பின்பற்றுபவர்கள்

24 டிசம்பர், 2009

கலவை 24/டிச/2009 !

கடவுளைப் போல் காலமும் புதிரானது. பரவெளியில் அசைவுகளும், செயல்படும் மனித மனமும் இல்லை என்றால் காலம் என்று ஒன்றை வரையறுக்க முடியாது, அசைவுகளின் அளவீடுதான் காலம் (Time) எனக்கருதிக் கொள்கிறோம். இன்று நடைமுறையில் இருக்கும் கிரிக்கேரியன் ஆங்கில முறை நாட்காட்டி 500 ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவாகப்பட்டது என்று அறியும் போது வியப்பாகவே இருக்கிறது. மொழி, இனத்திற்கு ஒரு நாட்காட்டி முறைகள் உலகெங்கிலும் இருந்தாலும் பொதுவான நாட்காட்டி முறையான கிரிக்கேரியன் நாட்காட்டி முறை போப் எட்டாம் ஜார்ஜ் என்கிற கத்தோலிக்க போப் ஆண்டவரால் உருவாக்கப்பட்டதாம். ஆங்கில நாட்காட்டி கிறித்து பிறப்புடன் தொடங்கியது அல்ல, வரலாற்றை எழுத கிறிஸ்து பிறப்புக்கு பிறகே சுமார் 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவாக்கப்பட்டது. ஏசு கிறிஸ்து பிறந்தது கிமு 4 ஆம் ஆண்டு என்றும் சொல்கிறார்கள். ஏசுவுக்கு முன்பே வாழ்ந்த அலெக்சாண்டர், அரிஸ்டாட்டில் மற்றும் பிற கிரேக்க தத்துவயலாளர்களின் பெயர் வரலாற்றில் சிறப்பாக பதிவு செய்திருக்கும் பொழுது, ஏசு கிறிஸ்து பிறப்பு பற்றி பைபிள் தவிர வேறு வரலாற்று ஆவணங்கள் எதிலும் இல்லை என்றே ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். கிறித்து சிலுவையில் அறையப்படும் போது இருந்ததாகச் சொல்லப்படும் ஏராது மன்னன் வரலாற்று அடிப்படையில் ஏசு பிறப்புக்கு முன்பே இறந்துவிட்டானாம். ஏசுவை ஈசா நபி என்று அழைக்கும் இஸ்லாமியர்கள் ஏசு பிறப்பைக் கொண்டாடதக் காரணங்கள் தெரியவில்லை.

கிறித்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்.


ஆங்கில நாட்காட்டியின் வரலாறு பற்றி அறிய விக்கியை சொடுக்குங்கள்.

*******

என் வலைப்பதிவுக்கு 'பாலியல்' 'காமக் கதை' ஆகிய குறிச் சொற்களைத் தேடி நிறைய பேர் வருவதாக feedjit காட்டுகிறது, தினமலரில் 'தேவநாதனையும்', 'புவனேஸ்வரியை'யும் நிறைய பேர் தேடி இருக்கிறார்கள். தேடல் என்பது இது தானோ !

*******

இடைத்தேர்தல் பற்றிய செய்திகள் ஆரவாரமில்லாமல் இருக்கிறது. வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே ஊடகங்கள் பரபரக்கும், விவாதங்கள் சூடு பறக்கும், என்னத்த.....அதான் யார் வெற்றிபெறுவார்கள் என்று தெரிந்தது தானேங்கிறது போல் தொகுதி மக்கள் தவிர்த்து வேறு எவரும் பெரிதாக அலட்டிக் கொண்டது போல் தெரியவில்லை. மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் வேண்டுகோளை ஏற்று 49 ஓ போட்டது மொத்தமே 49 பேர் கூட இல்லை என்பது சுவையார்வமான தகவல். இதுக்கு பதிலாக வெற்றிபெரும் கட்சியை ஆதரித்துவிட்டு எங்களால் தான் வெற்றிபெற்றது என்று வழக்கம் போல் சொல்லி இருக்கலாம். மருத்துவர் ஐயாவின் பார்ம் போய் விட்டது. பத்தாண்டுக்கும் மேலாக பாமக நீடித்ததே வியப்பு தான். மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் மஞ்சள் குளித்த அனித்தா இராதாகிருஷ்ணன் வேட்பாளர்களுக்கு முன்னோடி, இனிமே(ல்) கட்சி மாறுகிறர்வர்களால் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் தேர்தல் செலவும் சேரும் என்கிற முன் உதாரணத்திற்கு முதல் முன்னோடி. இதெல்லாம் பொது ஊடகங்களில் வெகுவாக விமர்சனம் செய்யப்படாததும் வியப்பு தான். கவர் ஸ்டோரி எழுத கவர் யாரும் கொடுத்திருந்தால் செய்தியாளர்கள் இது பற்றி கேட்டு, பேசி, எழுதி இருப்பாங்கப் போல :). கட்சி மாறி தேர்தல் நடத்தி சட்டமன்ற பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ள அனிதா இராதாகிருஷ்ணனின் செயல் மக்கள் ஆட்சியின் மற்றோர் இழிவு.

*******

தெலுங்கானா பிரிப்பு பற்றி தெலுங்கான பகுதி மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்வது தான் சரியான அனுகு(ம்)முறை என்று நினைக்கிறேன். ஒருமாநிலத்தில் தொடர்வது, தனியே செல்வது பற்றி அவர்களைத் தவிர்த்து பிற பகுதியினரோ, மானில மத்திய அரசுகளோ முடிவு செய்வது செயல் திணிப்பு ஆகும். தமிழ்பேசுபவர்கள் பாண்டி தமிழ்நாடு என்று இருக்கிறோம், மொழியால் மாநிலப் பிரிவினைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை, மொழி வளர்ச்சிக்கு பயன்படும், ஒரே மொழி ஒரே மாநிலம் என்பது செண்டிமெண்ட் டாக், மற்றபடி பெரிதாக பாதிப்பு எதுவும் கிடையாது. இந்தி பேசுகிற மாநிலங்கள் இருக்கும் போது தெலுங்கு பேசும் மாநிலங்கள் இருப்பதும் வரவேற்கத்தக்கதே. தெலுங்கான பிரிவினைப் பற்றி பிறர் கருத்து கூறலாம், ஆனால் முடிவு செய்யும் உரிமை அப்பகுதி மக்களுக்கே உரியது. மாநிலத்தைப் பொதுப்படுத்தி பஞ்ச் டயலாக் பேசும் தெலுங்கு நடிகர்கள் தெலுங்கைப் பொதுப்படுத்தி பேசவேண்டி இருக்கும். மாநிலம் பிரிந்தால் தண்ணீர் பிரச்சனை ? மாவட்டங்களுக்கு இடையேயும் தண்ணீர் பிரச்சனைகள் உள்ளது. நம்ம தமிழ்நாட்டில் கூட இந்த மாவட்டத்து தண்ணீர் அங்கே போகக்கூடாது என்கிற போராட்டங்கள் நடந்து இருக்கிறது. தனக்கு மிஞ்சியது தான தருமம் போல் தம்பகுதிகளுக்கு மிஞ்சியதே தண்ணீர் என்பதாகத்தான் தண்ணீர் தேவை குறித்த சித்தாந்தங்கள் இருக்கின்றன. ஆகவே தண்ணீர் பிரச்சனைகளுக்கும் தனித் தெலுங்கானவிற்கும் தொடர்புகள் குறைவு அல்லது அவை என்றுமே இருப்பது என்று சொல்லலாம். வழக்கம் போல் தேசியவியாதிகள் மாநிலப் பிரச்சனையையும் தேசியப்பிரச்சனையாக்கி மாநிலப் பிரிவினையை தனிநாட்டுப்பிரிவினை என்பது போல் காட்ட முயற்சிக்கிறார்கள். என்னைப் பொருத்த அளவில் தமிழ்நாடு பிரிக்கப்படுவதற்கு சொல்லப்படும் காரணங்கள் சொற்பமே, அதை நிராகரிக்கிறேன். ஆனால் புதிய மாநில தலைமை அல்லது தலைநகரங்கள் பிறப் பகுதியிலும் துணைத் தலைநகர் போன்று திருச்சி அல்லது மதுரையில் அமைத்தால் சீரான மாநில வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கும்.

********
தேர்தல் ஜோக்

தொண்டர் 1 : இடைத்தேர்தல் வெற்றி பற்றி நம்ம தலைவர் என்ன சொல்கிறார்

தொண்டர் 2 : இன்னும் இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தல் வரும், இடைத் தேர்தலுக்கு இவ்வளவு செலவு செய்து வென்றது நட்டம் தானாம்.

தொண்டர் 1 : அடப் போய்யா.... இந்த மாதிரி இடைத்தேர்தல் நடக்குறதால் தான் நம்ம மாதிரி ஆளுங்களிடம் பணப்புழக்கம் இருக்கு

தொண்டர் 2 : அப்ப நீயெல்லாம் முன்னைப் போல் வெறும் டீ குடிச்சிட்டு வேலை பார்க்கலையா ?

16 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

ஏசுவை ஈசா நபி என்று அழைக்கும் இஸ்லாமியர்கள் ஏசு பிறப்பைக் கொண்டாடதக் காரணங்கள் தெரியவில்லை.]]

எந்த பிறந்த நாட்களையும் இஸ்லாம்(நன்கு கவணிக்க இஸ்லாமியர்கள் அல்ல) கொண்டாடாது.

அக்கம் பக்கம் பழக்கத்தில் சிலர் கொண்டாடுகிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நட்புடன் ஜமால் said...

ஏசுவை ஈசா நபி என்று அழைக்கும் இஸ்லாமியர்கள் ஏசு பிறப்பைக் கொண்டாடதக் காரணங்கள் தெரியவில்லை.]]

எந்த பிறந்த நாட்களையும் இஸ்லாம்(நன்கு கவணிக்க இஸ்லாமியர்கள் அல்ல) கொண்டாடாது.

அக்கம் பக்கம் பழக்கத்தில் சிலர் கொண்டாடுகிறார்கள்.//

பிறந்த நாளை விடுங்க, மிலாது நபி அல்லா சார்ந்த பண்டிகை இல்லையே நபி சார்ந்தது தானே ! அதை இஸ்லாமியர்கள் பண்டிகையாக கொண்டாடுவது இல்லையா ?

நட்புடன் ஜமால் சொன்னது…

பிறந்த நாளை விடுங்க, மிலாது நபி அல்லா சார்ந்த பண்டிகை இல்லையே நபி சார்ந்தது தானே ! அதை இஸ்லாமியர்கள் பண்டிகையாக கொண்டாடுவது இல்லையா ?]]

அதைத்தான் மேலே சொன்னேன்

இஸ்லாம் கொண்டாடாது.

இஸ்லாமியர்கள் (என்று சொல்லிக்கொள்பவர்கள்) கொண்டாடுகின்றார்கள், இது தவறே.

கோவி.கண்ணன் சொன்னது…

//
அதைத்தான் மேலே சொன்னேன்

இஸ்லாம் கொண்டாடாது.

இஸ்லாமியர்கள் (என்று சொல்லிக்கொள்பவர்கள்) கொண்டாடுகின்றார்கள், இது தவறே.//

அதை எப்படி நீங்களாகச் சொல்ல முடியும், தலிபான்களும் நாங்கள் தான் உண்மையான இறைவழியில் செல்கிறோம் என்கிறார்கள், அவர்கள் வழியும் தனி வழிதானே. அவர்களுக்கு ஆதரவு இல்லை என்பதால் அவர்களும் உங்களை 'இஸ்லாமியர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள்' என்று கூறமாட்டார்களா ?

நட்புடன் ஜமால் சொன்னது…

நான் யாரையும் இஸ்லாமியர் அல்ல என்று தீர்ப்பு சொல்லவில்லை.

பிறந்த நாள் கொண்டாடும் பழக்கம் இஸ்லாத்தில் இல்லை.

நபிகளில் இறுதியாக வந்தவருக்கு அவர்களுடைய எந்த தோழரும்(அந்த கால கட்டத்தில் அவரோடு இனக்கமாக வாழ்ந்தவர்கள்) பிறந்த நாள் கொண்டாடியதாக எந்த தகவலும் இல்லை.

அவரை அவருடைய தோழர்களை விட அதிகமாக நேசித்த(ப)வர்கள் யாரும் இருக்க இயலாது

priyamudanprabu சொன்னது…

ருத்துவர் இராமதாஸ் ஐயாவின் வேண்டுகோளை ஏற்று 49 ஓ போட்டது மொத்தமே 49 பேர் கூட இல்லை என்பது சுவையார்வமான தகவல். இதுக்கு பதிலாக வெற்றிபெரும் கட்சியை ஆதரித்துவிட்டு எங்களால் தான் வெற்றிபெற்றது என்று வழக்கம் போல் சொல்லி இருக்கலாம். மருத்துவர் ஐயாவின் பார்ம் போய் விட்டது. பத்தாண்டுக்கும் மேலாக பாமக நீடித்ததே வியப்பு தான்
..../////


ஹ ஹா

priyamudanprabu சொன்னது…

மக்கள் வரிப்பணத்தில் தேர்தல் மஞ்சள் குளித்த அனித்தா இராதாகிருஷ்ணன் வேட்பாளர்களுக்கு முன்னோடி, இனிமே(ல்) கட்சி மாறுகிறர்வர்களால் மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் தேர்தல் செலவும் சேரும் என்கிற முன் உதாரணத்திற்கு முதல் முன்னோடி. இதெல்லாம் பொது ஊடகங்களில் வெகுவாக விமர்சனம் செய்யப்படாததும் வியப்பு தான். கவர் ஸ்டோரி எழுத கவர் யாரும் கொடுத்திருந்தால் செய்தியாளர்கள் இது பற்றி கேட்டு, பேசி, எழுதி இருப்பாங்கப் போல :). கட்சி மாறி தேர்தல் நடத்தி சட்டமன்ற பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ள அனிதா இராதாகிருஷ்ணனின் செயல் மக்கள் ஆட்சியின் மற்றோர் இழிவு.
///

கேவலமான பிழைப்பு

பரிசல்காரன் சொன்னது…

ஜோக்ஸ் அருமை ஜி....

Rajakamal சொன்னது…

"கடவுளைப் போல் காலமும் புதிரானது. பரவெளியில் அசைவகளும்இ செயல்படும் மனித மனமும் இல்லை என்றால் காலம் என்று ஒன்றை வரையறுக்க முடியாதுஇ அசைவுகளின் அளவீடுதான் காலம் ..."

மனித மனம் தான் எல்லாவற்றையும் பிரித்து அறிகிறது, காலமும் கடவுளும் வேறு வேறு அல்ல.

முகம்மது (ஸல்) அவர்களை நபியாக பார்பவர்கள் அவர்களின் பிறப்பைக் கொண்டாடுவார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//நபிகளில் இறுதியாக வந்தவருக்கு அவர்களுடைய எந்த தோழரும்(அந்த கால கட்டத்தில் அவரோடு இனக்கமாக வாழ்ந்தவர்கள்) பிறந்த நாள் கொண்டாடியதாக எந்த தகவலும் இல்லை.

அவரை அவருடைய தோழர்களை விட அதிகமாக நேசித்த(ப)வர்கள் யாரும் இருக்க இயலாது

12:22 PM, December 24, 2009//

ஜமால்,

கணிணியில் இஸ்லாமியர் வேலை செய்யலாமா ? விமானத்தில் இஸ்லாமியர்கள் பயனிக்கலாமா ? இல்லையான்னு கூட குரானில் ஹதிசில் வழிகாட்டுதல் இருக்காது, காரணம் அன்றைக்கு கணிணி கிடையாது, குரானில் ஹதீசில் இல்லை என்பதற்காக கணிணியில் இஸ்லாமியர் வேலை செய்யலாமா ? என்கிற விவாதம் நடப்பது போல் தெரியவில்லை, ஏனெனில் இவற்றிற்கான விடை இவை பின்னாளில் வந்த கண்டுபிடிப்புகளே, அவற்றை பயன்படுத்துவதும் பயன்படுத்ததாதும் நம் விருப்பம், இதையெல்லாம் குரானோ, ஹதீசோ வழிகாட்டுதல் கொடுக்காது.

பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் முகமது நபி காலத்தில் இல்லாததால் அவை குறித்து குரான் ஹதீசில் சொல்லப்பட்டு இருக்காது, எனவே நபிக்கு நெருக்கமான நபித் தோழர்களும் அன்றைக்கு அந்த வழக்கம் இல்லாததால் கொண்டாடி இருக்கமாட்டார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் பரவலாக அனைத்துலகத்தினருக்கும் பின்னாளில் ஏற்பட்ட ஒரு வழக்கமாகத்தான் நான் நினைக்கிறேன்.

கிரி சொன்னது…

//மருத்துவர் இராமதாஸ் ஐயாவின் வேண்டுகோளை ஏற்று 49 ஓ போட்டது மொத்தமே 49 பேர் கூட இல்லை என்பது சுவையார்வமான தகவல். இதுக்கு பதிலாக வெற்றிபெரும் கட்சியை ஆதரித்துவிட்டு எங்களால் தான் வெற்றிபெற்றது என்று வழக்கம் போல் சொல்லி இருக்கலாம்//

ஹி ஹி ஹி

அனிதா!... சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.

பீர் | Peer சொன்னது…

பிறந்தநாள் கொண்டாடாதவர்களுக்கும் வாழ்த்துச்சொல்லுவதில் உங்கள் வன்மம் தெரிக்கிறது.

இது அழகல்ல கோ. :(


(இஸ்லாமியர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியே தீருவதென்றால்... முஹம்மது நபியுடைய பிறந்தநாளன்று சொல்லுங்களேன்)

கோவி.கண்ணன் சொன்னது…

//பீர் | Peer said...
பிறந்தநாள் கொண்டாடாதவர்களுக்கும் வாழ்த்துச்சொல்லுவதில் உங்கள் வன்மம் தெரிக்கிறது.

இது அழகல்ல கோ. :(
//

இதுல வன்மமும் இல்லை கன்மமும் இல்லை. வாகாபிகள் மட்டும் தான் முஸ்லிம்கள் என்று நான் நினைப்பதும் இல்லை.

மிலாடி நபி விழா கொண்டாடுபவர்களுக்கு சொல்லுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

வஜ்ரா சொன்னது…

தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்று வருசா வருசம் புலம்பும் கூட்டத்திற்கு ஆத்மார்த்த ஆதரவு தெரிவிக்கும் கோ.க அவர்களே,
christmas தமிழர் பண்டிகையா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// வஜ்ரா said...
தீபாவளி தமிழர் பண்டிகை இல்லை என்று வருசா வருசம் புலம்பும் கூட்டத்திற்கு ஆத்மார்த்த ஆதரவு தெரிவிக்கும் கோ.க அவர்களே,
christmas தமிழர் பண்டிகையா ?
//

கிறித்து பிறப்பாக தொடங்கும் ஆங்கில முறை ஆண்டுகளை அலுவல் மற்றும் அன்றாடம் பயன்படுத்துகிறோம். கொண்டாடினால் தவறு இல்லை :)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//துணைத் தலைநகர் போன்று திருச்சி அல்லது மதுரையில் அமைத்தால் சீரான மாநில வளர்ச்சிக்கு மிகுந்த பயனளிக்கும்.//

வரவேற்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்