பின்பற்றுபவர்கள்

8 ஏப்ரல், 2008

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது.

பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை வரை நுழைந்தது ? வரலாறுகளைப் பார்க்க வேண்டும், முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாரம்) இல்லை. முகலாயர்கள் ஆட்சியில், அவர்கள் பேசிய இரானிய பிரிவைச் சேர்ந்த உருதே, வடமொழிகளான சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகியவற்றுடன் கலந்து வட்டார மொழி என்ற அளவில் டெல்லி பகுதியில் வழங்கப்பட்டது, இஸ்லாமியர் ஆட்சி இந்தியாவில் விரிவு அடைந்த போது ஆதிக்கத்தின் வழி தெற்கே மைசூர், ஹைதராபாத் வரை இந்தி மொழி பரவலாயிற்று.

தாய்மொழியின் பால் அக்கறை இல்லாதவர்கள் ஈரானிய வட இந்திய மொழிகளை கலந்தே பேசி இந்தி என்ற ஒரு கலப்பு மொழியை உருவாக்கினார்கள். இந்தி - அதை செயற்கை மொழி என்றும் சொல்லலாம், காரணம் எந்த ஒரு இயற்கை மொழியும் தோன்றிய காலகட்டங்கள் பற்றிய ஆராய்ச்சி தவிர்த்து அவை இயற்கை மொழியாக (வெறும் சொல்லாடல் தான்) அறியப்படுவதற்கு அவற்றை எழுதுவதற்கான எழுத்துகளும் அவை பேசப்படும் காலம் முதலே இருக்க வேண்டும்.

இந்தி ஒரு மொழியாக உணரப்பட்ட போது அவற்றை எழுத்துவடிவில் எழுதும் சிக்கலில் எந்த எழுத்துருவை அதற்கு கொடுக்க வேண்டும் என்று முனைந்ததில், சமாஸ்கிரத கிரந்த எழுத்துக்களையே இந்தியை எழுதுவதற்கும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதுவும் உலக வழக்குதான். எழுத்தில்லாமல் 100க் கணக்கான மொழிகள் எழுத்துவடிவம் பெற்றது எப்படி என்றால் அவை அந்த பகுதியில் எழுத்துடன் புழங்கிவரும் மற்றொரு மொழியின் எழுத்துக்களை ஏற்றுக் கொண்டு அதன் வழியே எழுத்து மொழியாக மாறும். தெற்காசிய மொழிகளில் பாசா மலாய், பாசா இந்தோனேசியா போன்றவைகளுக்கு எழுத்து கிடையாது, அவை ஆங்கில் 26 எழுத்துக்களையே பயன்படுத்தி எழுதப்பட்டு வருகிறது. ஐரோப்பிய மொழி பிரிவுகளிலும் இதே நிலைதான். அவற்றில் எழுத்துக்களின் எண்ணிக்கையும் வடிவத்தில் சற்று மாறுபட்டு இருக்கும்.

பதியப்பட்டுள்ள இந்திய 3000 ஆண்டு வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தி, செயற்கையாக உருவானது அதாவது உருது மொழியின் ஒரு பிரிவு, அவற்றில் பழம்பெரும் காப்பியங்களோ, இதிகாச புராணங்களோ இல்லை, இந்தி இலக்கியம் அத்தனையும் 500 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டவையே, இந்தியில் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால் அது சமஸ்கிரதம் அல்லது உருது மொழியைச் சார்ந்தே அமைக்க முடியும். இந்தி சொம்மொழி கிடையாது.

இந்தியும் உருதுவும் சகோதர மொழிகள் என்பது பலருக்கு தெரியுமா ? உருது பேசுபவர்களுக்கு இந்தி புரியும். இந்தி பேசுபவர்களுக்கு உருதும் புரியும், 60 விழுக்காடு சொற்கள் வரை இரண்டிற்கும் பொதுவாக உள்ளவை. இந்திக்கும் உருதுக்கும் ஒரே பெரிய வேறுபாடு எழுத்து வடிவம் மட்டுமே, உருது அரபு எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, இந்தி சமஸ்கிரத எழுத்துக்களை பயன்படுத்துகிறது.

எந்த ஒரு பழம்பெருமையும், முன்னோர்வழி (பாரம்பரிய) இலக்கியமும் அற்ற ஒரு மொழியை தேசிய மொழி என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அனைவராலும் பேசப்படும் ஒரு மொழி தேசியமொழியாக வரவேண்டும், அதனால அனைவரும் பயன்பெற வேண்டும், அந்த மொழி தாக்கத்தால் மாநில மொழி சீர்கெடக் கூடாது என்றால் அதற்கு சரியான மொழி ஆங்கிலம் தவிர்த்து வேறொரு மொழி இந்தியாவில் இல்லை. 'இந்திய மொழிகளில் உள்ள பழமையான ஒரு மொழியை மட்டுமே, இந்தியாவின் பொது மொழியாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு பெருமை' என்றால் Sorry to Say அந்த தகுதி இந்திக்கு இல்லவே இல்லை. அதற்கான காரணம் மேற்கண்டது தான்.

இந்தியாவின் தேசிய மொழியாக ஆங்கிலம் இருக்கக் கூடாதா ? என்னைப் பொருத்து இருக்கலாம், அதற்கான பயனும் அளவிடப் பெரியது, அதைவிட மற்றொரு முதன்மைக் காரணம் இந்தி இந்தியாவில் நுழைந்தற்கும் ஆங்கிலம் நுழைந்தற்கும் இடையே உள்ள ஆண்டுகள் வேறுபாடு வெறும் 200 ஆண்டுகளே.

இந்தி வலியுறுத்தப்படுவதற்கு உண்மையிலேயே தேசிய வாதம், பொதுமொழி என்ற காரணங்கள் மட்டும் தானா ? இன்னொரு மறைமுக காரணமும் உண்டு, இந்தி மொழி ஆதிக்க அரசியலும் அதைச் சார்ந்ததே, இந்தி எழுத்துக்களைப் பார்க்கும் போது அது வடமொழி எழுத்துக்களைக் கொண்டிருப்பதால் (இறந்தவர்களின் நிழல்படத்தைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்வது போல) விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்க்காவே, வடமொழியின் வடிவமாகவே பார்த்து, வடமொழி தேவ பாசை என்று உயர்வு கற்பித்தவர்களே, இந்திக்கு தேசிய அடையாளம் கொடுக்க வேண்டும், இந்தி தேசிய மொழி என்றெல்லாம் பரப்புகிறார்கள், வெறொன்றும் பெரிய காரணம் இல்லை.

வடமொழியை இந்திவழி உயிர்கொடுத்து நடமாட வைக்க முடியும் என்று நினைப்பது வெறும் கற்பனையே, இந்தியைப் போல் வடமொழி பேசப்படும் மொழியாக இருந்ததே இல்லை, எழுதுவத்ற்கு பயன்பட்ட எழுத்து மொழி மட்டுமே, வடமொழி எந்த காலத்திலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பேசப்பட்ட மொழியாக அறியப்பட்ட வரலாறுகள் இல்லை. அதற்கு உயர்வு கற்பித்து ஒரு குழுவுக்குள் வழங்கி வந்ததாலேயே அதன் வளர்ச்சியும், பரவலும் முடங்கி, கோவில் கருவரை என்ற அளவில் சுறுங்கிவிட்டது.

கிட்டதட்ட மறைந்துவிட்ட மொழியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று நினைக்கும் வடமொழிப் பற்றாளர்களுக்கு இருக்கும் பதட்டம் / பொறுப்புணர்வு கூட வாழும் மொழியை பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இல்லை. மொழிக்கலப்பால் தமிழ் அழிந்துவிடுமா கற்பனை பண்ணாதீர்கள் என்கிறார்கள். மொழிக்கலப்பால் மட்டுமே மொழி அழிவதில்லை, புழக்கத்தில் இல்லாமல் போனாலும் கூட மறையும் என்பதற்கு 'நமது' தேவபாசையே சான்றாக இருக்கிறது.

மீண்டும் இடுகை தலைப்பிற்கு வருகிறேன். இந்தியும் இந்தியாவிற்குள் நுழைந்த மொழி, செயற்கை மொழி, எழுத்தில்லாமல் வடமொழி எழுத்துக்களை பயன்படுத்திவரும் மொழி, குறிப்பாக பழம்பெரும் இலக்கியம் இல்லாத மொழி. எந்த தகுதியை வைத்து இந்தியை தேசிய மொழி என்று சொல்ல முடியும் ? அப்படி சொல்ல முனைந்தால் ஆங்கிலத்தைத்தான் முதலில் அப்படி சொல்ல வேண்டும். ஆங்கிலத்தின் பயனும் உலக அளவில் அதன் வீச்சும் கற்றுக் கொண்டால் இந்தியர்களுக்கு உலக அளவில் செயல்படும் தகுதிகளும் பலன்களும் கிட்டும். சீனா நம்மிடம் போட்டியிட திணறுவதற்கு முதன்மை காரணமே சீனர்களுக்கு ஆங்கிலம் வராது அவர்கள் ஆங்கில காலனியாக இருந்தது இல்லை.

மற்றபடி இந்தி மொழி பரவலை தேசிய மொழி என்ற பெயரில் அனுமதித்தால் எப்போதும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று புலம்பலில் இருக்க வேண்டியதுதான். மொழிகள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தவே பரப்பப்படுகிறது, முகலாயர்கள் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியபோது அங்கெல்லம் இந்தியின் ஆதிக்கமே இருக்கிறது என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம், இது வட நாடு முழுவதும், தென்நாட்டில் சில மாநிலங்களிலும் ஆதிக்கதின்
வழியாக நுழைந்திருப்பது கண்கூடு.

ஆங்கிலம் ஆங்கில காலனி ஆதிக்கத்தால் ஏற்பட்ட திணிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றால், இந்தியும் முகலாய (ஈரானிய) ஆதிக்கத்தின் வழியான திணிப்பே. ஆண்டுகள் இடையே தான் வேறுபாடு. இந்தியர்களுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு இந்தியுடன் ஒப்பிடுகையில் அளவிட முடியாதது.

தமிழ் சிறந்த மொழிதானே அது ஏன் பரவவில்லை ?
தமிழர்கள் எங்கும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டதாகவோ அதற்கு கருவியாக(ஆயுதமாக) தமிழை பயன்படுத்தினார்கள் என்ற வரலாறு கிடையாது. சோழர்கள் கடாரம் போன்ற நாடுகளை வென்றதுடன் திரும்பிவிட்டார்கள் அங்கேயே தங்கிவிடவில்லை.ஆசிய நாடுகளில் பரவி இருக்கும் தமிழ் ? அதை தமிழகள் தவிர யாரும் பேசுவதும் இல்லை. மக்கள் பரவியதைத் தொடர்ந்து தாய் தமிழையும் பேசிவருகிறார்கள். என் மொழியை பேசுங்கள், உயர்வானது என்று தமிழன் எவரிடமும் வலிந்து தனது மொழியை திணித்தது கிடையாது.

உண்மையான தேச ஒற்றுமை, பொது மொழி வேண்டுமென்றால் ஆங்கிலமே அதற்கான தீர்வு.
ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயேயும் பொது மொழியாக ஆங்கிலம் தான் இருந்தது. ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் மூலம் தேச ஒற்றுமை என்ன உலக ஒற்றுமையே போற்ற முடியும்
:)

பின்குறிப்பு : இங்கே இந்தி மொழியை குறைத்து மதிப்பிட்டு, அதனை ஏளனம் செய்ய வில்லை. தம்மை ஏளனம் செய்யாத பிறமொழிகளை ஏளனம் செய்யும் தகுதி எவருக்கும் கிடையாது, இங்கே 'இந்தி' அதன் உருவாக்கம் தன்மை, பயன்பாடு, அதன் தாக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். இந்தி மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.

48 கருத்துகள்:

தருமி சொன்னது…

//முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாராம்) இல்லை.//

ஆச்சரியமாக இருக்கிறது. இதற்கும் கொஞ்சம் ஆதாரம் கொடுத்தால் நலமாயிருக்குமே...

கோவி.கண்ணன் சொன்னது…

தருமி ஐயா,

இதில் வியப்பு ஒன்றும் இல்லை ஆங்கிலம் உலக நாடுகளில் பரவ வெறும் 200 ஆண்டுகளே ஆனது, அதன் உருவாக்கம் அதற்கு முன் 100 ஆண்டுகள்.

விக்கி பீடியா தகவலைப் பாருங்கள்.

The word hindī is of Persian origin. It literally means "Indian", comprising hind "India", and the adjectival suffix -ī. The word was originally used by Muslims in north India to refer to any Indian language: for example the eleventh-century writer Abū Rayhān al-Bīrūnī used it to refer to Sanskrit.[8] By the 13th century, "Hindi", along with its variant forms "Hindavi" and "Hindui", had

மேலும் படிக்க...

Thekkikattan|தெகா சொன்னது…

நான் உங்களுடைய இரண்டாவது பதிவில் கேட்ட கேள்விக்கு இங்கே பதிலா... :).

ஹிந்திக்கு பின்னால் இவ்வளவு கதை இருக்கிறதா? நல்ல வேளை தமிழும் ஒரு நாள் "நன்றி" என்று அடிப்பதற்கு ஆங்கில அரிச்சுவடியிலிருந்து கடன் வாங்கி Nandri அப்படியின்னு அடிக்கிற நிலமை நமக்கு இல்லைன்னு நினைக்கும் பொழுது பெருமையாத்தான் இருக்கு...

கோவி.கண்ணன் சொன்னது…

//Thekkikattan|தெகா said...
நான் உங்களுடைய இரண்டாவது பதிவில் கேட்ட கேள்விக்கு இங்கே பதிலா... :).

ஹிந்திக்கு பின்னால் இவ்வளவு கதை இருக்கிறதா? நல்ல வேளை தமிழும் ஒரு நாள் "நன்றி" என்று அடிப்பதற்கு ஆங்கில அரிச்சுவடியிலிருந்து கடன் வாங்கி Nandri அப்படியின்னு அடிக்கிற நிலமை நமக்கு இல்லைன்னு நினைக்கும் பொழுது பெருமையாத்தான் இருக்கு...
//

தெகா,

இந்த மூன்று இடுகைகளால் மொழிக்குறித்தான தவறான புரிதல்களை பலர் விளங்கிக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவ்வப்போது இது குறித்து கலந்து பேசிய தங்களுக்கு மிக்க நன்றி !

தமிழன் சொன்னது…

சரியான பதிவு இந்திய தேசியம் உண்மை என்றால் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். ஹிந்தி தேசிய மொழி ஆனதற்கு காரணம் மற்ற மாநில மக்களின் அறியாமை மற்றும் வரலாறு தவறாக புரிந்து கொண்டது தான், இன்றும் என்னுடன் பணிபுரியும் மற்ற மாநில மக்களை கேட்டால் அவர்கள் கூறும் நொண்டி காரணம் ஆங்கிலம் அன்னிய மொழி. உண்மையில் இவர்கள் ஹிந்தியை ஏற்று கொண்டு தங்கள் மாநில பாரம்பரியத்தை தொலைத்து வாழும் அற்ப பிறவிகள்.

RATHNESH சொன்னது…

அமெரிக்காவின் தோற்றமும் வளர்ச்சியும் கூட நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டது தான். பழம்பெருமை மிக்க நாடுகள் சாதிக்காததை எல்லாம் அது சாதித்திருக்கிறதா இல்லையா?

இந்தக் காலக் கணக்கு பழம்பெருமையால் நாம் சாதித்தது என்ன என்று பார்க்க வேண்டும்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கே நுழைந்த மொழி எந்த வித பெருமைக்குரிய இலக்கண, இலக்கிய வளமும் இன்றி இந்தியாவின் ஆணிவேராகப் பரவ முடிந்திருக்கிறது; கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மொழி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் மொழி ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்ட முடியவில்லை என்றால் அது மொழியின் தன்மையா, அதனைப் பேசியோர் / பேசுவோரின் கோளாறா என்று ஆராய திறந்த மனம் வேண்டும்.

தமிழன் யாரையும் கட்டாயப் படுத்தியதில்லை என்பது போன்ற சால்ஜாப்புகள் குழந்தைத் தனமானவை. இந்தியைப் பேசச் சொல்லி பழங்கால இந்திய கிராமங்களில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தியதற்கு ஆதாரங்கள் உண்டா?

தமிழ் மொழியின் வளர்ச்சியின்மைக்கு இது போன்ற பழம்பெருமை ஜல்லிகளே காரணம் என்று நினைக்கிறேன்.

பெயரில்லா சொன்னது…

//அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை.//

smiley :)

ILA (a) இளா சொன்னது…

// BLOGKUT said...
//அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை.//

இந்தப் பின்னூட்டம் நான் இட்டதுதான், இதுல ஒன்னும் நுண்ணரசியல் இல்லீங்கோ,,,,

வவ்வால் சொன்னது…

//முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாராம்) இல்லை.//

கோவி,

எப்படி இதனைக்கண்டுப்பிடித்தீர்கள்?

இந்தி என்பது கி.பி 400 இல் இருந்தே புழங்கி வருகிறது. அதனை பழைய இந்தி என்று சொல்கிறார்கள்.

அவாதி, சிந்தி, போஜ்புரி போன்ற பல மொழிகளுக்கும் இந்திக்கும் தொடர்பு இருக்கிறது, இது போன்று , வட இந்திய மொழிகள் அனைத்திற்கும் இந்தியுடன் தொடர்புள்ளது, அனைத்தும் தேவநகரி எழுத்துருவை பயன்ப்படுத்துகின்றன.

எல்லாம் ஒட்டும்மொத்தமாக இந்தோ ஆர்யன் மொழி குடும்பம். எனவே உருது வந்து தான் இந்தியை உருவாக்கியது என்பது சரியல்ல. ஆனால் உருது கலந்து இந்தியினை இன்னொரு பரிமாணத்திற்கு கொண்டு போய்விட்டது எனலாம்.

உருது வரும் முன்னரே இந்தி இந்தியாவில் புழங்கி வந்துள்ளது.

மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி , போஜ்புரி, சிந்தி, பெங்காலி எல்லாவற்றிலும் இந்தியின் சாயல் உண்டு, எல்லாமும் தேவநகரி வழி வந்தவை.

இந்தி என்று பெயர் இல்லாமல் இந்துஸ்தானத்தில் ஒரு டயலெக்ட் ஆக ஆரம்பக்காலத்தில் பேசப்பட்டு பின்னர் முகலாயர்கள் காலத்தில் இந்தி என்று பெயர் வைத்திருக்கலாம். அதை வைத்து உருதில் இருந்து தான் இந்தி தோன்றியது என்பது சரி அல்ல.

முகலாயர்கள் என்பவர்களே பாரசீகர்கள் கிடையாது, முகல் என்பது மங்கோலியர்கள் என்று குறிப்பது ஆகும், அவர்கள் பின்னாளில் இஸ்லாமிற்கு மாறியதாலும், பெர்சியன் பேச ஆரம்பித்ததாலும் , அவர்கள் எல்லாம் உரூது மொழி பேசுபவர்கள் என்று கருத ஆரம்பித்துவிட்டார்கள்.

பாபருக்கு முன்னரே முஸ்லீம் மன்னர்கள் இந்தியாவை ஆண்டு வந்தார்கள் கோரி முகம்மது முதல் இப்ராகிம் லோடி வரை.பின்னர் பாபர் வந்த பிறகே முகலாயர்கள் என்று குறிப்பிட ஆரம்பித்தார்கள். காரணம் பாபர் மங்கோலிய வழி வந்தவர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
அமெரிக்காவின் தோற்றமும் வளர்ச்சியும் கூட நானூறு ஆண்டுகளுக்கு உட்பட்டது தான். பழம்பெருமை மிக்க நாடுகள் சாதிக்காததை எல்லாம் அது சாதித்திருக்கிறதா இல்லையா?
//
ரத்னேஷ் அண்ணா,

ஒரு நாட்டின் பொருளியல் வளர்ச்சியையும் மொழிப்பரவலையும் எப்படி ஒப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. அமெரிக்கர்கள் எல்லோருமே ஆங்கிலம் பேசுபவர்கள் இல்லை.அங்கு சென்றவர்களும் வேற்றுகிரக வாசிகள் இல்லை. ஏற்கனவே பலதுறைகளில் முன்னேறி இருந்த பழம்பெருமை உடைய ஐரோப்பியர்களே. நான் கூட பொருளியல் காரணங்களுக்காகத்தான் வெளிநாட்டில் இருக்கிறேன். அமெரிக்காவை விடுங்கள் சிங்கையின் பெரும் வளர்ச்சி கடந்த 30 ஆண்டுகளுட்பட்டதே. சீனர்கள் அவர்களின் பழம்பெருமைகளை போற்றித்தான் வருகிறார்கள். சீனர்கள் தங்கள் பழம்பெருமை தேவையற்றது, முன்னேற்றத்திற்கு தடையானது என்றெல்லாம் நினைக்கவில்லை. இதை சிங்கையில் இருப்பவர்களால் உறுதி படுத்த முடியும். சீனர்கள் தங்கள் மொழிக்கு எவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்கிறார்கள் தெரியுமா ? அதற்கென தனி இடுகையே எழுதலாம். ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் பழம்பெருமைக்கும் தொடர்பே இல்லை. அது முழுக்க முழுக்க அரசின் கொள்கைகளையும் மக்களின் உழைப்பையும் பொருத்தது.

//இந்தக் காலக் கணக்கு பழம்பெருமையால் நாம் சாதித்தது என்ன என்று பார்க்க வேண்டும்.//

மிகச் சரிதான், புதியவற்றை ஏற்றுக்கொள்ளும் போது இது நமக்கு தேவையா என்று பார்க்க வேண்டும். தேவையில்லாததை மடியில் கட்டிக் கொள்வதால் சுமைத்தவிர பயனொன்றும் இல்லை. மக்களுக்கு நல்லவற்றை கொண்டு சேர்க்கவில்லை என்றால் பழமை வாதம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்.

//சில நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கே நுழைந்த மொழி எந்த வித பெருமைக்குரிய இலக்கண, இலக்கிய வளமும் இன்றி இந்தியாவின் ஆணிவேராகப் பரவ முடிந்திருக்கிறது; கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மொழி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் மொழி ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்ட முடியவில்லை என்றால் அது மொழியின் தன்மையா, அதனைப் பேசியோர் / பேசுவோரின் கோளாறா என்று ஆராய திறந்த மனம் வேண்டும்.//

திறந்த மனம் என்பது கூட நாம் நம்புவது சரியே என்று நினைப்பதின் கற்பனை நீட்சியே, 'திறந்த மனம்' என்ற சொல் இன்றி பொதுவாக சொல்வதில் தவறே இல்லை. இது போன்று அடைமொழியுடன் அல்லது அறிவுரையாக சொல்லும் போது நாம் அவற்றைப் பற்றி எவ்வளவு அறிந்திருக்கிறோம் என்று நினைத்துப் பார்ப்பதும் மிக தேவையானது.

வட இந்தியாவில் எப்படி என்று தாங்கள் தான் சொல்ல வேண்டும், கர்நாடக, ஆந்திர கேரள மாநிலத்தை உள்ள்டக்கிய தென்னிந்தியாவில் எந்த கிரமங்களிலும் இந்தித் தெரிந்தவர்கள் கிடையாது, தென்னிந்தியாவில் இந்தி பேசுபவர்கள் கடை வைத்திருப்பவர்கள், வணிகம் (வியாபாரம்) தொடர்பாக பல்வேறு மக்களுடன் பழகுபவர்கள் தொடர்பின் காரணாமாக இந்தி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆணிவேர் என்ற தோற்றம் பொய்யாக பரப்படுவதும் நம்பப்படுவதுமாகும், உலகில் உள்ள எந்த மொழியுமே வணிகம் தொடர்புடன் மட்டுமே மாற்று மொழி பேசுபவர்களிடம் பயன்படுகிறது. அதைத்தவிர்த்து மாற்றுமொழியை காதலுடன் விரும்பி பேசுபவர் எவரும் இல்லை. தமிழ் தெரிந்தோர் இருவர் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசிக் கொள்வது கூட அந்த மொழியின் மீது காதலால் அல்ல, மெத்தப்படித்த மேதாவி என்று காட்டிக் கொள்ளவே. இந்த மூன்று இடுகைகளிலுமே மாற்று மொழி கற்றுக் கொள்வது தவறு என்று சொல்லவில்லை. திணிக்கபடுவது தவறு என்றே குறிப்பிட்டேன், அது போல் தமிழில் தேவையற்ற இடைச்சொருகல்களை தவிர்க்கவேண்டுமென்றால் தேவையற்ற மொழிகளை, கற்பனையாக ஒட்டுமொத்த மக்களின் பொதுப்பயன்பாடு என்ற பெயரில் உள்வாங்குவதும் தவறு என்றேன்.

//தமிழன் யாரையும் கட்டாயப் படுத்தியதில்லை என்பது போன்ற சால்ஜாப்புகள் குழந்தைத் தனமானவை. இந்தியைப் பேசச் சொல்லி பழங்கால இந்திய கிராமங்களில் யாரும் யாரையும் கட்டாயப்படுத்தியதற்கு ஆதாரங்கள் உண்டா?

தமிழ் மொழியின் வளர்ச்சியின்மைக்கு இது போன்ற பழம்பெருமை ஜல்லிகளே காரணம் என்று நினைக்கிறேன்.//

ஒரு மொழி பேசுபவர்களின் ஆதிக்கம் மற்றொரு மண்ணில் பரவினால் அங்கே அதை திணிப்பது நடைமுறையில் இருப்பதுதான், ஆங்கிலம் இந்தியாவில் மேல் மட்ட அளவில் பரவியது இப்படித்தான். இந்தி திணிக்கப்படாமால் தென்னிந்தியாவில் எப்படி பரவியது என்று விளக்குங்கள், யாரும் கட்டாயப்படுத்தினார்கள் என்று நானும் சொல்லவில்லை.வேறு வழியில்லை என்றால் அவற்றை கற்றுக் கொள்வது கட்டாயம் என்றாகிவிடுகிறது. மன்னராட்சி காலத்தில் பல்வேறு மொழிகள் பரவியது இப்படித்தான். தமிழகத்தில் மட்டும் இந்த தாக்கம் குறைவு, வேற்று மாநில அரசர்கள் ஆண்டாலும் 100 ஆண்டுகளுக்கு மேல் அவர்களால் வேறூன்ற முடியவில்லை. தமிழகத்திலும் வடமொழி ஆதிக்கம் மேலெழுந்த போதுதான் அதைத்தடுக்க சைவசமயம் முனைந்து செயல்பட்டு பக்தி இலக்கியங்களை படைத்தது.

நானும் தமிழின் தரம் கெடுக்க வேண்டும் என்றோ, முடக்கி வைக்க வேண்டும் என்றோ எதையும் சொல்லவில்லை என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். இங்கே ஜல்லிகள், சால்சாப்புகள் என்று சொற் குறீயிடுகள் அதிகப்படியானது, தவிர்க்கலாம்

மொழியின் வளர்ச்சி என்று எதைச் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் வளர்ச்சி என்றால் அது பிற மொழி பேசுபவர்களிடம் அதற்கு மாற்றாக தமிழைப் போற்றி அவர்கள் பயன்படுத்தவேண்டும் என்று பொருளில் சொல்லவில்லை. மொழியின் வளர்ச்சி புதிய சிந்தனைகளை இலக்கியமாக்கும் திறமை உள்ளவையாக மாறவேண்டும். அதுதான் மொழியின் வளர்ச்சி. அனைத்து புதுக்கவிதை, புதினம், பின்னவீனத்துவம் போன்ற கருத்தாங்கள் உலக சிந்தனைகளில் மாறும் போது, அவற்றை அந்த மொழி உள்வாங்கும் திறன் பெற்று, அம்மொழி பேசும் மக்களுக்கு பயனளிக்க வேண்டும். இந்த வளர்ச்சி இல்லை என்றால் எல்லா மொழிகளுமே வெறும் தகவல் தொடர்பு மொழிகளே. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக என்ன செய்யலாம் என்று பட்டியல் இட்டால், நீங்கள் இங்கெ 'ஜல்லிக்கள்' என்ற சொல் பயன்படுத்தியது மிகச் சரி என்று ஏற்றுக் கொள்கிறேன்.

நீங்கள் பயன்படுத்தும் சொல்லின் தரம் தான் உங்கள் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வவ்வால் அவர்களே!
//
மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி , போஜ்புரி, சிந்தி, பெங்காலி எல்லாவற்றிலும் இந்தியின் சாயல் உண்டு, எல்லாமும் தேவநகரி வழி வந்தவை.
//

இதை கொஞ்சம் மாற்றிச்சொல்வோமா? தேவநகரி வழி வந்த மொழிகளை கலந்து வடமொழி, உருது இரண்டையும் உள்வாங்கி உருவான இடைக்கால கலப்படம் தான் இந்தி என்போமா:(

இந்தியா 1947 ல் உருவாதற்கு முன்பு வடமாநிலங்களில் அதிக மக்களால் பேசப்பட்ட மொழி பெங்காலி...

1947 க்கு பிறகு இந்தியை வலிந்து இந்தி அரசாங்கங்கள் வளர்த்தெடுப்பதற்கான காரணம் வணிக பார்சி குடும்ப நலனும், பார்பானீய, பனியா அரசியல் நலனுமே காரணம்!

Unknown சொன்னது…

//ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் மூலம் தேச ஒற்றுமை என்ன உலக ஒற்றுமையே போற்ற முடியும் //

வழிமொழிகிறேன்!

ரத்னேஷ்,

//கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மொழி என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் மொழி ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்ட முடியவில்லை//

எல்லையென்று எதை சொல்லுகிறீர்கள்? சிங்கப்பூர், சீறிலங்கா, மொரிஷியஸ் போன்ற இந்தி நுழைய முடியா நாடுகளில் தமிழ் இருக்கிறதே? இந்தி இரண்டாம் மொழியாக உள்ள நாடு ஒன்றை சொல்ல முடியுமா? (தெரியாமல்தான் கேட்கிறேன், கிண்டலுக்கு அல்ல!)

கோவை சிபி சொன்னது…

இந்தி மொழி தொடர்பான சில சந்தேகங்களை தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.

lensview சொன்னது…

Hi ,
I would like to share one information.. After independence , parliament decided to declare "hindi" as national language.but there were lot of oppositions.As usual , Paraliament decided for voting..
Here most of us think hindi might have won with high margin... but it is not correct.After counting of votes, both sides (Supporters Vs opponents ) had same no of votes.This time Speaker of Parliament or President ( sorry i am not able to remember exactly) Rajendra Prasad voted for hindi.. So hindi was won in only one vote.At that time , like Tamilnadu , all southern states were opposing the hindi especially Karnataka.. Later Everything was gone off.So Hindi was never liked by majority of indians.
Do u know in maharastar there are so many villages in which single hindi word is never spoken .
When kaamaraajar was CM ,all of the official letters were communicated in hindi.. Kamarajar told Tamilnadu officials not to reply in hindi and asked them to reply in english...He tols If we do so, they automatically switch to Englis...IT happened later...The anti hindi movement is hated because of Dravidian supports...but reality was lot of congressmen also opposed this...This is because of Dravidian parties misuse of their party men and principles to earn...

Anbudan
Thekkathyaan

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...

கோவி,

எப்படி இதனைக்கண்டுப்பிடித்தீர்கள்?

இந்தி என்பது கி.பி 400 இல் இருந்தே புழங்கி வருகிறது. அதனை பழைய இந்தி என்று சொல்கிறார்கள்.
//

வவ்ஸ்,

இந்தி ஒரு வடிவத்துக்கு வந்ததும், பரவியதும் முகலாயர்கள் காலத்தில் தான். மற்ற அரசியல் காரணங்களை பாரி.அரசு சொல்லி இருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//lensview said...
Hi ,
I would like to share one information.. After independence , parliament decided to declare "hindi" as national language.but there were lot of oppositions.As usual , Paraliament decided for voting..
Here most of us think hindi might have won with high margin... but it is not correct.After counting of votes, both sides (Supporters Vs opponents ) had same no of votes.This time Speaker of Parliament or President ( sorry i am not able to remember exactly) Rajendra Prasad voted for hindi.. So hindi was won in only one vote.At that time , like Tamilnadu , all southern states were
//

lensview,

தகவலுக்கு நன்றி !

இதே தகவல்கள் நண்பர் ரத்னேஷ் பதிவிலும் இடம்பெற்று இருந்தது !

கோவி.கண்ணன் சொன்னது…

//தீலிபன் said...
சரியான பதிவு இந்திய தேசியம் உண்மை என்றால் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். ஹிந்தி தேசிய மொழி ஆனதற்கு காரணம் மற்ற மாநில மக்களின் அறியாமை மற்றும் வரலாறு தவறாக புரிந்து கொண்டது தான், இன்றும் என்னுடன் பணிபுரியும் மற்ற மாநில மக்களை கேட்டால் அவர்கள் கூறும் நொண்டி காரணம் ஆங்கிலம் அன்னிய மொழி. உண்மையில் இவர்கள் ஹிந்தியை ஏற்று கொண்டு தங்கள் மாநில பாரம்பரியத்தை தொலைத்து வாழும் அற்ப பிறவிகள்.

12:47 AM, April 09, 2008
//

தீலீபன் மிகச்சரி !

தலித் பெருமக்களை அவர்கள் அனுமதி இன்றி இந்துக்களாக அறிவித்து பட்டியலில் சேர்த்துக் கொண்டது போலவே இந்தி தேசிய மொழி என்று பரப்பப்படுவதும் மோசடி தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//BLOGKUT said...
//அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை.//

smiley :)
//

இளா,

உங்கள் இரண்டு பின்னூட்டத்துக்கும் !

'எஸ் சார்!'

கோவி.கண்ணன் சொன்னது…

இளா,

நீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவை சிபி said...
இந்தி மொழி தொடர்பான சில சந்தேகங்களை தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள்.
//

கோவை சிபி,
தெளிவு குறித்து குறிப்பிட்டு பாராட்டியதற்கு நன்றி !

கையேடு சொன்னது…

மொழி ஒரு தொடர்பு சாதனமாகப் பெரிதும் அறியப்பட்டாலும் பழமை வாய்ந்த மொழிகள் பல மனிதச் சூழல் மற்றும் பரிணாமத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. இவ்வடிப்படையிலேயே பழமை பாதுகாக்கப்பட வேண்டியிருக்கிறது.

இதிலிருந்து விலகி மொழிகளுக்குள்ளான ஏற்றத்தாழ்வு அரசியலில் நுழையும் போது, ஒரு மொழி பேசும் சமூகம் தாமாகவே அம்மொழியை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்கின்றனர். சம்ஸ்க்ருதமும் பாதுகாக்கப் படவேண்டிய ஒரு பழமையான மொழியே, ஆனால், மொழிகளுக்கிடையேயான ஏற்றத்தாழ்வு பயிற்றுவித்ததன் மூலமே அது தமக்கான அழிவுப் பாதையைத் தேடிக்கொண்டது.

மொழி ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கவேமுடியாது.

தமது மொழி தமது சமூகத்தின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்றொரு சமூகக்குழு எண்ணுமாயின் அது கால மாற்றத்திற்கிணங்க தமது மொழியை வளர்த்தெடுத்துக் கொள்ளத் தவறிய அச்சமூகத்தின் இயலாமையையே பரைசாற்றுகிறது.

வளர்ச்சி, நன்மை, போன்றவை சார்புடையவை, என்று நீங்களே குறிப்பிட்டுவிட்டீர்கள்.

பதிவிலும் பின்னூட்டங்களிலும் பல புதிய தகவல்கள் அறியமுடிந்தது. நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இந்தியின் ப‌ழைமை ப‌ற்றி எதுவும் தெரியாது; த‌ங்க‌ள் ப‌திவில் ப‌ல‌ விட‌ய‌ங்க‌ள் அறிந்தேன்.
நீங்க‌ள் பொதுமொழி என்ப‌தை நான் அர‌ச‌க‌ரும‌, தொட‌ர்பு மொழியென‌க் க‌ருதுகிறேன். எம‌து நாடுக‌ளில்
அதை ஆங்கில‌மென‌க் கொள்வ‌தே ;ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ளுக்குத் தீர்வு.
அத்துட‌ன் ச‌ர்வ‌தேச‌த் தொட‌ர்புக்கும் ஏதுவான‌ மொழி...இள‌ந்த‌லைமுறையின‌ருக்கு எதிர்கால‌த் தொழில் வாய்ப்புக‌ளுக்கு ஏதுவாக‌ இருக்கும்.
அத்துட‌ன் ஒருவ‌ருக்கு இர‌ண்டு மொழி தெரிந்தாலே போதும். விரும்பின் ஒருவ‌ர் எத்த‌னை மொழி க‌ற்க‌
விருப்ப‌மோ க‌ற்க‌லாம். ஆனால் ஒருவ‌ர் த‌ன் தாய் மொழி அத்துட‌ன் பொது; தொட‌ர்பு மொழியொன்றையும் க‌ற்ப‌தால் த‌ன் ப‌ல்மொழி பேசும் நாட்டில் பிர‌ச்ச‌னைக‌ள் இன்றி வாழ‌லாம் என்ப‌து
என் க‌ருத்து.
இப்ப‌டி இருந்த‌ இல‌ங்கையில் த‌னிச் சிங்க‌ள‌; சிங்க‌ளம் அருச‌க‌ரும‌ மொழி எனும் ச‌ட்ட‌ம் கொண‌ர்ந்து இன்று நாடு ப‌டும் பாடு ப‌ல‌ருக்குப் பாட‌மாக‌ அமைய‌ வேண்டும்.
இங்கே பெரும்பான்மை சிறுபான்மை என‌ப் பார்க்காம‌ல் ; ம‌னித‌ உண‌ர்வு என‌ப்பார்க்க‌ வேண்டும்.
இந்தியாவில் பொது மொழி இந்தி எனும் போது இந்தி பேசும் ம‌க்க‌ளுக்கு ஒரு மொழி க‌ற்றால் போதும்
ஏனைய‌ அனைவ‌ரும் 2 ம் மொழியாக‌ இந்தி ப‌டிக்க‌க் க‌ட்டாய‌ப் ப‌டுத்த‌ப்ப‌டும் போது; அவ‌ன் பிற‌ந்த‌
நாட்டில் அவ‌ன் பேசும் மொழியைப் பேசும் ம‌க்க‌ள் எண்ணிகை குறைவான‌தால் அவ‌ன் இன்னுமொரு மொழியை அதுவும் அவ‌ன் பிற‌ந்த‌ நாட்டிலேயே உத‌வும் மொழியை க‌ற்கும்ப‌டி நிர்ப்ப‌ந்திப்ப‌து; நியாய‌ம் அல்ல‌ ; ஆனால் இதைத் தான் ச‌மீப‌கால‌மாக‌ க‌டைப்பிடிக்க‌ முய‌ன்று பிரிவினை எனும் போக்கு த‌லையெடுத்து வீண் இர‌த்த‌க் க‌ள‌ரிக‌ள் உருவாகி ,இன்று இல‌ங்கையில் ஒரு இன‌மே சீர‌ழிந்து
அடுத்த‌ இன‌மும் நிம்ம‌தியைத் தொலைத்து விட்ட‌து.
ஆக‌வே இந்த‌ மொழி விட‌ய‌த்தில் உண‌ர்வு பாதிக்காவ‌ண்ண‌ம் ,உப‌யோக‌த்தையும் ,வேலைச் சுருக்க‌த்தையும் ம‌ன‌தில் வைத்து அர‌சிய‌லாள‌ர்க‌ள் சிந்தித்தால் எல்லோருக்கும் ப‌ய‌னும் ந‌ன்மையுமே!!
சிங்க‌ப்பூரின் அமைதிக்குப் பிர‌தான‌கார‌ண‌மே .அவ‌ர்க‌ள் மொழிக் கொள்கையே என‌க் க‌ருதுகிறேன்.நான் இங்கு வ‌ந்த‌ ஆர‌ம்ப‌ கால‌த்தில் பிரஞ்மொழி க‌ற்க‌ வ‌ந்த‌ இட‌த்தில் ச‌க‌ சிங்க‌ள‌மாண‌வ‌ர் கேட்டார்." இங்கே பிர‌ஞ்சு ப‌டிக்கும் நீ ஏன்? இல‌ங்கையில் சிங்க‌ள‌ம் க‌ற்க‌ ம‌றுத்தாய்"
நான் கூறிய‌வை...
1) இது என் பிற‌ந்த‌ நாட‌ல்ல‌...
2) இங்கே என‌க்கு பிர‌ஞ்சு ப‌டிக்கும்ப‌டி எந்த‌ நிர்ப்ப‌ந்த‌மும் இல்லை.
இந்த‌ இர‌ண்டுமே என‌க்கு அங்கு சிங்க‌ள‌ம் ப‌டிக்க‌ வெறுப்பைத் த‌ந்த‌து.
அவ‌னிட‌ம் கேட்டேன். நீ கூட‌ உன் நாட்டில் உள்ள‌ ஒரு மொழிதானே என‌ ஏன்?? த‌மிழைக் க‌ற்க‌வில்லை. ஆனால் இங்கு பிர‌ஞ்சு ப‌டிக்கிறாய்.

ஆக‌வே உண‌ர்வைத் தூண்டும்; நீ சிறுபான்மை ;நீ என்னிலும் கீழான‌வ‌ன் எனும்
பெருமித‌த்துட‌ன் ந‌ட‌க்க‌ முற்ப‌டும் போது ;;;
விரிந்த‌ உல‌கைப் ப‌ற்றிப் புரிந்த‌ இன்றைய‌ உல‌கில் பிர‌ச்ச‌னைக‌ள் உருவாகும்..
அதைத் த‌விர்க்கும் வ‌ழியே விவேக‌ம்.
இல‌ங்கையைப் பொறுத்த‌ம‌ட்டில் ப‌ல‌ சிங்க‌ள‌ம‌க்க‌ளே ; ப‌ண்டார‌நாய‌க்காவின் மொழிக் கொள்கையால்
ஏற்ப‌ட்ட‌ த‌வ‌றே!! இன்றைய‌ துன்ப‌ம் என்ப‌தை ஒப்புக் கொள்கிறார்க‌ள்.

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam சொன்னது…

( பேசு பொருளுடமிருந்து விலகி இருந்தால் மன்னிக்கவும்.)
பொதுவாக ஒரு மொழி கூட இல்லாமல் அன்னியன் ஒருவன் மொத்தமாக ஆண்டான் என்ற ஒரே காரணத்துக்காக உலகில் எந்தெந்த நாடுகள் உள்ளன? அவை எவ்வளவு சிறப்பாக நிர்வாகத்திறனை, வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஞாயிறு said...
( பேசு பொருளுடமிருந்து விலகி இருந்தால் மன்னிக்கவும்.)
பொதுவாக ஒரு மொழி கூட இல்லாமல் அன்னியன் ஒருவன் மொத்தமாக ஆண்டான் என்ற ஒரே காரணத்துக்காக உலகில் எந்தெந்த நாடுகள் உள்ளன? அவை எவ்வளவு சிறப்பாக நிர்வாகத்திறனை, வளர்ச்சியைப் பெற்றுள்ளன.
//

ஞாயிறு,
மொழிகள் இல்லை என்பதற்காக ஒரு நாட்டை பிறநாட்டவர் போரிட்டு வெற்றி அடைந்து ஆளவில்லை, அந்த நாடுகளில் இருக்கும் இயற்கைச் செல்வங்களும், வளங்களுமே காரணம், பொருளே இல்லாத நாட்டிற்கு யாரும் படையெடுத்துச் சென்றதில்லை, அடிமைகளை பிடித்து வருவதற்கோ, அடிமைகளாக ஆக்கிக் கொள்வதற்க்காக அவ்வாறு செய்யப்பட்டிருந்தாலும் அந்த இடங்களிலெல்லாம் வெற்றிபெற்றவர்கள் ஆட்சி நடத்தியது போல் தெரியவில்லை. நாகரீகம், மொழி ஆகியவற்றில் வளர்ந்த்திருந்து சமூகமாக மாறி இருந்து ஒரு இனக் குழுவாக மக்கள் வாழும் பகுதிகளே நாடுகள் ஆகின, அப்படி வெல்லப்படும் நாடுகளில் நிர்வாகத்திற்காக வென்ற மன்னர்களின் மொழிகள் அங்கு பயன்படுத்தப்பட்டு அவ்வட்டார மொழிகளில் கலந்தது அல்லது முடக்கியது என்று சொல்லலாம். அப்படி இந்தியாவில் பரவிய இரு மொழிகள் ஆங்கிலம், இந்தி

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam சொன்னது…

கோவி,
நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். எனது பார்வையில் இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை இந்தியாதான் என்று நினைக்கிறேன். அன்னியன் ஒருவன் சேர்த்து வைத்து ஆண்டான் என்பதைத் தவிர எனக்கும் பீகாரிக்கும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
அதோடு இந்திய மக்களுக்கு என்று ஒரு கூட்டு மனம் இல்லை என்பதால் பொதுவான அரசியல், கலை, இலக்கியப் போக்குகள் நிகழச் சாத்தியமில்லை; ஆகவே, இந்த அரசு, தேர்தல் எல்லாமே பொருளற்றதாக வெளியிலிருந்து திணிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அந்தப் பொருளற்ற அரசுக்கு பொது மொழி எதுவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசுகிறீர்கள்?
இது போல பல மொழி பேசும் மக்கள் கொண்ட நாடுகள் எத்தனை? அரசாட்சியில் எவ்வளவு தூரம் அவை வென்றுள்ளன?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஞாயிறு said...
கோவி,
நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை என்று நினைக்கிறேன். எனது பார்வையில் இந்தியாவின் மிகப் பெரிய பிரச்சினை இந்தியாதான் என்று நினைக்கிறேன். அன்னியன் ஒருவன் சேர்த்து வைத்து ஆண்டான் என்பதைத் தவிர எனக்கும் பீகாரிக்கும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
அதோடு இந்திய மக்களுக்கு என்று ஒரு கூட்டு மனம் இல்லை என்பதால் பொதுவான அரசியல், கலை, இலக்கியப் போக்குகள் நிகழச் சாத்தியமில்லை; ஆகவே, இந்த அரசு, தேர்தல் எல்லாமே பொருளற்றதாக வெளியிலிருந்து திணிக்கப்பட்டதாக நினைக்கிறேன். அந்தப் பொருளற்ற அரசுக்கு பொது மொழி எதுவாக இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசுகிறீர்கள்?
இது போல பல மொழி பேசும் மக்கள் கொண்ட நாடுகள் எத்தனை? அரசாட்சியில் எவ்வளவு தூரம் அவை வென்றுள்ளன?
//

நீங்கள் சொல்வதும் சரிதான், மொழியும் மதமும் கூட வேறு என்பதால் பாகிஸ்தான் தனியாக சென்றது. நாம் எல்லோரும் இந்தியர் என்று சொல்கிறோம், இந்தியரா தேச ஒற்றுமை வேண்டும் அதற்காக நான் பேசுவதை படி என்கிறார்கள் வடநாட்டினர் :) தென்னக மொழிகளில் பரவாலாகப் பேசப்படும் தெலுங்கை ஏன் அவர்கள் கற்றுக் கொண்டு தேசியம் காக்கக் கூடாது என்று தெரியவில்லை. அப்படி செய்தால் தென்னக மக்களும் வடநாட்டு மொழி ஒன்றை கற்றுக் கொள்வார்கள்.
:)

பலமொழிகள், பல இனமக்கள் வசிக்கும் நாடுகள் பல உள்ளன, தெற்காசிய நாடுகளெல்லாம் பல இன, பல மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள், இருந்தாலும் பெரும்பான்மை இனமே ஆதிக்கம் செலுத்துவது என்பது உலகமரபு.
:)

பெங்களூரு பற்றி பதிவர் மோகன் கந்தசாமி எழுதி இருப்பதைப் படிங்க, படிக்க சிரிப்பாக இருந்தாலும் அவர் சொல்வது உண்மை ! உண்மை !

வயுறுவலி கேரண்டி !
:)

Thekkikattan|தெகா சொன்னது…

கோவியாரே,

சில அன்பர்களின் மொழி பேணலின் அவசியம் குறித்த ஐயக் கேள்விகளுக்கு "திணமணியில்" நான் கட்டுரையை இங்கு ஒட்டுகிறேன்...

மொழிகள் முக்கியமானவை

By வெ. நல்லதம்பி

தாய்மொழிகளின் அருமைபெருமைகளை உணர்ந்த ஐ.நா. நிறுவனம், 2000-வது ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டிலும் பிப்ரவரி 21-ஆம் நாளை "உலகத் தாய்மொழி நாளாக' அறிவித்து வந்துள்ளது.

இந் நிலையில், 2008-ஆம் ஆண்டை "உலகமொழிகளின் ஆண்டாகவே' தற்போது அறிவித்துள்ளது.

இந்த ஆண்டில் முன்வைக்கப்பட்டுள்ள மையக்கருத்து "மொழிகள் முக்கியமானவை' என்பதாகும். அதற்குக் காரணங்கள் பல. மொழிகள் இனங்களை அடையாளம் காட்டுவன, அந்தந்த இனமக்களின் அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாகத் திகழ்வன, தத்தமது சமுதாய ஒருமைப்பாட்டுக்கு உதவுவன. நிலையான வளர்ச்சிக்கு வழிவகுப்பன, பசியையும் பிணிகளையும் உலகிலிருந்து அகற்ற முன் நிற்பன. பண்பாட்டின் சின்னமாகப் பரிணமிப்பன; அனைத்துக்கும் மேலாக, அறியாமையை அகற்ற உதவும் கல்வியை அனைவர்க்கும் வழங்கும் ஆற்றல் மிக்க கருவிகளாக விளங்குவன.

தற்போது உலகெங்கும் 7000 மொழிகள் வரை பேச்சு வழக்கிலும், மேலும் பல்லாயிரக்கணக்கானவை ஏட்டில் இடம்பெறாத நிலையிலும் உள்ளன.

ஏட்டில் இடம்பெற்று பேச்சில் இடம்பெறாத மொழிகள், ஏட்டிலும் பேச்சிலும் இடம்பெற்று இலக்கிய வளம் பெறாத மொழிகள், இலக்கிய வளம் பெற்று ஆட்சியில் இடம் பெறாத மொழிகள் என்று பலதரத்து மொழிகளின் நிகழ்காலம், வருங்காலம் அனைவரின் கவனத்துக்கும் உரியவை ஆகின்றன.

வளமான மொழிகளிலேயேகூட ஆயிரக்கணக்கான மொழிகள், இன்னும் கல்வி மொழியாக, ஊடக மொழியாக, கணினி மொழியாக, மக்கள் தொடர்பு மொழியாக ஆக்கப்படவில்லை. இதனைக் குறிப்பிடுபவர் ஐ.நா.வின் உறுப்பு நிறுவனமான யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர் கோய்ச்சிரோ மட்சுரா.

அவரது அடுத்த கூற்று, நம்மில் பலருக்குச் சற்று அச்சமூட்டுவதாகக்கூட இருக்கலாம். இப்போது பேச்சு வழக்கில் உள்ள சுமார் 7000 மொழிகளில் சரிபாதி, அடுத்த சில தலைமுறைகளுக்குள்ளேயே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது என்கிறார் அவர்.

... தொடருது....

PRABHU RAJADURAI சொன்னது…

நீங்கள் கூறுவது சரிதான். நான் எழுதியதை பாருங்களேன்

"இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன்"

"ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையா"

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II
http://marchoflaw.blogspot.com/2008/03/ii.html

Thekkikattan|தெகா சொன்னது…

அவரது கருத்தை எதிரொலிப்பதுபோல் மேலும் இருவர் "இருவாரங்களுக்கு ஒரு மொழி' என்ற வீதத்தில் மொழிகள் பல அழியும் ஆபத்து உள்ளது என்றும், அந்த உண்மை ஆஸ்திரேலியாவில் தொடங்கி சைபீரியா வரையிலும், ஏன் அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலம் வரையிலும் கூடப் பொருந்தும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். அப்படிக் கூறுவோர் ஹாரிசன், கிரிகோரி ஆண்டர்சன் என்னும் இரு அமெரிக்க மொழியியல் அறிஞர்கள்.

மொழிகள் அழிந்தால் அது மொத்த மனித குலத்துக்குமே நஷ்டம் என்கிறார்கள் மொழி வல்லார். மொழிகளின் எண்ணிக்கை குறைந்தால், சிந்தனைகள் குறையும் என்கிறார் ரோஸ்மேரி ஆஸ்ட்லர்.

மொழிகளின் அழிவு மனித உடல் நலத்துக்கே கூட அழிவு என்கிறார் ஸ்டீபன் ஊர்ம். தம் கூற்றுக்கு ஆதாரமாக, ஆஸ்திரேலிய அனுபவம் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார் ஸ்டீபன்.

ஒருவகைத் தோல் புற்றுநோய், வட ஆஸ்திரேலியாவில் மாபெரும் தொற்று நோயாகப் பரவி வந்த காலத்தில் மேற்கத்திய மருத்துவ முறைகளில் பயின்று வந்த செவிலியப் பெண்மணி அங்கு மருத்துவப் பணியாற்றினார். அவரை மலைவாசிகள் சிலர் சந்தித்தனர்.

ஒருவகை மூலிகைச் செடியின் சாறு அந்தப் புற்றுநோயைக் குணமாக்க வல்லது என்று குறிப்பிட்டனர். அவர்கள் தந்த தகவலை அந்தச் செவிலியர் உதாசீனப்படுத்தாமல் அப்படியே பின்பற்றினார்.

வடஆஸ்திரேலிய மக்கள் தொற்று நோயாகப் பரவிய தோல் புற்றுநோயிலிருந்து தப்பினார்கள். அந்த மலைவாசிகளின் மொழி இல்லாது போயிருக்குமானால் நிலைமை என்னவாகியிருக்கும் என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்டீபன்.

மலைவாழ் மக்களின் மொழிகளுக்கு மட்டுமல்ல, செல்வாக்கில்லாத வேறுபிற சிறுபான்மையினரின் மொழிகளுக்கும்கூட, அழிவு ஆபத்திருப்பதை உணர்வது நல்லது.

இன்று "உலகமயமாக்கல்' என்ற புதியதோர் அலை வேகமாக வீசி வருகிறது. அத்துடன், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அகிலம் எங்கும் தழைக்கிறது. அவற்றின் விளைவாகப் பல சமுதாயங்கள் மாறுதல்களைச் சந்தித்து வருகின்றன.

...தொடருது இன்னும்...

Thekkikattan|தெகா சொன்னது…

குறிப்பாக இளைஞர்கள் தத்தம் மொழி, பண்பாடு, ஆடைப் பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைக் கைவிட்டு விடும் நிலை ஏற்பட்டு வருகிறது. உலகின் செல்வாக்குமிக்க மொழி, பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றுக்கு அவர்கள் மாறும் நிலை உருவாகி வருகிறது. அது இன்றைய உலகின் பன்மொழிப் போக்கிற்கு எதிரான நிலை.

மொழிகளின் அழிவைத் தடுக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள யுனெஸ்கோ நிறுவனம், அதற்கான ஒரு திட்டமாக, ஒவ்வொரு மொழிக் குடும்பத்தாரும் தத்தம் மொழியை - தாய்மொழியாம் முதல் மொழியை - தங்குதடையின்றி எல்லாத் துறைகளிலும் புகுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

தாய்மொழியை அனைத்து மக்களும் கற்றுப் பயன்படுத்துவதுடன் தேசிய மொழி ஒன்றையும், பன்னாட்டு மொழி ஒன்றையும் கூடக் கற்றுக் கொள்வது நல்லதே என்கிறார் தலைமை இயக்குநர்.

பன்மொழிப் புலமை என்பது ஒருவருக்குச் செல்லும் இடமெல்லாம் நல்லதே விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை. "கற்றார்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்பது பழந்தமிழ் வாக்கு.

உலகமயமாகும் இக்காலச் சூழலில், பல மொழிகளையும் ஒருவர் தெரிந்து வைத்திருந்தால் அவருக்கு வேலைவாய்ப்பு சிறப்பாக அமையும்தான்.

ஐ.நா. அமைப்பு, உலக நாடுகள் அனைத்துக்கும் உரிய ஒரு பொது நிறுவனம். அது இந்த ஆயிரமாம் ஆண்டுகளுக்கென சில இலக்குகளை (ஙண்ப்ப்ங்ய்ய்ண்ன்ம் ஈங்ஸ்ங்ப்ர்ல்ம்ங்ய்ற் எர்ஹப்ள்) நிர்ணயித்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. வறுமை, பசி ஒழிப்பு (ஙஈஎ 1), அனைவருக்கும் ஆரம்பக்கல்வி (ஙஈஎ 2), மலேரியா, எய்ட்ஸ் போன்ற நோய்களுக்கெதிரான நடவடிக்கை (ஙஈஎ 6), சுற்றுச்சூழல் பாதுகாப்பு (ஙஈஎ 7) என்று பல்வேறு வகையான திட்டங்களையும் இலக்குகளையும் அமைத்துக் கொண்டு, அவற்றைச் செயல்படுத்த முனைந்திருக்கிறது.

திட்டங்களின் வெற்றி, அனைத்து மக்களின் ஒத்துழைப்பை அடிப்படையாகக் கொண்டது. அந்த ஒத்துழைப்பைப்பெற அந்தந்தப் பகுதி மக்களை நாட வேண்டும். அவ்வாறு அவர்களை நாட, அந்தந்தப் பகுதி மொழிகளின் துணை வேண்டும். ஆகவே பல மொழிகள் முக்கியமானவைதான்.

"வேற்றுமையில் ஒற்றுமை காண்பது' என்பது உயர்நெறி. அந்த நெறியில் நின்று, பல மொழிகளையும் மதித்து வாழ வேண்டும் என்னும் உண்மையை உலகத்தார் அனைவரும் ஏற்றுக்கொள்வது மேன்மை.

சீர்திருத்தம் முதலில் சொந்த வீட்டில் தொடங்கப்பட வேண்டும் என்பார்கள். அதற்கிணங்க ஐ.நா. தாம் ஏற்றுக் கொண்ட ஆறு மொழிகளுக்குள்ளும் (ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ஸ்பானிஷ், ரஷியன், அராபிக்) வேறுபாடு எதுவும் காட்டாமல், அனைத்தையும் சமமாகக் கருதிச் செயல்பட வேண்டும் என்றும், தம் அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆறு மொழிகளிலும் உடனடியாக வெளியிடுவதோடு, ஆறு மொழிப்புலங்களுக்குமான வளங்களையும் வாய்ப்புகளையும் சமமாகத் தருவதென்றும் முடிவு செய்து, முனைப்பாகச் செயல்படத் தொடங்கிவிட்டது.

உலக நிறுவனத்தின் செயல்பாட்டை முன்னுதாரணமாகக் கொண்டு, நாடுகள் பலவும் தத்தமது மொழிகள் பலவற்றுக்கும் சமமான மதிப்பும் வளமும் வழங்க வேண்டும். எதிர்வரும் காலத்தில் மக்கள் சமுதாயம் சந்திக்க இருக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளப் பல்வேறு மொழிகளும் முக்கியமானவையே ஆகும்.

(கட்டுரையாளர்: சென்னைத் தொலைக்காட்சி நிலைய முன்னாள் உதவி இயக்குநர்.)

நன்றி: திணமணி

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam சொன்னது…

// தெற்காசிய நாடுகளெல்லாம் பல இன, பல மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள், //

யாராவது உருப்படியாக முன்னேறியிருக்கிறார்களா? அவையும் நம்மைப் போல காலனியாதிக்கத்தினால் செயற்கையாகத் தோன்றியவையே?

ஐரோப்பாவில் ஒவ்வொரு மொழி பேசுவோரும், தத்தம் அரசைக் கொண்டிருக்கிறார்களே?
இந்தியா போன்ற நாடுகளில் ஜனனாயகம் என்பது எந்த அளவுக்கு சாத்தியம்? ஒருவர் இந்தியா முழுவதும் உள்ள மக்களை தனது கருத்துக்களால் கவருவது சாத்தியம்தானா?

எடுத்துக்காட்டாக இந்தியாவில் இரண்டே இரண்டு தேசிய கட்சிகள்தான் ஐம்பது வருடங்களில் தோன்றியுள்ளன.
காங்கிரஸ்: பிரிட்டிஷ் என்ற பொது எதிரிக்காக உருவாக்கப்பட்டது
பா.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்): இந்தியா முழுவதும் இருக்கும் "ஒரே" இனமான பார்ப்பனர்களால், பார்ப்பனியக் கனவு, பெருமிதம் சார்ந்து உருவானது.

திராவிடர் கழகம் போன்ற ஒரு அரசியல் இயக்கம் இந்திய அளவில் தோண்றுவது சாத்தியமா?

பாச மலர் / Paasa Malar சொன்னது…

நம் பொது மொழி என்று சொல்ல அதிகம் தகுதி ஆங்கிலத்துக்கே உள்ளது..அதிகம் பேசப்படுகிறது என்பதால் இந்தியை தேசிய மொழி என்று முத்திரை குத்துகிறார்களே..மேண்டரின் அதிகம் உலக அளவில் பேசப்படுகிறதே..அதை உலக் மொழி எனக் கொள்ள முடியுமா..

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
நம் பொது மொழி என்று சொல்ல அதிகம் தகுதி ஆங்கிலத்துக்கே உள்ளது..அதிகம் பேசப்படுகிறது என்பதால் இந்தியை தேசிய மொழி என்று முத்திரை குத்துகிறார்களே..மேண்டரின் அதிகம் உலக அளவில் பேசப்படுகிறதே..அதை உலக் மொழி எனக் கொள்ள முடியுமா..

11:15 PM, April 11, 2008
//

பாச மலர் மேடம்,

சரியாச் சொன்னிங்க உலகில் 5 பேரில் 1.5 சீனர்கள் தான் இருக்காங்க.
அவர்களின் மக்கள் தொகைப்படி சீன மொழியே உலகில் நிறைய (அதிக) மக்களால் பேசப்படும் மொழி, உலக மக்களும் ஒரே மொழிக் கொள்கை கொண்டு சீன மொழியைப் பேசச் சொன்னால் எல்லோரும் அம்பேல் தான். உலகில் மக்கள் தொகை நிறைய (அதிக ) மக்களால் பேசப்படும் மொழியே பொது மொழி என்பது சொத்தை வாதம்

கூடுதலாக பேசப் படும் மொழிக்கு பொதுத் தகுதி என்பதைவிட கூடுதல் பயன் தரும் மொழியே பொது மொழி.
:)

டிப்ஸ்க்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//பிரபு ராஜதுரை said...
நீங்கள் கூறுவது சரிதான். நான் எழுதியதை பாருங்களேன்

"இந்தியா ஒன்றுபட்டிருப்பதற்கு ஆங்கிலம் முக்கியமான ஒரு காரணம் என்று நான் உணர்கிறேன்"

"ஆனால் தேசிய மொழி என்பது உணர்வு பூர்வமான பதம். சட்டபூர்வமான அங்கீகாரம் அதற்கு கிடையா"

இந்திய ஆட்சி மொழியும் நீதிமன்ற நிலைப்பாடும் - பகுதி II
http://marchoflaw.blogspot.com/2008/03/ii.html
//

வழக்கறிஞர் ஐயா,

அந்த கட்டுரையை பலமுறை படித்து இருக்கிறேன். அதை அவ்வப்போது சுட்டியாக இணைக்கவும் பயன்படுத்திக் கொண்டு வருகிறேன். அண்மையில் கூட உங்கள் இடுகையை ஒரு பதிவர் இடுகையில் சுட்டி இருந்தார்.

கோவி.கண்ணன் சொன்னது…

தெகா,

பயன்மிகு நீண்ட பின்னூட்ட அன்பளிப்புக்கு மி(க்)க மி(க்)க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//ஞாயிறு said... திராவிடர் கழகம் போன்ற ஒரு அரசியல் இயக்கம் இந்திய அளவில் தோண்றுவது சாத்தியமா?

10:44 PM, April 11, 2008
//

திராவிடக் கழகமெல்லாம் வழிதவறி போய்விட்டதா என்று தெரியவில்லை, தலித்துகளுக்கு எதிராக வன்முறை செய்து அவர்களை மதிப்பவர்களில் பார்பனர்கள் எவரும் இல்லை.

தலித்துகளுக்கு ஆதாரவான இயக்கம் தான் இந்தியா முழுவதும் ஒரே இயக்கமாக உருவாகவேண்டும், மக்கள் தொகையில் 50 விழுக்காடுகள் அளவுக்கு இருக்கும் தலித் பெருமக்கள் விடுதலை அடைந்தால் இந்தியா மிளிரும்.

பழங்குடி மண்ணின் மைந்தர்கள் பிறரின் மலத்தை அள்ளும் அவல வேலை செய்வது இன்னும் கூட வட இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஒரு புறம் இருக்கிறது, சுதந்திர இந்தியா என்று பெருமைபடுபவர்கள் வெட்கப்படலாம்.

யாருக்கு சுதந்திரம் கிடைத்தது ? ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் வெள்ளைக்காரனிடம் வீழ்ந்தார்கள் அவர்களுக்குத்தானே சுதந்திரம் கிடைத்தது.

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam சொன்னது…

// திராவிடக் கழகமெல்லாம் வழிதவறி போய்விட்டதா என்று தெரியவில்லை, தலித்துகளுக்கு எதிராக வன்முறை செய்து அவர்களை மதிப்பவர்களில் பார்பனர்கள் எவரும் இல்லை.

தலித்துகளுக்கு ஆதாரவான இயக்கம் தான் இந்தியா முழுவதும் ஒரே இயக்கமாக உருவாகவேண்டும், மக்கள் தொகையில் 50 விழுக்காடுகள் அளவுக்கு இருக்கும் தலித் பெருமக்கள் விடுதலை அடைந்தால் இந்தியா மிளிரும்.

பழங்குடி மண்ணின் மைந்தர்கள் பிறரின் மலத்தை அள்ளும் அவல வேலை செய்வது இன்னும் கூட வட இந்தியாவில் நடந்து கொண்டிருப்பது ஒரு புறம் இருக்கிறது, சுதந்திர இந்தியா என்று பெருமைபடுபவர்கள் வெட்கப்படலாம்.

யாருக்கு சுதந்திரம் கிடைத்தது ? ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள் வெள்ளைக்காரனிடம் வீழ்ந்தார்கள் அவர்களுக்குத்தானே சுதந்திரம் கிடைத்தது. //
கோவி,
நான் சொல்ல வந்தது என்னவெனில், இந்தியா முழுவதும் கருத்துப்பரவல் என்பது சாத்தியமில்லை; அதற்கான ஒற்றை கலை, இலக்கிய மேடை இந்தியாவில் இல்லை. அதனால், எந்த ஒரு அரசியல்‍‍‍‍‍ சமூக இயக்கமும் இந்திய அளவில் தோன்ற இயலாது. ( விதிவிலக்கு: இந்துத்துவம் மட்டுமே, என்னைப் பொருத்தவரையில் இந்து என்ற அடையாளமும் செயற்கையானது, பிரிட்டிஷ்காரர்களால் உருவாக்கப்பட்டது. நமது பெரும்பாண்மை மக்களை மதமற்றவர்கள், எளிய சடங்குகளைக் கொண்டவர்கள் என்றே குறித்திருக்கவேண்டும். )

இரண்டு தீர்வுகள்தான் உள்ளன. பிராந்திய அடையாளங்களை ஒழித்துவிட்டு ஒற்றை தேசியத்தை நோக்கி நகர்வது ( நானும் பீகாரியும் இந்தி பேசுவோம். ஒரே சினிமாவை பார்ப்போம். இந்துத்துவ, வேதகால பெருமிதம் பேசுவோம்.)

அல்லது, மானிலங்களுக்கான அதிகாரங்களை மெல்ல, மெல்ல அதிகரித்து மத்திய அரசின் பங்கை இராணுவத்துக்கானதாக மட்டும் சுருக்குவது. அப்பொழுது பொது மொழிக்கான தேவையோ, மத்திய அரசுக்கான தேர்தலோ இருக்காது. மானிலங்கள் சேர்ந்து இராணுவ சேவையை ஒரு மைய அமைப்பிடம் அவுட்சோர்ஸ் செய்ததைப் போல.
(பார்ப்பனிய, திராவிட அரசியலை நான் இங்கு பேசவில்லை. ஒரு எடுத்துக்காட்டுக்காக சொன்னேன்.)

ஆனால், இப்பொழுதுள்ள கூட்டாட்சி என்பது குழப்படி ஆட்சியாகத்தான் இருக்கிறது,.. எடுத்துக்காட்டாக: ஒகேனக்கல் பிரச்சினையில், தமிழ்னாட்டு நா.உ.(எம்.பி) களைச் சார்ந்து இருப்பதால் தமிழ்னாட்டுக்கெதிராக மத்திய அரசு செயல் பட முடியாத நிலை. ஒருவேளை, இந்த சார்பு இல்லையென்றால் அல்லது மத்திய அரசில் உள்ள கட்சி ஒரு மானிலத்தை வெறுப்பதாக இருந்தால் அதற்கான தீர்வு இந்த அமைப்பில் இல்லை.
எ.கா. 2: விலைவாசி உயர்ந்து விட்டது. இதற்கு மக்கள் யாரைக் குற்றம் சொல்வது = மானில அரசையா? மத்திய அரசையா? யாருக்கும் தெரியாது... அதனால்தான் மக்கள் அடுத்து எந்தத் தேர்தல் வந்தாலும் ஆளுங்கட்சிக்கெதிராக வாக்களித்து ஏதாவது "மாறும்" என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஞாயிறு said...

கோவி,
நான் சொல்ல வந்தது என்னவெனில், //

ஞாயிறு அவர்களே,

நான் சரியாக புரிந்து கொள்ளாமல் மறுமொழி அளித்ததும் நல்லதாகவே போகுது.

பலகருத்துக்கள் உங்களிடம் இருந்து வந்திருப்பதற்கு அதுவே காரணாமாக இருக்கிறது.

ஆமாம், கடைசியாக என்ன சொன்னிங்க ? புரியவில்லை
:)

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam சொன்னது…

கோவி,
எனது எழுத்து நடை குழப்படியாக இருக்கிறதா என்ன? :)

கடைசியா நான் என்ன சொல்ல வந்தேன் என்றால்...
இப்பொழுது உள்ள கூட்டாட்சியில் உள்ள பிரச்சினைகளில் இரண்டு முக்கியமானதாக கருதுகிறேன்.

1) மத்திய அரசு ஒரு மானில அரசுடன் ஒத்துழைக்காமல் ஒரு மானிலத்தை வஞ்சிப்பதற்கான சாத்தியக்கூறு.

2) மக்களால் பிரச்சினைகளை மானில அரசாலா, மத்திய அரசாலா என்று புரிந்து தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை. எ.கா. விலைவாசி உயர்வு மத்திய அரசின் பங்குதான் அதிகம், ஆனால், இன்று தமிழ்னாட்டில் தேர்தல் நடந்தால், மக்கள் இப்பிரச்சினைக்காக மானில அரசைத் தண்டிப்பார்கள், மானில அரசு உண்மையிலேடயே தனது பங்கை நன்கு செய்திருந்தாலும். அதாவது மத்திய மானில ஆளுங்கட்சிகள் அவை செய்யாத தவறுக்கு தண்டிக்கப் படுவதற்கான சாத்தியக்கூறு.

என்னால முடிஞ்ச அளவு சொல்லிட்டேம்பா.. :)

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam சொன்னது…

//தமிழ் மொழியின் வளர்ச்சியின்மைக்கு இது போன்ற பழம்பெருமை ஜல்லிகளே காரணம் என்று நினைக்கிறேன்.//
ரத்னேஷ்,
தமிழ் மொழியின், தமிழனின் வளர்ச்சியின்மைக்குக் காரணம் அவனது நிலத்தின் அரசதிகாரம் அவனிடமிருந்து பறிக்கப்பட்டிருப்பதே என்று நினைக்கிறேன். ஜப்பான் ஒருவேளை இந்தியாவின் ஒரு மானிலமாக இருந்திருந்தால் அது இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியுமா? ( உங்களின் கவனத்துக்கு: ஜப்பானின் மொழியை ஜப்பானுக்கு வெளியே யாரும் பேசுவதில்லை. அதற்காக அவர்கள் வளரவில்லை என்பீர்களா என்ன?) மொழியின் வளர்ச்சி என்பதை எவ்வளவு நிலப்பரப்பில் அது "பரப்பப் பட்டிருக்கிறது" என்று அளப்பது தவறு. எவ்வளவு கலை, அறிவியல், பிற துறை சார்ந்த பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது என்றுதான் அதை அளக்க முடியும். இன்று தமிழ் கலை, இலக்கிய, அரசியல் துறைகளில் பயன்பாட்டில் உள்ளது. அறிவியலில், தொழில் நுட்ப துறைகளில் பின் தங்கி உள்ளது. சீன, கொரிய, ஆங்கில, ஜப்பானிய மொழிகள் இத்துறைகளில் முன்னனியில் உள்ளன.

கோவி,
//ஆங்கிலத்தின் பயனும் உலக அளவில் அதன் வீச்சும் கற்றுக் கொண்டால் இந்தியர்களுக்கு உலக அளவில் செயல்படும் தகுதிகளும் பலன்களும் கிட்டும். சீனா நம்மிடம் போட்டியிட திணறுவதற்கு முதன்மை காரணமே சீனர்களுக்கு ஆங்கிலம் வராது அவர்கள் ஆங்கில காலனியாக இருந்தது இல்லை.//

உடன்படுகிறேன். ஆனால், சீனர்களிடமும், ஜப்பானியர்களிடமும் நாம் திணறுவதற்குக் காரணம் நாம் நமது மொழியில் அறிவியல், தொழில் நுட்ப படிப்புகளை செய்வதில்லை. ( நாம் திணறவேயில்லையே என்று கூறமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.)

ஆனால், தாய் மொழியில் மேல் படிப்பு, சிந்தனை இல்லாமல் இருப்பது நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி செல்ல இயலாமல் செய்கிறது என்றே நினைக்கிறேன். தமிழில் இருக்கும் புத்தகத்தை என்னால் களைப்புத் தட்டாமல் படிக்க முடிகிறது. ஆங்கிலப் புத்தகம் தூக்கத்தைத்தான் தருகிறது. முதல் தலை முறையில் ஆங்கிலம் படிப்பவர்கள் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் :)

இதற்கு தீர்வு என்ன?

எனது பிள்ளையை ஆங்கில வழியில் படிக்கச் செய்வதன் மூலம், செயற்கையாக அவனை ஒரு ஆங்கிலேயனாக மாற்றி விடுவதா ( எனக்குத் தெரிந்த‌ பல இரண்டாம் தலைமுறை ஆங்கிலப் படிப்பாளர்கள் செயற்கை ஆங்கிலேயனாக‌ இருக்கிறார்கள். அவர்களால் இந்த மண்ணின் மீது நின்று மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.)

அல்லது, ஜப்பானியர்களை, சீனர்களை, கொரியர்களை, பிரஞ்சுக்காரர்களை, ஆங்கிலேயர்களை, ஜெர்மானியர்களை, ( தெற்காசிய முன்னாள் காலனி நாடுகளைத் தவித்து அனைவரும்?) பின்பற்றி எல்லாமும் தாய் மொழியில்தான் என்ற திசையில் நகர்வதா?
இரண்டாவதுதான் சரி என்றாலும், முதலாவதுதான் நடக்கப் போகிறது :)

Indian சொன்னது…

ஞாயிறு, தாங்கள் பல புதிய கருத்துக்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இந்தக் கருத்துக்களில் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல், இது இந்தியா தேசிய ஒற்றுமைக்கு எதிரான சதி எனக் குரல்கள் எழக்கூடும். இந்தியா மாதிரி ஒரு பல்தேசிய நாடு எங்காவது இருக்கிறதா என்று கேட்டிருந்தீர்கள். இருந்தது. அதுதான் யுகோஸ்லேவியா. இந்தியாவிற்காவது 300 ஆண்டு 'பாரம்பரியம்' (கோவி ஐயா, பாரம்பரியத்துக்கு சரியான தமிழ்ச்சொல் இன்னாங்கோ?) இருந்தது. ஆனால் யுகோஸ்லேவியா முதலாம் உலகப்போருக்குப் பின்னால் 'உருவாக்கப்பட்ட' நாடு. அப்படி உருவாக்கப்பட்டதன் பலனை தாங்கள் அறிந்திருப்பீர்கள். அது இப்போது செர்பியா, க்ரோவெஷியா, போஸ்னியா,மேசிடோனியா, ஸ்லொவேனியா, கொசவோ, எனப் பலவாறாக உடைந்துவிட்டது. யுகோஸ்லேவியாவிடமிருந்து நாம் நிறையக் கற்றுக்கொள்ளலாம்.

//ஆனால், தாய் மொழியில் மேல் படிப்பு, சிந்தனை இல்லாமல் இருப்பது நம்மை ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி செல்ல இயலாமல் செய்கிறது என்றே நினைக்கிறேன். தமிழில் இருக்கும் புத்தகத்தை என்னால் களைப்புத் தட்டாமல் படிக்க முடிகிறது. ஆங்கிலப் புத்தகம் தூக்கத்தைத்தான் தருகிறது. முதல் தலை முறையில் ஆங்கிலம் படிப்பவர்கள் நிலை இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் :)

இதற்கு தீர்வு என்ன?

எனது பிள்ளையை ஆங்கில வழியில் படிக்கச் செய்வதன் மூலம், செயற்கையாக அவனை ஒரு ஆங்கிலேயனாக மாற்றி விடுவதா ( எனக்குத் தெரிந்த‌ பல இரண்டாம் தலைமுறை ஆங்கிலப் படிப்பாளர்கள் செயற்கை ஆங்கிலேயனாக‌ இருக்கிறார்கள். அவர்களால் இந்த மண்ணின் மீது நின்று மக்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை.)

அல்லது, ஜப்பானியர்களை, சீனர்களை, கொரியர்களை, பிரஞ்சுக்காரர்களை, ஆங்கிலேயர்களை, ஜெர்மானியர்களை, ( தெற்காசிய முன்னாள் காலனி நாடுகளைத் தவித்து அனைவரும்?) பின்பற்றி எல்லாமும் தாய் மொழியில்தான் என்ற திசையில் நகர்வதா?
இரண்டாவதுதான் சரி என்றாலும், முதலாவதுதான் நடக்கப் போகிறது :)//

Well said!! ;)

சுரேஷ் ஜீவானந்தம் | Suresh Jeevanandam சொன்னது…

இந்தியன், நன்றி. ( இந்தியன் என்ற பெயர் ரொம்பப் பொருத்தமாக இருக்கிறது.)

கோவி, உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். இது வரை விவாதித்த கருத்துக்களை உங்கள் பார்வையில் தொகுத்து ஒரு தனிப்பதிவு தேவைப்பட்டால் போடவும். எனக்கு உங்களைப் போல கோர்வையாக, எளிமையாக எழுத வருவதில்லை :(

கோவி.கண்ணன் சொன்னது…

ஞாயிறு,

உங்கள் கருத்துக்கள் முதல் இரண்டு பின்னூட்டத்தில் அவ்வளவு தெளிவாகவில்லை, அதன் பிறகு நீங்கள் விளக்கியது தான் புரிந்து கொண்டேன், திரும்ப அவைகளைப் படித்த போது மிகச்சரியாகவே சொல்லி இருக்கிறீர்கள் என்று புரிந்துவிட்டது, மேலும் பலவற்றை சிறப்பாகவே அடுத்து அடுத்த பின்னூட்டத்தில் சொல்லி இருக்கிறீர்கள், நம்மீது திணிக்கப்படுபவை எவையும் நம்விருப்பத்தற்கானது அல்ல, ஒட்டவைக்கப்படுபவையே அவற்றினால் என்றுமே இடற்தான். நீங்கள் சொல்வது போல் பிகாரியுடன் நான் பேசவேண்டும் அதற்காக நான் இந்திபடிக்க வேண்டும் என்று சொல்வதை என்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது, ஆங்கிலேயர்களுக்கு பிறகு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது இந்தியா, இதில் பல மொழிகள் பேசுபவர்கள் இருக்கிறார்கள், அவர்களை ஒரே மொழியால் ஒன்றிணைப்பதுதான் தேசியம், தேசபக்தி என்று சொல்வதெல்லாம் பம்மாத்தே.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது வேற்றுமையை ஏற்றுக் கொண்டு வாழ்வது குறித்தது, வேற்றுமைகளை களைவது பற்றியல்ல என்பதே.

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

எனது மூன்று இடுகைகளில் தொடர்ச்சியாக இதுபற்றியே பேசியாகிவிட்டது, நீங்கள் உங்கள் பின்னூட்டங்களை தொகுத்து, எனது இடுகையில் இருப்பவற்றிலும், பின்னூட்டங்களிலுள்ளதில் செரிவு மிக்கதை எடுத்து தனிப்பதிவாக இடுங்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Indian said...
ஞாயிறு, தாங்கள் பல புதிய கருத்துக்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. இந்தக் கருத்துக்களில் உள்ள உண்மையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காமல், இது இந்தியா தேசிய ஒற்றுமைக்கு எதிரான சதி எனக் குரல்கள் எழக்கூடும். இந்தியா மாதிரி ஒரு பல்தேசிய நாடு எங்காவது இருக்கிறதா என்று கேட்டிருந்தீர்கள். இருந்தது. அதுதான் யுகோஸ்லேவியா. இந்தியாவிற்காவது 300 ஆண்டு 'பாரம்பரியம்' (கோவி ஐயா, பாரம்பரியத்துக்கு சரியான தமிழ்ச்சொல் இன்னாங்கோ?)
...//

இந்தியன்,
உங்கள் பின்னூட்டமும் அருமை.

பாரம்பரியம் - இதற்கு முன்னோர்வழி, வழிவழியாக, குலவழக்கு, தலைமுறை, பழம்பெருமை ஆகிய தமிழ் சொற்களை இடத்திற்கு ஏற்றவாறு பயன்படுத்தலாம்,

எங்கள் இல்லம் பாரம்பரியமிக்கது என்று சொல்வதை எங்கள் இல்லம் பழம்பெருமை வாய்ந்தது என்று சொல்லலாம்.

எங்கள் பாரம்பரியத்தில் இதெல்லாம் கிடையாது இதை எங்கள் குலவழக்கில் இதெல்லாம் கிடையாது என்று சொல்லலாம்

எங்கள் பாரம்பரியத்தில் இப்படித்தான் என்று சொல்வதை எங்கள் தலைமுறைகளெல்லாம் இப்படித்தான் என்று சொல்லலாம்.

நான்கும் மேற்பட்ட தமிழ்சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பயன்படுத்தலாம்.

மோகன் கந்தசாமி சொன்னது…

/////பெங்களூரு பற்றி பதிவர் மோகன் கந்தசாமி எழுதி இருப்பதைப் படிங்க, படிக்க சிரிப்பாக இருந்தாலும் அவர் சொல்வது உண்மை ! உண்மை !

வயுறுவலி கேரண்டி !
:)//////
இன்னாபா இது! இத ட்டமாசுன்ட்டியே, ரொம்ப கஷ்டமாக்குதுபா!
மோகன் கந்தசாமி

SUBBU சொன்னது…

ஒரு சூப்பர் பதிவுங்க :))

snkm சொன்னது…

நல்ல கருத்துக்கள் தான், இருந்தாலும் ஆங்கிலத்தையாவது எல்லோரும் பயன் படுத்தும்படி ச்செய்ய வேண்டும்.

Kesavan சொன்னது…

ஹிந்தியை பற்றிய உம்முடைய ஆராய்ச்சி நன்றாக இருந்தது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்