பின்பற்றுபவர்கள்

20 டிசம்பர், 2007

நட்பா ? உறவா ? எது சிறந்தது ?

நாம் ஒருவர் தான் ஆனால் இரத்தம் தொடர்புடைய சொந்தங்கள் மூலம் ஆணாக இருந்தால் தாத்தா, அப்பா, மாமா, மச்சினன், சகலை, மகன், மருமகன், பேரன் என்றும் பெண்ணாக இருந்தால் பாட்டி, அம்மா, அத்தை, மச்சினிச்சி, உவர்படியாள் (?), மகள், மருமகள் பேத்தி என்று உறவுக்கு ஏற்றார்போல் அழைக்கப்படுகிறோம். நல்லதுதான்.

உறவு முறை என்பதில் அன்பும் கடமையும் இருக்கிறது என்பதும் சரிதான். கடமைகளைத் தாண்டி உறவுக்குள் எதிர்ப்பார்ப்பும் இருப்பது கூட ஞாயம் தான். உறவுகளே உதவவில்லை என்றால் வேறு யார்தான் உதவுவார்கள் ? ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பு சக்திக்கு மீறியதாக இருந்தால் உறவு உடைந்து போகிறது, அதுபோல் இருப்பவர்கள் தகுந்த நேரத்தில் (எதிரில்)இருந்தும், (பொருள்) இருந்தும் உதவவில்லை என்றால் 'உறவென்று இருந்தும் என்ன பயன் ?' என்று நினைக்கத்தான் தோன்றும். தனது சந்ததிகள் மகன் - மகள் - பேரன் - பேத்தி ஆகிய சிறியவட்டத்திற்கு மேல் தமது உதவிகளை மனம் விரும்பி செய்வதற்கு எவருக்கும் மனம் வருவதில்லை. காரணம் செய்யும் உதவிகள் எல்லாம் திரும்ப கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு செய்யும் போதே வந்துவிடும், அப்படி திருப்பிச் செய்ய முடியாத உறவுகளுக்கு உதவுவதென்பது உவர்ப்பாகவே இருக்கும். இப்படி நினைப்பது தவறு என்றாலும் பொருளியல் வாழ்வில் தனது சந்ததிகளுக்காக என்று ஒருவர் ஈட்டும் பொருள் மற்ற உறவுகளுக்கு விரயமாவதில் எவருக்கும் ஒப்புதல் இருக்காது என்பதும் இயல்புதான். பெற்றவர்கள் இருக்கும் வரைதான் உடன்பிறப்புக்கள் ஒன்றாக இருக்க முடியும், அதன் பிறகு அவரவர் குடும்பம் அவரவருக்கு. எதாவது விழா, பண்டிகை ஆகியவற்றில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண நேரம் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

குடும்பங்களில் நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்திலும் கலந்துகொள்ள தற்பொழுதெல்லாம் நண்பர்களை முக்கியமாக கருத வேண்டி இருக்கிறது, காரணம் தற்பொழுது வாழ்க்கை முறையில் உறவுகளெல்லாம் எங்கோ ஒரு மூலையில் இருப்பார்கள், நம்மை சுற்றி உள்ளவர்கள் ஓரளவுக்கு நாமே விரும்பி ஏற்றுக் கொண்ட நண்பர்கள் தான். நட்பில் எதிர்பார்ப்பு இருக்காது என்று சொல்லமுடியாது, அந்த எதிர்ப்பார்ப்பு எந்த அளவுக்கு அவர்களை நெருங்கி இருக்கிறோம் என்ற அளவில் இருக்கும். அப்படி இருக்கும் போதுதான் 'இவனிடம் இவ்வளவு நாள் பழகியும், ஒரு சின்ன உதவிக்குக்கு கூட ... நேரமில்லை ...அல்லது சாரி என்று சொல்வார்களா ?' என்றெல்லாம் நினைக்கத்தோன்றும். எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து பார்த்தால் நட்பில் கிடைப்பது ஓரளவுக்கு நன்மைதான். குறிப்பாக ஆலோசனைகள் கிடைக்கும், எதாவது பிரச்சனைகள் என்றால் எப்படி தீர்ப்பது என்று தடுமாறிக் கொண்டிருப்பதை நண்பர்களிடம் மனம் விட்டால் ஓரளவுக்கு சில தீர்வுகளைச் சொல்வார்கள். அதைத் தவிர்த்து மனம் விட்டு பேச உறவுகளைவிட நட்பு சிறந்ததாகவே படுகிறது, சொல்வதைக் கேட்டுக் கொண்டு சமயம் வரும் போது 'நீ அப்படி இருந்தவன் தானே ?' என்று சொல்லிக் காட்டமாட்டார்கள், அதற்கான தேவையும் நட்பில் இல்லை என்பதால், மனம் விட்டுப் பேச ஓரளவு புரிந்துணர்வு உள்ள நட்பே சிறந்ததாக நினைக்கும் மனநிலையில் இருக்கிறோம்.

உறவா ? நட்பா ? எது சிறந்தது ? என்ற கேள்விக்கு எளிய விடை...நாங்கள் அண்ணன் - தம்பி போல பழகுவதில்லை, என் அப்பா, அப்பா - மகன் போல் பழகுவதில்லை, என் அம்மாவும் நானும் தோழிகளாக பழகுகிறோம், இதைவிட (கொடுமை ?) நானும் கணவரும் நல்ல நண்பர்கள் போல் பழகுகிறோம் என்று பலரும் சொல்கிறார்கள். கணவன் - மனைவி என்ற உறவில் நன்கு புரிந்து கொண்டு மகிழ்வாக இருக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு கணவன் - மனைவி என்ற உறவின் பெயர் பயமுறுத்துகிறதோ ? தெரியவில்லை. மனம் ஒத்த தம்பதிகள் கூட 'நாங்கள் நல்ல ப்ரெண்ட்ஸ்' சண்டை வந்தாலும் நண்பர்கள் நெருக்கமாக இருக்கிறோம், அதனை மறந்துவிடுகிறோம் என்கிறார்கள்.

இவ்வாறு 'நட்பை' சிறந்ததாக கருதும் அளவுக்கு உறவுகள் அல்லது உறவு முறைகளின் பெயர் அதன் கடமைகளை மறந்து அல்லது தவறி எதிர்பார்ப்பு அல்லது கட்டுப்பாடு என்று போலித்தனமாக மாறிவிட்டது என்ற மனநிலை அவ்வாறு இல்லாத குடும்பங்களுக்கு கூட ஏற்பட்டுவிட்டது என்று நினைக்க முடிகிறது. நன்றாக புரிந்துணர்வு உள்ள உறவும் உன்னதமானது என்பதை நாம் தோற்றுவிக்க முயலவேண்டும் என்பதைக் கூட பலர் நினைப்பதில்லை. உறவுகளின் உன்னதம் மறக்கப்பட்டு வருகிறது. நட்பு உயர்வுதான் அதே சமயத்தில் நல்ல புரிந்துணர்வு உள்ள எல்லா உறவுகளுமே அதைவிட தாழ்ந்தது இல்லை. கெட்டுப்போனது, விட்டுப்போனது உறவுமுறைகளோ, உறவு முறைகளின் பெயர்களோ அல்ல அவற்றின் மீதுள்ள புரிந்துணர்வுதான். புரிந்துணர்வு நட்பில் இருக்கிறது என்ற 'தோற்றம்' இருப்பதால் நட்பு உயர்வாக தெரிகிறது.

'தோள் கொடுப்பான் தோழன்' என்பது எவ்வளவு உண்மையோ அது போல் தான் 'மலை ஏறினாலும் மச்சான் (தயவு) வேண்டும்' என்பதும்.

பின்குறிப்பு : சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் ஒரு மனம் ஒத்த தம்பதிகள் நாங்கள் கனவன் - மனைவி என்பதைவிட நல்ல நண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகிறோம் என்றார்கள். அதுதான் கட்டுரைக்கு மூலம்.

22 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

நட்பு - உறவு : இரண்டும் வெவ்வேறானது. தொடர்புடையது அல்ல. இரண்டுமே தேவை தான் - அதனதன் வகையில் அதது சிறந்தது. நட்பு மட்டுமோ உறவு மட்டுமோ தனித்து இயங்கும் நிலை இல்லை. இணைந்து இயங்கினால் தான் பலன்.

துளசி கோபால் சொன்னது…

??????

பெயரில்லா சொன்னது…

\\சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் ஒரு மனம் ஒத்த தம்பதிகள் நாங்கள் கனவன் - மனைவி என்பதைவிட நல்ல நண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகிறோம் என்றார்கள். அதுதான் கட்டுரைக்கு மூலம்.\\
நல்லவேளை!! இங்க சன் டீவி இல்லை. :):)

VSK சொன்னது…

கூடவே தலைப்புக்கான விடையையும் சொல்லி இருக்கலாம்.

இரண்டுமே சிறந்தது என்பதே உங்கள் கருத்து எனக் கொள்லலாமா?

எல்லாவற்றிலும் நல்லதும் தீயதும் இருக்கின்றன.

ஜெகதீசன் சொன்னது…

//
துளசி கோபால் said...
??????

//
ரிப்பீட்டேய்ய்ய்ய்.....
:)

சீனி.செயபால் சொன்னது…

அன்பிர்க்கு இனியவன்........
அருமயானபதிவு.உறவுகள் எல்லாமே எதிர்பார்ப்புகள் உள்ளவைதான். உறவுகள்
எல்லாம் காகிதசங்கிலி போன்றது.முகம் கோனாமல் நடந்துக்கொள்ளவேண்டியிருக்கும்.சற்றே இறுக்கினால் எங்கோஒரு மூலையில்
பட்டென்று அறுந்துகொள்ளும். நல்ல நட்பு ஒன்றுதான் உற்றநேரத்தில்
"உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண்" களையும்.நல்ல நட்பைவிட
சிறந்தது இவ்வுலகில் எதுவும் இல்லை.


" செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு" ...........குறள்.

மங்களூர் சிவா சொன்னது…

few things can be shared only with parents not with others like that few things we can talk with friends only not with the parents / relatives

வடுவூர் குமார் சொன்னது…

ஒரு சின்ன வார்த்தை அதுவும் தொலக்காட்சியில்,அதுக்கு இவ்வளவு யோசிக்கனுமா? என்று தெரியவில்லை.
அப்படி யோசித்து இருந்தாலும் அதை கோர்வையாக எழுதியது தான் அசத்துகிறது.
உங்க பதிவையெல்லாம் மதிய சாப்பாட்டுக்கு பிறகு படிக்கமாட்டேன். :-))

குமரன் (Kumaran) சொன்னது…

எங்கள் வீட்டில் அடிக்கடி நடக்கும் உரையாடல் இது கோவி.கண்ணன். உறவுகளை விட நட்புகளே தேவையான நேரத்தில் கைகொடுக்கும் என்று ஒரு பக்கமும் நட்புகளை விட உறவுகளே கை கொடுக்கும் என்று ஒரு பக்கமும் பேசிக் கொண்டிருப்போம். நான் எந்தப் பக்கம் என்று சொல்ல மாட்டேன். :-)

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்பு - உறவு : இரண்டும் வெவ்வேறானது. தொடர்புடையது அல்ல. இரண்டுமே தேவை தான் - அதனதன் வகையில் அதது சிறந்தது. நட்பு மட்டுமோ உறவு மட்டுமோ தனித்து இயங்கும் நிலை இல்லை. இணைந்து இயங்கினால் தான் பலன்.
//

நல்ல கருத்து சீனா ஐயா.

சேர்ந்து இயங்குவது வெகு சிலருக்குத்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
??????
//

கணவன் - மனைவி கூட நாங்கள் நல்ல நண்பர்கள் என்று சொல்வது எனக்கு வியப்பாக இருக்கிறது.
அதைத்தான் குறிப்பிட்டேன். உறவுகளின் பெயர்கள் கெட்டுவிட்டதா ? உறவே கெட்டுவிட்டதா ? ஒன்னுமே புரியல உலகத்திலே.

கோவி.கண்ணன் சொன்னது…

//VSK said...
கூடவே தலைப்புக்கான விடையையும் சொல்லி இருக்கலாம்.

இரண்டுமே சிறந்தது என்பதே உங்கள் கருத்து எனக் கொள்லலாமா?

எல்லாவற்றிலும் நல்லதும் தீயதும் இருக்கின்றன.
//

விஎஸ்கே,
இரண்டும் சிறந்தது என்று சொல்லவில்லை. இரண்டிற்கும் தனித்தன்மை இருக்கிறது, ஒப்பிடக் கூடாது என்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//சீனி.செயபால் said...
அன்பிர்க்கு இனியவன்........
அருமயானபதிவு.உறவுகள் எல்லாமே எதிர்பார்ப்புகள் உள்ளவைதான். உறவுகள்
எல்லாம் காகிதசங்கிலி போன்றது.முகம் கோனாமல் நடந்துக்கொள்ளவேண்டியிருக்கும்.சற்றே இறுக்கினால் எங்கோஒரு மூலையில்
பட்டென்று அறுந்துகொள்ளும். நல்ல நட்பு ஒன்றுதான் உற்றநேரத்தில்
"உடுக்கை இழந்தவன் கைபோல இடுக்கண்" களையும்.நல்ல நட்பைவிட
சிறந்தது இவ்வுலகில் எதுவும் இல்லை.


" செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு" ...........குறள்.
//

சீனி செயபால் ஐயா. குறளோடு சொன்ன அருமையான கருத்துக்கள். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
few things can be shared only with parents not with others like that few things we can talk with friends only not with the parents / relatives
//

ஹிஹி அதே அதே, கணவன் - மனைவி விசயத்திலும் அப்படித்தான். நாங்க நல்ல நண்பர்கள் என்று கணவன் மனைவி டைவர்ஸ் ஆன பிறகு வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
ஒரு சின்ன வார்த்தை அதுவும் தொலக்காட்சியில்,அதுக்கு இவ்வளவு யோசிக்கனுமா? என்று தெரியவில்லை.
அப்படி யோசித்து இருந்தாலும் அதை கோர்வையாக எழுதியது தான் அசத்துகிறது.
உங்க பதிவையெல்லாம் மதிய சாப்பாட்டுக்கு பிறகு படிக்கமாட்டேன். :-))
//

குமார்,
அது என்ன சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்கு பின் ? என்பதிவுகள் மருந்தாக இருக்கிறதா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
எங்கள் வீட்டில் அடிக்கடி நடக்கும் உரையாடல் இது கோவி.கண்ணன். உறவுகளை விட நட்புகளே தேவையான நேரத்தில் கைகொடுக்கும் என்று ஒரு பக்கமும் நட்புகளை விட உறவுகளே கை கொடுக்கும் என்று ஒரு பக்கமும் பேசிக் கொண்டிருப்போம். நான் எந்தப் பக்கம் என்று சொல்ல மாட்டேன். :-)
//

நீங்க சொல்ல வேண்டாம், எல்லோருக்கே அது இரவு பகல் பொறுத்து மாறும்.
:)))))))))))))))

bala சொன்னது…

கோவி.மு.கண்ணன் அய்யா,
முதலில் உறவு தான் சிறந்ததாக இருந்தது.உங்க காலம்(column) வந்து அந்த விதியை மாத்திவிட்டது.இப்ப நட்பு தான்.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
கோவி.மு.கண்ணன் அய்யா,
முதலில் உறவு தான் சிறந்ததாக இருந்தது.உங்க காலம்(column) வந்து அந்த விதியை மாத்திவிட்டது.இப்ப நட்பு தான்.

பாலா
//

நன்றி ஜயராமன் சார்.

bala சொன்னது…

//நன்றி ஜயராமன் சார்.//

ஜயராமனா? யார் அவர்?என் பெயர் பாலா.பாலச்சந்தர்.என்னை திட்டறதா இருந்தா என்னையே திட்டுங்க.அவரை எதற்கு திட்டறீங்க?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
//நன்றி ஜயராமன் சார்.//

ஜயராமனா? யார் அவர்?என் பெயர் பாலா.பாலச்சந்தர்.என்னை திட்டறதா இருந்தா என்னையே திட்டுங்க.அவரை எதற்கு திட்டறீங்க?

பாலா
//
ஜயராமன் சார்,
பரவால்ல வைத்துக் கொள்ளுங்க ஐயா, இந்த பேரும் 'நல்ல' பெயர்தான். எல்லோரும் சொல்றா அதனால் நானும் ஸொல்லுறேன்.
:)

bala சொன்னது…

நல்ல பெயர் தான்;இல்லையென்று சொல்லவில்லை.அப்படிப் பாத்தா கோவி.மு.கண்ணன் கூட நல்ல பெயர் தான்;(பெயரைத் தான் சொல்கிறேன்,சிங்கப்பூர் ஆசாமியை இல்லை).அதுக்காக அந்த பெயரைக் கூட வைத்துக் கொள்ளணுமா என்ன?

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
நல்ல பெயர் தான்;இல்லையென்று சொல்லவில்லை.அப்படிப் பாத்தா கோவி.மு.கண்ணன் கூட நல்ல பெயர் தான்;(பெயரைத் தான் சொல்கிறேன்,சிங்கப்பூர் ஆசாமியை இல்லை).அதுக்காக அந்த பெயரைக் கூட வைத்துக் கொள்ளணுமா என்ன?

பாலா
//

ஜயராமன் சார்,

டென்சன் ஆகாதிங்க, நான் சிதைக்காமல் பேரைச் சொல்லும் போது நீங்க மட்டும் ஏன் 'மு' வெல்லாம் போட்டு நல்லாவா இருக்கு ?

சரி சரி கோட்டா ஓவர், அடுத்த பதிவில் பார்ப்போம்.

மறக்காமல் உப்பு போட்டு சாப்பிடுங்கோ !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்