பின்பற்றுபவர்கள்

5 ஏப்ரல், 2008

அவன் என் குழந்தை ! (சிறுகதை)

"சேகர், நான் உங்களை உயிருக்குயிராய் நேசிக்கிறேன், அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்"

"பிறகு, இப்படி பேசுவது என்ன ஞாயம் ?"

"பேசுவது ஞாயம் பற்றி அல்ல, என்னோட வாழ்க்கையில் அநியாயம் நிகழ்ந்துவிடக் கூடாது "

"இவ்வளவு தானா உன்னோட முடிவு ?"

"என்னை விட்டுடுங்க சேகர், நான் காதலிக்க ஆரம்பித்த போது, உங்க வீட்டில் இப்படி ஒரு பிரச்சனை இருப்பது எனக்கு தெரியாது"

"இதெல்லாம் சொல்லிவிட்டுத்தான் காதல் வந்திருக்கனுமா ?"

"இதெல்லாம் வச்சிக்கிட்டு உங்களுக்கு காதலே வந்திருக்கக் கூடாது !"

அவமானத்தில் மவுனமானான்

"மூளை வளர்ச்சி இல்லாத அண்ணன் உங்களுக்கு இருப்பது என்னுடைய குறையா ?"

"எங்க வீட்டில் அண்ணன் ஒரு குழந்தை மாதிரிதான்"

"எனக்கு சரிவராது சேகர், உங்களை கல்யாணம் செய்துகொண்டு அதையும் தலையில் சுமக்கனும் ?"

"........."

"வீடுமுழுவது எச்சில், காக்கா வலிப்பு, மூத்திர வாடை என்னால் அந்த சூழலுக்கெல்லாம் தயார்படுத்திக் கொள்ளமுடியாது"

"நித்யா, நாம வேண்டுமானால் அண்ணனை எதாவது பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டுடுவோம்"

"ம் ஈசியாக சொல்லுவிங்க, நான் வந்துதான் அதை துறத்தியதாக கெட்ட பெயருடனும், குற்ற உணர்வு, அருவெறுப்பு என்றெல்லாம் என்னால் வாழ்க்கை நடத்த முடியாது சேகர்"

"நான் என்ன செய்யனும்"

"மனசுக்கு கஷ்டம் சில நாட்கள் இருக்கும், அதை தாங்கிக்குவோம், நாம பிரிஞ்சிடுவோம்"

அதன் பிறகு பேசிக் கொள்ளாமல் எழுந்து வேறு வேறு திசைகளில் சென்றுவிட்டனர்.

*****

அண்மையில் சேகரின், மூளை வளர்ச்சி குறைந்த அண்ணன் இறந்துவிட்டதாக கேள்விபட்டு இருந்தாள் நித்யா.

"மிஸ் நித்யா....இது அதிர்ச்சியனது தான், மாற்றுவழி இருக்கு"

சேகர் பற்றிய நினைவுக்கு செல்ல வைத்த அதே டாக்டரின் குரல் தான், மீண்டும் சேகரைப் பற்றிய நினைவில் இருந்து மீட்டது

நித்யா குழப்பமும் அதிர்ச்சியும் இன்னும் நீங்காமல் தன் கணவர் மாதவனைப் பார்த்தாள்

"சொல்லுங்க டாக்டர்" என்றார் மாதவன்

"பிறக்கும் குழந்தைகளுக்கு டவுன் சிண்டரம் இருக்கிறதா என்று பார்ப்பது எப்போதும், நல்லதுதான்"

"..........."

மேலும் தொடர்ந்தார்

"இப்ப கரு உருவாகி நான்கு மாதம் தான் ஆகிறது, டவுன் சின்டரம் இருப்பது தெரிந்துவிட்டது"

".........."

"நீங்கள் இருவரும் விரும்பினால், கருவை அபார்சன் பண்ணிக் கொள்ளலாம், கொஞ்சம் ஆபத்தானது பார்த்து செய்யமுடியும்"


".........."

மாதவன் எதோ பேச வருமுன்,

"அடுத்து பிறக்கும் குழந்தைக்கும் இது போல் ஆகுமா என்று பலரும் கேட்கிறாங்க, அப்படியெல்லாம் ஆகாது என்று சொல்லிவிட முடியாது"

மாதவன் நித்யாவைப் பார்த்தார்

நித்யா தீர்க்கமான முடிவுடன்,

"டாக்டர் எங்களுக்கு கல்யாணம் ஆகி 7 வருடம் ஆகி குழந்தையே இல்லை, அதனால் நாங்கள் இதை இழக்க விரும்பல"

மாதவன் மனதில் கலக்கம் இருந்தாலும் நித்யா சொல்வது சரி என்பது போல் எதுவும் பேசாதிருந்தார்

"மாதவன், உங்களுக்கு எதும் ?"

"ஜீரணிக்க கஷ்டமாகத்தான், இருக்கு, இருந்தாலும் இது எங்கள் குழந்தை, இதுக்கும் மேல் சொல்ல ஒன்றும் இல்லை"

"நமக்கு என்ன கிடைக்கும் என்பதை நம்மால் தீர்மாணிக்க முடியாது என்பதை உணர்ந்து விட்டேன், நான் இந்த குழந்தையை பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்" தீர்கமான முடிவைச் சொல்லிவிட்டு விடைபெற்றார்கள்.

நித்யாவுக்கு கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"பொறுப்பானவர்களுக்குத்தான் இந்த பரி(ட்)சை கடவுள் கொடுக்கிறார் போல் இருக்கிறது" மாதவன் ஆறுதலாக சொல்லும் போது, மீண்டும் சேகரின் அண்ணனின் நினைவு வர, மாதவனின் கைகளை கண்ணீருடன் பற்றிக் கொண்டாள் நித்யா

*********

இப்படியே கதையை முடித்துவிட்டால் நீதிக்கதையாக போய்விடும். இன்னும் கொஞ்சம் தொடருகிறேன். பிடித்து இருக்கான்னு சொல்லுங்க.

*********

விசும்பல் சத்ததில் விழித்துக் கொண்ட நித்யாவின் அம்மா,

"நித்யா.... எழுந்திரு...இது என்ன கண்ணீரால் தலையணையே ஈரமாகி இருக்கிறது"

தூக்கத்தில் இருந்து விழித்த நித்யாவுக்கு 'எல்லாம் வெறும் கனவா ?' என்ற வியப்பாக இருந்தது, 'அப்போ மாதவன், ஏழுவருட வாழ்கை, வயிற்றில் குழந்தை எல்லாம் கனவா ?'

அவளை சமாதானப் படுத்தும் விதமாக,

"நீ சாயங்காலம் வீட்டுக்கு வரும் முன் சேகர் தம்பி போன் பண்ணியது, வீட்டுக்கு வந்திட்டியா என்று கேட்டு கொஞ்சம் பதட்டமாக பேசியது, உங்க இரண்டு பேருக்கும் பிரச்சனை ஆகி இருக்கிறது என்று தெரிகிறது"

"...." நித்யா அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்

"நீ ராத்திரி சாப்பாடு கூட வேண்டாம் என்று அப்படியே தூங்கிவிட்டாய் நாளைக்கு சொல்லலாம் என்றிருந்தேன்"

கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்த முகத்துக்கு மாறிய நித்யாவிடம்

"உங்க இரண்டு பேருக்கும் என்ன தான் பிரச்சனை, இரண்டு வீட்டிலும் சரி என்று தானே சொல்கிறோம்"

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா"

"சரி, காலையில் பேசிக் கொள்ளலாம், முடிஞ்சா சாப்பிட்டுவிட்டு படு"

'நான் செய்த தவறும், எனது சுயநலமும், அது ஞாயமற்றது என்ற உணர்வும் சேர்ந்த எனது மனக்குழப்பமே கனவாக வந்திருக்கிறது, சேகரிடம் அவ்வாறு பேசியது தவறுதான், நாளைக்கு முதல் வேளையாக மன்னிப்பு கேட்டுவிட்டு கல்யாணத்துக்கு தேதி பார்க்கச் சொல்லிவிட வேண்டியதுதான். சேகரின் அண்ணன்...அவன் என் முதல் குழந்தை' நினைக்கும் போது மனசு நிறையவே சலனங்கள் அடங்கியதால், கனவற்ற ஆழ்நிலையில் அப்படியே தூங்கிப் போனாள் நித்யா

9 கருத்துகள்:

Nimal சொன்னது…

நீதிக்கதையை தொடர்ந்த முடிவும் மிக நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்...!

Unknown சொன்னது…

//இப்படியே கதையை முடித்துவிட்டால் நீதிக்கதையாக போய்விடும். இன்னும் கொஞ்சம் தொடருகிறேன். பிடித்து இருக்கான்னு சொல்லுங்க.//

இப்போதும் நீதிக்கதைதான்.
மனதுக்குப் பிடித்திருக்கிறது.
அருமை ஜிகே.

கோவி.கண்ணன் சொன்னது…

//நிமல்/NiMaL said...
நீதிக்கதையை தொடர்ந்த முடிவும் மிக நன்றாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்...!
//

நிமல்,

பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

// சுல்தான் said...


இப்போதும் நீதிக்கதைதான்.
மனதுக்குப் பிடித்திருக்கிறது.
அருமை ஜிகே.

7:42 PM, April 05, 2008
//

சுல்தான் ஐயா,

எழுதி முடித்தபோது நீதிக்கதையுடன் தான் முடித்தேன். பெண்கள் சுயநலவாதிகள் என்ற சிந்தனையையும் விதைத்துவிடும் அபாயம் இருந்ததால் கொஞ்சம் நீட்சி கொடுக்க வேண்டியதாயிற்று.

உங்கள் பாராட்டு (எப்போதும்) மனமகிழ்ச்சியை தருகிறது !

மிக்க நன்றி ஐயா !

TBCD சொன்னது…

இந்த கதையின் நாயகி, அந்த அண்ணனை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்..

அவள் வேண்டாம் என்றுச் சொன்னால், அவளுக்கு உடற்குறைவுடன் குழந்தை உருவாகும் என்று பயத்தைக் கொடுப்பது நியாயமா.

சுத்த ஆணாதிக்கவாதக் கதை..

என் கண்டனங்கள்.......

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இந்த கதையின் நாயகி, அந்த அண்ணனை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்..

அவள் வேண்டாம் என்றுச் சொன்னால், அவளுக்கு உடற்குறைவுடன் குழந்தை உருவாகும் என்று பயத்தைக் கொடுப்பது நியாயமா.

சுத்த ஆணாதிக்கவாதக் கதை..

என் கண்டனங்கள்.......
//

டிபிசிடி ஐயா,
ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் பற்றிய கதை அல்ல. மனவளர்ச்சி குன்றியவர்களை காக்கும் பொறுப்பு பற்றியது.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
இந்த கதையின் நாயகி, அந்த அண்ணனை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும்..

அவள் வேண்டாம் என்றுச் சொன்னால், அவளுக்கு உடற்குறைவுடன் குழந்தை உருவாகும் என்று பயத்தைக் கொடுப்பது நியாயமா.

சுத்த ஆணாதிக்கவாதக் கதை..

என் கண்டனங்கள்.......
//

டிபிசிடி ஐயா,
ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் பற்றிய கதை அல்ல. மனவளர்ச்சி குன்றியவர்களை காக்கும் பொறுப்பு பற்றியது. கதையில் ஏற்பது குறித்து கூட காதலனின் கருத்தைச் சொல்லி இருக்கிறேன்.

TBCD சொன்னது…

முதலில் மனவளர்ச்சி குன்றியவர்களை வைத்து இப்படி, உணர்ச்சி விளையாட்டுகள் தேவையற்றது.

இதன் மூலம், நான் அவர்களை புறக்க்கனிக்கிறேன் என்றோ, அவர்களை ஆதரிக்கவில்லை என்றோ சொல்லவில்லை.

பெற்றவர்களுக்கு கடமை, அன்பு, போன்றவைகள் இருக்கிறது. புதிதாக வரும் பெண்ணிற்கு ஏன் அந்த கடமை, வலுவில் கொடுக்கப்பட வேண்டும்.

அது சரியா....

அப்படி, அவளுக்கு விருப்பமில்லாத ஒன்றை, கடவுள் பெயரைச் சொல்லி, வயிறு வளர்க்கும் வீணர்கள் போல், நீ இப்படி செய்யாவிட்டால், கெட்டது தன் நடக்கும் என்று மிரட்டலாமா.

அப்படி என்றால், கொலைகாரர்களை (நல்லது என்றுக் கருதப்படுவதை செய்யாதவர்கள்) ஏவியவர்கள் முதலமைச்சராக இருக்க முடியும்மா..

எனக்கு இந்தக் கதையில் உடன்பாடில்லை...

இந்தக் கதையில் இந்த மாதிரி பாடங்கள் தென் படலாம.

1. காதலனுக்கு 10 அதிக கவனம் செலுத்தப்பட வேண்டிய உடன் பிறந்தோர் இருந்தாலும், பெண் ஏற்றே ஆக வேண்டும்

2. முடியாது என்றுச் சொன்னால், அந்தப் பெண் சாபத்துக்குள்ளாவாள்.

3. பிறக்கும் குழந்தை, அவள் தவிர்க்க எண்ணியவர்களைப் போன்றே பிறக்கும்

இத்யாதி, இத்யாதி.....

வினை விதைத்தவன் என்பது எல்லாம் சரி...

ஏற்றுக் கொள்வது நல்ல செயல்..

ஏற்றுக் கொள்ளாமல் இருப்பது கெட்ட செயலும் அல்லவே...

தவறிழைக்காத அந்தப் பெண்ணை குற்றவாளிக் கூண்டில் (கனவில்) நிறுத்துவது தவறில்லையா..

//
கோவி.கண்ணன் said...
டிபிசிடி ஐயா,
ஆணாதிக்கம் பெண் ஆதிக்கம் பற்றிய கதை அல்ல. மனவளர்ச்சி குன்றியவர்களை காக்கும் பொறுப்பு பற்றியது. கதையில் ஏற்பது குறித்து கூட காதலனின் கருத்தைச் சொல்லி இருக்கிறேன்.
//

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
முதலில் மனவளர்ச்சி குன்றியவர்களை வைத்து இப்படி, உணர்ச்சி விளையாட்டுகள் தேவையற்றது.

இதன் மூலம், நான் அவர்களை புறக்க்கனிக்கிறேன் என்றோ, அவர்களை ஆதரிக்கவில்லை என்றோ சொல்லவில்லை.

பெற்றவர்களுக்கு கடமை, அன்பு, போன்றவைகள் இருக்கிறது. புதிதாக வரும் பெண்ணிற்கு ஏன் அந்த கடமை, வலுவில் கொடுக்கப்பட வேண்டும்.

அது சரியா....

அப்படி, அவளுக்கு விருப்பமில்லாத ஒன்றை, கடவுள் பெயரைச் சொல்லி, வயிறு வளர்க்கும் வீணர்கள் போல், நீ இப்படி செய்யாவிட்டால், கெட்டது தன் நடக்கும் என்று மிரட்டலாமா.
//


டிபிசிடி ஐயா,

இதில் உணர்ச்சி வசப்பட ஒன்றுமே இல்லை. ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூட அழுத்தமாக சொல்லவில்லை. நான் நேரடியாக நண்பர் குடும்பத்தில் மனநலம் குன்றிய வயது வந்த பெண்ணை பெற்றோருக்கு பிறகு யார் பார்த்துக் கொள்வது என்பதில் இருந்த சிக்கலைப் பார்த்து இருக்கிறேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்