்றெல்லாம் நான் ஆராய்ச்சி செய்யவில்லை.

ஆபாசம் தடை செய்யப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் நடிகைகளின் நடுப்பக்க கவர்ச்சி அட்டைப் படம் போட்டு, பாதி மார்பு திறந்த நிலையில் நடிக்க வைப்பதையெல்லாம் ஆபாசம் என்று சொல்லாமல் கவர்ச்சி என்று கடை விரிக்கிறார்கள். சமூகம் கெட்டுப் போனதற்கு பத்திரிக்கைகளும், சினிமாவும் பொறுப்பேற்காத பொழுது அவற்றை நுகர்வோர்களைக் குறைச் சொல்லி என்ன பயன்.

பிரச்சனைக்கு உணர்ச்சிவசப்படுபவர் என்று வெளியே காட்டுவது கூட மறைமுகமாக பிறரின் தொடர் சீண்டல்களுக்கும் வழிவகுக்கும், இதையெல்லாம் புரிந்து கொண்டவர்கள் புறக்கணித்து செல்வார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தணல் கூறியது...
//பிரச்சனை இராஜன் பாடகியை ஆபாசமாகப் பேசினாரா ? என்பது தான், முதல்வரைப் பேசினார், மன்மோகனைப் பேசினார் என்றெல்லாம் சொல்லக் கூடாது. //

சின்னாத்தா என்று குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.//

சின்னாத்தா என்பது ஆபாசமா ? மதுரையில் அம்மாவைக் கூட ஆத்தா என்று தான் சொல்லுவார்கள். உங்களைப் போன்ற நொண்டிக்குதிரைகளுக்கு சறுக்கியது சாக்கு. நல்லா இருங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதனால் தான் தொடர் மழை பெய்கிறதாம்!//

இது மழை இல்லை, ஊதிவிட்டுப் வேடிக்கைப் பார்ப்பது. ஆபாசங்களுக்கு உள்ளே போவது தான் சரி என்றால் கருணாநிதி மற்றும் கனிமொழியை ஆபாசமாக இணையத்தில் எழுதுபவன் எல்லாம் அவன் மாயவரத்தில் பிறந்திருந்தாலும், திருக்குவளையில் பிறந்திருந்தாலும் உள்ளே போக வேண்டியது தான். என்ன நான் சொல்வது சரிதானே ?

தணல் சொன்னது…

//சின்னாத்தா என்பது ஆபாசமா ? மதுரையில் அம்மாவைக் கூட ஆத்தா என்று தான் சொல்லுவார்கள். உங்களைப் போன்ற நொண்டிக்குதிரைகளுக்கு சறுக்கியது சாக்கு. நல்லா இருங்க.//

சின்னாத்தா என்று கூறியதை எல்லாம் ஆபாசமாக எடுத்துக்கொள்ளும் அளவுக்கு நான் வட்டார வழக்குகள் அறியாதவரல்ல! சின்னாத்தா என்று மட்டும் கூறவில்லை. சின்மயியை இவ்வாறாகக் குறிப்பிட்டு வேறு என்னவோ பேசியிருக்கிறார். என்ன பேசினார் என்று ஸ்க்ரீன் ஷாட்ஸ் பாருங்கள்.

நொண்டிக்குதிரை என்று கூறியதையும் ஆபாசமென்று கருத மாட்டேன் :-)

தணல் சொன்னது…

//கருணாநிதி மற்றும் கனிமொழியை ஆபாசமாக இணையத்தில் எழுதுபவன் எல்லாம் அவன் மாயவரத்தில் பிறந்திருந்தாலும், திருக்குவளையில் பிறந்திருந்தாலும் உள்ளே போக வேண்டியது தான். என்ன நான் சொல்வது சரிதானே ?//

சரிதான். கருணாநிதியும் கனிமொழியும் வழக்குத் தொடர்ந்தால் உள்ளே போக வேண்டியது தான்!

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்மயியை இவ்வாறாகக் குறிப்பிட்டு வேறு என்னவோ பேசியிருக்கிறார். என்ன பேசினார் என்று ஸ்க்ரீன் ஷாட்ஸ் பாருங்கள்.//

மீனவர்கள் குறித்தப் பிரச்சனையில் மீனைக் கொல்வது பாவம் இல்லையா ? என்று கூறுவது எத்தகைய அனுதாபத்தில் எழுதுவது.

மீனக் கொல்வது பாவம் இல்லையா ? என்கிற ஒன்லைனுக்கு வசனம் எழுதுவது யாராக இருந்தாலும் அடுத்தவரியாக "மீனவனை இலங்கைக் இராணுவம் கொல்லுது" என்று எழுதுவது அவ்வளவு கடினமானதா ? அல்லது அதற்கு நிறைய கற்பனைகள் தேவைப்படுமா ?

மீனைக் கொல்வது பாவம் இல்லையா ? என்று மீனவ கிராமங்களில் சொல்லிப் பார்த்து அவர்கள் எத்தகைய பாராட்டு மழைகளையும் மாலை மரியாதையும் தருகிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் பின்னர் ஆபாசச் சொற்களின் முழு இலங்கணங்களையும் தெரிந்து கொள்ளலாம்

வருண் சொன்னது…

சின்மயி ஒரு ஆணாயிருந்தால், அவருடைய அம்மா அப்பாவாக இருந்து இருந்தால் இந்தப் பிரச்சினை ஒண்ணுமில்லாமல் போயிருக்கும்.
பெண் என்பதால்தான் பிரச்சினை. ஒரு பெண்தான் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட், கொலை மிரட்டல், கற்பழிப்பு போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும்.

அந்த 6 பேரும் பெண்ணாயிருந்தாலும் பிரச்சினை இல்லை.

இதேபோல் பதிவுலகிலும் பெண் பாதிக்கப்பட்டதால் பிரச்சினை ஆகியிருக்கு. பெண்களிடம் மிகவும் கவனமாகத்தான் இருக்கனும் என்பதுதான் எல்லோருக்கும் பாடம்.

தணல் சொன்னது…

//இது மழை இல்லை, ஊதிவிட்டுப் வேடிக்கைப் பார்ப்பது.//

இல்லை அவ்வாறான நோக்கமில்லை எனக்கு.

ராஜன் துணிச்சலான நாத்திக வாதங்கள் வைத்த காலமெல்லாம் ஒரு புறமிருக்க, அவர் பொதுவில் தனி மனிதர்களை மிகவும் அசிங்கமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தன் தவறை உணர்ந்து இனி இப்படிச் செய்யாதிருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இன்று தினமணியில் அவரது புகைப்படம் வெளியானது கண்ட போது வருத்தமே மிஞ்சியது. இனி இவ்வாறு குழு சேர்ந்து தனி மனிதரொருவரை ஆபாச வசை பாட மற்றவர்கள் தயங்க வேண்டும், அதற்கு இந்த இன்சிடென்ட் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன்.

சவுக்கு தளத்தில் வெளியாயிருந்த கட்டுரையில் மீனா கந்தசாமி மாட்டுக்கறி உணவு விழாவுக்கு தெரிவித்திருந்த ஆதரவு குறித்து, ஒரு இந்து மதவெறியன், பொட்டை நாயே என் மத உணர்வுகளை காயப்படுத்திட்ட உன்னை பொதுவில் வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி அதை படமும் பிடித்துப் போட வேண்டும் என்று பதிலுக்கு ட்விட்டி இருந்தான். இனி இவனைப் போன்ற மட்டை நாய்கள் இப்படிப் பேசு முன் யோசிப்பான்கள்.

தணல் சொன்னது…

//மீனவர்கள் குறித்தப் பிரச்சனையில் மீனைக் கொல்வது பாவம் இல்லையா ? என்று கூறுவது எத்தகைய அனுதாபத்தில் எழுதுவது.//

அவர் கூறியது தவறு தான். ஆனால் அதைச் சாக்காக வைத்து உள்மன வக்கிரங்களை கட்டவிழ்த்து விடுவது சரியல்ல. இதையே சின்மயிக்கு ஆதரவான நிலை கொண்டுள்ள பலரும் தெரிவித்துள்ளனர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இனி இவ்வாறு குழு சேர்ந்து தனி மனிதரொருவரை ஆபாச வசை பாட மற்றவர்கள் தயங்க வேண்டும், அதற்கு இந்த இன்சிடென்ட் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டுமென்றே நினைக்கிறேன். //

போலிஸுக்கு போவது பிரச்சனையை அடக்குமா ? பெரிதாக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

http://dinamani.com/latest_news/article1311877.ece

சின்மயி என் மீது கொடுத்த புகார் தவறானது; மானநஷ்ட வழக்கு போடவேண்டி வரும்: எழுத்தாளர் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

தணல் சொன்னது…

லாஸ்ஏஞ்சல்ஸ் ராம் கூறியிருப்பது நியாயமானது. இதற்கு சின்மயி தரப்பு விளக்கமும் மன்னிப்பும் அளிக்க வேண்டும்.

தணல் சொன்னது…

//போலிஸுக்கு போவது பிரச்சனையை அடக்குமா ? பெரிதாக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.//

வழக்கு தோற்றாலும் கூட இனி ஒருவன் ஆபாச வசை பாட அஞ்சுவானானால் அதுவே வெற்றி தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

////போலிஸுக்கு போவது பிரச்சனையை அடக்குமா ? பெரிதாக்குமா ? பொறுத்திருந்து பார்ப்போம்.//

வழக்கு தோற்றாலும் கூட இனி ஒருவன் ஆபாச வசை பாட அஞ்சுவானானால் அதுவே வெற்றி தான்.
//

வழக்கு தோற்குமா நிற்குமா என்பது பிரச்சனை இல்லை, ஆனால் சின்மயி எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்பது தான் இதன் மூலம் தெரிய வந்திருப்பதாக நான் கருதுகிறேன், இதன் மூலம் இவரை பலர் மன வக்ரகங்களைத் தீர்த்துக் கொள்ள சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள்.

இப்பவே பதிவுலகில் பலருக்கு பாடகியின் செயல் ஞாயமானதாகத் தெரியவில்லை.

Unknown சொன்னது…


ப்லாக்கர் தளத்தில் என்னுடைய பிண்ணனி பெருமை சேர்ப்பதாக இல்லை. அவருடைய தகுதிக்கு இழுக்கு எனவே விவாதிக்க முடியாதுனு வருண் சொன்னாரு சரி.. நான் விவாதம் பண்ணவே இங்க வரலை..

சுருக்கமாச் சொல்லனும்னா நீங்க அக்காக்காரி ப்லாக்கருக்கு வாக்கப்பட்டிருக்கீங்க.. நாங்க தங்கச்சிக்காரி டுவிட்டருக்கு வாக்கப்பட்டிருக்கோம்.. :)) அக்காக்காரிய நாங்களும் பொண்ணு பார்த்து பஜ்ஜி சொஜ்ஜியெல்லாம் சாப்பிட்டுட்டு வேண்டாம் தங்கச்சிக்காரி அக்காக்காரியை விட நல்லாருக்கானு அவளோட குடும்பம் நடத்திட்டிருக்கோம்.

தங்கச்சி வீட்டுல இருந்து உங்க வீட்டுக்கு விருந்தாளியா வந்தவங்களை இப்படியா நடத்துறது? ;)))

டுவிட்டர்ல நடந்த விவகாரத்தைப் பத்தி எழுதிருக்காரேன்னுதான் அங்கே ஆக்டிவா இருக்கிறதால எனக்கு தெரிஞ்சதை சொல்ல வந்தேன். இல்லைனா எப்பவும் போல கோவிகண்ணன் பதிவைப் படிச்சுட்டு நீங்க அடிக்கிற கும்மியை ரசிச்சுட்டு போயிக்கிட்டே இருந்திருப்பேன்.. உங்களுக்கு எது நியாயம்னு பட்டுதோ அதை நீங்க எழுத வேண்டியதுதானே.. அத விட்டுட்டு விவாதம் வேண்டாம்னு போன என்னை பதில் போடு, பதில் போடுன்னீங்க..

பதில் போட்டா அதுல என்ன சொல்லிருக்கேன்னு புரிஞ்சுக்காம, அதுக்கு பதில் சொல்லாம உன் ப்ரொபைல் நல்லால்லை.. அதனால பேச மாட்டேன்னு சொல்லிட்டாரு.. ரயில்ல தட்கலுக்கு தான் ஐடி புரூப்பெலாம் வேணும்னா இவரு பேசுறதுக்கே ஐடி ஃபுரூப்பெல்லாம் கேக்குறாரு.. சரி அதுவுஞ் சரிதான். நாம சொல்ல வந்ததைச் சொல்லியாச்சுனு விட்டுரலாம்னா.. அடுத்தது ஒண்ணு.. @தணல்

Unknown சொன்னது…

@தணல்

வார்த்தை விளையாட்டு விளையாடுறாராம்.. :)) உன்னைவிட பல வார்த்தை விளையாட்டு எங்களுக்கும் விளையாடத்தெரியும் தம்பி...

ங்கொய்யா.. னு நீ தட்டச்சும் போது ங்கொம்மா.. ங்கொக்கா.. னு எங்களுக்கு தட்டச்சு செய்யத்தெரியாதா? இல்லைனா நாங்க தட்டச்சு செஞ்சா கீபோர்டு தட்டாதா?

உன்னை மாதிரி ஆபாசத்துக்கு எதிரா பொறப்பட்டு வந்த புண்ணாக்குகளின் லட்சணம் இதுதானா?

இல்லைனா ங்கொய்யா.. ன்னு சொன்னதை அனுமதிச்ச கோவிக்கண்ணன் பதிலுக்கு நான் சொன்னா அதை அனுமதிக்காமல் போய் விடுவாரா? அவர் என்ன ஒருதலைப் பட்சமாகவா ப்லாக் நடத்துறாரு..? ;)

@தணல் நீங்க எதுனாலும் ஆபாசமா பேசுவீங்க கேட்டுட்டு போயிருவேனு நினைக்காதீங்க.. பதில் கொடுத்துக்கிட்டேதான் இருப்பேன்.. போதும்னா நீங்கதான் நிறுத்தணும்..

உண்மையச் சொன்னா இப்ப எனக்கு வேலையில்லை.. உங்களுக்கும் வேலையில்லைனா வாங்க அசிங்க அசிங்கமா பேசிக்கலாம்..

இல்லைனா உங்களுக்கு எது நியாயம்னு படுதோ அந்த கருத்தை - அடுத்தவங்ககிட்டே ஆபாசமா பேசி திசைதிருப்பாம - எடுத்து வச்சுட்டு போயிட்டே இருங்க..

திருப்பி கூப்பிட்டா வருவேன்.. :))

R.Puratchimani சொன்னது…

கோவி.கண்ணன் கூறியது...
//ஆபாசம் தடை செய்யப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் நடிகைகளின் நடுப்பக்க கவர்ச்சி அட்டைப் படம் போட்டு, பாதி மார்பு திறந்த நிலையில் நடிக்க வைப்பதையெல்லாம் ஆபாசம் என்று சொல்லாமல் கவர்ச்சி என்று கடை விரிக்கிறார்கள். சமூகம் கெட்டுப் போனதற்கு பத்திரிக்கைகளும், சினிமாவும் பொறுப்பேற்காத பொழுது அவற்றை நுகர்வோர்களைக் குறைச் சொல்லி என்ன பயன்.//

அருமை

வேகநரி சொன்னது…

//k.rahman சொன்னது…
அந்த அய்ந்து, ஆறு பேர் அவ்வளவு ஆபாசமாக பேசியது மிக தவறு.
gd naidu என்ற பெயரில் வந்த ட்வீட் பாருங்கள் எவ்வளவு திமிர். ஒரு பெண் என்ன செய்து விட முடியும் என்ற அலட்சியம் தானே. பேசியதற்கு கண்டிப்பாக தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். இனி மேல் வார்த்தைகளை ஜாக்கிரதையாக கை ஆளுவார்கள்.
R.Puratchimani கூறியது...ஆபாசமான வார்த்தைகளை அனைவரும் அறவே தவிர்க்க வேண்டும். இணையத்திலும் சரி, வீட்டிலும் சரி, வெளியிலும் சரி. இதுவே நாட்டிற்கும், வீட்டிற்கும், தமிழிற்கும் நல்லது.//

அருமையான கருத்துக்கள்.

வருண் சொன்னது…

பொ செ:

தங்கச்சியையே கட்டி அழ வேண்டியதுதானே? இங்கே வந்து திடீர்னு ஒரு ஐ டி தயாரிச்சு வந்து "உலகமகா யோக்கியன்" நீர்னு சொன்னால் நான் நம்புவதற்கில்லை.

விவாதத்தை விட்டுப்புட்டு வருண் நீ என்ன எழுதுற? என்ன தளம் நடத்துற? இதெல்லாம் என்ன இது???

வருண் யோக்கியன் என்று சொல்லவில்லை! வருணை கெட்டவனாக்குவதால் நீர் அந்த 6 பேர் செய்வதை எப்படி சரி என்றாக்க முடியும்? 6+1 தான் ஆகும் என்பதை உமது மண்டையில் ஏற்றும்!

இப்போ தணலை தாக்க ஆரம்பிச்சுட்டீர். இனிமேல் இப்படித்தான் போகும். உமது கருத்துக்கு மாற்றுக்கருத்து வைப்பவர்களை வேறுவகையில் உடைக்கத் தான் முயல்கிறீர்.

இதுபோல்தான் என்ருமே விவாதம் போகும். போயிக்கொண்டு இருக்கிறது. நீர் சொல்லுவது போல் "பளாட்" பண்ணி ஒரு ஆளை கவிழ்ப்பதெல்லாம் நடப்பதில்லை.அதற்கெல்லாம் யாருக்கும் நேரமும் இல்லை!

என்னைப்பொறுத்தவரையில் நீர் ப்ளாகருக்கு புது ஆள், ட்விட்டர்ல வெளைஞ்சவர் என்பதெல்லாமே கதைதான். நீர் பெரிய யோக்கியன்னு நம்ப வேண்டிய அவசியம் எதுவும் இல்லை!

ஆனால் இங்கே நான் மட்டும் இல்லை. ஆயிரம்பேர் வருவார் போவார். அவர்கள் உம் கதையை வாங்கலாம், வாங்கி விற்கலாம். அதனால் நீர் உமது பணியைத் தொடரலாம்.

தொடரும்!

Unknown சொன்னது…

@வருண்

நான் ஏன் இங்கே வந்து எனது கருத்துகளைப் பதிவு செய்கிறேன் என்பதை சிறுபிள்ளைக்கு விளக்குவது போல் மேலே விளக்கியிருக்கிருக்கிறேன்.

அதற்கு மேலும் அதனை விமர்சிப்பது உங்கள் அறிவின் விஸ்தாரமென்ன என்பதைக் காட்டுகிறது.

//விவாதத்தை விட்டுப்புட்டு வருண் நீ என்ன எழுதுற? என்ன தளம் நடத்துற? இதெல்லாம் என்ன இது???

வருண் யோக்கியன் என்று சொல்லவில்லை! வருணை கெட்டவனாக்குவதால் நீர் அந்த 6 பேர் செய்வதை எப்படி சரி என்றாக்க முடியும்? 6+1 தான் ஆகும் என்பதை உமது மண்டையில் ஏற்றும்!//

என் வீட்டுப் பெண்களை அந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலென்ன எனற் சொல்வது என்ன வகையில் நியாயமோ? அதே நியாயம் உங்கள் வீட்டுப் பெண்களின் புகைப்படம் போட்டாலென்னவுற்கும் பொருந்தும்.

ஆபாச எழுத்துகளை யாரும் ஆதரிக்கவில்லை.அவர்கள் ஆறு பேரில் இருவர் செய்யாத தவறுக்கு சிறை சென்று விடுதலையாகி, மான நட்ட வழக்கு போட்டு பணம் சேர்க்கலாம் என்று சொல்லும் உங்கள் யோக்கியதை புல்லரிக்க வைக்கிறது.

50000 டுவீட்டுகளில் அந்த பொய் வழக்கு போட்ட கும்பலால் 10-20 ஆபாச டுவீட்டுகளைத்தான் தேடி எடுக்க முடிந்துள்ளது.

ஆபாசமாக டுவீட்டியதற்கு அதற்குரிய செக்சனில் வழக்கு பதியாமல், நேரடியாக ஆபாசமாகப் பேச்சில் பாதிக்கப் படாத, தொடர்பே இல்லாத சின்மயி முன் விரோதம், பழி வாங்கும் உணர்ச்சியின் காரணமாக, ”ஆபாச படம் மார்ஃப் செய்து டுவிட்டரில் வெளியிட்டதாகவும், செக்ஸ் தொல்லை கொடுத்ததாவும்” பொய்ப்புகார் கொடுத்ததன் பேரில் பொய்வழக்கு தொடரப் பட்டுள்ளது.

6+1 னு உமது யோக்கியதையை நீரே சொல்லிக்கிறீர்.
அவங்க உள்ளே போயி நாடு திருந்தணுமாம், நீர் வெளியிலேயே கருத்து சொல்லிகிட்டு உலாத்துவீராம்.

உங்களைப் போன்ற அரை வேக்காடுகள் கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லைனா தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது புதிதா என்ன?

நீங்க அசிங்கமாகவும் ஆபாசமாகவும் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபடுவதே திசைதிருப்பத்தானே..

//இப்போ தணலை தாக்க ஆரம்பிச்சுட்டீர். இனிமேல் இப்படித்தான் போகும். உமது கருத்துக்கு மாற்றுக்கருத்து வைப்பவர்களை வேறுவகையில் உடைக்கத் தான் முயல்கிறீர்.//

என்னோட கருத்தைப் பதிவது மட்டுமே நோக்கம்.. உங்களைப் போன்ற சில்லரைகளிடம் விவாதம் நடத்தி உங்கள் பேத்தல்களை உடைப்பது என் நோக்கமல்ல.. அது நீங்கள் எழுதியவுடனே சந்தி சிரித்து தானாகவே உடைந்து விடுகிறது.

தணல்/ வருண் யாராயிருந்தாலும் அசிங்கமாப் பேசினா கேட்டுட்டு அப்படியே விட்டுற முடியாது, திருப்பி பதிலடி கிடைக்கும்... அதுவும் காத்திரமாகத்தான் இருக்கும்...

வருண் சொன்னது…

***என் வீட்டுப் பெண்களை அந்த இடத்தில் வைத்துப் பார்த்தாலென்ன எனற் சொல்வது என்ன வகையில் நியாயமோ?***

உம் வீட்டுப்பெண்ணை அங்கே வைத்து நான் பார்க்கச் சொன்னேனா?

பச்சைப் பொய்!

எனக்கு சார்வாகனை ரொம்பத் தெரியும்! அவரிடம் நான் சொன்னது. கண்னைத் திறந்து போய் பாரும்!

அதற்கு அவர் எதிர்வாதம் செய்யலாம்? கண்டனம் தெரிவிக்கலாம். நீர் யாரு???
முந்தா நாள் பெய்தமழையில் நேற்று முளைத்த காளான்!

நீர் சார்வாகனா?

இல்லை என்றால் இதைப்பத்தி கவலைப்பட வேண்டியதில்லை!

Unknown சொன்னது…

ஆமாம் நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கும் போல..

சார்:

எனப் போட்டிருக்கிறீர்கள்..
என்னுடைய கருத்தில் இருந்து ஒரு பகுதியை வெட்டியெடுத்து போட்டதால்
என்னைத்தான் மரியாதையாக சார் என விளிக்கிறீர்கள் என ஏமாந்து போனேன்.

இன்னோரு இடத்தில்
ஐயா:

என விளித்து பதில் சொல்லியிருக்கிறீர்கள்

மேற்கொண்டு வளரும் போதாவது நீங்கள் சொல்லியிருக்கலாம்..

நீங்கள் என் குறித்து எதுவும் சொல்லாமலிருந்து நான் சொல்லியது உங்களை காயப்படுத்தியிருந்தால்மன்னிக்கவும்..

வவ்வால் சொன்னது…

கோவியார்,

எல்லாருமே இன்னிக்கு இந்த யாவாரம் தானா, நல்லா இருக்கே.

எதாவது சொன்னா எதவாது நடக்குமோ, எனவே எதாவது பாதுகாப்பா சொல்லி வைப்போம்.

இன்று பரோட்டாவும் ,இட்லியும் சாப்பிட்டேன், பரோட்டா ரொம்ப கடினமாகவும் ,இட்லி மென்மையாவும் இருந்தது, பரோட்டாவுக்கு வெஜ் குருமா தான் :-((

ஆயுத பூஜைக்கு அடுத்த நாள் என்பதால் ,மரணவிலாஸ் கடைக்கு விடுமுறையாம் !!!

தணல் சொன்னது…

//ங்கொய்யா.. னு நீ தட்டச்சும் போது ங்கொம்மா.. ங்கொக்கா.. னு எங்களுக்கு தட்டச்சு செய்யத்தெரியாதா? இல்லைனா நாங்க தட்டச்சு செஞ்சா கீபோர்டு தட்டாதா?//

ஒரு வார்த்தை சொன்னதுக்கே இப்படி கோபம் வருதே, அந்தப் பெண்ணை பொதுவிடத்தில் எல்லோர் முன்னேயும் கூட்டம் சேர்த்துட்டு அசிங்கமாகப் பேசினால் அவருக்கு எப்படி இருக்குமென்று நினைத்துப் பாருங்கள்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து நிறைய பேருக்கு இருக்கு, குறிப்பா முற்படுத்தப்பட்ட சாதியினருக்கு. திரைப்படத்துல இப்படி பரப்புரையாக வருவதை எதிர்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். தெரிந்த பெண்ணுக்கு இடம் கிடைக்காமல் போனதில் வருந்தி சின்மயி சொன்னதை, என்னவோ அவர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சூழ்ச்சிப் பரப்புரை செய்வதைப் போன்று உருவகப்படுத்தி என்ன வேண்டுமானாலும் பேசுவர். ஆனால் உங்களை ஒரு வார்த்தை சொன்னதும் கோபம் பொத்துகிட்டு வருகிறதோ?

"புனா தலைவி க்கு என்ன கலருன்னு மண்ணு சிங் கிட்ட கேட்கலாம்" என்று டிவிட்டும் ராஜனை, //ராசனின் டுவீட்டுகள் சில ஆபாசமாகத்தான் இருக்கும்.. பொது வாழ்க்கையில் இருக்கும் சிலரை அவர் கேலி
செய்வது உண்மைதான்..// சாமானியனின் சவுக்கடி என்று கடந்து போகும் நீர், ஒரே ஒரு வார்த்தைக்கே இப்படிப் பொங்கிப் வழிவதேன்? ரோசாவசந்த் கூறியதையே நானும் கூறுகிறேன், எதிரரசியல் என்று பொறுக்கித்தனத்தை நியாயப்படுத்துதல் ஆகாது.

//நீங்க எதுனாலும் ஆபாசமா பேசுவீங்க கேட்டுட்டு போயிருவேனு நினைக்காதீங்க.. பதில் கொடுத்துக்கிட்டேதான் இருப்பேன்.. போதும்னா நீங்கதான் நிறுத்தணும்..//
// யாராயிருந்தாலும் அசிங்கமாப் பேசினா கேட்டுட்டு அப்படியே விட்டுற முடியாது, திருப்பி பதிலடி கிடைக்கும்... அதுவும் காத்திரமாகத்தான் இருக்கும்... //

Sinmayi has the same right to exercise her anger against those vulgar comments, and complain to the police!

உங்களது பிரச்சனை என்ன, ராஜன் சின்மயி குறித்து ஆபாசமாகப் பேசவில்லை, அவரைப் பழி வாங்க அவரது மற்ற டிவிட்டுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தந்துவிட்டார் என்பது தானே? இது குறித்து மேலும் சில விவாதங்களைப் படித்துப் பார்க்கிறேன்.

But I think, Rajan needs a check to stop his irrelevant vulgar comments against anyone, so let this be the check! Let this be the check against those tend to pass vulgar comments, like the guy who had tweeted so obscenely against Meena Kandasamy! I am not a hater of Rajan, I wish he gets out soon, and continues his tweets in constructional way!Unknown சொன்னது…

@தணல்

ஓஹோ ஆபாசமான/அசிங்கமான சொல் எவ்வளவு அருவெறுப்பானது என்பதை ஒருமண்ணுமறியாத பதிவுலகிற்கும், டுவிட்டுலகிற்கும், தமிழுலகிற்கும் உணர்த்த நீவீர் ஆடிய திருவிளையாடல்தான் “ங்கொய்யால” என்பதோ..

பரம்பொருளே!!!

பரம்பொருளாகிய உங்களைப் போலவே ஆபாசம் என்ன என்பதை புத்திகெட்ட மாந்தருக்கு விளக்கதத்தான் ராசன் ஆபாசமா டுவீட் போட்டிருக்கக் கூடுமில்லையா?

ஒரு பரம்பொருள் வெளியே சுற்றிக்கொண்டிருக்க இன்னொரு பரம்பொருள் உள்ளே களி தின்பது நியாயமா?

பரம்பொருளே!

ஆபாச டுவீட்டுகளை யாரும் ஆதரிக்கவில்லை பரம்பொருளே..ஆபாசமாக டுவீட்டியதற்கு அதற்குரிய பிரிவுகளில் வழக்கு தொடுப்பதுதானே சரி..

சர்வேசா!!!

ஆபாசப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டார், செக்ஸ் தொல்லை கொடுத்தார், பணம் கேட்டு மிரட்டினார் என்றெல்லாம் பொய் வழக்கு பதிவதும் உங்கள் திருவிளையாடலில் அடங்குமோ? வேந்தே..

ஈசனே!!!

சூத்திரக்கூ என சாதி சொல்லித் திட்டுவதும் உங்கள் திருவிளையாடலில் அடங்குமோ? மற்றவன் உள்ளிருக்க இப்படிச்சொன்னவன் மட்டும் தெருவில் சுதந்திரமாகச் சுற்றலாமோ?

//உங்களது பிரச்சனை என்ன, ராஜன் சின்மயி குறித்து ஆபாசமாகப் பேசவில்லை, அவரைப் பழி வாங்க அவரது மற்ற டிவிட்டுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தந்துவிட்டார் என்பது தானே? இது குறித்து மேலும் சில விவாதங்களைப் படித்துப் பார்க்கிறேன்.//

உலகளந்த பெருமாளே!!!

மூவுலகும். முக்காலமும் அறிந்த நீங்களே ஒண்ணும் படிக்கவில்லை என ஒத்துக் கொள்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது..

படிக்காமலேயே பஞ்சாயத்து செய்து தீர்ப்பு சொல்வது உங்கள் சிற்றறிவைக் காட்டுகிறது..

என்ன செய்ய இதுவும் தாங்கள் ஆடும் திருவிளையாடலாக இருக்கும்..

:)))

வருண் சொன்னது…

****மூவுலகும். முக்காலமும் அறிந்த நீங்களே ஒண்ணும் படிக்கவில்லை என ஒத்துக் கொள்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது..

படிக்காமலேயே பஞ்சாயத்து செய்து தீர்ப்பு சொல்வது உங்கள் சிற்றறிவைக் காட்டுகிறது..****

பொ செ:

1) நீங்க சொல்றதைப் பார்த்தால் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ரெண்டு பேரை போலிஸ் அரஸ்ட் செய்து இருக்கு.

அப்படித்தானே?

2) Ms Sripada alleged that since January last year, "a few individuals have threatened to kill, rape and assault me on Twitter". She added that "there are aspersions cast on my character as well as a chronic steam of vulgar references and innuendoes even about my mother".


இதுவும் பொய்? அபப்டித்தானே?

சரி அப்படியே 1) ம் 2) ம் பொய், அதற்கு எந்த ஆதாரமும் இல்லைனா
திடீர்னு போயி எப்படி ரெண்டு பேரை அரெஸ்ட் செய்ய முடியும்? எனக்குப் புரியலை..

ஜெ யை, கனிமொழியை எல்லாம் தூரமா வைங்க! இப்போ சின் மயி மற்ரும் அந்த 6 பேர் பத்தி மட்டும் பார்ப்போம்.

அ) எல்லாருமே இண்ணொசண்டா?

ஆ) இல்லைனா ராஜன் மட்டும் இன்னொசண்டா?

இ) மேலே நீங்க கொடுத்து இருக்கும் ட்விட்ஸ் (அவங்க அம்மா பத்தி பேசுவது) அதுவும் ஒண்ணுமில்லையா??

விபரம் சொல்லவும்!

இந்த கேஸ் சம்மந்தமாக எல்லா ஆதாரங்களும் பத்திரிக்கைகளில் வெளியில் வரும். அப்போ நீங்க சொல்ற இந்த விடயங்கள் சரி பார்க்கப்படும்.

Unknown சொன்னது…

@வருண்

இப்ப நீங்க என்கிட்டேதான் கேக்குறீங்கனு நெனச்சு நான் இந்தப் பதிலைச் சொல்றேன்..:))

இப்ப கேட்ட எல்லாக் கேள்விக்கும் என்னுடைய முதல் பதிவில் பதில் இருக்கு.. மறுபடியும் ஒருமுறை படிக்கவும்..

வேறு ஏதெனும் தேவையென்றால் கூறவும்.. தெரிந்தவற்றைப் பகிர்கிறேன்..

வருண் சொன்னது…

பொ செ: இங்கே யாரும் ராஜனுக்கு எதிரி கெடையாது. சின் மயிக்கு நண்பரும் கெடையாது. மொதல்ல அத தெரிஞ்சுக்கோங்க.

ரெண்டாவது..

***இப்ப கேட்ட எல்லாக் கேள்விக்கும் என்னுடைய முதல் பதிவில் பதில் இருக்கு.. மறுபடியும் ஒருமுறை படிக்கவும்.. ***

1) நீங்க "ப்ளாட்" பண்ணி கவுத்தீட்டாங்கனு சொல்வதை நம்பவில்லை

2) அவங்க அம்மா பத்தி பேசியிருப்பது (இரட்டை அர்த்தம்), அது ஒரு மாதிரி ஹராஸ்மெண்ட் தான்.

மத்தபடி உங்க பதிவில் வேறெதும் தெரியலை. :)

வருண் சொன்னது…

***ஆபாச எழுத்துக்களை ஆதரிப்பதற்கில்லை.. ஆனால் ஆபாசம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது.. ராசன்

சின்மயிடம் ஆபாசமாகப் பேசியதாக எந்த ஆதாரமுமில்லை.. அவர்கள் குற்றச்சாட்டு ராசன் பொதுவாக

ஆபாசமாகப் பேசினாரென்றால் அதற்குரிய பிரிவில் நடவடிக்கையெடு.. அவர் ஆபாசமாகப் பேசுவதால்

சின்மயிக்கும் அவரது அம்மாவுக்கும் என்ன கேடு.

ஏன் இந்த பொய் வழக்கு?***


///திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் இவர். இவர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறார். டிவிட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மிகவும் துடிப்பான உறுப்பினர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவர், சின்மயிக்கு தான் எழுதிய கருத்துகள் குறித்து ஒப்புக்கொண்டார். மேலும், தனது @rajanleaks என்ற பெயரிலான தளம் குறித்தும், தான் அதன் மூலம் சின்மயிக்கு ஆபாசக் கருத்துகளை எழுதியதையும் போலீஸாரிடம் ஒப்புக்கொண்டார். பின்னர் இவர் எழும்பூர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.///


ஏன் தான் தவறு செய்ததாக ராஜன் ஒத்துக்கொண்டார், பொ. செ

வருண் சொன்னது…

பொ செ: ராஜன், சின்மயினிடம் ஆபாசமாகப் பேசிய எந்த ஆதாரமும் இல்லை என்றால், அவர் "நாட் கில்ட்டி" "நான் எதுவ்ம் தவறு செய்யவில்லை"னு தானே சொல்லனும்???

"நான் ராஜன், ஆனால் நான் எதுவும் ஆபாசமாகப் பேசவில்லை"னு தான் அவர் சொல்லனும். அதன் பிறகு வக்கீலை வாதிடச் சொல்லனும். ஏன் ஒத்துக்கொண்டதாக செய்தி சொல்லுது??? (இது தினமணி)

வவ்வால் சொன்னது…

இந்தப்பதிவினை படிக்கும் போது எனக்கு தோன்றும் கருத்து என்னவெனில்,

சைபர் கிரைமில் புகார் கொடுத்து , ஒருவர் கைது செய்யப்பட்டால் ,எல்லா ஆதாரமும் இருப்பதால் தானே என சொல்வதாகபடுகிறது,

அப்படியல்ல,

உண்மையில் ஆதாரங்கள் இருக்கிறது, முறைப்படி கணினி தொழில்நுட்பப்படி அனைத்தும் சேகரித்து , கதி செய்யப்பட்டிருந்தால் , புகாரில் குறிப்பிடப்பட்ட 6 பேரும் இன்னேரம் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.

முகம், தொ.பே.எண், வசிப்பிடம் தெரிந்த இருவர் மட்டும் கைது செய்யப்பட்டு இருப்பதில் இருந்தே அறியலாம், இது கணினி தொழில்நுட்ப முறையில் அவர்கள் இடம் அறிந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல என.

மேலும் அவர்களே ஒப்புக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டே சரி என சொல்லி இருக்க வேண்டும்.

இதற்கு வழக்கமாக காவல்துறை சொல்வது நீயே ஒத்துக்கிட்டா , தண்டனை கம்மி, மேலும் சித்தரவதை இருக்காது.

இந்த இடத்தில் ஒத்துக்கிட்டு கை எழுத்துப்போட்டால் , அவங்களை கூப்பிட்டு,சமரசம் பேசிடலாம்னு ஆசையும் காட்டப்பட்டிருக்கலாம்.

எனவே மாட்டியதால் அதனை காவல் துறை திறம்பட புலனாய்வு செய்து பிடித்தது என நினைத்து கொள்வது சரியல்ல.

ஆபாசமகா பொது வெளியில் பேசுவது தவறே, அதே சமயம் பொதுவெளியில் பொதுமக்களின் பெரும்பாண்மை கருத்துக்கு எதிராக பேசினால் வரும் பதில்களையும் எதிர்க்கொள்ளவும் தயாராக இருப்பவர்களே பேச வேண்டும்.

அபத்தமாக பேசியதற்கு ஆபாசமாக பேசி , குற்றவாளிகள் ஆகிவிட்டார்கள்.

18 ஆம் தேதி கொடுத்த புகாருக்கு 22க்குள் டிவிட்டரின் செர்வர் ஐ.பி டீடெயில் எப்படித்தான் பெற்றார்களோ :-))

நான் எல்லாம் சின்ன வயசிலே அம்புலிமாமா கதை எல்லாம் படிச்சாச்சு :-))

தணல் சொன்னது…

உமது பக்தியை மெச்சினோம் பக்தா!

---
//ஆபாசப்படத்தை மார்ஃபிங் செய்து வெளியிட்டார், செக்ஸ் தொல்லை கொடுத்தார், பணம் கேட்டு மிரட்டினார் என்றெல்லாம் பொய் வழக்கு பதிவதும் உங்கள் திருவிளையாடலில் அடங்குமோ? வேந்தே..//

அப்படி கொடுத்திருந்தால் அது காவல் துறை விசாரணையில் பொய் என்று தெரிய வந்துவிடும் பக்தா! நீவிர் கவலை கொள்ளலாகாது! நான் வாசித்த செய்தியிலும் அவ்வாறு எதுவும் சொல்லப்படவில்லை, நீர் சொல்லித் தான் படிக்கிறேன்.

---

//ஈசனே!!!

சூத்திரக்கூ என சாதி சொல்லித் திட்டுவதும் உங்கள் திருவிளையாடலில் அடங்குமோ? மற்றவன் உள்ளிருக்க இப்படிச்சொன்னவன் மட்டும் தெருவில் சுதந்திரமாகச் சுற்றலாமோ?//

குற்றம் குற்றமே அப்பனே!

---

//
//உங்களது பிரச்சனை என்ன, ராஜன் சின்மயி குறித்து ஆபாசமாகப் பேசவில்லை, அவரைப் பழி வாங்க அவரது மற்ற டிவிட்டுகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தந்துவிட்டார் என்பது தானே? இது குறித்து மேலும் சில விவாதங்களைப் படித்துப் பார்க்கிறேன்.//

உலகளந்த பெருமாளே!!!

மூவுலகும். முக்காலமும் அறிந்த நீங்களே ஒண்ணும் படிக்கவில்லை என ஒத்துக் கொள்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது..

படிக்காமலேயே பஞ்சாயத்து செய்து தீர்ப்பு சொல்வது உங்கள் சிற்றறிவைக் காட்டுகிறது..

என்ன செய்ய இதுவும் தாங்கள் ஆடும் திருவிளையாடலாக இருக்கும்..

:)))//

பக்தா! நான் இயங்கும் இணையவுலகில் காண்பதை வைத்து பேசுபவர்! வழக்கு குறித்து அறிந்தேன், ஸ்க்ரீன் ஷாட்ஸ் கண்டேன், ட்விட்டரில் இயங்கி வரும் பலரின் (சின்மயி சார்பு, ராஜன் சார்பு இருபக்கமும்) கட்டுரைகளை, வாதங்களை வாசித்தேன், சின்மயியின் சர்ச்சைக்குரிய ட்வீட்டுகளையும் கண்டேன், இங்கும் இன்னொரிடத்திலும் பின்னூட்டமிட்டேன்! இன்று கூட இதைக்குறித்த அ.மார்க்ஸ் கட்டுரை மற்றும் கொற்றவையின் யூட்யூப் வீடியோ கண்டேன். ஓராண்டுக்கும் மேலாக நடக்கும் இந்தச் சண்டையின் முழுக் கதையையும் பக்கச் சார்பற்று யாரும் எழுதினால் இன்னும் தெரிந்து கொள்வேன். அதைப் பொறுத்து எனது கருத்துகளும் மாறலாம். எனது இந்த பின்னூட்டங்களால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப் போவது இல்லை, சில எதிர்கருத்துகளை ஏற்றுக்கொள்ள இயலாமல் தான் பின்னூட்டமிட நேர்ந்தது.

சின்மயி மற்றும் அவரது தாயாரைத் தூற்றியது ஆபாசமென்றால் அவர் பாடிய பாடலிலும் முக்கல் முனகல் இருக்கிறதே என்று கருத்து கூறி பஞ்சாயத்து செய்யும் தகுதி படைத்த முப்பொருளும் உணர்ந்த பொதிகை மலைச் சித்தரல்ல நான்! உம்மை எதிர்த்ததும் இந்த கருத்துக்காகத் தான். நான் வெறும் கருத்து கந்தசாமி, பொதுபுத்தி கோயிந்தஞ்சாமி, அவ்வளவு தான் பக்தா! எனது விருப்பம், இணையத்தில் தனிமனிதரை ஆபாச வசை பாடுவது குறைய வேண்டும், தட்ஸ் இட்! நான் உபயோகப் படுத்தியது பொதுவான ஒரு swear word தான், அதையெல்லாம் மீறியது 'வயசானாலும் பரவால்ல, உனக்கு யூஸ் ஆகும்' என்று ஒரு மனிதரைக் குறிப்பிட்டுப் பேசியது.

தணல் சொன்னது…

ராஜனின் டிவிட்டர் தளம் அவராலோ அல்லது காவல்துறையினராலோ முடக்கப்பட்டுள்ளதால், அவர் சின்மயி குறித்து வேறென்ன பேசியிருக்கிறார் அல்லது இன்னும் பேசாமல் இருக்கிறார் என்று அறிய முடியவில்லை!

அய்யனே என் பொதிகை மலை அய்யனே! பெண் புட்டத்தில் பெண் கைவைக்கும் கடுமையான ஆபாசப் படம் குறித்த சுடும் வாதங்களை நீவிர் முன்வைத்ததால் உமக்கு பதிலிட நேர்ந்தது. உம்மிடம் தொடர்ந்து மொக்கை போடுவதில் நேர விரயமேயன்றி வேறொன்றுமில்லை பராபரமே! எனது நிலைப்பாட்டை முன்பே கூறிவிட்டேன், I am not a hater of Rajan, I wish he gets out soon, and continues his tweets in constructional way!

கோவி.கண்ணன் சொன்னது…

தணல் சார்,

இது போட்டோ ஷாப்பா என்று சான்றிதழ் வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

http://pbs.twimg.com/media/A5_YWEpCEAAgHyj.png:large

தணல் சொன்னது…

கோவி சார், சைபர் கிரைம் எக்ஸ்பெர்ட் இடம் கேட்க வேண்டிய கேள்வியை எல்லாம் என்னிடம் கேட்டால் எப்படி?

ஆனால் இதில் சின்மயியை நோக்கி உங்கள் கருத்தா என்ற கேட்கப்பட்ட வாக்கியம், வினவில் வெளிவந்த, என்.ராமைக் குறித்த கேலி என்பதாகப் படித்தேன்.

Robin சொன்னது…

இந்தப் பிரச்சினையில் ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பார்ப்பனர்களுக்கு ஒன்று என்றால் எல்லா பார்ப்பனர்களும் ஒன்று சேர்ந்து ஆதரவளிக்கிறார்கள். ஆனால் சூத்திரர்கள் மட்டும் தங்களுக்குள் அடித்துக்கொள்கிறார்கள். சூத்திரர்கள் இரண்டு பக்க நியாயத்தையும் சேர்த்தே எடுத்து வைக்கிறார்கள். ஆனால் பார்ப்பனர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை மட்டுமே எடுத்து வைத்து தங்கள் ஆள் செய்த தவறுகளை தந்திரமாக மறைக்கப் பார்க்கிறார்கள்.

வருண் சொன்னது…

இங்கே பார்ப்பன லேபல்லே தேவையில்லாதது. அதை பிடிச்சு நீங்க தொங்க வேண்டிய அவசியம் இல்லை.

6 பேர் ஒரு பெண்ணிடம் வரம்பு மீறிட்டாங்க. அந்தப் பொண்ணுக்கு எல்லார் தயவும் வேண்டும், அவள் ஒரு செலிப்ரிட்டி என்பதால்.

அவள் எதுவும் வாத்தையை விடவில்லை. அதனால் அவளுடையை பொலிட்டிகல் வியூஸ், பார்ப்பன முத்திரை எல்லாம் கொண்டுவரப்பட்டு அவளை கெட்டவளாக்கிறாங்க. நீங்களும் அதைத்தான் செய்றீங்க ராபின்.

கோவி.கண்ணன் சொன்னது…

வருண்,

பார்பன எதிர்ப்புகளுக்கு சிறை செல்ல வேண்டுமென்றால், பாரதி கூட செல்லில் இருக்க வேண்டியவர் தான்.

பேராசைக் காரனடா பார்ப்பான் - ஆனால்
பெரியதுரை என்னினுடல் வேர்ப்பான்
யாரானாலும் கொடுமை இழைப்பான் - துரை
இம்மென்றால் நாய்போல உழைப்பான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவள் எதுவும் வாத்தையை விடவில்லை. அதனால் அவளுடையை பொலிட்டிகல் வியூஸ், பார்ப்பன முத்திரை எல்லாம் கொண்டுவரப்பட்டு அவளை கெட்டவளாக்கிறாங்க. நீங்களும் அதைத்தான் செய்றீங்க ராபின்.//

வருண்,

துவித்தரின் எத்தனையோ பெண்கள் எழுதுகிறார்கள், இவரை குறிவைத்து தாக்கப்பட்டதற்கான காரணம் வேறு என்னவாக இருக்கும் ?

Robin சொன்னது…

//அவள் எதுவும் வாத்தையை விடவில்லை// எழுதப்பட்ட டிவீட்டுகளை படித்துவிட்டுதான் என்னுடைய கருத்தை சொல்லியிருக்கிறேன். அந்தப் பெண் இட ஒதுக்கீட்டை எதிர்த்து எழுதியிருக்கிறார். ஏன் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது என்ற அடிப்படை புரிதல் இல்லை. மேட்டிமைத் தனமும் ஜாதிப் பெருமையுமே தெரிகிறது. மீனவர்களைப் பற்றிய டிவீட்டுக்கு கோவி கண்ணன் தொடுப்பு கொடுத்திருக்கிறார், பாருங்கள். பிரபலமானவர்கள் சென்சிடிவ் விஷயங்களில் கருத்து சொல்லும்போது கவனமாக இருப்பது அவசியம். அவருக்கு உங்கள் தயவோ என் தயவோ தேவையில்லை. அவர் உம் என்று சொன்னால் உதவி செய்ய ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை பெண்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது ஆண்களுக்கு நல்லது. பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். விமர்சனங்களையோ, மாற்றுக் கருத்துக்க்களையோ சகித்துக் கொள்ளும் பக்குவம் கிடையாது. இதில் ஒரு சிலர் மட்டுமே விதி விலக்கு. மற்றபடி அவரை ஆபாசமாக எழுதியதை நான் ஆதரிக்கவில்லை. எந்தப் பெண்ணையும் அவர் எந்த ஜாதியாக இருந்தாலும் ஆபாசமாக பேசுவது தவறுதான்.

வேகநரி சொன்னது…

//Robin கூறியது...அவரை ஆபாசமாக எழுதியதை நான் ஆதரிக்கவில்லை. எந்தப் பெண்ணையும் அவர் எந்த ஜாதியாக இருந்தாலும் ஆபாசமாக பேசுவது தவறுதான்//
அப்படியென்றால் நல்லது ரொபின்.
ஆனால் உங்க முதல் பின்னோட்டத்தை படித்த போது ஜாதி பார்த்து பார்ப்பன ஜாதி பெண்னென்றால் ஆபாசமா திட்டலாம் என்று நீங்க சொல்வதாக நினைத்தேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவள் எதுவும் வாத்தையை விடவில்லை. அதனால் அவளுடையை பொலிட்டிகல் வியூஸ், பார்ப்பன முத்திரை எல்லாம் கொண்டுவரப்பட்டு அவளை கெட்டவளாக்கிறாங்க. நீங்களும் அதைத்தான் செய்றீங்க ராபின்.//

நீங்களே எதுவும் வாயைவிட வில்லை என்றாலும் எந்த உரிமையில் அவள் இவள் என்றெல்லாம் பாடகியை விளிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, அவள் இவளெல்லாம் உரிமையிலும் சொல்லலாம், வசைகளிலும் சொல்லலாம், நீங்கள் சொல்வதை ஒருமை வசையாக எடுத்துக் கொண்டு உங்கள் மீது மான நஷ்ட வழக்குப் போட ஏகப்பட்ட முகாந்திரம் உள்ளது.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னைப் பொறுத்தவரை பெண்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது ஆண்களுக்கு நல்லது. பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்.//

பிரச்சனையே இங்கே தான். படத்தில் நடிகர்கள் இடுப்பைத் தொட்டு சில்மிசம் செய்வதை நாமும் செய்யலாம் என்று நினைக்கும் ரசிகனுக்கு அறைவிழும், குஷ்பு ஒருமுறை ரசிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

இராஜன் போன்றோர் பாடகியை பாடகியாக பார்க்காமல் சக ட்விட்டராக நினைத்து சீண்டியதால் ஏற்பட்ட விளைவுகளே இவை.

வருண் சொன்னது…

கோவி:

* "பெண்' என்பது முதல் பிரச்சினை. நீங்க டிஸ்க்ளோசர் படத்தில்கூட பார்க்கலாம் ஆண் செக்ஸுவல் ஹராஸ்மெண்ட் பத்தி பேசினால் நகைப்புக்குரியாதும்

* அவர் அம்மாவை பத்தி எழுதியிருக்கக் கூடாது. மறுபடியும் செண்ட்டிமெண்ட்ஸ். அவங்க ஒரு சிங்கிள் மதர். கல்யாண வயதில் பெண்ணை வச்சுண்டு இருக்கா..

* ராஜன் கல்யாணம் ஆனவர். மறுபடியும் செண்டிமெண்ட்ஸ்.. எதுக்கு ஒரு வயதுப்பெண்ணிடம் இவருக்கு வம்பு?

இப்படித்தான் உலகம் பார்க்கும்..

இப்போ உங்க கவுண்டர் வாதம்

* இடஒதுக்கீடுக்கு இந்தப் பெண் எதிரப்பு

* இவர் மேட்டுக்குடி

* இவர் மீனவர்கள் பிரச்சினையில் அவர்களுக்காக கண்ணீர் வடிக்காமல் மீன்களுக்கு கண்ணீர் வடிக்கிறார்

போன்றவை பொதுக் கருத்து. அதில் தவறு இருந்தாலும், அதை உலகம் பெரிதாக எடுக்காது.

எனக்கென்னவோ போலிஸ் போகும் முன்பே இவங்க யாராவது லாயரிடம் பேசி இருக்கலாம்னு தோணுது. அதன் பிறகுதான் போலிஸ் போயிருக்கக் கூடும்.

ஆனால் ராஜன் & கோ, கருத்துச் சுதந்திரம் என்ரு வாதாடலாம். அப்படி வாதாடும்போது, சின்மயிவின் கருத்துச் சுதந்திரத்தில் இந்த "மீன்", ரிசெர்வேஷன் எல்லாம் அடிபட்டுப் போகும் அபாயமும் உண்டு.

பொறுத்திருந்துதான் பார்க்கனும்.

வருண் சொன்னது…

****கோவி.கண்ணன் சொன்னது…

//அவள் எதுவும் வாத்தையை விடவில்லை. அதனால் அவளுடையை பொலிட்டிகல் வியூஸ், பார்ப்பன முத்திரை எல்லாம் கொண்டுவரப்பட்டு அவளை கெட்டவளாக்கிறாங்க. நீங்களும் அதைத்தான் செய்றீங்க ராபின்.//

நீங்களே எதுவும் வாயைவிட வில்லை என்றாலும் எந்த உரிமையில் அவள் இவள் என்றெல்லாம் பாடகியை விளிக்கிறீர்கள் என்று தெரியவில்லை, அவள் இவளெல்லாம் உரிமையிலும் சொல்லலாம், வசைகளிலும் சொல்லலாம், நீங்கள் சொல்வதை ஒருமை வசையாக எடுத்துக் கொண்டு உங்கள் மீது மான நஷ்ட வழக்குப் போட ஏகப்பட்ட முகாந்திரம் உள்ளது.

:)***

அது சரி. :)

அப்போ "பாடகி" நீங்க சொல்வதுகூட தப்புத்தானா?

மரியாதைக்குரிய பாடகி, இல்லைனா பாடகர்னு ர் போட்டு சொல்லனுமா?

இதுக்காக என் மேல் கேஸ் போட்டா என்னனுதான் பார்க்கனும்! இல்லை நான் அப்படி சொல்லலைனெல்லாம் சொல்ல முடியாது! நான் சொன்னது சொன்னதுதான். அது இங்கே இருக்கத்தான் போகுது! I will have to face the consequences!

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்போ "பாடகி" நீங்க சொல்வதுகூட தப்புத்தானா?//

தமிழ் நூஸில் எல்லாம் பாடகி என்றே தான் விழித்திருக்கிறார்கள், சுசிலா ஜானகி ஆகியோர்களை பாடகி என்று தான் சொல்கிறார்கள், வேண்டுமென்றால் கூடுதலாக மரியாதை விகுதி சேர்த்து பாடகியர் என்று சொல்லலாம்.

வருண் சொன்னது…

***என்னைப் பொறுத்தவரை பெண்களுடன் விவாதம் செய்வதை தவிர்ப்பது ஆண்களுக்கு நல்லது. பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். விமர்சனங்களையோ, மாற்றுக் கருத்துக்க்களையோ சகித்துக் கொள்ளும் பக்குவம் கிடையாது.***

Robin: பதிவுலகில் பொதுவாக எல்லாரும் காமெண்ட் மாடெரேஷன் வச்சிருக்காங்க.

ட்விட்டர் முகநூல் பத்தி எனக்கு உண்மையிலேயே தெரியாது. ட்விட்டர்ல ஏதோ 4 வரிதான் எழுதுறாங்க. இதில் என்ன கருத்தைச் சொல்லி, சண்டை போட்டு..

ஆனால் ஒண்னு, வெளியில் தைரியமாக பேசினாலும் உள்ளுக்குள் மனவுளைச்சலுடன் இருந்து இருக்கலாம்.

பழி வாங்குறாங்கனு சொலவதை ஏற்பது கடினமே.

பாடகியோட அம்மா நெறையா "பேச்சு வார்த்தை" நடத்தியதாகத் தெரிகிறது. அங்கேயே முற்றுப்புள்ளி வச்சிருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

வருண்,

எனக்கென்னவோ நீங்க ஒரு பெரிய பாடகி உங்களிடம் மட்டு மரியாதை இல்லாமல் இப்படி வம்பிலுக்கிறாங்கன்னு ஒரு கூட்டம் உசிப்பேற்றி விட்டிருக்கலாம் ன்னு தோணுது.

வருண் சொன்னது…

எனக்கு உண்மையிலேயே இந்தப் பாடகி பெரிய பிரபலம்னே தெரியாது.
எத்தனை பாடகர்கள் வந்து போயிக்கிட்டு இருக்காங்க? அவங்க எல்லாருமே மக்கள் ஆதரவு தேவைனுதான் நெனைக்கிறாங்க.


ட்விட்டர்ல இருப்பதும் இவருக்கும் ராஜனுக்கும் பிரச்சினை வருவதும் ஒரு சிலர் (ரிஷினு நெனைக்கிறேன்), ஒரு பின்னூட்டத்தில் சொல்லும்போதுதான் தெரியும். நமக்கென்னனு நான் விட்டுவிட்டேன்.

இப்போத்தான் ட்விட்டர்ல போயி என்ன ஏதுனு பார்க்கிறேன்.


***வருண்,

எனக்கென்னவோ நீங்க ஒரு பெரிய பாடகி உங்களிடம் மட்டு மரியாதை இல்லாமல் இப்படி வம்பிலுக்கிறாங்கன்னு ஒரு கூட்டம் உசிப்பேற்றி விட்டிருக்கலாம் ன்னு தோணுது.***

இவருக்குப் பின்னால ஒரு சிலர் ஆதர்வா ட்வீட் பண்னுறாங்க. ஆனால் யாரு யாரு ஆதரவு என்னனு விளங்கலை.

இதனால் பாடகி பேர் கெடுவதற்குத்தான் சான்ஸ் அதிகம்னு எனக்குத் தோணுது. இருந்தும் எதுக்கு இதை பெருசாக்கனும்னு விளங்கவில்லை!

தணல் சொன்னது…

//துவித்தரின் எத்தனையோ பெண்கள் எழுதுகிறார்கள், இவரை குறிவைத்து தாக்கப்பட்டதற்கான காரணம் வேறு என்னவாக இருக்கும் ?//

இன்று இந்த சமையல் செய்தேன், என் வீட்டில் பூத்த ஜாதிமல்லி வாசனையாக இருந்தது, என் குழந்தை முதல் முறையாக ரெண்டுக்கு போனது நெகிழ்வாக இருந்தது என்று ஸ்டேடஸ் போட்டால் பிரச்சனை எதுவும் வராது.

மறுபக்கம், அரசியல் கருத்திடும் பெண்களைப் பாருங்கள். குஷ்பூவாவது நடிகை, ஆனால் மற்றவர்கள்? முன்னர் சொன்னதைப் போல, மீனா கந்தசாமியை நோக்கி ஒரு இந்து மத வெறியர் ஆடியது, லீனா மணிமேகலையும் தம்மை நோக்கி ஆபாச ட்விட்டுகள் வந்தன என்று கூறியிருந்தார், இன்னும் இருக்கும்.

தணல் சொன்னது…

//இதனால் பாடகி பேர் கெடுவதற்குத்தான் சான்ஸ் அதிகம்னு எனக்குத் தோணுது. இருந்தும் எதுக்கு இதை பெருசாக்கனும்னு விளங்கவில்லை!//

திரைத்துறையினர் சிலர் தமது ஆதரவையே அளித்திருந்தனர்.

//எனக்கென்னவோ போலிஸ் போகும் முன்பே இவங்க யாராவது லாயரிடம் பேசி இருக்கலாம்னு தோணுது. அதன் பிறகுதான் போலிஸ் போயிருக்கக் கூடும்.//

தொடர்ந்து தாக்கினால் லீகல் அட்வைஸ் பெறுவது நலமென்று மற்றவர்களுக்குக்கு சின்மயி பொதுவானதொரு அறிவுரை கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை சைபர் கிரைம் தனது டிவிட்டர் அக்கவுன்ட்டை துவக்கி இருக்கிறது. ஆபாச வசவுகள் (வசவுகள் மட்டும் தான், மற்றபடி பூனம் பாண்டே போன்றவர்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டு தான் இருக்கப் போகிறார்கள்) கொண்ட ட்விட்டுகள் இப்பொழுது குறைந்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், அரசியல் எதிர்கருத்துரிமையை இது பாதிக்குமென்றால் நமக்குத் தான் நட்டம்.

வருண் சொன்னது…

***ஆனால், அரசியல் எதிர்கருத்துரிமையை இது பாதிக்குமென்றால் நமக்குத் தான் நட்டம்.***

இன்மேல்

* நல்ல பதிவு

* பாராட்டுக்கள்

* நல்ல சிந்தனை

னு பின்னூட்டமிட்டுவிட்டுப் போக வேண்டியதுதான்.

இன்வால்வ் ஆகி எழுதினால்த்தான் பிரச்சினை. ஏனோதானோனு எழுதினால் பிரச்சினை இல்லை..

இனிமேல் பதிவுலகம் படுத்து உறங்க வாய்ப்பதிகம்!

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

அதுக்குள்ளே ராஜனை suspend பண்ணிவிட்டதாக ஹிந்துவில் செய்தி வருது. He has not been proven guilty YET!!!!

I am really shocked to see the rate at which it moves!! Unbelievable!

தணல் சொன்னது…

//அதுக்குள்ளே ராஜனை சஸ்பண்ணிவிட்டதாக ஹிந்துவில் செய்தி வருது.//

:-((((

புகைப்படம் வெளியான போதே அஞ்சினேன். இவர்களது எதிர்காலத்தை மனதில் வைத்தாவது சின்மயி தரப்பு சமாதானத்துக்கு சரி என்றிருக்க வேண்டும்.

வருண் சொன்னது…

தணல்: நீங்க நம்பினால் நம்புங்க, இவர்கள் இதுபோல் தண்டிக்கப்படுவதால் சின்மயி மேல் வெறுப்பலைகள் அதிகமாகும் என்பதே என் கணிப்பு!

இதை "சைபர் க்ரைம்" என்பதை ஏற்கலாகாது.

"ஹராஸ்மெண்ட்" என்பதை வேணா ஏற்றுக்கலாம்!

Kite சொன்னது…

ராஜன் தரப்பு நியாயம் பேசும் முன்பு சின்மயின் புகார் என்ன என்று பார்ப்பது நலம். இட ஒதுக்கீட்டை எதிர்க்கவும், மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்காமல் இருப்பதற்கும் சின்மயிக்குக் கருத்துரிமை உண்டு. சின்மயி தன் புகாரில் கீழ் கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்:

'கருத்து சொல்றாளாமோ. மொதல்ல இந்த பார்ப்பாரப் பெண்களை ரோட்ல இழுத்துப் போட்டு ரேப் பண்ணனும்' 'அதோட இல்ல தல இந்த பாப்பார நாய்களை சங்கு சங்கா அறுத்து எறியணும் தல' .

இதையே ஒரு கோனார் பெண்ணையோ, தேவர் பெண்ணையோ இப்படி செய்ய வேண்டுமென்று சொல்லியிருந்தால் பகுத்தறிவாளர்கள் மற்றும் அறிவு ஜீவிகள் அனைவரும் ராஜனைக் கண்டித்திருப்பார்கள். ஏன் அது ஒரு சட்டசபை விவாதமாகக் கூட ஆகிருக்கும்.

சமாதானத்திற்கு முயற்சித்த பின்பு சின்மயி சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்துள்ளார். பின்பு இப்படி எழுதினால் இந்த கும்பலைக் கூப்பிட்டு வைத்துக் கொஞ்சுவார்களா?

என்ன செய்தாலும் சொன்னாலும் பார்ப்பனர்கள் வாயை மூடிக் கொண்டு ஒன்றும் செய்யாமல் இருப்பார்கள் என்ற எண்ணத்தை இது உடைப்பதால் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன்.

வருண் சொன்னது…

ஜெகனாத்:

இங்கே திராவிடர்கள் எல்லாரும் பார்ப்பனர்கள் போல தங்கள் பிரச்சினையை மட்டும் பேசும் கீழ்த்தரமானவர்கள் கெடையாது.

சின்மயி மிரட்டப்படுவது தப்புனு எத்தனையோ திராவிடர்கள் கொடி பிடிச்சுக்கொண்டு இருக்காங்க என்பதை உமது மண்டையில் ஏற்றும்.

மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் தொடர் கற்பழிப்புகளுக்கும் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறக்கவில்லையே அது ஏன்???

பார்ப்பானுகளுக்கு அவனுகளைப் பத்தி மட்டும்தான் கவலை. சின்னப்புத்தி உள்ளவனுகனு தெரிந்து கொள்ளும்!

Kite சொன்னது…

மீனா கந்தசாமியை திட்டியதற்கும், ஹரியானாவில் நடக்கும் தொடர் கற்பழிப்புகளுக்கும் ஒரு பார்ப்பான்கூட வாயைத் திறக்கவில்லையே அது ஏன்???//

மீனா கந்தசாமி விவகாரத்தில் அவர் விவரமறிந்தவராக இருந்தும் அந்த இந்துத்வா வெறியன் மேல் ஏன் அவர் புகார் செய்யவில்லை என்ற கேள்வி எனக்கும் உண்டு. அவர் இந்த விடயத்தைப் பெரிது படுத்தாததால் யாரும் எந்த நிலையையும் எடுக்கவில்லை. இவ்விடயத்தில் அறிவுள்ளவன் எவனும் மீனா கந்தசாமியையே ஆதரிப்பான்.

ஹரியானா கற்பழிப்பு விவகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டும் கருத்து தெரிவிக்கவில்லை என்று குறிப்பாகச் சொல்ல முடியாது. தமிழ் வலையுலகில் அதைப் பற்றிப் பெரிய விவாதங்கள் எதுவும் இல்லையே.

வருண் சொன்னது…

***ஹரியானா கற்பழிப்பு விவகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டும் கருத்து தெரிவிக்கவில்லை என்று குறிப்பாகச் சொல்ல முடியாது. தமிழ் வலையுலகில் அதைப் பற்றிப் பெரிய விவாதங்கள் எதுவும் இல்லையே.***

There are posts but you just can't see them. Because you are a CLOSED-MINDED dud. You could only see when a brahmin girl is insulted!!
You are BLIND, that is the problem!

Unknown சொன்னது…

///பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு நடிகைகள் பத்திரிக்கை உலகால் நாரடிக்கப்படுகிறார்கள், ஒரு தனிப்பட்ட மனிதன் தரக் குறைவாகப் பேசினான் என்று காவல்துறை வரைக் கொண்டு சென்றது முதிர்ச்சியான அணுகுமுறை போன்று தெரியவில்லை.//dinamalar aasiriyar arrest!!!!!!!

Unknown சொன்னது…

பொது ஜன தொடர்புள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.சர்ச்சையில் சிக்கக்கூடாது.அபத்தமான கருத்தை வெளியிட்டதால் ஆபாசமாக் பேசுவதை சகித்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.ஆபாசமாக பொதுவெளியில் பேசுவதும்,எழுதுவதும் தண்டிக்கப்படவேண்டும்....அது யாராக இருந்தாலும்.....

கோவி.கண்ணன் சொன்னது…

//ssr sukumar கூறியது...
பொது ஜன தொடர்புள்ளவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிடும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.சர்ச்சையில் சிக்கக்கூடாது.அபத்தமான கருத்தை வெளியிட்டதால் ஆபாசமாக் பேசுவதை சகித்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை.ஆபாசமாக பொதுவெளியில் பேசுவதும்,எழுதுவதும் தண்டிக்கப்படவேண்டும்....அது யாராக இருந்தாலும்.....//

எது ஆபாசம் என்ற வரையிரை இல்லாத நிலையில் நாம் எதையும் அறிவுரை என்ற பெயரில் செய்ய முடியாது,

தினமலருக்கு நடிகைகளை (நளினி, சீதா உள்ள்ளிட்டவர்களை) பாலியல் தொழிலாளிகள் போன்று விவராமாக செய்தி வடிப்பது ஆபாசமில்லை என்று தினமலர் கருதுகிறது, ஆனால் பார்ப்பனப் பத்திரிக்கை என்று யாரேனும் சொன்னால் அவர்களுக்கு அது ஆபாசம்.

முக்கல் முனகல் பாட்டு பாடகிக்கு ஆபாசம் இல்லை, ஆனால் அதைக் கேட்கும் ரசிகன் அதை கலையாகத்தான் பார்க்கனும் னு சொல்லுவாங்க.

Admin சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Admin சொன்னது…

எனக்கு தெரிந்த வரை இது தான் தமிழ்நாட்டில் முதல் கேஸ், முதல் கைது.டிவிட்டரின் சர்வர் இந்தியாவிலேயே கிடையாது, அதனால் அதில் வரும் கருத்துக்கு ஒருவரை கைது செய்து வழக்குப் போட்டாலும் நிற்காது,
இந்திய அரசு டிவிட்டரை தடை செய்ய வேண்டும், தடை செய்ய எந்தவித சட்ட முகாந்திரமும் இல்லை, இல்லை என்றால் டிவிட்டில் போடும் கருத்துக்கு எல்லாம் கைது செய்ய முடியாது

Unknown சொன்னது…

உண்மைகள் உறங்குவதில்லை....


நான் ப்ளாட் விற்பதாகச் சொன்னவர்களுக்காக.. கட்டுரையாளர் மகேஷ்மூர்த்தியின் டைம்லைனில் இன்று நடந்த உரையாடல்..

https://twitter.com/maheshmurthy#

சின்மயியின் அம்மாவின் மிரட்டல் தொலைபேசிகளுக்கு சாம்பிள்

http://soundcloud.com/puthiyavan/singer-krish-threatened-by

இன்னும் அடுக்கடுக்காய் ஆதாரங்கள் வரும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்