பின்பற்றுபவர்கள்

11 டிசம்பர், 2009

உண்ணா நோன்புகள் மிரட்டலா ? போராட்டமா ?

மிரட்டி ஒரு செயலை சாதிப்பது ஏற்க முடியாத ஒன்று, இல்ல அமைப்புகளில் இது பரவலாக நடைமுறையில் இருக்கிறது, ஆண்கள் தற்கொலை செய்து கொள்கிறேன் என்றும், பெண்கள் கண்ணீராலும் மிரட்டல் விடுவது இல்ல அமைப்புகளில் வழமையாக நடப்பவை. தன்னை வருத்திக் கொண்டேனும் நினைத்ததை முடிக்க வேண்டும் என்பது துணிவா அல்லது இயலாமையின் இறுதி முடிவா என்பது இன்னும் உளவியல் சிக்கலாகவே இருக்கிறது. ஞாயமான கோரிக்கைகள் புரிந்து கொள்ளப்படாதபோது அல்லது மறுக்கப்படும் போது இத்தகைய மிரட்டல் வழிகள் கைகொடுக்கிறது என்பது பரவலான உணர்வு (நம்பிக்கை அல்ல) ஆக இருக்கிறது.

எந்த வித ஆயுதமற்ற போராட்டமாக இருந்தாலும் அது அந்தக்கால உப்பு சத்தியாகிரக போராட்டமாக இருந்தாலும் சரி, இன்றைய வேலை புறக்கணிப்பு போராட்டங்களாக இருந்தாலும் சரி, ஞாயங்களை எடுத்துச் சொல்ல அவை மிரட்டல் கருவிகளாக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒரு கோரிக்கையை ஞாயங்கள் சொல்லியும் பிடிவாதமாக ஏற்க மறுக்கும் போது அதை எதிர்நோக்க அதே பிடிவாதமான மிரட்டல் வழிகளை தேர்ந்தெடுப்பது உணர்வு பூர்வமாக சரியாகவே இருக்கும் என்று நம்புகின்றனர். இது மனித புரிந்துணர்வுகள் போராட்டங்களினால் ஏற்கப்படுவதும், வழியுறுத்தப்படுவதும் உளவியல் சிக்கல்.

ஆயுதப் போராட்டங்கள் தவிர்த்து கோரிக்கை ஒன்றை குறித்த பிறவகைப் போராட்டத்தில் மிரட்டல் என்பதன் வடிவமாக தற்காலிக வேலை துறப்பு, உண்ணா விரதம் ஆகியவை நடக்கின்றன. ஆனாலும் இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால் எளியவன் ஒரு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் இருந்தால் அவன் சாகட்டம் என்றே விட்டுவிடுவார்கள், ஆனால் பெரும் தலைவர்கள் அவ்வாறு உண்ணாவிரதம் இருக்கும் போது அதன் பாதிப்புகள் பெரிய அளவில் என்பதால் அதற்கான உடனடி பலன் கிடைத்துவிடுகிறது.

கடைசி முயற்சி என்பதாக உண்ணாவிரதம் வரை சென்ற பின் போராட்டங்களுக்கு அரசு தரப்பு ஒத்திசைப்பது என்பது அரசுகளின் சந்தர்பவாதமாகவே படுகிறது. அரசு தரப்புகளால் இதுவரை ஞாயமற்றது என்பதாக புறக்கணிக்கப்படும் கோரிக்கைகளை தலைவர்களின் உண்ணாவிரதங்களால் நிறைவேறுகிறது என்றால் அங்கே ஞாயங்கள் என்பது வெறும் தலைவர்களின் உயிரின் மதிப்பு, அதனால் ஏற்படும் சமூக கொந்தளிப்பு என்ற அளவிற்குள் சுறுங்கிவிடுகிறது.

எந்த ஒரு பொது கோரிக்கைகளுக்கும் பெரும்பான்மை ஆதரவு என்பதாக எண்ணிக்கைகளினாலே பார்க்கப்பட்டு தீர்ப்பு சொல்லப்படுகிறது. தெலுங்கான கோரிக்கை தெலுங்கான பகுதிவாழ் பெரும்பான்மை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் போது அதை என்றோ ஆராய்ந்து முடிக்காமல் உண்ணாவிரதம், கடுமையான போராட்டம் வரை காந்திருந்து தீர்ப்பு சொல்வது ஏற்க முடியவில்லை. இவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. போராடினால் தான், கடுமையாகப் போராடினால் தான் ஞாயங்களைப் ஆளும் வர்க்கத்திற்கு புரிய வைக்கமுடியும் என்கிற வரலாற்று பதிவாகவே தெலுங்கான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.

உங்கள் கோரிக்கைகள் தீர்க்கபட வேண்டுமென்றால் நீங்கள் தலைவராக இருக்க வேண்டும், அப்படி இருந்தாலும் ஆளும்வர்கததை மிரட்டினால் தான் உங்கள் கோரிக்கையை சாதிக்க முடியும். என்பதை அரசுகள் வரலாற்றில் சுவடுகளாக விட்டுச் செல்கின்றன.

எப்போதும் எதாவது ஒன்றிற்கு எல்லா தரப்பினரும் அவ்வப்போது போராடுவதைப் பார்க்கும் போது பொது மக்களுக்கு எரிச்சல் ஏற்படும், ஏனெனில் நேரடியாக பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். ஆனால் எல்லாவற்றிற்கும் போராடத்தான் வேண்டி இருக்கிறது, என்பதை பொது மக்களாகிய நாம் புரிந்து கொள்ளவதில்லை. அனைத்து சமூகங்களுமே (ஆளும்) வர்க ரீதியாக வளர்ந்து இன்றைய நிலையை அடைந்திருக்கிறது, ஞாயமே ஆனாலும் உடனடியாக ஏற்றுக் கொள்வதை கவுரவக் குறைச்சலாகவே நினைக்கிறார்கள். மன்றாடினால், வேண்டினால் தான் நினைத்த காரியம் நடக்கும் என்பதை ஆன்மிக சித்தாந்தமாகவே சொல்லிக் கொடுக்கப்பட்டு சமூகம் வளர்ந்தால், எந்த ஒரு கோரிக்கையும் செயலுக்கு வர போராட்டம் தேவை என்பது விதியாகவே மாறி இருக்கிறது என்றே தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

உலகத்தில் வேறெந்த நாடுகளிலும் இல்லாத ஒரு வழக்கமாக உண்ணா நோன்பை போராட்டதிற்கு பயன்படுத்துவது இந்தியாவில் நடக்கும் அரசியல் கூத்தாகவே மாறி இருக்கிறது. சோற்றால் அடித்த பிண்டங்கள் அதைத் துறப்பது மிகப் பெரியதும், போராட்டத்தில் ஒன்று போலும்.

போராடுங்கள் வெற்றிபெறுவீர்கள் ! என்பது மக்கள் ஆட்சி தத்துவமாக மாறிவிட்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் எருமைமாடுகளாக அசைந்து கொடுக்காத போது போராட்டங்கள் மிரட்டலாக மாறி இருப்பது தவறு அல்ல என்றே கருதுகிறேன்.

14 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

present sir.

ராஜவம்சம் சொன்னது…

சிலப்போராட்டங்கள் கண்துடைப்பாகவும் நடந்துள்ளது சில விளம்பரத்திற்க்காகவும்

கலைஞரின் உண்ணா நோன்பு-சிரிலங்கா
ஜெயலலிதா உண்ணா நோன்பு-காவேரி
ரஜினி உண்ணா நோன்பு -காவேரி

இப்படி சில

Unknown சொன்னது…

இப்போது நடைபெறும் அனைத்து போராட்டங்களும் ஒரு வகையில் மிரட்டலாக மாறினால் தான் முடிவு தெரிகிறது

துளசி கோபால் சொன்னது…

நிறையச் சொல்லணுமுன்னு தோணுது.ஆனால்.......

ஒரு காலத்துலே வீடுகளில் ஆரம்பிச்சது இந்த உண்ணா நோன்புகள் எல்லாம். அதுலேயும் மனைவி சாப்புடாம இருந்தால் ஐயோன்னு இரங்கி வரும் ஆண்கள் ரொம்பக் கொஞ்சம். ஆனால் இதுவே கணவன் சாப்புட மறுத்தால் ..... 99 சதம் மனைவிகள் பயந்துருவாங்க. ( அந்த ஒரு சதம் ஒருவேளை நானோ என்னவோ!)

வெள்ளைக்காரனுக்கு இந்த சாப்பாடு வேணாம் போ'' ன்னு சொல்லி மிரட்டும் விஷயம் ரொம்பப் புதுசா இருந்துருக்கலாம். எமோஷனல் ப்ளாக் மெயில்தான்.

இப்போ அதே உண்ணாவிரதம்..... கேலிக்குரிய விஷயமா ஆக்கப்பட்டதுக்கு யாரெல்லாம் காரணமா இருக்கலாம் என்பதை உங்க ஊகத்துக்கு விட்டுடறேன்.

PIN குறிப்பு: எனக்கு ஆரஞ்சு ஜூஸ் ஆகாது. கொஞ்சம் சக்கரை சேர்த்த திராட்சைரசம்( 'அது' அல்ல!) அல்லது மாதுளம்பழம் ஜூஸ் ஓக்கே.

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜவம்சம் said...
சிலப்போராட்டங்கள் கண்துடைப்பாகவும் நடந்துள்ளது சில விளம்பரத்திற்க்காகவும்

கலைஞரின் உண்ணா நோன்பு-சிரிலங்கா
ஜெயலலிதா உண்ணா நோன்பு-காவேரி
ரஜினி உண்ணா நோன்பு -காவேரி

இப்படி சில
//


ஒண்ணும் சொல்லிக்கிறதுக்கு இல்லை :) இதுக்கு ஆங்கிலத்தில் நோ கமெண்ட்ஸ்னு சொல்லுவாங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

//மின்னல் said...
இப்போது நடைபெறும் அனைத்து போராட்டங்களும் ஒரு வகையில் மிரட்டலாக மாறினால் தான் முடிவு தெரிகிறது
//

ஞாயமான வேண்டுகோள்களுக்கு போராட்டம் தேவை என சமுதாய மனநிலை பாதிப்பு அடைந்திருக்கு என்று நினைக்கிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
present sir.
//

நன்றி சார்

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...
நிறையச் சொல்லணுமுன்னு தோணுது.ஆனால்.......//

துளசி அம்மா, நீங்க தான் சமூக அரசியலை தனிப் பதிவாக எழுதுவதில்லையே, இது போன்ற பதிவுகளில் பின்னூட்டங்களில் கொட்டிவிடுங்கள்.
தவறு அல்ல.

//ஒரு காலத்துலே வீடுகளில் ஆரம்பிச்சது இந்த உண்ணா நோன்புகள் எல்லாம். அதுலேயும் மனைவி சாப்புடாம இருந்தால் ஐயோன்னு இரங்கி வரும் ஆண்கள் ரொம்பக் கொஞ்சம். ஆனால் இதுவே கணவன் சாப்புட மறுத்தால் ..... 99 சதம் மனைவிகள் பயந்துருவாங்க. ( அந்த ஒரு சதம் ஒருவேளை நானோ என்னவோ!)//

உங்களுக்கு ரொம்பவும் தைரியம். ஆனால் அவரைப் பார்த்தாலும் உண்ணணவிரதம் இருப்பவர் போல தெரியல :)

//வெள்ளைக்காரனுக்கு இந்த சாப்பாடு வேணாம் போ'' ன்னு சொல்லி மிரட்டும் விஷயம் ரொம்பப் புதுசா இருந்துருக்கலாம். எமோஷனல் ப்ளாக் மெயில்தான்.//

விவேக் ஒரு படத்தில எந்த நாட்டிலாவது 'காரி துப்பி திட்டுறாங்களான்னு ?' கேட்பார். யோசிக்க வேண்டிய விசயம். நம்ம ஊரில் வெளக்க மாற்று அடி செருப்பு அடின்னு சொல்ல்படுவது், புஷ் மீது எறியப்பட்டதில் இருந்து வெளி நாடுகளிலும் பரவி இருப்பது தெரிகிறது.

உண்ணா விரத போராட்டத்துக்கு இந்தியா காப்புரிமை வாங்கி வைத்துக் கொள்ளலாம். :)


//இப்போ அதே உண்ணாவிரதம்..... கேலிக்குரிய விஷயமா ஆக்கப்பட்டதுக்கு யாரெல்லாம் காரணமா இருக்கலாம் என்பதை உங்க ஊகத்துக்கு விட்டுடறேன்.//

:)

//PIN குறிப்பு: எனக்கு ஆரஞ்சு ஜூஸ் ஆகாது. கொஞ்சம் சக்கரை சேர்த்த திராட்சைரசம்( 'அது' அல்ல!) அல்லது மாதுளம்பழம் ஜூஸ் ஓக்கே.
//

ஞாயமாகப் பார்த்தால் நம் பாரம்பரியப்படி விரதம் முடிக்க நீரரகாரம் தான் குடிக்கனும் :)

அக்னி பார்வை சொன்னது…

எனக்கு தெரிந்த்வரை உண்ணவிரதத்தை தொடர்ந்து நடக்கும் கலவரங்களும் வன்முறைகளுமே கவந்த்தை பெறுகின்றன..... கந்தியோடு சாரி வெள்ளைகாரனோடு உண்ணாவிரத்தை மதிக்கும் பழக்கம் போய்விட்டது...

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்னி பார்வை said...
எனக்கு தெரிந்த்வரை உண்ணவிரதத்தை தொடர்ந்து நடக்கும் கலவரங்களும் வன்முறைகளுமே கவந்த்தை பெறுகின்றன..... கந்தியோடு சாரி வெள்ளைகாரனோடு உண்ணாவிரத்தை மதிக்கும் பழக்கம் போய்விட்டது...
//

வாங்க புதுமாப்பிள்ளை :)
இப்பெல்லாம் உண்ணாவிரதம் சிப்ட் முறைப் படி தானே நடக்குது.

S.Gnanasekar சொன்னது…

இப்போ உண்ணாவிரதம் கேலிகூத்தாக போய்விட்டது....

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

present sir.

சிங்கக்குட்டி சொன்னது…

நல்லா இருக்கு கண்ணன், ஆனா ஓட்டு பட்டயை காணோம்? எப்படி ஓட்டு போடுவது?

இங்கயும் ரஜினியை வைத்து உள்குத்தா :-)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

நீங்க எழுதின நேரத்துல சந்திர சேகர ராவ் உண்ண விரதம் இருக்கிறார் உண்மையாக.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்