பின்பற்றுபவர்கள்

28 ஏப்ரல், 2008

தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும் - 2

பகுதி 1
தகவல் தொடர்பு சாதனமாகப் பேசப்பட்டு வந்த மொழிகள், சமூக கட்டுக்கோப்பிற்காக அவற்றை எழுதிவைத்துக் கொள்வது தேவை என்ற எண்ணம் ஏற்பட்ட போது எழுத்துக்கள் குறித்தும் சிந்தித்தபோது உடனடியாக குறியீடுகள் ஏற்பட்டுவிடவில்லை, முதன் முதலில் உருவங்களையே எழுத்துக்களாக எழுத ஆரம்பித்திருக்கின்றன, சிந்துவெளி ஹரப்பா நாகரீக எழுத்துக்களும், மங்கோலிய இனம் வாழும் ஆசிய நாடுகளின் எழுத்துக்களும் ஓவிய வடிவ எழுத்துக்களே, சிந்துவெளியில் மீன், வின்மீன் இரண்டிற்கும் ஒரே குறியீடான வின்மீன் ஓவிய எழுத்துக்களையே பயன்படுத்தி இருப்பதிலிருந்து, வேறு சில தரவு (ஆதாரம்) மூலமாக அவையே தமிழ் எழுத்தின் மூலமாக இருக்க முடியும் என்றும், அவ்வெழுத்துக்களை இடமிருந்து வலமாக வாசிக்கும் போதும் செந்தமிழாக பொருள் இருப்பதாகவும் தேவநேயபாவாணரின் மாணாக்கர் திரு மதிவாணன் ஆய்ந்து சொல்லி இருக்கிறார். அதுபோலவே ஐயராவதம் மகாதேவன் அவர் பார்வையில் சிலவற்றைச் சொல்லி இருக்கிறார். எது எந்த அளவு உண்மை என்ற வாதத்துக்கு நான் செல்லவில்லை. ஆனால் அதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம், பழங்கால மொழிகள் அனைத்தின் எழுத்துக்களும் ஓவிய வடிவத்திலிருந்தே இன்றைய நிலையை அடைந்திருக்கின்றன.


இன்றும் சில மொழிகள் எழுத்துவடிவம் பெறாமலேயே புழக்கத்தில் இருக்கின்றன, பெரும்பாண்மை மக்கள் பேசும் மொழி எழுத்தில்லாமலேயே, அரசு அமைக்கும் அளவுக்கு அவர்களுக்கு செல்வாக்கு இருக்கும் போது எழுத்துக்கள் அவர்களுக்கு தேவையாகிறது, மலாய், பாசா இந்தோனிசியா, பாசா புரூனே போன்றவைகளுக்கு எழுத்து தேவைப்பட்ட போது ஆங்கிலம் இரண்டாம் மொழியாக இருப்பதால், ஆங்கில 26 எழுத்துக்களையே பயன்படுத்தி வருகின்றன, அந்த மொழியில் இல்லாத சொற்களை ஆங்கிலத்தில் இருந்து எடுத்துக் கொண்டு அவர்கள் ஒலிக்கும் திறனுக்கு ஏற்ப மாற்றிக் கொள்கின்றனர். எடுத்துக்காட்டு national, English (En) > Nasional, Engress (Malay) இது போன்று ஆயிரக்கணக்கான ஆங்கில சொற்கள் அவர்களின் தொண்டை, நாவு ஒலிக்கு ஏற்றார் போல் மாற்றி தங்கள் மொழிச் சொல்லாக மாற்றிக் கொள்கின்றன.

இது உலக மொழிகள் எல்லாவற்றிலும் உள்ள நடைமுறையே, ஒலிக்க முடியாமல் வெள்ளைக்காரனும் கோழிக்கோடு > Cochin, நாகப்பட்டினம் > Negapatam என்று ஆங்கிலத்தில் மாற்றிக் கொண்டார்கள், பழங்கால மொழிகள் எழுத்தில் எழுத தொடங்கிய போது அவைகள் ஓவிய (சித்திர எழுத்துக்கள், சித்திரம், சிந்தை > சித்தம் + திரம் > சித்திரம் = கற்பனைத்திரன் ) வடிவமாக மரப்பட்டைகள், குன்றுகள், செங்கல் ஓடுகள் ஆகியவற்றில் எழுதிவைக்கப்பட்டன, பின்னாளில் ஓலைச்சுவடியில் எழுதும் முறை ஏற்பட்ட போது ஓவிய வடிவில் எழுதுவது கடினமாக இருந்தது, எழுத்தாணி கொண்டு ஓவிய எழுத்துக்களை எழுதும் போது, சுழிகள், வளைவுள் குறுக்கே வெட்டும் போது துளையாக ஏற்பட்டு அந்த பகுதி கீழே விழுந்துவிடும், எனவே ஓவிய எழுத்துக்களை அப்படியே ஓலையில் எழுத முடியாது என்ற எழுத்துவடிவத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது மிகவும் தேவையாகிப் போனது. சீனர்கள் எழுத்தும் தற்போதைய எழுத்துக்கள் ஓவிய வடிவத்திலிருத்து கோடுகள் (ஸ்ட்ரேக்) வடிவெடுத்தது. தமிழ் போன்ற தற்போதைய எழுத்துக்களின் முதல்வடிவத்தில் எழுதப்பட்டது.இந்த வடிவம் பெரும் முன்பே மொழிகள் இலக்கண அமைப்பையும், உயிர் எழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள், இரண்டும் சேர்ந்த உயிர்மெய் எழுத்துக்கள் பிறந்துவிட்டன. அதாவது மொழி அதன் எழுத்துக்களுடன் இறுதி வடிவம் பெற்றுவிட்டது, அவற்றின் வடிவங்களில் அவ்வப்போது தேவையான மாற்றம் ஏற்பட்டது. பெரியாரின் சிந்தனைகளை ஏற்று லை, ளை, ணா, னா, றா போன்ற எழுத்துக்களும் தற்போதைய எழுத்துவடிவம் பெற்றுவிட்டன.தொடர்புடைய சுட்டிகள் :
http://www.ancientscripts.com
http://www.ancientscripts.com/chinese.html
http://www.harappa.com
http://www.harappa.com/script/diction.html

தொடரும்...

3 கருத்துகள்:

கோவி.கண்ணன் சொன்னது…

//Balachandar has left a new comment on your post "தமிழ் நெடுங்கணக்கும் அரைகுறைகளின் தப்புக் கணக்கும்...":

hello kannan,

How are you//

Fine ! thank you!!!

தறுதலை சொன்னது…

Asko Parpola முக்கியமான ஆய்வாளர்.

மலாய், பாசா இந்தோனேசியா, பாசா புருனே எல்லாம் ஒன்னுதான்.

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

கோவி.கண்ணன் சொன்னது…

//Tharuthalai said...
Asko Parpola முக்கியமான ஆய்வாளர்.

மலாய், பாசா இந்தோனேசியா, பாசா புருனே எல்லாம் ஒன்னுதான்.

------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)
//

தறுதலை சார்,

நீங்கள் சொல்வது சரிதான், அவை ஒரே மொழிப்பிரிவைச் சேர்ந்தது தான், பேசுபவர்களுக்கு அதன் வேறுபாடு தெரியும். வட்டாரவழக்கு போன்று மாறுபட்டு வழங்கும் !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்