பின்பற்றுபவர்கள்

4 டிசம்பர், 2009

கலவை 04/டிச/2009 !

போபால் விசாவாயு கசிவில் இறந்தோர் எண்ணிக்கை 20,000 க்கும் மேலாம். அதற்கு காரணமாக இருந்த அமெரிக்க நிறுவனம் மற்றும் அந்த வழக்கு பற்றி வழக்கறிஞர் பிரபு இராஜ துரை எழுதி இருந்தார். ஐந்தாயிரம் பேர் இறந்த அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்ப்பு வரலாற்றில் ஆவனப் படுத்தப்பட்டுள்ளது, 20,000 உயிர்கள் அமெரிக்க நிறுவனத்தால் பரிக்கப்பட்டது எத்தனை உலக நாடுகளுக்குத் தெரியும் ? அவர்களுக்கு இழப்பீடுகள் எதுவுமே கிடைக்கவில்லை என்பதை எழுதி இருக்கிறார். வரலாறுகள் தன்னை எழுதிக் கொள்வதில்லை, ஆளும் வர்கத்தினரே வரலாற்றை எழுதிக் கொள்கிறார்கள்,வரலாறுகள் எழுதப்படுகின்றன என்பதை சுட்டிக் காட்டி கொட்டும் பிரபு இராஜ துரை அவர்களின் கட்டுரை. படித்தவுடன் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு என்ன செய்வது.

*****

முருகையைன் குருமூர்த்தி என்கிற ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பதிவு எழுதிவருகிறார். சமூக முரண், முறைகேடுகள் பற்றி தினமணி வாசகர் கடிதம் போல் எழுதுகிறார். இட ஒதுக்கீட்டில் இருக்கும் ஓட்டைகள், அதைப் பயன்படுத்தி பெரும் பதவியில் இருப்போர் வசதியாக நுழைந்து கொள்வது பற்றிய கட்டுரை. சட்டம் ஒழுங்கு இவையாவும் முறையாக பாதுகாப்புடன் மீறப்படுவதற்கான மாற்று ஏற்பாடு என்றே நினைக்க வைக்கிறது. கல்வித்துறைகள் தொடர்புடையது பற்றி நன்கு அனுபவப் பட்டவர் என்பதால் அவர் எழுத்து பதிவுலகத்திற்கு அந்த துறைசார்ந்த தகவல்களை அளிக்கும், ஆசிரியர் குருமூர்த்தி அவர்களுக்கு பாராட்டுகள்.


*****

திருச்செந்தூர் இடைத்தேர்தல் மக்களை ஏமாற்றும் ஒரு நிகழ்வு - ஜோ எழுதி இருக்கிறார். திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற அனிதா இராதகிருஷ்ணன் கட்சியில் கட்டம் கட்டப்பட்டததைத் தொடர்ந்து சட்டமன்ற பதவியை உதறிவிட, மீண்டும் தேர்தல், தற்பொழுது திமுக வேட்பாளராக அதே தொகுதியில் களம் இருங்குகிறாராம் அனிதா இராதகிருஷ்ணன். அரசு பணம் என்கிற பெயரில் மக்கள் பணத்தில் இலவச திட்டங்கள் போல் இலவச தேர்தல்கள். நெஞ்சு பொறுக்குதில்லையே

*****

நாளை மறுநாள் பாபர் மசூதி இடிப்பு நாளாம், இடித்ததன் ஞாயம் அநியாயம் ஆகியவை நடந்து முடிந்தவை, ஆனால் அச்சுறுத்தல் இன்னும் தொடர்பவையாகவே இருக்கின்றன என்பது ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து தெரிகிறது. மசூதி அல்லது அடக்க இடங்களில் வழிபடுவது இஸ்லாமில் அனுமதிக்கப்படுவதில்லை, ஏர் ரஹ்மான் தர்காவில் வழிபாடு நடத்துவதை எதிர்கிறோம் என்று எழுதும் ஏக இறைவன் கோட்பாட்டாளர்கள் கூட பாபர் மசூதி இடிப்பை இஸ்லாமியர்களின் மானப் பிரச்சனைபோல் காட்ட முயல்வது கொள்கை முரணாகத் தெரிகிறது.

*****

கூகுள் ஸ்ரிட் வியூ எனப்படும் பெரு நகர தெருக்காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டது தெரிந்த தகவல், இதன் மூலம் ஐரோப்பிய நாடுகளை கணிணி வழியாக சுற்றிப் பார்க்க முடியும், கூகுள் நிறுவனம் மூலம் அந்த இணைய வசதி மூலம் தெரு/சாலைகளில் வலம் வரும் வாய்ப்பு ஆசிய நாடுகளில் முதன் முதலாக சிங்கப்பூருக்கு வாய்த்திருக்கிறது. வீட்டில் இருந்த படியே சிங்கபபூர் பெருவிரைவு சாலைகளை, நகரக் கட்டிடங்களை முப்பரிணாமத்தில் பார்க்க முடியும், முயற்சித்துப் பாருங்கள். சிங்கப்பூர் மூன்றாம் முணையம்

*****

தொண்டர் 1 : மகன்களுக்கு பதவிகள் கொடுத்த நம்ம தலைவர் கூட குடும்ப ஆட்சியை ஒழிப்போம் என்று சொல்கிறாரே.
தொண்டர் 2 : சரிதான், தன் குடும்பம்னு இல்லாமல் பெரிய மனதோடு இருக்கும் நம்ம தலைவர் நடத்தும் சொந்த பந்தங்களையும் சேர்த்துக் கொண்ட ஆட்சி கூட்டுக் குடும்ப ஆட்சியாச்சே.

13 கருத்துகள்:

மணிகண்டன் சொன்னது…

me the firsttu

அப்பாவி முரு சொன்னது…

//Comment moderation has been enabled. All comments must be approved by the blog author.
//

என்ன ஆச்சு கோவிஜி

அப்பாவி முரு சொன்னது…

//Your comment has been saved and will be visible after blog owner approval//

உண்மை தானா?

Raju சொன்னது…

\\கோவியார் கூற்று !
தமக்கு தேவையற்றதும் அங்கே இருக்கிறது என்பதற்காக பல்பொருள் கடைகளில் குப்பைகளும் நிறைந்துள்ளதாகக் கூற முடியாது.\\

"குப்பைகளே" ன்னுல சொன்னாதா கேள்வி..!

சிங்கக்குட்டி சொன்னது…

ஒரு திரட்டி போல மிக நல்ல கருத்துக்கள் தொகுப்புக்கு நன்றி .

அறிவிலி சொன்னது…

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக பின்னூட்ட மட்டுறுத்தலா?

கோவியாரின் பதிவில் மட்டுறுத்தலா????

நோ................

ஜோதிஜி சொன்னது…

புதையலை இனம் கண்டு கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

கலவைக்கு நன்றி...

kathar mohideen சொன்னது…

babri masjid is not a darha,its a masjid...so ther is no contradiction

PRABHU RAJADURAI சொன்னது…

இறந்தோர் எண்ணிக்கை 20000க்கும் மேல் என்று எழுதவில்லை...

priyamudanprabu சொன்னது…

வரலாறுகள் தன்னை எழுதிக் கொள்வதில்லை, ஆளும் வர்கத்தினரே வரலாற்றை எழுதிக் கொள்கிறார்கள்,வரலாறுகள் எழுதப்படுகின்றன
....

sariyaa karuththu

ஷாகுல் சொன்னது…

//மசூதி அல்லது அடக்க இடங்களில் வழிபடுவது இஸ்லாமில் அனுமதிக்கப்படுவதில்லை, //

ஐயா, அடக்க தலங்களில் வழிபடுவதுதான் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது. ம்சூதி அல்லது பள்ளிவாசல்கள் (Mosque) வழிபட தடை அல்ல. பாபர் மசூதி பாபரின் அடக்க தலமல்ல பாபர் கட்டிய பள்ளிவாசல் அதாவது ஏக இறைவனை வணங்குவத்ற்க்காக கட்டப்பட்ட பள்ளி. அடக்கஸ்தலம் அல்லது தர்ஹா மற்றும் ம்சூதி அல்லது பள்ளிவாசல்கள் (Mosque)இரண்டையும் போட்டு குழப்பி கொண்டுள்ளீர்கள்.

குழப்பமில்லாமல் தெளிவுடன் எழுதுவீர்கள் என நினைகிறேன்.

//ஆனால் அச்சுறுத்தல் இன்னும் தொடர்பவையாகவே இருக்கின்றன என்பது ஆண்டுதோறும் நடைபெறும் பாதுகாப்பு கெடுபிடிகளில் இருந்து தெரிகிறது//

எந்த அச்சுறுத்தலும் இல்லை சிலர்தான் மக்களை எப்போழுதும் பயத்தியேயே வைத்திருக்க முயல்கிறார்கள் உங்கலைப் போல.

//பாபர் மசூதி இடிப்பை இஸ்லாமியர்களின் மானப் பிரச்சனைபோல் காட்ட முயல்வது கொள்கை முரணாகத் தெரிகிறது.//

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

நாடோடி இலக்கியன் சொன்னது…

கலவை நல்ல தொகுப்பு.

குருமூர்த்தி ஸார், நான் பயின்ற பள்ளியின் முன்னால் ஆசிரியர் என்று சொல்லிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்