பின்பற்றுபவர்கள்

29 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் வெளிவராத காட்சிகள் !

நான் சென்னையில் இருந்த பொழுது எங்கள் வீட்டின் எதிரே உள்ள பங்களாவில் வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை அங்கே படப்படிப்பு நடக்கும். கேரவன்கள், உணவு வாகனங்கள், படக்கருவி இழுவை வண்டிகள், உதவியாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் படத்தில் பணி புரிபவர்கள் என பெரியக் கூட்டம் சூழ்ந்திருந்தது. அன்றைய காட்சி நடிகர் சாயாஜி சிண்டே வேகமாக ஜீப்பில் வந்து பங்களாவில் இறங்குவது போன்ற காட்சி. மூன்று முறை அடுத்தார்கள், அடுத்தக் காட்சியாக விரக்தியாக வீடு கைவிட்டுப் போகிறதே என்பது போல் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவது போன்ற காட்சி இதையும் மூன்று முறை எடுத்தார்கள்.

படத்தில் அந்த இரு காட்சிகளுமே இல்லை, ஆனால் வீட்டினுள் பிடிக்கப்பட்டக் காட்சி காட்டப்பட்டு இருந்தது. கதை படி சாயாஜி சிண்டே வில்லனுக்கு ஆதரவான உயர் காவல் அலுவலர். அவரது சின்னவீடு தான் அந்த வீட்டில் இருப்பார். வில்லன் அவரது சின்ன வீட்டையும் வளைத்துவிட வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளி ஏறுவார். வீட்டுனுள் வில்லனும், சின்னவீடும் இருக்கும் காட்சியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத விரக்தியில் வெளியே வருவார். வெளியே வந்ததும் சின்ன வீடும், பங்களாவும் கைவிட்டுப் போய்விட்டதே என்று வெறுத்து, வெறுப்பில் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவார். வீட்டுனுள் எடுக்கப்பட்ட காட்சியை நான் பார்க்கவில்லை. வெளியே எடுத்தக் காட்சியைத் தான் பார்த்தேன். படத்தில் வீட்டுனுள் எடுத்தக் காட்சியே இடம் பெற்றிருந்தது. வெளியே எடுத்தக் காட்சி நீளம் கருதி வெட்டப்பட்டதாக நினைக்கிறேன். காரணம் ஏற்கனவே படம் 3 மணி நேரத்திற்கும் மேல் மாபெரும் இழுவை. வேட்டைக்காரன் படத்தில் சிறப்பாக செய்திருந்தவர்களில் சாயாஜி சிண்டேவும் ஒருவர்.படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டே எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து நான் படம் எடுத்துக் கொண்டிருத்தேன். எடுக்கக் கூடாது என்று சைகை காட்டினார்கள். சரி என்று சொல்லிவிட்டேன். எடுத்த வரை ஆறு படங்கள் இருந்தது. ஒரு திரைப்படம் உருவாக பலரது உழைப்பும், பெரிய அளவில் பணமும் புழங்குகிறது, திரை உலகம் என்பது மபெரும் தொழிற்சாலை தான். வெற்றி பெற்றால் பணத்துடன் புகழ் வெளிச்சமும் சேர்ந்தே கிடைக்கிறது. அதிலும் டைட்டில் எனப்படும் படத் தலைப்பில் தனியாக பெயர் போடப் படுபவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களது உழைப்பு பெரிதாக வெளியே தெரியாது என்றாலும் ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த மற்றவர்கள் பாதிப்பு அடையமாட்டார்கள், தனியாக பெயர் போடப்படுபவர்கள் தான் பாதிப்பு அடைவார்கள். திரையுலகம் கலை சார்ந்தது என்றாலும் அது ஒரு மாபெரும் சூதாட்டம், ஒரு இயக்குனர் வரிசையாக இரண்டு தோல்வி படங்கள் கொடுத்தால் பிறகு அவருக்கு தயாரிப்பாளரே கிடைக்க மாட்டார். ஆனால் நடிகர்கள் ? நான்கு படம் தோல்வி அடைந்து ஐந்தாவது வெற்றிப்படம் அமைந்தால் அதன் காரணமாக அடுத்த நான்கு தோல்விப் படங்களுக்கு அவருக்கு இயக்குனரும், தயாரிப்பாளர்களும் கிடைப்பார்கள். ஏனென்றால் முகராசி என்பதை திரையுலகம் வெகுவாகவே நம்புகிறது அதுவும் நடிகைகளுக்குக் கிடையாது. எந்த ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும் பொதுமக்களிடம் நேரடி அறிமுகம் பெற்றவர் என்பதால் ஒரு நடிகரின் புகழ் அந்தப் படத்தின் இயக்குனரை விட வெகுவாகவே பரவும், இயக்குனரின் புகழ் திரையுலகிலும், நடிகர்களைத் தாண்டி திரைப்படங்களை ரசிப்பவர்களிடம் மட்டும் தான் பரவும்.

என்னைப் பொருத்த அளவில் திரைக் கலைஞன் என்றால் முதலில் இயக்குனரே அதன் பிறகு இயக்குனரின் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் நடிகர் நடிகைகள். வளர்ந்த நடிகர்களைப் பொருத்த அளவில் ஒரு படத்தின் தோல்வி என்பது அந்த படத்தை இயக்கியவர்களின் தோல்வி (இவளவு பெரிய நடிகரை வச்சே பணம், படம் பண்ணத் தெரியலையே என்பார்கள்). ஒரு படத்தின் வெற்றி அந்த நடிகரின் வெற்றி என்பதாகவும் திரையுலகினுள்ளேயே பிரித்து அறியப்படுகிறது. வளர்ந்த நடிகர் தோல்வி படமானால் அடுத்தப் படத்துக்கு இயக்குனரை மாற்றிக் கொள்வார். வெற்றிப்படம் மென்றால் அடுத்தப்படத்தில் அதைவிட நிறைய செலவு செய்யும் படமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரையே மாற்றிக் கொள்வார். திரையுலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்று சரியாகச் சொல்கிறார்கள். சில கனவுகள் பலிக்கும், பல கனவுகள் பழிக்கும். இதில் நட்டம் அடைபவர்கள் என்றால் இயக்குனரோ, நடிகர்களோ கிடையாது வட்டிக்கு பணம் வாங்கி தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் எனப்படும் படம் வெளியீட்டாளர்களும் தான். இயக்குனர்கள், நடிகர்கள் படு தோல்வி என்றாலும் அவர்கள் தஞ்ச மடைய சின்னத் திரையுலகம் இருக்கு. தயாரிப்பாளர் தோல்வி அடைந்தால் கடன் தொல்லையில் தப்பிக்க விடுதி அறையில் தஞ்ச மடைந்து முழம் கயிற்றில் முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இது சன்/திமுக, ஏவிஎம் குடும்பம் போன்று பெரிய அளவிலான பலதொழில் புரியும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பொருந்தாது, வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுப்பவர்களுக்குத்தான் அந்த நிலை.

பின்குறிப்பு : வேட்டைக்காரன் விமர்சனம் எழுதினால் பதிவுலகில் இருந்து தள்ளி வைக்கப்படுவீர்கள் என்று பலமான எச்சரிக்கை பல தரப்பினரிடம் இருந்து வந்ததை முன்னிட்டும், வேறு வழியே இல்லாததால் என் பங்குக்கான வேட்டைக்காரன் பதிவு இது என்ற அளவில் எடுத்துக் கொள்ளுமாறு விஜய் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். :)

23 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் கோவி

இப்படியும் விமர்சனம் எழுத முடியுமா - பல தகவல்கள் படத்தைப் பற்றி - புகைப்ப்டங்கள் - நல்லாவே இருக்கு

நல்வாழ்த்துகள் கோவி

துளசி கோபால் சொன்னது…

அந்த வீட்டைக் 'கண்ணால்' பார்த்துப் புண்ணியம் பெற்றேன்!!!

நன்றி உங்களுக்குத்தான்.

நட்புடன் ஜமால் சொன்னது…

இதுக்குமா - வோட்டு

அவரே போட்டாரா இல்லை அவருக்கு முதுகு சொறிபவர்கள் போட்டார்களா

-------------------

எப்படி போட மாட்டேன்னு சொல்லிட்டு தலைப்பு வச்சாச்சி :)

துபாய் ராஜா சொன்னது…

அவய்ங்க படத்தை விட நீங்க எடுத்த படம் நல்லாருக்கு கோவியாரே... :))

வால்பையன் சொன்னது…

வேட்டைகாரன் படம் பார்த்துட்டேன்னு சொன்னாலே ஒரு மாதிரியா ஊருகுள்ள பாக்குறாங்களாம்ல!

சிநேகிதன் அக்பர் சொன்னது…

வழக்கமான உங்கள் பாணி அலசல்.

நல்லாருக்கு கோவி அண்ணா.

கோவி.கண்ணன் சொன்னது…

// cheena (சீனா) said...

அன்பின் கோவி

இப்படியும் விமர்சனம் எழுத முடியுமா - பல தகவல்கள் படத்தைப் பற்றி - புகைப்ப்டங்கள் - நல்லாவே இருக்கு

நல்வாழ்த்துகள் கோவி//

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

அந்த வீட்டைக் 'கண்ணால்' பார்த்துப் புண்ணியம் பெற்றேன்!!!

நன்றி உங்களுக்குத்தான்.//

துளசி கோபால் said...

அந்த வீட்டைக் 'கண்(ண)ணால்' பார்த்த புண்ணியமா ? அவ்வ்வ்!

கோவி.கண்ணன் சொன்னது…

/நட்புடன் ஜமால் said...

இதுக்குமா - வோட்டு

அவரே போட்டாரா இல்லை அவருக்கு முதுகு சொறிபவர்கள் போட்டார்களா

-------------------//

இது அவனா அல்லது அவனுக்கு சொறிபவனா என்று தெரியலை, அவன் புரைபைலைக் காணும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துபாய் ராஜா said...

அவய்ங்க படத்தை விட நீங்க எடுத்த படம் நல்லாருக்கு கோவியாரே... :))//

எல்லாமே ரீலு தாங்கிறிங்களா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// வால்பையன் said...

வேட்டைகாரன் படம் பார்த்துட்டேன்னு சொன்னாலே ஒரு மாதிரியா ஊருகுள்ள பாக்குறாங்களாம்ல!//

வேட்டைக்காரனைவிட வேட்டைக்காரனின் குருவி தான் டாப்புங்கிறாங்கே.

கோவி.கண்ணன் சொன்னது…

//அக்பர் said...

வழக்கமான உங்கள் பாணி அலசல்.

நல்லாருக்கு கோவி அண்ணா.//

நன்றி அக்பர் !

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணே , கொஞ்சம் திருத்துங்க பார்ப்போம் .

/// இரண்டு நாளைக்கு ஒருமுறை அங்கே " பட்டப்படிப்பு " நடக்கும். ///

எவ்வளவு கஷ்டம் இல்ல !!

கோவி.கண்ணன் சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அண்ணே , கொஞ்சம் திருத்துங்க பார்ப்போம் .

/// இரண்டு நாளைக்கு ஒருமுறை அங்கே " பட்டப்படிப்பு " நடக்கும். ///

எவ்வளவு கஷ்டம் இல்ல !!//

நன்றி ஸ்டார்,

எழுதும் போது படபடப்புன்னு நினைக்கிறேன் :)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

அண்ணே ! எப்போ காலம் என் பக்கம் திரும்பும் ...

நானும் வேட்டைக்காரனா ....

Romeoboy சொன்னது…

வெளிவந்த படத்தை பார்த்தே காண்டுல அலையிறோம் இதுல வெளிவராத படமா ??

Jawahar சொன்னது…

//ஆனால் நடிகர்கள் ? நான்கு படம் தோல்வி அடைந்து ஐந்தாவது வெற்றிப்படம் அமைந்தால் அதன் காரணமாக அடுத்த நான்கு தோல்விப் படங்களுக்கு அவருக்கு இயக்குனரும், தயாரிப்பாளர்களும் கிடைப்பார்கள்.//

கண்ணன்ஜி... இல்லைன்னு நினைக்கிறேன். இன்றைய டிரென்ட்லே இது கொஞ்சம் கஷ்டம். நிறைய்ய திறமையாளர்கள் வந்துகிட்டு இருக்காங்க. நல்லா எடுத்த புதுப்படம் எல்லாம் ஓடுது. வெண்ணிலா கபடிக் குழு, ஈரம், நாடோடிகள், சுப்ரமணியபுரம்,பசங்க இப்டி நிறைய சொல்லலாம். அப்டி இருக்கிறப்போ நாலு பிளாப் தந்தவங்களை தயாரிப்பாளர்கள் தேடித் போகிற காலம் பழங்காலம் ஆயிரிச்சுன்னு நினைக்கிறேன். சரியா?

கோவி.கண்ணன் சொன்னது…

//Jawahar said...
//ஆனால் நடிகர்கள் ? நான்கு படம் தோல்வி அடைந்து ஐந்தாவது வெற்றிப்படம் அமைந்தால் அதன் காரணமாக அடுத்த நான்கு தோல்விப் படங்களுக்கு அவருக்கு இயக்குனரும், தயாரிப்பாளர்களும் கிடைப்பார்கள்.//

கண்ணன்ஜி... இல்லைன்னு நினைக்கிறேன். இன்றைய டிரென்ட்லே இது கொஞ்சம் கஷ்டம். நிறைய்ய திறமையாளர்கள் வந்துகிட்டு இருக்காங்க. நல்லா எடுத்த புதுப்படம் எல்லாம் ஓடுது. வெண்ணிலா கபடிக் குழு, ஈரம், நாடோடிகள், சுப்ரமணியபுரம்,பசங்க இப்டி நிறைய சொல்லலாம். அப்டி இருக்கிறப்போ நாலு பிளாப் தந்தவங்களை தயாரிப்பாளர்கள் தேடித் போகிற காலம் பழங்காலம் ஆயிரிச்சுன்னு நினைக்கிறேன். சரியா?
//

புது நடிகர்கள் படம் ஓடவில்லை என்றால் கல்தா கொடுத்துவிடுவார்கள். ஆனால் பெயருக்கு முன்னால் 'புரட்சி' போடும் நடிகர்கள் வளர்ந்த நடிகர்கள். சுப்ரீம் ஸ்டாருக்கு கூட யோகம் இப்படித்தான் தொடர்ந்து அடிக்கிறது

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
இதெல்லாம் என்ன வேலை!?

நீங்க இந்த படங்களை வெளியிட்டதால வேட்டைக்காரன் படம் ஒழுங்கா ஓடல. அதனால தயாரிப்பாளருக்கும், வருங்கால முதல்வருக்கும் 10 கோடி நட்டமாம்!

உங்களால திரைப்படத் தொழிலே பாதிக்குது சாமியோவ்!

நசரேயன் சொன்னது…

அண்ணே நல்லா படம் காட்டுறீங்க

Azhagan சொன்னது…

\\வேட்டைக்காரன் படத்தில் சிறப்பாக செய்திருந்தவர்களில் சாயாஜி சிண்டேவும் ஒருவர்.//... வேற யாரெல்லாம்........!!??

தமிழ் உதயம் சொன்னது…

தயாரிப்பாளர் தோல்வி அடைந்தால் கடன் தொல்லையில் தப்பிக்க விடுதி அறையில் தஞ்ச மடைந்து முழம் கயிற்றில் முடித்துக் கொள்கிறார்கள்.//////////////////// இது தயாரிப்பாளர் ஜீவியை ஞாபகப்படுத்தியது. அதனால் சொல்கிறேன். இந்த ஜீவியின் வருகையால் பல வினியோகஸ்தர்கள் காணாமல் போனார்கள். இன்று திரையுலகம் நாசமாய் போனதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் ஒரு காரணம் ஜீவி.

பனித்துளி சங்கர் சொன்னது…

அடடா !
நண்பரே இப்படியும் . விமர்சனம் எழுதலாம் என்று ஒரு புது முறையை அறிமுகப் படுத்தி இருக்கீங்க வாழ்த்துக்கள் .!!!!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்