பின்பற்றுபவர்கள்

13 டிசம்பர், 2007

பார்பனர் சரி ... மற்றவர்களுக்கெல்லாம் சாதி அடையாளம் எது ?

பார்பனர் மற்றும் சில சைவ செட்டியார்களை பூணூல் போட்டிருப்பதை வச்சு சாதி கண்டுபிடிச்சிடலாம். எங்க அலுவலகத்துக்கு பெங்களூரில் இருந்து ஒரு கிளைண்ட் வந்தார். கொஞ்சம் ட்ரான்ஸ்பெரண்ட் சர்ட் போட்டு இருந்தார். அவ்வளவு திக்காக கூட பூணூல் போடுவாங்கன்னு எனக்கு அவரைப் பார்த்து தான் தெரியும். மற்றவர்களையெல்லாம் சாதி எப்படி கண்டுபிடிப்பது ? கொஞ்சம் வெள்ளையாக இருந்தால்... இவன் நம்ம ஆளான்னு பார்பதற்கு முதுக தடவி பார்பாங்களாமே ? கேள்வி பட்டு இருக்கிங்களா ?

எனது நண்பர் சொன்னார்...'நான் பேங்குக்கு போனால் ஸ்பெசல் மரியாதையே கிடைக்கும்'

'ஏன் ஏன் ?' என்று கேட்டேன்

'பார்ப்பதற்கு பாப்பான் போல இருக்கேன் இல்லையா, போனவுடனே 'ஆத்துல எல்லாம் சவுக்கியமா' ன்னு கேட்பாங்க...'எல்லோரும் நன்னா இருக்காங்க ... உங்காத்துல மாமி சவுக்கியமா ?ன்னு கேட்பேன் என்றார்.

'அவனுங்க சாதிவெறியை எனக்கு வேலை சுலபமாக நடக்க பயன்படுத்திக் கொள்வேன்'
என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சிரிப்பாக இருந்தது. இப்படியும் மனுசங்க எப்போதும் இருக்காங்க.

கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் வெள்ளாளனா ?

கருப்பாக இருந்தால் தலித்தா ?

நான் கருப்பு பார்பனர் பலரை பார்த்திருக்கிறேன். பாஷையை வச்சுத்தான் இவரு பிராமணருன்னு தெரியும்.

பொதுவாக சாதியை கண்டுபிடிக்க பேச்சு வழக்கு பெரிதும் உதவும்... சென்னையில் அதுவும் அடிபட்டுபோய்விட்டது...'ங்...go..தா' பேசுறவனுங்க எல்லா சாதியிலும் இருக்கானுங்க.

சரி பொண்ணுங்களை எப்படி சாதி கண்டுபிடிப்பது...ரொம்ப அழகாக இருந்தால் பிராம்னாளோ ? என்று நினைப்பானுங்க அப்பறம் அந்த பெண் 'ஞான் கேரள குட்டியாக்கும்' என்று சொல்லும் போதுதான்..நம்ம ஊரு பொண்ணுங்களை விட கேரளா சூப்பர்னு தெரியவரும்.

இன்னும் சிலபேர் நம்ம சாதி என்னன்னு தெரிஞ்சிக்க 'உங்களுக்கு 'கொல' தெய்வம் எது ?' எந்த ஊருள்ள இருக்கு ?' ன்னு கேட்பாங்க...நாம வெள்ளந்தியாக இருந்து சொல்லிவிட்டால் போதும்..எப்படியோ அந்த ஊரு ஆளுங்களைப் பிடிச்சு...அந்த சாமியை கும்புடுறவன் எந்த சாதின்னு கண்டுபிடிச்சு...நம்ம சாதியை தெரிஞ்சுகுவாங்க சாதி வெறிபிடிச்சவனுங்க..உண்மையிலேயே இவனுங்க தான் கீழ்சாதி காரணுங்க'

இன்னும் கூட டெக்னிக் எல்லாம் பயன்படுத்துவாங்க நம்ம ஊரில் எந்த சாதி அதிகம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு...'உங்க ஊருல பட்டு நெசவு தானே அதிகம்' உங்களுக்கும் தொழில் தெரியுமா ?' தெரியாதுங்க நான் அந்த சாதி இல்லை... நான் '****' என்று சொல்லிவிடுவோம் என்பது எதிர்பார்ப்பு.

இன்னும் சிலர் ரொம்ப விவரமானவங்களாம்...பாண்டின்னு பேரு வச்சா அவன் தேவனாகத்தான் இருக்கும் னு நெனப்பாங்க..இராமநாதபுரம் பக்கம் வெள்ளாளரில் கூட பாண்டி இருக்காங்கன்னு அவனுங்களுக்கு தெரியாது

அப்பறம் பாலாஜி, கோவிந்தராஜூ, சீனிவாசன், கண்ணபிரான் இந்த மாதிரி பேரை வச்சிருக்கவங்க வாயிலிருந்து ப்ராம்னாள் பாசை வரலைன்னா ? அவன் நாயுடுவாகத்தான் இருக்கும் ஏனென்றால் நாயுடுங்கதான் கிருஷ்ணனின் பெயர்களை வைத்திருப்பார்கள் என்ற அரிய கண்டுபிடிப்பைச் சொல்லுவார்கள்.

எதுக்கு எதுக்கு இதெல்லாம்னு கேட்கிறிங்களா .... பல பதிவுகளில் ஒரு சொறி நாய் உச்சா போய் வச்சிருக்கு

'கோடி.குண்ணன்'... நாயுடு சாதியை சேர்ந்தவன் வீட்டில் தெலுங்கு பேசுவானாம்...இவன் தமிழனே இல்லை'

இது எப்படி இருக்கு ... இந்த கண்டுபிடிப்புக்கு காரணம் 'கோவி'ந்தராஜூ.கண்ணன்...கிருஷ்ணன் பெயர்...அதனால் நாயுடுவாம்.அடங்கொக்காமக்கா...என் தம்பி பெயர் செந்தில், அண்ணன் பெயர் ரவி... அம்மா பெயர் 'பார்வதி அம்மாள்' இதெல்லாம் நாயுடு பேராடா முண்டம் ? னு கேட்கத்தோனுது..அரிப்பை சொறிந்து கொண்டு போகட்டும்... நீ நாயுடு இல்லை உனக்கு எப்படி தெலுங்கு தெரியும் ? ... மடையா எனக்கு தெலுங்கும், கன்னடமும் பழக்கமானது பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் வேலை பார்த்த காரணங்களினால் ஆர்வமுடன் கற்றுக் கொண்டேன்.

நாய் சிறுநீரை முகர்ந்து பார்த்து எதாவது நாய் பக்கத்தில் இருக்கான்னு கண்டுபிடிக்குமாம். இதுபோல் தான் முயற்சிக்கிறானுங்க சாதியை பெயரை வச்சு கண்டுபிடிக்க முயலுறவனுங்கள்

வெளியில் தெரியும்படி பூணூல், நாமம் போன்ற புற அடையாளம் இல்லாவிட்டால், குறிப்பிட்ட 'பாஷை' பேசாவிட்டால் எந்த நாயும் எந்த சாதி என்றே தெரியாது.
மற்றபடி இந்து நாய்களுக்கென்றே தனித்தனியான அடையாளம் எதுவும் இல்லை.

பெண்ணின் கருமுட்டை ஆண்விந்துவுடன் சேர்வதற்கும் சாதி தொடர்பு இல்லை. ஐ மீன் சாதி பார்பதில்லை :)

45 கருத்துகள்:

கருப்பு சொன்னது…

பாப்பார பசங்க உங்களையும் குதற ஆரம்பிச்சுட்டானுங்களா? வன்முறையை கையில் எடுத்தால்தான் ஓயுவானுங்க.

துளசி கோபால் சொன்னது…

(-:

கோவி.கண்ணன் சொன்னது…

//விடாதுகருப்பு said...
பாப்பார பசங்க உங்களையும் குதற ஆரம்பிச்சுட்டானுங்களா? வன்முறையை கையில் எடுத்தால்தான் ஓயுவானுங்க.//

நான் அந்த சொறி நாயை சட்டை செய்யலை...ஆனால் சொறிநாய் சொல்வதும் 'லாஜிக்'படி சரியாக இருக்கும்மோன்னு சில சாதிநாய்கள் நினைக்கலாம் அதுக்குத்தான் விளக்கம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
(-:
//

துளசி அம்மா,

பனைமரம் சும்மா நின்றாலும் அரிப்பு உள்ளவங்க சொறிஞ்சிக்க முடியுமான்னு உரசி பார்பாங்க போல இருக்கு.
:(

மங்களூர் சிவா சொன்னது…

ங்கொய்ய்யாலே எவன் அவன்??

TBCD சொன்னது…

சிவா, அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்...

"அவர்" ஒரு வயதான மனிதராகக்(?!) கூட இருக்கக்கூடும்...
இல்லை என்றால், மனதளவில் பாதிக்கப்பட்டுப் பாலாப் போனவாராகக் கூட இருக்கக்கூடும்...

//*மங்களூர் சிவா said...
ங்கொய்ய்யாலே எவன் அவன்??*//

இந்த வார்த்தைக்கு அர்த்தம் யாராச்சு சொல்லுங்கய்யா....பட்டறை பயிலரங்கமின்னு பிரிச்சு மேயிறவங்களாச்சும் சொல்லுங்கய்யா.... புரியல்ல.தயவு செய்து விளக்கவும்.©

//*ங்கொய்ய்யாலே*//

பாச மலர் / Paasa Malar சொன்னது…

...just ignore ...

ஜெகதீசன் சொன்னது…

நானும் பதிவைப் படித்தேன் என்பதற்காக இந்தப் பின்னூட்டம்...

மற்றபடி அவர்களின் உளறல்களுக்கெல்லாம் பதில் சொல்வது நேரவிரையம் மட்டுமே.....
:(

ஜமாலன் சொன்னது…

பாரி அரசின் பின்னொட்டத்தில் ஒரு அணாணியின் உச்சா வாடை அடித்ததை இன்றுதான் படித்தேன். சாதி பார்ப்பது என்பது பார்ப்பணியத் தந்திரம். அதற்கு எல்லா சாதிகளும் பலியாகி உள்ளது. சாதியை காப்பாற்ற வேண்டிய அவசியம் இன்று பார்ப்பணர்களிடம் இல்லை. சாதி இந்துக்கள் என்று சொல்லிக்கொள்கிற உயர் சாதிகளிடம்தான் உள்ளது. கொளுத்திப் போட்டது அவர்கள் பற்றி எரிகிறது நம்மிடம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
ங்கொய்ய்யாலே எவன் அவன்??
//

சிவா,

இன்னிக்கு சிறுகதை எழுதமுடியாமல் போச்சு.
:)
அதைவிட இது சூப்பர் இல்லே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
சிவா, அவன் இவன் என்ற ஏக வசனம் வேண்டாம்...

"அவர்" ஒரு வயதான மனிதராகக்(?!) கூட இருக்கக்கூடும்...
இல்லை என்றால், மனதளவில் பாதிக்கப்பட்டுப் பாலாப் போனவாராகக் கூட இருக்கக்கூடும்...//

டிபிசிடி அய்யா,

நிங்கள் யாரை சொல்கிறிர் எண்டு புரியவில்ல...விளக்குறிங்களா ?

குண்டா இருப்பவங்களுக்கு எதாவது சாதி இருக்கா ?
தெரியல்ல...தயவு செய்து விளக்கவும். இல்லையென்றால் குசும்பனிடம் கேட்டு சொல்லவும்.

//

இந்த வார்த்தைக்கு அர்த்தம் யாராச்சு சொல்லுங்கய்யா....பட்டறை பயிலரங்கமின்னு பிரிச்சு மேயிறவங்களாச்சும் சொல்லுங்கய்யா.... புரியல்ல.தயவு செய்து விளக்கவும்.©

//

கொய்யா எலைதான் தெரியும் முகர்ந்து பார்த்தால் வாசனையாக இருக்கும். நீங்க சொல்லும் சொல்லுக்கு சொந்தக்காரர் பாலபாரதிதான். அவருக்கு தெரிந்திருக்கலாம்

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
...just ignore ...
//
:):)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
நானும் பதிவைப் படித்தேன் என்பதற்காக இந்தப் பின்னூட்டம்...

மற்றபடி அவர்களின் உளறல்களுக்கெல்லாம் பதில் சொல்வது நேரவிரையம் மட்டுமே.....
:(
//

இப்ப எல்லோரும் தெளிவாக இருப்பாங்கல்ல...ஒருத்தனும் இனி என்ன சாதின்னு தெரிஞ்சுக்க ஆசைப்படமாட்டானுங்க...ஒருமையில் ஏன் சொல்றேன்னா...சாதிக்கேட்குறவனுங்களுக்கு...பாக்குறவனுங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை.
:)

புரட்சி தமிழன் சொன்னது…

தமிழ் நாட்டப்பொருத்தவரைக்கும் சரி ஜாதி கண்டுபிடிக்க இத்தனை வேலை செய்யனும் மத்த மாநிலலங்கள்ள எல்லாம் பேரோடு சேர்த்தே ஜாதிய வச்சிருக்காங்களே அதுக்கு அரசாங்க பாடிவத்திலே சர் நேம் போட்டு வேற தாறாங்க நம்ம பேர மொட்ட மொட்டயா சொன்னாலே தமிழ் நாட்டுக்காரனுனு கண்டுபிடிச்சிடராங்க இதுக்கு மத்திய அரசு எந்த வழியும் செய்யாதா எம்மதமும் சம்மதம் என்ற இந்திய அரசு

கோவை சிபி சொன்னது…

these type of filthy comments shows,your are in right direction.
carry on.

லக்கிலுக் சொன்னது…

//நான் அந்த சொறி நாயை சட்டை செய்யலை...ஆனால் சொறிநாய் சொல்வதும் 'லாஜிக்'படி சரியாக இருக்கும்மோன்னு சில சாதிநாய்கள் நினைக்கலாம் அதுக்குத்தான் விளக்கம்.//

:-)))))))))))

வவ்வால் சொன்னது…

கோவி,

நல்லா பழுக்க காய்ச்சிய கம்பியை காதுல விட்டு ஆட்டி இருக்கிங்க! :-))

அதுகளுக்கு இதெல்லாம் சகஜம்னு போய்டும்.

இந்த பேர வச்சு எந்த மாநிலம், மாவட்டம், ஜாதிலாம் கண்டுப்பிடிக்கிற விஞ்ஞானிகள் இருக்கிற வரைக்கும் நாடு உருபடாது!(கணித மேதை இராமாநுஜன் தமிழா இல்லை தெலுங்கானு ஒருத்தர் சொல்றார், எப்படினா இராமானுஜம்ன தெலுங்காம், இராமானுஜன் என்று வந்தால் தமிழாம், அவர் பிராமணர் என்று கூட ஏத்துக்கமால் அவர் தெலுங்கு பிராமணர் னு சொல்லிக்க ஒருத்தர் ஆசைப்பட்டார் , எங்கே போய்சொல்வேன் இந்த கொடுமைய)

பேசாம என்னைப்போல காடை, கவுதாரினு பேரு வைச்சுக்கோங்க , ஒரு பய என்ன சாதினு கண்டு பிடிக்க முடியாது, பாரதியார் சொன்னாப்போல காக்கை குருவி நம் ஜாதினு சொல்லிக்கலாம்!

வவ்வால்னு பேரு வச்சதுக்கும் ஒரு பலன் இருக்குனு உங்க பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டேன்! :-))

புரட்சி தமிழன் சொன்னது…

வவ்வால் நல்லா கேப்ப யூஸ்பன்னிகிட்டீங்க வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

:(
Nonsense

மாசிலா சொன்னது…

//'கோடி.குண்ணன்'... நாயுடு சாதியை சேர்ந்தவன் வீட்டில் தெலுங்கு பேசுவானாம்...இவன் தமிழனே இல்லை'//

இந்த காலத்தில் இப்படியும் சிந்திக்கும் சில பிராணிகள்!!!

சமுதாயத்தை பாழடிப்பதிலேயே குறியாக இருக்கும் இவர்களை என்னவென்று சொல்வது?

மடையர்கள்!!!

அவ்வளவே!

:-(

வடுவூர் குமார் சொன்னது…

கோவியாரா..
ஆந்திரா மிளகாய் காரம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
கோவியாரா..
ஆந்திரா மிளகாய் காரம்.
//

குமார்,

நான் தனிப்பட்ட எவரையும் குறித்து சொல்லவில்லை. எல்லா பிரிவுகளிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.

ஆந்திரமிளகாய் இல்லை ஆத்திர மிளகு தான்.

அவர்கள் எனக்கு எதுக்கு சாதி கண்டுபிடிக்கனும். எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு பதிவில் எழுதிட்டேன். ஜாதி பார்த்து பொண்ணு கொடுக்கப் போறாங்களா ? இல்லை சாதியை வைத்து தள்ளி வைக்கப் போறாங்களா ?

:(

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

உங்கள் பதிவு என்னையும் பாதித்திருக்கிறது. ஏன் என்றால் நானும் இது போன்றவர்களை சந்தித்து இருக்கிறேன். ஏன் இவ்வளவு கோபமாகிவிட்டீர்கள். எனக்கும் சில கேள்விகள் எழுகின்றன. சாதியே இல்லை என்று சொல்கிறவர்கள். சாதிச்ச்சான்றிதழ் கேட்டு போராட்டம் பண்ணுகிறார்கள் ஏன்? அவர்களே சாதி அடிப்படையில் கல்வி, வேலை வேண்டும் என்கிறார்கள் ஏன்? சாதிச்சனியன் தேவையில்லை என்றால் அது தேவை இல்லை என்று போராட வேண்டியது தானே.
ஏன் இந்த குழப்பம். ஏன் இந்து மதத்தினரை திட்டுகிறீர்கள்? அவர்கள் என்ன கெடுதல் செய்து விட்டார்கள்? மற்ற மதத்தினர்கள் என்ன நன்மை செய்துவிட்டார்கள்?

அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

உங்கள் பதிவு என்னையும் பாதித்திருக்கிறது. ஏன் என்றால் நானும் இது போன்றவர்களை சந்தித்து இருக்கிறேன். ஏன் இவ்வளவு கோபமாகிவிட்டீர்கள். எனக்கும் சில கேள்விகள் எழுகின்றன. சாதியே இல்லை என்று சொல்கிறவர்கள். சாதிச்ச்சான்றிதழ் கேட்டு போராட்டம் பண்ணுகிறார்கள் ஏன்? அவர்களே சாதி அடிப்படையில் கல்வி, வேலை வேண்டும் என்கிறார்கள் ஏன்? சாதிச்சனியன் தேவையில்லை என்றால் அது தேவை இல்லை என்று போராட வேண்டியது தானே.
ஏன் இந்த குழப்பம். ஏன் இந்து மதத்தினரை திட்டுகிறீர்கள்? அவர்கள் என்ன கெடுதல் செய்து விட்டார்கள்? மற்ற மதத்தினர்கள் என்ன நன்மை செய்துவிட்டார்கள்?

அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com

வவ்வால் சொன்னது…

//சாதியே இல்லை என்று சொல்கிறவர்கள். சாதிச்ச்சான்றிதழ் கேட்டு போராட்டம் பண்ணுகிறார்கள் ஏன்? அவர்களே சாதி அடிப்படையில் கல்வி, வேலை வேண்டும் என்கிறார்கள் ஏன்? சாதிச்சனியன் தேவையில்லை என்றால் அது தேவை இல்லை என்று போராட வேண்டியது தானே.//

இன்னும் என்னடா எவனும் வந்து அவனோட அறிவுசீவித்தனத்தை காட்டவே இல்லையேனு நினைத்தேன் , வந்துட்டிங்க, வாங்க ...வாங்க ... உங்களைப்போன்றவர்களைத்தான் எதிர்ப்பார்த்தேன்....

உங்கள் வீட்டில் செப்டிக் டேங்க் அடைத்துக்கொண்டால் சுத்தம் செய்வது யார்?

ஒரு பாம்பு திடீர்னு வீட்டில் வந்து விட்டால் யார் வந்து பிடிக்கிறார்கள்.

விவசாயம் செய்யும் விவசாயிகளை விடுங்க அங்கே தினமும் வேலை செய்து உங்களுக்கு சாப்பாடு கிடைக்க செய்வது யார்?

உங்கள் செறுப்பு அருந்து போனால் தைப்பது யார்?

சரி அது வேணாம் செத்துப்போனால் கூட உங்கள் உடம்பை உங்க சொந்தமே புதைக்குதா அதுக்கு ஒருத்தன் இருக்கானே அவன் யார்?

இவர்கள் வாரிசு எல்லாம் எத்தனைக்காலமாக படிக்காமல் அதே தொழிலையே செய்துக்கொண்டு இருக்காங்க காரணம் என்ன, அவங்க தலை எழுத்தா , எல்லாம் உங்களைப்போலவங்க அவங்களை அடக்கி அடிமையா வைத்து இருந்தது தான், அரசியல் ரீதியாக அவங்களுக்கும் எதுவாச்சம் செய்யனும்னா இப்படி ஒதுக்கீடு கொடுக்கணும், அதுவும் பிடிக்காதே உங்களுக்கு.

இத்தனை தலை முறையாக பாதிக்கப்பட்டதுக்கு நிவாரணம் தான் இப்போ சாதி ரீதியா அவங்களுக்கு தர சலுகை!

சாதி சான்றிதழ் கூட கொடுக்காம அலைய வைக்கிறது படிச்சு பட்டம் வாங்கின மேல் தட்டு வர்க்கம் எல்லாம் இந்த தயிர்சாதங்கள் தான்!

அவங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டாம், இனிமே இருக்கிற எல்லா மெடிக்கல் காலேஜ், எஞ்சினியரிங்க சீட் எல்லாம் அப்படி காலம் காலாமாக வதைக்கப்பட்டவங்களுக்கு தான் , ஒரு 10 வருடம் மட்டும் அப்படி செய்துப்போம், அது வரைக்கும் உங்காளுங்களுக்கு ஒரு இடமும் கிடையாது சரியா, 10 வருடம் அப்புறம் ... எந்த இட ஒதுக்கீடும் வேண்டும்!

அது வரைக்கும் எங்க வீட்டுல கக்கூஸ் கிளீன் பண்ண செப்டிக் டேங்க் கிளீன் பண்ற வேலை, செறுப்பு தைக்கும் வேலை, வயல் வேலைல எல்லாம் உங்காளுங்களுக்கு முன்னுரிமை தரோம் வாரிங்களா :-))

ஒரு சதவீதம் இருக்கும் ஒரு கூட்டத்தில 99 சதம் பேர் படிச்சு ... எல்லா வசதியும் அனுபவிக்கிறான், ஆனால் 99 சதம் இருக்கும் மக்களில் 1 சதம் கூட இன்னும் படிச்சு பதவிக்கு வரலை அதுக்குள்ளவே உங்களுக்கு அரிப்பு எடுக்குதே! எப்படி அவங்க எல்லாம் படிக்க வரலாம்னு!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற எனது மனதில் இருந்த பதிலை சுருக்கமாக சொல்லி இருக்கலாம். உங்காள் எங்காள் அப்படின்னா இன்னும் அந்த பழைய பஞ்சங்கத்துலேயே இருக்கிரோம்னு தெரியுது. நீங்க நினைக்கிற உங்காள் நான் இல்லை. சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று நினைப்பவர்கள் நாங்கள். எங்கள் வீட்டில், நீங்கள் சொல்லும் பகட்டெல்லாம் இல்லை. நாங்கள் பரம ஏழை பிள்ளை. தவறாக புரிந்துகொண்டு முந்திகொண்டுவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

அன்புடன் ஜோதிபாரதி
http://jothibharathi.blogspot.com

Unknown சொன்னது…

கோவி ,

உங்க பதிவுல இது வரைக்கும் இவ்வளவு கோபத்தப் பார்த்ததில்ல.
சாதியக் கண்டு பிடிக்க இவங்க பண்ற காமெடில எரிச்சல் தான் வருது.

கோவி.கண்ணன் சொன்னது…

//அருட்பெருங்கோ said...
கோவி ,

உங்க பதிவுல இது வரைக்கும் இவ்வளவு கோபத்தப் பார்த்ததில்ல.
சாதியக் கண்டு பிடிக்க இவங்க பண்ற காமெடில எரிச்சல் தான் வருது.
//

அருட்பெருங்கோ அவர்களே,
இன்றைய தத்துவம் என்று பதிவின் வலது மேல்பக்கம் ஒரு வாசகம் இருக்கு பாருங்கள்.
:)

Unknown சொன்னது…

/அருட்பெருங்கோ அவர்களே,
இன்றைய தத்துவம் என்று பதிவின் வலது மேல்பக்கம் ஒரு வாசகம் இருக்கு பாருங்கள்.
:)/

:)))))))

(அப்புறம் அந்த அவர்களே எல்லாம் எதுக்குங்க? நான் ரொம்ப சின்னவன்.)

thiru சொன்னது…

கோவி.கண்ணன்,

சாதியின் இருப்பை வைத்து தான் சிலருக்கு பிழைப்பு நடக்கிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்.

ILA (a) இளா சொன்னது…

கொஞ்சம் காலமா இந்தப் பிரச்சினை இல்லாம இருந்துச்சு. ஆரம்பிச்சாச்சி போல இருக்கு. விட்டுத்தள்ளுங்கய்யா? காய்கறி மார்க்கெட்ல கூவி கூவி விக்கிற எல்லாத்தையுமா வாங்கிட்டு வரோம். கண்டுக்காம போய்ட்டே இருக்கனும்

கோவி.கண்ணன் சொன்னது…

//Ramalakshmi has left a new comment on your post "பார்பனர் சரி ... மற்றவர்களுக்கெல்லாம் சாதி அடையாளம...":

வேண்டாதவர்களை திட்டறதுக்காக ...//

Ramalakshmi என்ற பெண் பெயரில் பெரிய அங்கிள் எழுதிய பின்னூட்டம் இடுகைக்கு தொடர்பில்லாததால் ரிஜெக்ட் செய்யப்பட்டது.

[Madras, Tamil Nadu arrived from thamizmanam.com on "காலம்: பார்பனர் சரி ... மற்றவர்களுக்கெல்லாம் சாதி அடையாளம் எது ?"]

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
கொஞ்சம் காலமா இந்தப் பிரச்சினை இல்லாம இருந்துச்சு. ஆரம்பிச்சாச்சி போல இருக்கு. விட்டுத்தள்ளுங்கய்யா? காய்கறி மார்க்கெட்ல கூவி கூவி விக்கிற எல்லாத்தையுமா வாங்கிட்டு வரோம். கண்டுக்காம போய்ட்டே இருக்கனும்
//
இளா சரிதான்,

ஆனால் அந்த கிறுக்கனின் கிறுக்கல்களை படிச்ச ஒரு நண்பர், நீங்க நாயுடுவான்னு கேட்டார்...அப்பறம் அவருக்கும் அதுபோல் நினைக்கும் பலருக்காகவும் இதை எழுதினேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//திரு/Thiru said...
கோவி.கண்ணன்,

சாதியின் இருப்பை வைத்து தான் சிலருக்கு பிழைப்பு நடக்கிறது. தொடர்ந்து உங்கள் பதிவுகளில் கவனம் செலுத்துங்கள்.
//

நன்றி திரு.

இதை யார் செய்றாங்க என்று தெரியும்...பேரைச் சொல்லி சீப் வெளம்பரத்துக்கு உதவிடக் கூடாது என்று விட்டுவிட்டேன்.

செல்வநாயகி சொன்னது…

///பனைமரம் சும்மா நின்றாலும் அரிப்பு உள்ளவங்க சொறிஞ்சிக்க முடியுமான்னு உரசி பார்பாங்க போல இருக்கு.////


இந்த வரிகள் மிகப் பிடித்திருக்கின்றன கோவிக்கண்ணன். சில நேரங்களில் மனிதராக மட்டுமல்ல பனைமரங்களாகவும் நிற்கலாம் நாம். இப்படி உரசுபவைகளாய் இருப்பதைவிட மௌனத்தை உதிர்த்து நிற்கும் பனைமரங்களாய் இருப்பதும் மேல்.

மற்றபடி திரு சொன்னதையே நானும் வழிமொழிகிறேன். தொடருங்கள் வழமையான உங்கள் பதிவுகளை.

K.R.அதியமான் சொன்னது…

///இவர்கள் வாரிசு எல்லாம் எத்தனைக்காலமாக படிக்காமல் அதே தொழிலையே செய்துக்கொண்டு இருக்காங்க காரணம் என்ன, அவங்க தலை எழுத்தா , எல்லாம் உங்களைப்போலவங்க அவங்களை அடக்கி அடிமையா வைத்து இருந்தது தான், அரசியல் ரீதியாக அவங்களுக்கும் எதுவாச்சம் செய்யனும்னா இப்படி ஒதுக்கீடு கொடுக்கணும், அதுவும் பிடிக்காதே உங்களுக்கு.////

இட ஒதுக்கீடு இதே முறையில் தொடர்ந்தால் இன்னும் 1000 வருடமானாலும், மலம் அள்ளுபவர்களின் சந்ததிகள் படித்து நல்ல வேலையில் சேர முடியாது. மீண்டும் மீண்டும் 'கிரிமி லேயர்' மக்களின் வாரிசுகளே இட ஒதுக்கீட்டு சலுகைகளை வெக்கமில்லாமல் அனுபவக்கின்றனர். தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சேர வேண்டிய இடங்களை, நடுத்தர மற்றும் பணக்கார வகுப்பை சேர்ந்த மாணவர்களே அனுபவக்கின்றனர். சந்தேகம் இருந்தால் அண்ணா பல்கலை கழக நுழைவுத் தேர்வு பட்டியலில் இடம் பெறும் மாணவர்களின் பின்புலத்தை ஆரய்ந்து பாருங்கள். இட ஒதுக்கீட்டில் கிரீமி- லேயர்களை நீக்காவிட்டால், நீதி கிடைக்காது. வெறும் பேச்சும், வாக்குவாதுமும்தான் தொடரும்.

இட ஒதுக்கீடு ஒரு தலைமுறைக்கு மட்டும்தான் என்றாலே பாதி நியாயம் கிடைக்கும். அரசு பள்ளிகளில் படிப்பவர்களிக்கே சலுகை என்றும் கொண்டுவரலாம்...

ஜெகதீசன் சொன்னது…

பரவாயில்லையே.... அதியமான் கொஞ்சம் முன்னேறீட்டாரே....
வாழ்த்துக்கள் அதியமான்!!
தமிழில் தொடருங்கள்....
:))

தமிழ் குரல் சொன்னது…

இதற்குதான் பெரியார்...

லெனின்
ரஷ்யா
ஏங்கெல்ஸ்
மார்க்ஸ்

பெயர் வைக்க சொன்னார்...

மேலும்...

வெற்றி
தமிழ்
மாறன்
பரிதி
பாரி

போன்ற தமிழ் பெயர்களை வைத்தாலும்...

சாதிவெறியர்கள் என்ன சாதி என்ன கண்டுபிடிக்க முடியாமல்... லூசாகி விடுவார்களோ?

K.R.அதியமான் சொன்னது…

ஜெகதீசன்,

///பரவாயில்லையே.... அதியமான் கொஞ்சம் முன்னேறீட்டாரே....
வாழ்த்துக்கள் அதியமான்!!////

நான் பிற்பட்ட வகுப்பில் 'பிறந்திருந்தாலும்' நடைமுறையில் 'முன்னேறியவர்' என்பதை குறிப்பால் உணர்த்தியதற்கு நன்றி. :))) இதே போல் பிற்பட்ட மற்றும் தாழ்தப்பட்ட ஜாதிகளில் பிறந்த, 'முன்னேறிய' மக்களும் உண்ர்ந்தாலே போதும்...

ஜெகதீசன் சொன்னது…

//
நான் பிற்பட்ட வகுப்பில் 'பிறந்திருந்தாலும்' நடைமுறையில் 'முன்னேறியவர்' என்பதை குறிப்பால் உணர்த்தியதற்கு நன்றி. :))) இதே போல் பிற்பட்ட மற்றும் தாழ்தப்பட்ட ஜாதிகளில் பிறந்த, 'முன்னேறிய' மக்களும் உண்ர்ந்தாலே போதும்..
//
அதியமான்,
நீங்கள் "முன்னேறியதாகச்" சொன்னது பின்னூட்டங்களில் தமிழ் பயன்படுத்தியதில் மட்டுமே. வேறு எதாவது நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல...
"முன்னேறிய வகுப்பு" என்று நினைப்பவர்கள் உங்களுக்கு நண்பர்களாக இருப்பதாலும் நீங்கள் "முன்னேறியதாக" நினைக்கலாம்...
:P

கோவி.கண்ணன் சொன்னது…

//covai sibi said...
these type of filthy comments shows,your are in right direction.
carry on.
//

மிக்க நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
பாரி அரசின் பின்னொட்டத்தில் ஒரு அணாணியின் உச்சா வாடை அடித்ததை இன்றுதான் படித்தேன். சாதி பார்ப்பது என்பது பார்ப்பணியத் தந்திரம். அதற்கு எல்லா சாதிகளும் பலியாகி உள்ளது. சாதியை காப்பாற்ற வேண்டிய அவசியம் இன்று பார்ப்பணர்களிடம் இல்லை. சாதி இந்துக்கள் என்று சொல்லிக்கொள்கிற உயர் சாதிகளிடம்தான் உள்ளது. கொளுத்திப் போட்டது அவர்கள் பற்றி எரிகிறது நம்மிடம்.
//

ஜமாலன்,
அதுவும் சரிதான். ஆனால் சாதிக்கு வக்காலத்து வாங்கறது சாதி இருக்கனும் என்று இன்னும் வெளிப்படையாக சொல்லிக் கிட்டு இருக்கிறவர்களில் பலர் பார்பனர்களாகத்தான் இருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
//நான் அந்த சொறி நாயை சட்டை செய்யலை...ஆனால் சொறிநாய் சொல்வதும் 'லாஜிக்'படி சரியாக இருக்கும்மோன்னு சில சாதிநாய்கள் நினைக்கலாம் அதுக்குத்தான் விளக்கம்.//

:-)))))))))))
//

நல்ல பாயிண்ட் புடிச்சிட்டேள் போங்go !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

வாவ்வால்...உங்கள் பின்னூட்டம் படு சூப்பர். ரசித்தேன்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//புரட்ச்சி தமிழன் said...
தமிழ் நாட்டப்பொருத்தவரைக்கும் சரி ஜாதி கண்டுபிடிக்க இத்தனை வேலை செய்யனும் மத்த மாநிலலங்கள்ள எல்லாம் பேரோடு சேர்த்தே ஜாதிய வச்சிருக்காங்களே அதுக்கு அரசாங்க பாடிவத்திலே சர் நேம் போட்டு வேற தாறாங்க நம்ம பேர மொட்ட மொட்டயா சொன்னாலே தமிழ் நாட்டுக்காரனுனு கண்டுபிடிச்சிடராங்க இதுக்கு மத்திய அரசு எந்த வழியும் செய்யாதா எம்மதமும் சம்மதம் என்ற இந்திய அரசு
//

பெயருக்கு பின்னால ஜாதிப் பெயர் போனதுக்கு நம்ம தமிழ்நாட்டில் பிசி,எம்பிசி, எஸ்சி / எஸ்டி கவலைப்படலைங்க :)

மொட்டையோ குட்டையோ இங்கு பிரச்சனையே பெயரில் இந்து பெயரில்சாதி அடையாளம் பற்றியது
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்