பின்பற்றுபவர்கள்

11 டிசம்பர், 2007

நஒக : பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள ...

"லொக்...லொக்" சிகரெட் புகை நாற்றத்தைத் தொடர்ந்து பலமான இருமல் சத்தம்

"வீட்டுக்கு வெளியே போய் அந்த கர்மத்தை வச்சிக் கூடாதா ?, லொக் லொக்...போட்டுக் கொண்டே... இந்த கண்டராவியை விட்டுத் தொலைஞ்சா தான் என்ன குடி முழுகிடவா போவுது ?"

ஐம்பத்து நான்கு வயதை நெருங்கும் ராமசாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்... அவர் மனைவி கமலம்

ஆழமாக சிகெரெட்டை இழுத்துவிட்டுக் கொண்டே

"ஏண்டி நீ தாளிக்கும் போது வர்ற பொகையை விடவா, இது மோசம் ?"

"நான் ஒருவார்த்தை அதைப் பற்றிக் கேட்டால் ... உடனே என்னைய கொற சொல்லனும், அப்படியும் இல்லாட்டி என் குடும்பத்தை இழுக்கனும் அதைத்தானே பண்ணுவிங்க ?"

சத்தமில்லாமல் இருந்தார். 'வர வர ஞாபக மறதி அதிகம் ஆச்சு' வழக்கமாக எட்டு ஸ்டிக் சிகெரெட்தான் பிடிப்போம், நேற்று இரண்டு கூட ஆகி இருக்கு, குறைக்கனும்' என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் எண்ணி எண்ணிதான் பிடித்தார், அப்படியும் எண்ணிக்கையில் இரண்டு குறைந்து போனது ஆச்சரியமாகிவிட்டது. 'அவனாக இருக்குமோ, எதுக்கும் மனைவியிடம் கேட்டுவிட வேண்டியதுதான்.

"கமலா, கதிரு புதுசா சிகரெட் பிடிக்க பழகி இருக்கானா ?"

அதிர்ச்சியும் கோபமாக அவரைப்பார்த்து

"அந்த வேலையெல்லாம் என் பையன் செய்ய மாட்டான்...."

"இல்லடி, இரண்டு சிகெரெட்டை காணும்.....அதான்"

"எடுத்து பற்றவைக்காமல் மறந்துட்டு எங்கேயாவது வச்சிருப்பிங்க ... தேடி பாருங்க..."

"எதுக்கும் அந்த பய சட்டையை துவைக்கும் போது பாக்கெட்டில் சிகரெட் தூள் எதுவும் இருக்குதான்னு பாரேன்"

"பெத்த புள்ளையை கூட நம்ப மாட்டிங்களே..."

நாளுக்கு நாள் சிகரெட் காணாமல் போவது ஒருவாரம் தொடர்ந்தது, தாமே கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்

அன்று இரவு பத்து மணிக்கு மேல் கட்டிலில் அரை தூக்கத்தில் படுத்து இருந்தார்.

மனைவி கமலா சமையல் அறையில் அன்றைய வேலைகளை முடிப்பதற்கு பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தாள்

யாரோ வருவது போன்று இருந்தது, அவன் தான் ... மகன் கதிர் ...அவர் தூங்கும் படுக்கை அறைக்குள் மெல்லமாக அடியெடுத்து வைத்து வருகிறான். ' நினைச்சேன்... நினைச்சேன்' என்று நினைத்தவர் தூங்குவது போல் இருந்து கொண்டே கவனிக்கிறார்.

சிகரெட் பாக்கெட்டை திறந்து இரண்டு சிகரெட்டுகளை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் வெளி ஏறினான்.

திடுக்கிட்டவர்....வேகமாக எழுந்து அவன் பின்னால் சென்று கைகளை பிடித்துக் கொண்டார்

"அப்பா ... அது வந்துப்பா....." அகப்பட்டுக் கொண்டோம் என்று விழுங்கினான்

"எனக்கு தெரியும்டா...இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள தம்மு கேட்குதா ?"

இவர் போட்ட சத்தத்தில் மனைவி கமலாவும் வெளியே வந்து, நடந்ததை புரிந்து கொண்டு பேச முடியாமல் நின்றாள்

"அப்பா...சாரிப்பா...நான்..."

"என்னடா சொல்லப் போறே...எல்லா வயசு பசங்களும் செய்றது தானேன்னு தானே, நானெல்லாம் எங்க அப்பா காசுல சல்லிக் காசைக் கூட என் பழக்கத்துக்கு பயன்படுத்தியது இல்லை...என் சம்பாத்தியத்தில தான் இதெல்லாம் செய்ய தொடங்கினேன்..."

"அதுல்லப்பா...."

"நான் உன்னை தடுக்கல...நீ சம்பாதிக்கும் போது உன் விருப்பபடி செய்...இப்படி செய்வேன்னு நான் எதிர்பார்க்கலடா......சிகரெட்டைக் காணும் நமக்குத்தான் ஞாபக மறதின்னு நினச்சேன்"

"அப்பா....அப்பா..."

"....என்ன சொல்லப் போறே....இனிமேல் செய்ய மாட்டேன்னு தானே...கையும் களவுமாக மாட்டிக் கொண்டால் எல்லா பசங்களும் இப்படித்தானே செய்வானுங்க"

கண்ணை சுறுக்கி மூடிக் கொண்டு அதற்கும் மேல் பொறுமை இழந்தவனாக. கண்ணைத் திறந்து நேராக அவர் கண்களைப் பார்த்து

"என்னை மன்னிச்சிடுங்கப்பா....சிகரெட் பழக்கத்தை உங்களால் நிறுத்த முடியலை... அதிகமாகவே இறுமுறிங்க...இந்த வயசு காரங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர்றத்துக்கு புகைப்பிடிப்பது தான் முக்கிய காரணம் என்று டாக்டர் சொல்றாங்க.... நான் சொன்னால் கேட்பிங்களா... எங்கே நானும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று உங்களுக்கு தெரிந்தால் ... ஒரு வேளை நிறுத்திடுவிங்க என்று நினைத்துதான் ... உங்க சிகரெட்டெல்லாம் அவ்வப்போது எடுத்தேன்... இங்கே பாருங்க எல்லாம் அப்படியே இருக்கு"

மேசை கீழ் டிராயரின் அடிப்பகுதியில் அத்தனை சிகரெட்டுகளும் இருந்தன.

பேச்சற்று ... கண்களில் கண்ணீர் முட்ட ... மகனை அப்படியே தழுவிக் கொண்டார். கமலம் மகனின் செயலை நினைக்க புடவை தலைப்பும் ஈரமானது.

*************

(தம் பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்..
- குறள்

தம்முடைய மக்கள் தமக்குச் செல்வம். என்றாலும், செல்வத்தைப்போல மக்களும் பல நண்மைகளுக்கு உதவக்கூடிய நற்குண் நற்செயல்கள் அமைந்தவர்களாகப் பிறப்பது மக்களைப் பெற்றவர்களுடைய வினைப்பயனைப் பொருத்துத்தான்.)

9 கருத்துகள்:

TBCD சொன்னது…

சும்மா நச்சுன்னு இருக்கு.......

Divya சொன்னது…

நச்சென்று கருத்து சொல்லும் கதை,
வெற்றி பெற வாழ்த்துக்கள்!

துளசி கோபால் சொன்னது…

இதே மாதிரி ஒருகதையை எங்கியோ எப்பயோ படிச்ச ஞாபகம்.

ஜெகதீசன் சொன்னது…

//
TBCD said...

சும்மா நச்சுன்னு இருக்கு.......

//
ரிப்பீட்டேய்.....

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இதே மாதிரி ஒருகதையை எங்கியோ எப்பயோ படிச்ச ஞாபகம்.
//

துளசி அம்மா,
கதை நீண்ட நாட்கள் ஆகிறது, அது எங்கு சென்றது வெளி இட்டேனா என்று கூட நினைவு இல்லை. ஒருவேளை வேறு எங்காவது வெளி இட்டிருந்திருக்கலாம்.

இதில் எழுதி இருப்பது முழுக்க முழுக்க இன்று தட்டச்சியதுதான்.

SurveySan சொன்னது…

இதுவும் நல்லாயிருந்தது.

//அவள் மனைவி கமலம்
//

அவர் மனைவி கமலம்.

Unknown சொன்னது…

கடைசியில் வரும் செண்டிமெண்டல் டச் - கண் பனிக்கும் நச்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

..என்னால் முடிவை யூகிக்க முடிந்தது...என் சித்தப்பா சிகரெட் குறைப்பதற்காக சித்தி இப்படிச் செய்ததுண்டு..அவர் இந்த அப்பாவைப் போல் கண்டுபிடித்ததில்லை..

ஆனாலும் நல்ல கருத்து சொல்லியிருக்கிறீர்கள்..

மங்களூர் சிவா சொன்னது…

//
தம் பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.. - குறள்
//

பதிவுக்கேற்ற 'நச்' குறள்.

எல்லார் வீட்டுலயும் ஒரு சிகிரட் பிடிக்கிறவர் இருக்கிறதால முடிவு எதிர்பார்த்ததுதான்!.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்