பின்பற்றுபவர்கள்

10 ஏப்ரல், 2008

பேரரசன் நீ, குறுநில மன்னன் நான் !

வழக்கமாக குறளோவியத்திற்கு உரை எழுதும் வடிவில் திமுக - காங்கிரஸ் உறவு வெறும் கொள்கை கூட்டணி அரசியல் உறவல்ல அதையும் தாண்டி புனிதமானது, புனிதமானது என்கிறார் கலைஞர். தமிழகத்தில் கூட்டணி அரசு என்ற கொள்கையை கையில் எடுத்துக் கொண்டு இளங்கோவன் போன்றவர்கள் அமைச்சர் அவையில் இடம் கேட்காதவரையிலும், கலைஞர் சொல்லும் திமுக நடுவன் அமைச்சர்களை நீக்கவோ, சேர்க்கவோ செய்தால் காங்கிரஸ் உறவு புனிதமான உறவுதான்.

சோனியா அம்மையார், கலைஞரை 'பாதர்' பாதர்' என்று மட்டும் அழைக்காமல், கனிமொழியை தனது தங்கையாகவே நினைத்து மேலவை என்ன அமைச்சரவையில் இடம் கொடுக்கலாம் என்பதால் கலைஞரின் சொல்லும வெறும் அரசியல் உறவல்ல என்பதையே காட்டுகிறது. கலைஞர் ஒகனேகல் பற்றி திடீர் முடிவு எடுத்ததும் கூட, கர்நாடக மாநிலத்தில் ஆட்சி அமைக்க நினைக்கும் காங்கிரசுக்கு கலைஞர் கொடுத்த 'கை' - இதுவும் அரசியல் தாண்டிய இணக்க உறவையே காட்டுகிறது.

இதெல்லாம் விடக் கூத்து காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் போதெல்லாம் ஹனீபாவின் கரகரப்பிரியா குரலில், டி ராஜேந்தர் எழுதிய 'பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே அஞ்சாமல் இருந்தாது யாரு ?' என்ற பாடலில் மிசா காலத்தில் அதே காங்கிராசாரிடம் அடி உதைப்பட்டதை சொல்லிக் காட்டி ஓட்டுக் கேட்க முடிகிறதென்று தெரியவில்லை. எனக்கு புரியவில்லை. கூட்டணி கட்சி முன்பு செய்த கொடுமைகளை சொல்லிக் காட்டிக் கொண்டே ஓட்டுக் கேட்பது கூச்சமாக இருக்காதா ?

கூட்டணி கட்சிகளை ஜெ புகழாமலேயே கெடுப்பார். கலைஞரின் புகழ்ச்சி அரசியல் தான் கூட்டணி நாகரீகம் என்ற இலக்கணம் ஆகிவிடும் போல் இருக்கிறது. இது போல் இராமதாஸ் ஐயா பேசுவதில்லை என்பதால் தான் அடிக்கடி கலைஞர் அவர் மீது ஆவேசம் அடைக்கிறார் என நினைக்கிறேன்.

ஒகனேகல் விவகாரத்தில் கலைஞரின் வலியுறுத்தலுக்கு நடுவன் அரசான காங்கிரஸ் என்ன பதில் அளீத்தது என்று சொல்லாமல், நெடுஞ்சாலை வளர்ச்சி பணிகளுக்கு தமிழகத்துக்கு எத்தனை கோடி ஒதுக்கியது என்பதைத் தான் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்கிறார்களா ?

அந்த காலத்தில் இராஜாக்களை புகழ்ந்து பாடி புலவர்கள் பரிசு பெற்றுக் கொள்வது போலவே காங்கிரசையும், சோனியா அம்மாவையும் வானளவில் புகழ்ந்து பாடி தமிழ்நாட்டுக்கு நலனுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார் கலைஞர் ஆகிய முதல்வர் கவிஞர் கருணாநிதி.

ஈரோட்டு இளங்கோவன் அமைதியாக இருக்கும் வரை திமுக - காங்கிரஸ் வெறும் அரசியல் உறவல்ல நிஜம் என்றே தொடரும்.

எல்லாம் (தம்)மக்கள் நலனுக்காகத்தான்.

8 கருத்துகள்:

TBCD சொன்னது…

என்ன சொல்லுறீங்க..ளங்கோவனுக்கு இதயத்திலே இடம் கொடுக்கும் போது, அதை விட்டு,அற்ப அமைச்சர் பதிவியயையாஅ கேட்க முடியும்..

TBCD சொன்னது…

:)

(வி.போ)

மோகன் கந்தசாமி சொன்னது…

கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது கூட்டணியை விட்டு கடைசி நிமிஷம் மதிமுக வெளியேறிய பின் திமுக அந்த 23 இடங்களை கூட்டணிக்கு பிரித்து கொடுத்தது. திமுக ஒரு இடத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை. அப்போதே திமுக கூட்டணி கட்சிகளிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டது, தனிப்பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலையில் நிபந்தனையற்ற ஆதரவு தரவேண்டும், குடைச்சல் கொடுக்க கூடாது என்று. இப்போது ஆட்சியில் பங்கு கேட்பவர்கள் அந்த எக்ஸ்ட்ரா தொகுதிகள் வேண்டாம், ஆட்சியில் பங்குதான் வேண்டும் என கேட்டிருக்கலாம் தானே? எல்லாம் அரசியல் என்கிறபோது வெற்றுபுகழ்ச்சியும் அதன் ஒரு அங்கம் தான். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம், தப்பில்லை.

மோகன் கந்தசாமி

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கலைஞர் சோனியாவைப் புகழ்வது என்பது அவர் கவிஞராக, புலவராக இருப்பதால் கூட இருக்கலாம். ஆனால், எந்தக் கொள்கை அவரை சிறு வயதில் அரசியலுக்கு வர தூண்டியதோ அந்தக் கொள்கைக்கு முரணானது.

அதேபோல் திரு.இளங்கோவன், திரு.மணிசங்கர் அய்யர், திரு.சுப்பிரமணிய சுவாமி, திரு.துக்ளக் சோ, திரு இந்து என்.இராம் போன்றவர்களால் தமிழர்களுக்கு எவ்வளவு தீமை, இவர்கள் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை உண்மையான தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதைப் பரப்புகிறார்கள். இவர்களையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தமிழன் ஆடும் வரை உருப்பட வழி இல்லை.
அழகுதமிழில் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்களும் (சிலர் மட்டும்) தமிழர்களுக்கு விரோதமாக நடந்துகொள்வதைப் பார்த்திருக்கிறோம்.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது கலைஞர் முன்பு அடிக்கடி சொன்னது. தமிழகத்திலும் வடக்கு தெற்கு அவர் ஆட்சியில் இருக்கும் காலங்களிலும் இருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்தால் நல்லது.

அன்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//Mohan Kandasamy said...
கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது கூட்டணியை விட்டு கடைசி நிமிஷம் மதிமுக
//

மோகன்,

கூட்டணி ஒப்பந்தம் கட்டுக்கோப்பாக இருக்கு காட்ட எதிர்கட்சிக்கு கொடுக்கும் சமிஞ்ஞை (சிக்னல்) மாதிரி தெரியுது.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
என்ன சொல்லுறீங்க..ளங்கோவனுக்கு இதயத்திலே இடம் கொடுக்கும் போது, அதை விட்டு,அற்ப அமைச்சர் பதிவியயையாஅ கேட்க முடியும்..

5:09 PM, April 10, 2008
//

டிபிசிடி ஐயா,

அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம் இருப்பதால் எல்லோருக்கும் தாரள இடம் கொடுக்கிறார் போல இருக்கு.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிபாரதி said...
கலைஞர் சோனியாவைப் புகழ்வது என்பது அவர் கவிஞராக, புலவராக இருப்பதால் கூட இருக்கலாம். ஆனால், எந்தக் கொள்கை அவரை சிறு வயதில் அரசியலுக்கு வர தூண்டியதோ அந்தக் கொள்கைக்கு முரணானது.

அதேபோல் திரு.இளங்கோவன், திரு.மணிசங்கர் அய்யர், திரு.சுப்பிரமணிய சுவாமி, திரு.துக்ளக் சோ, திரு இந்து என்.இராம் போன்றவர்களால் தமிழர்களுக்கு எவ்வளவு தீமை, இவர்கள் தமிழர்களுக்கு என்ன செய்தார்கள் என்பதை உண்மையான தமிழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எதைப் பரப்புகிறார்கள். இவர்களையெல்லாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தமிழன் ஆடும் வரை உருப்பட வழி இல்லை.
அழகுதமிழில் பேசுகிறவர்கள், எழுதுகிறவர்களும் (சிலர் மட்டும்) தமிழர்களுக்கு விரோதமாக நடந்துகொள்வதைப் பார்த்திருக்கிறோம்.
வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது கலைஞர் முன்பு அடிக்கடி சொன்னது. தமிழகத்திலும் வடக்கு தெற்கு அவர் ஆட்சியில் இருக்கும் காலங்களிலும் இருக்கிறது என்பது அவருக்குத் தெரிந்தால் நல்லது.

அன்புடன்,
ஜோதிபாரதி.
//

ஜோதி,
நான் ஊசி பட்டாசுக்கு கொளுத்த தீக்குச்சி உறசினால் அங்கே வந்து அனுகுண்டை பத்த வக்கிறீங்களே !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
:)

(வி.போ
//

தன்னைப்பற்றிய (ப்ரொபைல்) படத்தில் பில்லா மாறியதற்கு காரணம் என்ன ?

எதாவது சிறப்புக்காரணம் உள்ளதா ?

புதசெவி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை

"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்