பின்பற்றுபவர்கள்

18 பிப்ரவரி, 2008

திண்ணை எப்போது காலியாகும் ?

ராஜாதி ராஜா படத்தில் ரஜினிகாந்தின் ஒரு பாடலில் "எனக்கு கட்சியும் வேண்டாம் ! கொடியும் வேண்டாம்" என்று பாடுவார்.

பாட்சா சர்சைக்குப் பிறகு, முத்துபடத்தில் "கட்சியெல்லாம் இப்ப நமக்கெத்துக்கு காலத்தின் கையில் அது கெடக்கு" முதலில் வேண்டாம் என்றவர் காலத்தின் கட்டளையாகச் சொல்லி தன் ஆசையை வெளிப்படுத்துகிறார், ஆனால் அதை வெளிப்படுத்திய விதம் தனக்கு அதுப்போன்ற ஆசை இல்லை என்பது போலவே. பாடல் ஆசிரியர் எழுதும் பாடலுக்கு அவர் என்ன செய்வார் ? ரஜினி போன்ற சூப்பர் நடிகர்களுக்கு அவர்கள் சம்மதம் இல்லாமல் ஒருவரி கூட எழுதிவிட முடியாது. கதாநாயகனை கடவுளுக்கும் மேலாக புகழ்ந்த பாடல்கள் தான் பின்பு அரசியல் மேடையில் பின்பாட்டாக ( அதாவது பிரசாரம் செய்யும் போது ஒலிப்பெருக்கியில்) பாடப்படுகிறது. எம்ஜிஆர், வி.காந்து எல்லோரும் அப்படித்தான் படத்தின் பாடல்களை பயன்படுத்துகின்றனர்.

மூன்றாம் நிலை பரிமாணத்தில், "எப்ப வருவேன், எப்படி வருவேன் என்று எனக்கே தெரியாது, வரவேண்டிய நேரத்துல கரெக்டாக வந்துடுவேன்". - படையப்பா எப்படியும் வருவேன் என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்கிறார். :)

"ஆண்டவன் சொல்றான் அருணாசலம் முடிக்கிறான் " என்று முன்பு சொன்னவர் படத்தில் மட்டுமல்ல மேடையில் கூட இப்போதெல்லாம், நான்காம் நிலை பரிமாணமாக, "ஆண்டவன் முடிவு செய்துவிட்டால் அரசியலுக்கு வருவேன்" என்று நேரடியாகவே சொல்கிறார், இரு இடங்களில் நடந்த பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவ்வாறு சொல்லி இருந்ததாக சென்ற வார நக்கீரனில் எழுதி இருந்தது. "ஆண்டவனின் ஆசையே என் ஆசை" என்ற ஸ்டேட்மெண்டுக்கு பிந்திய வர்சன் அதாவது "நான் அரசியலில் இறங்குகிறேன் / குதிக்கிறேன்" என்று ஸ்டேட்மெண்ட் திரு ரஜினியிடம் இருந்து இன்னும் வெளிவரவில்லை. அதுபோலவே முதல் வர்சனான "கட்சியும் வேண்டாம் கொடியும் வேண்டாம்" என்பதை மறந்தும் தற்போது எங்கும் சொல்வதில்லை.

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், நடிகர் நாடளாலாமா ? பாமக ராமதாஸ் ஐயாவின் அபத்தக் கேள்வியை புறந்தள்ளுவோம். ஒருவரை மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர் தலைவர் தான். அதில் நடிகர் என்ன விதமான விதிவிலக்கு ?.


1996 ல் இருந்து அரசியலில் பரபரப்பாக எதிர்ப்பார்க்கப்படும் ரஜினி காந்த் ஏன் தயங்குகிறார் ? மூப்பனாருடன் இணைந்து கட்சி ஆரம்பித்தால் வெற்றி வாகை சூடை இருக்கலாமே, அண்ணாமலை சைக்கிளை சின்னமாக எடுத்துக் கொள்ளச் சொல்லி மூப்பானாருக்கு பரிந்துரை செய்து, தமகா - திமுகவை வெற்றிப்பெற உதவினார் என்றெல்லாம் பேசுகிறார்களே ? ஏன் தைரியமாக நேரடி அரசியலில் இறங்கவில்லை ?

அன்றைய தேதிக்கு பாட்சா படவிழாவை தொடந்து, அந்த படத்தயாரிப்பாளர், சத்யா மூவிஸ், முன்னாள் அமைச்சர் இராம.வீரப்பனுக்கும் - ஜெவுக்கு ஏற்பட்ட மோதல், இராமவீரப்பனை கட்சியில் இருந்து ஓரம் கட்டியது. மற்றும் ஜெவின் பல அடவடிக்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க தன் செல்வாக்கு உதவும் என்று மட்டுமே ரஜினி நினைத்தார். ஒருவேளை ரஜினி - திமுக - அதிமுக மும்முனை போட்டி என்றால் திரை ரசிகர்கள் மட்டுமே ரஜினிக்கு ஆதரவு கொடுப்பார்கள், அதிமுக வாக்கு வங்கி பிரியும், திமுக முழுபலத்துடனேயே வென்றுவிடும். என்பதால் ரஜினிகாந்த் நேரடி அரசியலுக்கு செல்வதற்கு பின் வாங்கினார். திமுக - தமாக கூட்டணியை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தனது செல்வாக்கால் தான் அவை வென்றது என்று அவராக சொல்லாவிட்டாலும் மற்றவர்களை பேச வைக்கமுடியும். அது போன்றே பேசினார்கள். மற்றவர்களைவிட ஜெவின் 1996 ஆம் ஆண்டு ஆட்சியை இறக்கியதற்கு முக்கிய பங்கு வகித்தது, தொடர்ந்து அதிமுக மற்றும் ஜெ, சசி ஆகியோரைப் பற்றிய சொத்து குவிப்பு மற்றும் அரசியல் முறைகேட்டு, பதிவியை தவறாக பயன்படுத்தி மற்றும் ஊழல் தகவல்களை வெளியிட்டு வந்தது நக்கீரன் மட்டுமே. அதை நன்கு உணர்ந்த ஜெ. பின்னாளில் 2001ல் முதல்வரான போது நக்கீரன் கோபால் மீது பொடொ வைப் பாய்சினார். இதெல்லாம் பலருக்கு புரியாது. ரஜினிகாந்த் செல்வாக்கினால் தான் 1996ல் திமுக வென்றதாகவே திமுகவிற்கு எதிரான பத்திரிக்கை உலகம் தொடர்ந்து எழுதி வந்தது. ரஜினி 1996ல் நின்றிருந்தால் முதல்வராக ஆகி இருக்கலாம் என்றெல்லாம் பரப்பிவிட்டனர். ரஜினிக்கு தெரியாதா ? இருந்தும் அவர் ஏன் 2001 தேர்த்தலில் கூட அரசியல் ஆசையை வெளிப்படுத்தவில்லை ?

திமுக வாக்கு வங்கியின் கவனத்தை பெறாமல் தன்னால் தனித்து வெற்றி பெற முடியாது என்று ரஜினி நினைப்பதே அதற்கு காரணம். அது 100 விழுக்காடு சரியான கணிப்பும் கூட. "கலைஞர் ஐயா, (இருக்கும் வரை) அவரை எதிர்த்தெல்லாம் என்னால் அரசியல் செய்ய முடியாது" என்று முன்பு சொல்லி இருக்கிறார். கலைஞர் மீது வைத்திருக்கும் மரியாதையோ, அல்லது கலைஞர் இருக்கும் போது திமுக வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்ப முடியாது என்பதாலேயே ரஜினி தமிழக அரசியலில் குதிப்பதற்கு இன்னும் நேரம் குறிக்கவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவார். ஸ்டாலின் முதல்வராவதற்கு முஸ்தீபு நடக்கும் போது நிச்சயம் ரஜினி அரசியலுக்கு வருவார். ரஜினியின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தால் தான் அரசியலுக்குள் சொல்ல மாட்டேன் என்று எங்கும் சொல்வதில்லை. ஆண்டவனின் ஆசைப்படி என்றே சொல்லி வருகிறார். 140 கோடியில் பட்ஜெட்டில் படமெடுக்க உத்தரவிட்ட ஆண்டவன் இதற்கும் உத்தரவிடுவார் என்றே நம்புங்கள். நான் நம்புகிறேன்.

எப்போது அரசியலுக்கு வருகிறார் ? தலைப்பை தொட்ட முழுப்பழமொழி புரிந்தவர்களுக்கு புரியும். ரஜினி அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்போ, ஆதரவோ இங்கு எழுதவில்லை. அண்மையில் "அரசியலுக்கு ரஜினி வருவார்" என்று ஒரு பெண் மருத்துவரின் ஆராய்ச்சிக் கட்டுரைப் போன்று, ஆனால் அதனுடன் தொடர்பில்லாத செய்திகளை வைத்து, பத்திரிக்கை வாயிலாக பல்வேறு காலகட்டங்களில் படித்தவற்றை வைத்து "ரஜினி தீவிர அரசியலுக்கு நிச்சயமாக வருவார்" என்றே நினைக்கிறேன். அது திமுக - அதிமுக போன்றே அவைகளுக்கு மாற்றான ஒரு பெரிய கட்சியாக உருவெடுக்கும்.

திமுக - அதிமுகவில் இருக்கும் பெரும் தலைகள் எல்லாம் தங்களை தூய்மையானவர்களாக அறிவித்து வெளியேறி, புதுப்'பித்துடன்' ரஜினி கட்சியில் இணைவார்கள், ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பில் ஏமாந்து தேமுதிகவுக்கு சென்ற தேமுதிக தொண்டர்கள் ரஜினி கட்சிக்கு ஆதரவாக திரும்புவார்கள். அதுவரை ரஜினி தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு மீடியாக்களும், பொதுமக்களுக்கும் தன் இருப்பை உணர்த்திக் கொண்டிருப்பார்.

26 கருத்துகள்:

கருப்பன் (A) Sundar சொன்னது…

//
"எனக்கு கட்சியும் வேண்டாம் ! கொடியும் வேண்டாம்"
//
இது நான் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்த "ராஜாதி ராஜ" என்ற படத்திலேயே வந்துவிட்டது.

தின்னைக்கு பலர் வரிசையில் நிற்க்கும் போது திடீரென வந்து ரஜினி கைப்பற்றுவதற்க்கு இது என்ன எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலமா??? 21ம் நூற்றாண்டாகிவிட்டதல்லவா ;-)

கோவி.கண்ணன் சொன்னது…

//கருப்பன்/Karuppan said...
//
"எனக்கு கட்சியும் வேண்டாம் ! கொடியும் வேண்டாம்"
//
இது நான் கைக்குழந்தையாக இருக்கும் போது வந்த "ராஜாதி ராஜ" என்ற படத்திலேயே வந்துவிட்டது.

தின்னைக்கு பலர் வரிசையில் நிற்க்கும் போது திடீரென வந்து ரஜினி கைப்பற்றுவதற்க்கு இது என்ன எம்.ஜி.ஆர் வாழ்ந்த காலமா??? 21ம் நூற்றாண்டாகிவிட்டதல்லவா ;-)
//

கருப்பன் அவர்களே,

படம் பெயரை திருத்திவிட்டேன் சுட்டியதற்கு நன்றி !
:)

திண்ணைக்கு பலர் வரிசையில் அவர்களாகவே நிற்கிறார்கள். ஆனால் இவர் வரவேண்டும் என்று பரவலாக எதிர்ப்பார்க்கிறார்கள். அவரும் அந்த ஆசையில் தான் இருக்கிறார். பார்ப்போம். நானும் இங்கு எழுதியது அப்படியே தான் இருக்கும்
:)

கருத்துக்கு மிக்க நன்றி !

TBCD சொன்னது…

வந்திருந்தா, அப்பவே வந்திருக்கனும்

அலையடிச்சப்ப..

இப்ப, அலையும் இல்லை ஒரு மண்ணும் இல்லை.

புலி வருது, புலி வருது என்று போக்கு காட்டினால், கடைசியில், புலியே வந்து..

நான் தான் புலி என்று அறிமுகப்படூத்தினாலும், கண்டுக்கொள்ளப்படாமல் விட்டுவிட சாத்தியங்கள் அதிகம்.

ரஜினி என்ன தான் மண்ணி மைந்தன் என்றுப் பாட்டுப் பாடினாலும், அவர் மண்ணின் மைந்தாரா என்றுப் பார்த்தால், அவருடைய ஆர்வங்கள் பெங்களூருவை நோக்கியே இருக்கின்றது.

விஜய காந்தாவது, இங்கேயே பிறந்தார், வளர்ந்தால், "தமிளன்" என்று முழங்கினால், ஒத்துக் கொள்ளலாம். அவருடை வேர்கள் ஆந்திரத்தை தொடவில்லை.

எம்.ஜி.ஆரை ஆதரித்து, படாதப் பாடுப் பட்டதை மக்கள் அறிந்தே வந்திரூக்கிறார்கள்.

எம்ஜிஆர் என்ற பெரிய திரைநடிகர் விலகும் போது, திமுகவில் எம்ஜிஆர் பின்னே அனேக பேர் போகவில்லை.

அதேப் போல், ரஜினி கட்சி ஆரம்பித்தால், விஜய காந்துக்கு கூடுகின்ற கூட்டம் குறையும்.

வாக்கு வங்கி ஆட்டத்தில், வாக்குகளை பிரிப்பார் ரஜினி, தனித்து திராவிடக் கட்சிகளை எதிர்த்து நிற்பாரா என்றால் சந்தேகமே.

ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர், தான் தலைவர் என்ற எண்ணம் வர வேண்டும். ஜெ.யிடம் அது அதிகம் வெளிப்படையாகத் தெரியும். கலைஞர் உள்ளூர அதை நிலை நிறுத்துவார்.

நான் சாமனியன் என்று அடிக்கடி நிருபனம் செய்துக் கொண்டே இருக்கும், ரஜினி தலைமைப் பொறுப்பில் சோபிக்க மாட்டார். அவரை ஆதரிப்பது, தமிழ் மக்களுக்கு பலன் தராது. காவிக் கொடிகள் சீராய் பறக்க அது பாதைப் போடும்.

ரஜினியயை திரையில் மட்டுமே ரசிக்க விரும்புகிறேன்.

சந்திரசேகர் சொன்னது…

//வாக்கு வங்கி ஆட்டத்தில், வாக்குகளை பிரிப்பார் ரஜினி, தனித்து திராவிடக் கட்சிகளை எதிர்த்து நிற்பாரா என்றால் சந்தேகமே.

ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர், தான் தலைவர் என்ற எண்ணம் வர வேண்டும்.
நான் சாமனியன் என்று அடிக்கடி நிருபனம் செய்துக் கொண்டே இருக்கும், ரஜினி தலைமைப் பொறுப்பில் சோபிக்க மாட்டார்.

ரஜினியயை திரையில் மட்டுமே ரசிக்க விரும்புகிறேன்.//

நன்றாக சொன்னீர்கள் டிபிசிடி அவர்களே

என்னைப்போன்ற தீவிர ரஜினி ரசிகர்கள் விரும்புவது , அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருப்பதையே

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்திரசேகர் said...
//வாக்கு வங்கி ஆட்டத்தில், வாக்குகளை பிரிப்பார் ரஜினி, தனித்து திராவிடக் கட்சிகளை எதிர்த்து நிற்பாரா என்றால் சந்தேகமே.

ஒரு தலைமை பொறுப்பில் இருப்பவர், தான் தலைவர் என்ற எண்ணம் வர வேண்டும்.
நான் சாமனியன் என்று அடிக்கடி நிருபனம் செய்துக் கொண்டே இருக்கும், ரஜினி தலைமைப் பொறுப்பில் சோபிக்க மாட்டார்.
//

தான் சாமானியன் என்ற எண்ணத்தை உருவாக்கும் போது ரஜினி தன்னடக்கம் மிக்கவர் என்ற இமேஜை வாக்காளர்களிடையே ஏற்படுத்தாதா ?
:)

✨முருகு தமிழ் அறிவன்✨ சொன்னது…

சரியான கண்ணோட்டத்தில் அமைந்த எழுத்து..
இது ந்டக்கலாம் என்றே நான் நினைக்கிறேன்.
ஆனால் அதற்குள் தேவைக்கும் மேல் உள்நுழைந்து-in road- விடலாம் என்ற கணிப்பே விகா.தைரியமாக இறங்கியது.
முக.என்ற மனிதரின் முக விலாசமும்,தனிமனித நட்பு நாகரிகமும் ரஜினியை மிகவும் தடுக்கின்றன.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவன் /#11802717200764379909/ said...
முக.என்ற மனிதரின் முக விலாசமும்,தனிமனித நட்பு நாகரிகமும் ரஜினியை மிகவும் தடுக்கின்றன.
//

அறிவன் சார்,

நீங்கள் எளிமையாக சொல்லி இருப்பதை இடுகை எழுதும் போது எனக்கு சொல்லவதற்கு வரவில்லை. அதே பொருளில் தான் எழுதினேன். சரியாக தொட்டு இருக்கிறீர்கள். பாராட்டுக்கள். மற்றும் நன்றி !

மீ.அருட்செல்வம்,மாநில செயலாளர்,தமிழ்நாடு மாநில அஞ்சாநெஞ்சன் அழகிரியார் அமைப்பு சாரா தொழிலாளர் முன்னேற்ற சங்கம், மதுரை. சொன்னது…

பெரு நகரங்களில் கக்கூசுக்கு வரிசையில நிக்கிற மாதிரி ஆயிப்போச்சு தமிழ்நாட்டோட நிலம.

ஏற்கனவே 2011 க்கு திடீர் தமிழ்குடிதாங்கி,கறுப்பு எம்.ஜி.ஆர்,
"வாழும் வால்டேர்" சரத்குமார்ன்னு
இவிங்க இம்ச பத்தாதுன்னு இவர் வேறயா?

என்ன கொடுமை சார் இது?

ஆனா ஒன்னு மட்டும் உறுதி.
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//நான் தான் புலி என்று அறிமுகப்படூத்தினாலும், கண்டுக்கொள்ளப்படாமல் விட்டுவிட சாத்தியங்கள் அதிகம்//

புலியை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்..இதைப் பரவலாக நம் ஊரில் பார்க்க முடிகிறது..ரசிகர்கள் பலர் விரும்பாவிட்டாலும், ரசிகர் மன்ற அமைப்புகள் முறைப்படுத்தப்பட்டு ரசிகர்கள் பற்றிய குறிப்புகள் தொகுக்கும் பணி தொடங்கி விட்டது..
வெளிப்படையாக இல்லாவிட்டாலும்..


//தான் சாமானியன் என்ற எண்ணத்தை உருவாக்கும் போது ரஜினி தன்னடக்கம் மிக்கவர் என்ற இமேஜை வாக்காளர்களிடையே ஏற்படுத்தாதா ?//

ஏற்படுத்தியாகிவிட்டது...கூடிய விரைவில் அடுத்த தேவையான தனித் தொலைகாட்சி சானலும் அவர் மகள் சௌந்தர்யா ஆரம்பிக்கப் போகிறார்..

கோவி.கண்ணன் சொன்னது…

// பாச மலர் said...
//நான் தான் புலி என்று அறிமுகப்படூத்தினாலும், கண்டுக்கொள்ளப்படாமல் விட்டுவிட சாத்தியங்கள் அதிகம்//

புலியை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கின்றனர்..இதைப் பரவலாக நம் ஊரில் பார்க்க முடிகிறது..ரசிகர்கள் பலர் விரும்பாவிட்டாலும், ரசிகர் மன்ற அமைப்புகள் முறைப்படுத்தப்பட்டு ரசிகர்கள் பற்றிய குறிப்புகள் தொகுக்கும் பணி தொடங்கி விட்டது..
வெளிப்படையாக இல்லாவிட்டாலும்..


//தான் சாமானியன் என்ற எண்ணத்தை உருவாக்கும் போது ரஜினி தன்னடக்கம் மிக்கவர் என்ற இமேஜை வாக்காளர்களிடையே ஏற்படுத்தாதா ?//

ஏற்படுத்தியாகிவிட்டது...கூடிய விரைவில் அடுத்த தேவையான தனித் தொலைகாட்சி சானலும் அவர் மகள் சௌந்தர்யா ஆரம்பிக்கப் போகிறார்..
//

பாசமலர் மேடம்,

அரசியல் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள். அதுவும் ரஜினியின் மூவ் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நான் மேலோட்டமாக எழுதினேன். நீங்கள் உண்மையில் நடப்பதை எழுதி இருக்கிறீர்கள். கூடுதல் தகவல் தந்ததற்கு மிக்க நன்றி !

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//அரசியல் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்//

ஏதோ ஊருக்குப் போனப்ப ரசிகர் மன்றத்தினர் மூலம் காதுல விழுந்த செய்தி...மத்தபடி தொலைக்காட்சி சானல் ஆரம்பிப்பதாகச் சொன்ன செய்தியும் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்த்ததுதான்...

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
//அரசியல் பற்றி நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்//

ஏதோ ஊருக்குப் போனப்ப ரசிகர் மன்றத்தினர் மூலம் காதுல விழுந்த செய்தி...மத்தபடி தொலைக்காட்சி சானல் ஆரம்பிப்பதாகச் சொன்ன செய்தியும் தொலைக்காட்சிச் செய்திகளில் பார்த்ததுதான்...
//

மேடம்,

பெண்கள் சிறிதளவாவது அரசியல் பற்றி அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் எழுதியதை பெருமையாக குறிப்பிட்டேன். நீங்க இல்லேன்னு மறுப்பது போல் சொல்றிங்க. இருந்தாலும் அந்த செய்திகளை காது கொடுத்து வாங்கி இங்கே சொல்லி இருக்கிறீர்கள். அரசியல் செய்திகள் பற்றிய ஆர்வம் இல்லாமலா ? அதையெல்லாம் இங்கே குறிப்பிடத் தோன்றுகிறது.
:)

பாச மலர் / Paasa Malar சொன்னது…

உண்மையிலேயே அரசியல் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்குண்டு..
மறுத்துப் பேசவில்லை..ஓரளவு தெரியும் என்பதைதான் அப்படிச் சொன்னேன்..

RATHNESH சொன்னது…

அளவுக்கு அதிகமா ஆன்மீகம் பேசற போலி எவனும் எதற்கும் பொறுப்பேற்று தலைமை வகித்து கஷ்ட நஷ்டங்களை FACE பண்ண தயாரா இருக்க மாட்டான். ரஜினி அந்த ரகத்தில் நம்பர் ஒண்ணு.

அவருக்குள்ள அரசியல் சம்பந்தமா கொஞ்சநஞ்ச ஆசை ஜொள்ளு இருந்ததுன்னா அதை 'பாபா' படத்தின் மகத்தான 'வெற்றி' குழி தோண்டிப் புதைச்சிருக்கும். இப்போ அவர் அடிக்கற ஸ்டண்டு எல்லாம் வருகின்ற படங்களை ஓட வைக்க இளிச்சவாய் ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக.

சிவாஜி படம் வியாபார ரீதியாக வாங்கியவர்களுக்கு நஷ்டம் தந்திருக்கும் விஷயம் எவ்வளவு பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. 'சந்திரமுகி' படம் மாதிரி அவர் அடக்கி வாசிச்சாத் தான் எம்ஜிஆர் கடைசி காலத் திரை உலகில் கண்ட தோல்விகளாக ஆகாமல் இவருடைய திரை உலக வாழ்க்கை நீடிக்கும்.

குவாட்டர் கோயிந்தன் சொன்னது…

எது எப்படி போனாலும்,
யார் என்ன சொன்னாலும்? எப்படி எல்லாமோ நீங்க ரஜினி பாட்டு போட்டு
பதிவு எழுதினாலும்?
யார் ஆட்சிக்கு வந்தாலும்.

"நாங்களும் மாற மாட்டோம்..
எங்களுக்கும் நல்ல தலைவனை தேர்ந்தெடுக்க மாட்டோம்.
நாங்கள் எலும்பை மட்டுமே நக்கி, எலும்பும் தோலுமாக வாழும்
அறிவற்ற பொது ஜனம்".

எங்க ரஜினி இன்னொரு பாட்டு பாடி இருக்கார்
"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை" ( படம்: முள்ளும் மலரும்)

ஏன்னா...
இதுதான் இங்குள்ள பொதுஜன மனநிலை.

pls visit:
http://golisodagoyindan.blogspot.com

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said...
வந்திருந்தா, அப்பவே வந்திருக்கனும்

அலையடிச்சப்ப..

இப்ப, அலையும் இல்லை ஒரு மண்ணும் இல்லை.

புலி வருது, புலி வருது என்று போக்கு காட்டினால், கடைசியில், புலியே வந்து..

நான் தான் புலி என்று அறிமுகப்படூத்தினாலும், கண்டுக்கொள்ளப்படாமல் விட்டுவிட சாத்தியங்கள் அதிகம்.

ரஜினி என்ன தான் மண்ணி மைந்தன் என்றுப் பாட்டுப் பாடினாலும், அவர் மண்ணின் மைந்தாரா என்றுப் பார்த்தால், அவருடைய ஆர்வங்கள் பெங்களூருவை நோக்கியே இருக்கின்றது.
//

டிபிசிடி ஐயா,

ரஜினி பெங்களூரில் ஆர்வம் வைத்திருந்தாலும் தனது பெரும் ஐஸ்வரிய சொத்தான மகளை தமிழனுக்குத்தானே மணம் முடித்துக் கொடுத்தார். ராஜ் தாக்ரே மாதிரி பேசுறிங்களே. யாதும் ஊரே யாவரும் கேளிர், தமிழ் மண்ணை யார் வேண்டுமானால் தலைமை ஏற்கலாம், அவர் இந்த மண்ணையும் தமிழர்களையும் நேசிக்கனும் அவ்வளவுதான்ன்
:)

நான் இடுகையில் ரஜினி அரசியல் வருகையை வரவேற்றோ / எதிர்த்தோ ஒன்றும் சொல்லவில்லை. சாதக பாதகங்களை 'காலம்' கண்டுகொள்ளாது.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சந்திரசேகர் said...
நன்றாக சொன்னீர்கள் டிபிசிடி அவர்களே

என்னைப்போன்ற தீவிர ரஜினி ரசிகர்கள் விரும்புவது , அவர் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருப்பதையே
//

சந்திரசேகர் ஐயா,
ரஜினி ரசிகர்களில் இரு வகை, ஒன்று உங்களைப் போல் ஸ்டைலை / நடிப்பை(?) ரசிப்பவர்கள். மற்ற ரசிகர்கள் பாரிவள்ளலாக நினைத்து உருகி அவரை தலைமை ஏற்க அழைப்பவர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//பூச்சாண்டி said...
பெரு நகரங்களில் கக்கூசுக்கு வரிசையில நிக்கிற மாதிரி ஆயிப்போச்சு தமிழ்நாட்டோட நிலம.//

பூச்சாண்டி சார்,
உண்மையாகவே அப்படி நின்ற அனுபவம் உண்டு.

//ஏற்கனவே 2011 க்கு திடீர் தமிழ்குடிதாங்கி,கறுப்பு எம்.ஜி.ஆர்,
"வாழும் வால்டேர்" சரத்குமார்ன்னு
இவிங்க இம்ச பத்தாதுன்னு இவர் வேறயா?
என்ன கொடுமை சார் இது?
//

அவர்களும் இந்நாட்டின் சிலரசிகார்களின் மனத்தை ஆளும் மன்னர்கள் தானே. :)

//ஆனா ஒன்னு மட்டும் உறுதி.
அண்ணன் வந்தா தமிழ்நாடு அமெரிக்கா.
//

அவ்வளவு சீரியஸ் ஆக எழுதியதற்கு மாற்றாக ஒரு வல்லிய ஜோக்கா ?:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாச மலர் said...
உண்மையிலேயே அரசியல் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்குண்டு..
மறுத்துப் பேசவில்லை..ஓரளவு தெரியும் என்பதைதான் அப்படிச் சொன்னேன்..
//

பாராட்டுக்கள் மேடம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
அளவுக்கு அதிகமா ஆன்மீகம் பேசற போலி எவனும் எதற்கும் பொறுப்பேற்று தலைமை வகித்து கஷ்ட நஷ்டங்களை FACE பண்ண தயாரா இருக்க மாட்டான். ரஜினி அந்த ரகத்தில் நம்பர் ஒண்ணு.//

ரத்னேஷ் அண்ணா,

எல்லா பிரபலமான ஆன்மிகவாதிகளும் மக்களை எதோ ஒருவிதத்தில் நம்ப வைக்கத்தானே வேஷம் கட்டுறாங்க.
:)

//அவருக்குள்ள அரசியல் சம்பந்தமா கொஞ்சநஞ்ச ஆசை ஜொள்ளு இருந்ததுன்னா அதை 'பாபா' படத்தின் மகத்தான 'வெற்றி' குழி தோண்டிப் புதைச்சிருக்கும்.//

ஜொள்ளா அது ? லொள்ளு கலைஞர் ஐயா என்று வெளியில் சொன்னாலும் 'இப்போ இராமசாமி' என்று கலைஞரை நக்கல் அடித்ததாகத்தான் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார், அதில் அரசியல் வாதியாக அவர் ஆகவில்லையே.

//இப்போ அவர் அடிக்கற ஸ்டண்டு எல்லாம் வருகின்ற படங்களை ஓட வைக்க இளிச்சவாய் ரசிகர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக.//

படத்தில் கதை இருந்தாலே ஓடிவிடும் என்று சந்திரமுகி வெற்றிக் பிறகும் பாபாதோல்விக்கு பின்னும் உணர்ந்துவிட்டார். அதனால் ரசிகர்களின் தங்கக் காசை கவர்வது பெரிய நோக்கு அல்ல.

கோவி.கண்ணன் சொன்னது…

//ரஜினி இன்னொரு பாட்டு பாடி இருக்கார்
"ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை" ( படம்: முள்ளும் மலரும்)

ஏன்னா...
இதுதான் இங்குள்ள பொதுஜன மனநிலை.

pls visit:
http://golisodagoyindan.blogspot.com//

கோவிந்தன் சார்,

அவர் அந்த பாடலைப் பாடிய காலத்தில் இந்த அளவுக்கு ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொள்ளவில்லை. நடிகராகத்தான் இருந்தார். 'அப்பாவி' நடிகராக இல்லை. சோ அது கணக்கில் வராது.

அசுரன் சொன்னது…

//"சோ" அது கணக்கில் வராது.//

இதில் உள்குத்து இல்லை என்று நம்புகிறேன்.

அசுரன்

ஜமாலன் சொன்னது…

நண்பர் கண்ணனுக்கு..

கண்ணுக்குத தெரியாமல் இழையோடும் பாசம் இருக்கத்தான் செய்கிறது :):):). நீங்கள் ஆருடமாக எழுதுகிறீர்கள். ஆனால் உங்கள் மொழி திக்கு் தெரியாமல் திரிந்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பேச வார்த்தைகளை தருகிறது. இதுதான் உங்கள் பதிவின் அரசியல். இதைப் பேசுவதன் மூலம் ஒரு கருத்துக் கட்டமைப்பபை உருவாக்க முனைகிறீர்கள்.

1. அதில் ரஜனியின் நிறத்தை விட்டவிடடீர்கள். டிபிசீடி அதை சரியாக பிடித்துள்ளகார். காவி நிறம். ரஜனியின் அரசியல் ஆலொசகர்கள் சோ மற்றும் சத்ருகன் சின்ஹா இதையும் சேர்த்து எழுதவில்லை. இது மறத்தலின் அரசியலா? அல்லது ரஜனி ஒரு மென் இந்தத்தவா சிந்தனை உள்ளவர் என்பதை மறுக்கிறீர்களா? நான் பிஜேபியை ஆதரித்து இரட்டை இலைக்கு வாக்களித்தேன் என்று அறிவித்தவர் அவர்.

2. நண்பர் ரத்தேணஷ் கருத்து உடன் எனக்கு முழு உடன்பாடு உண்டு. ரஜனி ஒரு போலி ஆன்மீகவாதி. அத்துடன் போலித்தனத்திற்காக தனது இயல்பு வாழக்கையை சிதைத்துக் கொண்ட்வர். தனது ரசிகனை பொறுப்புடன் அனுகவோ அல்லது இத்தனை தங்க காசு பன்னும் அவர்.. ஒரு தாரே ஜமீன் பர் எடுத்து தனது ரசிகனை ஒரு நல்ல மனநிலைக்கு ஆட்படுத்தவோ மாட்டார். கனவுகளை பலகோடி ரூபாய்க்கு விற்பதை தவிர. அது என்னங்க ஆண்டவன் அருளா? 140 கோடி. ஆட்டக்கார அலமேலுவில் ஆடு கூட அன்றைய மதிப்பில் பல லட்சம் சம்பாரித்தது. ரஜனியே தன்னை ஒரு ரேஸ் குதிரை என்று கூறிக்கொண்டார். சிவாஜியின் தோல்வி மறைக்கப்படுகிறது என்பததான் உண்மை. இப்பொழுதுகூட 140 கோடி. ஏற்கனவு சரயாவின் மார்பிளவுகளுக்கும் தொப்புளுக்கும் செலவு செய்தது 90 கோடி. தற்பொழுது கூடுதலாய் அவிழ்க்க நடிகைகளை தேடிக் கொண்டிருக்கிறர்கள். ஐஸ் அக்கா கர்ப்பமாயி மறுபடியும் ரஜனியின் ஆசையில் மண் அள்ளிப் போட்டுவிட்டது. கஜனி முகமதுவிற்கு பறிகு ஐஸை நொக்கி பலமுறை படையெடுத்தவர் அண்ணன் ரஜனிதான். போனவாரம் பேட்டியில்கூட கூறினார் பாபாவில் அல்லது சந்திரமுகியில் ஐஸை நினைத்து பாருங்கள் அதன் ரேஞ்சு வேறு என்றார் ஜொள்ளு வழிய. நிறைய பேசலாம். பிரச்சனை அதையும் இதையும் பேசி கடைசில கிளவன தூக்கி மணையில வை என்ற கதையாகிவிடும்.

3. தமிழனுக்கு அவர் மகளை தந்து விட்டார். தாங்கள் கூறவரும் கருத்து.....? அடிக்கடி தாய்தமிழ் மண்ணப்பா 'பண்'ணப்பா சிங்கத் தமிழன் தங்கத் தமிழன் வேர்வைத் துளிக்கு தங்ககாசு என்று அவர் பாடுவதின் பொருள் தான் தமிழன் என்கிற பயத்தின் உளரலும் உள் மன உறுத்தலும்தான்.

4. ரஜனி அரசியலுக்கு வருவதற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. டெபாசிட் தொகை கட்ட பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிறகலாம். எஙகள் ஊரில் ஒரு டீக்கடைக்காரர் எல்லா தோதலிலம் நிற்பார். அவரது மணைவியே அவருக்கு ஓட்டு போடுவதில்லை என்பது வேறு. அவருக்கான ஓட்டு வங்கி பற்றிய உங்கள் அலசலில்தான் பிரச்சனை. சில தந்திரங்களும் சூத்திரங்களும் பலிக்கும் எப்பொழுது என்றால் ஓரளவுவாவது மக்கள் சக்தி இருந்தால். பெண்கள் ஆதரிக்கும் நபரே தமிழக்த்தில் ஆச்சியை பிடிக்க முடியும். காரணம் வாக்களிப்பதை தங்களது கடமையாக கொண்டவர்கள் குளித்தவிட்டு கோவிலுக்கு செல்வதைப்போல வாக்கச்சாவடிக்கு செல்பவர்கள் அவர்கள் மட்டுமே. தேர்தல் என்றால் மப்புதான் நம்ம கணக்கு. சர்வ கட்சிகளிடம் சரக்கு வாங்கி அடிப்பதே நம்கடமை. பெண்கள் இன்னும் ரஜனியை ஒரு மாற்று சக்தியாக உணரவில்லை. இருப்பது ரசகர்கள் என்கிற பெயரில் ஒரு சில சுயலாபம் பார்க்க விரும்பும் ஆட்களே. பத்தரிக்கைககளின் ஆதிகக மதவாாத சக்திகளின் ஆசைதான் ரஜனீயின் அரசியல். குருட்டுப்பூனை விட்த்தில் பாங்ந்த கதையாக நீங்கள் சொன்னதும் நடக்கலாம். தமிழ் என்ற செர்ல்லிற்கு மற்றொரு பொருள் ஏமாளிகள் என்பதுதானே.

5. ரஜனி உண்ணாவிரதம் காவரிப் பிரச்சனையில் என்ன நடந்தது. ஆதரிக்கக்கூட ரசிகர்மனற்ங்கள் தயாரில்லை. வீரப்பன் பிரசசனையில் அவர் பாடுபட்டது ராஜ்குமாருக்காக. ராஜ்குமார் குறி தமிழர்கள். நீங்கள் ஆதரிப்பதோ ஆருடம் சொல்வதோ தப்பில்லை. அதை பல கோணங்களிலும் அலசியிருக்கலாம்.

6. ரஜனிக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா? இல்லையா என்பதல்ல பிரச்சனை.இருப்பதாக நம்பப்ட்டு ஒரு மாயை கட்டப்படுகிறது. அரசியலின் ஆரம்பம் இந்தவகை போலித்தனமான கட்டமைப்புகள்தான். அந்த கட்டைமப்பிற்கு துணைபோவது நீங்களும் என்பதுதான் வருத்தமாக உள்ளது.

ஜெகன்மோகினியை நமீதா ரீமேக் செய்வதாக ரத்ணேஷ் கூறியு்ள்ளார். அதற்கு நம்பி 150 கோடிகூட செலவு செய்யலாம். நம்மால் முடிந்தது நமது தெருக் கோடியிலாவது போஸ்டர் ஒட்டலாம். ஜெயலலிதாவின் இடததை தங்கத் தலைவி நமிதாதான் பிடிக்கப் போகிறார் என்றும் மானாட மயிலாடாவின் அரசியல் அதுதான் என்றும் பாடமாகவின் விருப்பத்திற்காக புடவை தழதழக்க அவர் வருவதும் தமிழை கொலை த்து பேசுவதும் என அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டது என தீவிரமான ஒரு ஆய்வுக் கட்டுரை அடுத்த பதிவில் எழுதலாம் என்று உள்ளேன். :)))))))

நல்ல சிறந்த பதிவகளை எழுதிக்கொண்டிருக்கும்போது இதுபோன்ற நகைச்சுவை ரிலாக்ஸ் வேறயா? அய்யோ அய்யோ..

ஜமாலன் சொன்னது…

அண்ணன் எப்ப சாவான என்று ரஜனி எதிர்பார்த்திருக்கும் அண்ணன் பெயரை சொல்லாமல் குறிப்பாக உணர்த்தி ரஜனியை வம்பில் மாட்டிவிடுகிறீர்களே இது நியாயமா?

ஜெமோ ஆவி போல கிள்ம்பிடப்போறாங்க...? :)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
நண்பர் கண்ணனுக்கு..

கண்ணுக்குத தெரியாமல் இழையோடும் பாசம் இருக்கத்தான் செய்கிறது :):):). நீங்கள் ஆருடமாக எழுதுகிறீர்கள். ஆனால் உங்கள் மொழி திக்கு் தெரியாமல் திரிந்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பேச வார்த்தைகளை தருகிறது. இதுதான் உங்கள் பதிவின் அரசியல். இதைப் பேசுவதன் மூலம் ஒரு கருத்துக் கட்டமைப்பபை உருவாக்க முனைகிறீர்கள்.
//

ஜமாலன்,

உடலரசியல் தெரிந்தவர் என்பதால் எல்லாவற்றிலும் அரசியல் தான் இருக்கிறது என்று நினைப்பது உங்கள் இயல்பாகிவிட்டது.
:)

கெமிஸ்ட்ரி ப்ரொபசருக்கு பிரபஞ்சம் முழுவதும் இருக்கும் ஒவ்வொரு பொருளிலும் கெமிஸ்டிரி பார்முலா (மூலக் கூறு) இருப்பது தெரியும், கவிஞனுக்கு எல்லாம் கவிதை வரியில் தெரியும், பொருளாதார நிபுணருக்கு எல்லா பொருள்களுக்கும் எதாவது ஒரு விலை நிர்ணயம் செய்து அப்படி பார்ப்பார். அரசியல் வாதிகளுக்கு எந்த சொல்லிலும் அரசியல் இருக்கிறதா என்றே பார்பார்கள்.

உடலரசியல் காணும் உங்கள் இயல்பில் நீங்கள் இருக்கிறீர்கள்.
:)

நடப்பை வைத்து இந்த கட்டுரையை எழுதினேன். நடப்பதற்கான சாத்திய கூறுகளைக் கூறினேன். கட்டுமானம் செய்பவர்கள் இப்படித்தான் செய்வார்களா என்று தெரியாது. உங்கள் மொழியில் இது கட்டுமானம் என்றால் எனக்கு அதுபற்றி புரியாததால், உங்கள் எழுத்தாளுமை வைத்து நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் என்று மட்டுமே சொல்ல முடியும். சரி என்று ஒப்புதல் தரமுடியாது.
:)

ரஜினி அரசியலுக்கு(ள்) வரவேண்டும் என்று எனது ஆசையாக பதிவில் எங்கும் கோடிட்டு கூட காட்டவில்லை. அப்படி இருந்தால் சொல்லுங்கள். அவர் வருவதற்கான சாத்திய கூறுகள், அதற்கான முயற்சியும், காயும் சாமார்த்தியமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று எழுதி இருக்கிறேன். அவர் வந்தால் நாட்டுக்கு நல்லதா கெட்டதா என்றும் குறிப்பிடவில்லை.

*****

ஷங்கர் படங்களை விட நமிதா நடிக்கும் ஜெகன் மோகினி ரீமெக் என்பதால் பழைய கதையாவது மிஞ்சும். தாரளமாக பார்க்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அசுரன் said...
//"சோ" அது கணக்கில் வராது.//

இதில் உள்குத்து இல்லை என்று நம்புகிறேன்.

அசுரன்
//

அசுரன்,
உங்களுக்கு பாம்பு கண்ணு. மறைவாக உள்குத்தினாலும் கண்டுபிடிச்சிடுறிங்க !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்