பின்பற்றுபவர்கள்

28 பிப்ரவரி, 2008

கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது...!

"கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது" என்று எனது நண்பர் திரு ரத்னேஷ் அவர்கள் எனக்கு மின் அஞ்சல் செய்திருந்தார். அவரது சொல் எனது 'காலங்கள்' பக்கத்தில் 2008ல் இந்த ஆண்டிற்காகமட்டும் பலிக்கிறதா என்று பார்க்கிறேன். மனக்கட்டுப்பாடு இருக்கவேண்டும். முயற்சி செய்கிறேன். மற்றபடி இதுதான் கடைசி பதிவு என்று உதார் விடுபவர்கள் சிரிப்பையே வரவழைப்பவர்கள்.

யார் யாரோ சுய அரசியலுக்கு என்னைப் பலிகடாவாக ஆக்கி, போலிக்கு கையாள், அடியாள் இன்னும் எத்தனையோ இட்டுக்கட்டுக்களை அள்ளிவிதைத்துச் சென்றார்கள். யார் யார் எப்படி என்று தெரிந்தாலும் அவற்றையெல்லாம் வெளியில் சொல்வதனால் எந்த பயனும் இல்லை. நான் அவர்களின் அரசியலுக்கு பயன்பட்டு இருக்கிறேன் என்று அவர்கள் நினைத்து இருந்து பயன்பட்டு இருந்ததால் மகிழ்ச்சியே. 'தேளுக்கு கொட்டும் குணமாம், எனக்கு காப்பாற்றும் குணம்' என்றார் ஒருமுனிவர். அந்த அளவுக்கு சரியாக இருந்தேனா என்பது நான் சிறிது உணர்ச்சி வசப்பட்டு எதிர்வினையாற்றியதால் எனக்கே சந்தேகம் இருக்கிறது.

போலியும் நண்பர் மூர்த்தியும் ஒன்று என்று தெரிந்தவர்கள் அவரிடம் நேரிடையாகவே முட்டிக் கொள்ளுங்கள். என்னிடம் முட்டை கொடுக்கவேண்டாம். எனக்கு தேவையற்றதும் கூட. நான் அவருக்கு எங்கேயும் எப்போதும் சான்றிதழ் கொடுக்கவில்லை. எனது சான்றிதழ் தேவையற்றதும் கூட. மற்றபடி வேறு விசயங்கள் எவரும் என்னுடன் உரையாட வந்தால் கண்டிப்பாக பேசுவேன்.

மூர்த்தி / விடாது கருப்பு தொடர்பில் எனக்கு இருவரின் நட்புகள் பாதிக்கப்பட்டது ஒருவர் குழலி, மற்றவர் குமரன். மற்றவர்களுடன் நான் பழகியதில்லை என்பதால் அவர்கள் என்னைப் பற்றி தூற்றியதற்காக எதிர்வினை ஆற்றவில்லை. "கேள்விக் கனைகளை தாக்கு பிடிக்காமல் கருத்து கந்தசாமி தப்பி ஓட்டம்" என்றே எழுதிக் கொண்டு மீண்டும் பதிவுலகில் முகம் காட்ட அவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும். எனது பதிவுகளில் 'மஞ்ச துண்டு ' போடும்... ஜயராமன் என்றே விழித்து அழைக்கும் 'பாலா' கூட அவர்களது அவதூறுகளுக்கு பின்னூட்டம் போடாததும் அவர்களுக்கு அவர்களே பின்னூட்டம் போட்டுக் கொண்டதும் எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. :) அவருக்கு தொலைபேசி செய்தாவது வரவழையுங்கள். :)


மூவாண்டுகள் பதிவு எழுதியதில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனது நன்றி. குறிப்பாக பதிவர் வீஎஸ்கே ஐயா, மகேந்திரன், டிபிசிடி , ரத்னேஷ், சிவபாலன்,ஜெகதீசன், பாரி அரசு, ஆகியோரை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் நான் பதிவெழுதும் 'காலங்களில்' வந்திருக்காவிட்டால் தொடர்ந்து இயங்கி இருப்பேனா என்பதே சந்தேகம். எனது கூகுள் சாட் லிஸ்டில் இருந்து தொடர்ந்து என்னுடன் உரையாடும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து எழுதியது மிகுந்த அயர்ச்சியைக் கொடுத்துவிட்டது. மீண்டும் 2009ல் எழுதவருவேன். அதற்குள் நல்ல மாற்றங்கள் எனக்குள் ஏற்பட்டு இருக்கும். மற்றபடி பதிவெழுதும் எனது அனைத்து நண்பர்களின் இடுகைகளையும் படித்து நேரமிருந்தால் பின்னூட்டுவேன்.

"எழுதுபவனுக்கும் படிப்பவனுக்குமான தொடர்பு எழுத்தைத் தாண்டி நெருங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் எழுத்து நம்முடைய அன்றாட உணவைத் தீர்மானிக்கிற விஷயம் இல்லையே" - ரத்னேஷ்.

ரத்னேஷ், மீண்டும் எழுதவந்தால் நினைவு வைத்துக் கொள்கிறேன்.

"ஏப்ரல் 14 -தமிழர்களின் முட்டாள் தினம்" என்று ஏப்ரல் 14ல் பதிவு எழுதவேண்டும் என்ற ஒரே ஒரு ஆசைதான் இருந்தது. அது வராது.

எழுத்தாளர் சுஜாதவின் எழுத்துக்களில் விமர்சனங்கள் இருந்தாலும், அவரும் தமிழில் இலக்கிய உலகில் ஆற்றிய சாதனைக்கு என்று நினைவு கூறத்தக்கவர். அவருக்கு இதய அஞ்சலிகள்.

தலைப்பிற்கு மறைமுகமாக உதவிய தன் ஆற்றல் மிகு எழுத்தால் என்னைக் கவர்ந்த நண்பர் ரத்னேஷ் ! 2007ல் எனக்கு கிடைத்த சிறந்த நண்பர்களில் அவர் முதன்மை, ரத்னேஷ் அவர்களுக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லது பதிவு நண்பர்களே. அழுகாச்சி பின்னூட்டங்கள் எதுவும் இங்கு தேவையற்றது !!!


அன்புடன்,

கோவி.கண்ணன்

24 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

//
"கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது...!"
//

மற்றவர்களின் தவறுகளுக்கு நீங்கள் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். நான் பதிவுலகிற்கு புதியவன்.

அறுவருப்பாக எழுதும் பதிவுகளை எல்லாம் உதாசீனப்படுத்துங்கள். திரும்பி 'குரை'ப்பதால் எந்த பயனும் இல்லை.

அன்புடன்

மங்களூர் சிவா

லக்கிலுக் சொன்னது…

சமீபகால பிரச்சினைகளின் காரணமாக தான் தற்காலிகமாக விடை பெறுகிறீர்கள் என்றால் அது தேவையற்றது.

பணிப்பளு மற்ற தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போது விடை பெறுகிறீர்கள் என்றால் போய் வாருங்கள்!

TBCD சொன்னது…

ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தமிழர்களுக்கல்லாத பண்டிகை மாறி மாறி வரும். அது அத்தனையும்மே, முட்டாள்கள் தினம் தானே..

அதுக்கு ஏன் நீங்க எழுதக் கூடாது..

சும்மா கலாய்க்காமா தொடர்ந்து எழுதும்மாறு கேட்டுக் கொள்கிறேன்.

குசும்பன் சொன்னது…

தற்காலிகவிடுப்பு என்றால் ஓக்கே. சென்று புத்துணர்ச்சியோடு திரும்பி வாருங்கள்.

வவ்வால் சொன்னது…

கோவி,
விருப்பத்தின் பேரில் விடுப்பு எடுக்கலாம், ஆனால் திணிக்கபட்ட விருப்பமாக இல்லாமல் இருத்தல் நன்று!

மற்றப்படி மாதம் 30 நாளும் வருடம் 365 நாளும் எழுதவேண்டும் என்றும் இல்லை, எழுதாமல் இருக்க வேண்டும் என்றும் இல்லை நம் மனத்திற்கு உகந்தார்ப்ப்போல இயங்கலாம்.விருப்பம் , வசதிக்கு ஏற்ப செயல்படவும்.

உலகை தலைமீது சுமக்க வேண்டி இருப்பதால் போகிறேன் என்றெல்லாம் புருடா விட்டு பின்னர் திரும்ப ஓடி வருபவர்களும் இருக்கும் போது நீங்கள் அறிவித்தது வித்தியாசமானதே.

அரை பிளேடு சொன்னது…

:(

//
கடைசி பதிவு என்பது எப்போதும் எழுதப்பட்டு இருக்காது
//

:)

//தற்காலிகவிடுப்பு என்றால் ஓக்கே. சென்று புத்துணர்ச்சியோடு திரும்பி வாருங்கள்.
//

வழிமொழிகிறேன்.

பெயரில்லா சொன்னது…

//
அறுவருப்பாக எழுதும் பதிவுகளை எல்லாம் உதாசீனப்படுத்துங்கள். திரும்பி 'குரை'ப்பதால் எந்த பயனும் இல்லை.
//

//விருப்பத்தின் பேரில் விடுப்பு எடுக்கலாம், ஆனால் திணிக்கபட்ட விருப்பமாக இல்லாமல் இருத்தல் நன்று!
//

ரிப்பீட், உங்கள் விருப்பம் போல் எழுதுங்கள்.

Gopalakrishnudu(#07148244463938149692) சொன்னது…

Please come back soon, lest others should definitively bid you farewell. If you come back after that, you will just look a fool like many before you.

Gopalakrishnudu

கோவை சிபி சொன்னது…

உங்களின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருபவன்.அயல்தேசத்தில் இருந்து தமிழக அன்றாட விசயங்களை மிகச் சரியாக கூர்ந்து கவனித்து எழுதி வந்தீர்கள்.தொடர்ந்து எழுதுவதே உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்,அதை பதிவாக இடுவது உங்களின் தனிப்பட்ட விருப்பம்.

ஜமாலன் சொன்னது…

நண்பர் கோவிக்கு...

கடந்த ஒரு மாதகாலமாக அலுவலக இணையம் படுத்துவிட்டது. அதிகமாக பதிவுலகில் நடமாட இயலவில்லை. உங்கள் பிரச்சனையின் தலைகால் எதுவும் புரியவில்லை. பதிவுலக அரசியலில் சிக்கிக் கொள்ளாமல் உள்ள பழைய பதிவர் நீங்கள். அதனால் அதிகமாக உங்களுக்க சொல்ல வேண்டியதில்லை.

நீங்கள் யாருக்காக பதிவ எழுதுகிறீர்கள் என்பதை முதலில் தீர்மாணித்துக் கொள்ளுங்கள். சமூகப் பணி எல்லாம் பிறகு. முதலில் நாம் நமக்காகத்தான் பதிவெழுதுகிறோம். நமது வேட்கையின் ஒரு விளைவே. அதனால் அதனை எதற்காக பிறரின் கட்டுப்பாட்டில் விடவேண்டும். நீங்கள் சொந்த காரணங்களால் எழுதாமல் இருப்பது என்பது வேறு. என்றாலும் எழுத்து என்பது ஒரு தேடல். அதற்கு முடிவில்லை. அதை பிறருக்காக நாம் நிறுத்தவும் முடியாது.

உண்மையில் நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டியது.. கரணகர்த்தாக்கள் விரும்பியது நடக்கா வண்ணம் தொடர்ந்து சிறந்த பதிவுகளை எழதித் தள்ளுங்கள். உக்கிரமாகவும் அதைவிட அதிகமாகவும். நீங்கள் அங்கீகரிக்கப்படுவதையும் ஆமோதிக்கப்படுவதையும் விட்டுத் தள்ளுங்கள். நமது நோக்கம் எழுதுவது. 'எழுதும் கை எழுதி எழுதி மேற்செல்லும்' என்கிற உமர்கய்யாம் கூறியதைப்போல எழுதிக்கொண்டே இருப்போம். எழுத்தை நிறத்துவதற்கு நமது கை தவிர அதன் வலி தவிர வேறு எதற்கும் உரிமை இல்லை. நண்பர் ரத்ணேஷின் அசாத்திய எழுத்தாற்றலைப் பாருங்கள். தினமும் ஒரு பொருள் பற்றிய வித்தியாசமான ஒரு பதிவு. உங்களிடமிருந்தும் சிறந்த பதிவுகள் வந்துகொண்டிருந்தன... அதை நிறுத்த வேண்டாம். திரும்பவும் நான் சொல்வது ஒன்றுதான். நீங்கள் யாருக்காக எழுத வந்தீர்கள் இன்று யாருக்காக நிறுத்த வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

கொஞ்சநாள் ஒய்வு எடுத்துக்கொண்டு இந்த மன உளைச்சல்களை விலக்கி விட்டு ரிலாக்ஸாக எழுத வாருங்கள். இன்னும் கூட இந்த பதிவுலக அரசியல் எனக்குப் புரியவில்லை. அதை புரிந்து கொள்ள வேண்டிய அவசியமுமில்லை. அதற்காக உங்களைப் போன்ற நண்பர்களின் பதிவுகளை இழப்பதற்கும் தயாரில்லை.

அன்புடன்
ஜமாலன்.

TBCD சொன்னது…

வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

////
கரணகர்த்தாக்கள் விரும்பியது நடக்கா வண்ணம் தொடர்ந்து சிறந்த பதிவுகளை எழதித் தள்ளுங்கள். உக்கிரமாகவும் அதைவிட அதிகமாகவும். நீங்கள் அங்கீகரிக்கப்படுவதையும் ஆமோதிக்கப்படுவதையும் விட்டுத் தள்ளுங்கள். நமது நோக்கம் எழுதுவது. 'எழுதும் கை எழுதி எழுதி மேற்செல்லும்' என்கிற உமர்கய்யாம் கூறியதைப்போல எழுதிக்கொண்டே இருப்போம்.
////

RATHNESH சொன்னது…

TBCD கோபித்தாலும் பரவாயில்லை;

ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ

Darren சொன்னது…

இடை இடையேதான் உங்கள் பிரச்சினைக்குறிய பதிவுகளை படித்திருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்பதினை எளிதாக ஊகிக்க முடிந்தது.

வலையலக நட்பு என்பதே கேள்விக்குறியாக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட சாரரினால்.

google chat யை பொதுவில் வைத்தல், நம்மை நண்பர் என்று நம்பி பேசுபவரின் பேச்சை பதிவு செய்தல் மற்றும் நண்பர் என்ற பெயரில் அடுத்தவரின் அந்தரங்கத்துக்குள் நுழைவது போன்ற விசயங்கள் மிக அநாகரிகம்.

தெவையற்ற இடத்தில் நண்பரின் பதிவு என்பதற்காக, சொல்வதற்கு கருத்து இல்லாவிட்டாலும் ஒரு smily பின்னுட்டம் போடுவது இதெல்லாம் அபத்தம் என்பது என் கருத்து.

யாரையும் அண்ணார்ந்து பார்க்கும் போதும் சரி, தூரத்தில் பார்க்கும் போதும் சரி ,அவர்களின் உண்மை உருவம் நமக்குத் தெரியாது.வலையுலக நட்பும் அப்படித்தான்.

போலி பிரச்சினை என்பது ஒரு உப்புசப்பில்லாத விசயம். தெவடியா பையா என்று ஒருவன் என்னைப்பார்த்து திட்டிவிட்டால் உடனே என் அம்மா தெவடியாள் ஆகிவிடுவாளா?? காமெடி..இதற்காக ஒரு வெட்டித்தனமான ஆராய்ச்சி.

போலி பிரச்சனை உச்சத்தில் இருந்த போது உலா வந்த ஒரு வார்த்தை "பன்னி விரட்றாங்களம்". நான் காமெடியாக சொல்லி இருந்தேன் இப்படி

" யாரோ மனுசங்க பன்னியை விரட்றாங்கனு சொன்னிங்க,எங்கடா ஓரே பன்னிங்களாதான் ஓடுத.. என்று".

என்னடா இவன் நம் பதிவுக்கு சம்பந்தம் இல்லாம பின்னூட்டம் போட்டிருக்கான் என்று கண்டிப்பாக உங்கள் உள் மனது நினைக்காது என்று நம்புகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan said...
இடை இடையேதான் உங்கள் பிரச்சினைக்குறிய பதிவுகளை படித்திருந்தாலும் என்ன நடந்திருக்கும் என்பதினை எளிதாக ஊகிக்க முடிந்தது.

வலையலக நட்பு என்பதே கேள்விக்குறியாக்கப்பட்டது ஒரு குறிப்பிட்ட சாரரினால்.

google chat யை பொதுவில் வைத்தல், நம்மை நண்பர் என்று நம்பி பேசுபவரின் பேச்சை பதிவு செய்தல் மற்றும் நண்பர் என்ற பெயரில் அடுத்தவரின் அந்தரங்கத்துக்குள் நுழைவது போன்ற விசயங்கள் மிக அநாகரிகம்.

தெவையற்ற இடத்தில் நண்பரின் பதிவு என்பதற்காக, சொல்வதற்கு கருத்து இல்லாவிட்டாலும் ஒரு smily பின்னுட்டம் போடுவது இதெல்லாம் அபத்தம் என்பது என் கருத்து.

யாரையும் அண்ணார்ந்து பார்க்கும் போதும் சரி, தூரத்தில் பார்க்கும் போதும் சரி ,அவர்களின் உண்மை உருவம் நமக்குத் தெரியாது.வலையுலக நட்பும் அப்படித்தான்.

போலி பிரச்சினை என்பது ஒரு உப்புசப்பில்லாத விசயம். தெவடியா பையா என்று ஒருவன் என்னைப்பார்த்து திட்டிவிட்டால் உடனே என் அம்மா தெவடியாள் ஆகிவிடுவாளா?? காமெடி..இதற்காக ஒரு வெட்டித்தனமான ஆராய்ச்சி.

போலி பிரச்சனை உச்சத்தில் இருந்த போது உலா வந்த ஒரு வார்த்தை "பன்னி விரட்றாங்களம்". நான் காமெடியாக சொல்லி இருந்தேன் இப்படி

" யாரோ மனுசங்க பன்னியை விரட்றாங்கனு சொன்னிங்க,எங்கடா ஓரே பன்னிங்களாதான் ஓடுத.. என்று".

என்னடா இவன் நம் பதிவுக்கு சம்பந்தம் இல்லாம பின்னூட்டம் போட்டிருக்கான் என்று கண்டிப்பாக உங்கள் உள் மனது நினைக்காது என்று நம்புகிறேன்
//

மற்ற பின்னூட்டங்களுக்கு இன்னும் மறுமொழி போடவில்லை.

தெவடியா பையா என்று ஒருவன் என்னைப்பார்த்து திட்டிவிட்டால் உடனே என் அம்மா தெவடியாள் ஆகிவிடுவாளா?? காமெடி..இதற்காக ஒரு வெட்டித்தனமான ஆராய்ச்சி.

- இதைத்தான் நானும் சொல்கிறேன். எவரும் காது கொடுத்துக் கேட்காததால் என்னையும் இணைக்கிறார்கள்.

உங்கள் பின்னூட்டம் கூட எனக்கு ஆதரவு போல் நினைப்பார்கள்
:(

விட்டுத்தள்ளியாச்சு.

மிக்க நன்றி !

Darren சொன்னது…

//
கோவி.கண்ணன் said...

இதைத்தான் நானும் சொல்கிறேன். எவரும் காது கொடுத்துக் கேட்காததால் என்னையும் இணைக்கிறார்கள்//


இனைத்துப்பேசுபவர்களின் தகுதிகள் அனைத்தும் வலையலகில் இருப்பவர்களுக்கும் தெரியும்....உங்களுக்கும் தெரியும்.


//உங்கள் பின்னூட்டம் கூட எனக்கு ஆதரவு போல் நினைப்பார்கள//

டோண்டு என்கிற 60 வயது மனிதரின் 60 ஆண்டுகால அர்த்த பழசனா கருத்துகளுடன் சண்டை போடுவது. போலி டோண்டுயை கண்டறிவது போன்ற அர்த்தமற்ற வீணர்களின் மனம் என்ன நினைக்கிறது என்பதினை பற்றி கவலைப்பட ஏதும் இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//இனைத்துப்பேசுபவர்களின் தகுதிகள் அனைத்தும் வலையலகில் இருப்பவர்களுக்கும் தெரியும்....உங்களுக்கும் தெரியும்.

டோண்டு என்கிற 60 வயது மனிதரின் 60 ஆண்டுகால அர்த்த பழசனா கருத்துகளுடன் சண்டை போடுவது. போலி டோண்டுயை கண்டறிவது போன்ற அர்த்தமற்ற வீணர்களின் மனம் என்ன நினைக்கிறது என்பதினை பற்றி கவலைப்பட ஏதும் இல்லை.//

தரன்,

நீங்கள் குறிப்பிடுவது தமிழ் பதிவுலகத்தில் அனைவருக்கும் தெரிந்தது தான். பலர் அதுபற்றி கண்டு கொள்ளாதற்கு காரணமே அம்புகள் தங்களை நோக்கியும் பாயும் என்பதால் தான். நடப்பதை பார்த்துக் கொண்டு இருப்பது நல்ல அனுகுமுறையும் கூட.
சிலர் பெயரைக் குறிப்பிட்டு சொல்லும் பின்னூட்டத்தை தவிர்க்கலாம். தேவையின்றி சிலர் வாயில் விழுவதற்கு விருப்பம் இல்லை.

Darren சொன்னது…

//கோவி.கண்ணன் said...
நீங்கள் குறிப்பிடுவது தமிழ் பதிவுலகத்தில் அனைவருக்கும் தெரிந்தது தான். பலர் அதுபற்றி கண்டு கொள்ளாதற்கு காரணமே அம்புகள் தங்களை நோக்கியும் பாயும் என்பதால் தான்.//

நான் சிலரின் அநாகரிகங்களை பெரிதுபடுத்தாமல் போவதற்கு காரணம் அம்புகள் என்னை நோக்கி பாயும் என்பதற்காக அல்ல..அவர்கள் நேரம் செலவழித்து கொண்டிருக்கும் பிரச்சனைகளை விட முக்கியமான வேலைகள் எனக்குண்டு என்பதினால்தான் .ஆனாலும் என்னிடம் தானாக வரும் ஆதாரங்களை அவ்வப்போதத பதிவு செய்தே வந்திருக்கிறேன். அவனை நீக்கு, இவனை நீக்கு என்கிற விடயத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது..இவன் இப்படியும் இருப்பான் என்பதினை தெரிவிப்பதற்காகத்தான் சில பதிவுகளை இட்டேன. மற்றபடி வெட்டி 007 செய்யும் வேலைகள் எனக்கு உடன்பாடில்லாத ஒன்று.

சிறு திருத்தம்:

டோண்டு என்கிற 60 வயது மனிதரின் 60 ஆண்டுகால அர்த்த பழசனா கருத்துகளுடன் சண்டை போடுவது. போலி டோண்டுயை கண்டறிவது போன்ற

அர்த்தமற்ற வேலைகளை செய்து கொண்டிருக்கும் வீணர்களின்

மனம் என்ன நினைக்கிறது என்பதினை பற்றி கவலைப்பட ஏதும் இல்லை


//சிலர் பெயரைக் குறிப்பிட்டு சொல்லும் பின்னூட்டத்தை தவிர்க்கலாம். தேவையின்றி சிலர் வாயில் விழுவதற்கு விருப்பம் இல்லை.//

அடுத்தவர்களின் பதிவுகளில் அடுத்தவர்களின் பெயரை குறிப்பிட்டு பின்னூட்டம் போடுவது தவறுதான்.மிக அவசியமாக தேவைப்பட்டதால் போட்டு விட்டேன்.sorry. ஆனாலும் சிலரின் பெயரை தவிர்த்திருக்கிறேன்.
தவிர்கிறேன்.

ILA (a) இளா சொன்னது…

பதிவ படிக்கலைங்க,. எப்போ நம் துறை சார்ந்த பதிவை ஆரம்பிக்கலாம்?

TBCD சொன்னது…

இந்த ஒரு விசயத்துக்கு அத்தனைப் பேரும் ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்ய் போட்டாலும் ஆட்சேபனை இல்லை

///
RATHNESH said...
TBCD கோபித்தாலும் பரவாயில்லை;

ரிப்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈட்டேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ
///

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA(a)இளா said...
பதிவ படிக்கலைங்க,. எப்போ நம் துறை சார்ந்த பதிவை ஆரம்பிக்கலாம்?
//

அப்படி என்றால் அந்த இரண்டு வரியை கூகுள் அரட்டையில் சொல்லி இருக்கலாம்.
:)

கையேடு சொன்னது…

திரு. கோவி.கண்ணன் அவர்களுக்கு,
இப்பின்னூட்டத்தை எழுதுவதா என்று இத்தனை நாள் தயங்கியேயிருந்தேன்.

ஒரு ஆண்டு கால விடுப்பு அவசியமா?

ஏப்ரல் 14 பதிவுடன் மீண்டும் துவங்குவதைக் குறித்து பரீசீலனை செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

TBCD சொன்னது…

ரவி தம்பாச்சி (அண்ணாச்சி சொல்லாம், இதைச் சொல்லக் கூடாதா) ,

இது என்ன பெரிய கம்ப சுத்துற விடயமா.. (கம்பன் சூத்திர என்றும் சொல்லுறாங்க..)

நட்பிற்கு இலக்கணம் கோவி ஐயா தான்.

விதியயை உடைச்சு, காலம் - எண்ண்க கவிதைகளில் எழுதினா மாதிரி,

நண்பர்கள் வேண்டுகோள் வைச்சா, காலம் பதிவிலேயும் வரும்.

நான் முந்திக்கிறேன்..

அன்பின் கோவி ஐயா,

வெகு விரைவில், உங்கள் காலம் பதிவில் நீங்கள் எழுத ஆரம்பிக்கனும்.

டிபிசிடி கவுண்டிங்க் ஆரம்பம்..

இன்னும் 24 மணி நேரத்தில், அதில் பதிவு வரலையின்னா..

நீங்களா எழுதினா சமாதாணம்...நாங்களா எழுத வைச்சா....

என்ன சொல்லுறீங்க...

ரவி சொன்னது…

//////Somebody send me virus and hacked my old gmail account. So i create new one. My laptop also crashed. So i loss all the datas including my marriage invitation photos. Because one of my best friend want to design same as mine. But i dont have now. So if you have, please send this new id ravi.antonee@gmail.com. Very urgent...//////

இந்த மேற்கண்ட மின்னஞ்சலை என்னுடைய ஆர்க்குட் ப்ரொபைலில் உள்ள நன்பர்களுக்கு அனுப்பிவரும் திரு.போலி டோண்டு அலைஸ் மூர்த்தி அலைஸ் முருகன் அலைஸ் விடாது கருப்பு என்ற நாதாரி நாயும் நீயும் எனக்கு ஒரே தட்டில் தான் இருக்கிறீர்கள்.

உங்கள் இருவரில் எவனை பார்த்தாலும் முதலில் செருப்பையோ ஷுவையோ கழட்டி அடிப்பேன்.

சைபர் கிரைமில் புகார் கொடுக்கும்போது உன்னுடைய அவனுடைய அலுவலக முகவரி, அரக்கோணம் அட்ரஸ் போன்றவற்றுடன், உன்னுடைய அலுவலக முகவரி, நாகை அட்ரஸ், சிங்கை அட்ரஸ் தொலைபேசி எண்கள் அனைத்தையும் தருவேன்.

நீயும் போலியும் வேறு வேறல்ல. எப்போது எல்லாம் தெரிந்தும் இன்னும் மூர்த்தி என்னுடைய நன்பர் என்று நடித்துக்கொண்டிருக்கிறாயோ, அப்போதிலிருந்து உன் மீதான மரியாதை தரை மட்டத்தில் உள்ளது.

நன்றாக நடிக்கவும். உனக்கு சிவாஜியை விட நடிப்பு நன்றாகவே வருகிறது கோவிகண்ணன்.

கோவி.கண்ணன் சொன்னது…

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி, மீண்டும் அவ்வப்போது எழுதி வருகிறேன்.

பளாக்கில் எழுதுவது நேரவிரயம் தான், ஒரு சில நல்லுள்ளங்கள் கிடைத்ததைத் தவிர வேறொன்றும் இல்லை.

அது போலவே தேவையற்ற தூற்றல்கள்.

இதெல்லாம் சிலரிடம் நெருங்குவதால் நமக்கு கிடைக்கும் வெகுமதி(?). பதிவர்கள் யாரிடம் வேண்டுமானாலும் பழகலாம், பழகும் நபர் உள்நோக்கம் கொண்டவரா என்று பார்த்து பழகுவது நல்லது. வேவு பார்க்கப் பழகினேன் என்று வெட்கமில்லாமல் சொல்லிக் கொண்டு நட்பை கேவலப்படுத்தியெ ஜென்மங்களுடன் பழகிய காயப்பட்ட கசப்பான அனுபவம் எனக்கு உண்டு.

பதிவர்களுக்கு எழுத்தும் அதன் தொடர்பும் தவிர்த்து எவருடனும் மூக்கோடு முக்கு உரசும் அனுபவம் கசப்பையே தரும். கடைசி பின்னூட்டத்தில் உள்ள மிரட்டல்கள் போல் உங்களுக்கும் வரலாம்.

நண்பர்கள் ரத்னேஷ், ஜமாலன் போன்றவர்கள் முன்பே எனக்கு கிடைத்திருந்தால், ஒதுங்கி இருக்க வேண்டிய நபர்களுடன் நெருங்கி சென்றிருக்க மாட்டேன்.

ஒருவர் போலவே எல்லோரும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் என்ன வேடுமானாலும் நடக்கலாம். உள்ளுணர்வில் கலந்து இருப்பவர்கள் தவிர்த்து மற்றவர்களுடன் அதிக நெருக்கம் தேவையற்றது.

நான் புரிந்து கொள்ள இரண்டு ஆண்டு தேவைப்பட்டு இருக்கிறது. இந்த கால இடைவெளி அதிகம் தானே ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்