பின்பற்றுபவர்கள்

3 ஏப்ரல், 2008

உண்மையாக இன்றோடு முடிகிறது !

பதிவர்களுக்கு வணக்கம்,

இது ஒரு என்பழங்கதை (சுயபுராணம்) விருப்பம் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதையெல்லாம் எழுதலாமா என்று சிறுதயக்கம் இருந்தது. சொன்னாலும் தப்பு இல்லை தேற்றிக் கொண்டேன், இனி உங்கள் தலையெழுத்து. மிச்சத்தையும் படிங்க. வலைப்பதிவில் எழுத ஆரம்பித்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டது, இரண்டு ஆண்டுதானா ? அப்பறம் நான் ஏன் உன்னை மூத்தப் பதிவர் என்று சொல்கிறேன் ? டிபிசிடி வியப்புடன் கேள்வி கேட்கிறான். :) ஆமாம். இரு ஆண்டுகள் தான், ஆண்டுக்கு 300 நாட்களுக்குள் மேல் வலைப்பதிவில் பங்காற்றி வருவதால் நீண்ட நாளாக எழுதுவது போன்ற நினைப்பு எனக்கும் உண்டு. சிறுவயது முதல் சிறுகதைகள், தொடர்கள், நாவல்கள் வாசிக்கும் வழக்கம் உண்டு. எழுத்தையும் எழுத்தாளர்களையும் வியப்புடன் நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அது போல் நாமும் எழுத முயற்சிப்போம் என்ற ஆசை இருக்கும். என்ன எழுதுவது என்ற திகைப்பும் வரும், அப்படியே எழுதினாலும் நம் எழுத்துக்களை வார இதழ்கள் வெளி இடுமா ? என்ற தயக்கம் இருக்கும், தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்து, அதை நான்கு பேருக்கு வாசித்துக் காட்டிவிட்டு வார இதழகளில் அனுப்புபவர்களுக்கு எழுத்து இயல்பாகிப் போகும். எழுத்தாளன் என்ற பிம்பம் மிகப் பெரியது, வாசகனுக்கு வியப்பளிப்பதால் வாசிக்கும் பலருக்குமே அது நாம் அடைய முடியாத தொலைவு என்றே நினைப்பர். வேலைக்குச் செல்ல ஆரம்பித்ததும் கிடைக்கும் இலவச நாள்குறிப்பேட்டில் (ஓசி டைரியில்) அவ்வப்போது கிறுக்கலாக கவிதைகள் எழுதி வைத்து அதை எப்போதாவது எடுத்துப் பார்பதுடன் எனது எழுத்தார்வம் ஓரிரு ஆண்டுகளில் நின்று போனது. அதன் பிறகு அரசியல் செய்திகளில் நாட்டம் கூடுதலானது.

கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பெருகிய தமிழ் இணையப்பக்கங்கள், இணைய இதழ்கள், தமிழில் தட்டச்ச இலவசமாக கிடைத்த மின்அம்பலம் என்ற மென்பொருள் எழுதும் ஆசையை மீண்டும் தூண்டிவிட்டது. மறுபடியும் என்ன எழுதுவதென்றே தயக்கம், கொஞ்ச நாள் இணையப்பக்கங்களை வாசிப்பதை பொழுதுபோக்காக்கிக் கொண்டேன். குறுநாவல், சிறுகதை படிக்கும் பழக்கம் கூட நின்றுபோனது, அரசியல் செய்திகளுக்கும் நாட்டு நடப்பையும் தெரிந்து கொள்ள இணையம் பெரிதும் உதவியது. தனக்கு ஏற்பட்ட காதல், துக்கம், பிடித்த தலைவர்களின் திடீர் மறைவு ஆகிய பாதிப்பால் திடீர் கவிஞர்கள் பிறப்பார்கள், தமிழகத்தில் சுனாமி அதுவும் எனது சொந்த ஊரில் தாக்கியபோது தொலை தேசத்தில் இருந்த என்னால் உணர்வு வசப்படுதல் என்பதைத் தவிர்த்து, அலுவலகத்தில் சுனாமி நிவாரணம் வசூலித்து செஞ்சிலுவை சங்கம் வழியாக அனுப்பி வைத்தேன். நான் +12 படிக்கும் போது தேர்வுக்கு படிக்க எப்போதும் காலையும் மாலையும் கடற்கரைக்குத்தான் செல்வேன். நான் ஓடி ஆடிய கடல்கரையில் நிகழ்ந்த அந்த சோக நிகழ்வு உண்மையில் நிலை குழைய வைத்தது. அவையெல்லாம் கண்ணீராகவும் எழுத்தாகவும் மாற முதன் முதலில் 'கடலுக்கு மடல்' என்ற ஒரு கவிதையை எழுதி திண்ணை இணைய இதழுக்கு அனுப்பினேன். அதனை வெளி இட்டார்கள். அப்பொழுதே தமிழில் பலரும் வலைப்பதிவு எழுதுவது தெரியும். நானும் எழுதலாம் என்று ஜனவரி 2005 வலைப்பதிவை திறந்தேன் (sign-up). வலைப்பதிவில் எவரும் பழக்கமில்லாததால் எழுதாமல் அப்படியே விட்டுவிட்டேன்.

அதன் பிறகு 'அப்பாவுக்கு அப்பாவாக' என்ற தலைப்பில் உரைநடை கவிதை ஒன்றை எழுதி சிங்கை தமிழ்முரசுக்கு அனுப்பினேன். அது நன்றாக இருந்ததாக படித்தவர்கள் எல்லோருமே சொன்னார்கள். பிறகு கவிதை எழுதுவது எனக்கு வருகிறது என்று நண்பர்கள் பலர் உசுப்பேற்ற நிறைய கவிதைகளை எழுதினேன். பிறகு சிறுகதைகள் எழுதினேன். அதில் சிலவற்றை தின்னை, பதிவுகள், தமிழோவியம், சிங்கை தமிழ்முரசு ஆகியவற்றிற்கு அனுப்பினேன். அப்போதும் வலையுலகில் யாருடனும் தொடர்பு கிடையாது, எப்போதாவது படிப்பதோடு சரி. பிறகு எனது தம்பியின் நண்பர் வீரமணி இளங்கோ என்ற பதிவர், நீங்கள் வலைப்பதிவில் எழுதலாம், பலரும் நண்பர்களாக கிடைப்பார்கள் என்று சொன்னார். அப்போதும் தயக்கமாக இருந்தது, வலைப்பதிவில் நேசகுமார் மற்றும் நல்லடியார் ஆகியோர் மாபெரும் வலை சொற்போர் நடத்திக் கொண்டிருந்தனர். அவற்றையெல்லாம் பார்த்து ஒரு சேர சற்று பயம்கலந்த வியப்படைந்தேன். வலைப்பதிவு எழுத்துப்பயிற்சிக்கு ஏற்ற நல்ல ஊடகம் என்று புரிந்தது. 2005ல் திறந்த வலைப்பதிவில் ஏப்ரல் 2006ல் தான் எழுதுவதற்க்காக பயன்படுத்தினேன். நல்ல தலைப்பாக வைக்கவேண்டும் என்று ஒருவாரம் யோசித்து மாறுபட்ட தலைப்பாக இருக்கட்டும் என 'காலங்கள்' என பெயரிட்டு, 'எந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும்' உள்ளடக்கப் பொருளுடன் வலைப்பதிவை எழுத தொடங்கினேன்.

************

www. thamizmanam. com to me
show details 4/7/06 Reply

fromwww. thamizmanam. com

dateFri, Apr 7, 2006 at 12:14 PM
subjectThank you for registering your BLOG with thamizmaNam | Unvalidated
hide details 4/7/06 Reply

Dear GOVIKANNAN,
உங்கள் வலைப்பதிவை தமிழ்மணம் பட்டியலில் சேர்க்கைக்கு அளித்தமைக்கு நன்றி.
உங்கள் அளிப்பு பரிசீலிக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் செயல்படுத்தப் படும்.காத்திருப்பில் உள்ள பதிவுகளின் பட்டியலை அறிந்துகொள்ள இங்கே செல்லவும்: http://www.thamizmanam.com/user_blog_status.php
சேர்க்கை பற்றி முடிவு எடுக்கப்பட்டவுடன், உங்களுக்கு மின்னஞ்சலில் அறிவிக்கப்படும்.
நன்றி.

************

எழுத ஆரம்பித்த போது எவரையும் தெரியாது, புதுப்பதிவர்களை கண்டு கொள்பவர்கள் குறைவுதான். நான் எழுத தொடங்கிய அதே காலகட்டத்தில் எழுத தொடங்கியவர்கள் ஒரு சிலர் அறிமுகமானார்கள், அதில் விஎஸ்கே அய்யா ஒருவர், மூத்தபதிவரான துளசி கோபால் அம்மா மற்றும் சிலர் பின்னூட்டம் போட்டார்கள். நானும் முடிந்த அளவுக்கு புதிய பதிவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். பிறந்த குழந்தை பேச ஆரம்பித்துவிடுமா ? எல்லோருமே முதலில் எழுதும் போது எதை எழுதுவது என்று தடுமாறுபவர்கள் தான். புதியவர்கள் அப்படி என்ன எழுதிவிடப் போகிறார்கள் என்கிற நம் மேதாவித்தனத்தில் பலர் கண்டுக் கொள்ளப்படாமல், ஆரம்ப தடுமாற்றம் புதியவர்களுக்கு வரும். புதியவர்களை வரவேற்பதில் முதலில் நிற்பவர் நம் துளசி அம்மாதான். அவருக்கு ஒரு 'ஓ'. அசராமல் அடித்து ஆடுபவரும் அம்மா மட்டுமே. பதிவர்கள் அனைவருக்கும் பின்னூட்டி ஆசிவழங்கும் நம் துளசி அம்மாவுக்கு பதிவானந்தமயி என்ற பட்டம் கொடுக்கலாம். :)

எழுத வரும் முன் ஓரளவு வலையரசியல் தெரியும் என்பதால் நான் எதை எழுதலாம் என்ற தெளிவுகிடைத்தது. எதை எழுதினாலும் எவரையும் கடிந்து பேசியோ, தூற்றிவிடக் கூடாது என்பதில் இன்று வரை உறுதியுடன் எழுதுகிறேன். புரிந்துணர்வு குறையால் சில நேரங்களில் நன்கு தெரிந்தவர்களுடன் ஒரு சில நிகழ்வுகள் நடந்ததுண்டு. அதற்கு நான் மட்டுமே பொறுப்பு அல்ல என்பது தொடர்பில் இருந்தவர்களுக்கு தெரியும். நான் எழுதியவை சமுக நடப்புகள், மூடநம்பிக்கை விழிப்புணர்வு, தமிழ் மொழி குறித்த கட்டுரைகளே மிக்கவை, அன்றைய தேதியில் இருக்கும் அரசியல் பற்றி விமர்சனம் என்ற அளவில் எழுதி இருக்கிறேன். எனது பதிவுகளைப் படிப்பவர்கள் என்னைத் கடுமையாக விமர்சித்து பின்னூட்டமிட்டாலும், எனது எழுத்தை(யும்) படித்துவிட்டு தானே விமர்சிக்கிறார் என்ற மதிப்பு விமர்சிப்பவர்கள் மீது இருப்பதால், அவற்றை தனிமனித தாக்குதல்களாக எடுத்துக் கொண்டதில்லை. எனது எண்ணங்களை பதித்து வைக்கும் களமாக மட்டுமில்லாது பல நல்ல உள்ளங்களை அடையாளம் காட்டியுள்ளதால் வலையுலகம் எனக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.

ஒவ்வொரு இடுகை எழுதி முடித்ததும், சரக்கு தீர்ந்துவிட்டது, இனி எழுத ஒன்றும் இல்லை என்று நினைப்பது என் வழக்கம். நேற்று மறைந்த சூரியன் இன்று எழுவதைப் போலவே எழுதுவதற்கு எதாவது கருப்பொருள் மறுநாள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. :)

பதிவுலகில் என்னுடன் நீண்ட நாள் பயணத்துவரும் அனைத்து வலையுலக பயணிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடனேயே சேர்ந்து வந்து கொண்டிருக்கும் வீஎஸ்கே ஐயா, ஜிராகவன் மற்றும் எனது அருமை பங்காளிக்கு(ம்) நன்றி !

வலைப்பதிவில் இன்றோடு முடிகிறது எனது இரண்டு ஆண்டுகள்.

38 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பரே!

Unknown சொன்னது…

வாழ்த்துக்கள் ...

கப்பி | Kappi சொன்னது…

வாழ்த்துக்கள்!

PAISAPOWER சொன்னது…

இன்றோடு துவங்குகிறது...ன்னு தலைப்பு போட்டிருக்கலாம்...

காலத்துக்கு துவக்கம், முடிவு இல்லை....அது தொடர்ந்து கொண்டேதானிருக்கும்....:-))

சின்னக்குட்டி சொன்னது…

வாழ்த்துக்கள்

Thekkikattan|தெகா சொன்னது…

இப்படியும் சொல்லி ஒரு பதிவு போடலாமா?

இரண்டாமான்று "காலத்திற்கு" வாழ்த்துக்கள்.

ரூபஸ் சொன்னது…

காலச்சக்கரம் தொடர்ந்து சுழலட்டும் மகிழ்வோடு..

வாழ்த்துக்கள்..

துளசி கோபால் சொன்னது…

ரெண்டுவருச'காலத்துக்கு' இந்தப் போடு போட்டா எப்படி?


ஆனந்தமில்லாத வாழ்க்கை இல்லை.

அதால்தானே பதிவானந்தமயி?

இருக்கட்டும் இருக்கட்டும்.குச் காம் கோ ஆயேகா:-))))

நான் இங்கே ரொம்ப நாளா இருக்கேனா? மார்ச் மாசத்தோடு 4 வருசமாச்சு 'எழுத' வந்து.

இரெண்டுக்கு நாலின் வாழ்த்து(க்)கள்.:-)))

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் தமிழ்ப் பணி!!

அன்புடன்,
ஜோதிபாரதி.

ஜெகதீசன் சொன்னது…

வாழ்த்துக்கள்

சிங். செயகுமார். சொன்னது…

வணக்கம் கோவி கண்ணன்! ஜூனியருக்கு எனது வாழ்த்துக்கள்! ஆமா நீங்க எங்க +12 படிச்சீங்க!?

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங். செயகுமார். said...
வணக்கம் கோவி கண்ணன்! ஜூனியருக்கு எனது வாழ்த்துக்கள்! ஆமா நீங்க எங்க +12 படிச்சீங்க!?//

சிங்.செயக்குமா சீனியர்,

நான் +2 படித்தது, விஜயலக்சுமி திரையரங்கம் அருகில் இருக்கும் புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளி. வாழ்த்துகளுக்கு நன்றி !

gulf-tamilan சொன்னது…

வாழ்த்துக்கள் !!!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//நான் +2 படித்தது, விஜயலக்சுமி திரையரங்கம் அருகில் இருக்கும் புனித அந்தோனியார் மேல்நிலை பள்ளி. வாழ்த்துகளுக்கு நன்றி !//


திரையரங்கை வைத்து பாடசாலையை அடையாளம் காட்டியது அருமை. எதோ சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது.


அன்புடன்,
ஜோதிபாரதி.

சிங். செயகுமார். சொன்னது…

இடுகையை சரி பாருங்கள் +12 = +2 ?

வடுவூர் குமார் சொன்னது…

அந்தோனியார் கொடுத்த “முத்தா”? இவர்?
வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
வாழ்த்துக்கள் நண்பரே!

12:00 AM, April 04, 2008
//
முதலில் வந்து வாழ்த்துச் சொன்ன இளாவுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//தஞ்சாவூரான் said...
வாழ்த்துக்கள் ...

12:24 AM, April 04, 2008
//

தஞ்சாவூரான் சார், மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கப்பி பய said...
வாழ்த்துக்கள்!
//

கப்பி சார்,

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//PAISAPOWER said...
இன்றோடு துவங்குகிறது...ன்னு தலைப்பு போட்டிருக்கலாம்...

காலத்துக்கு துவக்கம், முடிவு இல்லை....அது தொடர்ந்து கொண்டேதானிருக்கும்....:-))//

PAISAPOWER மிக்க நன்றி சார்,

இடுகை தலைப்பில் காலம் இல்லை.
முடிவுகள் எதற்கும் இருக்கும், தீர்வு இல்லாதவற்றிற்கு கூட தீர்வு இல்லை என்ற முடிவு இருக்கும்.

காலத்துக்கு ஆரம்பமே இல்லை முடிவேது. :)

சரியாகச் சொன்னிங்க !

கோவி.கண்ணன் சொன்னது…

// Thekkikattan|தெகா said...
இப்படியும் சொல்லி ஒரு பதிவு போடலாமா?

இரண்டாமான்று "காலத்திற்கு" வாழ்த்துக்கள்.
//

தெகா மிக்க நன்றி. உங்கள் ஆதரவுடன் காலம் சுழலும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...
காலச்சக்கரம் தொடர்ந்து சுழலட்டும் மகிழ்வோடு..

வாழ்த்துக்கள்..
//

:)

ரூப்ஸ்,
நிறைவான வாழ்த்துக்கு மிக்க நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

//சின்னக்குட்டி said...
வாழ்த்துக்கள்
//

சின்னக்குட்டி ஐயா,
மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
ரெண்டுவருச'காலத்துக்கு' இந்தப் போடு போட்டா எப்படி?


ஆனந்தமில்லாத வாழ்க்கை இல்லை.

அதால்தானே பதிவானந்தமயி?

இருக்கட்டும் இருக்கட்டும்.குச் காம் கோ ஆயேகா:-))))

நான் இங்கே ரொம்ப நாளா இருக்கேனா? மார்ச் மாசத்தோடு 4 வருசமாச்சு 'எழுத' வந்து.

இரெண்டுக்கு நாலின் வாழ்த்து(க்)கள்.:-)))
//

துளசி அம்மா,

அமிர்தாநந்தமயில் எல்லொரையும் அரவணைத்து ஆசி கொடுப்பாங்களாம், நீங்கள் பதிவர்கள் எல்லோரையும் பின்னூட்டமிட்டு ஆசி வழங்குகிறீர்கள், அதனால் தான் பதிவானந்தமயி.

நான்கு ஆண்டுகளில் 100க் கணக்கானவர்ர்களை நேரில் சந்தித்து இருக்கிறீர்கள், சாதனைதான், உங்கள் அளவுக்கு பதிவர்களை நேரடியாக சந்தித்தவர்கள் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...

திரையரங்கை வைத்து பாடசாலையை அடையாளம் காட்டியது அருமை. எதோ சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது.


அன்புடன்,
ஜோதிபாரதி.

1:01 PM, April 04, 2008
//

ஜோதி சார்,

நாகை தான் எனது ஊர், திருவாரூரில் கூட திரையரங்கம் இருக்கும் இடம் தெரியும், ங்கு பள்ளிக் கூடம் இருக்கும் இடம் தெரியாது. வெளியூர் காரர்களுக்கு திரையரங்கத்திற்கு அருகில் என்று சொல்லிவிட்டால் இடத்தை அடைவது எளிதுதானே. பொதுமக்கள் அனைவருமே அதே பள்ளியில் படித்து இருக்க மாட்டார்கள், திரையரங்கிற்கு சென்றிருப்பார்கள்.

மழைக்கு பள்ளிக் கூடம் ஒதுங்காதவர்கள் உண்டு, படம் பார்க்கப் போகாதவர்கள் உண்டோ ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

gulf-tamilan மற்றும் தம்பி ஜெகதீசன், வாழ்த்துகளுக்கு
மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
அந்தோனியார் கொடுத்த “முத்தா”? இவர்?
வாழ்த்துக்கள்.
//

குமார்,
புனித அந்தோனியார் பள்ளி கத்தோலிக்க பள்ளி, கிறித்துவராக இருந்தால் அப்பம் கிடைத்திருக்கும்.

வாழ்த்துகளுக்கு நன்றி !

நையாண்டி நைனா சொன்னது…

வணக்கம்,
இரண்டாண்டுகள்...
உங்கள் +2 படிப்பில் செலவளித்த அதே இரண்டாண்டுகள்
ஆனால் வழங்கிய அறிவும், நீங்கள் பிறருக்கு பகிர்ந்த கருத்துச் செறிவும்
அன்று நீங்கள் பெற்றதை விட மிக அதிகம், உண்மை தானே?

பதிவு, பதிவு என்று நீங்கள் பதிந்த முத்துககளெல்லாம் என்றும் ஜொலிக்கும்,

சிந்தனைகளை சீர் தூக்கி,
எழுதுகோலை ஏர் ஆக்கி,
மக்களின் மனக்கேணி யை தூர்வாரி,
கருத்து பயிரிட்டு,
வளமான எதிர்"காலத்தை" நோக்கி
உங்கள் "காலமும்"..
உங்கள் பின்னே வரும் எங்கள் காலமும்
பொற்காலமாய்....வர

இந்த நையாண்டி நைனாவின் ஆசை.
( வாழ்த்த வயதில்லை என்ற பழைய சம்பிரதாயத்தை நீக்கும் முகமாக )

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
வணக்கம்,
இரண்டாண்டுகள்...
உங்கள் +2 படிப்பில் செலவளித்த அதே இரண்டாண்டுகள்
ஆனால் வழங்கிய அறிவும், நீங்கள் பிறருக்கு பகிர்ந்த கருத்துச் செறிவும்
அன்று நீங்கள் பெற்றதை விட மிக அதிகம், உண்மை தானே?

பதிவு, பதிவு என்று நீங்கள் பதிந்த முத்துககளெல்லாம் என்றும் ஜொலிக்கும்,

சிந்தனைகளை சீர் தூக்கி,
எழுதுகோலை ஏர் ஆக்கி,
மக்களின் மனக்கேணி யை தூர்வாரி,
கருத்து பயிரிட்டு,
வளமான எதிர்"காலத்தை" நோக்கி
உங்கள் "காலமும்"..
உங்கள் பின்னே வரும் எங்கள் காலமும்
பொற்காலமாய்....வர

இந்த நையாண்டி நைனாவின் ஆசை.
( வாழ்த்த வயதில்லை என்ற பழைய சம்பிரதாயத்தை நீக்கும் முகமாக )
//

நைனா,

உங்கள் வாழ்த்து நெகிழ்ச்சி அளிக்கிறது ! நையாண்டி இல்லையே ?
:)

2 ஆண்டுகளில் படித்ததும் அதிகம், முடிந்த அளவுக்கு எழுதி இருக்கிறேன். இதனால் பதிவு தவிர பிற வேளைகளில் பயன்படுத்திய நேரம் குறைவு.

பாடம் "கற்றதும்", பட்டம் "பெற்றதும்" உபரியாக கிடைத்த லாபம் !
:)

நீங்கள் கவிதை(யும்) எழுதுவிங்களா ?

TBCD சொன்னது…

வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

இரண்டு வருடம் பழம் தின்னு கொட்டைப் போட்டவங்க நிறைய பேர் இருப்பாங்க.

ஆனா, தொடர்ச்சியா எழுதுயிருக்கீங்க என்றே அறிகிறேன்...

அதுவும் வாழ்த்துக்குரியதே..என் வாழ்த்துக்கள்

மூத்தப் பதிவர் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருக்கீங்க.... :P

ஜெகதீசன் சொன்னது…

உங்க பங்காளி யாரு?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
உங்க பங்காளி யாரு?
//

ஊடலானாலும், என்னை யார் நினைத்துக் கொண்டே இருக்கிறாரோ, நான் யாரை நினைத்துக் கொண்டே இருக்கிரேனோ அவர் தான் என் பங்காளி. இன்பேக்ட் அவர் சொல்லித்தான் நான் அவரது பங்காளி என்றே தெரியும். அது எனக்கு(ம்) பிடிச்சிருக்கு, தொலைவில் இருந்தால் வெப்பம் கூட இதமானதுதான். இது எனக்கும் பொருந்தும்.

ஜெகதீசன் சொன்னது…

////
//ஜெகதீசன் said...
உங்க பங்காளி யாரு?
//

ஊடலானாலும், என்னை யார் நினைத்துக் கொண்டே இருக்கிறாரோ, நான் யாரை நினைத்துக் கொண்டே இருக்கிரேனோ அவர் தான் என் பங்காளி. இன்பேக்ட் அவர் சொல்லித்தான் நான் அவரது பங்காளி என்றே தெரியும். அது எனக்கு(ம்) பிடிச்சிருக்கு, தொலைவில் இருந்தால் வெப்பம் கூட இதமானதுதான். இது எனக்கும் பொருந்தும்.
////

இதெல்லாம் ரெம்ப ஓவரு.... யாருன்னு கேட்டா பெயரைச் சொல்லனும்... அதை விட்டுட்டு இப்படி புதசெவி போடுற அளவு குழப்பக் கூடாது.... :P

ரூபஸ் சொன்னது…

சகோதரரே.. நீங்கள் நாகையைச் சேர்ந்தவரா, இப்போதுதான் எனக்கு தெரியும். நான் வேளாங்கண்ணியைச்சேர்ந்தவன். புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் எனது சகோதரர் ஒருவர் ஆசிரியராகப் பணியாற்றினார். புஷ்பராஜ் என்பது அவர் பெயர். ஞாபகமிருக்கிறதா??

கோவி.கண்ணன் சொன்னது…

//ரூபஸ் said...
சகோதரரே.. நீங்கள் நாகையைச் சேர்ந்தவரா, இப்போதுதான் எனக்கு தெரியும். நான் வேளாங்கண்ணியைச்சேர்ந்தவன். புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் எனது சகோதரர் ஒருவர் ஆசிரியராகப் பணியாற்றினார். புஷ்பராஜ் என்பது அவர் பெயர். ஞாபகமிருக்கிறதா??
//
ரூபஸ்,

நாகையைச் சேர்ந்தவன் தான். நாம ஒரே மாவட்டம் :)

அந்தோனியார் பள்ளியில் நான் படித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது, நீங்கள் சொல்லூம் ஆசிரியருக்கு என்னைவிட வயது குறைவாகவே இருக்கும் என நினைக்கிறேன். :)

RATHNESH சொன்னது…

இந்தப் பதிவுக்கு வாழ்த்துப் பின்னூட்டம் இட இரண்டுநாட்கள் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். (மூச்சுவிடக் கிடைக்கும் இடைவெளிகளில் மட்டுமே இங்கே வர முடிகிறது!)

இரண்டு ஆண்டுகள் எல்லாம் உங்கள் வேகத்துக்கும் தாகத்துக்கும் ஒரு மைல்கல்லே அல்ல.

வாழ்க. தொடர்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
இந்தப் பதிவுக்கு வாழ்த்துப் பின்னூட்டம் இட இரண்டுநாட்கள் ஆனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். (மூச்சுவிடக் கிடைக்கும் இடைவெளிகளில் மட்டுமே இங்கே வர முடிகிறது!)

இரண்டு ஆண்டுகள் எல்லாம் உங்கள் வேகத்துக்கும் தாகத்துக்கும் ஒரு மைல்கல்லே அல்ல.

வாழ்க. தொடர்க.
//

RATHNESH அண்ணா,

எனது எழுத்துக்களின் தரம் மேம்பட்டு இருப்பதற்கும், எழுதும் கருப்பொருளை நான் தேர்ந்தெடுப்பதற்கு உங்கள் எழுத்தும், எனக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் காரணம் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிதான்.

உற்சாகமூட்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

இரண்டு வருடம் பழம் தின்னு கொட்டைப் போட்டவங்க நிறைய பேர் இருப்பாங்க.

ஆனா, தொடர்ச்சியா எழுதுயிருக்கீங்க என்றே அறிகிறேன்...

அதுவும் வாழ்த்துக்குரியதே..என் வாழ்த்துக்கள்

மூத்தப் பதிவர் என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியிருக்கீங்க.... :P
//

டிபிசிடி ஐயா,

நீங்களும் தொடர்சியாக பாராட்டியே வந்திருக்கிறீர்கள், உங்களது நட்பும் நெருக்கமும் போற்றத்தக்கது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்