பின்பற்றுபவர்கள்

31 டிசம்பர், 2007

இந்துக் கடவுள்கள் புத்தாண்டை புறக்கணிக்கிறதா ?

ஆங்கில நாள்காட்டி முறையே உலகம் தழுவிய அளவில் பயன்படுத்துப்படுகிறது, மாத ஊதியம் ஆங்கில மாத அடிப்படையிலேயே உலகம் முழுவது வழங்கப்படுகிறது. அனைத்துலக பயண தேதிகள் ஆங்கில முறையிலேயே இருக்கிறது. ஆங்கில நாள்காட்டித் தவிர்த்து உலகம் ஒரே இல்லம் என்பதற்கு வேறெந்த பொதுத்தன்மையும் கிடையாது. இதிலும் மதவாதிகள் மூக்கை நுழைத்து ஆங்கில முறை புத்தாண்டாக வரும் ஜனவரி ஒன்றையும், புத்தாண்டு பிறக்கும் இரவையும் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் ஆங்கில புத்தாண்டு வழக்கம் கிறித்துவ மதம் சார்ந்ததாம்.

உலகில் எந்த ஒரு மனிதனும் தனக்கு வயது இது என்பதை ஆங்கிலம் தவிர்த்து தமிழ் உட்பட வேறு எந்த மொழியின் மாதத்தை வைத்து, ஆண்டை வைத்து எந்த கணக்கையும் சொல்ல முடியாது, பிறந்த தேதியை குறிப்பிட அந்தந்த மொழியின் மாதத் தேதியை வேண்டுமானல் குறிப்பிட முடியும், ஆண்டைக் குறிப்பிட வேண்டுமானல் ஆங்கில முறை ஆண்டைத் தவிர்த்து குறிப்பிடவே முடியாது. உதாரணத்திற்கு ஒருவர் திருவள்ளுவர் ஆண்டு 2210ல் சித்திரை 13ல் பிறந்தேன் என்று சொன்னால், கண்டிபாக உங்கள் வயது என்ன என்று கேட்டால் தான் வயதை கண்டுபிடிக்க முடியும்.

வழக்கம் போல் வரட்டு *வேதாந்திகள்* நாள்காட்டி முறையில் இந்துத்துவ தீ(யவை)யை வளர்க்க முயற்சிக்கிறார்கள். அதற்கு சொல்லப்படும் காரணம் கோவில்களில் எந்த நேரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முறை இருக்கிறதாம். அதன் படி நள்ளிரவு தாண்டி கோவிலை திறக்கக் கூடாதாம். இந்து முறைப்படி சூரிய உதயத்தை வைத்தே நாள் தீர்மானிக்கப்படுகிறதாம், அந்த கணக்குபடி, சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு என்றால் அந்த தேதி காலை 6.05க்குத்தான் பிறக்கிறதாம். நல்ல வேளை நம் இந்தியாவில் டைம் சோன் எனப்படும் நேர பகுதி முறை இல்லை, இருந்தால் மேலும் பலகுழப்பங்கள் இருக்கும், பஞ்சாங்கங்கள், ஜோதிடம் எல்லாமே குழப்பமாக இருந்திருக்கும், ஒருவர் இராகுகாலம் பார்த்து, முடிந்துவிட்டது என்று புறப்பட்டால் ரோட்டுக்கு அந்த பக்கம் இராகுகாலம், இப்படியெல்லாம் கூட இருக்கும் டைம் சோன் -க்கு ஜோதிடத்தில் பரிகாரம் செய்வார்களோ ? :)

கிராம புறங்களில் இரவு 12 மணிக்கு மேல் மதுரை வீரன் வேட்டைக்கும், ஊர் காவலுக்கும் செல்லும் என்று சொல்லுவார்கள். இந்து கோவில்களில் நடை சாத்துவது, என்ற பெயரில் தாலாட்டுப் பாடி கோவில் கதவு சாத்தும் அன்றாட நிகழ்வு உண்டு. அதன் பிறகு காலையில் பள்ளி எழுச்சி பாடுவார்கள். வைகுண்ட ஏகாதேசி அன்று விடிய விடிய விழித்திருப்பார்கள் இதெல்லாம் ஒரு வழக்கம் என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதையே காரணம் காட்டி புத்தாண்டுக்கு கோவிலுக்குச் சென்று வணங்கினால் அந்த ஆண்டுமுழுவதும் நல்லது நடக்கும் என்ற *நம்பிக்கையில்* வருபவர்களை சாடுகிறார்கள். சாமி பக்தர்களுக்காக ஒருநாள் கண்விழித்தால் குறைந்து போய்விடுமா ? சாமி தூங்கிக் கொண்டிருந்தால் இரவு நேரத்திலும் திருப்பதி, சபரிமலை ஏறுபவர்களுக்கு அந்தந்த சாமி ஆபத்து நேர்ந்தால் விழித்தெழுந்து கருணை காட்டாதா ? சாமி தூங்குகிறது என்பதே ஒரு அபத்தம்.

நமெல்லாம் கோவணம், வேட்டி, புடவை எல்லாவற்றிலிருந்தும் மாறிவிட்டோம், கோவில் மண்டபங்களில் மாடவிளக்குக்கு பதில் மின்விளக்குகள் எரிகிறது. சில இடங்களில் குளிசாதன வசதியும் வந்துவிட்டது, ஒலிப்பெருக்கி, மணியில் கூட எலெக்ட்ரானிக் வந்துவிட்டது. நமக்கெல்லாம் வாகனம் மாறி கான்டசா, எமகா, ஏரோப்ளேன் என்று உலகை சுற்றுகிறோம். ஆனால் சாமிகள் மட்டும் மிக பழைய ஸ்டைல் காஸ்ட்யூம்சில், விலங்குகளின் வாகனத்தில் தான் இன்னும் இருக்கிறது.

********

ஒருநாள் இரவு 12 மணி தாண்டி கோவிலை திறந்தால் சாமிகள் கோவில்களை விட்டு ஓடிவிடுமா ? கோவில்கள் புத்தாண்டை புறக்கணிப்பது போல் தெரியவில்லை. இந்துத்துவாக்கள் பக்தர்களின் நம்பிக்கையில் மண்ணைப் போடுவதுடன், குருக்கள்களின் வருமானத்தில் :) பாராங்கல்லையும் போடுகின்றனர். இந்தியாவில் 12 மணிக்கு தூங்கிய அதே சாமி அதே நேரத்தில் அமெரிக்காவிலோ, லண்டனிலோ கொட்ட கொட்ட கண் விழித்திருக்காதா ? :)

மதங்களின் வளர்ச்சி என்பது அது எந்த அளவு பழமை வாதத்தில் இருந்து மீண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது என்பதில் தான் இருக்கிறது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதில் உள்ள அடிப்படை வாதிகளுக்கு இதெல்லாம் புரியவே புரியாது.

*********

பதிவர்கள், திரட்டிகள், பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

13 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!
:)

TBR. JOSPEH சொன்னது…

ஜனவரி 1ம் தேதி பிறக்கும் புத்தாண்டிற்கும் கிறிஸ்த்துவ மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. உலகமனைத்தும் இந்த நாள் கொண்டாடப்படுவதால் - அதாவது பெரும்பாலான நாடுகளில் கிறிஸ்த்துவ மதம் பரவியிருப்பதால் - இதை கிறிஸ்த்துவர்களின் திருநாள் என்று பலரும் தவறாக கற்பிக்கிறார்கள்.

நம்முடைய நாட்டிலுள்ள மதவாதிகளுக்கு இது எங்கே புரியப்போகிறது.

நம்முடைய த.நாவிலும் ஜெ. ஆட்சி காலத்தில் ஜனவரி 1ம் தேதியை வேலை நாள் ஆக்கியது நினைவிலிருக்கும். கேட்டால் வருட முதல் நாள் அன்றே விடுமுறை விடுவது சரியல்ல என்பார். ஆனால் அவரே ஜனவரி 1ம் தேதி பந்த் நடத்தியவர்தான். முஸ்லீம் நாடு என கூறிக்கொள்ளும் மலேசியாவிலேயே புத்தாண்டு தினம் அரசு விடுமுறை. மலாய், சீன, இந்திய மக்கள் அனைவரும் ஒன்றுகூடி சிறப்பிக்கிறார்கள். இன்று நள்ளிரவில் வாண வேடிக்கைகள் என அனைத்து சிறப்பு அங்காடிகளிலும் அறிக்கை தொங்குகிறது!!

விட்டுத்தள்ளுங்கள்..

உங்களுக்கு என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

TBCD சொன்னது…

என்ன ஒரு முரண்பாடு...

கான்டசா, யமகா எல்லாம்..பழசு...புதுசு வந்தாச்சு...இப்போ "இந்தி"யாவிலே, ஆடி, நிஸ்ஸான் கூட ஓடுது. பைக்கிலே, பல்ஸர், சூசூகி நேரடியா அறிமுகப்படுத்தினது தான் சூடா இருக்கு.

//*நமக்கெல்லாம் வாகனம் மாறி கான்டசா, எமகா, ஏரோப்ளேன் என்று உலகை சுற்றுகிறோம். ஆனால் சாமிகள் மட்டும் மிக பழைய ஸ்டைல் காஸ்ட்யூம்சில், விலங்குகளின் வாகனத்தில் தான் இன்னும் இருக்கிறது.*//

பழைய கழிதலும், புதியன புகுதலும்..இனிதே நடைப்பெறட்டம்.

ஆசாமிகள் மாறியது போல சாமிகளும் மாற எல்லாம் வல்ல இனைய கூகிளாண்டவரை பிரார்த்திப்போம்.

உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

துளசி கோபால் சொன்னது…

ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Unknown சொன்னது…

ஒரு நாளின் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு தன்மை உண்டு. அதிகாலையிலும், மாலையிலும் மனம் இருப்பது போல மதியம் 12 மணிக்கு இருப்பதில்லை. கவனித்திருக்கிறீர்களா? மன நிலையில் மட்டுமல்லாமல் நம் கவனத்திலிலாத வேறு நிலைகலிலும் நேரத்திற்கேற்ப பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.

நள்ளிரவில் தீவிர ஆன்மீகப் பயிற்சி செய்வது குடும்ப வாழ்க்கை நடத்துபவற்கு ஏற்றதல்ல. இத‌ன் கார‌ண‌மாக‌வே கோவில்க‌ள் இர‌வில் மூட‌ப்ப‌டுகின்ற‌ன‌.

கோவி.கண்ணன் சொன்னது…

//nandan said...
ஒரு நாளின் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு தன்மை உண்டு. அதிகாலையிலும், மாலையிலும் மனம் இருப்பது போல மதியம் 12 மணிக்கு இருப்பதில்லை. கவனித்திருக்கிறீர்களா? மன நிலையில் மட்டுமல்லாமல் நம் கவனத்திலிலாத வேறு நிலைகலிலும் நேரத்திற்கேற்ப பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.

நள்ளிரவில் தீவிர ஆன்மீகப் பயிற்சி செய்வது குடும்ப வாழ்க்கை நடத்துபவற்கு ஏற்றதல்ல. இத‌ன் கார‌ண‌மாக‌வே கோவில்க‌ள் இர‌வில் மூட‌ப்ப‌டுகின்ற‌ன‌.

2:14 PM, December 31, 2007
//

நந்தன்,
24 x 7 திறந்து வைக்கச் சொல்லவில்லை, ஒரே ஒரு நாள் நாத்திகர் அல்ல ஆத்திகர்கள் புத்தாண்டுக்கு நள்ளிரவில் வணங்க நினைப்பது கொலை குற்றமா ? இந்துமதம் மதத்தைக் கட்டுப்படுத்த இந்துத்துவாக்களுக்கு யார் அத்தாரிட்டி கொடுத்தது ?

குமரன் (Kumaran) சொன்னது…

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் கோவி.கண்ணன். நல்ல வேளை நினைவுபடுத்தினீர்கள். புத்தாண்டிற்கு இங்கிருக்கும் கோவிலுக்குச் செல்ல வேண்டும். மதுரையில் இருந்திருந்தால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போயிருக்கலாம். சித்திரைத் திருவிழா அன்று கூட அவ்வளவு கூட்டம் இருக்காது. ஆங்கிலப் புத்தாண்டிற்கு வரும் கூட்டம் எல்லாக் கூட்டத்தையும் விட அதிகம். :-)

கோவை சிபி சொன்னது…

மணி ஆட்றதுக்கு ஒரு நாள் கண் முழிக்க முடியுமா?......

புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

கோவில்கள் ஏன் இரவில் திற‌ப்பதில்லை என்பதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறேன். இதில் இந்துத்வா எங்கே வந்தது? இந்துத்வா என்ற வார்த்தை கண்டுபிடிப்பதற்கு முன்பே கோவில்கள் இருந்திருக்கின்றன‌, அவற்றில் என்னென்ன முறைகள் செயல்படுத்த வேண்டும் என்ற விதிகளும் இருந்திருக்கின்றன.

ஏதாவது நினைத்தபடி எழுதிவிட்டு யாரவது விளக்கம் சொன்னால் பார்பனீயத்தையும்,இந்துத்துவாவையும் இழுக்க வேண்டாம்.

வீ. எம் சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வீ எம்
அன்புடன்

அரை பிளேடு சொன்னது…

தமிழ் புத்தாண்டு, தெலுங்கு புத்தாண்டு, மராத்தி புத்தாண்டுன்னு ஒவ்வொண்ணும் ஒவ்வொரு நாளில் இல்லையா வருகிறது. இந்துக்களுக்கு என்று பொதுவான புத்தாண்டு ஒன்று இல்லை. :))

தங்களுக்கு கிரேக்க புத்தாண்டு வாழ்த்துக்கள் :))

(கிரேக்கர்களுடைய புத்தாண்டு வழக்கமே இது. ஆங்கில புத்தாண்டு என்று சொல்ல ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்ததில்லை.

கிரிகோரியன் காலண்டர் :)))

மங்களூர் சிவா சொன்னது…

அண்ணே புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

பதிவு , நீங்கள் சொல்ல வந்த விசயம் அருமை ஆனால் கருத்து சொல்லும் அளவு எனக்கு விவரம் பத்தாது.

அன்புடன்

மங்களூர் சிவா

குமரன் (Kumaran) சொன்னது…

அரை பிளேடு,

கிரிகோரியன் காலண்டர் என்றால் கிரேக்க காலண்டரா? க்ரிகோரி என்ற போப்பாண்டவரால் ஏற்படுத்தப்பட்ட முறை என்பதால் அப்படி ஒரு பெயர் என்று எண்ணியிருந்தேனே.

விக்கிபீடியாவும் அப்படித் தான் சொல்லுகிறது.
http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்