பின்பற்றுபவர்கள்

11 டிசம்பர், 2009

செய்திகள் வாசிப்பது ...(காலம் தொலைகாட்சி)

முதன்மை செய்திகள் : பணகரன் அலுவலகம் கொளுத்தியது நக்சலைட்டுகளாக இருக்கும் காவல் துறை சந்தேகம். புதிய மாநிலம் தலுங்கானா உதயம்...தமிழகத்தில் இடைத் தேர்தல் ஓட்டு வேட்டையில் முந்துகிறது ஆளும் கட்சி......

சென்ற ஆண்டு பணகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டு மூன்று பேர் கொலையான வழக்கில் அரசு தரப்பு காவல்துறை தரப்பின் சாட்சிகளை போதிய ஆதாரம் இல்லை என நிராகரித்தது, நீதிபதி அரசு தரப்பு ஞாயங்களை ஏற்று காவல் துறை குற்றம் சுமத்தியவர்களை விடுதலை செய்தார், பொய் சாட்சிகளை கொண்டு வந்ததற்காக நீதிபதி காவல் துறைக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க, பணகரன் அலுவலகம் தீவிரவாதிகளாலோ அல்லது முகமூடி கும்பல்களாலோ கொளுத்தப்பட்டு இருக்கலாம், விரைவில் பிடித்து விடுவோம் என்று தெரிவித்தனர். விடுதலை அடைந்த நிரபராதிகள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக் கூறிய பணகரன் நிறுவனர், திரு மாலாபதி விரைவில் தங்களுக்கு ஞாயம் கிடைக்கும் என்றும், நிரபிராதிகள் விடுவிக்கப்பட்டது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். பணகரன் அலுவலக விவாகரம் குறித்துக் கருத்துக் கூறிய ஆளும்கட்சி மத்திய அமைச்சர், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை, எதிர்கட்சிகளின் சோடிப்பு வழக்கு என்பதால் தான் வழக்கு நிலைக்கவில்லை, என்றும் ஞாயம் எப்போதுமே வெல்லும் என்று தெரிவித்தார். பணகரன் அலுவகம் விவாகாரத் தீர்ப்பு குறித்து பணகரன் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளி இட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது. தீர்ப்புக்கு பிறகு பணகரன் அலுவலகம் முன்பு அதன் ஊழியர்கள் கொண்ட்டாம் பற்றிய ஒரு சிறிய வீடியோ காட்சி. ...

தலுங்கானக் கோரிக்கையில் தலுங்கானக் கட்சியின் தலைவரின் 10 நாள் உண்ணாவிரதம் மத்திய அரசு தலுங்கான கோரிக்கையை ஏற்றதினால் முடிவுக்கு வந்திருகிறது, தலுங்கான பற்றி தமிழக அரசியல் தலைவரும் முக்கிய கட்சிதலைவருமான பாமுக தலைவர் பொறியாளர் பட்டைதாசுவிடம் கேட்ட போது, இது போல் தமிழகமும் பிரிக்கப்படவேண்டும் என்கிற தனது கோரிக்கை இப்பொழுது தான் தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும், தலுங்கான தனிமாநிலம் அமைவதை தாம் வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

தலுங்கான கட்சித்தலைவரின் உண்ணாவிரதம் பற்றிக் கூறிய தமிழக துணை அமைச்சர், வாழ்த்துவதாகவும், ஆனால் 10 நாட்கள் உண்ணாவிரதம் மிகவும் அதிகம் தான், இது போன்ற மக்கள் வாழ்வாதரப் பிரச்சனையில் எங்கள் தலைவர் மூன்றே மணி நேர உண்ணாவிரதத்தால் வெற்றிகரமாக சாதித்தார், அந்த சாதனை இன்று வரை உலக அளவில் யாராலும் முறியடிக்கபடாததாக இருக்கிறது என்றார்.

நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் ஆளும் கட்சியின் கையே ஓங்கி இருக்கிறது, ஆளும்கட்சிக்கு பாமுக மறைமுக ஆதரவு தெரிவித்து வந்தவாசி தொகுதிகளில் ஓட்டு வேட்டையிலும் இறங்கி உள்ளனர். நீங்கள் ஓ போடப் போவதாகச் சொன்னீர்களே என்று கேட்ட செய்தியாளரை முறைத்த பொறியாளர் பட்டைதாசு நான் அவ்வாறு சொல்லவில்லை, செய்தியாளர்கள் அப்படி ஒரு தவறான தகவலை வெளி இட்டதாகவும், எங்கள் கட்சி எந்த ஒரு கட்சிக்கும் தொடர்ந்து எதிரியாக இருந்ததே இல்லை என்று குறிப்பிட்டார். ஆளும் கட்சிக்கு ஓட்டுப் போடுபவர்களுக்கு காப்புறுதி என்றும் ஓட்டுப் போடாதவர்களுக்கு காப்பு உறுதி என்று ஆளும் கட்சிக்காரார்களால் வாக்காளர்கள் எச்சரிக்கப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

நன்றி வணக்கம்...

வாசித்தது கோவியார்

இது ஒரு காலம் தொலைகாட்சி (டைம் டிவி) யின் ஆக்கம்...

26 கருத்துகள்:

தருமி சொன்னது…

டைம் டிவி செய்தியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்

குழலி / Kuzhali சொன்னது…

//பணகரன் அலுவலகம் தீவிரவாதிகளாலோ அல்லது முகமூடி கும்பல்களாலோ கொளுத்தப்பட்டு இருக்கலாம்,
//
பணகரன் அலுவலக ஊழியர்கள் தங்களுக்கு தாங்களே கொளுத்திக்கொண்டு செத்து செத்து விளையாடியது என்பது தான் உண்மை...

// நீங்கள் ஓ போடப் போவதாகச் சொன்னீர்களே என்று கேட்ட செய்தியாளரை முறைத்த பொறியாளர் பட்டைதாசு நான் அவ்வாறு சொல்லவில்லை,
//
பிராயாணியை வாங்கி துண்ணுட்டு பிராந்தியை அடிச்சிட்டு 'ஓட்டை' கூரியனுக்கும் 'ஓட்டையை' கட்சிக்கும் போட்டுறுவாங்களோங்கற பயமாயிருக்கும்.

ஆனா ஒண்ணு காலம் தொலைக்காட்சி கொளுத்தப்படப்போவது உறுதி...

நையாண்டி நைனா சொன்னது…

டீவிலே அப்பப்ப... புது படமும் போடுங்க...

Unknown சொன்னது…

யப்பா சாமி…முடியலண்ணே… ஹிஹி...

<<<
ஆனா ஒண்ணு காலம் தொலைக்காட்சி கொளுத்தப்படப்போவது உறுதி...
>>>

தீவிரமா ஆதரிக்கிறேன் :D

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

வாழ்த்துக்கள்

ராஜவம்சம் சொன்னது…

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

என்ன தான் தமிழ் தமிழ் என்று கூறும் தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி ஆங்கிலம் கலந்த விளம்பரம், செய்திகளுக்கு இடையே நான்கு முறையேனும் வரவேண்டும்

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜவம்சம் said...
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

என்ன தான் தமிழ் தமிழ் என்று கூறும் தொலைக்காட்சியாக இருந்தாலும் சரி ஆங்கிலம் கலந்த விளம்பரம், செய்திகளுக்கு இடையே நான்கு முறையேனும் வரவேண்டும்
//

:)
அடுத்த செய்தியில் 'சேட்டைக்காரன்' வெளம்பரம் போட்டுவிடுகிறேன்.

வல்லிசிம்ஹன் சொன்னது…

வெகுவாக ரசித்தேன் கண்ணன்.:))

கோவி.கண்ணன் சொன்னது…

//வல்லிசிம்ஹன் said...
வெகுவாக ரசித்தேன் கண்ணன்.:))
//

வாங்க வல்லியம்மா, நீண்ட நாள்களுக்கு பிறகு உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
டைம் டிவி செய்தியாளர்களுக்கு என் வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனா ஒண்ணு காலம் தொலைக்காட்சி கொளுத்தப்படப்போவது உறுதி...

11:29 AM, December 11, 2009
//

ஐயோ.....ஐயோ கொல்லுறாங்களே.....!

நான் இன்னும் டாப் டென் நிகழ்ச்சியெல்லாம் போடலாம்னு இருக்கேன். :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
டீவிலே அப்பப்ப... புது படமும் போடுங்க...
//

உலக தொலைக்காட்சிகளில் முதன் முறையாக நிகழ்ச்சிகள் கூட உண்டு சார்

கோவி.கண்ணன் சொன்னது…

// ..:: Mãstän ::.. said...
யப்பா சாமி…முடியலண்ணே… ஹிஹி...

<<<
ஆனா ஒண்ணு காலம் தொலைக்காட்சி கொளுத்தப்படப்போவது உறுதி...
>>>

தீவிரமா ஆதரிக்கிறேன் :D
//

ஆஹா......கிளம்பிட்டாரய்யா கிளம்பிட்டாரு.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
வாழ்த்துக்கள்
//
நன்றி. சவுமியா தியேட்டர் சார்பில் 'தாளங்கள்' மெகாதொடர் தயாரிக்க இருக்கிறோம். 3000 எபிசோட் நீங்க தான், அண்ணாசாமியை வைத்து இயக்கித் தரனும்

Sanjai Gandhi சொன்னது…

பெரியவா குழலி ஐயங்கார் கமெண்ட்டு ஜூப்பரு.. :))

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...
பெரியவா குழலி ஐயங்கார் கமெண்ட்டு ஜூப்பரு.. :))
//

சஞ்செய் ஐயங்கார்,

அவரு வடகலையா தென்கலையா ?

Sanjai Gandhi சொன்னது…

கிழக்கலை மேற்கலைனா ஒத்துக்க மாட்டிங்களா? :)

கோவி.கண்ணன் சொன்னது…

// SanjaiGandhi™ said...
கிழக்கலை மேற்கலைனா ஒத்துக்க மாட்டிங்களா? :)
//

வழக்கில் இருப்பதை சொல்லு ஓய், என்ன வழக்கா ? யானைக்கு எந்த கலை நாமம் போடுவது என்கிற வழக்கு. வடகலை அல்லது தென்கலை தான் வழக்கில் உள்ளது.

Sanjai Gandhi சொன்னது…

குழலிக்கு நாமம் போட்டுப் பார்க்கத் துடிக்கும் உங்கள் நுண்ணரசியலைக் கண்டிக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//SanjaiGandhi™ said...
குழலிக்கு நாமம் போட்டுப் பார்க்கத் துடிக்கும் உங்கள் நுண்ணரசியலைக் கண்டிக்கிறேன்.
//

அடப்பாவி, இப்ப நீதான் நாமம் போட்டு இருப்பேன்னு சந்தேகமே இல்லாமல் உறுதி ஆகுது. சஞ்செயின் மற்றொரு பெயர் நாரதனா ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்!

3 பேர கொழுத்துனதயே மறை முகமா சுட்டிக் காட்டுறீங்களே!

இதெல்லாம் பெரிய செய்தியா?

இன்னும் எத்தனை பேர கொழுத்த இருக்கிறோம். அப்பவும் பிரியானியை துன்னுபுட்டு எங்களுக்குத் தானே ஓட்டுப் போடப்போறியள்! எங்களத்தானே ஜெயிக்க வைக்கப் போகிறீர்கள்!

உங்களை விலைக்கு வாங்கும் கலை எங்களிடம் இருக்கிறது.

பணகரனாம் பணகரன்....

நாங்க பணக்காரன்... உங்க காலம் டி.வியையே விலைக்கு வாங்குவோம்.
(இப்பதான் காலனை விலைக்கு வாங்கும் கலையில் வெற்றி பெற்றிருக்கிறோம்)

::::)))))))))))))))

பெயரில்லா சொன்னது…

வாவ், கலக்கல் .... ;)

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

டிவி வேற ஆரம்பிச்சாச்சா அண்ணே !

நம்மளையும் கொஞ்சம் படம் காட்டுங்கோ ..

கிரி சொன்னது…

//எங்கள் தலைவர் மூன்றே மணி நேர உண்ணாவிரதத்தால் வெற்றிகரமாக சாதித்தார், அந்த சாதனை இன்று வரை உலக அளவில் யாராலும் முறியடிக்கபடாததாக இருக்கிறது என்றார்//


:-))

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

தங்களின் பதிவு அருமை..நன்றி தோழர்..

Saravanan Renganathan சொன்னது…

:-)

//காப்புறுதி என்றும் ஓட்டுப் போடாதவர்களுக்கு காப்பு உறுதி என்று ஆளும் கட்சிக்காரார்களால்

கோவியாருக்கும் காப்பு'றுதி எடுக்கவேண்டும் போல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்