பின்பற்றுபவர்கள்

10 டிசம்பர், 2007

நஒக : பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை !

"டேய் முரளி....இந்த மேட்ரி மோனியல் ஆட் பாருடா..."

"என்னம்மா ... நீயே பார்த்து சொல்லேன்..."

"வட்டம் போட்டு வச்சிருக்கு... யார் அப்பாவோட வேலையா ?"

"நான் இல்லைடா... ஆனா நானும் பார்த்தேன்..படிப்பு ...வேலை ... உயரம் ...மற்ற இத்தியாதிகள் எல்லாம் சரியாத்தான் இருக்கு... இதே ஊர் தான்...ஆனா சாதி மட்டும் நம்ம சாதி இல்லையேடா..."

"ம்...சாதியில பார்த்திங்க எதுவும் சரியா அமையலையே...எனக்கும் பிடிக்கலையே..."

"நீ தானடா அது சரி இல்லை ...இது சரி இல்லைனு... கொற சொல்லி தட்டக்கழிச்சே..."

"என்னப்பா ஒருதரம் கல்யாணம் பண்ணப் போறோம்...மனசுக்கு பிடிச்சதாக இருக்க வேண்டாமா ?"

"அதுவும் சரிதான்..நானும் உங்க அம்மாவை கட்டிக்கிட்டு..."

"என்னப்பத்தி என்ன பேச்சு வருது....?" அம்மா முறைத்தார்

"எதுவும் பேசமுடியலைன்னு சொன்னேன் இல்ல...நீயே பாருடா" - இது அப்பா

"போதும் உங்க கோழி சண்டையை விடுங்க..."

"அந்த பெண்ணை பார்த்து வருவோம் அதுக்கு எதும் ஏற்பாடு பண்ணனுங்க..."

********

பெண் பார்பதற்கு நன்றாக அழகாகத்தான் இருந்தாள், பேரு ப்ரியாவாம்...

பெண் பார்க்கும் படலம் முடிந்ததும், அருகருகே அமர்ந்து கொண்டு

"அம்மா இந்த பொண்ணு வேணாம்மா " மெதுவாக சொன்னான்

"ஏண்டா ... "

"பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை... வருவது மாதிரியும் தெரியலையே..."

"மெதுவா பேசுடா ... அவ காதில் விழுந்திடப் போறது... "

ஒரு சுட்டிப் பெண் அதை கேட்டுவிட்டு வேகமாக ப்ரியாவிடம் கிசுகிசுக்கிறாள்.

அவள் அங்கிருந்தே இவன் பார்க்கும் போது முறைத்தாள்

"ஆமாண்ட மத்த பொண்ணுங்க கிட்ட முக்கு சரியில்லை, ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இல்ல..இப்படி எதாவது காரணம் சொல்லி சொல்லி வேணாம்னு சொன்னே..."

"...."

"எனக்கென்னமோ இது நல்ல இடமாகத்தான் தெரியுது பேசி முடிச்சிட வேண்டியதுதான்.." மேலும் அம்மா சொன்னார்

"முரளி...என்னால அலைய முடியலடா...பெண்ணையும் அவ வீட்டாரையும்... குறை சொல்ல எதுவுமே படலைடா" இது அப்பாவின் சன்னமான குரல்

"ம்ம் ...பச்....எனக்கு தலையெழுத்து இதுதான் என்றால் மாற்றவா முடியும்... உங்க கஷ்டமும் புரியுது...ம் எதோ செய்யுங்க..."

"வேண்டா வெறுப்பாக சொல்லாதே...எல்லாம் விசாரிச்சோம்...எல்லாம் நமக்கு பொருத்தமாகத்தான் இருக்கு " - அம்மா, அப்பாவைப் பார்த்து

"பேசி முடிச்சிடுங்க" என்று ஜாடை காட்டினார்

"சரி...சம்பந்தி.....சம்பந்தம் பேசி முடிச்சிடலாம்...என்ன சம்பந்தின்னு சொல்றேன்னு பார்க்கிறிங்களா...எல்லாம் முடிவு செஞ்சாச்சு அப்பறம் சம்மந்திதானே..."

எல்லோருக்கும் மகிழ்ச்சி...நிச்சயதார்தம் செய்ய தேதி குறிப்பதாக பேசிக் கொண்டார்கள்

மெல்ல வீட்டின் உள்ளே பார்த்தான்

ப்ரியா இன்னும் முறைத்துக் கொண்டிருந்தாள்

*************
மாலை மணி 7.00

தாசப்பிராகாஷ் ஓட்டலில் உணவு மேசையில் மெல்லிய வெளிச்சத்தில் அருகருகே அமர்ந்து கொண்டு

"டேய் முரளி... இரண்டு வருசமாக பழகுறோம் ... உன்னை பார்த்து எனக்கு புதுசா வெட்கம் வரனுமோ ?" இடுப்பை கிள்ளினாள்

"கொஞ்சமாவது நீ நடிக்க வேண்டாமா ?"

"சரிடா...விடு...நாம நாடகம் போட்டோம்னு தெரிஞ்சுடுமோன்னு... என் பயம் எனக்குத்தான் தெரியும்.."

"நானும் இரண்டு மூணு பொண்ணுங்களை பெண் பார்க்கப் போய் பிடிக்கலைன்னு பொய்யாக சொன்னது கஷ்டமாகத்தான் இருக்கு...."

"...சரி தாண்டா...சந்தர்பம் கிடைச்சால் அவர்களைப் நம் கல்யாணத்துக்கு பிறகு பார்த்து மன்னிப்பு கேட்போம்.."

"அதுதான் செய்யனும்..."

"இருந்தாலும் என்னை தெரியாதது போல் காட்டி... நான் என்ன மோசமான பெண்ணா ? உறுத்தலாகவே இருக்குடா.."

"என்ன பண்ணறது ப்ரியா...பெத்தவங்க என்ன தான் நல்லவங்களாக இருந்தாலும், அவங்க பார்த்து மருமகளாக கொண்டுவர்ற பொண்ணுங்க கிட்டதான் பிரியமாக இருக்காங்க"

"இந்த நடிப்பை திருமணத்திற்கு பிறகும் தொடரமுடியும்னு நினைக்கிறியா ?"

"நீ 'டா' போடாமல் இருந்தால் தெரியாது...ஆரம்பத்தில் அவங்களுக்கு பிடித்துவிட்டால் போதும்...அப்பறம் தெரிஞ்சாலும் நிலமை தலைகீழாக மாறாது என்ற நம்பிக்கைதான்"

மேலும் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்

"உங்கிட்ட சொன்னது தானே...எங்க அக்கா...அத்தான் லவ் மேரேஜ்தான்... அத்தான் அக்கா மேல பிரியமாக தான் இருக்கிறார்...இருந்தாலும் பையனை முந்தானையில் முடிந்துவிட்டாள்.. என்று அவ மாமியார் பேசுற பேச்சுக்கு ஒண்ணும் செய்ய முடியாமல்... அத்தான் கைய பெசையுறார்...எங்களுக்கும் புரியுது...அந்த நிலமை என்வீட்டில் உனக்கு வந்துடக் கூடாது இல்லையா... பெரியவங்க கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருப்பாங்க... ஒரு சிலர் தவிர...உங்க அம்மா அப்பா பெரும் தன்மையாக நம்ம காதலை ஏத்துக்கிட்டாங்க..."

"ஈசியாக சொல்றேடா...ஆனால் மேட்ரி மோனியல் ஆட் இதெல்லாம் கொடுக்கச் சொல்லி அவர்களை ரொம்பவே டார்சர் படுத்திட்டே முரளி..."

"சாரி ப்ரியா...அதெல்லாம் மாமனார் மாமியாருக்கு திருமணத்துக்கு சூப்பர் பட்டு வேட்டி பட்டுப் புடவை எடுத்து கொடுத்து அசத்தி சரி பண்ணிடுவேன்...நீ இப்ப என்னை சரிபண்ணனும்...யாரும் பார்க்காத போது சூடாக ஒரு முத்தம் கொடுத்து கூல் பண்ணு பார்க்கலாம்..." சொல்லிவிட்டு காலால் அவள் காலை வருடிவிட்டு கண் அடித்தான்

"பின்னிபுடுவேன் பின்னி...எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....வேண்டுமெனால் ஐஸ் கிரிம் பாதி திண்ணுட்டு எச்சியோட தர்றேன் கூலாக சாப்பிட்டு சரியாயிடு..."

அதன்பிறகு அவர்கள் அந்தரங்க பேச்சுக்கு அவசரதடையாக

"எஸ்கியூஸ்மி சார்...." மெனுகார்டை நீட்டினார் சர்வர்

***********
பின்குறிப்பு : சிறுகதைகள் நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தேன்..நஒக போட்டின்னு நமக்கு யானைப்பசியை தூண்டிவிட்டார்கள். நல்லாருங்க சாமிகளா.

24 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

இப்பெல்லாம் பெற்றோர்கள்தான் 'கவனமா' இருக்கணுமோ?

எந்தப் புத்துலே என்ன பாம்புன்னு யாருக்குத் தெரியுது? :-)))))

கதை நல்லா இருக்கு.

ஜெகதீசன் சொன்னது…

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//
துளசி கோபால் said...
இப்பெல்லாம் பெற்றோர்கள்தான் 'கவனமா' இருக்கணுமோ?

எந்தப் புத்துலே என்ன பாம்புன்னு யாருக்குத் தெரியுது? :-)))))

கதை நல்லா இருக்கு.
//

அம்மா,

பாராட்டுக்கு மிக்க நன்றி.

எந்த புத்தில் எந்த பாம்பு இருந்தாலும் விஷ(ம) பாம்பாக இல்லாமல் இருந்தால் சரிதேனே ?

ஜெனரேசன் கேப்... 10 வருசத்தில சரியாகிடும்...அடுத்த தலைமுறை பெற்றோர்கள்...கண்டுக்கொள்ளவே மாட்டாங்க.
:)

SurveySan சொன்னது…

இதுவும் நல்லாயிருக்கு.
ஆனா, ட்விஸ்ட்டு, கதையின் கடைசியில் வராமல் நடுவிலேயே வந்தால் ஒரு 'தடால்' முடிவு இல்லாத மாதிரி இருக்கோ?

அவுத்து விடுங்க இன்னொண்ண ;)
ஆனா, ஒரு கதைக்குதான் பரிசு தர முடியும். வருஷக் கடைசி, பட்ஜெட் கம்மி :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...

பாராட்டுக்கு நன்றி சர்வேசன் சார்,

நீங்க சொன்ன நச் முடிவு முன்றாவது பகுதியின் ஆரம்பத்திலேயே வருகிறது. அதற்கு மேலும் நீட்டித்தற்கு காரணம் அவர்களின் செயல்களுக்கான ஞாயங்கள் பேசப்பட வேண்டும் மென்பதற்காக மட்டுமே. காதல் புனிதமானது அதனை அடையும் வழியும் ஞாயமானதாகவே இருக்கட்டும்.

மெசேஜ் என்னன்னு கேட்கலையே நீங்க : 'தாரளமாக காதலிங்க...கூடவே பெற்றோர்கள் விருப்பப்படி திருமணத்தை நடத்துங்க'

:))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
:)
//

ஜெகதீசன் சிரிப்பானுக்கு காரணம், எதுவும் கதைப்படி திட்டம் வச்சிருந்திங்களா ? போட்டு உடைத்துவிட்டேனா ?

புரியல்ல...தயவு செய்துவிளக்கம்.
:))

பாச மலர் / Paasa Malar சொன்னது…

கதை நல்லா இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
கதை நல்லா இருக்கு.
//

பாச மலர்,

தவறாது வந்து படித்து பாராட்டிச் செல்கிறீர்கள். மிகவும் மகிழ்சியாகவும் நெகிழ்சியாகவும் இருக்கிறது.

மிக்க நன்றி.

வீரமணிஇளங்கோ சொன்னது…

கண்ணன்,
கதை நன்றாக உள்ளது.உங்களோட கல்யாணம், அரேஞ்ச்டு மேரேஜ்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் இவ்வளவு நாளா....
ம்ம்ம்....வாழ்த்துக்கள்..

மங்களூர் சிவா சொன்னது…

நல்ல ஐடியா மைண்ட்ல வெச்சிக்கறேன். யூஸ் பன்னிக்கிறேன்.

மங்களூர் சிவா சொன்னது…

//
எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....
//
திருந்துங்கம்மா 100 வருசமா இதையே சொல்லிகிட்டு.

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; மற்றவர்களுக்கும் சொல்லலாம் என்று எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.

கதையின் ஆரம்பத்திலேயே தலைப்பின் வரி வருவது போல் ஆரம்பித்து, மேட்ரிமோனியல், பெண்பார்ப்பு படலம் என்று தொடர்ந்து, //"டேய் முரளி... இரண்டு வருசமாக பழகுறோம் ... உன்னை பார்த்து எனக்கு புதுசா வெட்கம் வரனுமோ ?" இடுப்பை கிள்ளினாள்// என்கிற வரியோடு கதையை முடித்திருந்தீர்கள் என்றால் சூப்பராக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

நிஜமாகவே நல்ல ட்விஸ்ட் இருந்த கதை.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//தவறாது வந்து படித்து பாராட்டிச் செல்கிறீர்கள். மிகவும் மகிழ்சியாகவும் நெகிழ்சியாகவும் இருக்கிறது.//

தமிழ்வெளியோ, தமிழ்மணமோ முதல் பக்கத்தில் எங்கேயாவது உங்கள் வலைப்பூவிற்கு பெரும்பாலும் லிங்க் கிடைக்கிறது..உடனே படிக்க முடிகிறது..

உங்கள் பதிவுகள் பலவேறு விஷயங்கள் சுவாரசியமாகப் பேசுகின்றன..

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.கண்ணன்,

தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; மற்றவர்களுக்கும் சொல்லலாம் என்று எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன்.

கதையின் ஆரம்பத்திலேயே தலைப்பின் வரி வருவது போல் ஆரம்பித்து, மேட்ரிமோனியல், பெண்பார்ப்பு படலம் என்று தொடர்ந்து, //"டேய் முரளி... இரண்டு வருசமாக பழகுறோம் ... உன்னை பார்த்து எனக்கு புதுசா வெட்கம் வரனுமோ ?" இடுப்பை கிள்ளினாள்// என்கிற வரியோடு கதையை முடித்திருந்தீர்கள் என்றால் சூப்பராக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது.

நிஜமாகவே நல்ல ட்விஸ்ட் இருந்த கதை.
//

ரத்னேஷ், தவறாக எடுத்துக் கொள்ள என்ன இருக்கிறது ?... அப்பறம் உங்க டயலாக்கை எழுதவேண்டிவரும் இங்கே வேண்டாம்.
:)

சர்வேசனுக்கு போட்ட மறுமொழியை படிக்கவில்லை நீங்கள் !!!

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
//
எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....
//
திருந்துங்கம்மா 100 வருசமா இதையே சொல்லிகிட்டு.
//

சிவா, முதல்ல முத்தம் கேட்பாங்க அப்பறம் மொத்தமாக கேட்பாங்க, எங்க ஹீரோயின் கிட்ட அதெல்லாம் முடியாது, காதலிப்பது மட்டும் தான் தெரியும்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...

தமிழ்வெளியோ, தமிழ்மணமோ முதல் பக்கத்தில் எங்கேயாவது உங்கள் வலைப்பூவிற்கு பெரும்பாலும் லிங்க் கிடைக்கிறது..உடனே படிக்க முடிகிறது..

உங்கள் பதிவுகள் பலவேறு விஷயங்கள் சுவாரசியமாகப் பேசுகின்றன..
//

பாச மலர்,
மீண்டும் மட்டற்ற மகிழ்ச்சி, உங்களைப் போன்றவர்களின் ஊக்கம் மன நிறைவளிக்கிறது.

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
நல்ல ஐடியா மைண்ட்ல வெச்சிக்கறேன். யூஸ் பன்னிக்கிறேன்.
//

சிவா

நல்லா படிங்க காதலர்களுக்குத்தான் இந்த ஐடியா...கல்யாணம் ஆனவர்களுக்கு இல்லை. உங்களுக்கு ஆகவில்லை என்றால் டபுள் ஓகே.

கோவி.கண்ணன் சொன்னது…

//வீரமணிஇளங்கோ said...
கண்ணன்,
கதை நன்றாக உள்ளது.உங்களோட கல்யாணம், அரேஞ்ச்டு மேரேஜ்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் இவ்வளவு நாளா....
ம்ம்ம்....வாழ்த்துக்கள்..
//

இளங்கோ, இதெல்லாம் அபாண்டம், திருமணத்திற்கு முதல் நாள் நேரில் பார்த்தேன். முதன் முறையாக பேசினேன். அதற்கு முன்பு டெலிபோன் டாக் கூட இல்லை. நம்புங்க.

மங்களூர் சிவா சொன்னது…

//
கோவி.கண்ணன் said...
//மங்களூர் சிவா said...
//
எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....
//
திருந்துங்கம்மா 100 வருசமா இதையே சொல்லிகிட்டு.
//

சிவா, முதல்ல முத்தம் கேட்பாங்க அப்பறம் மொத்தமாக கேட்பாங்க, எங்க ஹீரோயின் கிட்ட அதெல்லாம் முடியாது, காதலிப்பது மட்டும் தான் தெரியும்.
:)

//

பெண்ணியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த விட மாட்டீங்களே. இப்படி பெண்ணை பழைமை வாதியாகவே எவ்வளவு நாளைக்குத்தான் சித்தரிக்க போகிறிர்கள். எங்கப்பா போய்ட்டிங்க எல்லாரும் வந்து ரவுண்டு கட்டுங்கப்பா!!

கோவி.கண்ணன் சொன்னது…

//பெண்ணியத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த விட மாட்டீங்களே. இப்படி பெண்ணை பழைமை வாதியாகவே எவ்வளவு நாளைக்குத்தான் சித்தரிக்க போகிறிர்கள். எங்கப்பா போய்ட்டிங்க எல்லாரும் வந்து ரவுண்டு கட்டுங்கப்பா!!//

சிவா,

நீங்க தமுக்கடிச்சு கூப்பிட்டாலும் சரி, தண்டோரா போட்டு கூப்பிட்டாலும் சரி, சபோர்ட்டாக உங்களுக்கு ஒருத்தரும் வரமாட்டங்க ஒருத்தரும் வரமாட்டாங்க. எனென்றால்,

கதையில் வரும் ப்ரியா அவுங்களுக்கெல்லாம் தங்கச்சி மாதிரி.
:)

மங்களூர் சிவா சொன்னது…

//
கதையில் வரும் ப்ரியா அவுங்களுக்கெல்லாம் தங்கச்சி மாதிரி.
:)
//

ப்ரியா எல்லாருக்கும் தங்கச்சி என்று பொத்தாம்படையாக சொல்லியதுக்கு கண்டிப்பாக ரவுண்டு கட்டுவார்கள் !!

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...

ப்ரியா எல்லாருக்கும் தங்கச்சி என்று பொத்தாம்படையாக சொல்லியதுக்கு கண்டிப்பாக ரவுண்டு கட்டுவார்கள் !!
//
சிவா,

அது ஏற்கனவே முரளிங்கிற பையனை காதலிச்சு திருமணமும் முடிக்கப் போவுது. அந்த பொண்ணை எப்ப்படி உங்களுக்கு தப்பாக பார்க்கத் தோணுது. அது உங்களைப் பார்த்து நீங்களெல்லாம் அக்கா - தங்கச்சிக் கூட பொறக்கலையான்னு கேட்டுவிட்டால் என்ன செய்விங்க.

பாவம் விட்டுடுங்க, பெண்பாவம் பொல்லாதது.

திருந்துங்கம்மா என்று நான் சொன்னது கதையின் நாயகனின் பார்வையில்தான். என்பதை இங்கு தெளிவு படுத்த வேண்டியிருப்பதை தெளிவு படுத்துகிறேன்.

பெண் பாவம் பொல்லாதது என்றால் ஆண் பாவம் என்ன சப்பையானதா? சாதாரனமானதா?

ஆண் பாவம் செய்தால் அதை பெண்தான் சுமக்கிறாள் அதுதான் பெண்பாவம் பொல்லாது என்பார்கள்.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்