பின்பற்றுபவர்கள்

10 டிசம்பர், 2009

பொதுவுடமை, முதலாளித்துவம் !

பொதுவுடமை என்னும் சோசலிச கொள்கை மதவாதிகளாலும், முதலாளிகளாலும் அருவெறுப்பாகப் பார்க்கப்பட்டது. பொதுவுடமைக் கொள்கையும் மதவாதமும் முறையே பொருள் முதல்வாதம் மற்றும் கருத்து முதல்வாதம் என்பதாக புதிய சிந்தனையாளர்களால் சொல்லப்படுகிறது, இவற்றின் விளக்கங்களும், அரசியல், வரலாற்று ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு இவை இரண்டும் சமூக சித்தாந்தங்கள் எனப்படுகின்றன. பொருள் முதல்வாதம் விதியை, இறைவனை நம்பாது, கருத்து முதல்வாதம் இரண்டையும் நம்பும். பொதுவுடமை அல்லது பொருள் முதல்வாதக் கொள்கையின் சித்தாந்ததின் முக்கிய கொள்கை, சொத்துகள், கருவிகள், அறிவியல் முன்னேற்றம் அனைவருக்கும் உடைமை உடையது. நவீன பொருள் முதல்வாத சித்தாந்தங்களைத் தோற்று வித்தவர்களாக மார்க்சும் ஏங்கெல்சும் அறியப்படுகிறார்கள்.

பொருள் முதல்வாதக் கொள்கைகளை அறிவியல் சித்தாந்தமாக மாற்றுவதன் மூலம் உழைக்கும் வர்க்கத்தை தட்டி எழுப்ப முடியும் என்று கருதி அதை வெற்றிகரமாக செய்தி காட்டியவர் மார்க்ஸ். பொருளியல் சமச்சீர் அல்லது பொருளியல் வளர்ச்சிக்கு மார்க்ஸின் கொள்கை பயனளிக்கும் என்பதோடு அது முழு மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் கருத்தில் கொண்டதாகச் சொல்லப்பட்டது. முதலாளித்துவம் சொத்துகள், கருவிகள், மக்களின் உழைப்பு என்பதை தனிப்பட்ட ஒருவரின் உடமை ஆக்கிவிட் ஒப்புதல் அளிப்பதுடன் அல்லாமல் ஏழை மேலும் ஏழையாகவும், பணக்காரர் மேலும் பணக்காராக்கி சமூகத்தின் சமச்சீர் தன்மையை கெடுத்துவிடுகிறது என்பதே மார்க்ஸின் குற்றச் சாட்டு.

மார்க்ஸியம் தோற்றுவிட்டது அது ஒரு கற்பனை கொள்கை, செயல்படுத்த முடியாத ஒன்று என்றே முதலாளித்துவ நாடுகளால் பரப்பட்டது, இன்றும் அவை தொடர்ந்து சொல்லப்பட்டும் வருகிறது. மார்கிய வாதிகளின் பொதுவுடமை கொள்கை தோற்றுவிட்டதா ? என்று பார்த்தால் அவை அனைத்து சமூகங்களிலும் நாடுகளிலும் ஊடுறுவி நிற்கிறது என்றே தெரிகிறது. உதாரணத்திற்கு மார்கிய சிந்தாந்தப் பரவலுக்குப் பிறகே உலக நாடுகள் மன்னர் ஆட்சிகளை ஒழித்து மக்கள் ஆட்சி தத்துவத்திற்குச் சென்றன. அரசும், அரசுரிமையும் தனிப்பட்ட மனிதர்களின் சொத்து அல்ல, தகுதி உடைய எவரும் நாட்டை வழி நடத்திச் செல்லலாம் என்பது மக்கள் ஆட்சிக் கோட்பாடு. ஒற்றைத் தலைமைகள் தொடர்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பதாக மன்னர் ஆட்சிகள் நீங்கின. ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.

நிலப் பிரபுத்துவ முறையை ஒழித்ததில் மார்கிய சித்தாந்தங்களின் முன்னெடுப்புகளே காரணம், நில உச்சவரம்பு சட்டங்கள் இயற்றப்பட்டு உபரி சொத்துகள் சீனா போன்ற நாடுகளில் அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கோவில்கள் கோவில் சொத்துகளின் ஆளுமைகள் குறைக்கப்பட்டு அரசாங்கத்திடம் கோவில் பொறுப்புகள் ஒப்படைப்பக்கட்டுள்ளது, வெள்ளையர் ஆட்சி அகன்ற பிறகு இந்தியாவில் குறுநில மன்னர்கள் ஆளுமைகள் ஒழிக்கப்பட்டது. மனித உழைப்பும், உற்பத்தியும் அதன் பலன்களும் தனிமனித உடமை அன்று என்ற மார்கிசிய கொள்கை உள்வாங்களின் அல்லது மார்க்கிய வாதிகளின் கலக் குரலின் பயனாக முதலாளித்துவ சமூகத்தில் ஏற்பட்ட மாற்றங்களே இன்று நடை முறையில் இருக்கும் அனைத்து மாற்றங்களும் ஆகும்.

முதலாளித்துவ அமைப்பு இனசார்ப்புடையது தட்டையானது, பொதுவுடமை அமைப்பு இனச்சார்ப்பு அற்றது அகண்டதுமாகும். பொதுவுடமைக் கொள்கையின் நடை முறைச் சிக்கல். உற்பத்திக்கான பயன்பாடு அனைவருக்கும் பொதுவானது என்றாலும் அதற்கான ஊக்கம் எந்த ஒரு தனிமனிதனும் பொதுவானது என்று கருதுவதற்கு வாய்ப்பு கிடையாது, எறும்புக் கூட்டங்களைப் போல் ஒன்று போல் திறமை, அறிவு இருக்கும் போது அங்கே ஊக்கம் என்பதற்கான தேவை இருப்பதில்லை. மனித சமூகம் ஒன்று போல் அறிவும் திறமையும் கொண்டது இல்லை. உழைப்பவர் மற்றும் கடுமையாக உழைப்பவர் இவர்களுக்கான பலன்கள் ஒன்றாக இருந்தால் அது அநீதி என்பது பொதுச் சிந்தாந்தம், இங்கே தான் மார்கிசிய பொது உடமை கொள்கை திணறுகிறது. இந்த வேறுபாட்டை அதாவது அனைவரையும் ஊக்கப்படுத்துவதற்கான அறிவியல் ரீதியான வழி என்பதாக மார்கிய கொள்கை சொல்லுவது பலனின் பயன் முழுமையாக புரியவைத்தால் அனைவரும் உந்துதலுடன் உழைப்பது என்பது சாத்தியமாம்.

நசுக்கப்படுபவர்கள் போராடுவது அவர்களது உரிமை என்ற அளவுக்கு சமூகப் புரிதலை மார்கியம் ஏற்படுத்தியதால் தான் இன்று தொழிற்சங்கங்கள் அற்ற நிறுவனங்கள் பார்ப்பது மிகவும் அரிது. அதிலும் குறுக்கு வழியாக தொழிற்சங்கத் தலைவர்களை சரி கட்டி சாதித்துக் கொள்வது முதலாளிகளின் முதலாளித்துவாதிகளின் செயல் முறையாக இருக்கிறது.

கடவுள் குறித்த பரந்த பொது மனப்பான்மையில் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று என்றோ சொல்லப்பட்டாலும், நடைமுறைக்கு வருவது பொதுச் சொத்து அனைவருக்கும் உரிமை உடையது என்ற மார்கிசிய புரிதல் ஏற்பட்டால் தான் சாத்தியம். மார்கிசியம் தோற்றது என்று பொய் பரப்பட்டாலும் அது அனைத்து சமூகங்களிலும், சமுக இயக்கங்களிலும் பெரும் மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை முதாலாளித்துவ வாதிகள் மறுப்பது இல்லை.

கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைவருக்கும் பொதுவானது
அரசு பதவிகள் அனைவருக்கும் பொதுவானது
தகுதி அடிப்படைகளை புறம் தள்ளி, வேலை வாய்புகள் அனைவருக்கும் பொதுவாக்கியது
மொழிகள் அதன் மக்கள் உரிமைகள் அனைத்து மொழிகளுக்கும் பொதுவானது

- இவை பற்றிய புரிதல்களும் மாற்றங்களும் உலக அளவில் ஏற்பட்டதற்கு, மார்கிசிய புரட்சிகள் மற்றும் கலக் குரல்களால் எழுந்த அலைகளே காரணம்.

மக்கள் ஆட்சி, தனிமனித உரிமை என்றெல்லாம் பொதுவுடமை புரியவைக்கப்பட்டு இருந்தாலும் மக்கள் ஆட்சிகளிலும் வாரிசு அரசியல், தனிமனித ஆளுமைகளாக மனித உரிமைகள் முதலாளித்துவத்தின் காலடியில் வீழ்ந்துவிடுவதும் நடக்கிறது.

*****

என்னைப் பொருத்த அளவில் எந்த ஒரு கொள்கையும் முழு அளவில் வெற்றிகரமாக அமைந்ததா இல்லையா என்பதைவிட அது சமூகத்தில் ஏற்படும் மாற்றம் கணக்கில் கொள்ளப்படுவதைப் பார்க்கிறேன். கொள்கைகள் தோன்றுவதும், நீர்த்துப் போவதும், வீழ்வதும், புதுக் கொள்கைகள் ஏற்படுவதும் காலத்தின் கட்டாயம் அதாவது காலச் சூழலைப் பொறுத்தது, விதிகள் காலத்தாலும் முயற்சிகளாலும் மாறும்.

25 கருத்துகள்:

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

Necessity is the Father of Inventions! இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டிருக்கிறீர்களா?

அவசியமேற்படும்போது மட்டுமே, தடைகள் உடைக்கப்பட்டு அல்லது நொறுக்கப்பட்டு மாற்றம் நிகழும்!

ஒரு குழுவாக, தாய்வழிச் சமுதாயமாக மனிதர்கள் இருந்த காலத்தில், கிடைத்ததை எல்லோரும் பங்கிட்டுக் கொள்வது என்பது மார்க்ஸ், பொதுவுடைமையைக் கண்டுபிடித்துச் சொன்னதற்கு முன்னாலேயே இருந்தது!அதை Primitive Communism என்று மார்க்ஸ் முன்னுதாரணமாக மட்டும் சொல்லிவிட்டு, தொழிற்புரட்சி, வர்கங்களாகப் பிரிந்தது, சுரண்டல் இப்படி தன்னுடைய பொதுவுடைமை என்ற கோட்பாட்டை விரிவுபடுத்தினார். அதுவரை சரி!

பொருள்முதல் வாதம் என்று சொல்லப்படுவது கூட ஹெகெல் என்ற ஜெர்மானியத் தத்துவ நிபுணரை அடியொற்றித்தானே தவிர, அங்கே கூட மார்க்ஸ் தோற்றுவித்தவராக அல்ல, அதை ஏற்றுக் கொண்டவராக மட்டுமே இருக்கிறார்.

எதற்கும் ஒருதரம், ஜார்ஜ் அர்வேல் எழுதின The Animal Farm கற்பனைக் கதை என்று சொல்லப்பட்டாலும் , கம்யூனிசத்தை எப்படிப் பின்பற்றினார்கள் என்பதை சொல்லும் கதையை படித்து விடுங்கள்.

"All pigs are equal;some pigs are more equal than others!"

கனவுக்கும், செயல் படுத்துவதற்கும் இடைவெளி எங்கே எப்படி எதனால் என்பது கொஞ்சம் புரியும்!

கோவி.கண்ணன் சொன்னது…

கிருஷ்ண மூர்த்தி ஐயா,
இந்த இடுகைக்கு உங்கள் பின்னூட்டம் எதிர்பார்த்தேன் ! நன்றி !

//"All pigs are equal;some pigs are more equal than others!"
//

அதென்னவோ சரிதான், "All pigs are equal;some pigs are more equal than others!" ஒப்புக் கொள்ள வேண்டியது வாசகம்.

எல்லோரும் ஒன்று அல்ல ஒரு சிலர் செயலால், உழைப்பால், அறிவால் உயர்ந்தவர்கள் ஆகுகிறார்கள், ஆனால்
அவர்களின் தொடர்ந்து வரும் தலைமுறைகளை தலைமையாக மாற்றுவதும், அல்லது அவர்களுக்கும் அந்த தகுதிகள் இருக்கும் என்பதாக போற்றப்பட வேண்டியது சரி இல்லை.

ஒரு பக்கம் மலை போல் குவிந்துவரும் சொத்தும் மறு பக்கம் பட்டினிச்சாவும் தொடர்ந்தால் மனித சமூகத்திற்கு இழப்பு தான். அந்த வகையில் மார்க்கிய அடிப்படை கொள்கை சரிதான் என்றே படுகிறது

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

அடிப்படைக் கொள்கை என்ற இடத்தில் அடிக்கடி காணும் கனவு என்று மாற்றிப் போட்டுப் பாருங்கள்! யதார்த்தம் புரியும்!

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணமூர்த்தி said...

அடிப்படைக் கொள்கை என்ற இடத்தில் அடிக்கடி காணும் கனவு என்று மாற்றிப் போட்டுப் பாருங்கள்! யதார்த்தம் புரியும்!//

:)

இந்த அடிப்படைக் கொள்கை வெறும் கனவாக போவது ஆன்மிகத்துக்கும், அது குறித்த நம்பிக்கைகளுக்கும் பொருந்தும் தானே !

K.R.அதியமான் சொன்னது…

/////உதாரணத்திற்கு மார்கிய சிந்தாந்தப் பரவலுக்குப் பிறகே உலக நாடுகள் மன்னர் ஆட்சிகளை ஒழித்து மக்கள் ஆட்சி தத்துவத்திற்குச் சென்றன. அரசும், அரசுரிமையும் தனிப்பட்ட மனிதர்களின் சொத்து அல்ல, தகுதி உடைய எவரும் நாட்டை வழி நடத்திச் செல்லலாம் என்பது மக்கள் ஆட்சிக் கோட்பாடு. ஒற்றைத் தலைமைகள் தொடர்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பதாக மன்னர் ஆட்சிகள் நீங்கின. ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.
////

இல்லை கோவி, மிக தவறான அனுமானம். காரல் மார்க்ஸ் பிறப்பதற்க்கு முன்பே, அமெரிக்க சுதந்திர போரும், அதன் பின் ஜனனாயக ஆட்சியும் அங்கு ஏற்பட்டது. ஃப்ரென்ச் புரட்சியும் தான்.
இவை 18ஆம் நூற்றாண்டில் நடந்தவை. அதற்கு சுமார் 500 ஆண்டுகள் முன்பே, இங்கிலாந்தில் பெரும் அரசியல் மாற்றங்கள், உருவாகி, மன்னர்களின் அதிகாரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, ஜனனாயகம், பாரளுமன்றம் உருவானது. மேக்னா கார்த்தா என்பார்கள். பார்க்க :

http://en.wikipedia.org/wiki/Magna_Carta

மார்க்ஸிசம் அடிப்ப்டை ஜனனாயகத்தை, மனித உரிமைகளை மறுக்கும் சித்தாந்தம். Marxisim cannot co-exist with basic democracy and fundamental rights.
பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html
கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)

மார்கிஸத்தின் அடிப்படை, ”உபரி மதிப்பு” அய் கொண்டு உருவானது. ஆனால் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை. பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html
’உபரி மதிப்பு’ என்னும் மாயயை

மார்க்ஸிசம் ஒரு pseudo-science.

ஆனால் முதலாளித்துவம் என்பது highly misunderstood term. for correct interpretation, pls see :

http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html

கோவி.கண்ணன் சொன்னது…

//இல்லை கோவி, மிக தவறான அனுமானம். காரல் மார்க்ஸ் பிறப்பதற்க்கு முன்பே, அமெரிக்க சுதந்திர போரும், அதன் பின் ஜனனாயக ஆட்சியும் அங்கு ஏற்பட்டது. ஃப்ரென்ச் புரட்சியும் தான்.
இவை 18ஆம் நூற்றாண்டில் நடந்தவை. அதற்கு சுமார் 500 ஆண்டுகள் முன்பே, இங்கிலாந்தில் பெரும் அரசியல் மாற்றங்கள், உருவாகி, மன்னர்களின் அதிகாரங்கள் வெகுவாக குறைக்கப்பட்டு, ஜனனாயகம், பாரளுமன்றம் உருவானது. மேக்னா கார்த்தா என்பார்கள். பார்க்க :

http://en.wikipedia.org/wiki/Magna_Carta//

அதியமான்,

அமெரிக்கா மன்னர்களால் கைப்பற்றப் பெற்ற நாடு இல்லை, அவர்களுக்கு ஒரு பொது அமைப்பு பொது சமூகம் உருவாகியது. நான் அமெரிக்காவை இங்கே குறிப்பிடவில்லை. நான் கம்யூனிசம் அறிமுகம் ஆன நாடுகளைத் தான் குறிப்பிட்டேன்


//மார்க்ஸிசம் அடிப்ப்டை ஜனனாயகத்தை, மனித உரிமைகளை மறுக்கும் சித்தாந்தம். Marxisim cannot co-exist with basic democracy and fundamental rights.
பார்க்கவும் ://

ஒற்றைத் தலைமைகள், வாரிசுகள் தொடருவதை மறுக்கும் என்பது எனது புரிதல்

//http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html
கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)

மார்கிஸத்தின் அடிப்படை, ”உபரி மதிப்பு” அய் கொண்டு உருவானது. ஆனால் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை. பார்க்கவும் :

http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html
’உபரி மதிப்பு’ என்னும் மாயயை

மார்க்ஸிசம் ஒரு pseudo-science.

ஆனால் முதலாளித்துவம் என்பது highly misunderstood term. for correct interpretation, pls see :

http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html//

மிக்க நன்றி. நீங்கள் வினவு தளத்தில் மிகுதியாக உரையாடுவது தெரியும்.
:)

K.R.அதியமான் சொன்னது…

///ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.//

இதை நிருபியுங்களேன். மன்னாராட்சி முறையிலிருந்து படிப்படியாக ஜனனாயாக பாதை மற்றும் குடியரசுகளாக அய்ரோப்பிய நாடுகள் நகர்ந்தன. கம்யூனிசம் 1917இல் ரஸ்ஸியாவில் முதலில் அமலாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்கு பின் சீனாவிலும், கிழக்கு அய்ரோப்பாவிலும் அமலாக்கப்பட்டது. ஆனால் பல இதர நாடுகளில் அதற்க்கு முன்பாகவே மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்ட்டது.
ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளை சொல்லலாம்.

அமெரிக்க காலனிகள் பிரிட்சிஸ் அரசின் கீழ் இருந்தன. பிறகு விடுதனை பெற்று, குடியரசாக மாறின. உங்கள் sweeping statement :
//////உதாரணத்திற்கு மார்கிய சிந்தாந்தப் பரவலுக்குப் பிறகே உலக நாடுகள் மன்னர் ஆட்சிகளை ஒழித்து மக்கள் ஆட்சி தத்துவத்திற்குச் சென்றன. அரசும், அரசுரிமையும் தனிப்பட்ட மனிதர்களின் சொத்து அல்ல, தகுதி உடைய எவரும் நாட்டை வழி நடத்திச் செல்லலாம் என்பது மக்கள் ஆட்சிக் கோட்பாடு. ஒற்றைத் தலைமைகள் தொடர்வது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல என்பதாக மன்னர் ஆட்சிகள் நீங்கின. ம்ன்னர் ஆட்சிகளுக்கு உலை வைத்தது மார்க்கிய சித்தாந்தம் தான் என்பதை முதலாளித்துவ நாடுகள் மறைத்துவிடுகின்றனர்.
////

இதை மறுக்கதான் உதாரணங்கள் அளித்தேன்.

வால்பையன் சொன்னது…

கொஞ்சமா புரியுது!

பின்னூட்டங்கள் மேலும் புரிய வைக்கலாம்!

வால்பையன் சொன்னது…

//எல்லோரும் ஒன்று அல்ல ஒரு சிலர் செயலால், உழைப்பால், அறிவால் உயர்ந்தவர்கள் ஆகுகிறார்கள், //

இப்போது உயர்ந்தவர்களை தீர்மானிப்பது பொருளாதாரம் தானே!?

வால்பையன் சொன்னது…

//அவர்களின் தொடர்ந்து வரும் தலைமுறைகளை தலைமையாக மாற்றுவதும், அல்லது அவர்களுக்கும் அந்த தகுதிகள் இருக்கும் என்பதாக போற்றப்பட வேண்டியது சரி இல்லை.//

சந்துசாக்குல ஏன் தமிழ்ஓவியாவை குத்துறிங்க!

வால்பையன் சொன்னது…

//ஒரு பக்கம் மலை போல் குவிந்துவரும் சொத்தும் மறு பக்கம் பட்டினிச்சாவும் தொடர்ந்தால் மனித சமூகத்திற்கு இழப்பு தான். அந்த வகையில் மார்க்கிய அடிப்படை கொள்கை சரிதான் என்றே படுகிறது//


எப்பக்கம் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே இது தீர்மானிக்கபடுகிறது!

முதலாளித்துவவாதிகளை எல்லாம் பிழிந்தெடுக்கும் வேலையை பத்து சிப்டு பார்க்க வச்சா அதன் பிறகு பேசமாட்டாங்க!

வால்பையன் சொன்னது…

//அடிப்படைக் கொள்கை என்ற இடத்தில் அடிக்கடி காணும் கனவு என்று மாற்றிப் போட்டுப் பாருங்கள்! யதார்த்தம் புரியும்!//

முதலாளிகள் கனவும் ஒரு நாள் காணாமல் போகும்!

வால்பையன் சொன்னது…

//இந்த அடிப்படைக் கொள்கை வெறும் கனவாக போவது ஆன்மிகத்துக்கும், அது குறித்த நம்பிக்கைகளுக்கும் பொருந்தும் தானே !//


போட்டு தாக்கு!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/இந்த அடிப்படைக் கொள்கை வெறும் கனவாக போவது ஆன்மிகத்துக்கும், அது குறித்த நம்பிக்கைகளுக்கும் பொருந்தும் தானே/

ஆன்மீகமோ, கம்யூனிசமோ, வெறுமே பேசிக் கொண்டிருக்காமல், கனவு மெய்ப்படக் காரியமும் ஆற்றுகிறார்களா என்பதைப் பொறுத்து சரியான விடை கிடைக்கும்!

ஸ்ரீ அரவிந்தர், கம்யூனிசத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஆன்மீக அடித்தளம் இல்லாமல், உயிரில்லாத உடல் போலத் தான் இருக்கும் என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்.

வெற்றி-[க்]-கதிரவன் சொன்னது…

என்ன கொடுமை சார் இது ? ..... சண்டைபோட ஆளுங்களையே காணோம்.

Unknown சொன்னது…

நல்லா சொல்லீருக்கீங்க கோவிஜி.

மார்கிய சித்தாந்தங்களின் தோத்துருச்சுன்னு சொல்லமுடியாது, பொதுவுடமை என்றும் தோற்பதில்லை, பின்பற்றுபவர்கள் முதலாளிகளாக மாறியதே ஒரு தோற்றம் வர காரணமாய் இருக்கலாம்.

<<<
மனித சமூகம் ஒன்று போல் அறிவும் திறமையும் கொண்டது இல்லை. உழைப்பவர் மற்றும் கடுமையாக உழைப்பவர் இவர்களுக்கான பலன்கள் ஒன்றாக இருந்தால் அது அநீதி என்பது பொதுச் சிந்தாந்தம்
>>>

அருமையான தத்துவம் கோவிஜி. :)

Unknown சொன்னது…

<<<
Your comment has been saved and will be visible after blog owner approval.
>>>

ஏன் இப்படி???

எத்துன நாள் இப்படி நடக்குது?

நல்லாதானே போய்கிட்டுருந்துச்சு :D

கோவி.கண்ணன் சொன்னது…

//..:: Mãstän ::..


<<<
Your comment has been saved and will be visible after blog owner approval.
>>>

ஏன் இப்படி???

எத்துன நாள் இப்படி நடக்குது?

நல்லாதானே போய்கிட்டுருந்துச்சு :D
//

பின்னூட்டம் திறந்து இருந்தால் பதிவு புண்ணாகிடும்னு பதிவே பக்கமே காணாப்பூடும்னு பயமுறுத்துறாங்க
:)

வால்பையன் சொன்னது…

//
ஸ்ரீ அரவிந்தர், கம்யூனிசத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது, ஆன்மீக அடித்தளம் இல்லாமல், உயிரில்லாத உடல் போலத் தான் இருக்கும் என்று ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார். //

அரவிந்தர் 50 வயுசல எல்லோரும் செத்து போயிரனும்னு சொல்லியிருந்தா கூட நீங்க ஆமாம்பிங்க, நாங்களும் ஒத்துக்கனுமா என்ன?

எனக்கு தெரிந்து மதவாதிகளுக்கு சுயசிந்தனை மிககுறைவு!

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

வால்ஸ்!
என்னைப்பார்த்தால் சுய சிந்தனை இல்லாதவன் மாதிரியாகவா தெரிகிறது?

ஸ்ரீ அரவிந்தர், ஒரு மதக் கோட்பாட்டுக்குள் குறுகி நின்றோ, அல்லது இருப்பதற்குள், ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் தனிக்கடை பரப்பவோ செய்யவில்லை.

தெரிந்து கொள்ள முயற்சி செய்யாமலேயே விமரிசிப்பது, தமிழ் ஓவியா ஐயா செய்கிற கட் அண்ட் பேஸ்ட் வேலையை விட மோசமானதாக ஆகிவிடக் கூடும்!

புரட்சிகர தமிழ்தேசியன் சொன்னது…

தோழர்..பொதுவுடமை அல்லது மார்கசியமோ எந்த ரசமோ சாம்பாராக இருப்பினும் மக்களுக்காக ஏதாவது ஒரு வகையில் நன்மையாகவே இருக்கின்றன..நமது நாட்டிலும் சிலர் பெரியாரிசம் பேசுகிறார்கள்..எல்லாம் ரசத்தையும் கலந்தது அண்ணாயிசம் என்றார் எம்.ஜி.ஆர்.. ஆனால் எந்த இசமும் இங்கு அவரவர் குடும்பத்தின் தொப்பை வளர்ப்பதற்கே சான்று.. குறைந்த பட்சம் எதாவது ஒரு ரசத்தை ஏற்று கொண்டு அதாவது மேற்கு வங்காளம் போல்.. இருந்தால் மட்டுமே இங்கு ஏதாவது ஒரு பகுதி மக்களாவது மிஞ்சுவார்கள்.. குவாட்டராயிசம் கோழிபிரியாணியிசம் பேசி சொந்த மக்களை டில்லி ஏகாதிபத்தியதிடம் விற்கும் தமிழ்நாட்டு அரசியல் மாமாக்கள் .. குறைந்த பட்சம் மக்களுக்காக எப்படி போராடுவது .. உண்ணாவிரதம் இருப்பது என்று தெலுங்கானா கட்சி சந்திரசேகர ராவை பார்த்து அவரது காலை கழுவி தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஒருவேளை சித்தெறும்பு சீண்டிறாற் போல உணர்வு வரலாம்.. தோழர் கோவி அவர்களை நமது ஆட்கள் இருந்த உண்ணாவிரத்தையும் அவர் இருந்த உண்ணாவிரத்தையும் ஒப்பீடு செய்து ஒரு பதிவிட்டால் நான் நன்றியுடையவன் ஆவேன் ..ஏனெனில் தாங்கள் ஒரு பிரபல பதிவர் தங்கள் கருத்து நிறைய மாக்களூக்கு சென்றடைய வேண்டும் என்பதாலெயெ..

ஷண்முகப்ரியன் சொன்னது…

எந்தக் கருத்தும்,கொள்கையும்,சித்தாந்தமும் மனித குலத்துக்கு நிரந்தரச் சேவையைச் செய்து கொண்டிருக்க முடியாது,கோவி சார்.

எது பிறந்ததோ அது கூடவே தனது அழிவையும் இணைத்துக் கொண்டுதான் பிறக்கும்.தனது பணி முடிந்ததும் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்.

மார்க்சின் dialectical materialism ம் இதனையே பறை சாற்றுகிறது.

காரல் மார்க்ஸ் நமது உபநிடத காலத்து மகா ஞானிகளுக்கு ஈடான ரிஷி என்பது எனது கருத்து,மனித குலத்தின் மேன்மைக்குப் பங்காற்றிய தன்மையில்.
மார்க்ஸைப் படிக்காத யாரும் நவீனச் சமூக அமைப்பினைப் பற்றி முழுமையாக விளங்கிக் கொள்ள முடியாது என நான் நினைக்கிறேன்.

மார்க்ஸைப் புரிந்து கொண்டதை வைத்துதான், மார்க்ஸையே மறுத்து மேலே சிந்திக்க முடியும்.

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

ஷண்முக பிரியன் சார்!

டயலெடிக்ஸ் என்கிற முரண்பாடுகளின் இயக்கம் அல்லது முரணியல் தான் இந்த சிருஷ்டியின் அடிநாதமாக, சிந்தனைப்போக்கை மாறுபட்ட கோணங்களில் பார்ப்பதாக ஆரம்ப காலம் முதல் இருந்து வருகிறது.

இங்கே இந்திய தத்துவ மரபில் நேதி(இல்லை) நியாயம் என்று இது இல்லை, இது இல்லை என்று கழித்துக் கொண்டே வந்து இருப்பதைக் கண்டுகொள்வதாக, சீனர்களுடைய யிங்-யாங், என்று இரட்டைத்தன்மையுள்ளதாக அறிவுறுத்தி வந்திருக்கிறது.

ஜெர்மானியத் தத்துவ அறிஞர் ஹெகெல் தான் இந்த முரணியலை மேற்கத்திய உலகுக்கு அறிமுகம் செய்தவர். அவரை அடியொற்றி, மார்க்ஸ் தன்னுடைய பொருள்முதல்வாதம் என்ற சிந்தனையை வெளியிட்டார்.

/தனது பணி முடிந்ததும் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும்./ என்பது பாதி சரி! அடுத்த செயலைத் தூண்டிவிட்ட பிறகே அவ்வாறு நடக்கிறது. ஆக இயக்கம் என்பது, தொடர்ந்து trigger ஆகிக் கொண்டே போகிறது. கூடவே விளைவுகளும்!

வால்பையன் சொன்னது…

//வால்ஸ்!
என்னைப்பார்த்தால் சுய சிந்தனை இல்லாதவன் மாதிரியாகவா தெரிகிறது?//


நீங்க மதவாதியா!?

வால்பையன் சொன்னது…

//தமிழ் ஓவியா ஐயா செய்கிற கட் அண்ட் பேஸ்ட் வேலையை விட மோசமானதாக ஆகிவிடக் கூடும்! //

அவருக்கு பெரியாரிஷம் மதம், பெரியார் கடவுள்!

எதையாவது பிடிச்சிகிட்டு தொங்குனா அவுங்க பக்தர்கள் தான்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்