பின்பற்றுபவர்கள்

30 டிசம்பர், 2007

2007 நான்கு வரி மட்டும்.

பெனாசிர் பூட்டோவை வால்பகுதியின் பசியாக விழுங்கிவிட்டு இந்த ஆண்டின் 'தீவிர' தன்மை அடங்கி இருக்கிறது. உலகம் முழுதும் வன்முறைகள், லண்டனில் முறியடிகக்ப்பட்ட குண்டுவெடிப்பு சதி, தமிழ்ச்செல்வன் படுகொலை, மலேசிய தமிழர்களின் கிளர்ச்சி என அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன.

பாகிஸ்தானில் ஜனநாயகம் மலருமா ? பலரது கேள்விக்கும், பெரிய அண்ணனின் தயவால் (?) சென்ற ஆண்டின் ஈராக்கில் ஜனநாயகம், அதன் அவசர நிகழ்வாக சாதமின் தூக்குதண்டனை, இந்த ஆண்டு பெரியயாண்ணனின் பாகிஸ்தான் மீதுள்ள ஜெனநாயக பரிவின் காரணாமாக, அவர்தம் அன்பு வேண்டுகளை தட்ட முடியாமல் பெனாசிர் பாகிஸ்தான் சென்றதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள், பெரியண்ணனின் முடிவை தீவிரவாதிகள் ஏற்றுக் கொள்வார்களா ?

பெனாசீர் என்ற இஸ்லாமிய பெண் தலைவர்களின் படுகொலையுடன் இந்த ஆண்டு முடிவுக்கு வந்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் பெரியண்ணனின் கருணை பார்வை வேறு எந்த நாட்டிலும் விழுந்துவிடக் கூடாது, குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் வெ(ற்)றியின்கரமாக தூண்டிவிடப்பட்ட 'இந்து' உணர்வு காவிக்கொடியை நாட்டி இருக்கிறது.

5 கருத்துகள்:

Me சொன்னது…

வணக்கம் கோவியாரே,

பாகிஸ்தானின் விவசாயப் பொருட்கள் தங்குதடையின்றி மத்திய கிழக்கு நாடுகளுக்குப் போய் சேர வேண்டும் என்று தாலிபானை ஊட்டி வளர்த்தது பேனசிர்தான். அவர் தாலிபான்களை ஆதரித்தது பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்காகதான். அவர் முடிவை உலகம் பார்த்துவிட்டது.

அதே பொருளாதார வளர்ச்சிக்காக இன்று இந்திய தாலிபான்களை குஜராத் மக்கள் ஆதரிக்கிறார்கள். இதன் முடிவு எப்படி இருக்குமோ?

Muthu சொன்னது…

இன்று, அமெரிக்க தேசிய பொது வானொலியில் (National Public Radio எனப்படும் NPR-ல்) Boston-ல் பேராசிரியராக பணிபுரியும் திரு.நாஜிம் என்ற பாகிஸ்தானியர் அழகாக கூறினார் :

"மக்கள் ஜனநாயகத்தை - தங்கள் குரல் கேட்கப்படவேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் ஆட்சியிலிருப்பவர்கள் அதற்குத் தயாரில்லை. மட்டுமல்ல ... பாகிஸ்தானிய ராணுவமானது எந்த தேச ராணுவத்தையும் போலன்றி ஆட்சி நிர்வாகத்தில் மூக்கு நுழைப்பதையும் குறுக்கிடுவதையும் தனது கடமையாக மட்டுமல்ல, உரிமையாகவும் கருதுகிறது"

இந்நிலை நீடிக்கும்வரை அங்கே உண்மையான ஜனநாயகத்துக்கு வாய்ப்பே இல்லை.

என்னதான் நம்மை பகைத்துக்கொண்டே இருப்பினும், அந்த தேசத்தை நினைத்து சற்று வேதனைப்படாமல் இருக்க இயலவில்லை.

-முத்து

சதுக்க பூதம் சொன்னது…

//வரும் ஆண்டுகளில் பெரியண்ணனின் கருணை பார்வை வேறு எந்த நாட்டிலும் விழுந்துவிடக் கூடாது, குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்க வேண்டி இருக்கிறது//
Possibility is less for next year as election is approaching in US

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

///////////
பாகிஸ்தானில் ஜனநாயகம் மலருமா ? பலரது கேள்விக்கும், பெரிய அண்ணனின் தயவால் (?) சென்ற ஆண்டின் ஈராக்கில் ஜனநாயகம், அதன் அவசர நிகழ்வாக சாதமின் தூக்குதண்டனை, இந்த ஆண்டு பெரியயாண்ணனின் பாகிஸ்தான் மீதுள்ள ஜெனநாயக பரிவின் காரணாமாக, அவர்தம் அன்பு வேண்டுகளை தட்ட முடியாமல் பெனாசிர் பாகிஸ்தான் சென்றதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்,
////////////////
அமெரிக்காவிற்கு பாகிஸ்தானில் ஜனநாயகம் மலர வேண்டிய பரிவெல்லாம் ஒன்றுமில்லை.
அவர்களுக்கு ஆசியாவில் கேந்திரமான் இடங்களில் காலூன்ற,கண்காணிக்க இடங்கள் தேவை;அதற்கு பாகிஸ்தான் நல்ல இடம்,இந்தியா,சீனா இரண்டையும் ஒரு கண் தூரத்தில் வைத்துக் கொள்ளலாம்.
ஆனால் முஷாரஃப் புஷ் நினைத்ததை விட கெட்டிக்காரராக,பாம்புக்குத் தலை கீரிக்கு வால்,என அமெரிக்கா கொட்டிய பணத்தையும் வாங்கிக் கொண்டு திரைமறைவில் தீவிர வாதிகளையும் ஊக்குவித்தார்.இது பாகிஸ்தானில் எளிதான அமெரிக்க படைகளின் நடமாட்டத்தை முடக்கியது(தீவிரவாத மத அடிப்படைவாதிகள் அதை விரும்பாததால்!).
அமெரிக்கா பெனாசிருக்கு நம்பிக்கை அளித்து,முஷாரஃபுக்கும்,பெனாசிருக்கும் பஞ்சாயத்து செய்து,பெனாசிரை களத்தில் இறக்கியது.
பெனாசிர் பலம் பெரும் பட்சத்தில் முஷாரஃப் கொல்லப்பட்டோ நீக்கப்பட்டோ,அமெரிக்காவின் சிரமங்கள் அற்ற இருப்புக்கு பாகிஸ்தான் அரசு உதவிகள் செய்திருக்கக் கூடிய நிலை வந்திருக்கக் கூடும்.அமெரிக்காவிற்கும் அப்படி ஒரு நிலைப்பாட்டை கருத்தில் கொண்டுதான் பெனாசிரைக் களத்தில் இறக்கியது.
பெனாசிரைப் பொறுத்த அளவில் இளமைக்காலத்தில் அவ்ர் மனத்தில் பதிந்த மேற்கத்திய ஜனநாயக வழிமுறைகள் பதிந்து போனதால்,பாகிஸ்தானில் அவற்றை நிறுவ முடிந்தால் நல்லது என நம்பினார்.அமெரிக்கா அவருக்கு முஷாரஃபால் ஆபத்தில்லை என நம்பிக்கையூட்டி அனுப்பியிருந்திருக்கும்.
பெனாசிர் எச்சரிக்கையுடன் இல்லை,முஷாரஃப் அதீத விழிப்புடன் இருந்திருக்கிறார்.
அதுதான் இந்த விளைவு.

பெயரில்லா சொன்னது…

நவாஸ் ஷெரிப் பாகிஸ்தான் வந்து ஏர்போர்டை விட்டு வெளியே வராமல் திரும்பவும் அரபு நாட்டுக்கே சென்று விட்டார். உள்ளே நுழைந்தால் சாவு நிச்சயம் என்று அவருக்கு உளவுத்துறைய் சொல்லியது. அதை பொருட்படுத்தாத பேநசீருக்கு பாவம் இந்த கதி. இஸ்லாமிய நாட்டில் ஒரு பெண் இந்த அளவுக்கு வர முடிந்ததே பெரிய விஷயமாகப்படுகிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்