பின்பற்றுபவர்கள்

25 டிசம்பர், 2007

விஜயகாந்தின் விளம்பர 'அரசியல்'

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 8.5% விழுக்காடு ( மொத்த வாக்குகளில் அல்ல, பதிவான வாக்குகளில்) பெற்றதால் தேமுதிக மூன்றாவது பெரிய கட்சி என்ற செய்தியை அந்த கட்சியே வலிய பரப்பியது, அதன் தலைவர் விஜயகாந்தைத் தவிர வேறு யாரும் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது வேறுவிசயம். 30 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட காங்கிரசும், 234 தொகுதிகளிலும் அறிமுகமே இல்லாதா வேட்பாளர்களை நிறுத்திய தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியா ? என்றெல்லாம் கேட்காதீர்கள். பெற்ற ஓட்டு எண்ணிக்கைத்தான் கணக்கு :) இதை விட கூத்து மதுரை இடைத்தேர்தலில் தேமுதிக 2 ஆவது இடத்திற்கு வந்ததால் கட்சி வளர்ச்சி அடைந்துவிட்டதாம், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிகவை மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் அள்ளிவிடும் என்பதை தற்போது ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக புரியாதவர்களுக்குக் கூட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

விஜயகாந்தின் கல்யாணம் மண்டபம் முறையற்று கட்டி இருந்து மத்திய அரசால் இடிக்கப்பட்டால் அதையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டு 'தேமுதிக வளர்வது பிடிக்காமல் அழிக்க நினைக்கிறார் கருணாநிதி' என்ற குண்டை தூக்கிப் போட்டு வந்தார். டிஆர் பாலு இதையெல்லாம் புறம்தள்ளி இடித்துத் தள்ளிவிட்டார். விஜயகாந்த் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் பற்றி வாய்திறக்க மாட்டார். காரணம் உங்களுக்கே தெரியும். :)

'இராமர் எந்த கல்லூரியில் படித்து பாலம் கட்டினார் ? என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார் என்பதற்காக 'திருவள்ளுவர் எந்த காலேஜில் படித்தார் ?' என்ற கேள்வி எழுப்பி தனது தமிள்(?) பற்றை மெய்பித்தார் விஜயகாந்த். இது வீம்பிற்காக மீடியாவில் தம்பெயரும் கட்சியின் பெயரும் வரவேண்டுமென்பதற்கான வரட்டு அரசியல். இப்பொழுதெல்லாம் திமுகவையோ, கருணாநிதியையோ குறைச் சொல்லி நாளொரு அறிக்கை விடாவிட்டால் அடுத்த தேர்தலுக்குள் தன்னையோ, தன் கட்சியையோ பொதுமக்கள் மறந்துவிடுவார் என்று நினைக்கிறார் போல, காரணம்,

நேற்று மதுரையில் எம்ஜிஆர் நினைவு நாளுக்கு மாலை போடுவது யார் என்ற போட்டா போட்டியில் அதிமுகவும், தேமுதிக தொண்டர்கள் அடித்துக் கொண்டு கலவரம் வரை சென்று கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர், அதிமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றன. கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரில் இவரது கட்சி தொண்டர்கள் இவரை அழைப்பதைத் தவிர்த்து எம்ஜிஆருக்கும் தேமுதிக / விஜயகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை தெரிந்த அதிமுகவினர், மேலும் மதுரையில் தேமுதிகவினால் ஓட்டுக்கள் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் அதிமுகவினர், தேமுதிகவினர் எம்ஜிஆருக்கு மாலை அணிவிப்பதை எப்படி பொறுத்துக் கொள்வார்கள் ?

இதில் ஈடுபட்டு சிறை சென்ற தொண்டர்களைப் பற்றி சிறிதும் கவலையின்றி பழியைத் தூக்கி திமுகமீது போட்டு 'தேமுதிகவின் வளர்ச்சி பொறுக்க முடியாத திமுகவின் தூண்டுதலால் அதிமுக - தேமுதிக தொண்டர்கள் மோதிக் கொள்கிறார்கள்' என்று மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கிறார். கருணாநிதி ஆட்சியில் இவர் வளர்ந்து, வளர்ச்சியைப் பற்றி பேச முடிகிறது, இதுவே ஜெ ஆட்சியாக இருந்தால் விஜயகாந்த் மீது கஞ்சா வழக்கே பாய்திருக்கும்.

திமுகவின் ஓட்டு வங்கி வைகோ பிரிந்து சென்ற போது எவ்வளவு இருந்ததோ அதே அளவில் தான் இருக்கிறது, அதிமுகவின் ஓட்டு வங்கி எம்ஜிஆர் ரசிகர்களால் உருவானது, சினிமா மோகம் உள்ள வாக்காளர், திரை கதாநாயகனை பார்த்து வாக்களிக்கும் வாக்களர்கள் அதிமுகவில் தான் இருக்கிறார்களேயன்றி திமுகவில் இல்லை, அப்படி இருந்த்திருந்தால் திமுகவினால் நிறுத்தப்பட்ட நடிகர்கள் எவரேனும் தேர்தலில் வென்றிருக்க வேண்டும். நெப்போலியன், டிராஜேந்தர் தவிர்த்து திமுக சார்பில் நடிகர்கள் வென்றதே இல்லை. திமுகவின் வெற்றி அல்லது வளர்ச்சி சினிமா ரசிகர்களால் தீர்மாணிக்கப்படுபவை அல்ல. பின்பு ஏன் திமுக அதிமுகவின் சினிமா ரசிகர்களின் வாக்கு தேமுதிகவிற்கு சொல்வதைத் தடுக்கப் போகிறது ? திமுகவைப் பொறுத்து தேமுதிக அதிமுகவின் ஓட்டுகளைப் பிரிக்கும் கட்சி. வளர்ச்சியை தடை செய்வதைவிட வளர்த்துவிடவே கருணாநிதியும் விரும்புவார். இது விஜயகாந்துக்கு தெரியாதா ? தெரியும், மேலும் இதுதெரிந்த,

ஜெவின் எதிர்ப்பை, அதிமுகவின் எதிர்ப்பை சமாளிக்கவே கருணாநிதிமீது அள்ளித்தெளிப்பதும், அட்டாக் செய்வதுமாக, தன் இருப்பைக் காட்டிக் கொள்ளவும் விளம்பர அரசியல் செய்வதில் தேமுதிகவின் / விஜயகாந்தின் கொடி பறக்கிறது.

12 கருத்துகள்:

களப்பிரர் - jp சொன்னது…

30 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட காங்கிரசும், 234 தொகுதிகளிலும் அறிமுகமே இல்லாதா வேட்பாளர்களை நிறுத்திய தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியா ? என்றெல்லாம் கேட்காதீர்கள்.

காங்கிரஸ் தனியே நின்றால் ஒரு சீட் கூட கிடைக்காது ... எனவே காங்கிரஸ் சை விட தேமுதிக பெரிய கட்சியே...

சதுக்க பூதம் சொன்னது…

His Anti-ADMK propaganda is not for publicity. If you see votebank of ADMK, considerable amount comes as anti-DMK. They don't like ADMK and vote for ADMK(After MGR). They doesn't have very good opponent .Thats why they vote for ADMK. Vijay kanth wants to project himself as alternate to DMK. So that he can get some ADMK votes. He got it also.
Most importantly, lots of black money filled industrialist(JPR etc) use him as easy way to enter politics by just throwing blick money to him. He has the backing of powerful telugu industrialis lobby

கோவை சிபி சொன்னது…

பதிவர் ச்.பூதம் கூறியது போல் விஜய்கந்துகு, தெலுகு கட்டமைப்பு நன்றாக வேலை செய்கிறது. வைகோ வை கை கழுவி விட்டு இவரை பற்றிகொள்வார்கள்.
ந்ம் மக்கள் இது புரியாமல் வழக்கம்போழ் இவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிரர்கள்

maduraikkaran சொன்னது…

அய்யா இவர் பொது மக்களுக்காக போரaடுறவரா இருந்தா , உடைஞ்ச கல்யாண மண்டபத்துக்கு 8 1/2 கோடி வாங்கிக்கிட்டாறே , அத வேணாண்னு சொல்ல வேண்டியதுதானெ...!!! promotion of vijaykanth என்பது
தமிழக பார்ப்பன பத்திரிக்கைகளின் திராவிட எதிர்ப்பு உணர்வை வெளிச்சமிடும் நிகழ்வு...

1972... MGR இன்று விஜயகாந்த்... நடுவில் ரஜினியிடம் முயற்சி செய்தார்கள் அவர் சொத்து குவிப்பில் கவனமாக இருந்ததால் முடியவில்லை...

TBR. JOSPEH சொன்னது…

விஜயகாந்த் ஒரு சரியான சந்தர்ப்பவாதி என்பது தெரிந்ததுதானே. ஓட்டு வங்கிக்காக தேவாலயத்திற்கு சென்று மண்டியிட்டு வேண்டுவதும், கோவில்களுக்கு சென்று திருநீறு பூசிக்கொள்வதும் கூட தேர்தல் உத்தியாக கையாளும் அவர் ஒரு கைதேர்ந்த அரசியல்வாதி என்று நிருபித்து வருகிறார். அதில் இப்படி வாய்க்கு வாய் திமுகவை குற்றம்சாட்டுவதும் ஒரு வகை.

தறுதலை சொன்னது…

தமிழ் மக்களுக்கு அதிக ஆபத்து

குத்துக்கு குத்து தமுள் தமுள்னு குமுறுற விஜயகாந்தாலயா?
குத்துக்கு குத்து இந்தியா இந்தியான்னு பொங்குற அர்ஜுனாலயா?


--------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//

களப்பிரர் said...
30 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட காங்கிரசும், 234 தொகுதிகளிலும் அறிமுகமே இல்லாதா வேட்பாளர்களை நிறுத்திய தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியா ? என்றெல்லாம் கேட்காதீர்கள்.

காங்கிரஸ் தனியே நின்றால் ஒரு சீட் கூட கிடைக்காது ... எனவே காங்கிரஸ் சை விட தேமுதிக பெரிய கட்சியே...
//

காங்கிரஸ் 1989 தேர்த்தலில் தனித்து நின்று 25 சீட்டுகள் வரை வெற்றி பெற்று இருக்கிறது, ஒரு தேசிய கட்சியை, தமிழகத்தில் முதல்வர் பதவி வரை வகித்த கட்சியை தேமுதிகவுடன் ஒப்பிடுவதே அபத்தமானது

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் said...
His Anti-ADMK propaganda is not for publicity. If you see votebank of ADMK, considerable amount comes as anti-DMK. They don't like ADMK and vote for ADMK(After MGR). They doesn't have very good opponent .Thats why they vote for ADMK. Vijay kanth wants to project himself as alternate to DMK. So that he can get some ADMK votes. He got it also.
Most importantly, lots of black money filled industrialist(JPR etc) use him as easy way to enter politics by just throwing blick money to him. He has the backing of powerful telugu industrialis lobby
//

Mostly True,

Thanks for the Comments

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை சிபி said...
பதிவர் ச்.பூதம் கூறியது போல் விஜய்கந்துகு, தெலுகு கட்டமைப்பு நன்றாக வேலை செய்கிறது. வைகோ வை கை கழுவி விட்டு இவரை பற்றிகொள்வார்கள்.
ந்ம் மக்கள் இது புரியாமல் வழக்கம்போழ் இவர் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிரர்கள்

10:47 AM, December 26, 2007
//
வைகோ திராவிட சாயம், தெலுங்கு என இருகுதிரைகள் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டார் அதனால் அவருக்கு தெலுங்க ஆதரவு குறைவுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

// maduraikkaran said...
அய்யா இவர் பொது மக்களுக்காக போரaடுறவரா இருந்தா , உடைஞ்ச கல்யாண மண்டபத்துக்கு 8 1/2 கோடி வாங்கிக்கிட்டாறே , அத வேணாண்னு சொல்ல வேண்டியதுதானெ...!!! promotion of vijaykanth என்பது
தமிழக பார்ப்பன பத்திரிக்கைகளின் திராவிட எதிர்ப்பு உணர்வை வெளிச்சமிடும் நிகழ்வு...//

எனக்கும் நீங்கள் கேட்பதும் சொல்வதும் சரிதான் என்று படுகிறது.

//1972... MGR இன்று விஜயகாந்த்... நடுவில் ரஜினியிடம் முயற்சி செய்தார்கள் அவர் சொத்து குவிப்பில் கவனமாக இருந்ததால் முடியவில்லை...
//
அதென்னமோ சரிதான் ரஜினிக்கு படம் நடித்தாலே போதும் 50 கோடி வரையில் கிடைக்கிறது, அரசியல் வாதி ஆகி அலைந்து, பேசி சம்பாதிக்கும் அவசியல் இல்லைதான்.

சேராதே சொன்னது…

இந்த நூற்றாண்டின் புத்தர் கேப்டன் தான். காந்தி உயிருடன் இருந்திருந்தால் கேப்டன் கட்ஷியில்தான் இருப்பார். முதலில் கொள்கைகளை பாருங்கள். பின்னர் உங்கள் கட்சியையும் பாருங்கள்

பெயரில்லா சொன்னது…

எங்கள் கிராமத்திற்கு விஜயகாந்த் வந்திருந்த போது, அனைத்து தரப்பட்ட மக்களும்(திமுக,அதிமுக, பா.ம.க,விடுதலை சிறுத்தைகள் ) வந்திருந்தனர். இதே போன்றுதான் எல்லா ஊர்களிலும் மக்கள் வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டுதான் விஜயகாந்த், இவர்கள் எல்லாம் நமக்கு ஓட்டு போடப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்கிறார்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்