பின்பற்றுபவர்கள்

8 ஏப்ரல், 2010

அண்ணாச்சிகள் உயர்சாதிக்கு மாறிவிட்டார்களா ?

ஒரு காலத்தில் சென்னையில் ஓட்டல்களாக இருந்தாலும் பெரிய துணிக்கடைகளாக இருந்தாலும் செட்டியார்களாலும், பார்பனர்களாலும் பெருவாரியாக நடத்தப்பட்டன. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக நாடார் சமூகம் என்று அழைத்துக் கொள்ளும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கை ஓங்கி இருக்கிறது. அங்காடித்தெரு படத்த்தில் காட்டியது போல் அண்ணாச்சிக் கடைகளில் பணிக்கு இருப்பவர்கள் அதே சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்றாலும் அண்ணாச்சிகள் அந்த சமூகத்து இளைஞர்களை தங்களின் லாபத்திற்கான உற்பத்திப் பொருளாகத்தான் பார்க்கிறார்களேயன்றி அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. தங்கள் தொழில் நொடித்துவிடக் கூடாது என்பதற்காக நாடார் சங்கங்களுக்கு மிகுதியான நிதிவுதவி செய்துவருகின்றனர். நாடர்களைப் பொருத்த அளவில் ஒரு நாடார் இந்து நாடார் கிறித்துவ நாடார் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது, தங்கக் கடற்கரை முதலாளி கிறித்துவராக இருந்தாலும் சரி, முருகனைப் போன்று (பார்பன மற்றும் பார்பன அல்லாத பெண்) வல்லி மற்றும் கார்திகா என இரு தாரமும் அதற்கு மேலும் ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய ஜீவஜோதி புகழ் அண்ணாச்சியாக இருந்தாலும் சரி அவர்களைப் பொருத்த அளவில் நாடார்கள் என்பது அவர்களது தனிச் சமூகம்.

என் நண்பன் ஒருவன், கட்டுனா என் சாதிக் காரப் பொண்ணைத்தான் கட்டுவேன், அது கிறித்துவ மதமாக இருந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை, எங்களை விட கிறித்துவர்கள் பணக்காரர்களாகத்தான் இருக்காங்க, மதமா சோறுபோடுது என்பது போல் பேசி சாதிக்கு சாமரம் வீசினார். எல்லோரும் தான் சாதியில் திருமணம் செய்கிறார்கள் இருந்தாலும் சாதிக்கு மதம் ஒரு தடையாக இல்லாதிருப்பது நாடார்களிலும் தலித்துக்களிலும் கூடுதலாக நடைபெறுகிறது. இவ்வாறு மதம் மாறி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களில் மதம் தொடர்புடைய பெரிய குழப்பங்கள் ஏற்படுவது இல்லை.

எதுக்காக இதைச் சொல்கிறேன் என்றால் மதம் மாறுவது சாதியை அழித்துவிட வில்லை. குருடன் நடக்கிறான், செவிடன் பார்க்கிறான் என்பது போன்றும் பாவிகளான உங்களுக்கு பரலோக ராஜ்ஜியம் அதுக்கு நாங்க கேரண்டி என்று கூறியவர்களும் மதம் மாறி வந்த அந்தந்த சாதியினரை அப்படியே தான் (விட்டு) வைத்திருக்கிறார்கள். வருணாசிரம கருமாந்திரத்தை ஒழிக்க மதம் மாறுவது தீர்வே இல்லை, மேலும் தலித்துகளுக்கு அரசாங்க சலுகை இழப்பும் ஏற்பட்டுவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்து பெரும்பாண்மையைக் காக்க வேண்டும் என்பதற்காக மதம் மாறினால் உனக்கு சலுகை கட் என்பதாகத்தான் 'மதச் சார்பற்ற' இந்தியாவும் சட்டதிட்டங்களை வைத்திருக்கிறது. ஒருவர் மதம் மாறினால் அவரின் பொருளாதாரத்திற்கும் கல்வி அறிவிற்கும் நாங்க கேரண்டி என்று எந்த ஒரு மத அழைப்பாளர்களும் இதுவரை சொல்லாத போது மதம் மாறும் தலித்துகளுக்கான சலுகை பறிப்பு இந்தியாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சொல்வதில் தவறே இல்லை (எது எதற்கோ பொது நல வழக்கு தொடுப்பவர்கள் இதற்கு ஏன் தொடுப்பதில்லை என்று தெரியவில்லை, அப்படித் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட மத நிறுவனங்கள் தலைகுனிய நேரிடும் என்பதால் அவர்களும் பாதிப்பட்ட தலித்துகள் குறித்து அக்கரை காட்டுவதில்லை)

திரும்பவும் தலைப்பு......நாடார்கள் நிறுவனங்கள் நடத்தி பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள், முதலாளிகளாக இருக்கிறார்கள், அப்படி என்றால் அவர்கள் உயர்சாதிக்காரர்கள் பட்டியலில் சேர்த்துவிட உயர்சாதி சமூகம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சாதி சமூகங்கள் அதற்கு தயாராக இருக்கிறார்களா ? பனமரம் ஏறியவனெல்லாம் இன்னிக்கு முதலாளி ஆகிவிட்டான் என்று தூற்றவே செய்வார்கள்.

பொருளாதார மற்றும் தொழில் வள அடிப்படையிலும் உயர்சாதின்னு ஒரு இழவும் கிடையாது, தனது சாதியை முன்னிலைப் படுத்த எத்த(னிப்பவ)ர்கள் அவ்வாறுக் கூறிக் கொண்டார்கள். பார்பனீயம் என்பதற்கு மாற்று சொல்லாக நான் ஏன் உயர்சாதியம் என்று பயனபடுத்துவதில்லை என்றால் எந்த ஒரு சாதி சாக்கடையையும் நான் உயர்சாதி என்று உயர்த்திக் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு கோடுகள் தத்துவம் தான், ஒரு பிரிவினரை உயர்சாதி என்று குறிப்பிடும் போதே அதில் இல்லாதவர்கள் தாழ்ந்த சாதி என்கிற பாகுபாட்டை ஏற்படுத்திவிடும். சாதி என்பது கொடுமையான ஒன்று, மனிதர்களை ஒன்று சேர விடாத ஒன்று, மேல் சொன்னது போல் ஒரு நாடார், முதலியார், வன்னியர், தலித் ஆகியோர்கள் கிறித்துவராக இருந்தாலும் ஒருநாளும் அவர்களது சாதி அழிவதற்கு இந்திய சூழலில் வாய்ப்பே இல்லை. இவை வருணாசிரம கருமாந்திரத்தால் பீடித்த நோய், இந்திய நோயான சாதியத்தை சாடுவதற்கு அதற்கு தலைமை ஏற்பதுடன், ஞாயப்படுத்துவதற்கும் வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாகவும் பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது. சாதியைப் பெரிய விசயமாக கருதாதவர்கள் இதைப் புறந்தள்ளலாம்.

98 கருத்துகள்:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

//
சாதி என்பது கொடுமையான ஒன்று, மனிதர்களை ஒன்று சேர விடாத ஒன்று
//

சாட்டையடி வார்த்தைகள்.. சார்..

Robin சொன்னது…

//இவ்வாறு மதம் மாறி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களில் மதம் தொடர்புடைய பெரிய குழப்பங்கள் ஏற்படுவது இல்லை.// நீலகண்டன் அரவிந்தன் கேட்டா கோவிச்சுக்க போறாரு!

//வருணாசிரம கருமாந்திரத்தை ஒழிக்க மதம் மாறுவது தீர்வே இல்லை// மதம் மாறுவதற்கும் இந்த கருமாந்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை. மதம் என்பது ஆன்மீக வளர்ச்சிக்கானது, அதை உணர்ந்தவர்களுக்கு இதன் அருமை புரியும். சாதி வேறுபாடுகள் கிறிஸ்தவத்தில் குறைவு, முழுமையாக மாற சில காலங்கள் ஆகும்.

//தம் மாறும் தலித்துகளுக்கான சலுகை பறிப்பு இந்தியாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சொல்வதில் தவறே இல்லை// சரியாக சொன்னீர்கள்.
//பனமரம் ஏறியவனெல்லாம் இன்னிக்கு முதலாளி ஆகிவிட்டான் என்று தூற்றவே செய்வார்கள்.// பொறாமைதான் காரணம். இப்படி எல்லா சமுதாயங்களும் முன்னேறி விட்டால் பிறகு யார் தூற்றுகிறார்கள் என்று பார்க்கலாம்.

//என் நண்பன் ஒருவன், கட்டுன என் சாதிக் காரப் பொண்ணைத்தான் கட்டுவேன், அது கிறித்துவ மதமாக இருந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை, எங்களை விட கிறித்துவர்கள் பணக்காரர்களாகத்தான் இருக்காங்க, மதமா சோறுபோடுது என்பது போல் பேசி சாதிக்கு சாமரம் வீசினார். // இந்த சமுதாயம் முன்னேற கிறிஸ்தவ மிஷனரிகள்தான் துவக்கிய கல்வி நிலையங்கள்தான் முக்கிய காரணம்.

சாதி என்பது ஒரேயடியாக ஒழிந்துவிடாது, இன்னும் சில தலைமுறைகள் பிடிக்கும்.

இந்த பதிவு எழுத ஜோ அமலன் தானே காரணம்?

கோவி.கண்ணன் சொன்னது…

// Robin said...

மதம் மாறுவதற்கும் இந்த கருமாந்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை. மதம் என்பது ஆன்மீக வளர்ச்சிக்கானது, அதை உணர்ந்தவர்களுக்கு இதன் அருமை புரியும். //

மதமானின்னு (மதானி இல்லை) ஒரு மீட்டர் இருக்கு அது தான் இந்த மதத்தில் சேரும் போது ஆன்மிக வளர்ச்சி இத்தனை மீட்டர் உயரும் என்று காட்டு, அது மதம் பற்றிய அறிவு அற்றவர்களுக்கு புரியாது ராபின். :)

//சாதி வேறுபாடுகள் கிறிஸ்தவத்தில் குறைவு, முழுமையாக மாற சில காலங்கள் ஆகும்.//

காலில் கொஞ்சமாகத்தானே நரகல் ஒட்டி இருக்கு இதைப் பெருசு படுத்தவேண்டாம் என்கிறீர்களா ? கிறித்துவர்களின் படித்தவர்கள் அதிகம் என்கிற கருத்து இருக்கு, ஆனால் படித்தவர்கள் தான் அனைத்து மதம், சாதி தொடர்பானவற்றிற்கு தலைமையும் ஏற்கிறார்கள், இது அனைத்து மதங்களுக்கும் பொதுவானவையே.
// இந்த சமுதாயம் முன்னேற கிறிஸ்தவ மிஷனரிகள்தான் துவக்கிய கல்வி நிலையங்கள்தான் முக்கிய காரணம்.//

இருந்தாலும் நோக்கம் கல்வி அளிப்பதற்கு என்று மட்டுமே இல்லையே. எல்லோரும் அன்னை தெரசா கிடையாது.

// சாதி என்பது ஒரேயடியாக ஒழிந்துவிடாது, இன்னும் சில தலைமுறைகள் பிடிக்கும்.//

தமிழ் நாட்டில் கிறித்துவம் நுழைந்து செயின்ட் தாமஸ் கணக்கு படி 2000 ஆண்டுகள் ஆகுது. நீங்க தலைமுறை மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிங்க. வாழ்த்துகள்

// இந்த பதிவு எழுத ஜோ அமலன் தானே காரணம்?//

தேரை இழுத்து தெருவில் விடுவது என்பது இதுதானோ, நான் எதையாவது சொல்லப் போக, என் குடும்பத்தையே கோவி அவமானப்படுத்திவிட்டார் என்பதாக திரிப்பார். எனக்கு தேவையா ?

Robin சொன்னது…

மதானி கதையை ஆரம்பித்தால் விவாதம் வேறு திசையில் சென்று விடும் :)
//தமிழ் நாட்டில் கிறித்துவம் நுழைந்து செயின்ட் தாமஸ் கணக்கு படி 2000 ஆண்டுகள் ஆகுது. நீங்க தலைமுறை மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிங்க. வாழ்த்துகள்// எனக்கு தெரிந்தவரை தமிழ் நாட்டில் கிறிஸ்தவத்திற்கு அதிக அளவில் மாறியது கடந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger Robin said...

எனக்கு தெரிந்தவரை தமிழ் நாட்டில் கிறிஸ்தவத்திற்கு அதிக அளவில் மாறியது கடந்த இரண்டு நூற்றாண்டுகளில்தான்.//

உங்களுக்கு தெரியாததும் உண்டு, தாமஸ் வருவதற்கு முன்பே சிரியன் கிறித்துவர்கள் கேரளக்கடற்கரையில் வாழ்ந்தார்கள் என்ற தகவல் உண்டு, பதிவர் சேவியர் நூலில் படித்திருக்கிறேன். மேலும் பதிவர் நண்பர் ஜோ நாகர்கோவில் பகுதியில் மீனவர்கள் கிறித்துவர்களாக மாறியது 400 நூற்றாண்டுகளுக்கும் முன்பே என்பார்.

dondu(#11168674346665545885) சொன்னது…

//400 நூற்றாண்டுகளுக்கும்//
தகவல் பிழை. நான்கு நூற்றாண்டுகள் அல்லது 400 ஆண்டுகள் என்றிருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown சொன்னது…

மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள்.சாதி வெறி,இன வெறி,மொழி வெறி என்று தமிழன் ஆணவம் கொண்டு அலைவதால் தான் ஈழத்தில் தோல்வியை சந்தித்தானோ என்ற கேள்வி சில நாட்களாக என் மனதில் தோன்றுகிறது.தமிழ் நாட்டிலும் அவ்வாறே இதே ஆணவத்தால் மலையாளிகளாலும்,கன்னடவர்களாலும் வஞ்சிக்கப்பட்டு அல்லல் படுவோமா என்ற அச்சமும் ஏற்படுகிறது.

பனித்துளி சங்கர் சொன்னது…

//
சாதி என்பது கொடுமையான ஒன்று, மனிதர்களை ஒன்று சேர விடாத ஒன்று
//

மனிதனாக வாழ்வதர்க்கு சாதிகள் எதற்கு ? சிந்திக்கத்தூண்டிய பதிவு . பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன்

கோவி.கண்ணன் சொன்னது…

// dondu(#11168674346665545885) said...

//400 நூற்றாண்டுகளுக்கும்//
தகவல் பிழை. நான்கு நூற்றாண்டுகள் அல்லது 400 ஆண்டுகள் என்றிருக்க வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

கண்ட கண்ட கருமாந்திர பதிவு என்று உங்கள் பதிவு அனானிகளால் அர்சிக்கப்படும் ஒரு பதிவுக்கு வந்து பின்னூட்டம் இடுவதற்கு மீண்டும் நன்றி. உங்க அனானிகளெல்லாம் உங்களை கடிந்து கொள்ள மாட்டார்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//Vilwam said...

மிகவும் அழகாக எழுதியுள்ளீர்கள்.சாதி வெறி,இன வெறி,மொழி வெறி என்று தமிழன் ஆணவம் கொண்டு அலைவதால் தான் ஈழத்தில் தோல்வியை சந்தித்தானோ என்ற கேள்வி சில நாட்களாக என் மனதில் தோன்றுகிறது.தமிழ் நாட்டிலும் அவ்வாறே இதே ஆணவத்தால் மலையாளிகளாலும்,கன்னடவர்களாலும் வஞ்சிக்கப்பட்டு அல்லல் படுவோமா என்ற அச்சமும் ஏற்படுகிறது.

2:27 PM, April 08, 2010//

மிக்க நன்றிங்க சார். ஒற்றுமையாய் இருந்தால் உண்டு வாழ்வு. பல இனங்களும் தங்களுக்குள் ஒற்றுமையாகத்தான் இருக்கின்றன தமிழனைத் தவிர்த்து

Unknown சொன்னது…

<<<
மதம் மாறினால் உனக்கு சலுகை கட் என்பதாகத்தான் 'மதச் சார்பற்ற' இந்தியாவும் சட்டதிட்டங்களை வைத்திருக்கிறது
>>>
நச் கோவிஜி...

<<<
எது எதற்கோ பொது நல வழக்கு தொடுப்பவர்கள் இதற்கு ஏன் தொடுப்பதில்லை என்று தெரியவில்லை
>>>
இந்த நுண்ணரசியல் சீக்கிறமா ஒரு பதிவு போடுங்களேன்... எனக்கு இதப்பத்தி கேள்வி பல இருக்கு...

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த நுண்ணரசியல் சீக்கிறமா ஒரு பதிவு போடுங்களேன்... எனக்கு இதப்பத்தி கேள்வி பல இருக்கு...//

ஏற்கனவே 3 பதிவுகள் இது பற்றி எழுதியாச்சு, 'தலித் கிறித்துவர்கள்' என்று தேடினால் கிடைக்கும்.

Dr.Rudhran சொன்னது…

வருணாசிரம கருமாந்திரத்தால் பீடித்த நோய், இந்திய நோயான சாதியத்தை சாடுவதற்கு அதற்கு தலைமை ஏற்பதுடன், ஞாயப்படுத்துவதற்கும் வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாகவும் பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது.

if i say i agree, you will be flooded with foolish abuses!!
yes i do agree.

கோவி.கண்ணன் சொன்னது…

//if i say i agree, you will be flooded with foolish abuses!!
yes i do agree.//

நன்றி ருத்ரன் ஐயா,

பின்னூட்டம் மட்டுறுத்தல் (கமெண்ட் மாடுரேசன்) செய்து தான் வெளி இடுகிறேன். ஆபாச பின்னூட்டங்கள் நேரடியாக குப்பைக் கூடைக்கு போய்விடுகிறது.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

சமூகநிலையில் இன்று உள்ள தாழ்த்தப்பட்டவர்களை விட மிகவும் கீழ் நிலையில் இருந்தவர்கள் நாடார்கள். பிற சாதி தாழ்த்தப்பட்டோரை தொட்டால்தான் தீட்டு, சாணார்களை(நாடார்) பார்த்தாலே தீட்டு என்ற ஒரு சொலவடையே இருந்திருக்கின்றது. மேல் ரவிக்கை அணிய உயர்சாதியினரால் அனுமதி மறுக்கப்பட்டச் சமூகம் இது. அதை அணிந்ததற்காக அந்த இனப் பெண்ணின் மார்பகத்தை சாதி வெறியர்கள் அறுத்து எரிந்த இரத்த வரலாற்றை திங்கள்சந்தை ஊர் சொல்லும். பெரியார் வைக்கத்தில் தாழ்த்தப்பட்டோர் கோவில் நுழைவு உரிமைக்காகப் போராடினார் என்று படித்திருக்கின்றோமே..அந்த தாழ்த்தப்பட்டோர் வேறு யாருமல்ல ஈழவர்கள் என்று அந்தப்பகுதியில் அழைக்கப்பட்ட நாடார்கள்தான். 1920 களின் துவக்கத்திலேயே நாடார் சமூகம் வணிகம் பக்கம் திரும்பத் துவங்கியது. காமராஜர் தாழ்த்தப்பட்டோராய் இருந்த இச் சமூகத்தை மிகவும் பிற்பட்ட சமூகமாக அறிவித்தபோது, ’அண்ணாச்சி நமக்கு அப்ப சலுகை கிடைக்காதே’ என்றவர்களை நோக்கி “ சலுகையா முக்கியம்? மரியாதைதான் முக்கியம்னே” என்று பதிலுரைத்தாராம் காமராஜர். நாடார்கள் மதம் மாறுவதால் தங்கள் சமூக நிலை மாறும் என்று நினைத்தெல்லாம் மாறாவில்லை. அவர்களுக்கு அப்படி மாறாது என்று நன்கு தெரிந்ததால்தான் சமூகநிலையை மாற்ற வைக்கும் ஒரே சக்தியான பணத்தின்மீது தங்கள் பார்வையை திருப்பி இன்று சாதித்தும் காட்டி இருக்கின்றனர். இந்த விஷயத்தில் நாடார்கள் போற்றப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு தாழ்ந்தப்பட்ட சமூகமும் நாடார்களிடம் கற்க வேண்டிய பாடம் இது. நான் இந்த விஷயத்தில் ராபினுடன் உடன்படுகின்றேன். ஏதேனும் ஒரு வகையில் கிருத்துவம் மீது ஏற்பட்ட ஈர்ப்பினால் மாறியிருக்கலாமே தவிர இழிநிலையை மாற்றும் பொருட்டில் அவர்கள் மாறி இருப்பதாக நான் கருதவில்லை. என்னைப் பொறுத்த அளவில் மதம் மாறுவதால் இழிநிலை மாறாது.பணம் மட்டுமே அதை மாற்றும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//என்னைப் பொறுத்த அளவில் மதம் மாறுவதால் இழிநிலை மாறாது.பணம் மட்டுமே அதை மாற்றும்.//

மாற்றுக்கருத்து இல்லை. பொருளாதார உயர்வு பெறும் சமூகம் முன்னேறும்.

(பிறகு அதைத் தக்கவைத்துக்கொள்ள சட்டதிட்டங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். பிறருக்கு அந்த வாய்ப்பும் கொடுக்கமாட்டார்கள்)

பெயரில்லா சொன்னது…

Among the comments, Abdulla's stand out.

Sweeping statements in the main blog post and in the comments area galore.

However, Abdullaa's stand out.

Much can be said for Nadars and a few against them.

The rise of Nadars breaking out of the Hindu varanshradharam is a beacon to all others, as Abdullaa has correctly pointed out.

Govi Kannan is wrong in clubbing all Nadars as from one class namely, toddy tapper community (பனையேறி நாடார்கள்). Nadars, like Parppanars, are of different classes, but of the same caste in Hindu caste system, The so-called Sanaars are said to be toddy-topper community. Shivaji Ganesan acts out such a role in Kaval Deivam. They are a brutal people, worshipping tribal deities, living by hard physical labour.

Mostly confined to Tuticorin, Tirnelveli, Ramnad and KK districts where the arid climate and the ambience of sea help palm trees grow in abundance, the Nadars lived tapping kallu, from time immemorial. They are an ancient indigenous tribe of southern TN, along with others like dalits.

As Abdulla observes, in Hindu caste system, they are sudras, but in Travancore samasthaanam, they were treated mildly untouchable only slightly above dalits. Nairs wanted the Nadar women to go topless, as covering the bosoms is a sign of arrogance a lower caste should not dare to have!

In TN, too, they were denied temple entry along with dalits. When Vaithyanaatha Iyer took along with him some youth to enter Meenaakshi amman temple, Nadar youth were part of the brigade along with dalit youth.

Nadars of Sivakaasi, Virudunagar etc. are well off and they have nothing to do with the toddy tapping Nadaars, the sanaars. They don’t enter marriage alliance with Sanaars. Just like paarppanars - the non-pujari classes don’t enter alliance with pujari classes. There were பிணந்தூக்கும் பார்ப்பனர்கள் also. They come lowest in the class system within paarppanar community, similarly with Nadaars.

The rise of Nadaars from Sannar classes is a modern phenomenon. The Tambaram Nadaars and Chennai Nadaars - like Saravana Store, Sarvana Bhawan, Athithtans of Daily Thandhi -all from Tuticorin district of toddy tapping classes. How they rose! No matter whether by hook or crook, it is better to scale the ladder than to stand out and fall below.

Next Robert Caldwell

பெயரில்லா சொன்னது…

////என்னைப் பொறுத்த அளவில் மதம் மாறுவதால் இழிநிலை மாறாது.பணம் மட்டுமே அதை மாற்றும்.//

No.

Nature and culture of a people can undergo sea-change, albeit gradually, in conversion.

Religions offer a cultural base to grow. They dont simply stop at making a people accept the theology only. They give a way of life to live with. Its theology too makes a deep impact in changing how a person views himself, or arranges his life.

Hindu relgion does have a cultural base. That is a good or beautiful one. Alas, the culture is packaged differently to different people.

Brahmins have their own. Other upper castes have their own. The lower culture is offered to the lowest classes.

On the contray, religions like Islam and Christianity offer cultural bases which all can call it their own and flourish under.

Islam is fantastic in this matter. On becoming a muslim, a dalit joins the universal ulema - the brotherhood of Muslims worldwide. That was why, Periyaar wanted dalits to go over to Islam as it can give self respect to them. அவர்கள் இழினிலை that comes from how they view themselves and how they are viewed by othes கட்டாயம் மாறும் இசுலாமியராக மாறும்போது.

Meenakshipuram is a fine example here. No upper caste dares to insult any former dalit now muslim. The dalis enjoys, more than anything else, having their self -respect and no one can offend their dignity today. Getting rid of Hinduism for a dalit is breaking free.

Christians have uniform culture, although the sects are so many. In a sect, all rituals and ceremonies which make up such a cultural base, are uniform to all. Baptism, for e.g, is common to all. In Hinduism, brahmins have their own ceremonies, like upanayanam.

Whether the culture offered by other religions is good or bad is not the question. The point is, if it is good for all; if bad, bad for all.

பெயரில்லா சொன்னது…

ஆங்கிலத்தில் எழுதினால் ‘சிலர்கள்’ படிப்பார்கள். என்வே நான் எழுதிய்வற்றை தமிழில் பெயர்த்து அனுப்பிகிறேன்.

‘பலர்கள்’ படிப்பார்கள் இல்லையா கண்ணன்?

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...
ஆங்கிலத்தில் எழுதினால் ‘சிலர்கள்’ படிப்பார்கள். என்வே நான் எழுதிய்வற்றை தமிழில் பெயர்த்து அனுப்பிகிறேன்.

‘பலர்கள்’ படிப்பார்கள் இல்லையா கண்ணன்?
//

அது பின்னூட்டம் போடுவது டயரில் டக்ளாசா ? என்பதைப் பொருத்து, பேரைப் பார்த்தாலே சிலர்களும் இல்லை பலர்களும் இல்லை எல்லோர்களும் ஓடிவிடுவார்கள்

********

வலையில் கருத்துப் பரிமாற்றம் என்பதைத் தாண்டி தமிழில் எழுத முடிகிறது என்பதற்காகத்தான் எழுதுகிறேன். இதுல வந்து ஆங்கிலப் புலமைகாட்டுபவர்கள் யவராக இருந்தாலும் நான் படிப்பது கிடையாது. ஆங்கிலப் பதிவில் தான் ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடனும், இது தமிழ்பதிவு. அதுவும் தமிழில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்கள் ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடுவதை நான் எதிர்க்கிறேன்.

இனியா சொன்னது…

"பெரும்பாண்மையைக் காக்க வேண்டும் என்பதற்காக மதம் மாறினால் உனக்கு சலுகை கட் என்பதாகத்தான் 'மதச் சார்பற்ற' இந்தியாவும் சட்டதிட்டங்களை வைத்திருக்கிறது. ஒருவர் மதம் மாறினால் அவரின் பொருளாதாரத்திற்கும் கல்வி அறிவிற்கும் நாங்க கேரண்டி என்று எந்த ஒரு மத அழைப்பாளர்களும் இதுவரை சொல்லாத போது மதம் மாறும் தலித்துகளுக்கான சலுகை பறிப்பு இந்தியாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சொல்வதில் தவறே இல்லை"

Well said Kovi Kannan. There is no difference in the life of Dalits when they are a christian or hindu. Christians also treat them as untouchables only. Only according to the Govt, the Dalit christians are BCs not SCs. What an injustice for the past 5 decades to the christian dalits by this secular government?

ஜோதிஜி சொன்னது…

மிக்க நன்றி. சரியான சமயத்தில் வந்துள்ளீர்கள். இதை விட தெளிவாக உள்ளே உள்ள சமூக அமைப்பு, இருந்த ஏற்றத் தாழ்வுகள், வெளியே தெரியாத மறைக்கப்பட்ட உண்மைகள், உருவாக்கிய தமிழீம் என்றொரு பிரதேசத்தின் நிலவரங்கள், சர்வதேச சமூகம் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் மொத்தத்தில் இறுதிக்கட்ட கோரத்தாக்குதல் என்று எழுதிக் கொண்டுருக்கும் புத்தகத்தின் இறுதி நேரத்தில் வந்து எதிர்பார்ப்புடன் கூடிய உங்கள் அக்கறைக்கு நன்றி. காரியம் சித்தியானால் தகவல் தெரிவிக்கின்றேன்.
texlords@gmail.com

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிஜி said...
மிக்க நன்றி. சரியான சமயத்தில் வந்துள்ளீர்கள். இதை விட தெளிவாக உள்ளே உள்ள சமூக அமைப்பு, இருந்த ஏற்றத் தாழ்வுகள், வெளியே தெரியாத மறைக்கப்பட்ட உண்மைகள், உருவாக்கிய தமிழீம் என்றொரு பிரதேசத்தின் நிலவரங்கள், சர்வதேச சமூகம் தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் மொத்தத்தில் இறுதிக்கட்ட கோரத்தாக்குதல் என்று எழுதிக் கொண்டுருக்கும் புத்தகத்தின் இறுதி நேரத்தில் வந்து எதிர்பார்ப்புடன் கூடிய உங்கள் அக்கறைக்கு நன்றி. காரியம் சித்தியானால் தகவல் தெரிவிக்கின்றேன்.
texlords@gmail.com
//

ஜோதிஜி, நான் பொதுவாக தொடர்களை விரும்பிப் படிப்பது இல்லை. திவாகர் என்கிற வலை நண்பர் ஒருவர் உங்கள் தொடரை தொடர்ந்து படித்துவிட்டு மிகவும் சிறப்பாக இருக்கிறது என்று பரிந்துரைத்தார். அதன் பிறகு ஒரே மூச்சில் படித்தேன். எழுதியவிதம் நிகழ்ச்சிகளை கண் முன் நிறுத்தி இருந்ததாக உணர முடிந்தது. நண்பர் சொல்லவில்லை என்றால் நான் உடனடியாக படித்திருக்க மாட்டேன்.

உங்கள் எழுத்துகள் மேலும் சிறக்க நல்வாழ்த்துகள்.

இனியா சொன்னது…

கிறிஸ்தவ தலித்களை கேவலமாக
நினைக்கும், நடத்தும் வன்னியர்கள், கள்ளர்கள்
எல்லாம் இப்பொழுது "MBC" ஆகிவிட்டார்கள்.
என்ன கொடுமை இது?

வருண் சொன்னது…

அண்ணே ஜோ அமலன், நாடார் சங்க பிரதினிதி போல தோனுது! :)))

ஒருவகையில் அண்ணாச்சிக்கள் உயர்சாதியான தென்னவோ உண்மைதான்.

சாதிப்பாறு அல்லது வெறி, இவர்களுக்கும் உண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது. தன்னை உயர் சாதினு மதிக்கலைனா எனக்கென்ன? என் சாதியில் உள்ளவர்களிடம் நான் உறவு வைத்துக்கொள்கிறேன். எங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்டுகொள்கிறோம் என்று சாதியை வளரவைத்த ஒரு சாதிதான் நாடார்கள்.

Nadars or Thevars, there is no difference for brahmins. They are not brahmins. That is all they care!

Only mukkulathOr and may be nairs looked down on nadars and of course ill-treated them then, I believe. These guys did not care or react violently. They just accepted that we are nadars and we dont want to mingle with you or with brahmins or SCs but we are fanatics and we worship our community and by cook or crook we help each other. That is their policy.

The pity is they are as fanatic as any brahmin or any thevar. They never demanded respect for their community.

Their caste fanatism is justified often as they were from low-caste.

I mean, they woould say, we dont want to marry a high class brahmin or dravidians as they look down at us. We dont want to deal with SCs either as we dont find comfortable with their lifestyle. We want to be nadars and help each and caste FANATICS! That is their policy! LOL

Yeah, nadars are another caste fanatics for sure!

பெயரில்லா சொன்னது…

மத்தவாலும் இங்கிலீசில் எழுதறா...அவாளை மட்டும் விட்டுட்டேளே சரியா?

பெயரில்லா சொன்னது…

சாதிப்பற்று வேறே, சாதி வெற் வேறே.

தன் சாதிக்குள்ளேயே மணமுடித்தால் மற்றவருக்கு என்ன சங்கடம்?

நாடார்களுக்கு சுயமரியாதை உண்டு. அதனாலேயே அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தார்கள்.

பார்ப்பன்ர்கள் இவர்களை கீழ்சாதி எங்கள் கிருஸ்ணர் சொன்னர்ர் என்று சொன்னால் நாடார்கள் சட்டை பண்ணுவ்தில்லை. அது பார்ப்பனர்கள் வேலை. அவர்கள் மதம்.

இவர்களைப்போல தலித்துகலும் இருந்தால் தலித்துகல் மேனிலையடைவர்கள் என்கிறார் அபுதுல்லா. அதுவே என் கருத்துமாகும்.

கோவி கண்ணன் நாடார்கள் பொருளாதார நிலையில் உயரக்கூடாதென்கிறரா? அவர் பதிவு நாடார் சமூகத்தைப்பற்றி ஒன்றும் சரியாகப் புரிந்த மாதிரி தெரிய்வில்லை. நாடார்களின் பூர்வீகம் தென்மாவட்டங்களே. அதை என் இன்கீலீசூ பதிலில் தெளிவாகச்சொன்னேன். இங்கே மறுபடியும் தமிழில் எழுத்லாமா?

பெயரில்லா சொன்னது…

சாதி வெறியென்றால், மற்ற சாதியினரிடம் போய் எங்கள் சாதி உயர்ந்தது எனச் சண்டைபோடுவதுதான். அதை நாடார்கள் செய்தார்களா?

சாதிப்பற்று இருந்து ஒருவருக்கொருவர் கைகொடுத்துத் தூக்கிவிடுவது நல்ல விசயம். அப்படிச்செய்யப்போய்தான் நாடார்கள் உயர்ந்தார்கள்.

பார்ப்பனருக்கும் இந்த நல்ல குணம் உண்டு.

பெயரில்லா சொன்னது…

////என்னைப் பொறுத்த அளவில் மதம் மாறுவதால் இழிநிலை மாறாது.பணம் மட்டுமே அதை மாற்றும்.//

அப்படிக்கிடையாது..

ஒரு மக்களின் வாழ்க்கை முறை அவர்கள் ஏற்றுக்கொண்ட மத்தால் மாறும். உடனேயே மாறாவிட்டாலும், மெல்லமெல்ல நிகழும். எனவே ஒருவர் மதம்மாறும்போது, அவர் க்டவுளை மட்டும் மாற்றிக்கொள்ளவைல்லை. முன்னைய கலாச்சாரத்தை தள்ளி விட்டு ஒரு புதுக்கலாச்சாரத்தை ஏற்றுகொள்கிறார் என்றே பொருள்.

ஏனெனின், மதங்கள் மக்களுக்கு க்டவுள், வழிபாட்டுமுறைகள் என்று மட்டும் நில்லாமல், ஒரு வாழ்க்கை முறையயும் நல்கின்றன. கடவுள், வழிபாட்டு முறைகளும், க்லாச்சார உருவாகக்காரணிகளாகும்.

இந்துமதம் ஒரு மதமல்ல. அஃது ஒரு வாழ்க்கை முறை என்பார்கள். இந்து மதம் நல்கும் கலாச்சரரம் சிறந்ததுதான் என்றாலும், அது பலதரப்பட்ட மக்களுக்கு பல்விதமாகத்தான் வருகிறது. பிராமணருக்கு வரும் இந்துக்கலாச்சாரம் பிறருக்கு இல்லை என்பது நாம் பார்க்கலாம். என்வே இந்து மதக்கலாச்சாரத்த்தாக்கம் ஒரே விதமானது அல்ல. அதற்கு காரணம் வருணக்கொள்கையெனலாம். இந்து மதக்கலாச்சாரத்தினால் பெருநன்மையடைந்தவர்கள் மேல்சாதியன்ரே.


அதே வேளையில், இசுலாம், கிருத்துவம் நல்கும் கலாச்சாரம் ஒருவருக்கு ஒன்று; மற்ற்வருக்கு இன்னொன்று என்றில்லை.

தலித்துகலுக்கு இசுலாமே பெருநன்மை பய்க்கும் மதமாகும். ஒரு தலித்தான்வர்ன் இசுலாமியனாகும் போது, அவர் இசுலாமிய சகோதர சபையின் உறுப்பின்னாக ஆகிவிடுவான். அவன் தன்னை இசுலாமியன் என பெருமை பட்டுக்கொள்ளலாம். எல்லாருக்கு ஒரேவிதமான மதக்கட்டுப்பாடுகள் வ்ரைமுறைகள். இப்படி அனைவருள் ஒருவனாக அவன் ஆகி விடுவதால், அவனுக்கு தானும் எல்லாரையும் போல்வே என்ற ஒரு தன்னம்பிக்கை, தன் மதிப்பு உண்டாகிறது.

மதமாற்றம் தலித்துகளின் இழினிலையைப்போக்காது என அப்துல்லா சொல்வது உண்மைக்கு மாறாகும். என்வேதான் பெரியார் தலித்துகளை இசுலாத்திற்குப்போகச்சொன்னார்.

இந்து மதத்திலிருந்து இசுலாத்திற்கு மாறிய மீனாக்சிபுரம் தலித்துகளை எவரும் இன்று அவமானத்தப்ப்டுத்த முடியாது. இந்து மதத்தில் இருக்கும் வரைதான் இழினிலை. இசுலாத்தில் அவ்விழ்னிலை இல்லை அவர்களுக்கு.

மதமாற்றிய் ஜமாத்து என்ன கொட்டியாக்கொடுத்தது அவர்களுக்கு?

கிருத்துவமும் ஆளுக்கொரு, கூட்டத்துக்கொரு என்று மத வரைமுறைகள் வைத்துக்கொள்ளவைல்லை. இந்து மதத்தில் பிராமணருக்குத்தான் உப்நயனம். ஒரு எ.கா. மற்றவருக்கில்லை. ஆனால் கிருத்துவத்தில் ஞானஸ்னானம் என்பது எல்லாருக்கும் சிறுவயதில்

மற்ற மதங்கள் நல்கும் வாழ்க்கைமுறை நன்றா, இல்லையா என்பது கேள்வியல்ல. அது நன்றேன்றாலும் எல்லருக்கும் ஒன்றாகவே நன்று. தீதென்றெல்லாம் எல்லாருக்கும் ஒன்றாகவே தீது.

They sink or swim together.

(மொழியாக்கம் சரியா என்று ஒப்பிட்டுப்பார்த்துகொள்ளலாம்.

கடைசியிலே இங்கிலீசுப்புலமையைக் காண்பித்த்துக்கு மன்னிச்சுகோப்பா கோவி கண்ணன். நான் ஆங்கிலோ இந்தியன் எனவே என் தாய் மொழி ஆங்கிலம் எனலாம்.)

பெயரில்லா சொன்னது…

இதுல வந்து ஆங்கிலப் புலமைகாட்டுபவர்கள் யவராக இருந்தாலும் நான் படிப்பது கிடையாது. ’’


அப்படியாயின் ஏன் அனுமதிக்கவேண்டும்?

பெயரில்லா சொன்னது…

//Nadars or Thevars, there is no difference for brahmins. They are not brahmins. That is all they care!
//

இந்த இங்கிலீசு எனக்குப் புரியவில்லை. ஆராவது மொழிபெயர்த்தால் நன்று.

பிராமணர்கள் தேவரா நாடாரா என்று சட்டைபண்ணுவதில்லையா? ஏன்?

பெயரில்லா சொன்னது…

வருண,

அப்துல்லா சொன்னதுபோல, நாடார்கள் வைதீககோயில்கள் (பார்பனர்கள் கோயிலக்ள்) நுழைய அனுமதிக்கப்படவில்லை.

வருணக்கொளகை மூலம் வந்த சாதிமுறைகளில் நாடார்கள் சூத்திரர்கள்.

வரலாறு உஙகளுக்குச்சார்பாக இல்லை.

பெயரில்லா சொன்னது…

//ஆபாச பின்னூட்டங்கள் நேரடியாக குப்பைக் கூடைக்கு போய்விடுகிறது.
//

ஆங்கில பின்னூட்டங்களை ஆபாச் வகையில் எடுத்துக் குப்பைக்கூடையில் போட்டால் நல்லது. ஒரு ச்ஜசந்தான். கோபப்பட்டுவிடாதிர்கள்.

அப்படிச்செய்தால், casualty no. 1 ருத்ரந்தான்.

அவரும் ஆங்கிலப்பின்னூட்ட ஆசாமிதான்.

பெயரில்லா சொன்னது…

கோவி கண்ணன், ஒரு சின்ன அட்வைஸ். எப்ப்டி எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது உங்கள் பொறுப்பு.

கிடுகிடுவென பதிவுகள் போடுவ்து இருக்கலாம். உங்களுக்க் நேரம் இருக்கிறது. ஆனால், வாரத்துக்கொன்று என்று போட்டால், அது உங்கள கருத்துப்பிழைகளைத் தவிர்க்கும்.

நாடார்களப்பற்றி போட்டதில் நீங்கள் சரியாக அவர்கள் வரலாற்றையும் வாழ்க்கை முறைகளையும் பற்றித்த்தெரிந்து கொள்ளவில்லை முதலில். எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் எழுத்கிறீர்கள்.

பெயர்களப்பற்றி எழுதிய பதிவில், கிராமத்து மக்கள் பக்கமே வரவில்லை. பார்ப்பன்ரைப்பற்றி ரொமப் எழுத்கிறீர்கள். ஏதோ ஒரு சென்சேசனலிசம்ம்தான் எங்கேயும்.

மற்ற் பதிவாளர்கள் பலர் செய்யும் தவறான், ஒருவன் ஒன்றைப்பிடிக்காத் முறையில் சொல்லிவிட்டால், உடனேயே கீழிறிங்கிவிடுகிறீர்கள்.

சில பதிவாளர்கள் நன்றாக எழுதிகிற்ர்ர்கள். பலர் இன்னும் குழந்ததைதனத்தோடுதான் எழுத்கிறார்கல்.

பார்ப்ப்னீயம் பற்றிய உங்கள் பதிவுகளில் ஒரு திடீர் விள்மபரத்துக்கு ஆசைப்பட்டு (சரவ்ணன் போல) எழுதுவ்தாகத்தெர்கிறது.

வருணசிரம், இந்து மதக்க்கோட்பபாடுகளில், தீடீரென இந்துத்வாவினர் போல சாட்கீறீர்கள்.

இங்கிலீசுக்குத்தாவுகிறேன் மன்னிக்கவும். உங்களுக்கு இங்கிலீச் கட்டாயம் தெரியும்.

I dont understand who are you.

Are you a free thinker like me?

Are you a caged thinker with strong prejudices?

Why are you quick to judge me as a person prejudiced against Hindu relgion?

Be slow.

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
அங்காடித்தெரு படத்த்தில் காட்டியது போல் அண்ணாச்சிக் கடைகளில் பணிக்கு இருப்பவர்கள் அதே சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்றாலும் அண்ணாச்சிகள் அந்த சமூகத்து இளைஞர்களை தங்களின் லாபத்திற்கான உற்பத்திப் பொருளாகத்தான் பார்க்கிறார்களேயன்றி அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை.
//

இதில் மற்றொரு விஷயமும் இருக்கிறது கோவி.

எனக்கு தெரிந்த வரையில், நாடார் முதலாளிகள் நாடார்களை வேலைக்கு சேர்ப்பதற்கு காரணம் ஊர்ப்பாசமும், ஜாதி பாசமும் மட்டும் காரணமில்லை. பெரும்பாலும் தென்மாவட்டங்களில் ஒரு பிரச்சினை என்றால் அவர்கள் முதலில் அணுகுவது ஜாதி சங்கங்களையே (மற்றும் லோக்கல் கவுன்சிலர்களை). வேலையாட்களும் முதலாளிகளும் ஒரே ஜாதியாக இருக்கும் போது, ஜாதி சங்கம் முதலாளியை எதிர்த்து எதுவும் செய்து விடாது. அதுவும் பல இடங்களில் முதலாளி தான் சங்கத் தலைவராகவும் இருப்பார்.

இதையே மாற்றி யோசித்துப் பாருங்கள். முதலாளி நாடார், தொழிலாளி தேவர். தேவர் சாதி சங்கம் பிரச்சினையில் யார் பக்கம் நிற்கும்? (அல்லது சமாளிக்க செலவாகும்!)

பி.கு: இங்கு நாடார், தேவர் என்று சொல்வது ஒரு உதாரணமே தவிர, அவர்கள் மட்டுமல்ல, மற்ற நிறுவனங்கள்/ஜாதி சங்கங்களும் இப்படித் தான்.

அது சரி(18185106603874041862) சொன்னது…

//
எதுக்காக இதைச் சொல்கிறேன் என்றால் மதம் மாறுவது சாதியை அழித்துவிட வில்லை. குருடன் நடக்கிறான், செவிடன் பார்க்கிறான் என்பது போன்றும் பாவிகளான உங்களுக்கு பரலோக ராஜ்ஜியம் அதுக்கு நாங்க கேரண்டி என்று கூறியவர்களும் மதம் மாறி வந்த அந்தந்த சாதியினரை அப்படியே தான் (விட்டு) வைத்திருக்கிறார்கள்
//

உண்மை. சில வருடங்களுக்கு முன், வட தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகம் தங்களுக்கு தனி சர்ச் வேண்டும், தங்களது சர்ச்சில் மற்ற ஜாதியினர் உள்ளே நுழையக் கூடாது, இல்லையேல் மீண்டும் தாய் மதம்(!) திரும்புவோம் என்று மீண்டும் இந்துக்களாக மாறினார்கள்.

ஆக, இவர்கள் எந்த மதத்திற்கு போனாலும் தங்கள் ஜாதியையும் தூக்கிக் கொண்டு தான் போகிறார்கள்!

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

இதுல வந்து ஆங்கிலப் புலமைகாட்டுபவர்கள் யவராக இருந்தாலும் நான் படிப்பது கிடையாது. ’’

அப்படியாயின் ஏன் அனுமதிக்கவேண்டும்?//

சிலரிடம் தமிழ் தட்டச்சு மென்பொருள் இருக்காது, சிலருக்கு தமிழில் தட்டச்சும் பயிற்சி இருக்காது. அந்த சிலர்கள் அவர்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று விரும்பும் பொழுது ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவர், அவற்றை நான் ஆங்கிலப் புலமை என்று வகைபடுத்துவதில்லை. நீங்கள் காண்டு கொண்டிருக்கும் மருத்துவர் ருத்ரனும் தமிழில் தட்டச்சுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இதை அவர் தன் பதிவிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.

உங்களுக்கு விளக்கம் என்பதற்காக இதை அளிக்கிறேன். இதிலும் மடக்கி மடக்கி கேள்வி கேட்கலாம் என்று தாங்கள் நினைத்தால் தட்டச்சு தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//நாடார்களப்பற்றி போட்டதில் நீங்கள் சரியாக அவர்கள் வரலாற்றையும் வாழ்க்கை முறைகளையும் பற்றித்த்தெரிந்து கொள்ளவில்லை முதலில். எடுத்தேன் கவிழ்த்தேன் என்றுதான் எழுத்கிறீர்கள்.//

நாடார் வராலாறுகளை தாங்களும் தெரிந்து கொள்ள 'அய்யா வைகுண்டர்' வாழ்க்கை வரலாறு குறித்த கற்பக விநாயகம் எழுதிய நூலைப்படிக்கவும்.

//பார்ப்ப்னீயம் பற்றிய உங்கள் பதிவுகளில் ஒரு திடீர் விள்மபரத்துக்கு ஆசைப்பட்டு (சரவ்ணன் போல) எழுதுவ்தாகத்தெர்கிறது.//

சரவணன் யாருன்னு எனக்கு தெரியாது. 'பிரபல பதிவர்கள் பதிவில் பின்னூட்டம் போட்டு பிரபலம் ஆகலாம்' என்று கூட நான் நினைத்தது இல்லை. நான் நீண்ட நாட்களாக எழுதிவருவதால் 90 விழுக்காடு பதிவர்கள் என்னை அறிந்து இருக்கிறார்கள். பதிவுகளே எழுதாத நாட்களில் எட்டிப் பார்த்துவிட்டு செல்வோ நாள் ஒன்றுக்கு 200க்கும் மேலே. ஒரு வலைப்பதிவராக என்னை நான் எப்போதும் முன்னிறுத்திக் கொள்ள தனிப்பட்ட முயற்சி என்று எதுவும் எடுப்பது இல்லை. விளம்பரத்துக்கு பார்ப்பனியம் எழுதுவதைவிட பாலியல் பற்றி எழுதினால் நல்ல கூட்டம் சேரும் என்பது எனக்கு தெரியும். உங்கள் எண்ணம் தவறான ஒன்று என்பதுடன் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தும் முயற்சி என்பதால் புறம் தள்ளுகிறேன்.

//வருணசிரம், இந்து மதக்க்கோட்பபாடுகளில், தீடீரென இந்துத்வாவினர் போல சாட்கீறீர்கள்.
//

ஒரு மதம் தவறு என்பதை மதச் சார்பற்றவனால் மட்டும் தான் குற்றச் சாட்டாகக் கூற முடியும். மற்றவர்களெல்லாம் தன் அழுக்கை மறைத்துக் கொள்ள எதிரியை நோக்கி குற்றம் சாட்டுபவர்கள். இந்து மதம் ஒரு குப்பை என்று ஒரு பகுத்தறிவாளன் எழுதினால் அதை என்னால் ஆமோதிக்க முடியும், அதையே ஒரு மத மாற்றிக் கும்பல் செய்தால் அதை என்னால் எதிர்க்கவும் முடியும். அறிவுரை சொல்லுகிறவன் முதலில் தான் யோக்கியன் என்று நிருபனம் செய்யவேண்டும் என்பதே உளவியல் ரீதியான புரிதல். எனவே பெந்தோகோஸ் கிறித்துவ விளம்பரதாரரான உங்களுக்கு இந்துமதம் பற்றி குறை சொல்ல எந்த ஒரு தகுதியும் இல்லை என்பதை மீண்டும் இங்கே அழுத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

என் பதிவில் பெரியாரும் உண்டு, வள்ளலாரும் உண்டு. போலி பகுத்தறிவுவாதிகளும், ஆன்மிகம் என்ற பெயரில் மதவாதம் பேசுவனும் எனக்கு ஒன்று தான்.

வருண் சொன்னது…

***Jo Amalan Rayen Fernando said...
//Nadars or Thevars, there is no difference for brahmins. They are not brahmins. That is all they care!
//

இந்த இங்கிலீசு எனக்குப் புரியவில்லை. ஆராவது மொழிபெயர்த்தால் நன்று.

பிராமணர்கள் தேவரா நாடாரா என்று சட்டைபண்ணுவதில்லையா? ஏன்?

2:56 AM, April 09, 2010***

என்ன சார் உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுத மட்டும்தான் தெரியுமா?

பொதுவாக பார்ப்பனர்கள் திராவிட சாதி வேற்றுமைப் படுத்துவதில் “இக்னோரண்ட்” ஆக இருப்பாங்க.

அதாவது நாடாரும், தேவரும் அவர்களுக்கு ஒண்ணுதான்.

அவங்க பிறச்சனை வடகலையா தென்கலையா, கோத்ரம் என்ன அது இதுனு அவங்களுக்குள்ள அவங்களுக்கு ஆயிரம் பிரச்சினைனு சொல்ல வந்தேன்.

என் தமிழும் புரியலையா?

திராவடர்களில் ஒரு சிலர் தான் மற்ற திராவிடர்களை அதிகம் டார்ச்சர் பண்ணியதுனு சொல்ல வர்றேன்.

இதுவும் புரியலைனா, கன்னடத்தில் சொல்றேன். அதை கத்துக்கொண்ட வந்து.பொறுமை காக்கவும்:)))

kovi: remove the disable the moderation for some time if you can :)

வருண் சொன்னது…

***Jo Amalan Rayen Fernando said...
வருண,

அப்துல்லா சொன்னதுபோல, நாடார்கள் வைதீககோயில்கள் (பார்பனர்கள் கோயிலக்ள்) நுழைய அனுமதிக்கப்படவில்லை.***

நான் இல்லைனு சொன்னேனா? எதுக்கு இந்த விளக்கம்.

***வருணக்கொளகை மூலம் வந்த சாதிமுறைகளில் நாடார்கள் சூத்திரர்கள்.

வரலாறு உஙகளுக்குச்சார்பாக இல்லை.***

அது 99% பார்ப்பனர்களுக்கே தெரியாது சார். அந்த வித்தியாசம் உங்க சக உயர்சாதி திராவிடர்களுக்குட்த்தான் நல்லாத் தெரியும். அப்துல்லாவிடம் கேட்டுப்பார்க்கவும். அவரும் நான் சொல்வதை ஆமோதிப்பார் என்று ந்ம்புறேன் :)

2:59 AM, April 09, 2010***

கோவி.கண்ணன் சொன்னது…

//I dont understand who are you.//

என்னைப் பற்றி தெரிந்து கொள்ள, எடைபோட உங்களுக்கு தேவை எதுவும் இல்லை. என் எழுத்தின் மீதான விமர்சனங்களை நான் அனுமதிக்கிறேன்.

//Are you a free thinker like me?//

இது பயங்கர காமடி, பெந்தோகோஸ்காரர்கள் ப்ரீ திங்கர்களா ?

Are you a caged thinker with strong prejudices?

//Why are you quick to judge me as a person prejudiced against Hindu relgion?

Be slow.//

நீங்கள் கிறித்துவ மதம் பற்றி புகழ்பாட இந்து மதத்தின் வருணாசிரமத்தைச் சுட்டிக்காட்டுவது மிகவும் பழைய உத்தி, தலித்துகள் கிறித்துவத்திலும் தலித்தாகத்தான் வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை அனைத்து தரப்பும் புரிந்து கொண்டாகிவிட்டது.

பசுவேசம் போட புலி இறைச்சிக்கு ஆசைப்படாமல் இருக்குமா சார் ? உங்கள் இந்து மத விமர்சனங்கள் தவறை சுட்டிக்காட்டும் நட்பு ரீதியான ஒன்று அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

சாதி வெறியென்றால், மற்ற சாதியினரிடம் போய் எங்கள் சாதி உயர்ந்தது எனச் சண்டைபோடுவதுதான். அதை நாடார்கள் செய்தார்களா?

சாதிப்பற்று இருந்து ஒருவருக்கொருவர் கைகொடுத்துத் தூக்கிவிடுவது நல்ல விசயம். அப்படிச்செய்யப்போய்தான் நாடார்கள் உயர்ந்தார்கள்.

பார்ப்பனருக்கும் இந்த நல்ல குணம் உண்டு.//

இந்த பதிவில் சுட்டிக்காட்டுவது நாடார்கள் உயர்ந்தார்களா ? தாழ்ந்தே உள்ளார்களா என்பது பற்றி அல்ல. உயர்சாதி என்ற சொல்லாடல்களை பார்பனர் உட்பட எந்த சாதிக்கும் பொதுவான ஒன்றாக பயன்படுத்தி தவறு செய்யக் கூடாது என்கிற பரிந்துரை மட்டுமே.

குதிரைகளில் தான் நான் உயர்சாதி குதிரைகள் கேள்விபட்டு இருக்கிறேன்.
தொடர்பே இல்லாத ஒன்றைக் குறித்து உங்களால் வளவளவென்று எழுது முடிவது வியப்பளிக்கவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...

சாதிப்பற்று வேறே, சாதி வெற் வேறே.//

சார் நீங்க சாதிப் பற்றினால் சாதிக்கு ஆதரவாக தீப்பந்தம் புடிக்கிறிங்க, அப்போது எதிர்பாராவிதமாக அங்கே வேறொரு சாதிக்காரனால் கலவரம் வருது, உடனே உங்க தீப்பந்ததை தூக்கி அந்த மாற்று சாதிக்காரன் குடிசை மீது போட்டு எரிங்கடா அந்த குடிசையை என்று முழங்குறிங்க. ஒரே ஆளுதான் நீங்க தீப்பந்தம் ஏந்தும் போது நீங்கள் சாதிபற்றுடன் இருக்கிறீர்கள், அதைத் தூக்கி எதிர்த்தவீட்டு குடிசை மீது போடும் போது சாதிவெறியனாக மாறிவிடுகிறீர்கள், உங்கள் சாதிபற்று சாதிவெறியாக மாற ஒரே ஒரு சின்ன நிகழ்வுதான் தேவைப்படுது.

சாதி/மதப் பற்றும் சாதி/மதவெறியும் வேறு வேறு என்கிற வரட்டு வாதங்களை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள்.

// தன் சாதிக்குள்ளேயே மணமுடித்தால் மற்றவருக்கு என்ன சங்கடம்?//

கிறித்துவ டோண்டு சார், நான் அதைத் தவறு என்றோ, தவறு இல்லை என்றோ சொல்லாத போது, வாயைக் கிளறாலம் என்ற வகையில் கேட்கும் உங்கள் கேள்வியை புறம் தள்ளுகிறேன்.

// நாடார்களுக்கு சுயமரியாதை உண்டு. அதனாலேயே அவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்தார்கள்.//

இப்ப இதெல்லாம் இல்லைன்னு இங்கே யார் சொன்னது. உங்கள் மடக்கு கேள்விகள் அந்த காலத்து உத்தியாக இருக்கு, புதிதாக முயற்சிக்கவும். நெக்ஸ்ட் நெக்ஸ்ட்.

// பார்ப்பன்ர்கள் இவர்களை கீழ்சாதி எங்கள் கிருஸ்ணர் சொன்னர்ர் என்று சொன்னால் நாடார்கள் சட்டை பண்ணுவ்தில்லை. அது பார்ப்பனர்கள் வேலை. அவர்கள் மதம்.//

பார்பனர்கள் சொல்கிறார்களோ இல்லையோ....பார்பனர்கள் சொல்வார்கள் என்று நீங்களே பலமுறை சொல்லிப் பார்க்கிறீர்கள்.

// இவர்களைப்போல தலித்துகலும் இருந்தால் தலித்துகல் மேனிலையடைவர்கள் என்கிறார் அபுதுல்லா. அதுவே என் கருத்துமாகும்.//

அப்துல்லா சொல்வது சாதிய மேல்நிலை அல்ல, பொருளாதார மேல்நிலை. மேல் சாதி என்கிற ஒன்றே மாயை என்னும் போது மேனிலை அடைதல் என்றால் என்ன ?

// கோவி கண்ணன் நாடார்கள் பொருளாதார நிலையில் உயரக்கூடாதென்கிறரா? அவர் பதிவு நாடார் சமூகத்தைப்பற்றி ஒன்றும் சரியாகப் புரிந்த மாதிரி தெரிய்வில்லை. நாடார்களின் பூர்வீகம் தென்மாவட்டங்களே. அதை என் இன்கீலீசூ பதிலில் தெளிவாகச்சொன்னேன். இங்கே மறுபடியும் தமிழில் எழுத்லாமா?//

இதற்கு நான் திட்டி பதில் அளிக்க மனது சங்கடமாக இருக்கிறது. சொல்லாத ஒன்றை சொல்லியது போல் காட்டி மறுபடியும் எனது பதிவை திரிக்க முயற்சிக்கும் உங்களின் இந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் புறம் தள்ளுவது தான் எனக்கு சரியாகப்படுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வருண் said...

அண்ணே ஜோ அமலன், நாடார் சங்க பிரதினிதி போல தோனுது! :)))//

நல்லா இருக்கட்டும், நீங்கள் சொன்னதை அவரும் மறுத்தது போல் தெரியவில்லை.

அவர் ஒரு கிறித்துவ மதப் பற்றாளர், பரப்பாளர், இந்துமத எதிர்பாளர் என்பது மட்டுமே அவர் பின்னூட்டம் வழியாக அறிந்து கொள்ளமுடிகிறது. அதை வருணாசிரம் எதிர்ப்பு, தலித் (பரலோக)விடுதலை என்கிற பழைய கிறித்துவ பாணியில் செயல்படுகிறார். தலித் கிறித்துவர் கிறித்துவத்தில் தொடர்கிறார்களே என்று கேட்ட எனது கேள்விகளுக்கு அவர் பதில் சொல்வதில்லை.

priyamudanprabu சொன்னது…

ஒரு பிரிவினரை உயர்சாதி என்று குறிப்பிடும் போதே அதில் இல்லாதவர்கள் தாழ்ந்த சாதி என்கிற பாகுபாட்டை ஏற்படுத்திவிடும்.
///

அதே அதே

priyamudanprabu சொன்னது…

திரும்பவுமா??

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏனெனின், மதங்கள் மக்களுக்கு க்டவுள், வழிபாட்டுமுறைகள் என்று மட்டும் நில்லாமல், ஒரு வாழ்க்கை முறையயும் நல்கின்றன. கடவுள், வழிபாட்டு முறைகளும், க்லாச்சார உருவாகக்காரணிகளாகும்//

அதைத்தான் கலாச்சார திணிப்பு அல்லது கலாச்சார அழிப்பு எனப்படுகிறது. மதம் என்கிற பெயரில் பண்பாடு மற்றும் அடையாள அழித்தலைத்தான் பல்வேறு மதச்சார்ப்பு கும்பல்களும் செய்துவருகின்றன. அரபு கலாச்சாரத்தின் தாக்கம் இல்லாமல் ஒரு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர் இருக்க முடியாது, அதுவே ஒரு கிறித்துவனுக்கும் பொருந்தும். உங்களால் எப்படி தலைகீழாக நின்றாலும் கிறித்துவ தலைமை ஏற்கும் அளவுக்கு உங்களை வளரவும் விடமாட்டார்கள், உங்கள் தலைமையையும் அவர்கள் ஏற்கப் போவதில்லை. வாடிகனாக இருந்தாலும் சரி செயின்ட் பால் சர்சாக இருந்தாலும் சரி, வெள்ளைக்காரனுக்கு கீழே தான் நீங்கள். உங்கள் அடையாளத்தை அழித்துக் கொண்டு அவன் முன்னால் நிற்கிறீர்கள், அது அவனது வெற்றி.
இதை மாற்றம் என்பதா தடுமாற்றம் என்பதா ?

//தலித்துகலுக்கு இசுலாமே பெருநன்மை பய்க்கும் மதமாகும். ஒரு தலித்தான்வர்ன் இசுலாமியனாகும் போது, அவர் இசுலாமிய சகோதர சபையின் உறுப்பின்னாக ஆகிவிடுவான். அவன் தன்னை இசுலாமியன் என பெருமை பட்டுக்கொள்ளலாம். எல்லாருக்கு ஒரேவிதமான மதக்கட்டுப்பாடுகள் வ்ரைமுறைகள். இப்படி அனைவருள் ஒருவனாக அவன் ஆகி விடுவதால், அவனுக்கு தானும் எல்லாரையும் போல்வே என்ற ஒரு தன்னம்பிக்கை, தன் மதிப்பு உண்டாகிறது.//

ஹைதர் அலி என்பவன் குண்டுவைத்தான் என்பதற்காக பிடித்து என்கவுண்டரிலும் போட்டார்கள் அந்த ஹைதர் அலி தலித்தாக இருந்து இஸ்லாமியராக மாறியவன் தான். குண்டு வைக்கும் அளவுக்கு மூளை சலவை செய்யப்பட்ட இளைஞர்களின் பூர்விகம் பார்க்கனும். அப்போது மதம் மாறிய தலித்துகள் எந்த வகையில் அங்கு பயன்படுத்தப்படுகிறார்கள் என்பது விளங்கும், இது தான் நீங்கள் சொல்லும் நல்ல நிலைமை மற்றும் மதிப்பு.

//கிருத்துவமும் ஆளுக்கொரு, கூட்டத்துக்கொரு என்று மத வரைமுறைகள் வைத்துக்கொள்ளவைல்லை. இந்து மதத்தில் பிராமணருக்குத்தான் உப்நயனம். ஒரு எ.கா. மற்றவருக்கில்லை. ஆனால் கிருத்துவத்தில் ஞானஸ்னானம் என்பது எல்லாருக்கும் சிறுவயதில்////

மத்த சாதிக்காரன் பூணூல் போடுவதை எந்த ஒரு பார்பானும் தடுத்தது போல் தெரியவில்லை. பூணூல் போட்டுக் கொள்வதை அவர்கள் ஒரு பழக்கமாக பின்பற்றுகிறார்கள். இராபர்ட் கால்டுவெல்லைக் கூட ஐயர் என்று அழைத்தை அவர்கள் எதிர்க்கவில்லையே. உங்களுக்கு பூணூல் போட்டுக் கொள்ள விருப்பம் இருந்தால் போட்டுக் கொள்ளலாம் எந்த பாப்பானும் தடுக்கமாட்டான் என்றே நினைக்கிறேன்.

priyamudanprabu சொன்னது…

வழக்கம் போல பதிவை விட பின்னீட்டம் நீண்டுகிட்டே போகுது

dondu(#11168674346665545885) சொன்னது…

dondu(#11168674346665545885) said...
கோவி.கண்ணன் has left a new comment on your post "நீயும் நானும் திருநெல்வேலிச் சைவப் பிள்ளைமார் வகு...":

//கீதையில் வர்ணங்களை தானே உருவாக்கியதாக கூறிய கிருஷ்ணர் யாதவர்.//

தகவல் பிழை, வருணத்திற்கு ஆதாரம் கீதை, எனவே கீதைக்கு வெளியே சொல்லும் உதாரணத்தைவிட கீதையினுள்ளே சொல்லும் உதாரணம் தான் சரியாக இருக்கும்.

அதே கீதையில் தான் எல்லாவற்றிலும் உயர்ந்ததில் தான் இருப்பதாக அடையாளப்படுத்தும் கிருஷ்ணன், பாண்டவர்களில் நான் அர்ஜுனன், வருணத்தில் என்னுடைய வருணம் 'பிராமணன்' என்பான், நான் வைசியன் என்று கூறவில்லை.

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

மேலே வந்த பின்னூட்டத்தை அனுமதித்தும் பிளாக்கர் சொதப்புவதால் எனது தரப்பிலிருந்து வெளியிடுகிறேன்.

@கோவி கண்ணன்
வர்ணங்களில் தன்னை பிராமணன் என கிருஷ்ணர் கூறிக்கொண்டதாக நீங்கள் சொல்வது எனக்கு புதிய தகவல். எந்த காண்டக்ஸ்டில் அவர் கூறினார் என்பதும் புரியவில்லை.

ஆனால் அவர் உண்மையிலேயே யாதவர் என்பதில் எந்தத் தகவல் பிழையும் இல்லை. ஒரு வேளை வர்ணரீதியான பிராமணனை அவர் உயர்த்தினார் என்று வேண்டுமானால் வைத்து கொள்ளலாம். அதுகூட அனுமானமாகத்தான் கூறுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

April 09, 2010 8:14 AM
மன்னிக்கவும் கோவி கண்ணன். உங்கள் பின்னூட்டத்தை நான் அனுமதித்தும் பிளாக்கர் எனது அப்பதிவில் வெளியிடவில்லை, சொதப்புகிறது. ஆகவே நானே அதை அங்கு வெளியிட்டும் கமெண்ட் பக்கத்தில் மட்டும் எனது பின்னூட்டம் வருகிறது, ஆனால் பதிவில் மேலோட்டப் பார்வையில் படவில்லை.

இங்கே இப்பின்னூட்டம் உங்கள் புரிதலுக்காகவே தரப்படுகிறது. வெளியிடல் அவ்வளவு அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

கோவி.கண்ணன் சொன்னது…

Kesavan has left a new comment on your post "அண்ணாச்சிகள் உயர்சாதிக்கு மாறிவிட்டார்களா ?":

//உங்களுக்கு பூணூல் போட்டுக் கொள்ள விருப்பம் இருந்தால் போட்டுக் கொள்ளலாம் எந்த பாப்பானும் தடுக்கமாட்டான் என்றே நினைக்கிறேன்.//

யாரும் தடுக்க மாட்டார்கள் . ஏன்? எதற்கு தடுக்க வேண்டும் ? இன்றைய நாட்களில் பிராமணர்கள் அல்லாத ஆனால் வைணவ, சைவ சமயங்களில் நம்பிக்கை உள்ள மற்ற சாதியினர் பூணுலை மற்றும் நாமம் அல்லது திருநீறு ணிந்து கோவில்களுக்கு வருகிறார்கள் . இதை யாரும் தடுப்பதில்லை .

கோவி.கண்ணன் சொன்னது…

Jo Amalan Rayen Fernando has left a new comment on your post "அண்ணாச்சிகள் உயர்சாதிக்கு மாறிவிட்டார்களா ?":

//பொதுவாக பார்ப்பனர்கள் திராவிட சாதி வேற்றுமைப் படுத்துவதில் “இக்னோரண்ட்” ஆக இருப்பாங்க.


அதாவது நாடாரும், தேவரும் அவர்களுக்கு ஒண்ணுதான்.

அவங்க பிறச்சனை வடகலையா தென்கலையா, கோத்ரம் என்ன அது இதுனு அவங்களுக்குள்ள அவங்களுக்கு ஆயிரம் பிரச்சினைனு சொல்ல வந்தேன்//

பார்ப்பனர்கள் தமிழகத்தில் தொல்பழங்காலத்திலிருந்தே வாழ்கிறார்கள். அவர்கள் அ-பாப்பனருடன் பொது வாழ்க்கையில் சேர்ந்தே வாழ்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அனைவருடன் வாழும் பார்ப்பனரை, தேவருக்கும் நாடாருக்கும் வேறுபாடறியாதவர்கள் எனச்சொல்வது நம்ப முடியுமா?

நாடாரும் தேவரும் ஒன்றல்ல என்று அவர்களுக்குத் தெரியும். நாடாரை சூத்திரன் எனவும் தேவரை சத்திரியன் என வகைப்படுத்தி, தேவர்களால் இந்து மதத்தை - வைதீக மதத்தை - தமிழ் மக்களிடம் நிலைபடச் செய்தவர்கள்.

தேவர்கள் மட்டும் அக்காலத்திலேயே பார்ப்பனருக்கு எதிராக இருந்து தமிழ் தொல் இறைவணக்கத்தைப் பலப்படுத்தியிருந்தால் இன்று தமிழக வரலாறு மாறியிருக்கும்.

வருணுக்கு கள்ளர் ஜாதியைச் சேர்ந்த கலியனைத் தெரியுமோ? அவரைப்பார்ப்பனர்கள் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறார்கள்.

தேவருக்கும் பார்ப்பனருக்கும் எப்போதும் நெருக்கமுண்டு. நாடார்கள் அரசர்கள் அல்ல. என்வே பார்ப்பனருக்கு தேவையில்லை. நான் வரலாற்றைச் சொல்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//தேவர்கள் மட்டும் அக்காலத்திலேயே பார்ப்பனருக்கு எதிராக இருந்து தமிழ் தொல் இறைவணக்கத்தைப் பலப்படுத்தியிருந்தால் இன்று தமிழக வரலாறு மாறியிருக்கும்.//

ஐயா என்ன சொல்லவர்றாரு தாம் கிறித்துவர்களாக மாறி இருக்கமாட்டோம் என்கிறாரா ?

//வருணுக்கு கள்ளர் ஜாதியைச் சேர்ந்த கலியனைத் தெரியுமோ? //

அவருக்கு சொறியனைப் பற்றிக் கூடத் தெரியாது என்றே நினைக்கிறேன்.

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//அதாவது நாடாரும், தேவரும் அவர்களுக்கு ஒண்ணுதான்.

//

யாரு சொன்னது?? சில ஆண்டுகளுக்கு முன் தென்மாவட்டத்தில் நடந்த சாதிக் கலவரத்தின் மூலத்தை அறிய ஒரு அரசு விசாரணைக் குழு சென்றது. அதில் இடம்பெற்றவர்களில் ஒரு பிரபலமான பிராமண அதிகாரியும் இருந்தார்.அப்போது அந்த அதிகாரி உயர்சாதிக்காரர்களிடம் ”என்னய்யா பிரச்சனை? எதுக்குய்யா இப்படி நடந்துக்குறீங்க?” என்று கேட்கிறார். அதற்கு அந்த சாதிச் சங்கத் தலைவர் “சாமி நாங்க இன்னைக்கும் உங்களுக்கு(பிராமணர்களுக்கு) மரியாதை குடுக்குறோம்ல!அய்யாங்குறோம்ல! அப்ப அது மாதிரி அவிங்களும் எங்களுக்குச் செய்யணுமா?” இல்லையா?” என்று பதில் கேள்வி கேட்டார்.

பெயரில்லா சொன்னது…

//அப்துல்லா சொல்வது சாதிய மேல்நிலை அல்ல, பொருளாதார மேல்நிலை. மேல் சாதி என்கிற ஒன்றே மாயை என்னும் போது மேனிலை அடைதல் என்றால் என்ன ?
//

அப்துல்லா எழுதியதை மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு வாருங்கள்.

சமூக இழினிலை அவர்களுக்கு இருந்தன் என்று சொல்லி விளக்குகிறார்:

பெண்கள் இரவிக்கை போடக்கூடாது
மார்ப்கம் வெட்டப்படுதல்
கோயில் நுழைவு மறுக்கப்படுதல்.

இப்படிப்பட்ட இழினிலைகளிலிருந்த நாடார்கள் தங்கள் பொருளாதார வளத்தைப்பெருக்கி உயர்ந்தார்கள். மதமாற்றம் அதைச்செய்யவில்லை.

தலித்துகளும் இந்த பாடத்தைப் படித்துக்கொள்ளவேண்டும் என்றார் அப்துல்லா.

இதற்கு என் பதில். இப்படிப்பட்ட சமூக இழினிலையை மத மாற்றத்தால் மாற்றமுடியும் என்பதே. தலித்துகள் இசுலாத்துக்குப்போனால் என விளக்கி, மீனாட்சிபுரம் தலித்துகளை எடுத்துச்சொன்னேன்.

அவர்கள் பொருளாதாரா நிலை மாறவைல்லை. இன்னும் கூலித்தொழிலாளிகள்தான். ஆனால் இன்று அவர்களை ஆரும் கேலியோ, அவமானமோ சாதியைச்சொல்லி, அல்லது அவர்கள் வீட்டையோ கொளுத்தவோ முடியாது. அவர்கள் இப்போது முசுலீம்கள.

இசுலாம் இழினிலை மாற்றியதா இல்லையா?

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

இசுலாம் இழினிலை மாற்றியதா இல்லையா?

//

நிச்சயம் மாற்றி இருக்கு. மீனாட்சிபுரத்தில் தலித்துகள் இஸ்லாம் சென்றால் தங்கள் இழிநிலை மாறும் என்பதை 100% உணர்ந்தே, தெரிந்தேதான் மாறினார்கள்.

ஆனால் நாடார்கள் கிருத்துவதுக்கு மாறியது இழிநிலைக்காக அல்ல என்பதே என்வாதம். நாடார்களின் ஆரம்ப மதமாற்றம் என்பது இறைநிலை தேடிய மனமாற்றம் என்றே நினைக்கின்றேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...
சமூக இழினிலை அவர்களுக்கு இருந்தன் என்று சொல்லி விளக்குகிறார்:

பெண்கள் இரவிக்கை போடக்கூடாது
மார்ப்கம் வெட்டப்படுதல்
கோயில் நுழைவு மறுக்கப்படுதல்.

இப்படிப்பட்ட இழினிலைகளிலிருந்த நாடார்கள் தங்கள் பொருளாதார வளத்தைப்பெருக்கி உயர்ந்தார்கள். மதமாற்றம் அதைச்செய்யவில்லை.

தலித்துகளும் இந்த பாடத்தைப் படித்துக்கொள்ளவேண்டும் என்றார் அப்துல்லா.

//இதற்கு என் பதில். இப்படிப்பட்ட சமூக இழினிலையை மத மாற்றத்தால் மாற்றமுடியும் என்பதே. தலித்துகள் இசுலாத்துக்குப்போனால் என விளக்கி, மீனாட்சிபுரம் தலித்துகளை எடுத்துச்சொன்னேன்.

அவர்கள் பொருளாதாரா நிலை மாறவைல்லை. இன்னும் கூலித்தொழிலாளிகள்தான். ஆனால் இன்று அவர்களை ஆரும் கேலியோ, அவமானமோ சாதியைச்சொல்லி, அல்லது அவர்கள் வீட்டையோ கொளுத்தவோ முடியாது. அவர்கள் இப்போது முசுலீம்கள.

இசுலாம் இழினிலை மாற்றியதா இல்லையா?//

ஆமாம் ஆப்ரிக்க இஸ்லாம் நாடுகள் எல்லாம் கொழிக்குது. அவர்கள் நிலையெலலம் உயர்ந்துவிட்டது. கிறித்துவத்தில் தலித்துகள் இருக்கா இல்லையான்னு கேட்டால் செட்டியார் பருப்பு கேட்டவருக்கு பதில் நெய் இருக்குன்னு சொல்லுவாராம். எதையும் இல்லைன்னு நேரடியாக சொன்னால் கவுரவ குறைச்சலாம்.

பொருளாதார மாற்றத்தை மதம் மாறியதால் ஏற்படுத்த முடியும் என்று உங்களால் சொல்ல முடியாது. நானும் இந்த பதிவில் அப்துல்லா சொன்ன பொருளாதார முன்னேற்ற்றம் ஒரு சமூகத்தை முன்னேற்றும் என்றே சொல்கிறேன். இது பற்றி நான் ஏற்கனவே குறிப்பாக தலித் மற்றும் நாடார்கள் பற்றி வேறொரு பதிவில் எழுதியும் உள்ளேன்.

வா... அங்க பிச்சை எடுப்பதற்கு பதிலாக என்கூட சேர்ந்து பிச்சை எடு என்பது தனிமனிதனை கவுரவப்படுத்துகிறதா ? தனிமனிதனுக்கு மதமாற்றம் எந்த அளவில் உதவி இருக்கிறது. அது உண்மை என்றால் 80 விழுக்காடு இந்துக்கள் என்றோ கிறித்துவத்திற்கும் இஸ்லாமிற்கும் மாறி இருப்பார்கள். மதமாற்றுபவர்களுக்கு ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், படிக்காதவர்கள் தான் குறி.
80 விழுக்காடு இந்தியர்களில் 40 விழுக்காடு கண்டிப்பாக ஏழைகள் தான் ஏன் நீங்கள் குறிப்பிடும் சமூக அந்தஸ்தை ஏன் விரும்பவில்லை ? ஒருவன் பொருளாதாரத்தில் முன்னேறினால் சமூக அந்தஸ்துக்கு கெஞ்சவேண்டியதில்லை என்று புரிந்து வைத்திருக்கிறார்கள். பாப்பான் பரிவட்டம் கட்டி ஒருவருக்கு மரியாதை செய்யும் போது அவன் எந்த சாதி என்று பார்ப்பது இல்லை, அவன் வசதியானவன் கோவிலுக்கு செய்கிறான் என்று இருந்தாலே போதும் அவனுக்கு பரிவட்டம் கிடைக்கும்.

பெயரில்லா சொன்னது…

//ஐயா என்ன சொல்லவர்றாரு தாம் கிறித்துவர்களாக மாறி இருக்கமாட்டோம் என்கிறாரா ?
//

ரொம்பவும் கஸ்டப்படாதீர்கள். இந்து என்ற நிலையிலிருந்து பார்க்கும் போது கோபம் வரத்தான் செய்யும்.,

எனவே ஒரு தமிழகச்சமூகத்தின் பார்வையாளன் என்ற நிலயெடுக்கும்போது, கோபம் வராது. என்ன கருத்துகள் என்றுதான் பார்ப்பீகளே தவிர, என்ன உள்ளோக்கம் என மண்டையை உடைத்துகொள்ள மாட்டீர்கள். அது மதவெறியாளருக்கு. உங்களுக்கு ஏன்?

தென்மாவட்ட நாடார்கள், தேவர்கள் என்பதெல்லாம் பெரிய சப்ஜக்ட். பி கூல் அண்ட் அர்க்யு.

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.எம்.அப்துல்லா said...
இசுலாம் இழினிலை மாற்றியதா இல்லையா?

நிச்சயம் மாற்றி இருக்கு. மீனாட்சிபுரத்தில் தலித்துகள் இஸ்லாம் சென்றால் தங்கள் இழிநிலை மாறும் என்பதை 100% உணர்ந்தே, தெரிந்தேதான் மாறினார்கள்.
//

ஆனால் அவர்கள் எந்தவிதத்திலாவது சமூகத்தில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களது அடுத்த தலைமுறையில் தான் அறிந்து கொள்ள முடியும். ஆளைக் குறிப்பிட்டு 'அவன் பறையனாக இருந்து மாறிவந்தவன்' என்று ஒரு தலைமுறை வரை இஸ்லாமியர்களால் சொல்ப்படுவதை என் காதால் கேட்டு இருக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ரொம்பவும் கஸ்டப்படாதீர்கள். இந்து என்ற நிலையிலிருந்து பார்க்கும் போது கோபம் வரத்தான் செய்யும்.,//

இந்துவும் இல்லை பொந்துவும் இல்லை. மதம் பற்றிய கோவம் - அதெல்லாம் உங்களைப் போன்ற சுவிசேச கூட்டக்காரர்களுக்கும், இந்துத்துவியாதிகளுக்கும் வருவதாகும்

//எனவே ஒரு தமிழகச்சமூகத்தின் பார்வையாளன் என்ற நிலயெடுக்கும்போது, கோபம் வராது. //

அது என்ன தமிழ் சமூகத்தின் பார்வையாளன் ? அமலராயன் பெர்னாண்டோ என்கிற கிறித்துவ மதப்பற்றாளரின் சிந்தனை குறித்த சொல்லா ?

//என்ன கருத்துகள் என்றுதான் பார்ப்பீகளே தவிர, என்ன உள்ளோக்கம் என மண்டையை உடைத்துகொள்ள மாட்டீர்கள். அது மதவெறியாளருக்கு. உங்களுக்கு ஏன்?//

உங்க கதையெல்லாம் எவனாவது இந்து மதத்தை மட்டுமே திட்டவேண்டும் என்று ஒருபக்க மதச் சார்பு கொள்கை வைத்திருக்கிறவனிடம் சொல்லுங்க. என்னைப் பொருத்த அளவில் மதவெறியாளன் மதப்பற்றாளன் எல்லாம் ஒரே ஆளுங்க தான்.

//தென்மாவட்ட நாடார்கள், தேவர்கள் என்பதெல்லாம் பெரிய சப்ஜக்ட். பி கூல் அண்ட் அர்க்யு.
//

சாதிவெறி சப்ஜெக்ட் அதைத் தானே இங்கே விமர்சனம் செய்யப்படுகிறது. உங்களுக்கு வேண்டுமானால் பயம் இருக்கலாம் எனக்கெலலாம் இல்லை. சாதி வெறியன் என்றால் எல்லா சாதிகாரா நாய்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்

பெயரில்லா சொன்னது…

//ஆனால் நாடார்கள் கிருத்துவதுக்கு மாறியது இழிநிலைக்காக அல்ல என்பதே என்வாதம். நாடார்களின் ஆரம்ப மதமாற்றம் என்பது இறைநிலை தேடிய மனமாற்றம் என்றே நினைக்கின்றேன்//

Acute observation. ஆழ்பார்வை. பாராட்டுககள்.

இதை வருணின் முதல் பின்னூட்டத்தோடு ஒப்பிட்டுப்பார்த்தால் தெரியும்,

நாடார்களின் ஒரு குணக்கூற்றை அவர் சொல்கிறார்.

நாடார்கள் சாதிமுறையைப்பற்றி அலட்டிக்கொள்ள்வைல்லை. பிராமணனைப்பற்றி சட்டையே பண்ணவில்லை. இதற்கு ஒரு நுண்ணிய காரணம் அவர்கள் வாழுமிடத்தில் பார்ப்பனர்கள் குறைவு.

தலித்துகள் நிலை வேறு. அவர்க்ள் தம்ழிகத்தில் மற்ற ஜாதிய்னருடனும், குறிப்பாக பார்ப்பனர்கள் வாழிமிடங்களுடனும் இருந்த, சாதிய இழினிலையை நேராக அனுபவித்தவர்கள். மேலும் தாங்கள் கீழ்சாதி யென்ற மூளைச்சலவையை ஏற்றுக்கொண்டாரகள்.

இருப்பினும், அப்துல்லா, இராபர்ட் கால்டுவெல்லின் கிருத்துவ மிசன் சானார்கள் என அழைக்கபட்ட நாடார்களிடம் செய்யப்பட்ட போது, அவர் இந்து மதத்தில் ஜாதீய இழினிலக்கு நாடார்கள் ஆளானதாகவும் அவர்களிடம் சொன்னார்.

Caste was always one of the armomours in missionary activities throughout India.

பெயரில்லா சொன்னது…

//ஆனால் அவர்கள் எந்தவிதத்திலாவது சமூகத்தில் முன்னேறி இருக்கிறார்கள் என்பதை அவர்களது அடுத்த தலைமுறையில் தான் அறிந்து கொள்ள முடியும். ஆளைக் குறிப்பிட்டு 'அவன் பறையனாக இருந்து மாறிவந்தவன்' என்று ஒரு தலைமுறை வரை இஸ்லாமியர்களால் சொல்ப்படுவதை என் காதால் கேட்டு இருக்கிறேன்//

இந்துத்வாவினர் சொல்வது.

அப்படியெல்லாம் இசுலாமியர் சொல்வது கிடையாது.

ஆனால் discrimiantion செய்தல், வாழுமிடம், தொழில், பொருளாதார நிலை வைத்து உண்டு.

அதை எல்லாருமே செய்வார்கள்.

பணக்கார இசுலாமியர் ஒரு மீனைப்பிடித்து விற்கும் கூலிக்கார இசுலாமியனின் பெண்ணைத் தன்மகனுக்கு பார்க்கமாட்டார்.

எல்லாரும் அதைச்செய்வது இயற்கைதானே.

பணகார பார்ப்பன்ர் பிணந்தூக்கும் பார்ப்பனரிடம் சம்பந்தம் பேசுவாரா?

பணக்கார தலித்து, ஒரு ஏழை தலித்தை தன்விட்டு சோப்பவில் உட்கார வைப்பாரா?

ஜாதித்துவேசம் வேறு. மற்ற துவேசங்கள் வேறு.

பெயரில்லா சொன்னது…

//பாப்பான் பரிவட்டம் கட்டி ஒருவருக்கு மரியாதை செய்யும் போது அவன் எந்த சாதி என்று பார்ப்பது இல்லை, அவன் வசதியானவன் கோவிலுக்கு செய்கிறான் என்று இருந்தாலே போதும் அவனுக்கு பரிவட்டம் கிடைக்கும்.//

வசதியானவன் தலித்து. அவன் அரசியல்வாதி என்றால் பயத்தில் செய்வார்கள்.

ஆனால் அவன் சென்றபின் கழுவி விட்டுக்கொள்வார்கள். ஜகஜீவன் ராம் பனாரஸ் பல்கலைக்கழக விழாவுக்குச் சென்று திரும்பியபின் உயர்ஜாதி மாணவர்கள் சுத்தபரிகாரம் செய்த்து ரொமப் பிர்சித்தம்.

மற்றபடி, தலித்துக்குப் பரிவட்டம் போடுவதில்லை.

கோயில் முறைகளில் தலித்துகள் நுழைவு மட்டும்தான் கொடுக்கப்பட்டதே தவிர - அதுவும் கூட அரசுக்குப்பயந்துதுதான் - ஜாதியமுறையில் இன்னும் கீழ்சாதியினரே.

பெயரில்லா சொன்னது…

//பொருளாதார மாற்றத்தை மதம் மாறியதால் ஏற்படுத்த முடியும் என்று உங்களால் சொல்ல முடியாது//

சொல்லிவிட்டேன். அதுவும் மறைமுகமாக நிகழும். முதலில் ஒருவன் பொருளாதார நிலை உயர்வதற்கு அவனது ஆளுமை மிக முக்கியம்.

மதங்கள் ஆளுமையும் தரும்.

பெயரில்லா சொன்னது…

சாதிப்பற்றுக்கும் வெறிக்கும் வேறுபாடில்லை என்கிறார் கண்ணன்.

சாதிப்பற்று வெறியாகலாம் மனமுதிர்ச்சியடையாதவரிடம்.

கத்தியைக்குழந்தை கையில் கொடுத்தால்..?

அதைப்போல,

தன் சாதியன்ருக்கு உதவுவது, தன் சாதியிலே மணம் செய்வது எல்லாம் சாதி வெறியல்ல.

பெயரில்லா சொன்னது…

சுவிசேசக்காரன்,எல்லாரையும் கிருத்த்வனாக்க முயல்பவன் என்றெல்லாம் எழுதித்தள்ளுகிறார் கண்ணன். இந்துக்காழ்ப்புணர்ச்சி யெனாக்கு என்கிறார்.

அப்படி ஒன்றுமில்லை.

இருந்தால், சரசுவதியின் ஹுசேனின் படம் இந்துக்களப்புண்படுத்தும் என ருத்ரனிடம் எதிர்வாதம் வைப்பேனா?ஏன் அந்தப்படம் அசிங்கம் என்றும் விளக்கியிருப்பேனா?

பார்ப்பனியம் வெறுப்பானது wholesale என்பவரிடம் அப்படியல்ல அது அழகானது. அதன் ஒரே புண் வருணக்கொள்கை என தனியே ஒரு பதிவு போடுவேனா?

கிருத்துவ சுவிசேசக்காரனும் ஏன் இசுலாத்தின் மீது காதல்?

தலித்துகலை கிருத்துவத்துக்குப்போகாமல் இசுலாத்துக்குப்போனால் நலம் என்று சொல்வேனா?

இதற்காக நான் ஒரு முசுலீமா?

நான் ஒரு பொதுபார்வையாளன்.

என் பார்வை உங்களை இடிக்கும்போது, எனக்குப்பட்டம் சூட்டுகிறீர்கள். இல்லாதபோது மற்றவர்கள் பட்டம் சூட்டுகிறார்கள்.

General behavior in our society.

பெயரில்லா சொன்னது…

Good bye

Kesavan சொன்னது…

//வசதியானவன் தலித்து. அவன் அரசியல்வாதி என்றால் பயத்தில் செய்வார்கள்.//
ஆமாம் இவர் தான் வந்து அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தார் . இன்றைய பார்பனர்கள் பொதுவாக எல்லாரையும் மதிகதான் செய்கின்றார்கள் . உங்களை மாதிரி மற்றவர்களை பாவிகளே என்று இன்றைய பார்பனர்கள் சொல்வதில்லை,

Kesavan சொன்னது…

//நாடார்களின் ஆரம்ப மதமாற்றம் என்பது இறைநிலை தேடிய மனமாற்றம் என்றே நினைக்கின்றேன் //
நிச்சயமாக இல்லை . அவர்களின் வறுமையை பயன் படுத்தி அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை மாற்றுகிறார்கள் . அவர்களும் தம்முடைய வறுமை தீர்ந்தால் போதும் என்று தன்னுடைய குழந்தையின் பசியை போக்கினால் போதும் என்று அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப தொகைக்கு மதம் மாறுகிறார்கள் .

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருத்துவ சுவிசேசக்காரனும் ஏன் இசுலாத்தின் மீது காதல்?//

தாய்மதத்துக்காரர்கள் குழந்தைக்கு மதத்துக்கு சப்போட்டுக்கு வரமாட்டார்களா ? அவ்வ்

ஒரு இஸ்லாமிய ஆணுக்கு கிறித்துவ பெண்ணை திருமணம் முடிக்க மத்தில் தடை விலக்கப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் உங்க நோக்கம் இந்து மதத்தை அழிக்க ஆப்ரகாமிய மதங்களை முன்னிறுத்துவது அவ்வளவு தானே அதை பச்சையாக என் வாயல சொல்லனும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கத்தியைக்குழந்தை கையில் கொடுத்தால்..?
//

மதம் / சாதி என்பது கத்தி என்று ஒப்புக் கொண்டதற்கு நன்றி

கோவி.கண்ணன் சொன்னது…

// Jo Amalan Rayen Fernando said...


மதங்கள் ஆளுமையும் தரும்.
//

மதங்கள் ஆளுமை மட்டுமே தராது அரசையும் சேர்த்து தரும் அதை யாரிடமாவது பிடுங்கி தரும், ஆனால் யாருக்கு ? அந்த மதத்தை முன்னிறுத்துபவர்களுக்கு பின்பற்றுபவர்களுக்கு இல்லை. ஏழைக்கு எந்த மதமும் உதவியதில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//நாடார்களின் ஆரம்ப மதமாற்றம் என்பது இறைநிலை தேடிய மனமாற்றம் என்றே நினைக்கின்றேன்.//

அப்து தம்பி,

அப்ப மாறாதவர்களுக்கெல்லாம் இறை வேட்கையே இல்லைன்னு நான் எடுத்துக் கொள்ளனுமா ?

மாறிய நாடார்கள் எல்லோரும் பெரியார் தாசன் அளவுக்கு இறைவேட்கையுடன் இருந்திருப்பார்கள் என்று நான் நம்புவதில்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//Jo Amalan Rayen Fernando said...
Good bye
//

நன்றி.
தம் முதுகில் அழுக்கை வைத்துக் கொண்டு அடுத்தவன் அழுக்கை சுட்டிக்காட்டி கொக்கறிக்கலாம் என்போருக்கு நான் இப்படித்தான் பதில் அளிப்பேன்.

எப்படியோ ஜோ அமல ராயன் பெர்ணாடெஸ் என்பவர் ஒரு கிறித்துவ டோண்டு என்பதை உங்கள் திரித்தல் மற்றும் இந்து காழ்புணர்வுகளின் மூலம் அறிந்து கொண்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மற்றபடி, தலித்துக்குப் பரிவட்டம் போடுவதில்லை.//

திருமாவளவனுக்கு கட்டினார்கள். உங்களுக்கு புதிய தகவலாக இருக்கலாம். ஏழையாக இருப்பவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் பரிவட்டம் கட்டமாட்டார்கள். உங்களுக்கு வாடிகனில் வரவேற்பு கொடுப்பாங்களா ? அது போல் தான்

//கோயில் முறைகளில் தலித்துகள் நுழைவு மட்டும்தான் கொடுக்கப்பட்டதே தவிர - அதுவும் கூட அரசுக்குப்பயந்துதுதான் - ஜாதியமுறையில் இன்னும் கீழ்சாதியினரே.
//

இது முறையே கோவில் மற்றும் சர்ச் என்று இருக்க வேண்டும்

Kesavan சொன்னது…

//ஏழையாக இருப்பவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் பரிவட்டம் கட்டமாட்டார்கள் //

எனக்கு தெரிந்து கோவில்களில் ஏழைகளுக்கும் பரி வட்டம் கட்டி மரியாதையை செய்யபடுவது உண்டு .மற்ற மதத்தில் எப்படியோ எண்டகு தெரியாது . இந்து மதத்தில் இருக்கிறது . அதை சில கோவில்களில் வழக்கமாக செய்வதும் உண்டு

வருண் சொன்னது…

***எம்.எம்.அப்துல்லா


//அதாவது நாடாரும், தேவரும் அவர்களுக்கு ஒண்ணுதான்.

//

யாரு சொன்னது?? சில ஆண்டுகளுக்கு முன் தென்மாவட்டத்தில் நடந்த சாதிக் கலவரத்தின் மூலத்தை அறிய ஒரு அரசு விசாரணைக் குழு சென்றது. அதில் இடம்பெற்றவர்களில் ஒரு பிரபலமான பிராமண அதிகாரியும் இருந்தார்.அப்போது அந்த அதிகாரி உயர்சாதிக்காரர்களிடம் ”என்னய்யா பிரச்சனை? எதுக்குய்யா இப்படி நடந்துக்குறீங்க?” என்று கேட்கிறார். அதற்கு அந்த சாதிச் சங்கத் தலைவர் “சாமி நாங்க இன்னைக்கும் உங்களுக்கு(பிராமணர்களுக்கு) மரியாதை குடுக்குறோம்ல!அய்யாங்குறோம்ல! அப்ப அது மாதிரி அவிங்களும் எங்களுக்குச் செய்யணுமா?” இல்லையா?” என்று பதில் கேள்வி கேட்டார்.

2:47 PM, April 09, 2010 ***

அப்துல்லா அண்ணாச்சி!

நீங்க சொல்வதையே கவனிச்சுப்பாருங்க, இங்கே உயர் சாதி பற்றிப் பேசுவது திராவிட உயர் சாதி முட்டாள்!

இந்த மடையர்களை யாரு பார்ப்பனர்களுக்கு மரியாதை கொடுக்க சொன்னது, தன் சகோதரகளை அவமதிக்க சொன்னது?

நீங்க சொன்னது படி உயர்சாதி பார்ப்பனர், என்னையா பிரச்சினைனுதான் கேட்டு இருக்கார் இல்லையா?

நான் பார்ப்பனர்களுக்கு வக்காலத்தெல்லாம் வாங்கலை இங்கே! I am only saying they are ignorant about some issues. It is some dravidian brainless highclass cause more trouble!

வருண் சொன்னது…

***வருணுக்கு கள்ளர் ஜாதியைச் சேர்ந்த கலியனைத் தெரியுமோ? அவரைப்பார்ப்பனர்கள் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டாடுகிறார்கள்.

தேவருக்கும் பார்ப்பனருக்கும் எப்போதும் நெருக்கமுண்டு. நாடார்கள் அரசர்கள் அல்ல. என்வே பார்ப்பனருக்கு தேவையில்லை. நான் வரலாற்றைச் சொல்கிறேன்.***

அண்ணாச்சி!

நான் இங்கே தேவருக்கும் நாடாருக்கும் இன்னொரு சாதிக் களவரத்தை மூட்ட முயலவில்லை!

சில உண்மைகளைச் சொன்னேன்!

தேவரும் நாடாரும் திராவிடர்கள். ஒருவரை ஒருவர் சமமாக மதிக்காமல். ஏர்கனவே நெஅனிப்புடன் திர்ரியும் பார்ப்பனருக்கு தேவையே இல்லாத மரியாதை கொடுத்து அவர்களை இன்னும் கொஞ்சம் முட்டாளாக்கி விட்டு உள்ளார்கள்!

இங்கே யார அடிக்கனும் சொல்லுங்க அண்ணாச்சி!

பார்ப்பனர்களை யார் மேலே தூக்கி வச்சு ஆடுவது?

திராவிடர்கள்!

அதைமட்டும் புரிந்து கொள்ளுங்க!

வருண் சொன்னது…

***Jo Amalan Rayen Fernando said...

சாதிப்பற்றுக்கும் வெறிக்கும் வேறுபாடில்லை என்கிறார் கண்ணன்.

சாதிப்பற்று வெறியாகலாம் மனமுதிர்ச்சியடையாதவரிடம்.***

இல்லையா பின்னே?

ரெண்டுலயுமே சாதியை கட்டிக்கிட்டு அழுறீங்க அண்ணாச்சி!

வருண் சொன்னது…

***பணகார பார்ப்பன்ர் பிணந்தூக்கும் பார்ப்பனரிடம் சம்பந்தம் பேசுவாரா?

பணக்கார தலித்து, ஒரு ஏழை தலித்தை தன்விட்டு சோப்பவில் உட்கார வைப்பாரா?

ஜாதித்துவேசம் வேறு. மற்ற துவேசங்கள் வேறு.***

அந்தப் பெண் புத்திசாலியாவும் பேரழகியாவும் இருந்தால் இந்த பணக்கார நாய்கள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு அலையும், அண்ணாச்சி!

வருண் சொன்னது…

***Blogger Kesavan said...

//நாடார்களின் ஆரம்ப மதமாற்றம் என்பது இறைநிலை தேடிய மனமாற்றம் என்றே நினைக்கின்றேன் //
நிச்சயமாக இல்லை . அவர்களின் வறுமையை பயன் படுத்தி அவர்களுக்கு பணத்தை கொடுத்து அவர்களை மாற்றுகிறார்கள் . அவர்களும் தம்முடைய வறுமை தீர்ந்தால் போதும் என்று தன்னுடைய குழந்தையின் பசியை போக்கினால் போதும் என்று அவர்களுக்கு கிடைக்கும் சொற்ப தொகைக்கு மதம் மாறுகிறார்கள் .

4:17 PM, April 09, 2010***

I bet you your ***, Kesavan is not brainy enough to analyse this situation. You see not everyone has proper experience!

Dont make any sweeping statements!

அப்துல்லாவின் பார்வையில் ஓரலளவுக்கு உண்மை இருக்கலாம்!

வருண் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
வருண் சொன்னது…

*** Kesavan said...

//ஏழையாக இருப்பவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் பரிவட்டம் கட்டமாட்டார்கள் //

எனக்கு தெரிந்து கோவில்களில் ஏழைகளுக்கும் பரி வட்டம் கட்டி மரியாதையை செய்யபடுவது உண்டு .மற்ற மதத்தில் எப்படியோ எண்டகு தெரியாது . இந்து மதத்தில் இருக்கிறது . அதை சில கோவில்களில் வழக்கமாக செய்வதும் உண்டு***

That is just like a brahmin being an Atheist!

How many Kamalahasans you have seen?

Can I speculate brahmins based on Kamal's views on GOD???

தமிழ்லயே சொல்லிப்புடுவோம்...

கேசவன் காரு!

நீங்க சொல்வது (ஏழைகளும் பரிவட்டமா (செவ்வகமா) செய்வது), ரொம்ப அரிது. அதனால அதை ரொம்ப பெரிது படுத்தக் கூடாது.

அதாவது கமலஹாசனை வச்சு, பிராமணர்களின் கடவுள் நம்பிக்கையை சொல்வது போல.

99.9% பார்ப்பனர்கள் இந்து மத நம்பிக்கையும் கடவுள் நம்பிக்கையும் உள்ளவர்கள். ஏழையா இருந்தாலும் மதம் மட்டும்பிடிச்சு ஆட்டும் இவர்களை!

கமலஹாசனே தசாவதாரத்துக்கு அப்புறம் கடவுளை கொஞ்சம் தேடி கண்டுபிடிச்சுருவாரு போல! :)

Let me hope Kh does not become a believer when he becomes old and scared of death! That would be a disaster!

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//அப்துல்லாவின் பார்வையில் ஓரலளவுக்கு உண்மை இருக்கலாம்!

//

நன்றி வருண் அண்ணே.

நாடர்களின் மதம் மாற்றம் என்பது 1800 களின் இறுதியில் துவங்கியது. அன்றைய காலகட்டத்தில் உணவுத்தேவை மட்டுமே மக்களுக்குப் பிரதானம்.பணம் என்பது அப்போது பெரிதாக எந்தச் சமூகத்திடமும் இல்லை.கோவில் உள்ளே நுழைய முடியாத நாடார்கள் தங்களை உள்ளே அனுமதித்த சர்ச்சில் சென்று இறைவனைக் காண முற்பட்டனர்.முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆரம்பக்கூறுகள் துவங்கிய 1920 களின் பிற்பகுதியில் பணம் என்பது அந்தஸ்தின் காரணியானபின் வணிகம் பக்கம் சென்றனர். தலித்துகள் மதம் மாறத் துவங்கியது அல்லது மதமாற்றம் செய்யப்பட்டது இந்தக் காலகட்டதிற்குப் பின்னர்தான். அதனால்தான் அடித்துச் சொல்கின்றேன் நாடார்களின் மத மாற்றத்தின் பிண்ணனியில் இருந்தது பணம் அல்ல.

வருண் சொன்னது…

அப்துல்லா அண்ணாச்சி!

உண்மையை பற்றி கேசவன் வகையறாவுக்கு கவலையே இல்லை!

தன், இந்து மதத்தைவிட்டு இன்னொரு மதத்தை தழுவியவனை எப்படியாவது ஒரு வகையில் கேவலப்படுத்தனும்! காசுக்காக போனார்கள்னு சொன்னத்தானே இந்து மதப்பெருமையை காப்பது போல இருக்கும்? அதனால் நம்ம என்ன சொன்னாலும், உண்மை எதாயிருந்தாலும், இவர்கள் இதையேதான் சொல்லிக்கிட்டே இருப்பாங்க!

Kesavan சொன்னது…

//உண்மையை பற்றி கேசவன் வகையறாவுக்கு கவலையே இல்லை! //

கிறிஸ்தவ மதமாற்றத்தைக் காந்திஜி ப்லமுறை கடுமையாக சாடியுள்ளார் -

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்” – ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

இதை நான் சொல்ல வில்லை வருண் . காந்தி சொன்னதாக ஒரு தினசரியில் வந்துள்ளது . அடுத்து சொல்லுங்கள் உண்மையை பற்றி காந்தி வகையராவுக்கு கவலையே இல்லை என்று .

Kesavan சொன்னது…

தங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடுகள் கிடையாது என்று கிறுஸ்துவர்கள் பீற்றிக்கொண்டாலும், நடைமுறையில், தேவாலயத்தில் இருக்கை முறை முதல் கல்லறையில் புதைக்கும் முறை வரை, ஜாதி வேற்றுமை கையாளப் படுகிறது. மேலும் அப்பாவி இந்துக்களை மதமாற்றம் செய்யும்போது “இயேசுவின் பார்வையில் அனைவரும் சமம்” என்று சொல்லும் மதப்பிரசாரகர்களும் பாதிரிகளும் காரியம் முடிந்தவுடன் தங்கள் கண்களையும் மூடிக்கொண்டு விடுவார்கள். மாற்றப்பட்ட நம் மக்கள் தாங்கள் கும்பிடும் சாமியையும், கும்பிடும் முறையையும் தவிர்த்து வேறு எந்த மாற்றமும் காணார்கள்!

வருண் சொன்னது…

***Kesavan said...
//உண்மையை பற்றி கேசவன் வகையறாவுக்கு கவலையே இல்லை! //

கிறிஸ்தவ மதமாற்றத்தைக் காந்திஜி ப்லமுறை கடுமையாக சாடியுள்ளார் -***

Gandhi criticized Christians but not Jesus! He preached Hinduism but he was murdered by a hindu fanatic! That is price he earned for preaching hinduism!

காந்திக்கே இந்த நிலைமைனா, மத்தவா நிலைமையை யோசிச்சுப் பாருங்க!

அதைவிட கொடுமை என்னன்னா காந்தி கொலையை நியாயப்படுத்துவதும் ஹிந்து மத வெறியர்கள் தான்! How are you going to blame Christians or muslims for a hindu leader's muder by a hindu fanatic?

Now you are USING Gandhi who was eliminated by "you" for criticizing Christians and Christianity!

வருண் சொன்னது…

***Kesavan said...
தங்கள் மதத்தில் ஜாதிப் பாகுபாடுகள் கிடையாது என்று கிறுஸ்துவர்கள் பீற்றிக்கொண்டாலும், நடைமுறையில், தேவாலயத்தில் இருக்கை முறை முதல் கல்லறையில் புதைக்கும் முறை வரை, ஜாதி வேற்றுமை கையாளப் படுகிறது.***

Kesavan, casteism is uniqueness of Hinduism! You can say Christians and Muslims have casteism but it was hinduism's contributuion to the whole world.

Anyone has a right to choose their religion or practice any religion.

High class hindus never get converted because they are the sole beneficiary in the Hinduism. They never understand the sufferings of the lower caste hindus. They never will!

Kesavan சொன்னது…

//They never understand the sufferings of the lower caste hindus. They never will! //

இன்றைய கால கட்டத்தில் higher caste hindu , lower caste hinduவை புரிஞ்சுண்டு என்ன பண்ண போறாங்கன்னு எனக்கு புரியலை . அவங்களா இவங்களுக்கு எல்லாம் பண்ண போறாங்க . இன்னைக்கு எல்லாமே government கைல தான் இருக்குங்க சார் , அந்த government
நீங்க சொல்ற lower caste hindu கிட்ட தான் இருக்கு . இதுல வேற யாரும் ஒன்னும் பண்ண முடியாது . ஏன் lower caste ஹிந்து government நீங்க சொல்ற lower caste ஹிந்துக்கு எல்லாம் பண்ணலாமே . lower caste ஹிந்து government தான் நீங்க சொல்ற lower caste ஹிந்து மக்களுக்கு பண்ணனுமே தவிர மத்தவங்க செஞ்சு ஒன்னும் ஆக போறதில்லை .

Kesavan சொன்னது…

ராஜசேகர ரெட்டி: ஏழைப் பங்காளன் முதல் எவாங்கிலிஸ்ட் வரை
http://www.tamilhindu.com/2009/09/ysr-reddy-tribute/

பித்தனின் வாக்கு சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா மாற்றம் என்பது படிப்படியாகத்தான் வரும், உடனே நடக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை. ஆனால் மாற்றம் என்பது உறுதியாக வரும். அப்போது இதை வீடக் கேவலமாக இருக்கும். இதை நான் சொல்கின்றேன் என்பதுக்காக உடனே சாதி மாறுனா கேவலமான்னும், நீ பார்ப்பனிய அடிவருடின்னு சொல்லிராதீங்க(வழக்கம் போல தப்பா புரிஞ்சுட்டு,இது கேவலம், ஆனா வரப்போகும் பணக் கலாச்சாரம் இதை வீடக் கேவலமாக இருக்கும்). அப்போது எல்லாம் பணத்தின் அடிப்படையில் தான் இருக்கும். பணத்தால் தன் தேவைகளை நிறைவேத்த முடியாவிட்டால் புறம் போகுதல் அதிகமாக இருக்கும். அண்ணாச்சி என்பது நாடார்களைக் குறிக்கும் வார்த்தை அல்ல, நெல்லைப் பகுதியில் சரளமாக புழங்கும் வார்த்தை. (கோவை ஏனுங்க, மதுரை அண்ணே, சென்னை பாஸ் அல்லது தலை, இல்லைனா டாபரு. ) ஆனால் பொதுவாக பிற பகுதிகளில் கடை வைத்துருக்கும் நாடார்களை அண்ணாச்சி என்று சொல்வதால் அது நாடார்களுக்குப் பொருந்திவிட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

எல்லாம் நல்லா இருக்கு.....
//நீ பார்ப்பனிய அடிவருடின்னு சொல்லிராதீங்க(வழக்கம் போல தப்பா புரிஞ்சுட்டு,இது கேவலம், //

எனக்கு தெரிந்து...என்னுடைய கருத்தாக 'ஒரு பார்பனரைப் பார்த்து இந்த கேள்வி கேட்பவன் மடையன் தான்'

:)

வருண் சொன்னது…

*** பித்தனின் வாக்கு said...

நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா மாற்றம் என்பது படிப்படியாகத்தான் வரும், உடனே நடக்கும் சாத்தியக் கூறுகள் இல்லை. ஆனால் மாற்றம் என்பது உறுதியாக வரும். அப்போது இதை வீடக் கேவலமாக இருக்கும். இதை நான் சொல்கின்றேன் என்பதுக்காக உடனே சாதி மாறுனா கேவலமான்னும், நீ பார்ப்பனிய அடிவருடின்னு சொல்லிராதீங்க(வழக்கம் போல தப்பா புரிஞ்சுட்டு,இது கேவலம், ஆனா வரப்போகும் பணக் கலாச்சாரம் இதை வீடக் கேவலமாக இருக்கும்). ***

ஆனால் நீங்க இந்து மத அடிவருடினு வேணா சொல்லலாமா, சார்? :)

இதுல என்ன வேடிக்கைனா பார்ப்பனர்கள் இந்து மதத்தை தொழுதா தப்பே இல்லை!ஏன் னா இந்தமதம் is designed in such a way that to claim brahmins are superior. அதனாலதான் சோ ராமசாமியும் அவன் அடிவருடிகளும் இந்து மதத்தை கட்டி அழுறானுக!

ஆனால் இந்த முட்டாப்பயலுக நம்ம திராவிட ஹைக்ளாஸ் இருக்கானுக இல்லை, அவனுக, பார்ப்பனர்களை உயர்வாவும் மற்ற திராவிடர்களை லோக்ளாஸ்னு சொல்ல்லிக்கிட்டு திரியுதுகள்.

இதுகள என்ன சார் செய்றது? இதுக திருந்தினால் மாற்றம் ஏற்படும். இதுக திருந்திடுங்களா என்ன? :)))

வருண் சொன்னது…

***ஆனா வரப்போகும் பணக் கலாச்சாரம் இதை வீடக் கேவலமாக இருக்கும்). அப்போது எல்லாம் பணத்தின் அடிப்படையில் தான் இருக்கும். பணத்தால் தன் தேவைகளை நிறைவேத்த முடியாவிட்டால் புறம் போகுதல் அதிகமாக இருக்கும். அண்ணாச்சி என்பது நாடார்களைக் குறிக்கும் வார்த்தை அல்ல, நெல்லைப் பகுதியில் சரளமாக புழங்கும் ***

இன்னைக்கும் இந்தப் பணக்கலாச்சாரம் இருக்க்கத்தான் செய்யுது. என்னவோ வரப்போகுதுனு சொல்றீங்க!

வருண் சொன்னது…

***அண்ணாச்சி என்பது நாடார்களைக் குறிக்கும் வார்த்தை அல்ல, நெல்லைப் பகுதியில் சரளமாக புழங்கும் வார்த்தை. (கோவை ஏனுங்க, மதுரை அண்ணே, சென்னை பாஸ் அல்லது தலை, இல்லைனா டாபரு. ) ஆனால் பொதுவாக பிற பகுதிகளில் கடை வைத்துருக்கும் நாடார்களை அண்ணாச்சி என்று சொல்வதால் அது நாடார்களுக்குப் பொருந்திவிட்டது.***

அண்ணாச்சினு, கோவி சொல்றது நாடர்களை மட்டும்தான். ராஜபாளையம், சிவகாசி பக்கத்தில் உள்ள நாயக்கர்கள்கூட "அண்ணாச்சி" பய்னபடுத்துவார்கள்!

However, it is a nickname for nadars only!

பெயரில்லா சொன்னது…

பணத்தால் மாற்றம் வரும்?

குஜராத்தி பனியாக்களும் பார்ப்பனரும் உலகில் பலநாடுகளில் வாழ்கின்றார்கள். இவர்க்ள் அதிதீவிர இந்துத்தாவினர். இவர்க்ள் விடாப்பிடியாக வருணக்கொள்கையைக் கடைபிடித்து வருகிறார்க்ள்.

பிரிடடனில் குஜராத்தி தலித்துகளும் வாழ்கின்றாரக்ள். அவர்களை குஜாரத்தி மேல்ஜாதியினர் சேர்த்துக்கொள்ளுவதில்லை. ஒரு கவுண்டியில் நடந்த மேயர் தேர்தலில், குஜராத்திகள் நிறைந்தது = அங்கு ஒரு குஜராத்தி தலித்தும் ஒரு வெள்ளைக்காரரும் போட்டி போட, பனியா-பார்ப்ப்ன குஜராத்திகள், குஜரத்தி தலித்து ஓட்டுக்கேட்க வந்தபோது, கதவை அடைத்துக்கொண்டார்கள். வெள்ளைக்காரருக்கே ஓட்டுப்போட்டார்கள். இது வெகு பிரசித்தி பெற்ற ஒரு செய்தி. ஒரு உதாரணம்தான்.

இந்தியாவில் மேல்மட்டங்களில் (பதவிகளில்) ஜாதியம் இருக்கின்றது என்பதை தலித்துகளைகேட்டால் தெரியும். IAS, பாங்கு, இரயில்வே, ஆபிசர்களைக்கேட்டால் தெரியும்.

பணம் மனத்தை மாற்றுவதில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

வருண் சொன்னது…

Jo Amalan:

You need to go one more step. Let us take nadars. Among tamils they branch out as nadars.

What is NEXT?

If the marriage is arranged, "MONEY culture" is tha one which plays a major role in a particular caste! You might call that as "status"! That is nothing but money!

So, money culture already exists inside the "caste culture" and we all know that.

So if you throw away, religion and caste, the already existing money culture will be the only one left over.

I am saying, it is already there. I don't understand why you all pretend that it does not exist??

Unknown சொன்னது…

ஐயா ராசா சுத்தமா வரலாறு தெரியாம ஒரு சாதியை பற்றி பேச வேண்டாம்.. நாடார்கள் எந்த ஆண்டு வரை தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பட்டியலில் இருந்தார்கள் ??நிரூபித்தால் பத்து லட்சம் அன்பளிப்பு தருகின்றேன்.. காமராசர்தான் நாடாரை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து பிற்படுத்த பட்டோர் பட்டியலிற்கு மாற்றினாரா... ??வாயில எதாவது அசிங்கமா பேசிட போறன்... பெரியார் நாடார்க்காக எப்பம் எந்த ஆண்டு போராடினர் முட்டாள்தன பேச்சி பேசக்கூடாது.. உங்கள் காழ்ப்புணர்ச்சி ஒரு தேசிய தலைவர் காமராஜரை அசிங்கம் படுத்தாதீர்.. கேரள எல்கை ஓரம் நடந்த தோல் சீலை போராட்டத்தை ஒட்டுமொத்த நாடார் வரலாறு என்று சொல்வது கிறுக்கு தனம்.. சோறு தின்கிறீரா இல்லை வேறு எதையாவது திண்கின்றிரா.... 1800 ரிலே நாடார்கள் தொழில் துறையில் தடம் பதித்து விட்டார்கள் இந்தியாவின் முதல் ஆங்கிலவழி கல்வி கூடம் 1859 ஆண்டு தொடக்கி விட்டார்கள் காமராஜர் அச்சிவருவதற்கு முன்பே 50 மேற்பட்ட பள்ளிகள் தொடங்க பட்டு விட்டது... ஒரு சமூகத்தை பற்றி பேசுவதற்கு முன் கொஞ்சமாவது தெரிந்து கொண்டு பேசுங்கள்...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்