பின்பற்றுபவர்கள்

24 டிசம்பர், 2007

பின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.

ஏழுஸ்வரங்களுக்குள் இசையெல்லாம் அடக்கம் என்றாலும் தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டது திரை இசை. தியாகராஜ பாகவதர் காலத்து பாடல்களைக் கேட்டால் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...சுப்ரமண்ய சுவாமி எனை மறந்தேன்..." சாஸ்திரிய சங்கீத அடைப்படையில் மூன்று நிமிடம் சொன்னதையே சொல்லி சொல்லி பத்து நிமிடத்திற்கு பாடல்களை இழுப்பார்கள். ஓரளவு சங்கீத ஞானம் அல்லது இசை மீது ஆசை உள்ளவர்கள் பாட முயற்சிப்பார்கள். 'ஆரியமாலா ஆரியமாலா..." ஒரே வரியே திரும்ப திரும்ப ஒரு பாடலில் வரும். இதுபோன்று சங்கீதத்துடன் தொடர்புடைய பாடல்கள் தான் 1950க்கு முன்பு வந்த படங்களின் திரை இசைப்பாடல், பொதுவாழ்க்கைக்கும் பாடலுக்கும் சற்றும் பொறுத்தமில்லாத பாடல்களாக இருக்கும்.

அதன் பிறகு திரை இசைத்திலகம் கேவி மகாதேவன் மற்றும் பலர் திரை இசையை கேட்டவர்களெல்லாம் பாடமுடியும் என்று வகையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் ஆகியோர்களின் வரிகளில் எழுதப்பட்ட பாடல்கள் திரை இசை என்ற புதிய வடிவத்தில் கொண்டு சொல்ல பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றன. திரை இசைப்பாடல்கல் கிராமங்களைத் தொட்டது 1950 காலகட்டங்களில் தான்.

அதன் பிறகு வந்த விஸ்வநாதன் இராம மூர்த்தி போன்றோர் அதற்கு மெருகூட்டினர், இளையராஜா திரை இசையை சிம்மாசனத்தில் உட்காரவைத்தார், ஏஆர்ரகுமான் உலக அளவில் தமிழ் திரை இசைக்கு பெருமை சேர்த்தார். இது சுறுக்கமான எனக்குத் தெரிந்த வரலாறு

*******

அண்்மையில் எதோ ஒரு விழாவில் பாடகர் எஸ்பிபாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு ஸ்டேண்ட் மெண்ட் விடுக்க, திரையுலக இசை அமைப்பாளர்களிடையே சலசலப்பை கிளப்பி இருக்கிறது, 'இன்று இருக்கும் இசை அமைப்பாளர்களின் இசை எம் எஸ் விஸ்வநாதன் துப்பிய எச்சிலில் இருந்து பொறுக்கியவை' என்று சொல்லி இருக்கிறார். அவரது குருபக்தி மெச்சத்தக்கது, காரணம் ஒரு திருமணவிழாவுக்கு செல்ல வேண்டி இருப்பதால் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் பாடலை பாடிக் கொடுக்க முடியாது என்று டிஎம்எஸ் சொன்னதை கவுரவ குறைவாக நினைத்த எம்ஜிஆர் டிஎம்எஸக்கு பாடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து எம்எஸவிஸ்வநாதனின் ரெகமெண்டேசனின் பேரில் எஸ்பிபி பாடகர் ஆனார்.

அவர் பாடிய முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'. எஸ்பிபி திறமை குறைந்தவர் அல்ல என்பதை அந்த ஒரு பாடலே நிரூபித்ததும், அதன் பிறகு பின்னனிப்பாடகர் வரிசையில் தனக்கென தனியிடம் பிடித்தார். எஸ்பிபியை அறிமுகம் படித்தியவர் என்ற முறையில் எம்எஸ்விஸ்வநாதனுடன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் எஸ்பிபி அவர் காலில் விழுந்து பொதுமக்கள் ரசிகர்களுக்கு முன்னிலையில் எம்எஸ்விக்கு குருவணக்கம் செய்வார். நானும் ஒரு நிகழ்ச்சியில் இதை பார்த்திருக்கிறேன். அதே போன்று பாடகர் மனோ இளையராஜாவின் காலில் விழுவார். குரு என்ற அடிப்படையில் எஸ்பிபி குருவணக்கம் செலுத்துவது அவரது நன்றி உணர்வு. அதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் தற்போதைய இசை அமைப்பாளர்கள் அனைவரும் எம்எஸவியின் எச்சிலை இசையாக்குகிறார்கள், காப்பி அடிக்கிறார்கள் என்ற தொனியில் சொல்லி இருப்பது, ஒரு மாபெரும் பாடகர் சிகரத்தின் பொருத்தமான செயல் இல்லை.

எம்எஸ்வி இசையில் அறிமுகமாகி இருந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் தான் அவருக்கு பாடும் நிலா என்ற உருவகத்தைத் தந்தது. அவர் தனியாக பாடி புகழ்பெற்ற பாடல்களில் 80 விழுக்காட்டுக்கும் மேல் இளையராஜாவின் இசையில் வந்தவை. இளையராஜா கிராமத்தில் இருந்துவந்தவர், கிராம மண்ணின் மணத்தை முதன் முதலில் இசையில் கலந்தவர், அவருக்கென ஒரு பாணியை உண்டாக்கிக் கொண்டவர் இளையராஜா இசையில் தொடாத விசயமே இல்லை என்பது எஸ்பிபிக்கு தெரியாமல் இருந்திருக்குமா ?

திரை இசை என்பது எம்எஸ்விக்கு முன்பே வடிவம் பெற்றுவிட்டது, அவர் தனக்குறிய வழியில் இசை அமைத்தார். இளையராஜா அவருக்கென தனிப்பாதையில் சென்றார். அவர் மகன் யுவன் கூட தனிப்பாதையில் தான் செல்கிறார். ஏஆர்ரகுமான் மற்றும் இன்றைய இசை அமைப்பாளர்கள் பலர் அவர்களுக்கென தனிப்பாதையை வைத்திருக்கிறார்கள். எவரையும் பின்பற்றி இருந்தால் எந்த இசை அமைப்பாளரும் தனித்திறமை என்று சொல்லிக் கொள்ளவே முடியாது புறக்கணிக்கப்பட்டு இருப்பர். இன்றைய இசை அமைப்பாளர்கள் எம்எஸவி போல் புகழ்பெற வேண்டும் என முன்னோடியாக கருதுவார்களேயன்றி அப்படியே காப்பி அடிப்பதெல்லாம் இன்றைய இசை வளர்ச்சியில் முற்றிலும் எடுபடாது.

அவரவர் பாணியில் இசை அமைப்பது கூட அலுப்பு தட்டுவதாக இருக்கிறது என்பதால் தான் வளர்ந்த இசை அமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர்ரகுமான் போன்றோர்கள் பல புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் ஒட்டுமொத்தமாக புழுதிவாறி தூற்றுவதை எஸ்பிபி போன்ற மாபெரும் பாடகர் செய்வது சரியா ?

அவரவர் காலத்து இசை அவரவர்க்கு உயர்ந்ததாக தெரியும், வழக்கமாக பெரிசுகள் பேசும் 'நாங்கள் அந்த காலத்தில...எங்க காலத்தில் எல்லாம்...' வகையில் ஒப்பீடு அளவில் எம்எஸ்வி சிறந்த இசையமைப்பாளராக எஸ்பிபிக்கு தெரிகிறது போல. புதிய இசைக்கருவிகள், மேற்கத்திய இசை என்று தமிழ் திரை இசையில் மாற்றம் நிகழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது தெரிந்தும், தானே அறியாத 'ஜெனரேசன் கேப்' தனக்கு இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்பிபி. ஒருவேளை ரீமிக்ஸ் பாடல்களைக் கேட்டு எஸ்பிபி 'எச்சில்' என்கிறாரோ அவருக்கே வெளிச்சம். எஸ்பிபியின் வெறித்தனமான ரசிகன் எனக்கும் அவரது பேச்சில் ஒருவிழுக்காடு கூட உடன்பாடு இல்லை.

ஒப்பீடுகள் என்பது சமகாலத்தவர்கள் குறித்த சிந்தனை/கருத்து என்பதை எஸ்பிபி போன்ற பெரிசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

12 கருத்துகள்:

மணிப்பக்கம் சொன்னது…

பாலா இப்படி பேசி இருக்க தேவை இல்லைதான்! தவறான வார்த்தைகள் வந்து விட்டது போலும். அப்படி பேச கூடியவராகத்தெரியவில்லை!

SP.VR. SUBBIAH சொன்னது…

எஸ்.பி.பி சொன்னது மாபெரும் தவறு!
அதுவும் இளையராஜா என்ற கங்கையாற்றை மறந்துவிட்டுச் சொன்னது அதைவிடப் பெரிய தவறு!

M.Rishan Shareef சொன்னது…

எஸ்.பி.பி சொன்னதில் என்ன தவறிருக்கிறதெனத் தெரியவில்லை நண்பரே.
எம்.எஸ் காலத்துப்பாடல்களை இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் என்ற பெயரில் கொத்திக் குதறுவதைப் பார்த்தால் பழைய இசை ரசிகர்கள் அனைவருக்கும் இதே ஆதங்கம்தான் ஏற்படும்.
ரஹ்மான் கூட தனது சுயத்தை இழந்து 'நியூ'வில் 'தொட்டால் பூ மலரும்' பின்னால் சென்றிருக்கிறார்.
இசை கூட ஒரு மொழிதான்.அதன் தனிப்பட்ட குரலை பலரும் எடுத்து காலத்திற்கேற்ப விளையாடுவதில் ஆட்சேபனையில்லை. ஆனால் பழம்பெரும் சிகரங்களில் எதிரொலித்த மொழியை இப்படித் துண்டாட வேண்டாமே...?

கோவி.கண்ணன் சொன்னது…

//எம்.ரிஷான் ஷெரீப் said...
எஸ்.பி.பி சொன்னதில் என்ன தவறிருக்கிறதெனத் தெரியவில்லை நண்பரே.
எம்.எஸ் காலத்துப்பாடல்களை இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ரீமிக்ஸ் என்ற பெயரில் கொத்திக் குதறுவதைப் பார்த்தால் பழைய இசை ரசிகர்கள் அனைவருக்கும் இதே ஆதங்கம்தான் ஏற்படும்.
ரஹ்மான் கூட தனது சுயத்தை இழந்து 'நியூ'வில் 'தொட்டால் பூ மலரும்' பின்னால் சென்றிருக்கிறார்.
இசை கூட ஒரு மொழிதான்.அதன் தனிப்பட்ட குரலை பலரும் எடுத்து காலத்திற்கேற்ப விளையாடுவதில் ஆட்சேபனையில்லை. ஆனால் பழம்பெரும் சிகரங்களில் எதிரொலித்த மொழியை இப்படித் துண்டாட வேண்டாமே...?
//

ரீமிக்ஸ் இப்போது டிரெண்ட். இயக்குனர் கேட்கும் பாடல்களை இசை அமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்து கொடுக்கிறார்கள். உங்கள் கருத்தை வைத்துப் பார்க்கும் போது இது உங்களுக்கு புரியாமல் போனதில் வியப்பல்ல. இசை அமைக்கவே தெரியாமல் ரீமிக்ஸ் பாடல்களை எடுக்கிறார்கள் என்று நினைக்கிறீர்களா ? பழைய படங்களே புதிய நடிகர்களை வைத்து திரும்பவும் வருகின்றன. பழைய இசையை இன்றைய இசை அமைப்பாளர்கள் ஞாபகப் படுத்த முயல்கிறார்கள். ரீமிக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு இத்தகைய கருத்து இருப்பதில் வியப்பு இல்லை. ரீமிக்ஸ் பாடல்களிலும் கொட்டாங்கச்சி வாத்தியம் வாசித்தால் யார் கேட்பார்கள் ?

Sundar Padmanaban சொன்னது…

GK,

அவர் என்ன context-இல் சொன்னார் என்று முழுவதும் தெரிந்துகொள்ளாமல் தவறான முடிவுக்கு வரவேண்டாம்.

பத்திரிகைகளில் பரபரப்புக்காக திரித்து உருவேற்றி வெளியிடுவது பரவலாக நடக்கும் விஷயம். இதைத் தலைப்பில் குறிப்பிடுவதிலிருந்தே செய்தியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

சுப்பையா ஸார். இவர் எம்எஸ்விக்குப் பிறகு வந்த எல்லாரையும் (இளையராஜா) உள்ளிட்டு எச்சில் என்று சொன்னதாகத் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறீர்கள் போல.

இளையராஜா மீது பாலு வைத்திருக்கும் அன்பை பலமுறை பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாய் மொழி தெலுங்கு என்பதால் சில சமயம் பேசும்போது தமிழில் அவர் தடுமாறுவதை கவனித்திருக்கிறேன். அதே சமயத்தில் தெரிந்த தமிழைச் சிதைக்காது பேசிப் பாடக்கூடியவர் பாலு.

வாய் தவறிச் சொன்ன வார்த்தைகளைப் பெரிதுபடுத்தாமல் விடுவது நலம்.

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//வற்றாயிருப்பு சுந்தர் said...
GK,

அவர் என்ன context-இல் சொன்னார் என்று முழுவதும் தெரிந்துகொள்ளாமல் தவறான முடிவுக்கு வரவேண்டாம்.

பத்திரிகைகளில் பரபரப்புக்காக திரித்து உருவேற்றி வெளியிடுவது பரவலாக நடக்கும் விஷயம். இதைத் தலைப்பில் குறிப்பிடுவதிலிருந்தே செய்தியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

சுப்பையா ஸார். இவர் எம்எஸ்விக்குப் பிறகு வந்த எல்லாரையும் (இளையராஜா) உள்ளிட்டு எச்சில் என்று சொன்னதாகத் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறீர்கள் போல.

இளையராஜா மீது பாலு வைத்திருக்கும் அன்பை பலமுறை பலவிதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

தாய் மொழி தெலுங்கு என்பதால் சில சமயம் பேசும்போது தமிழில் அவர் தடுமாறுவதை கவனித்திருக்கிறேன். அதே சமயத்தில் தெரிந்த தமிழைச் சிதைக்காது பேசிப் பாடக்கூடியவர் பாலு.

வாய் தவறிச் சொன்ன வார்த்தைகளைப் பெரிதுபடுத்தாமல் விடுவது நலம்.

நன்றி.
//

சுந்தர்,

இந்த இடுகையில் எஸ்பிபி மீது வைத்திருக்கும் மதிப்பும் சேர்த்தே எழுதப்பட்டு இருக்கிறது.

40 வருடங்களுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவர், 10 தமிழ் திரைப்படங்கள் வரை நடித்திருப்பவர் தமிழ் புரியாமல் பேசிவிட்டார் என்பதை மும்தாஜ், நமீதா பேசுவது போன்று எடுத்துக் கொள்ளச் சொல்கிறீர்களா ?

இதே போன்று வாய்தவறி ஆந்திர இசை அமைப்பாளர்கள் குறித்து குறிப்பக மணிசர்மா குறித்து இவரால் சொல்ல முடியுமா ?

அது செய்தி ஆகி இருக்கிறது. வாய் தவறி என்றால் செய்தி வந்த உடனேயே மறுப்பு தெரிவித்திருப்பார்.

நானும் எஸ்பிபி ரசிகன் தான். நான் இங்கு எழுதி இருப்பது அவர் பெயர் கெட்டுவிட்டதே என்ற வேதனையில்.

Arun Kumar சொன்னது…

HI kannan
you are giving a reference from a tamil portal which normally copies the news from other websites and twists the news.

சென்ற வார தினதந்தி நாளிதழை படித்ததில் எனக்கு தெரிந்த விழயம்.
விசுவநாதன் சொன்னது-
என் ஆசிர்வாதம் அனைவருக்கும் உண்டு..தொட்டால் பூ மலரும் பாடலை ரகுமான் ரீ மிக்ஸ் செய்த போது பாடலின் டியுனை தான் மாற்றினார். பாடலுக்கு இடையே எந்த வித ஆங்கில வார்த்தையயும் சேர்க்கவில்லை. அதற்கே என்னிடம் அவர் செய்யாலாமா என்று பல முறை கேட்ட பின்பு தான் செய்தார்.
பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்வதில் தவறில்லை ஆனால் அந்த பாடலின் இடையே ஆங்கிலத்தை கலப்பத்து எனக்கு வருத்தமாக இருக்கிறது
இது தான் அவர் சொன்னது

பாலசுப்ரமணியம் இப்படி ஏதும் சொன்னது போல தினதந்தி,தினகரன் மற்றும் தினமலர் நாளிதழ்கள் ஏதும் சொல்லவில்லை..
ஆனால் இந்த நாளிதழ்களின் செய்திகளை அப்படியே ctrl + c and ctrl + v செய்யும் தட்ஸ் தமிழ் தளம் எந்த வித ஆதாரமும் இல்லாமல் இதை போல செய்தி கொடுத்து இருக்கிறதே என்றே தோன்றுகிறது...

தட்ஸ்தமிழ் அலுவலகத்தையும் அதில் பணிபுரியும் ஒரே ஒரு நபரையும் நன்றாக தெரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன்..

அங்கு தமிழ் பிரிவில் பணிபுரிபவர் A N Khan. இவர் அங்கு ஆல் இன் ஆல் அழகுராஜா.. இவரு தான் அலுவலக பணியாளர் முதல் மேனேஜர் வரை.இவரோடு தட்ஸ் தமிழ் forum முன்பு இருந்த போது சில காரணங்களால் பல முறை தொடர்பு கொண்டு இருக்கிறேன். இவர்கள் ஆபிஸ் (8*8) சில்க்போர்டு பாலத்துக்கு அருகில் இருக்கிறதுஇந்த செய்தி கண்டிப்பாக திரிக்கபட்டது. தயவு செய்து தட்ஸ் தமிழ் இணைய செய்திகளை எல்லாம் ஆதாரமாக எடுக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்

M.Rishan Shareef சொன்னது…

//ரீமிக்ஸ் இப்போது டிரெண்ட். இயக்குனர் கேட்கும் பாடல்களை இசை அமைப்பாளர்கள் ரீமிக்ஸ் செய்து கொடுக்கிறார்கள்//

சரி.இயக்குனர்களின் விருப்பமாகவே இருக்கட்டும் நண்பா.புதுமுக இசையமைப்பாளர்கள் பரவாயில்லை.இயக்குனருக்கு எடுத்துச் சொல்லமுடியாது.சொன்னால் வாய்ப்பு பறிபோய்விடும்.ஆனால் புகழ்பெற்ற,திகதி எளிதில் வாங்க முடியாத இசையமைப்பாளர்கள் கூட பழைய இசையில் ஆதிக்கம் செலுத்துவதில்தான் உடன்பாடில்லை.
உங்கள் எழுத்துக்களை முப்பது,நாப்பது வருடங்களுக்குப் பிறகு எவரேனும் எழுதி தன் பெயர் போட்டுக்கொண்டால் உங்களுக்கு எப்படியிருக்கும்?
இசை கூட அது போன்ற ஒரு மொழிதான்.பழைய ஆடையை எடுத்து புது அலங்காரப்படுத்தி உடுத்துக்கொள்வது போன்றும்,பழைய சமையலை சூடுபடுத்தி உணவாகக் கொள்வது போன்றும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் தனி மனிதனோடு நின்றுவிடக்கூடியதல்ல.


// பழைய இசையை இன்றைய இசை அமைப்பாளர்கள் ஞாபகப் படுத்த முயல்கிறார்கள். //

ஞாபகப்படுத்தக்கூடும்.ஆனால் இன்றைய இளைய தலைமுறையினரின் மனதில் யார் நிற்பார்கள்? இசைக்குச் சொந்தக்காரரா? இல்லை. பழைய இசையைப் புதுமை செய்த புதியவரா?
காலம்,காலமாக நிலைத்து நிற்கக்கூடிய இசையினை எக்காலத்தில் நினைத்துப் பார்த்தாலும் அதற்குரிய சொந்தத்தந்தை தான் ஞாபகத்துக்கு வரவேண்டுமே ஒழிய ,(குழந்தை சிறப்பாக வளர்ந்து,உலகம் போற்றிய பின்)தத்தெடுப்பவர் அல்ல.


//ரீமிக்ஸ் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு இத்தகைய கருத்து இருப்பதில் வியப்பு இல்லை. ரீமிக்ஸ் பாடல்களிலும் கொட்டாங்கச்சி வாத்தியம் வாசித்தால் யார் கேட்பார்கள் ?//

ரீமிக்ஸ் என்றால் இரண்டோ,அதற்கு மேற்பட்ட இசையையோ மட்டும் கலந்து ஒரு புதிய இசையை உருவாக்கலாம்.தப்பில்லை.
ஆனால் பாடல்கள் என்ன பாவம் செய்தன?
ஒரு பாடல் குறிப்பிட்ட காலத்தில் என்ன சூழலுக்கென்று,என்ன பிண்ணனியில் எழுதப்படுகிறதோ அதையெல்லாம் தவிர்த்து இன்று குத்துப்பாடல்களில் பயன்படுத்துவதுதான் ரீமிக்ஸ் எனில் அது தேவையா என்றே கேட்கிறேன்.

கொட்டாங்குச்சியைக்கூட பயன்படுத்தவேண்டிய
விதத்தில் இசையமைப்பாளர்கள் பயன்படுத்தினால் அனைவரும் ரசிக்கவே செய்வார்கள்.
மற்றபடி இன்றைய கணனிக்காலம் வரை இசையை நம்மிடம் கொண்டு வந்து சேர்த்த ஒரு பழம்பெரும் இசைக்கருவியைக் கிண்டல் செய்ய வேண்டாம் நண்பரே.

ROSAVASANTH சொன்னது…

ராஜாவின் இசைக்கு முன்னோடி கிடையாது, ராஜா அளித்தது புத்தம் புதிய இசை என்பது பாலுவிற்கு மிக நன்றாக தெரியும். அந்த தொனியில் பல முறை பேசியிருக்கிறார். ராஜாவை வானளவு பலமுறை பாராட்டியிருக்கிறார். அதனால் ஒரு போதும் எஸ்.பி.பி. ராஜாவின் இசையை எம் எஸ்வியின் துப்பலாக பேசியிருக்க மாட்டார். நீங்கள் தட்ஸ் டமில் டாட் காமில் படித்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை சார்ந்தது என்பது கேள்விக்குரியது.

கீழே உள்ள சுட்டியில் உள்ள செய்தியை படியுங்கள். அவர் ராஜாவை பற்றியல்லாமல் தன்னை பற்றி சொல்லிக் கொண்டாதாகவே தெரிகிறது.

http://tamil.cinesouth.com/masala/hotnews/new/19122007-6.shtml

" எம்.எஸ்.வி-ராமமூர்த்தி ஆகிய இந்த இருபெரும் இசை ஜாம்பவான்கள் துப்பிய எச்சங்கள்தான் நாங்களெல்லாம். இவர்களைப் போன்ற மாமேதைகள் இனி உருவாகமுடியாது என உணர்ச்சிவசப்பட்டவராய் உரையை முடித்தார்."

SurveySan சொன்னது…

SPB என்னா சொன்னார்னு வீடியோ பாக்கணும்.
எனக்கு என்ன தோணுதுன்னா, அவரு வேற ஏதாவது மீன் பண்ணி சொன்னத, மீடியா திரிச்சு விட்டிருப்பாங்கன்னு.
அவருகிட்டயே வெளக்கம் கேக்கலாம்.

கண்டிப்பா,மத்த இசை அமைப்பாளர்கள் எச்சில் பொறுக்கி இசை அமைக்கிறார்கள்னு சொல்லிருக்க மாட்டாருன்னு நெனைக்கறேன்.

SPB is known for his humbleness.

:(

கோவை சிபி சொன்னது…

சமீப காலங்களில் கொஞ்சம் அதிகமாக பேசி வருகிறார்.சில சமயம் அவர் சொல்ல வந்தாதயும் மீறி தவறாக பேசி விடுகிறார்.
இளையராஜா பற்றி பேசி இருக்க வாய்ப்பில்லை என நம்பலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி,
எஸ்பிபி ரசிகன் என்ற முறையில் செய்தி எனக்கு வருத்தம் அளித்தது. அவர் சொன்னார் என்றும் சொல்லவில்லை என்றும் இருவேறு செய்திகள் வருகின்றன. எதிரான செய்திகளில் யாருமே எஸ்பிபி மீது காழ்புணர்வு கொண்டு சொல்வதற்கான காரணம் எதுவுமே இல்லை என்பதை நினைத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

அவர் அப்படி சொல்லி இருந்தால் அவரிடமிருந்து வருத்தமோ, தவறான செய்திகாக இருந்தால் கண்டனமோ வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்