பின்பற்றுபவர்கள்

30 டிசம்பர், 2009

செய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைக் காட்சி) !

இன்றைய தலைப்புச் செய்திகள்: செம்மொழி மாநாடு குறித்து கருணாநிதி ஆலோசனை, காங்கிரஸ் கட்சியை யாரும் அழிக்க முடியாது சோனியா சூளுரை. டைகர் உட்சை முந்துகிறார் திவாரி. திருப்பதி கோவில் ஏஆர் ரஹ்மான் இசைக்கு இந்து முன்னனி எதிர்ப்பு, எடியூரப்பா ஆட்சிக்கு மீண்டும் இடையூறு, பொன்னகரம் தேர்தல் தள்ளி வைப்பு தேர்தல் ஆணைய அறிவிப்பு.

வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கிற செம்மொழி மாநாட்டை எப்படி நடத்துவது என்கிற ஆலோசனை நடத்த தமிழறிஞர் குழுவை நாளைக் கூட்டுவதாக கருணாநிதி அறிவித்தார். செம்மொழி மாநாடு குறித்து அனைத்து உலக தமிழர் அமைப்புகளிலும், வெளி நாடுகளில் வாழும் தமிழர் தலைவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். உலக வரலாற்றில் முதன் முறையாக செம்மொழிக்காக மாநாட்டை ஒரு தமிழனே நடத்துவதும், அந்தப் பெருமை தனக்கே கிடைத்திருப்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறதென்றும், மாநாடு நடக்கக் கூடாது என்பதற்காக எதிரிகளும் விசமிகளும் பல்வேறு கேள்விகள் கேட்டு வருகிறார்கள், அதையெல்லாம் நாங்கள் சட்டை செய்யாது தமிழ் தாய்க்கு பொன்னாடையாகவே போற்றுவோம் என்றார்.

காங்கிரசின் 125 ஆண்டு நிறைவு காணுவதை ஒட்டி அதன் தலைவி திருமதி சோனியா காந்தி பேசிய அறிக்கையில் காங்கிரசை யாராலும் அழிக்க முடியாது என்றார். அப்படி என்றால் அது தானாகவே அழியும் என்று நினைக்கிறீர்களா ? என்று கேட்ட செய்தியாளரை கூட்டத்தினர் குப்புறத் தள்ளி அப்புறப்படுத்தினர். சுதந்திர இந்தியாவில் காந்தியின் கனவை நிறைவேற்றும் ஒரே கட்சி காங்கிரஸ் கட்சி தான் என்றார். 'சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தேவை அற்றது என்றும் அது கலைக்கப்படுவதை தாம் விரும்புவதாக காந்திஜி சொன்னதைப் பற்றி புகழ்பெற்ற தொலை காட்சி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது காந்திஜி ஆவியாக வந்து தாம் அவ்வாறு சொன்னது தவறு என்றும் காங்கிரஸின் தொடரும் பொற்கால ஆட்சி இந்திய நலனுக்கு என்றென்றும் தேவை என்று மூத்த காங்கிரஸ் தலைவர் மறைந்த நரசிம்மராவின் கனவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே சொன்னதாகவும் குறிப்பிட்டார். காந்திஜி ஆவியின் விருப்பப்படி காங்கிரஸ் கட்சி அதன் லட்சியங்களை அடையும் வரை அதை யாராலும் அழிக்க முடியாது என்று சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

இணையங்களில் டைகர் உட்சின் லீலைகளை தேடுவது போலவே என் டி திவாரி குறித்து எதுவும் சிக்குமா என்று தேடுபவர்கள் எண்ணிக்கை கூடி இருப்பதாக இந்திய இணைய தள தேடல் குறித்து ஆராய்ந்து வரும் ஒரு பெயரில்லாத செய்தி நிறுவனம் தெரிவித்தது. இதற்கிடையே இந்த செய்தியைப் பற்றி திவாரி கூறுகையில் அது எதிர்கட்சிகளின் சதி என்றும் கிராபிக்ஸ் பயன்படுத்தி எடுத்திருக்கிறார்கள், வீடியோவில் இருந்தது நான் அல்ல என்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் தத்துருபமாக ஒரிஜினல் போலவே கிராபிக்ஸ் செய்யும் நம் இந்திய கிராபிக்ஸ் வல்லுனர்கள் அதைத் திரைப்படத்துறையில் பயன்படுத்தினால் இந்தியாவிலும் அவதார் போன்ற சிறந்த கிராபிக்ஸ் படங்களை உருவாக்கி ஹாலிவுட்டுக்கு சவாலாக இருக்க முடியும் என்றார்.

இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன், ஆகம விதிக்கு இந்து கோவில்களை புத்தாண்டு பிறப்புக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவில் திறந்து பூஜை செய்தால் இந்து முன்னணி அதை தடுக்கும் விதத்தில் போராட்டம் நடத்தும். அத்துடன் அதற்கு உடந்தையாக இருக்கும் கோவில் அர்ச்சகர்கள், அதிகாரிகள், அறங்காவலர்கள் மீது வழக்கு தொடருவோம். என்றார். அங்கு வரும் பக்தர்களை ஓட ஓட விரட்டுவீர்களா ? கூடவே ஒடுவதற்கு போதிய கட்சித் தொண்டர்கள் இல்லை என்பதால் பக்தர்களை தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றார், மேலும் அவர் சற்று ஆவேசமாக திருப்பதி வெங்கடாஜலபதி பற்றிய பாடல்களுக்கு இசைஅமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை வைத்து இசை அமைத்து ஆல்பம் வெளியிடப்போவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதை இந்து முன்னணி கண்டிக்கிறது. இந்து தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இசை அமைத்தால் சிறப்பாக இருக்கும். எனவே தேவஸ்தானம் தனது திட்டத்தை கைவிட வேண்டும் மேற்கண்டவாறு இந்து முன்னணியின் மாநில செயலாளர் வெள்ளையப்பன் கூறினார். புத்த மதத்தைச் சேர்ந்த ராஜேபக்சே நுழைய முடிந்த கோவிலுக்கு ரஹ்மான் இசை அமைப்பதால் என்ன முழுகிவிடப் போவது என்று கேட்ட செய்தியாளரிடம் யார் கண்டது... காஞ்சி பெரியவாளை கைது செய்த போது சுனாமி வந்தது போல் ஏஆர்ரஹ்மான் திருப்பதி இசையால் அபச்சாரம் நிகழ்ந்து மீண்டும் ஒரு சுனாமி கூட வரலாம், நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

14 கருத்துகள்:

Unknown சொன்னது…

<<<
தத்துருபமாக ஒரிஜினல் போலவே கிராபிக்ஸ் செய்யும் நம் இந்திய கிராபிக்ஸ் வல்லுனர்கள் அதைத் திரைப்படத்துறையில் பயன்படுத்தினால் இந்தியாவிலும் அவதார் போன்ற சிறந்த கிராபிக்ஸ் படங்களை உருவாக்கி ஹாலிவுட்டுக்கு சவாலாக இருக்க முடியும் என்றார்.
>>>

ஹஹஹ... நல்ல எண்ணம்...

Unknown சொன்னது…

லை விட்டு போச்சு போல??? (தொலக் காட்சி) செய்திய முந்தி தர வேண்டியதுதான் அதுக்காக இப்படியா??? அதுவும் நம்ம கோவிஜிகிட்ட இருந்தா????

குடுகுடுப்பை சொன்னது…

ஏஆர் ரகுமான் ஒரு இசையமைபாளர் அவர் இசையமைப்பதை எதிர்ப்பதை விட்டுவிட்டு, தலித்துகள் நுழையமுடியாத கோவில்களில் அவர்கள் வழிபட வைத்தால் இவர்கள் இந்துக்கள். இல்லையென்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.

துளசி கோபால் சொன்னது…

ஒரே ஒரு வரலாற்றுப்பிழை இருக்கு போல!!!!

காங்கிரஸ் வயசு 125ன்னு படிச்ச நினைவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...

ஒரே ஒரு வரலாற்றுப்பிழை இருக்கு போல!!!!

காங்கிரஸ் வயசு 125ன்னு படிச்ச நினைவு.//

திருத்திவிட்டேன். நன்றி அம்மா !

கோவி.கண்ணன் சொன்னது…

// ..:: Mãstän ::.. said...

லை விட்டு போச்சு போல??? (தொலக் காட்சி) செய்திய முந்தி தர வேண்டியதுதான் அதுக்காக இப்படியா??? அதுவும் நம்ம கோவிஜிகிட்ட இருந்தா????//

:) வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். சரி செய்துவிட்டேன்.

வருத்தம் மன்னிப்பு ஆகாது !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...

ஏஆர் ரகுமான் ஒரு இசையமைபாளர் அவர் இசையமைப்பதை எதிர்ப்பதை விட்டுவிட்டு, தலித்துகள் நுழையமுடியாத கோவில்களில் அவர்கள் வழிபட வைத்தால் இவர்கள் இந்துக்கள். இல்லையென்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.//

கோவில் ஆகமம் தலித்துகள் நுழைவை அனுமதிக்காது, அதுக்காகத் தான் தலித்துகள் இருக்கிற இடம் தேடி தலித் கோவிந்தம் வருதாம்.

சிநேகிதன் அக்பர் சொன்னது…

//நாங்கள் சட்டை செய்யாது தமிழ் தாய்க்கு பொன்னாடையாகவே போற்றுவோம் என்றார்.//

//செய்தியாளரை கூட்டத்தினர் குப்புறத் தள்ளி அப்புறப்படுத்தினர். //

//கூடவே ஒடுவதற்கு போதிய கட்சித் தொண்டர்கள் இல்லை என்பதால் பக்தர்களை தாங்கள் தடுக்கப் போவதில்லை என்றார்//

ரசித்தேன்.

கோவிஜி, இது எல்லாம் உண்மைதானே.

அப்புறம். நம்ம பக்கம் வராததை......

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

பேப்பர் வாங்கலியோ பேப்பர் ...

சூடான செய்திகள் ... பரபரப்பு செய்திகள்

:-))))

பித்தனின் வாக்கு சொன்னது…

உள்ளேன் அய்யா

Romeoboy சொன்னது…

\\டைகர் உட்சை முந்துகிறார் திவாரி//

தலைப்பே செமயா இருக்கு தல ..

Unknown சொன்னது…

//செம்மொழி மாநாடு குறித்து அனைத்து உலக தமிழர் அமைப்புகளிலும், வெளி நாடுகளில் வாழும் தமிழர் தலைவர்களிடமும் ஆலோசனை கேட்கப்பட்டதா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்//
1. அவ்வாறு ஆலோசனை கேட்டிருந்தால் ஒருமித்த கருத்துருவாக்கம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறீர்களா?
2. அவ்வாறு கேட்காததற்காக எந்த உலகத் தமிழர் அமைப்பாவது 'தான் கலந்து கொள்ளப் போவதில்லை' என மறுத்திருக்கிறதா?
3. இந்த மாநாட்டினால் எந்த நன்மையும் விளையப் போவதில்லையா? தமிழர்கள் கூடி தமிழைப் பற்றி பேசிப் பிரிவதில் நன்மைகளேதும் இல்லையா?

கருணாநிதி மேலுள்ள வேறு கோபத்தை......!?

கோவி.கண்ணன் சொன்னது…

// சுல்தான் said...

1. அவ்வாறு ஆலோசனை கேட்டிருந்தால் ஒருமித்த கருத்துருவாக்கம் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறீர்களா?


2. அவ்வாறு கேட்காததற்காக எந்த உலகத் தமிழர் அமைப்பாவது 'தான் கலந்து கொள்ளப் போவதில்லை' என மறுத்திருக்கிறதா?

3. இந்த மாநாட்டினால் எந்த நன்மையும் விளையப் போவதில்லையா? தமிழர்கள் கூடி தமிழைப் பற்றி பேசிப் பிரிவதில் நன்மைகளேதும் இல்லையா?

கருணாநிதி மேலுள்ள வேறு கோபத்தை......!?
//


அப்படியெல்லாம் பார்த்தால் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு சட்டத்தையும் விவாதம் இல்லாமல் கொண்டு வர நீங்கள் ஆதரவளிப்பீர்களா ? தமிழர்கள் என்றால் தமிழ் நாட்டில் மட்டுமே இல்லை, இலங்கை, சிங்கை, மலேசியாவிலும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களும் பாடுபட்டவர்களும் உண்டு. தமிழ் நாட்டி தமிழன் தான் தமிழன் என்பதாக கட்டமைக்கப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.

தனது குடும்பங்கள் ஏன் பிரிந்தன என்பதற்கு மோசமான செயல்கள் நடந்ததை மறந்து அவை சேர்ந்ததற்கு
கண்கள் பனித்தது இதயம் இனித்தது
என்று சொல்லும் கருணாநிதி கோபம் எனக்கு இல்லை, ஆனால் கருணாநிதி செய்வது சரி என்று என்னால் சொல்ல முடியாது ஒரு குடிமகனாக தமிழனாக விமர்சனம் செய்யும் உரிமை உண்டு.

சுடுதண்ணி சொன்னது…

அருமை... மிகவும் ரசித்தேன் :).

பதிவுக்கு மிக்க நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்