பின்பற்றுபவர்கள்

28 டிசம்பர், 2009

சிங்கையில் அழகிய சிங்கர் !

பதிவர் மற்றும் பாடகர் எம் எம் அப்துல்லா சிங்கையில் முகாமிட்டு இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை சிங்கைக்கு இல்லத்தினரோடு வந்தார், வேறு சில காரணங்களால் விமான நிலையம் சென்று சந்திக்க முடியவில்லை. மறுநாள் ஜோசப் பால்ராஜ், அப்துல்லா இருவரும் என் வீட்டுக்கு வந்து மூவருமாக சேர்ந்து சிங்கை நாதனை பார்க்கப் போகலாம் என்று முடிவு செய்தோம். அதன் படி மாலை 6 மணி வாக்கில் ஜோசப்பால்ராஜின் 'சொந்த'க்காரில் என் வீட்டுக்கு இருவரும் வந்தனர். சிறிது நேரம் பேசி இருந்துவிட்டு சிற்றுண்டிகளை முடித்துக் கொண்டு சிங்கை நாதன் வீட்டிற்கு கிளம்பினோம்.

போகும் வழியில் ஈரோடு பதிவர்கள் சந்திப்பு சிறப்பாக நடந்ததையும் அங்கு ஆட்டம் போட்டதையும் பகிர்ந்து கொண்டு வந்தார். கேபிள் (சங்கர்), தண்டோரா இருவரும் பட்டையைக் கிளம்பினார்களாம், காரில் பாட்டு ஓடிக் கொண்டிருந்தது, இவரும் பாட தொடங்கிவிட்டார். பால்ராஜ் பாட்டு ஒலியை முற்றிலுமாக குறைத்துவிட்டார். அப்துல்லா மட்டுமே பாடிக் கொண்டு வந்தார் ( உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்.....). ஏன்ம்பா பாட்டை நிறுத்திட்டிங்கன்னு அப்துல்லா கேட்க, அதான் லைவாக பாடுறியே அதான் நிறுத்திவிட்டேன் என்று சொல்ல கலகலப்பு.

சிங்கை நாதன் வீட்டுக்கு மாலை 7:30க்குச் சென்றோம். வீட்டில் உள்ளவர்கள் இன்னும் 1 மணி நேரத்தில் வந்துவிடுவதாகச் சொன்னார் செந்தில். செந்தில் தற்போது பார்க்கும் பொழுது முகம் நன்றாக தெளிவடைந்திருக்கிறார்.

சற்று கூடுதல் எடை, வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் உடல் எடை கூடுகிறதாகச் சொன்னார். VAD எனப்படும் இதய இயக்கியை சிறிய பையில் போட்டு குறுக்காக மாட்டிக் கொண்டு இருந்தார். நன்றாக நடக்கவும் பேசவும் முடிகிறது.

எங்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைத்தார். சிறிது நேரம் அவருடைய மருத்துவ நிலவரம் குறித்துக் கேட்டுக் கொண்டோம், மற்ற நிலவரங்களைப் பேசினோம். 45 நிமிடங்கள் ஆகி இருந்தது, அப்துல்லாவிற்கு வேறு சிலரைப் பார்க்க வேண்டியிருந்ததால் செந்தில் வீட்டினர் வரும் வரை காத்திருக்க முடியவில்லை. செந்திலிடம் விடை பெற்று குட்டி இந்தியாவிற்கு வந்தோம். பிறகு நான் வீட்டிற்கு விடை பெற்றேன்.

புதுகை அப்துல்லாவுடன் பதிவர் சந்திப்பு வார இறுதியில் நடக்க இருக்கிறது. அது பற்றிய விவரம் விரைவில் வரும்.

தம்பி அப்துல்லா இனிய குரலில் பாடுபவர், பதிவர் என்பதைத் தாண்டி அனைவரையும் அண்ணா என்று அழைக்கும் பாசக்காரப் பயப் புள்ளன்னு பேரு இருக்கு. ஏற்கனவே சிங்கை வந்திருக்கிறார். அப்போது குறுகிய கால இடைவெளியில் சந்தித்தோம். பிறகு தனிப்பட்ட முறையில் சென்னையில் சந்தித்து இருக்கிறேன். சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு, அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர். நாம் சந்திப்பவர்களில் 'இவருடன் நட்பு வேண்டும், இவர் நண்பராக அமைய மாட்டாரா ?' என்று நினைக்க வைப்போர் மிகக் குறைவுதான். அப்படி இருப்பவர்களில் இவரும் ஒருவர். அந்தவகையில் புதுகை அப்துல்லா எனக்கு தம்பி அப்துல்லா.

பின்குறிப்பு : அப்துல்லாவிற்கு அழகிய சிங்கர் பெயர் அளிப்பு அப்பாவி முரு (நன்றி)

33 கருத்துகள்:

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

வெள்ளை சொக்க சென்னையிலேயே விட்டுட்டு போயிட்டாரா? இல்லை சிங்கையில் யூத்தாக இருக்க இந்த கெட்டப்பா?

அழகிய சிங்கர் :) நல்ல பெயர்

துளசி கோபால் சொன்னது…

படங்களுக்கு நன்றி கண்ணன்.

ஸ்வாமிஜி சொன்னதேதான். எனக்கு அவரைக் கலர் சட்டையில் பார்த்தால் அடையாளம் தெரியாது!

சிங்கைநாதனுக்கு எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.

குடுகுடுப்பை சொன்னது…

சிங்கைநாதனுக்கு எங்கள் அன்பு.

அப்துல்லாவுக்கு நான் நேற்று உங்களிடம் பேசிய அதே வார்த்தை.

குடுகுடுப்பை சொன்னது…

சரி உங்களுக்கு அதான் நேத்து போன் பண்ணி பிளேடு போட்டாச்சே..

குசும்பன் சொன்னது…

//சிங்கையில் அழகிய சிங்கர் !"//

அண்ணே ஹெவி அமவுண்டா:)????


//அப்துல்லா மட்டுமே பாடிக் கொண்டு வந்தார் ( உன்னை நெனச்சேன் பாட்டுப்படிச்சேன்.....). //

பாட்டை படிச்சாருன்னு சொல்லுங்க:))


அவர் பாடி முடிச்சதும் ஜோசப்பை பார்த்து ஒய் பிளட் என்று நீங்க கேட்டதையும் அதுக்கு ஜோசப்பு சேம் பிளட் என்று சொன்னதையும் அவை குறிப்பில் இருந்து நீக்க சொல்லி உத்தரவா???:))

குசும்பன் சொன்னது…

//சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு//

இதைவேண்டும் என்றால் ஒத்துக்கிறேன், ஆனா அவரை சிங்கருன்னு சொன்னீங்க கடிச்சி வெச்சிடுவேன் ஆமா:))))

குசும்பன் சொன்னது…

//அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர்.//

அண்ணே இதை படிச்சதில் இருந்து அவருக்கு ஒரே தும்மலாம்... அச்சு அச்சுன்னு தும்மிக்கிட்டே இருக்காராம் என்னான்னு கொஞ்சம் பாருங்க:)))

Cable சங்கர் சொன்னது…

பச்ச கலர் சிங்குச்சா, மஞ்ச கலர் சிங்குச்சா. வெள்ளை கலர் சிங்குச்சா.. அண்ணே.. என்ன ஒரே கலரா இருக்கீங்க..ரைட்ட்..ரைட்ட்..

பித்தனின் வாக்கு சொன்னது…

சிங்கை நாதனின் வீட்டிற்குப் போய் பேன் செய்கின்றேன் என்று கூறியதும். குட்டி இந்தியாவிற்க்கு வந்து எனக்குச் சொல்லாததும் ஏன் என்று புரியவில்லை. தாங்கள் மறந்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பித்தனின் வாக்கு said...

சிங்கை நாதனின் வீட்டிற்குப் போய் பேன் செய்கின்றேன் என்று கூறியதும். குட்டி இந்தியாவிற்க்கு வந்து எனக்குச் சொல்லாததும் ஏன் என்று புரியவில்லை. தாங்கள் மறந்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். நன்றி.//

லிட்டில் இந்தியாவில் என்னை இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். நானும் அங்கிருந்து விட்டுக்கு கிளம்பிவிட்டேன். மறக்கவில்லை வேற ஒண்ணுமே நடக்கவில்லை என்பதற்காகச் சொல்லவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// குசும்பன் said...

//அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர்.//

அண்ணே இதை படிச்சதில் இருந்து அவருக்கு ஒரே தும்மலாம்... அச்சு அச்சுன்னு தும்மிக்கிட்டே இருக்காராம் என்னான்னு கொஞ்சம் பாருங்க:)))//

பொகச்சலா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...

//சாதி, மதம், குழு மனப்பாண்மையில் இயங்கும் பதிவுலகில் அப்துல்லா போன்றோர் விதிவிலக்கு//

இதைவேண்டும் என்றால் ஒத்துக்கிறேன், ஆனா அவரை சிங்கருன்னு சொன்னீங்க கடிச்சி வெச்சிடுவேன் ஆமா:))))//

அடப்பாவி, உன்னைப் பார்க்கிறவங்க கவசம் போட்டுக்கனும் போல.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

படங்களுக்கு நன்றி கண்ணன்.

ஸ்வாமிஜி சொன்னதேதான். எனக்கு அவரைக் கலர் சட்டையில் பார்த்தால் அடையாளம் தெரியாது!

சிங்கைநாதனுக்கு எங்கள் அன்பைச் சொல்லுங்கள்.//

செந்தில் இந்தப் பதிவைப் படிப்பார்

கோவி.கண்ணன் சொன்னது…

// ஸ்வாமி ஓம்கார் said...

வெள்ளை சொக்க சென்னையிலேயே விட்டுட்டு போயிட்டாரா? இல்லை சிங்கையில் யூத்தாக இருக்க இந்த கெட்டப்பா?

அழகிய சிங்கர் :) நல்ல பெயர்//

அவரு யூத்துன்னு தான் சொன்னார். அதற்கான ஏற்பாடு போல, நமக்கு இப்பதான் வெளங்குது

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...

சரி உங்களுக்கு அதான் நேத்து போன் பண்ணி பிளேடு போட்டாச்சே..//

நீங்க சொன்னதை வச்சுதான் சில வரிகளை எழுதினேன். அதுக்கு தான் குசும்பன் கடிச்சு வச்சிவிடுவதாக மிரட்டுறான்

கோவி.கண்ணன் சொன்னது…

//Cable Sankar said...

பச்ச கலர் சிங்குச்சா, மஞ்ச கலர் சிங்குச்சா. வெள்ளை கலர் சிங்குச்சா.. அண்ணே.. என்ன ஒரே கலரா இருக்கீங்க..ரைட்ட்..ரைட்ட்..//

தலைவரே உங்க உடம்பை வச்சிக்கிட்டு நீங்க ஆடின ஆட்டம் பற்றித்தான் பேசினோம்.

ஜெகதீசன் சொன்னது…

அண்ணே..... வாங்கண்ணே...
:)

Sanjai Gandhi சொன்னது…

அய்யாய்யோ.. அங்கயும் அப்துல்லாவா?


செந்தில்நாதன் நலமுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி.

சி தயாளன் சொன்னது…

:-) சந்திப்பில் சந்திக்கிறம்.

//ஜோசப்பால்ராஜின் 'சொந்த'க்காரில்
//

நுண்ணரசியலை ரசித்தேன்

சிங்கை நாதன்/SingaiNathan சொன்னது…

இப்போதான் பார்த்தேன்

நன்றிகள்
அன்புடன்
சிங்கை நாதன்

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர்.//

aaach..aaach...aachh

கோவி.கண்ணன் சொன்னது…

//Blogger T.V.Radhakrishnan said...

//அப்துல்லா பதிவுலக அப்துல்கலாம் போல மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டானவர்.//

aaach..aaach...aachh//

சென்னையில் ஒரு தும்மல் காலம் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கை நாதன்/SingaiNathan said...

இப்போதான் பார்த்தேன்

நன்றிகள்
அன்புடன்
சிங்கை நாதன்//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// ’டொன்’ லீ said...

:-) சந்திப்பில் சந்திக்கிறம்.

//ஜோசப்பால்ராஜின் 'சொந்த'க்காரில்
//

நுண்ணரசியலை ரசித்தேன்//

ஹிஹி

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...

அய்யாய்யோ.. அங்கயும் அப்துல்லாவா?


செந்தில்நாதன் நலமுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி.//

வாய்யா மின்னல் !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...

அண்ணே..... வாங்கண்ணே...
:)//

அச்சா அச்சா !

கிரி சொன்னது…

:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

அருமையான சந்திப்பு!

தவரவிட்டு விட்டேனே!

அப்து அண்ணனோடு தொலையாடினேன். மலேசியா போய் வந்ததற்கப்புறம் சந்திப்போம்!

சிங்கை நாதன், படங்களை பார்த்ததில் மகிழ்ச்சி!

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

சிங்கையின் கிழக்கு முனையில் கோவியாரின் வீட்டில் தொடங்கி, மேற்கு பகுதியில் இருக்கும் சிங்கை நாதன் அண்ணணின் இல்லத்தில் தொடர்ந்து மத்திய பகுதியில் நிறைவுற்ற அந்த இனிமையான சந்திப்பை சுவைபட எழுதியுள்ளீர்கள்.

அப்துல்லா அண்ணண் பாடியத கேட்டது அத விட சிறப்பு.
ஆனா இவ்ளோ லேட்டா பதிவு போட்ருக்கேளே? சனிக்கிழமை நள்ளிரவில் இருந்து உங்க பதிவ தேடிட்டு இருந்தேன் .

ரோஸ்விக் சொன்னது…

அப்துல்லா அண்ணனை விமான நிலையத்தில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் சந்திக்க ஆர்வமுடன்...

இந்த சந்திப்பை எனக்கு தெரிவிக்க மறுத்த ஜோசப்-க்கு கண்டனங்கள்.

வீர அந்தனன் சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//வீர அந்தனன்

//


உங்க அம்மாவை நீ ஆபாசமாகப் பேசியதை உங்க என்னிடம் சொல்லி உங்க அம்மா வருத்தப்பட்டதால் நீக்கப்பட்டுள்ளது.

அறிவிலி சொன்னது…

வெல்கம்.. அப்துல்லா. 31 அன்று சந்திப்பில் பார்க்கலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்