பின்பற்றுபவர்கள்

23 மார்ச், 2008

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - கீதாச்சாரம்

"கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - ஸ்ரீமத் பகவத்கீதை

இதுபற்றி பலரும் பலவித விளக்கங்கள் கொடுத்து இருக்கிறார்கள். அதில் பல விளக்கங்கள் நேரடியான பொருள் கொள்ளத்தக்கவாறு இருக்கும். இதே சொற்றொடருக்கு நம் பெரியார் தோழர்களோ, ம.க.இ.க தோழர்களோ வேறு பொருள் கொடுப்பார்கள். அடிமைத்தனத்தின் கட்டுமானம் சரியாமல் இருக்க இந்த சொற்றொடரை பயன்படுத்தியதாக சொல்கிறார்கள். அதாவது ஆண்டைகளிடம் அடிமையாக இருப்பவர்கள் கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற சாதாரண ஊதியம் கொடுத்தால், அல்லது ஊதியமே கொடுக்காமல் விட்டால் கூட கடமையை செய் அதன் பலனான ஊதியத்தை எதிர்பார்க்காதே என்று மறுப்பதை இந்த சொற்றொடர் ஞாயப்படுத்தியதாக மாற்றுப் பார்வையில் குற்றம் சுமத்துகிறார்கள். தோழர்கள் சொல்வது சரியே என்றாலும், நான் கீதையின் இந்த சொற்றொடரை அதே பொருளில் கொள்வதில்லை. இது சமூகவியல் (அடிமைத்தன) கட்டுக் கோப்புக்கு எழுதப்பட்டது என்பதை விட (தனிமனித) உளவியலுக்கே இதன் பொருள் சரியாக இருக்கும் என்பது தான் என்னுடைய எண்ணம்.

ஒருவர் விரும்பிச் செய்யும் எந்த செயலிலும் அவரது நோக்கமே முதல் தூண்டுதல், அத்தகைய தூண்டுதல் வெற்றியடைந்த ஒருவரை அல்லது பலரைப் பார்த்து அவருக்கு வந்திருக்கலாம், அல்லது தன் முயற்சியாக இந்த செயலை செய்யவேண்டும் என்ற தூண்டுதல் அவருக்கு ஏற்பட்டு இருக்கலாம்.

எனக்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வது அலுப்பாக இருக்கிறது, என்ன தான் உழைத்தாலும் கிடைக்கும் ஊதியம் எனக்கு போதுமான அளவாக இருப்பதில்லை என்று நினைக்கிறேன். நிறுவனங்கள் ஒருவரின் கடுமையான உழைப்பை கவனித்து வந்தால் ஒருவேளை இரண்டு மாத ஊதியத்தை ஆண்டு இறுதியில் அவருக்கு கொடுப்பார்கள், அல்லது பதவி உயர்வு கொடுத்து சற்று ஊதியத்தை கூட்டுவார்கள். இதுதான் பொதுவாக நடப்பது, அது போதிய அளவாக இல்லை, நான் எனது தேவைகளையும், வருங்காலத்திற்கும் சில திட்டமிடல்களை செய்து ஒரு நிறுவனம் தொடங்க இருக்கிறேன், நான் சார்ந்துள்ள வேலையின் நிபுணத்துவம் பெற்றுருக்கிறேன், சிறிய அளவிற்கு நிறுவனம் தொடங்க பணமும் இருக்கிறது அப்படி இல்லை என்றால் வங்கிக் கடன் வாங்கி அடுத்த மாதம் நிறுவனம் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கு, இன்றே முடிவு செய்து, ஒருமாதம் முன்கூட்டியே சொல்லிவிட வேண்டும், என்கிற தற்போது வேலை செய்யும் நிறுவன விதிகளின் காரணமாக, 30 நாட்களின் இறுதியில் விடுவிக்கச் சொல்லி தற்போது வேலை செய்யும் நிறுவனத்திற்கு கடிதம் கொடுத்துவிடுகிறேன்.

அடுத்து,
எனது எண்ணப்படி நிறுவனம் தொடங்கிவிட்டேன், இன்னும் ஓர் ஆண்டுக்குள் எனது நிறுவனத்தை பெரிய அளவில் கொண்டுவரவேண்டும் என்று அதற்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொண்டிருக்கிறேன். ஒரு 8 மாதம் நல்ல வளர்ச்சி, அதன் பிறகு எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய நிறுவனம் ஒன்று நான் தயாரிக்கும் பொருளையே பாதிக்கும் பாதிவிலையில் விற்கிறது, இன்னும் 6 மாதத்திற்கு விற்கலாம் என்று நான் தயாரித்த பொருள்கள் எல்லாம் உற்பத்தி விலைக்குக் கூட போகாத நிலையில் பழைய மாடல் என்று அப்படியே தேங்கிவிடுகிறது, நான் திட்டமிட்டபடி ஓர் ஆண்டுகுள் என் நிறுவனம் அடுத்து வளர்வதற்கான வாய்பே இல்லை, மேலும் நட்டமடையாமல் இருக்க தற்காலிகமாக மூடிவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். வங்கிக்கடன் கழுத்தை நெறிக்கிறது. என்ன செய்யலாம் ? வாங்கிய கடனுக்காக தற்கொலை செய்து கொள்ள முடியுமா ?

இலக்கில் வெற்றி என்ற முடிவில் ஒருவித வெறியுடன் செயலாற்றுபவர்கள் எல்லோருமே இதுபோன்ற சூழல்களில் தற்கொலைதான் செய்து கொள்வார்கள். மிகச் சிலரே 'எல்லாம் சரியாகத்தான் செய்தோம், வேறு சிலகாரணங்களினால் எண்ணியபடி நடக்கவில்லை, இதிலிருந்துவிடுபட்டு அல்லது இதில் புதுமையை புகுத்தி எழுந்து நிற்போம் என்று தன்னம்பிக்கையை கொண்டிருப்பார்கள். அதாவது இதைச் செய்தால் இது நடக்கும் என்று பொதுவாக தெரிந்தாலும், இலக்கு இதுதான் இதற்கு என்ன செய்யவேண்டுமோ அதை சரியாக செய்வோம், இடையில் இடற்பாடுகள் வந்தால் மாற்று நடவடிக்கையான இவைகளைச் செய்ய வேண்டும் என்ற பொறுமை வெற்றியை வெறியுடன் அனுகுபவர்களுக்கு இருக்காது. அவர்கள் நோக்கம் முழுவதும் வெற்றி அடைவதைப் பற்றிய எண்ணமாக மட்டுமே இருக்கும், அவை கிடைக்கமல் போகும் போது தளர்ந்துவிடுவார்கள்.

கஜினி 16 முறை 'தோல்வி' அடைந்தான் என்று வரலாற்றில் சொல்லப்படுவதில்லை, அதற்கு மாற்றாக 16 முறை 'முயற்சித்து' 17 ஆவது முறை வெற்றிபெற்றான் என்று சொல்லப்படுகிறது. தோல்விகள் என்பது வெற்றிக்கான முயற்சிகள் என்ற அளவில் புரிந்து கொண்டால் தோல்விகள் எவரையும் பயமுறுத்தாது. அவை மேலும் ஊக்கம் கொடுக்கும். 10 பேர் ஓட்டத்தில் 3 வர் மட்டுமே வெற்றியடைவர், முயற்சி / தகுதி என ஒன்றுமே இல்லாமல் வேடிக்கைப்பார்க்கும் பார்வையாளர்களின் கவனத்தில் மீதம் 7 பேர் முயற்சி செய்தவர்களாகவே தெரிவர்.

ஒரு செயலில் வெற்றி என்பது நம் இலக்கு என்றாலும் சில எதிர்பாராத காரணிகளால் அந்த இலக்கு தடைபடும், நன்றாக தேர்வு எழுதிய மாணவனின் தேர்வுத்தாள், திருத்தப்படும் போது வீட்டில் சண்டையிட்டு வந்த ஆசிரியரின் கையில் கிடைத்து அவன் தோல்வி அடைந்தால் அதற்கு அவன் பொறுப்பு ஏற்று தோல்வி என்று துவண்டு போய் தற்கொலை செய்து கொண்டால் அவன் முட்டாள் தான். தன்னளவில் நான் நன்றாக செய்தேன், இடையில் எதோ தப்பு நடந்திருக்கிறது என்று உணரும் பொறுமை இருந்தால் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து அவன் முதல் மதிப்பெண் பெற்றிருப்பதை அனைவருக்கும் உணர்த்த முடியும்.

நாம் விரும்பி செய்யும் எந்த செயலும் முனைப்புடன் செய்யப்பட வேண்டும், அவை இலக்கு மட்டுமே, அந்த இலக்கை அடைவது வெற்றி என்று நாம் கருதினால் இலக்கு நோக்கிய பயணத்தில் வெற்றி என்ற போதை செயல்பாடுகளை தீவிரப்படுத்த பயன்படும். ஆனால் அதே போதையுடன் இலக்கின் முடிவை நோக்கி சென்று அதை அடையவில்லை என்றால் எல்லாம் தலைகீழாக மாறிவிடும்.

வெற்றி(கள்) என்பது இலக்கு மட்டுமே, அதை அடைந்தால் மகிழ்ச்சி கிடைக்கும், ஆனால் எந்த ஒரு வெற்றியும் நிரந்தாமல்ல. நேற்று தனி ஒரு ஆளாக ஒரு ரவுடி இன்னொரு ரவுடியை பலர் அறிய நடுரோட்டில் வெட்டிக் கொன்று கொக்கறித்து சென்றவனை, 3 மாதம் கழித்து வெட்டிக் கொள்ளப்பட்டவனின் தம்பி, அண்ணனை வெட்டியவனை அதே இடத்தில் தீர்த்துக்கட்டுவான்.

இலக்கு நோக்கி பயணம் செய்யும் செயல் தான் நம்முடையது, அதை அடைகிறோமோ என்பது நம் செயல்களை மட்டுமே உள்ளடக்கிய காரணி அல்ல.

"எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே. எதிர்ப்பார்ப்பு ஏமாற்றம் தந்தால் அதை தாங்கிக் கொள்ளும் சக்தி இல்லாமல் போய்விட வாய்புகள் உண்டு பலனை எதிர்பாராமல் செய்யும் இலக்கு நோகிய பயணத்தில் இலக்கை அடைந்தால் மகிழ்ச்சி, இல்லை என்றாலும் முயற்சித்தோம் என்ற மன நிறைவு கிடைக்கும்" - என்பதை மேற்கண்ட கீதை வரிகளினால் புரிந்து கொண்டேன்.

" கடமையைச் செய் பலனை எதிர்பாராதே " - இது ஒரு உளவியல் அருமருந்து, எதிலும் முயற்சி செய்பவர்கள் முன்கூட்டியே இதை அருந்தலாம்.

பின்குறிப்பு : இந்த இடுகையை இந்தவார நட்சத்திர பதிவர் கண்ண(ன்)பிரான் ரவிசங்கருக்கு சமர்பிக்கிறேன். :)

48 கருத்துகள்:

குசும்பன் சொன்னது…

//
"எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே.//

அதுபோல் இருக்க முடியவில்லையே...

ஜிம்முக்கு போய் அடுத்த நாளே தொப்பை குறைஞ்சுட்டான்னு தொட்டு தொட்டு பார்த்து குனிஞ்சு குனிஞ்சு பார்த்து கழுத்து வலி வந்து விடுகிறது..
ஒரு சின்ன ஜிம்முக்கே இப்படி என்றால்..பெரிய இலக்காக இருந்தால் எதிர்பார்பு அதிகமாக இருக்கிறது.

ஜெகதீசன் சொன்னது…

//
கடமையைச் செய் ! பலனை எதிர்பாராதே !!" - கீதாச்சாரம்"
//

பதிவை எழுது! பின்னூட்டத்தை எதிர்பார்க்காதே!!!!!

:)))

TBCD சொன்னது…

அப்படி என்றால்

"கடமையைச் செய் ! உடனடியாக பலனை எதிர்பாராதே !!" என்று தானே இருக்கனும் .....

SP.VR. SUBBIAH சொன்னது…

////நான் கீதையின் இந்த சொற்றொடரை அதே பொருளில் கொள்வதில்லை. இது சமூகவியல் (அடிமைத்தன) கட்டுக் கோப்புக்கு எழுதப்பட்டது என்பதை விட (தனிமனித) உளவியலுக்கே இதன் பொருள் சரியாக இருக்கும் என்பது தான் என்னுடைய எண்ணம்.////

அதுதான் உண்மை!

actions are in your hand; Not the result

பரிட்சை எழுதுவது உன் கையில்; மார்க வாத்தியாரின் கையில்!:-)))))

SP.VR. SUBBIAH சொன்னது…

/////Blogger TBCD said...
அப்படி என்றால்
"கடமையைச் செய் ! உடனடியாக பலனை எதிர்பாராதே !!"
என்று தானே இருக்கனும் .....////

அண்ணாச்சி ‘ கடமையைச் செய் ! உடனடியா பலனை எதிர்பாராதே' -
என்பதை விட
‘கடமையைச் செய் !உன் விருப்பப்படி பலனை எதிர்பாராதே'
என்பது சரியாக இருக்கும் என்று சிற்றறிவு சொல்கிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
பதிவை எழுது! பின்னூட்டத்தை எதிர்பார்க்காதே!!!!!

:)))
//

தம்பி ஜெகா,

சரியாக புரிந்து கொண்டீர்கள்.
:)

அதன் பிறகு வரும் புண்ணோட்டத்தையும் எதிர்பாராதீர்கள் என்று சொல்லி இருக்கலாம்.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
அப்படி என்றால்

"கடமையைச் செய் ! உடனடியாக பலனை எதிர்பாராதே !!" என்று தானே இருக்கனும் .....
//

டிபிசிடி ஐயா,

உடனடி பலன் உடனடி லாட்டரியில் (பரிசு சீட்டில்) கூட கிடைப்பது கடினம், 'லாட்டரி சீட்டு வாங்குதல்' என்ற முயற்சி மட்டுமே உங்களது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...

அதுதான் உண்மை!

actions are in your hand; Not the result

பரிட்சை எழுதுவது உன் கையில்; மார்க வாத்தியாரின் கையில்!:-)))))
//

வாத்தியார் ஐயா,

சரிதான்,

வாத்தியார் கையில் தப்பு நடந்தது தெரிந்தால் பின்பு வாத்தியார் ஹெட்மாஸ்டரிடம் மண்டி போடனும், அதுவும் வாத்தியாருக்கு தெரியனும்.

TBCD சொன்னது…

இந்த பொன் மொழி உதிர்த்தவர், கண்ணன்/கிருட்டிணன்..
உதிர்த்த இடம் போர்க்களம்..
கேட்டவர் அர்ச்சுனன்

இந்தப் பின்னனியில் அதன் அர்த்தம்,

உன்னை இயக்குவது நான்..நீ செய்யும் எந்த செயலுக்கும் நானே பொறுப்பு..பாவம் சேருமே என்று கலங்காதே..

கடமையயைச் செய் (பலா)பலனை எதிர்ப்பாராதே என்றதாகத் தான் சொல்கிறார்..

இந்த கடமையயைச் செய் பலனை எதிராபாராதே என்பதை ஏற்றால், நீங்கள் சுயநினைவுடன் செயல் பட்டாலும், இறைவன் என்ற ஒருவன் உங்களை இயக்குகிறான் என்பதை ஒப்புக் கொண்டதாக அர்த்தம்.

"Dont count your chickens before they hatch" என்பது பழைய மொழி..

"Count the chickens before they hatch" புது மொழி...

திட்டமிட்ட செயல் என்பது பலன் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவதே ஆகும். வருவது வரட்டும் என்று வியாபாரம் செய்ய முடியாது...

"ROI" தெரியாமல், இப்போதெல்லாம், தனி மனிதன் கூட காரியம் ஆற்றுவதில்லை.

வீடு வாங்கினால் கூட, இத்தனை வரி கழியும், இவ்வளவு வீட்டு வாடகை கழியும், என்று கணக்குப் போட்டு, வருடத்திற்கு இவ்வளவு லாபம் என்று முடிவு செய்தே இயங்குகிறார்கள்.


//
கோவி.கண்ணன் said...
டிபிசிடி ஐயா,

உடனடி பலன் உடனடி லாட்டரியில் (பரிசு சீட்டில்) கூட கிடைப்பது கடினம், 'லாட்டரி சீட்டு வாங்குதல்' என்ற முயற்சி மட்டுமே உங்களது.
:)
//

கோவி.கண்ணன் சொன்னது…

குசும்பன் said...
//
"எந்த ஒரு இலக்கு நோக்கிய பயணத்திலும் அதற்கான கடமையான செயலை செய். பலனை எதிர்பாராதே.//

அதுபோல் இருக்க முடியவில்லையே...

ஜிம்முக்கு போய் அடுத்த நாளே தொப்பை குறைஞ்சுட்டான்னு தொட்டு தொட்டு பார்த்து குனிஞ்சு குனிஞ்சு பார்த்து கழுத்து வலி வந்து விடுகிறது..
ஒரு சின்ன ஜிம்முக்கே இப்படி என்றால்..பெரிய இலக்காக இருந்தால் எதிர்பார்பு அதிகமாக இருக்கிறது.
//

சரவணா,
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்,
காலை நேரத்தில் செய்யுங்கள், அப்பறம் குணிந்து பாருங்கள், தொப்பை குறைந்து
கால்விரல் தெரியும்.

Thamizhan சொன்னது…

கீதையை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்து அவரவ்ர் தனக்குப் பிடித்ததை எடுத்துக் கொள்கிறார்கள்.ஆனால் மொத்தமாக கீதை ஒரு வர்ண காப்பு நூல்.வர்ணத்தைப் படைத்தவனே நான் தான் ஆனால் என்னாலேயே அதை மாற்ற முடியாது,அவரவர் அவரவ்ர் வர்ணத் தொழிலைச் செய்வதுதான் கர்மா என்பதுதான் அடிப்படை.

எங்கோ மூலையில் தூசி பட்டுக் கிடந்த
கீதையை புத்த மதம் ஓங்கி இருந்த காலத்திலே தூசி தட்டி ஒரு வெறியுடன் பரப்பியவர் ஆதி சங்கரர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
கீதையை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்து அவரவ்ர் தனக்குப் பிடித்ததை எடுத்துக் கொள்கிறார்கள்.ஆனால் மொத்தமாக கீதை ஒரு வர்ண காப்பு நூல்.வர்ணத்தைப் படைத்தவனே நான் தான் ஆனால் என்னாலேயே அதை மாற்ற முடியாது,அவரவர் அவரவ்ர் வர்ணத் தொழிலைச் செய்வதுதான் கர்மா என்பதுதான் அடிப்படை.

எங்கோ மூலையில் தூசி பட்டுக் கிடந்த
கீதையை புத்த மதம் ஓங்கி இருந்த காலத்திலே தூசி தட்டி ஒரு வெறியுடன் பரப்பியவர் ஆதி சங்கரர்.
//

தமிழன்,

உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. குறிப்பாக வருணத்தின் அரணாக இருந்தது என்பதில் உடன்படுகிறேன். பகவத் கீதை எவ்வாறு பயன்பட்டது என்பதை எனது இன்னொரு (நட்சத்திர வார) பதிவில் எழுதி இருக்கிறேன்.

http://govikannan.blogspot.com/2007/08/19.html

இங்கு சொல்லி இருப்பது அதில் உள்ள ஒரு செய்யுள் குறித்து மட்டுமே.

ஒரு நூல் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டு இருந்தாலும், அதில் வேறு எங்கும் சொல்லப்படாத ஒரு சில நல்ல கருத்துக்கள் கூட இருக்கலாம் அல்லவா ?

அல்லாதவற்றை தள்ளுவது போல் நல்லதையும் குறிப்பிட்டு பாராட்டலாம் என்பது என் எண்ணம்.

Irai Adimai சொன்னது…

கம்பெனி ல பாஸ் கிட்ட சம்பள உயர்வு கேக்கலாம்னு போனப்போ அவரு எப்படியோ தமிழ்மணத்துல இந்த தலைப்ப பார்த்துட்டாரு. அவரு சொன்ன பதில் தான் உங்களோட தலைப்பு

கோவி.கண்ணன் சொன்னது…

//Irai Adimai said...
கம்பெனி ல பாஸ் கிட்ட சம்பள உயர்வு கேக்கலாம்னு போனப்போ அவரு எப்படியோ தமிழ்மணத்துல இந்த தலைப்ப பார்த்துட்டாரு. அவரு சொன்ன பதில் தான் உங்களோட தலைப்பு
//

:)

ஒண்ணும் பண்ண முடியாது, அவரு உங்க கிட்ட வேலை முடிச்சாச்சா என்று கேட்கும் போது பின்வருமாறு சொல்லுங்க "கடமையைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்...பலனை எதிர்பார்க்க வேண்டாம்!"
:)

12:02 AM

வவ்வால் சொன்னது…

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வதை ஒரு தாரக மந்திரமாக சொல்வதே அடிமைகளை அடிமைகளாக வைத்திருக்க சொன்னதே , அதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதென்றால் ஒன்று நீங்கள் பல அடிமைகளை மேய்ப்பவராக இருக்க வேண்டும், அல்லது அடிமைகளில் ஒருவராக இருக்க பழகியவராக இருக்க வேண்டும்!

முதலில் எதெல்லாம் கடமை? அதுக்கு என்ன வரையறை?

கல்யாணம் செய்றவன் எல்லாம் எதுக்கு செய்றான் அவனுக்கு ஒரு குழந்தை வேண்டும்னு தானே, குழந்தை பிறக்கலைனா மருத்துவரிம் , சாமியாரிடம் எல்லாம் ஏன் ஓடனும்?

கல்யாணம் செய்தா ஒரு வாரிசு உருவாகனும் என்ற எதிர்ப்பார்ப்பு இல்லாமல் எவன் இங்கே செக்சுவல் திருப்திக்காக மட்டும் கல்யாணம் செய்றான் அதை காட்டுங்க பார்ப்போம்!

கடமைனு எல்லாத்தையும் சொல்ல முடியுமா?

கடமைனா என்னனு சொன்னிங்கனா பிறகு வந்து என் பதிலை சொல்கிறேன்!

SP.VR. SUBBIAH சொன்னது…

////வாத்தியார் கையில் தப்பு நடந்தது தெரிந்தால் பின்பு வாத்தியார் ஹெட்மாஸ்டரிடம் மண்டி போடனும், அதுவும் வாத்தியாருக்கு தெரியனும்.///

வாத்தியாருக்கு கல்வி அமைச்சரைத் தெரியும்
ஹெட் மாஸ்டரைக் காவடி துக்க வைத்து விடுவாராக்கும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வதை ஒரு தாரக மந்திரமாக சொல்வதே அடிமைகளை அடிமைகளாக வைத்திருக்க சொன்னதே , அதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதென்றால் ஒன்று நீங்கள் பல அடிமைகளை மேய்ப்பவராக இருக்க வேண்டும், அல்லது அடிமைகளில் ஒருவராக இருக்க பழகியவராக இருக்க வேண்டும்!//

டிபிசிடி ஐயா உங்களுக்கு மகிழ்ச்சியா ? வவ்வால் நான் சொல்வதையெல்லாம் சரி என்பது போல் அவர் மீது குறைபட்டுக் கொண்டீர்களே. :)

வவ்ஸ்,
அடிமைத்தனம் பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சியை அகற்றிய பின்பே ஏற்பட்டது, திருவள்ளுவார் காலத்தில் அவ்வாறு இருந்தது போல் திருக்குறளில் ஒரு குறள் கூட கிடையாது. கீதை எழுதப்பட்டதாக பல்வேறு காலகட்டங்கள் சொல்லப்பட்டாலும், ஆதிசங்கரர் அதைப்பற்றி அறிந்திருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கும் போது கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று கொள்ளலாம். எனவே அந்த காலகட்டங்களில் அடிமைத்தனம் இருந்தது போன்றும், அதற்க்காக கீதை கட்டமைக்கப்பட்டதாக சொல்லப்பட்டுவது ஆராய்ச்சிக்குறியது, தற்காலத்தில் கீதை வருணம் போற்றுகிற அரசியலுக்கு பயன்படுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கீதையில் சொல்லப்பட்டவை தவறா ? என்பதைவிட கீதை வருணாசிரம் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது என்று மட்டுமே சொல்லிக் கொள்ள முடியும், எழுதியவரின் நோக்கம் அது இல்லாமலேயே பிற்காலத்தில் அவை அடித்தளமாக்கப்பட்டதற்கு முன்கூட்டிய உள்நோக்கம் என்று சொல்ல முடியுமா ? உதாரணமாக பிராமனன் யார் என்பதில் கீதை ஓரளவுக்கு நல்ல விளக்கமே கொடுத்து இருக்கிறது, பிரமனன் என்பது பிறப்பு சார்ந்ததல்ல, அது செயலைச் சார்ந்ததே என்ற விளக்கம் இருக்கிறது. அவை பின்னால் திரிந்து போனதும் அதன் பிறகு பிரமனன் என்ற சாதியாக உறுவாகியதற்கும் கீதையை மட்டும் குறை சொல்ல முடியாது. உயர்மாந்தர் உருவாக்கத்திற்கு பதில் உயர்சாதி உருவாக்கத்திற்கு சிலர் பயன்படுத்திக் கொண்டதை கீதையில் நோக்கம் என்று கொள்ள முடியவில்லை.

//முதலில் எதெல்லாம் கடமை? அதுக்கு என்ன வரையறை? //

கடமை என்பது நாம் தேர்ந்தெடுத்துக் கொண்ட செயலில் / இலக்கில் நாம் ஆற்றவேண்டிய பங்கு.


//கல்யாணம் செய்றவன் எல்லாம் எதுக்கு செய்றான் அவனுக்கு ஒரு குழந்தை வேண்டும்னு தானே, குழந்தை பிறக்கலைனா மருத்துவரிம் , சாமியாரிடம் எல்லாம் ஏன் ஓடனும்?
கல்யாணம் செய்தா ஒரு வாரிசு உருவாகனும் என்ற எதிர்ப்பார்ப்பு இல்லாமல் எவன் இங்கே செக்சுவல் திருப்திக்காக மட்டும் கல்யாணம் செய்றான் அதை காட்டுங்க பார்ப்போம்!

கடமைனு எல்லாத்தையும் சொல்ல முடியுமா?
கடமைனா என்னனு சொன்னிங்கனா பிறகு வந்து என் பதிலை சொல்கிறேன்!//


நம்மீது உள்ள பொறுப்புகள், நாம் செய்யவேண்டியவை என்று தீர்மானித்துக் கொள்பவை ஆகியவற்றில் நாம் செயாலற்றுவதற்கு முனைவாதே கடமை.


கீதை செயல்படவேண்டாம், செயலை மறுத்துவிட்டு எல்லாம் பரப்பிரம்மமே என்று சோம்பேறியாக இருங்கள் என்று சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். எதைச் செய்தாலும் வெற்றியை மட்டுமே இலக்காக்கக் கொண்டு செய்யாமல் இலக்குக்கு தேவையான கடமையை சரியாக செய்யுங்கள் என்று சொல்வதாகத்தான் புரிந்து கொள்கிறேன். எந்த ஒரு செயல் வெற்றி அடைவதற்கும் அது சரியாக செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்பது முதன்மையான விசயங்கள் மட்டுமே, அதில் வெற்றி என்பது புறகாரணிகளையும் உள்ளடக்கியது.
நீங்கள் நாளை செய்ய வேண்டியதை இன்றே கூட தொடங்கிவிட்டீர்கள், விடியும் போது அதன் தேவையே கூட இல்லாமல் போக வாய்ப்புண்டு, அது போன்ற நேரங்களில் செய்ததெல்லாம் வீன் ? என்று அலுத்துக் கொள்ளாமல் இருக்க என்ன செய்வீர்கள் ? எல்லாம் விதி என்று தானே சமாதனமடைவீர்கள் அல்லது முதிர்ச்சியுடன் செய்யவேண்டியதை சரியான நேரத்தில் தான் செய்தேன், ஏனோ அதன் தேவை இல்லாமல் போய்விட்டது என்று சமாதனம் அடைவீர்கள்.

திருமணம் செய்வதைப் பற்றி கேட்டு இருக்கிறீர்கள், திருமணத்தின் நோக்கம் மாறிவிட்டது என்பதில் ஆழ்ந்த கவலை கொள்பவர்களில் நானும் ஒருவன்.. திருமணம் செய்து கொள்வதே சந்ததிகளை உருவாக்குவதற்கும் தனக்கு தன்னைப் புரிந்து கொண்ட ஒருவர் வாழ்க்கை துணையாக இருந்தால் வாழ்வதற்கான பொருள் இருக்கும் என்பதே திருமணத்தின் நோக்கம்.


தற்பொழுது வெளிநாடுகளில் குறிப்பாக சிங்கையில் நடக்கும் ஒருசில திருமணங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை விரும்புவதில்லை. லைப்பார்ட்னர் என்ற ஒப்பந்த்தில் இணைகிறார்கள். வாழ்வியல் நோக்கம் என்பது சுயநலங்களில் அதுவும் மற்றொருவர் இல்லாமல் வாழமுடியாது என்பதால் ஒப்பந்த அடிப்படை
சுயநலமே திருமணம் என்று மாறிவருகிறது. :(


விட்டால் என்னை பகவத்கீதைக்கு உரை எழுத வச்சி கோவி.கண்ணனை கோகுல கண்ணன் ஆக்கிடுவிங்க போல :)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இந்த பொன் மொழி உதிர்த்தவர், கண்ணன்/கிருட்டிணன்..
உதிர்த்த இடம் போர்க்களம்..
கேட்டவர் அர்ச்சுனன்

இந்தப் பின்னனியில் அதன் அர்த்தம்,

உன்னை இயக்குவது நான்..நீ செய்யும் எந்த செயலுக்கும் நானே பொறுப்பு..பாவம் சேருமே என்று கலங்காதே..

கடமையயைச் செய் (பலா)பலனை எதிர்ப்பாராதே என்றதாகத் தான் சொல்கிறார்..

இந்த கடமையயைச் செய் பலனை எதிராபாராதே என்பதை ஏற்றால், நீங்கள் சுயநினைவுடன் செயல் பட்டாலும், இறைவன் என்ற ஒருவன் உங்களை இயக்குகிறான் என்பதை ஒப்புக் கொண்டதாக அர்த்தம்.

"Dont count your chickens before they hatch" என்பது பழைய மொழி..

"Count the chickens before they hatch" புது மொழி...

திட்டமிட்ட செயல் என்பது பலன் எப்போது கிடைக்கும் என்பதை அறிந்து செயல்படுவதே ஆகும். வருவது வரட்டும் என்று வியாபாரம் செய்ய முடியாது...

"ROI" தெரியாமல், இப்போதெல்லாம், தனி மனிதன் கூட காரியம் ஆற்றுவதில்லை.

வீடு வாங்கினால் கூட, இத்தனை வரி கழியும், இவ்வளவு வீட்டு வாடகை கழியும், என்று கணக்குப் போட்டு, வருடத்திற்கு இவ்வளவு லாபம் என்று முடிவு செய்தே இயங்குகிறார்கள்.
//

டிபிசிடி ஐயா,

கீதை போர்களத்தில் சொல்லப்பட்டதாக சொல்வது இடைச் சொருகல் தான். செய்யுள் அமைப்பில் காலகட்டங்கள் வேறுபட்டுள்ளதை அண்ணல் அம்பேத்கார் தெளிவாக குறிப்பிட்டு கீதை ஒருவரால் எழுதப்பட்டதல்ல என்றும் சொல்கிறார்.

மேற்கண்ட கீதை கர்மயோக பிரிவில் வருவது, செயல் தொடர்பான ஆலோசனை வழங்குவதே அந்த செய்யுளின் பொருள். வெற்றி தோல்விகளைப் பற்றி கவலைப்படாமல் உனது செயலை ஆற்று என்பதே இதன் பொருள். மாறாக எதையும் செய்யாது இரு என்று சொல்லவில்லை. இந்த செய்யுள் ஊக்க மருந்து தான். எதிர்மறை பொருளில் புரிந்து கொள்வது பிழையே.


//வீடு வாங்கினால் கூட, இத்தனை வரி கழியும், இவ்வளவு வீட்டு வாடகை கழியும், என்று கணக்குப் போட்டு, வருடத்திற்கு இவ்வளவு லாபம் என்று முடிவு செய்தே இயங்குகிறார்கள்.//


வீடுவாங்க வேண்டாம் என்று சொல்லவில்லை. எல்லோரும் எதிர்பார்பது எப்போதும் நடக்கிறதா ? 10 ஆண்டுக்கு முன்பு வாங்கி இருந்தால் வாங்கி இருக்கலாம் தற்பொழுது சென்னையில் வீடு வாங்க முடியுமா ? சென்ற ஆண்டில் வாங்க முடிவு செய்து பணம் அனுப்புகிறீர்கள், ஒப்புக் கொண்டதை மறுத்து விலை ஏறிவிட்டதாக இருமடங்கு தரகர் மறுவிலை சொல்கிறார் ? ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று திண்டிவனம் பக்கம் செல்வீர்கள்.

சிறு எழுத்துப்பிழை திருத்தி இருக்கிறேன்

வவ்வால் சொன்னது…

கோவி,
நான் கேட்பெதெல்லாம் இப்படி இருந்தா , அதன் மாற்றுக்கருத்தென்ன என்று கேட்பதற்கு தான் , ஆனால் பலரும், நான் சொன்னது பதில் அதுக்கும் மேல நீ என்ன கேட்பது என்று இருக்காங்க! நான் அப்படினா இது தவறு தானே என்று மடக்குவேன், பதில் இருந்தா சொல்லனும்ல. அதனால் தான் திபிசிடி அதை நான் நொங்கெடுப்பதாக சொல்கிரா போலும், ஆனால் நீங்கள் தான் ஒன்று ஒன்பது விதங்களில் பதில் சொல்லிடுவிங்களே அப்புறம் என்ன?

//அடிமைத்தனம் பிற்காலத்தில் களப்பிரர் ஆட்சியை அகற்றிய பின்பே ஏற்பட்டது,//

அப்படிப்பட்ட அடிமைத்தனம்னு இல்லை,குறைவான கூலிக்கு உழைப்பை சுரண்டுவதும் அடிமைத்தனத்தின் விளைவு தானே,

எனவே ஏதோ ஒருவகையில் ஒருவரை அடக்கி வைக்க இதெல்லாம் பயன்படுகிறது என்று நினைப்பேன்.

//எதைச் செய்தாலும் வெற்றியை மட்டுமே இலக்காக்கக் கொண்டு செய்யாமல் இலக்குக்கு தேவையான கடமையை சரியாக செய்யுங்கள் என்று சொல்வதாகத்தான் புரிந்து கொள்கிறேன்.//


தேர்வு எழுதும் மாணவன் , என்னால முடிஞ்ச அளவுக்கு எழுதிட்டேன் பாஸ் ஆனால் என்ன ஆகாட்டி என்னனு இருப்பானா, சொல்லுங்க எத்தனை மாணவர்கள் தேர்வில் தோல்வினு தர்கொலை செய்ததாக செய்திகள் வருது.

தத்துவம் சொல்லி மூளையை மழுங்க செய்யும் யுக்தி இது எல்லாம்.

மேலும்,
//ஆதிசங்கரர் அதைப்பற்றி அறிந்திருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கும் போது கிபி 2 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது என்று கொள்ளலாம்.//

ஆதி சங்கரர் 8 ஆம் நூற்றாண்டு அல்லவா?

//நம்மீது உள்ள பொறுப்புகள், நாம் செய்யவேண்டியவை என்று தீர்மானித்துக் கொள்பவை ஆகியவற்றில் நாம் செயாலற்றுவதற்கு முனைவாதே கடமை.
//

நம் மீதான பொறுப்புகள் எப்படி நம் மீது வந்து விழுகின்றது? நாமே தேடிக்கொண்டதா, அடுத்தவராக சுமத்தியதா? கடமையை செய்ய தவறினால் யார் தண்டிப்பா?

நமக்கான வேலையை நாம் செய்தால் அதற்கான பலனை யார் அனுபவிப்பது நாம் தானே , அப்படி இருக்க பலனை ஏன் எதிர்ப்பார்க்க கூடாது.

குழந்தை கூட அழுதால் தான் பால் கிடைக்கும் அப்படி இருக்கும் போது பலனை நாம் கேட்டுப்பெறாமல் போனால் இக்காலத்தில் யார் இவர் ரொம்ப நல்லவர்னு பாராட்டிக்கிட்டு இருக்க போறாங்க, அல்லது பாராட்டே சோறு போட்டுறுமா?

இப்போ தமிழ் நாட்டில் விவசாயி தன் கடமைப்படி நாற்று நட்டு வைத்திருந்தான் கன மழை பொழிந்து எல்லாம் அழிந்துவிட்டது. இப்போ ஏன் அவனுக்கு அப்படி ஒரு தண்டனை? விதியா இது?

விவசாயி பலனை எதிர்ப்பார்க்காதவன் எனில் பயிர் அழிந்தாலும் சந்தோஷப்படனும் படுவானா சொல்லுங்க, அவன் கிட்டே போய் உடன் கடமையை செய்தாய் விளைவை எதிர்ப்பார்க்காதேனு கீதை சொன்னா உங்களைத்தான் சும்மா விடுவானா?

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி,
நான் கேட்பெதெல்லாம் இப்படி இருந்தா , அதன் மாற்றுக்கருத்தென்ன என்று கேட்பதற்கு தான் , ஆனால் பலரும், நான் சொன்னது பதில் அதுக்கும் மேல நீ என்ன கேட்பது என்று இருக்காங்க! நான் அப்படினா இது தவறு தானே என்று மடக்குவேன், பதில் இருந்தா சொல்லனும்ல. அதனால் தான் திபிசிடி அதை நான் நொங்கெடுப்பதாக சொல்கிரா போலும், ஆனால் நீங்கள் தான் ஒன்று ஒன்பது விதங்களில் பதில் சொல்லிடுவிங்களே அப்புறம் என்ன? //

வவ்ஸ்,

நல்ல புரிதல். நன்றி
//அப்படிப்பட்ட அடிமைத்தனம்னு இல்லை,குறைவான கூலிக்கு உழைப்பை சுரண்டுவதும் அடிமைத்தனத்தின் விளைவு தானே,

எனவே ஏதோ ஒருவகையில் ஒருவரை அடக்கி வைக்க இதெல்லாம் பயன்படுகிறது என்று நினைப்பேன்.//

அது தற்போதைய நடைமுறை, அந்த செய்யுள் தனிமனித மேன்மைக்கு என்பதை மறுத்து சமூக கட்டுப்பாட்டுக்கு திருத்தி பொருள் படுத்திக் கொண்டார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதைத்தான் பெரியார் தோழர்கள் சரியாக சொல்லி இருக்கிறார்கள் என்றேனே. இங்கு நான் சொல்லி இருப்பது, தனிமனித ஒரு செயல் வெற்றி தோல்விகளில் முடியும் போது தேற்றிக் கொள்ள வேண்டியவை எவை என்பதை நான் புரிந்து கொண்டுள்ள வகையில் விளக்கினேன்.

//தேர்வு எழுதும் மாணவன் , என்னால முடிஞ்ச அளவுக்கு எழுதிட்டேன் பாஸ் ஆனால் என்ன ஆகாட்டி என்னனு இருப்பானா, சொல்லுங்க எத்தனை மாணவர்கள் தேர்வில் தோல்வினு தர்கொலை செய்ததாக செய்திகள் வருது.

தத்துவம் சொல்லி மூளையை மழுங்க செய்யும் யுக்தி இது எல்லாம்.

மேலும்,

//

முடிந்தமட்டும் எழுதுவுதற்கு தேர்வு அல்ல, தேர்வில் தேறுவதற்கு ஏற்றவகையில் எழுதுவது தான் தேர்வு, 100 மதிப்பெண்ணு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முடிந்தமட்டும் என்று எழுதுவேன் என்றால் பயிர்ச்சி எடுத்துக் கொண்டு வராதமானவன் தேறமாட்டான். சிலர் ஆசிரியரின் கவணக் குறைவால் தோல்வி அடைந்திருந்தாலும், நன்றாக எழுதினேன் என்று நம்பும் மாணவர்கள், வினாத்தாள்களை ஒப்பிட்டுப்பார்த்து மறுமதிப்பீட்டுக்கு விண்ணம் செய்வார்கள். நீங்களே சொல்லுங்கல் எல்லாவற்றிலு 95 விழுக்காடு எடுத்தமாணவன் சமூக அறிவியலில் 20 விழுக்காடு பெற்றுவிட்டான் என்றால் அதிர்ச்சி அடைந்து அவன் தற்கொலை செய்து கொள்வானா ? கண்டிப்பாக மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்வான்.

எந்த ஒரு மாணவனுக்கு தாம் எழுதிய லட்சணத்தை வைத்து சுயமதிப்பீட்டை தேர்வு முடிவுகள் வரும் முன்னே செய்து கொள்ள முடியும். அதையும் மீறி தற்கொலை செய்து கொள்பவன், எதோ அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பி இருந்தான் மீண்டு எழும் போராட்டத்திற்கான சக்தி அவனிடம் இல்லை என்று தான் சொல்லவேண்டும்

தத்துவம் என்பவை வாழ்கையுடன் தொடர்பு இல்லாதவை அல்ல, அப்படி இருந்தால் அவற்றை உயர்ந்தது என்று எவரும் சொல்லப்போவது இல்லை. சில தத்துவங்கள் சிலவற்றை அனுகும் முதிர்வை தருகின்றன. எல்லாவற்றையும் தத்துவ குப்பை என்று ஒதுக்கிவிட முடியுமா ? என்றோ ஒருநாள் இறக்கத்தான் போகிறோம் என்று அனைவரும் அறிந்திருக்கிறோம், அதற்காக நோய்வந்தால் சரிசெய்யாமல் இருந்துவிடுகிறோமா ?

//ஆதி சங்கரர் 8 ஆம் நூற்றாண்டு அல்லவா? //

இருக்கலாம், ஆனாலும் அந்தகாலகட்டத்தில் தீண்டாமை போன்ற வன்கொடுமைகள் இந்த அளவுக்கு தலைவிரித்து ஆடவில்லை. புலையனிடம் ஞானம் பெற்றோமே என்று சங்கரர் வருந்தினாராம், அது சிறிய அளவுக்குத்தான் ( உங்களுக்குத்தான் பாயிண்ட் எடுத்துக் கொடுக்கிறேன்)

//நம் மீதான பொறுப்புகள் எப்படி நம் மீது வந்து விழுகின்றது? நாமே தேடிக்கொண்டதா, அடுத்தவராக சுமத்தியதா? கடமையை செய்ய தவறினால் யார் தண்டிப்பா? //

இப்ப நீங்க அர்ஜுனனன், நான் கண்ணன் :)

சமூக அமைப்பில் வாழ்கிறோம், சமூக சார்பிற்க்காக சில கடமைகள் செய்ய வேண்டி இருக்கிறது, குடிமகனாக சில கடமைகள், பெற்ற தந்தை தாயாக சில கடமைகள், இவை எல்லாம் நம்மீது தன்னிச்சையாக அதன் தொடர்பினால் ஏற்படுபவை. நமது சொந்த கடமை என்பது தன்னுடைய நலத்திற்காக ( சுயநலம் என்ற பொருள் அல்ல) சில லட்சியங்களை வைத்து செயலலற்றுவது நம்முடைய நம் கடமை, அதன் பொறுப்பு முழுக்க முழுக்க நம்மிடம் தான் இருக்கிறது. ஓட்டுப் போடும் கடமையை செய்யாமல் இருக்கிறீர்கள், இப்பொழுது சொல்லுங்கள், சமூக கடமையை செய்ய தவறினால் தண்டிப்பா ? உங்கள் சந்ததிகளுக்கு செய்யவேண்டிய கடமைகளை சரியாக செய்யாவிட்டால் யார் யாருக்கு தண்டனை ?

//நமக்கான வேலையை நாம் செய்தால் அதற்கான பலனை யார் அனுபவிப்பது நாம் தானே , அப்படி இருக்க பலனை ஏன் எதிர்ப்பார்க்க கூடாது. //

பலனை அனுபவிப்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. மரத்தின் நோக்கம் விதை என்றாலும் பழம் என்பதை விதைப்பரவலுக்காக ஏற்படுத்துகிறது, பலன் இன்று எவரும் எதையும் செய்வதில்லை என்பதால் தான் தாவரங்களில் தேன், பழம் போன்றவைகள் மகரந்த சேர்க்கைக்கும், விதைப்பரவலுக்கும் பரிசாக தயார்நிலையில் இருக்கிறது.

பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை மட்டுமே, அதை எதிர்பார்பாக மாற்றி கிடைக்கும் என்று உறுதியாக இருந்து கொண்டு, இறுதி செயலில் எற்படும் தடை போன்ற புறகாரணிகள் உங்களால் முன்கூட்டியே தீர்மாணித்து தவர்க்க முடியும் என்றால் உங்கள் எதிர்ப்பார்ப்பு தகுந்த பலனைத் தரலாம். இலக்கின் கடைநிலை சிதைவதற்கு எப்போதும் புறக்காரணிகளே காரணமாக அமைந்துவிடுகின்றன, அவற்றை முன்கூட்டியே அறியும் தீர்க்க தரிசனம் நம்மிடமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா ?

//குழந்தை கூட அழுதால் தான் பால் கிடைக்கும் அப்படி இருக்கும் போது பலனை நாம் கேட்டுப்பெறாமல் போனால் இக்காலத்தில் யார் இவர் ரொம்ப நல்லவர்னு பாராட்டிக்கிட்டு இருக்க போறாங்க, அல்லது பாராட்டே சோறு போட்டுறுமா? //

குழந்தை அழுவது, பசுயின் தேவைக்கு அது செய்யும் முயற்சி, தாய் பக்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குழந்தை அழும். முயற்சி செய்யவேண்டாம் என்று அந்த செய்யுள் சொல்லவில்லை.

//இப்போ தமிழ் நாட்டில் விவசாயி தன் கடமைப்படி நாற்று நட்டு வைத்திருந்தான் கன மழை பொழிந்து எல்லாம் அழிந்துவிட்டது. இப்போ ஏன் அவனுக்கு அப்படி ஒரு தண்டனை? விதியா இது?

//விவசாயி பலனை எதிர்ப்பார்க்காதவன் எனில் பயிர் அழிந்தாலும் சந்தோஷப்படனும் படுவானா சொல்லுங்க, அவன் கிட்டே போய் உடன் கடமையை செய்தாய் விளைவை எதிர்ப்பார்க்காதேனு கீதை சொன்னா உங்களைத்தான் சும்மா விடுவானா? ////

அவனுக்கு ஏற்பட்ட நட்டம் அவனால் ஏற்பட்டது அல்ல என்பதால் தான் அரசாங்கம் கடன் தள்ளுபடி செய்கிறது. சுனாமியில் ஏன் இத்தனை பேர் இறந்தார்கள் விதியா என்றும் கூட கேட்பீர்கள் போல் இருக்கிறதே.

இயற்கைச்சூழலில் வாழ்கிறோம், அதன் சீற்றத்தை தாங்கிக் கொள்ளும் சக்தி நம்மிடம் இல்லாததால், இயற்கையாக எழும் இயற்கை சீற்றத்தைப் பார்த்து நாம் பயந்து நடங்குகிறோம். உயிரினங்களின் அடிப்படை குணம் பயம் தான். இயற்கையில் மழைபொழிவது போல் எப்போதாவது கனமழை பெய்வதும், வெள்ளம் வருவதும், பூகம்பம் வருவதும் கூட இயற்கைதான்.
:)

வவ்வால் சொன்னது…

கோவி ,

என்ன இப்படி விளக்கி தள்ளிட்டிங்க நான் கேட்டது வேற,

மாணவன் தேர்வு எழுதிட்டு பாஸ் ஆகனும்னு எதிர்ப்பார்க்கிறான் அதுவும் அதிகம் மார்க் வறனும்னு எதிர்ப்பார்ப்பான். அதாவது பலனைனு சொல்கிறேன்.பலன் கிடைக்கலைனா வருத்தப்பட்டு தற்கொலைக்கூட செய்றாங்கனு சொன்னேன், இங்கே பலனை எதிர்ப்பார்த்தல் இருக்கா இல்லையா?

குழந்தை அழுவதை முயற்சி என்று சொல்லிட்டுப்போய்ட்டிங்க , அதன் விளைவாக பால் என்ற பலனை எதிர்ப்பார்க்குதா இல்லையா?

மழைப்பொழிவதை இயற்கைனு சொல்லிட்டிங்க, நான் சொன்னது விவசாயி விளைச்சல் என்ற பலனை எதிர்ப்பார்க்கிறானா இல்லையா என்பதை?

மழை சரியா பெய்தாலும் அதிகம் விளையனும், அதிகம் விலைக்கிடைக்கணும் என்றும் எதிர்ப்பார்ப்பான் அதான் இயறகை, எனவே பலனை எதிர்ப்பார்த்தலே இயற்கை!

அப்போ கீதை ஏன் மனித இயற்கைக்கு எதிராக சொல்கிறது, அது யார் நன்மைக்காக?

இந்த மூன்றிலும் முயற்சி செய்கிறார்கள், உழைக்கிறார்கள், நான் இதெல்லாம் கீதை செய்ய வேண்டாம்னு சொன்னதாக எங்கே கேட்டேன், அதன் பலனை எதிர்ப்பார்க்கிறார்கள் என்றே சொல்கிறேன்.

கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது , நீயா எதையும் எதிர்பார்க்காதே நானா கொடுத்தா என்ன கொடுக்கிரேனோ அதை ஏற்றுக்கொள் என்று சொல்ல வரும் ஆண்டான் அடிமை கொள்கையின் ஒரு தத்துவ மந்திரம் என்றே சொல்வேன்.

ஒருவன் எட்டு மணி நேரம் வேலை செய்து விட்டு , 100 ரூபாய் எதிர்பார்த்தால் அவனிடம் வேலையை செய் , சம்பளம் நான் என்ன தருகிறேனோ அதான் என்று சொல்ல "கடமையை செய் பலனை எதிர்ப்பார்க்காதே" போன்ற தத்துவங்கள் உதவுகின்றன.ஒரு காலத்தில் விவசாயக்கூலி வேலை செய்பவர்களுக்கு உரிய சம்பளமே கொடுப்பதில்லை அப்போதைய நிலச்சுவாந்தார்கள். எல்லாம் இப்படி பட்ட தத்துவங்களில் ஊறியதால் தான்.

எனக்கு கீழ வேலை செய்ய வேண்டியது உழைப்பவர்களின் கடமை என்று கட்டமைத்துக்கொண்டர்கள் அதனை அனுபவிப்பது பணக்காரர்கள் உரிமைனும் உருவாக்கிக்கொண்டார்கள்.எனவே உழைப்பின் பலனை அவர்களுக்கு கொடுக்காமல் இருக்க இந்த கீதை எல்லாம் வழிக்காட்டி!

TBCD சொன்னது…

கோவி ஐயா,

உங்க மாசச் சம்பளத்தை எதிர்பார்க்காதீங்க...கடமையயைச் செய்யுங்க..

சம்பளத்தை, எனக்கும் வவ்வாலுக்கு பாதி பாதி கொடுத்துடுங்க..

(நாங்க இரண்டு பேரு தான் அதை எதிர்ப்பார்க்கனும் என்றுச் சொல்லுகிறோம்....)

RATHNESH சொன்னது…

கோவி.கண்ணன்,

"அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்" (ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக அதனால் முதலில் அழியக் கூடியதும் பின்னர் ஆகி வரக் கூடியதும் கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்பே செய்ய வேண்டும்) என்று சொல்லிக் கொடுத்திருக்கும் தமிழ் ஆசானை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்த தமிழ் ரத்தமா இப்படி ஒரு வர்ணநூலின் ஏதோ ஓர் அற்ப சூத்திரத்திற்கு அற்புதப் பொருள் ஏற்படுத்த முயல்வது?

நீங்கள் தொழில் தொடங்கும் போதாவது என்ன செய்திருக்க வேண்டும் என்றும் கூட என் அய்யன் சொல்லிக் கொடுத்திருக்கிறானே! (தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றூம் இல்).

RATHNESH சொன்னது…

முதலாளியிடம் வெறுத்துப் போய் சொந்தத் தொழில் முயல்வோர்க்கு இன்னொரு எச்சரிக்கையும் செய்திருக்கிறாரே வள்ளுவர்:

"ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்"

வவ்வால் சொன்னது…

திபிசிடி,

இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்குமே, கோவியாரையும் கேள்விக்கேட்க ஆரம்பிச்சதும் :-))

எல்லாம் விளக்கம் பெற்று தெளிவுப்பெறத்தான்,சரியான பதிலை அளித்தால் ஏற்றுக்கொள்ளத்தான் போகிறேன், உடனே கோவி சொன்னதும் ஏற்றுக்கொண்டேன் என்று கதை கட்ட கிளம்பிடுவீரே :-))

கோவி,
திபிசிடி சொன்னது பார்த்திங்களா , சம்பளத்தை எங்ககிட்டே கொடுத்திடுங்க நாங்களாப்பார்த்து "கடமைக்கு" ஒரு தொகைய திரும்ப தந்திடுறோம் இது எப்படி இருக்கு :-))
-----------------
ரத்னேஷ்,

குறளில் இல்லாதது எதுவுமே இல்லை என்பதை அழகாக எடுத்துக்காட்டிங்க, எல்லா குறளும் அத்துப்படி போல , எந்த கருத்துக்கு எதுனு உடனே எடுத்து உடுறிங்க :-))

குறள் தான் உண்மையான வாழ்வியல் அற நூல், சும்மா ஒவ்வாத ,செயல்படுத்த முடியாத வறட்டு சித்தாந்தம் பேசுவதில்லை, ஆனால் அதை பின்பற்றவே இங்கே யாருக்கும் முடிவதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்வால், ரத்னேஷ் மற்றும் டிபிசிடி ஐயா,

மக்கள் கவனத்தை ஈர்த்த எந்த ஒரு ஆக்கமூம் தற்காலத்தில் பயனில்லாமல் அல்லது திரிந்த பொருளுடன் வர்ணம் மாறி இருக்கலாம்.

நீங்களோ, நானோ எதாவது ஒன்றைச் சொன்னால் அதன் வீச்சு எத்தனை பேரை சென்று அடையும் ?

தனிமனிதனுக்கு சக்தி இருக்கிறதா என்று கேட்டால் இல்லை என்று தான் உடனே சொல்லுவோம். திருவள்ளுவர், பெரியார், புத்தர், சாக்ரடீஸ், கன்பூயூசிஸ், விவேகந்தர், முகமது நபி, ஏசுநாதர் இவர்களின் வார்த்தைகள் வெறும் வார்த்தையா ? அவற்றையெல்லாம் நாம் பேசினால் தத்துவம் ஆகி இருக்குமா ?

பலராலும் ஏற்றுக் கொண்ட ஒன்று வெறும் உள்நோக்கத்திற்காக கட்டமைப்பட்டால் அது அதன் தேவை முடிந்த உடனேயே மறைந்திருக்கும். அதையும் தாண்டி காலத்தில் கரையா வண்ணம் இருக்கிறதென்றால் அதில் இருக்கும் சில உயிரோட்டமுள்ள உண்மைகளே தான் காரணம்.

எவை தத்துவங்கள் என்பதைவிட யார் எழுதுவது தத்துவம் என்று சார்பு நிலையுடன் பார்த்தோமேயானால் அதன் பொருள் திரிந்து, சிதைந்தே காணப்படும்.

நான் முழுகீதைக்கும் எனது கருத்து இது என்று தெரிவிக்கவில்லை. ஒரே ஒரு செய்யுள், எனக்கு மிகவும் பிடித்த ஒன்றைப் பற்றி மட்டும் இங்கே எழுதினேன். இதில் எனக்கு மாற்றுகருத்து இல்லை.

அன்றாடம் செய்யும் கடமைகளான வேலை அதற்கு கிடைக்கும் சம்பளம் பற்றியெல்லாம் பெரிய கருத்து ஒன்றும் இல்லை. திட்டமிடும் செயல்கள், இலக்கு நோக்கிய பயணத்தில் நாம் கவணம் பெற வேண்டியவை செய்வதை முனைப்புடன் வெற்றி தோல்வி பற்றி சிந்திக்காது செய்வதே. பெற்றவர்கள் அனைவருமே பிள்ளை நம்மை வருங்காலத்தில் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் அவனுக்கானவற்றை பலன் நோக்கி செய்வதில்லை. அவர்களது கடமை அவனை வளர்த்து, படிக்கவைத்து சமூகத்தில் ஒருவனாக அடையாளப்படுத்துவதற்கான ஆயத்தங்களை செய்வது மட்டுமே.

TBCD சொன்னது…

கடைசியில் வந்தவர்களுக்கெல்லாம், கோவியார் சம்பளத்தில் பங்கு கொடுக்கவியலாது என்பதையும்,
இனிமேல் யாரையும் பங்குதாரராக சேர்க்கும் எண்ணம் இல்லை என்பதையும், அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


//
RATHNESH said...
கோவி.கண்ணன்,

"அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல்" (ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக அதனால் முதலில் அழியக் கூடியதும் பின்னர் ஆகி வரக் கூடியதும் கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்பே செய்ய வேண்டும்) என்று சொல்லிக் கொடுத்திருக்கும் தமிழ் ஆசானை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெற்றிருந்த தமிழ் ரத்தமா இப்படி ஒரு வர்ணநூலின் ஏதோ ஓர் அற்ப சூத்திரத்திற்கு அற்புதப் பொருள் ஏற்படுத்த முயல்வது?


நீங்கள் தொழில் தொடங்கும் போதாவது என்ன செய்திருக்க வேண்டும் என்றும் கூட என் அய்யன் சொல்லிக் கொடுத்திருக்கிறானே! (தெரிந்த இனத்தோடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றூம் இல்).

1:24 PM, March 24, 2008
//

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
கடைசியில் வந்தவர்களுக்கெல்லாம், கோவியார் சம்பளத்தில் பங்கு கொடுக்கவியலாது என்பதையும்,
இனிமேல் யாரையும் பங்குதாரராக சேர்க்கும் எண்ணம் இல்லை என்பதையும், அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
//

TBCD ஐயா,

உங்களை கலாய்காமல் எனக்கு மகிழ்ச்சி கிடையாது.

கவலைபடாதிங்க எத்தனை பேர் பங்குக்கு வந்தாலும் எடைக்கு எடை பாகம் என்று விழுக்காடு அளவு வைத்தாலும் உங்களுக்குத்தான் கூடுதலாக கிடைக்கும்.

"அடுத்தடவை நீ பினாங்கு பக்கம் வா, நொங்கு எடுக்கிறேன்..." படித்துவிட்டு பல்லை நறநறப்பது கேட்கிறது.

:)

ஜெகதீசன் சொன்னது…

//
TBCD said...

கோவி ஐயா,

உங்க மாசச் சம்பளத்தை எதிர்பார்க்காதீங்க...கடமையயைச் செய்யுங்க..

சம்பளத்தை, எனக்கும் வவ்வாலுக்கு பாதி பாதி கொடுத்துடுங்க..

//
TBCD அய்யா, எனக்கும் பங்கு வேணும் சம்பளத்தில்......

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
//
TBCD said...

கோவி ஐயா,

உங்க மாசச் சம்பளத்தை எதிர்பார்க்காதீங்க...கடமையயைச் செய்யுங்க..

சம்பளத்தை, எனக்கும் வவ்வாலுக்கு பாதி பாதி கொடுத்துடுங்க..

//
TBCD அய்யா, எனக்கும் பங்கு வேணும் சம்பளத்தில்......
//

சரி சரி,

எல்லோருக்கும் உண்டு ஏப்ரல் 1 தருகிறேன் என்றால் நம்ப மாட்டிங்க, ஏப்ரல் 31 ஆம் தேதி நானே நேரில் வந்து தருகிறேன்.

ஜெகதீசன் சொன்னது…

//
எல்லோருக்கும் உண்டு ஏப்ரல் 1 தருகிறேன் என்றால் நம்ப மாட்டிங்க, ஏப்ரல் 31 ஆம் தேதி நானே நேரில் வந்து தருகிறேன்.
//
உங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம்... ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நானே உங்கள் வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்கிறோம்...

அப்படி ஏப்ரல் 31 தான் தருவீர்கள் எனில் அதற்காக உங்கள் வீட்டுக் காலண்டரில் மே முதல் நாளை ஏப்ரல் 31 ஆக மாற்றவும் நாங்கள் தயார்.. என்ன உங்களுக்குத் தான் ஒரு விடுமுறை நாள் குறையும்.....

:))

RATHNESH சொன்னது…

கோவி.ஞானி ஆகிக் கொண்டிருக்கும், கோவி.கண்ணன்,

//பலராலும் ஏற்றுக் கொண்ட ஒன்று வெறும் உள்நோக்கத்திற்காக கட்டமைப்பட்டால் அது அதன் தேவை முடிந்த உடனேயே மறைந்திருக்கும். அதையும் தாண்டி காலத்தில் கரையா வண்ணம் இருக்கிறதென்றால் அதில் இருக்கும் சில உயிரோட்டமுள்ள உண்மைகளே தான் காரணம்.//

இந்த வார்த்தைகளை ராமர் பாலம் விஷயத்துக்கும் ஏற்பீர்களா?

RATHNESH சொன்னது…

வவ்வால்,

//எல்லா குறளும் அத்துப்படி போல , எந்த கருத்துக்கு எதுனு உடனே எடுத்து உடுறிங்க //

சிறு திருத்தம். எல்லாம் அல்ல, நிறைய குறள்கள் அத்துப்படி. எப்போதும் கைவசம் திருக்குறள் வைத்திருப்பது வழக்கம். மேற்கோள் காட்டுவதற்காக அல்ல; வாழ்வில் திகைப்புறும் கணங்களின் போதெல்லாம் புரட்டிப் பார்த்து ஊன்றி எழ. கல்லூரி நாட்களில் என் அருமைத் தாய்மாமா திரு. மகாலிங்கம் அவர்கள் காட்டிய வழி.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கோவி.ஞானி ஆகிக் கொண்டிருக்கும், கோவி.கண்ணன்,

//பலராலும் ஏற்றுக் கொண்ட ஒன்று வெறும் உள்நோக்கத்திற்காக கட்டமைப்பட்டால் அது அதன் தேவை முடிந்த உடனேயே மறைந்திருக்கும். அதையும் தாண்டி காலத்தில் கரையா வண்ணம் இருக்கிறதென்றால் அதில் இருக்கும் சில உயிரோட்டமுள்ள உண்மைகளே தான் காரணம்.//

இந்த வார்த்தைகளை ராமர் பாலம் விஷயத்துக்கும் ஏற்பீர்களா?//

ரத்னேஷ் அண்ணா,

இராமர் பால அரசியல் வெளிப்படையானது, உள்நோக்கம் கொண்டது.

கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

//RATHNESH said...
முதலாளியிடம் வெறுத்துப் போய் சொந்தத் தொழில் முயல்வோர்க்கு இன்னொரு எச்சரிக்கையும் செய்திருக்கிறாரே வள்ளுவர்:

"ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்"
//

"மலர்களின் மணம் அறிந்த" மதுரைக்காரருக்கு "குறிப்பாக" மாற்றான் தோட்டத்து "மல்லிக்கைக்கும்" மணம் உண்டு என்பதை நான் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டுமா ?
:)

RATHNESH சொன்னது…

டிபிசிடி,

//கடைசியில் வந்தவர்களுக்கெல்லாம், கோவியார் சம்பளத்தில் பங்கு கொடுக்கவியலாது என்பதையும்,
இனிமேல் யாரையும் பங்குதாரராக சேர்க்கும் எண்ணம் இல்லை என்பதையும், அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.//

நண்பருக்குப் பரிந்துரை செய்யும் தூய கடமை தவிர வேறு சிந்தனை இல்லாமல், அதனைச் செய்ய வந்த என்னைப் பற்றி இப்படி நினைத்து விட்டீர்களே! உங்களைப் போன்றவர்களை விட்டு உங்க மாசச் சம்பளமும் போய்விடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வள்ளுவர் எச்சரிக்கிறார்.

(வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக நினைப்பானை நீங்கும் திரு)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
//
எல்லோருக்கும் உண்டு ஏப்ரல் 1 தருகிறேன் என்றால் நம்ப மாட்டிங்க, ஏப்ரல் 31 ஆம் தேதி நானே நேரில் வந்து தருகிறேன்.
//
உங்களுக்கு அந்தச் சிரமம் வேண்டாம்... ஒவ்வொரு மாதமும் முதல் தேதி நானே உங்கள் வீட்டுக்கு வந்து வாங்கிக்கொள்கிறோம்...

அப்படி ஏப்ரல் 31 தான் தருவீர்கள் எனில் அதற்காக உங்கள் வீட்டுக் காலண்டரில் மே முதல் நாளை ஏப்ரல் 31 ஆக மாற்றவும் நாங்கள் தயார்.. என்ன உங்களுக்குத் தான் ஒரு விடுமுறை நாள் குறையும்.....

:))

3:07 PM, March 24, 2008 //

ம்ஹூம்,

என்னதான் தலைகீழாக நின்றாலும், நண்பராக இருந்தாலும் கொடுத்த வாக்கை மீறமாட்டேன், ஏப்ரல் 31ல் உங்களுக்கு சேரவேண்டிய என் சம்பளப் பணம் வந்து சேரும்.:)

ஜெகதீசன் சொன்னது…

கோவி.கண்ணன் அய்யா, அப்படியே மட பாலா போன்றவர்களின் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது உங்கள் கடமை என்பதை மறக்கவேண்டாம்.. இனிமேல் அந்த முழுப் பைத்தியத்தின் பின்னூட்டங்களை வெளியிட்டால், அது மனித சமுதாயத்துக்கு நல்லதா என்று யோசிக்க வேண்டுகிறேன
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கோவி.கண்ணன் அய்யா, அப்படியே மட பாலா போன்றவர்களின் பின்னூட்டங்களை மட்டுறுத்துவது உங்கள் கடமை என்பதை மறக்கவேண்டாம்.. இனிமேல் அந்த முழுப் பைத்தியத்தின் பின்னூட்டங்களை வெளியிட்டால், அது மனித சமுதாயத்துக்கு நல்லதா என்று யோசிக்க வேண்டுகிறேன
:)
//

ஜெகதீசன்,

அது ஏற்கனவே நடப்பில் உள்ளது, பாலாவின் பின்னூட்டங்களை அனுமதிப்பதாக இல்லை. என்னதான் தன்மையாக பதில் சொன்னாலும் அவரது செயலை மாற்றிக் கொள்ளமாட்டார் என்பது தெரிந்துவிட்டது.

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
வாத்தியாருக்கு கல்வி அமைச்சரைத் தெரியும்
ஹெட் மாஸ்டரைக் காவடி துக்க வைத்து விடுவாராக்கும்!
//

வாத்தியார் ஐயா,
நட்சத்திரமாக ஆகிவிட்டிங்க, பொழச்சு போங்க, உங்களை சிக்க வச்சா பசங்களுக்கு படிப்பு கெடும்.

VSK சொன்னது…

நான்கு வகை வருணங்களையும் வரையறுத்து, மூன்று வித யோகங்களையும் சொல்லிக் காட்டி இருபாலரும்[கடவுள் மறுப்போர், உண்டெனச் சொல்வோர்] ஓருருவாம் இறையை அடைய முடியும் எனச் சொல்ல வந்தது கீதை.

வில்லிலிருந்து ஒரு அம்பை எய்ய மட்டுமே உனக்கு கடமை.
அது,
இலக்கை அடையலாம்.
இலக்கைத்தாண்டித் தவறலாம்.
இலக்கை அடைந்ததுடன், இன்னமும் அதிக பலனைத் தரலாம்.
இலக்க்குச் செல்லும் முன்னரே எதிமறை விளாஇவையும் அடையலாம்.

இப்படி ஒரு 4 வித பலன்கள் ஒரு கடமையினின்று பிறக்கும் என்பதே விதி.
இதை நிர்ணயிப்பது உன் செயல் அல்ல. உன் வினை எனச் சொல்லப் புகுந்ததே கீதை.

இந்த அடிப்படையில் அணுகினால், பல விஷயங்கள் தெளிவாகலாம்!
புரிபவர்க்குப் புரியும்!
நன்றி கோவியாரே!

துளசி கோபால் சொன்னது…

பதிவுலக அன்பர்கள் எல்லாம் இதைக் கடைப்பிடிக்காமலா இருக்காங்க?

கடமைன்னு பின்னூட்டம் போடவந்துட்டோம்லெ?
:-)))))

ரூபஸ் சொன்னது…

இதோ வந்துட்டேன்.....

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
பதிவுலக அன்பர்கள் எல்லாம் இதைக் கடைப்பிடிக்காமலா இருக்காங்க?

கடமைன்னு பின்னூட்டம் போடவந்துட்டோம்லெ?
:-)))))
//

ஆகா சூப்பர்,

தலைப்பை பார்க்கிறோமோ, பதிவை படிக்கிறோமா ? இவரோட பதிவு என்றால் கடமையை டக்குன்னு நிறைவேற்றிவிடுகிறோமே, பலனை எதிர்பார்த்து செய்யவில்லை தானே.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...
இதோ வந்துட்டேன்.....

5:17 AM, March 25, 2008
//

ரூப்ஸ்,

கொஞ்ச நாளாக ஆளையே காணும் ?

வேறு எதாவது ஆனிக்கடமையா ?

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//பின்குறிப்பு : இந்த இடுகையை இந்தவார நட்சத்திர பதிவர் கண்ண(ன்)பிரான் ரவிசங்கருக்கு சமர்பிக்கிறேன். :)//

சமர்ப்"பணம்"-ன்னு சொல்லியிருந்தீங்கன்னா பணம் கேட்டிருப்பேன். நைசா சமர்பிக்கிறேன்-ன்னு சொல்லி எஸ் ஆயிட்டீங்கண்ணா! :-)

இப்ப தான் பார்த்தேன்! எங்கே...ஒரு வருசம் கழிச்சி, அம்மா கையில செஞ்ச கீரைப் பொரியல், ஜிரா ஸ்பெசல் வறுவல் எல்லாம் கொட்டிக்கறதுலேயே நேரம் போயிடுது! :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சமர்ப்"பணம்"-ன்னு சொல்லியிருந்தீங்கன்னா பணம் கேட்டிருப்பேன். நைசா சமர்பிக்கிறேன்-ன்னு சொல்லி எஸ் ஆயிட்டீங்கண்ணா! :-)

இப்ப தான் பார்த்தேன்! எங்கே...ஒரு வருசம் கழிச்சி, அம்மா கையில செஞ்ச கீரைப் பொரியல், ஜிரா ஸ்பெசல் வறுவல் எல்லாம் கொட்டிக்கறதுலேயே நேரம் போயிடுது! :-))

8:51 AM, March 27, 2008
//

ரவி கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கு,

துளசி அம்மா சொன்னாங்க பாருங்க அதையே நானும் சொல்றேன், பதிவு ஓடிவிடாது, நாங்களும் ஓடிவிட மாட்டோம். ஊருக்கு போனது எதுக்கோ அதில் கவனம் செலுத்துங்க, உங்கள் மீது அன்பு கொண்டவர்களை அரவணைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு, அதற்கு நேரம் அதிகமாக செலவிடுங்க, போரடித்தில் மட்டுமே பதிவு பக்கம் வாங்க.
:)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அதாவது ஆண்டைகளிடம் அடிமையாக இருப்பவர்கள் கடுமையாக உழைத்தும் அதற்கேற்ற சாதாரண ஊதியம் கொடுத்தால், அல்லது ஊதியமே கொடுக்காமல் விட்டால் கூட கடமையை செய் அதன் பலனான ஊதியத்தை எதிர்பார்க்காதே என்று மறுப்பதை//

தப்பான வியாயக்யானம்! (இப்படிச் சொல்லி ஏழைகளின் வயிற்றில் அடித்தவர்கள் அதை விடத் தப்பானவர்கள்)

எது கடமை-ன்னு தெரிஞ்சு போச்சுன்னா, இந்தப் பிரச்சனையே வராது! தனிப் பதிவா அப்பாலிக்கா போடுறேன்! ஏழைகளின் கடமை உழைப்பது அல்ல! நல்வாழ்வு வாழ்வது! அதுக்காகப் போராடுவது கடமை! கீதையின் இன்னொரு வாக்கியத்தில் இதுவும் வரும்!
அப்படின்னா போராட வேண்டாம், சண்டை வேண்டாம்! பலனை எதிர்பார்க்காதே-ன்னு கண்ணன் சொல்லிட்டுப் போயிருப்பானே! போராட்டமே வந்திருக்காதே!

அப்பறம் இன்னொரு விசயம்...பல பேர் பொருள் கொள்ளுற மாதிரி இது...
//கடமையைச் செய், பலனை எதிர்பாராதே// இல்லை!

உண்மையான பொருள் என்னான்னா
கடமையைச் செய்து கொண்டிருக்கும் போது, பலனை எதிர்பாராதே!
எதிர்பார்த்து எதிர்பார்த்து காரியம் ஆற்றாதே - என்பது தான்!
வடமொழி இலக்கணம் தெரிஞ்சவங்க யாராச்சும் இருந்தா பார்த்து சொல்லுங்க!

ஒரு செயல் செய்யும் முன் உள்ள திட்டமிடலில், பலனை எதிர்பார்த்து திட்டம் வகுக்கிறோம்!
ஆனா அந்தச் செயலைச் செய்யும் போது...செய்து கொண்டிருக்கும் போதே, பலன் வந்துருமா, வந்துருமா-ன்னு எதிர்பார்த்து எதிர்பார்த்து செஞ்சிக்கிட்டு இருந்தா காரியம் தான் சிதறும்!

அதான் முடிவு எப்படி இருக்குமோன்னு யோசிக்காது, செயலை மட்டும் செய்-ன்னு சொல்லப்பட்டது!
Detatch the results from process.
Just execute the process.
Result will be the outcome of the process...அப்படின்னு கொள்வது தான் இயைந்து வரும்!

கர்மன்யேவா அதிகாரஸ்தே
மாபலேஷு கதாசன
மா கர்ம பல ஹேதுர் பூர்மதே
சங்கோஸ்தவ கர்மனே

செயலின் பழங்களான பலன்களை எதிர்பார்த்துக் கொண்டே கடமையைச் செய்யாதே!
வடமொழி வித்தகர்கள் யாராச்சும், பத்தி பிரிச்சி சொல்லி, இன்னும் புரிய வைங்கப்பு!

Sabarinathan Arthanari சொன்னது…

தொடர்புடைய இடுகை
கடமையை செய் பலனை எதிர்பாராதே என்பது சரியா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்