பின்பற்றுபவர்கள்

11 டிசம்பர், 2007

ஸ்ரீ கிருஷ்ணர் தான் அடுத்த பிரதமர் !

ஸ்ரீராமனுக்கு பிறகு பாரத புண்ணிய பூமியில் மானிட பிறவிகளே அரசாளுகின்றன. ஏன் இராமனே கூட மனித அவதாரம் தான். இந்த குறையை போக்கி பாரதத்தை புண்ணிய பூமியாகவும், கலியுகத்தை சத்திய யுகமாகவும் மாற்ற ஒரே ஒரு அவதார புருஷரால் தான் முடியும். மக்களும், நாடும் சுபிக்ஷ்ம் அடைய போகிறார்கள். வரும் பொற்கால ஆட்சியின் விடிவெள்ளி, ஞான சூரியன், தேவதி தேவன் யார் தெரியுமா ? 'அத்வானி ஜீ' என்று பாரதத்தின் 80 கோடி இந்துக்களால் அன்புடன், பாசத்துடன் அழைக்கப்படும்... ஒரே இறைவன் ''லால் கிருஷ்ண அத்வானி தான் அந்த வேட்பாளர்.

மக்கள் படும் பெரும் துண்பங்களுக்கெல்லாம் விடுதலை கிடைக்க ஸ்ரீ கிருஷ்ணனின் ஆட்சியும் அவர் தம் நரேந்திர மோடி அமைச்சரவையும் இந்தியாவின் நலனை பாது(கையாக)காக்கும்.


செய்தி இதுதான்...
டெல்லி & அமகதாபாத்: குஜராத்தில் நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்த மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கான பாஜக வேட்பாளராக அத்வானி இன்று அறிவிக்கப்படவுள்ளார். ...

9 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

புகைப்படத்தைப் பாருங்கள், இந்திய எதிர்காலம் குறித்து இந்த அளவு ஆழ்ந்து யோசிக்கும் தலைவர்கள் 'இந்தி'யாவில் இருக்கிறார்களா ?

ஜெகதீசன் சொன்னது…

ஹிஹிஹி....
சிரிக்கிறதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை இதுக்கு...
:))

வரவர எல்லோரும் இலைக்காரன் ஆகிட்டு வற்றாங்க
:)

Unknown சொன்னது…

இலைக்காரன் பதிவின் பாஸ்வேர்ட் தொலைந்து விட்டதா கோவி ? :-)

**

இவரைவிட சிரி. சிரிமான் மோடி தலைமையில் நாடு நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனவே சிரி. சிரிமான் மோடி யையே நான் பிரதம வேட்பாளருக்கு பரிந்துரை செய்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கல்வெட்டு (எ) பலூன் மாமா said...
இலைக்காரன் பதிவின் பாஸ்வேர்ட் தொலைந்து விட்டதா கோவி ? :-)

**//

பலூன் மாமா,
இலைக்காரன் தான் பேட்டர்ன் வச்சிருக்காரா ? நாங்கெல்லாம் எழுதினால் கோவிச்சிக்க மாட்டார். எப்படியோ ஸ்ரீமான்களைப் பற்றி எழுதினால் மகிழ்வார்.

//இவரைவிட சிரி. சிரிமான் மோடி தலைமையில் நாடு நல்ல இருக்கும் என்று நினைக்கிறேன்.

எனவே சிரி. சிரிமான் மோடி யையே நான் பிரதம வேட்பாளருக்கு பரிந்துரை செய்கிறேன்.
//

ஆட்சி கிருஷ்ணர் தலைமையில் என்றாலும் தளபதி ஸ்ரீமான் மோடிதானே!!

ஜெகதீசன் சொன்னது…

//
கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

இலைக்காரன் பதிவின் பாஸ்வேர்ட் தொலைந்து விட்டதா கோவி ? :-)

**
//
ஓஹோ... அப்படிப் போகுதா கத... இலைக்காரன் நீங்கதானா?? சொல்லவே இல்ல.... :P

கோவி.கண்ணன் சொன்னது…

///ஜெகதீசன் said...

ஓஹோ... அப்படிப் போகுதா கத... இலைக்காரன் நீங்கதானா?? சொல்லவே இல்ல.... :P//

ஜெகதீசன்,

நீங்களாக ஓடிவந்து சொல்வதைப் பார்த்தால் இரத்னேஷ் போட்ட பின்னூட்டம் தான் நினைவுக்கு வருது.

'என் டாடி குதிறுகுள்ளே இல்லை' !
:)
ஒப்புக் கொண்டமைக்கு நன்றி !!!
:)))
இது எப்படி இருக்கு!

ஜெகதீசன் சொன்னது…

//
இது எப்படி இருக்கு!
//
நல்லாவே இல்லை
:)

RATHNESH சொன்னது…

அந்த அறிவிப்பு இரட்டை நோக்கம் கொண்டது:

ஒன்று: மத்தியத் தலைமை என்று ஒன்று கட்சிக்கு இருப்பதையே பொருட்படுத்தாமல் குஜராத்தில் ஒன்மேன் ஷோ நடத்தும் மோடிக்கு ஒரு செக் வைத்தாக வேண்டும். (தப்பித் தவறி வென்று விட்டால் மத்தியில் அவரைக் கொண்டு வா என்று உள்கட்சி சண்டை ஆரம்பிக்கலாம்).

இரண்டு: கட்சியில் குஜராத்தைப் பொருத்தவரை வாஜ்பாயியை விட அத்வானிக்குத் தொண்டர் பலம் அதிகம். (என்ன இருந்தாலும் காந்திநகர் எம்பி அல்லவா?). இந்த சமயத்தின் இந்த அறிவிப்பு, மோடி மீதான எரிச்சலில் இருக்கும் பாஜக பார்டர் கேஸ் ஓட்டுக்களை மொபிலைஸ் செய்ய உதவும்.

மற்றபடி புகைப்படத்தில் அவருடைய யோசனை குறித்து சர்வேசன் சார் பாணியில் தாங்களும் போட்டி அறிவித்திருக்கலாம்:

'என்னடா நமக்கும் தமிழ்நாட்டு நெடுஞ்செழியன் மாதிரி ரெண்டாம் இட ராசி தானா? ஒவ்வொரு முறையும் எலக்ஷன் வரைக்கும் நீ தான்னு சொல்றாங்க, தேர்தல் அறிவிப்பு வந்த உடனே வேற யாராவது முந்திக்கிறாங்களே! வாஜ்பாயி கால் போய்ப் படுத்து விட்டாலும் இந்த முறை இந்த மோடிக்கு ரெண்டாம் இடத்துலதான் நான் இருக்கிற மாதிரி ஆயிடும் போலிருக்கே'.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
அந்த அறிவிப்பு இரட்டை நோக்கம் கொண்டது:
//

ரத்னேஷ்,
நீங்க சொன்ன அதே ஸ்டேட் மெண்டைத்தான் மன்மோகன் சொல்லி இருக்கார், சன் செய்தியில் பார்த்தேன்.

உங்கள் அரசியல் பார்வை வெகு கூர்மை !

பாராட்டுக்கள் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்