பின்பற்றுபவர்கள்

13 டிசம்பர், 2007

எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம்...!

தலைப்பைப் பார்த்து 'விதி'க்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம் என்பதன் பொருள் விளங்காததாலேயே அதை விதியோடு தொடர்பு படுத்துகிறோம்.

எங்கள் ஊரில் லக்ஷ்மண நாடார் லாரி சர்வீஸ் என்ற ஒரு லாரி நிறுவன்த்தில் 15 - 20 லாரிகள் ஓடும். அந்த லாரிகள் அனைத்திலுமே பொறிக்கப்பட்டு இருக்கும் வாசகம் "காலதாமதம் ஊழலை உருவாக்கும்"... படிக்க தெரிந்தநாள் முதல் பொருள் தெரியமலேயே மனதில் நன்றாக பதிந்ததொரு வாசகம். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் காலம் தாழ்த்தினால் அந்த வேலை வாழ்வியல் தேவை என்னும் நெருக்கடிக்கு வரும் போது அதனை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்று குறுக்குவழியில் செய்து முடிக்க எத்தனிப்பர் அல்லது செய்து முடிப்பதற்குள் மிகவும் துன்பத்தை அனுபவித்துவிடுவர் அல்லது முடிக்காமாலேயே சோர்ந்துவிடுவர்.

நேரத்திற்கும் மற்ற நம் செயல்களுக்கும் அதன் வழி ஏற்படும் நம் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்போதாவது ஏதோ ஒரு தோல்வியில் துவண்டு போகிறோம். ஏனென்று பார்த்தால் திரும்பவும் வெற்றி என்பதை அடைய குறிப்பிட்ட காலம் அதாவது நேரம் தேவைப்படும்...அதே போன்ற அல்லது அதைவிட அதிக செயல்வேகம் தேவைப்படும்...மேலும் சூழல் சரியாக அமையவேண்டும்... அதற்கான பணவிரயம் இன்னும் மற்ற இத்யாதிகள் எல்லாமும் எண்ணியதை ஈடேற்ற முடியாமல் ஏற்படும் பக்க விளைவுகள். அப்படியே மறுமுறை திட்டமிட்டாலும் வெற்றி நிச்சயம் என்பதற்கான உத்திரவாதம் எதுவும் இல்லாமல் தான் முயற்சியையும் தொடரவேண்டும். செலவு செய்த நேரம் வீண் என்பதைவிட மீண்டும் நேரம் எடுக்கும் அதனை அடைவதற்கு என்பதால் தோல்விகள் துவளவைக்கின்றன. வெற்றி / தோல்வி ஆகியவற்றிற்கு வேறு எதாவது பொருள் இருக்கிறதா ? ஒரு திட்டமிட்ட செயலின் கடந்த காலம் பயனற்றதாகிவிட்டது என்பதன் மறைமுக உணர்வு வடிவமே தோல்வி. கடந்த காலம் பயன்மிக்கதாக மாறி இருந்தால் அதன் உணர்வு வடிவம் வெற்றி.

திருட்டு என்ற ஒரு தீயசெயலை எண்ணிப்பார்த்தாலும்...குறிப்பிட்ட காலத்திற்கு தமக்கு தேவையான பொருளை ஈட்ட தம்மால் முடியாது அதற்கான திறமையும் தம்மிடம் இல்லை என்பதால் திருட்டு என்ற பேராசையின் தீ சிலருக்கு வளர்ந்துவிடுகிறது.

குறுகிய காலத்திற்குள் நினைத்ததை அடையவேண்டிய ஆசை நிறைவேறாமல் போகவே பல்வேறு சூதாட்டம் போன்ற (குற்றச்)செயல்கள் நடை பெறுகின்றன. மூன்று மாதத்திட்டதிற்கு (ப்ராஜெக்ட்) ஒர் ஆண்டு அவகாசம் கொடுத்தால் யாராவது தட்டுவார்களா ? ஆனால் 1 மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று சொன்னால் அவ்வளவு தான் பலரும் பின்வாங்கி விடுவார்கள். பலரால் இயல்பாக முடியாத ஒன்றை 'அவன்கிட்ட போனால் காரியம் சக்ஸஸ்' என்றால் என்ன ?அலையும் நேரமும் மற்றும் நீண்ட நேர விரயம் மிச்சம் என்பது தானே பொருள். ஆனால் அவன் செய்து கொடுக்கும் சக்ஸஸ் எப்படி நடக்கிறது ?எல்லாம் குறுக்கு வழியாகத்தான் இருக்கும்.


தன்னை குறுகிய காலாத்திற்குள் உயர்த்திக் கொள்வது எப்படி ? அடுத்தவனை கீழானவன் என்று சித்தரிக்கனும்.

பணத்துக்கும் நேரத்திற்குமே வலுவான தொடர்புகள் உண்டு தொழில் அதிபர்கள் அடுத்தவர் நேரத்தை பணமாக்குகிறார்கள். அவர்களை வைத்து சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்கே ஊதியமாக கொடுப்பார்கள். தன் உழைப்புக் கென்ற ஒரு தொழிலாளியின் நேரத்தின் ஒருபகுதி லாபத்துடன் முதலாளிகளுக்குச் செல்கிறது. நேரம் பணமாகிறது. அதன் பெயர் நேரத்திருட்டு என்று எங்கேயோ படித்தேன். எல்லோருக்கும் 24 மணி நேரம் சமம் தான். அறிவின் மூலதனமாக அடுத்தவர்களின் நேரத்தை பயன்படுத்துக் கொள்வதே முதலாளிகளின் திறன் என்கிறார்கள். அதாவது முதலாளிகள் தங்களுக்கான 24 மணி நேரத்தை தொழிலாளர்களின் நேரத்துடன் பண்மடங்கு பெருக்கிக் கொள்கிறார்கள்.


நினைத்து ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் போகும் படி நேரம் கிடைக்காமல் போவதால் தான் பலர் டென்சன் ஆவதற்கு காரணமே.

ஒரு செயலுக்கான குறிப்பிட்ட நேரத்தை புறக்கணிக்கும் போதும் அல்லது சுறுக்க முயற்சிக்கும் போது அதற்கான பக்க விளைவுகள் இருக்கவே செய்யும்.

நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாமும் நமக்கு கிடைத்த நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

9 கருத்துகள்:

வினையூக்கி சொன்னது…

அருமையான பதிவு கோவி.சார்
பதிந்தமைக்கு நன்றி,

ஜெகதீசன் சொன்னது…

நல்ல பதிவு....
:)

சதுக்க பூதம் சொன்னது…

good thought

துளசி கோபால் சொன்னது…

நேரம்தான்:-)

வடுவூர் குமார் சொன்னது…

இதெல்லாம் நம்மை வைத்து வேலை வாங்கும் முதலாளிகள் படித்தால் நன்றாக இருக்கும்...
"இடுகைக்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள்"- இது அந்த வகையில் இருக்கா? :-))

வடுவூர் குமார் சொன்னது…

அந்த தமிழ் நாட்காட்டி அருமையாக இருக்கு ஆனால் அது கடைசியில் இருக்கு என்று முன்னாடி ஒரு டிஸ்கி போட்டிடுங்க இல்லாவிட்டால் ஸ்குரோல் பண்ணி மக்கள் பார்க்காமல் போய்விட போகிறார்கள்.
எப்படி செய்தீர்கள்?

துளசி கோபால் சொன்னது…

குமார் சொன்னபிறகுதான் நாள்காட்டி பார்த்தேன்.
ஏன் ரொம்ப அடியிலே கிடக்கு?
நேரந்தானோ?:-)

VSK சொன்னது…

இன்றை "நல்ல" நேரத்தில் தான் என்னால் படிக்க முடிந்தது!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள், கோவியாரே!
:)))))

வடுவூர் குமார் சொன்னது…

என்ன கோவியாரே, ஜெகத் மண்டையை போட்டு உடைத்து போட்ட நிரல் மாற்றலை இப்படி போட்டு உடைத்துவிட்டீர்களே??தமிழில் நாளும் நேரமும்- நாட்காட்டியை சொல்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்