பின்பற்றுபவர்கள்

6 பிப்ரவரி, 2009

சம்போ மகாதேவா...! ஸ்வாமி ஓம்கார் யார் ?

சென்னையில் பதிவர் சந்திப்பை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்று இருபகல் ஓர் இரவு ஓய்வு எடுத்து, அங்குள்ள உறவினர்களை அன்பு மழையில் நனைந்த பிறகு நான் சென்ற இடம் கோவை.

குரு கதைகள் மூலம் அறிமுகமாகி இருந்தார் ஸ்வாமி ஓம்கார். பெரும்பாலும் சிலர் புரொபைலில் ஒரு(வர்) படத்தைப் போட்டுவிட்டு வேறு ஒருவர் எழுதுவார்கள், மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் ஸ்வாமி ஓம்காரின் பதிவு பக்கத்தைப் பார்பவர்களுக்கு அப்படியான நினைப்பு இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் தனக்கு 108 வயது (இப்ப 109 ஆம்) ஆவதாக எழுதி இருந்தார். மற்றொரு யாகவா முனிவரா ? தமிழ்நாடு தாங்காதே என்றெல்லாம் நினைக்க வைத்தது... குரு கதைகளில் அவர் எழுதிய சில கதைகள் எனக்கு பிடித்து இருந்தது. காரணம் ஆத்திகம் போற்றுவோர் பெரும்பாலும் நாத்திகனை வில்லனாக வைத்து கதை எழுதி முடிவில் நாத்திகன் திருந்தி ஆத்திகன் ஆவதாக எழுதுவார்கள். இவர் அப்படி அபத்தமாக எழுதாமல் இயல்பாக எழுதி இருந்தார். பின்னூட்டங்கள் போட்டு பாராட்டினேன். அதன் பிறகு தனி மின்னஞ்சல் தொடர்ப்பு இருவருக்கும் ஏற்பட்டது. ஸ்வாமி உரையாடியிலும் வந்து பேசுவார்.

ஸ்வாமிகளை நேரில் சந்திக்க வேண்டும் என்று நினைத்து 'ஸ்வாமி ஊருக்கு வந்தால் உங்களைப் பார்க்கிறேன், எந்த ஊரில் இருக்கிங்க....' என்று கேட்க முகவரி மற்றும் தொலைபேசி எண்களைக் கொடுத்துவிட்டு, முன்று நாள் முன்பே வருவதை உறுதி படுத்திவிடுங்கள் (கோவியாரை சந்திக்கும் ஆவல் எனக்கும் உண்டு. காத்திருக்கிறேன்.) என்றார். அதன் படி ஜனவரி 28 புதன் கிழமை வருவதை திங்கள் உறுதி படுத்திவிட்டேன்.

செவ்வாய் இரவு 11 மணிக்கு கிளம்பிய பேருந்து காலை 6 மணிக்கு கோவையில் இறக்கி விட்டது. கோவையின் குளிர் அதிகாலையில் நல்ல இதமாக இருந்தது.

(காலை 6 மணி)

(அதே இடம் தான் காலை 8 மணி)

இறங்கிய இடத்தின் அருகிலேயே (காந்தி புரம்) விடுதி ஒன்றில் ஒரு அறையை வாடகைக்கு (Hotel City Park) எடுத்து,


சிறிது ஓய்வு எடுத்துவிட்டு, ஸ்வாமிக்கு எனது வருகை தகவல் சொல்லிவிட்டு, Refresh செய்துவிட்டு, அருகில் இருந்த கவுரி சங்கரில் காலை உணவை முடித்துக் கொண்டு சுமார் 8:30 மணி அளவில் ஆர் எஸ்புரம் பொன்னுரங்கம் தெருவில் இருக்கும் ஸ்வாமியின் குடிலுக்கு அருகில் செல்லும் பேருந்தில் ( 7 ஆம் நம்பர் என்று ஸ்வாமியின் உதவியாளர் சொன்னார்) ஏறி குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றேன். பழைய நம்பர், புதிய நம்பர் குழப்பத்தில் சிறிது நேரம் அலைந்துவிட்டு, சரியாக 9 மணி 2 நிமிடங்களில் ஜெயின் டெம்பிள் எதிரில் இருக்கும் ஸ்வாமியின் பிரணவபீடம் குடிலுக்குள் சென்றேன்.பெரிய ஆர்பாட்டம் இல்லாமல் எளிமையாக இருந்தது வரவேற்பு அறை (வராண்டா) ஸ்வாமியின் உதவியாளர் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னார்.

அந்த நேரத்தில் அப்படியே சுற்றிலும் நோட்டமிட்டேன். அலமாரியில் ஆன்மிக புத்தகங்கள் இருந்தது,எதிரே ஸ்வாமியின் சேவை குறித்த ஒட்டி இருந்தது. 2 நிமிடத்தில் பளிச் சென்ற கோல்கேட் புன்னகையுடன் உள்ளிருந்து 'அட நிஜமாலும் நான் தான். புரொபைலில் இருக்கும் அதே ஸ்வாமி நம்புங்கப்பா' என்று சொல்லாமல் வந்து நின்றார், கைக்குலுக்கி வரவேற்றார்.

பிறந்த ஊர், ஸ்வாமி ஆனதன் நோக்கம் போன்ற வெர்ரி வெர்ரி பர்சனல் தகவல்களை ஒரு நேர்முக முகவர் போல கேட்க கேட்க இயல்பாக எல்லாவற்றையும் சொன்னார். அப்படி என்ன சொன்னார் ? அதெல்லாம் அவரைப் நேரில் பார்க்கும் போது கேட்டுக் கொள்ளுங்கள். ஸ்வாமிக்கு 32 வயது இருக்கும், பிறகு 108 வயது ? இங்கே எழுதி இருக்கிறார். ஸ்வாமி எந்திரவியல் படித்து முடித்து இருக்கிறார். சரளமாக பேச எழுத என சமஸ்கிரதம், ஆங்கிலம், தமிழ் புலமை பெற்றிருக்கிறார்.


"உங்களுக்கு பொது இடத்துக்கு போகும் போது ப்ரைவசி இருக்காதே...."

"ஆமாம், சாதரணமாக நெருங்கியவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தாலே...எதோ அருள்வாக்கு சொல்கிறேன் என்று நினைத்து...அருகில் இருப்பவர்கள் காதைத் தீட்டிக் கேட்பார்கள்...சங்கடமாக இருக்கும்"

"பிரபலமானலே இதெல்லாம் சகஜம் தான் ஸ்வாமி"

"எனது அன்றாட நடவடிக்கைகளில் தொடர்பு இல்லாத உங்களை போன்றவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பு எனக்கு மிகவும் குறைவு, இயல்பாக பேசுவதற்கு வெகு சிலரே இருக்கிறார்கள்"

"கோவையில் வலைப்பதிவு சந்திப்பு நடந்தால் கலந்து கொள்ளலாமே..."

"கண்டிப்பாக தெரியவந்தால் செல்வேன்...இயல்பாக பேசும் நண்பர்கள் எனக்கு வலைப்பதிவில் கிடைப்பதை வரவேற்கிறேன்"

(கோவை, திருப்பூர் பதிவர்களே ப்ளீஸ் நோட் திஸ்)

*****

அப்பறம் பார்பனர், பார்பனர்அல்லாதோர் (NB), சங்கர மடம், அரசியல்களைப் பற்றி பேசினோம். "ஆத்திகம், ஆன்மிகம் கெட்டும் போனது போல் தெரிவதற்கு ஆத்திகர்களின் மித மிஞ்சிய மூட நம்பிக்கையும், போலி சாமியார்களும் தான் காரணம், அதைத்தான் நான் நீக்குவதற்காக முயல்கிறேன். உலகத்தில் யாரும் நாத்திகர்கள் கிடையாது. ஆத்திகர்கள் கெட்டுப் போனதால் நாத்திகர்கள் உருவாகிறார்கள்" என்றார். ஆதிசங்கரரைப் பின்பற்றுவதாகக் கூறினார்.

ஸ்வாமியின் உதவியாளர் இருவருக்கும் ஆப்பிள் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார். ஸ்வாமியின் தோற்றம் செழிப்பாக இருப்பதற்கு அவ்வப்போது குடிக்கும் ஆப்பிள் ஜூஸ் தான் காரணமான்னு கேட்காதிங்க. :)

"பதஞ்சலியோகங்கிற பெயரில் இப்போதெல்லாம் யோகம் தியானமெல்லாம் நிறைய பேர் சொல்லிக் கொடுக்கிறார்கள், ஸ்வாதிஷ்டம், மணிப்பூரகம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, அதெல்லாம் உடம்பில் ஒவ்வொரு பகுதியில் இருக்குன்னு நினைச்சிக்கனுமாம், மன ஏமாற்று, கற்பனையாக ஒன்றை நினைத்துக் கொள்ளும் போது அது வெறும் கற்பனைதான் எனவே நான் அதுபோன்ற யோக சூத்திரங்களை கற்றுக் கொள்ளவோ, கற்றுக் கொடுக்கவோ இல்லை" - என்றார்

ஸ்வாமியுடனான பேச்சு சுமார் 1:45 மணி நேரம் தொடர்ந்து கொண்டி இருந்தது. முன்பே பழகிய நண்பரைப் போலவே என்னுடன் (பந்தா எதுவும் இன்றி) பேசினார். கொஞ்சம் புகழடைந்தாலே எளிதில் நெருங்கமுடியாத இவரைப் போன்றவர்களிடையே இவர் மாறுபட்டவராக உணரமுடியும். "ஓம்கார்" என்பது தனது இயற்பெயர் தானென்றார்

என்னைப் பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். அதன் பிறகு 10 நிமிடங்கள் எளிய தியானம் பண்ணலாம் வாருங்கள் என்று உள்ளே அழைத்துச் சென்றார். நறுமணம் கமழும், மெல்லிய வெளிச்சம் உள்ள 6 x 12 அடி தியான அறையில் தரைவிரிப்பில் எதிரெதிரே அமர்ந்து கொள்ள, தான் சொல்வதை திருப்பிச் சொல்லச் சொன்ன்னார். அடித்தொண்டையில் இருந்து 'ஓம்.........' என்ற ஓங்கார ஒலியை மும்முறை எழுப்பினார், அதன் பிறகு நானும் தொடர்ந்து சொன்னேன். 10 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை.

*******

தியானம் முடிந்ததும், நான் கொண்டு சென்றிருந்த இனிப்பு (சிங்கப்பூர் சாக்லேட்) மற்றும் ஆன்மிகம் தொடர்பில் ஒரு நூல் ( திருநெல்வேலிக்கே அல்வா)அவரிடம் கொடுத்தேன். அவரும் தான் எழுதிய சோதிட திரட்டு பற்றிய நூலைக் கொடுத்தார். ஸ்வாமி இந்த மாதம் டெல்லியில் ஓர் இடத்தில் சொற்பொழிவு ஆற்றுகிறார்.

பிறகு போட்டோ செசன். உங்களிடம் புகைப்படம் (ஸ்வாமி உலகப்புகழ் அடையும் போது, எனக்கும் தெரிந்தவர்தான் என்று சொல்லிக் கொள்ள வேண்டாமா ? அப்படியெல்லாம் இல்லை, பதிவர்களுக்காக) எடுத்துக் கொள்கிறேன், என்றேன். அவருடைய உதவியாளரின் உதவியால் இருவரும் சேர்ந்து நின்ற இப்படம் கிடைத்தது.சுமார் 11 மணி வாக்கில் விடைபெற்றுக் கொண்டு, காந்திபுரம் வந்து சேர்ந்தேன். ஸ்வாமியை ஒரு நல்ல நண்பராக கண்டுகொண்டேன். பயப்படாமல் பழகலாம். நிறைய அங்காங்கே கட் கட் போட்டும் பதிவு நீளமாகிவிட்டது. வெர்ரி சாரி.......:)

நான் சந்தித்தைப் பற்றி ஸ்வாமி எழுதிய பதிவின் சுட்டி இங்கே.

40 கருத்துகள்:

குமரன் (Kumaran) சொன்னது…

:-)

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ஸ்வாமியின் தோற்றம் செழிப்பாக இருப்பதற்கு அவ்வப்போது குடிக்கும் ஆப்பிள் ஜூஸ் தான் காரணமான்னு கேட்காதிங்க. :)//

கோவி அண்ணா,
இதுக்குப் பேரு தான்
1. வரம் கொடுத்தவர் தலையிலேயே...
2. இடத்தைக் கொடுத்தா மடத்தை...
:)))))

ஆப்பிள் சாறு தீட்சை பெற்ற சுவாமி கோவியாருக்கு வாழ்த்துக்கள்! :))

Jokes apart...
சுவாமி ஓம்காருக்கு அடியேன் வணக்கங்கள்!
பிரணவ பீடம் பேர் ரொம்ப அருமையாக, நுட்புணர்வாக இருக்கு!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//ஸ்வாதிஷ்டம், மணிப்பூரகம் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை, அதெல்லாம் உடம்பில் ஒவ்வொரு பகுதியில் இருக்குன்னு நினைச்சிக்கனுமாம், மன ஏமாற்று, கற்பனையாக ஒன்றை நினைத்துக் கொள்ளும் போது அது வெறும் கற்பனைதான்//

ஹா ஹா ஹா
சுவாமிகள் உங்களுக்கு அருளுரை கொடுத்தார் சரி!

நீங்க சுவாமிகளுக்குக் கொடுத்த அருளுரை பற்றிப் பதிவில் சொல்லவே இல்ல? :)

ஒரு வேளை சுவாமிகள், இந்தச் சந்திப்பு பற்றித் தனிப் பதிவு இடுவாரா என்ன? :))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//10 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை//

கோவி அண்ணா தியானம் செய்தாரா, உக்காந்துகிட்டே தூங்கினாரா என்பதை சுவாமிகள் சொன்னா மட்டுமே அடியேன் நம்புவேன்! :))

//ஆன்மிகம் தொடர்பில் ஒரு நூல் ( திருநெல்வேலிக்கே அல்வா)அவரிடம் கொடுத்தேன்//

கம்ப ரசம் தானே? :))

//ஸ்வாமி இந்த மாதம் டெல்லியில் ஓர் இடத்தில் சொற்பொழிவு ஆற்றுகிறார்//

வாழ்த்துக்கள் சுவாமி ஓம்கார்!
சொற்பொழிவை யூட்யூப் வீடியோவாக பதிவிட முயன்றால், அனைவரும் கேட்டு ரசிப்போம்!
எந்தப் பொருளில் பொழிவு?

துளசி கோபால் சொன்னது…

அட தேவுடா...... இவர் நிஜமாவே ஸ்வாமிகளா?

நான்கூட யாரோ ஜாலியா ஜோக்கா இப்படிப் பெயரில் எழுதராங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே.......

கோவைக்குப் போகும் எண்ணம் இருக்கு. நம்ம ஞானவெட்டியாரை ஒருமுறை போய்ப் பார்க்கணும். அப்படியே நம்ம ஓம்கார் ஸ்வாமிகளையும் கண்டுக்கிட்டு வரணும்.

எப்ப அமையுதோ பார்க்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அட தேவுடா...... இவர் நிஜமாவே ஸ்வாமிகளா?

நான்கூட யாரோ ஜாலியா ஜோக்கா இப்படிப் பெயரில் எழுதராங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனே.......

கோவைக்குப் போகும் எண்ணம் இருக்கு. நம்ம ஞானவெட்டியாரை ஒருமுறை போய்ப் பார்க்கணும். அப்படியே நம்ம ஓம்கார் ஸ்வாமிகளையும் கண்டுக்கிட்டு வரணும்.

எப்ப அமையுதோ பார்க்கலாம்.
//
துளசி அம்மா,

ஞானவெட்டியான் ஐயா திண்டுக்கல்லுக்கே இடம் பெயர்ந்துவிட்டார் என்று கேள்விபட்டேன். செல்லும் முன் உறுதிப்படுத்திக் கொண்டு செல்லுங்கள்.

அப்பறம் ஸ்வாமியின் அலைபேசி எண் என்னிடம் இருக்கு, உங்களுக்கு மின் அஞ்சலில் அனுப்புகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு வேளை சுவாமிகள், இந்தச் சந்திப்பு பற்றித் தனிப் பதிவு இடுவாரா என்ன? :))//

கே ஆர் எஸ்,

அவர் ஏற்கனவே போட்டு இருக்கிறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கோவி அண்ணா தியானம் செய்தாரா, உக்காந்துகிட்டே தூங்கினாரா என்பதை சுவாமிகள் சொன்னா மட்டுமே அடியேன் நம்புவேன்! :))//

:) ஸ்வாமியைச் சொல்லவில்லை, என்னைத் தானே சொல்கிறீர்கள். :) ஆனால் படிக்கும் போது என்னிடம் அவர் தூங்கினாரா என்று கேட்டு அவரிடமே அதை உறுதிப் படுத்திக் கொள்கிறேன் என்பது போல் இருக்கு. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
:-)
//

குமரன்,
வெறும் சிரிப்பான் தானா ? எதாவது சொல்லி இருக்கலாம். பாருங்க உங்களுக்கும் சேர்த்து கேஆர்எஸ் பொழந்து கட்டுறார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//kannabiran, RAVI SHANKAR (KRS) said...


நீங்க சுவாமிகளுக்குக் கொடுத்த அருளுரை பற்றிப் பதிவில் சொல்லவே இல்ல? :)//

உங்களை நேரில் பார்க்கும் போது உங்களுக்கும் கண்டிப்பாக உண்டு.

அத்திரி சொன்னது…

ஸ்வாமி கோவி கண்ணனாய......... நமஹ

கிஷோர் சொன்னது…

நான் கடவுள் இன்று ரிலீஸ் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//அத்திரி 11:44 AM, February 06, 2009
ஸ்வாமி கோவி கண்ணனாய......... நமஹ
//

அத்திரியாய நமஹ !

ஸ்வாகா சொல்லாமல் நமஹ சொல்வது பரவாயில்லை :)

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

மீண்டும் நாம் சந்தித்த நாளை கண்முன்னே விவரித்ததற்கு நன்றிகள் பல...

உங்கள் பதிவு என்ன பற்றிய கவர் ஸ்டோரி போல இருக்கிறது. :)

உங்களை எனது பதிவில் நகைச்சுவையாக எழுதியதை போல நையாண்டி செய்வீர்கள் என நினைத்தேன். சப்பென்று இருந்தது ;)
(நல்ல வேலை தப்பித்தேன்..!)

//ஸ்வாமிக்கு 32 வயது இருக்கும்,//

எனது உடலின் வயதை 4 வருடம் கூட்டி சொல்லியதை வன்மையாக கண்டிக்கிறேன் ;)

//உதவியாளர் இருவருக்கும் ஆப்பிள் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தார்.//

அது வெறும் ஆப்பிள் மட்டுமல்ல. ஆப்பிள் டேட்ஸ் என பேரிச்சம் கலந்த கலவை. ஜூஸ் ஈஸ் த சீக்கிரெட் ஆப் மை எனர்ஜி...
:))

//அதன் பிறகு நானும் தொடர்ந்து சொன்னேன். 10 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை.//

கெளரிசங்கரில் நல்ல ஒரு பிடி பிடித்தால்... பத்து நிமிடம் என்ன .. பகலில் நன்றாகவே துங்கலாம் ;)

//ஸ்வாமி உலகப்புகழ் அடையும் போது, எனக்கும் தெரிந்தவர்தான் என்று சொல்லிக் கொள்ள வேண்டாமா ? ///

ஸ்வாமி உலக புகழ் பெறவில்லை என கூறும் கோவியாரை மீண்டும் வன்மையாக கண்டிக்கிறேன் ;)

கூடிய விரைவில் சிங்கை வரும் யோகம் எனக்கு இருப்பதாக ஓர் மரத்தடி ஜோதிடர் சொன்னார். ;))))
அப்பொழுது உங்களையும் பிற சிங்கை பதிவர்களையும் சந்திக்கிறேன்.

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

சாமி கொடுத்த புத்தகத்த படிச்சிட்டிங்களா?

//ஸ்வாமியை ஒரு நல்ல நண்பராக கண்டுகொண்டேன்.//

சிங்கை வந்தால் புலிப் பால் குடிக்க நம்மோடு அமர்வாரா> ;>

நானம் கொள்ளாத பெண்ணும்
நக்கல் இல்லாத ஆணும் உறுப்பிட்டதா சரித்திரம் இல்லை.

இது ஸ்சுவாமி சொன்ன தத்துவத்தில் ஒன்னு....

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் 1:15 PM, February 06, 2009

உங்கள் பதிவு என்ன பற்றிய கவர் ஸ்டோரி போல இருக்கிறது. :)

உங்களை எனது பதிவில் நகைச்சுவையாக எழுதியதை போல நையாண்டி செய்வீர்கள் என நினைத்தேன். சப்பென்று இருந்தது ;)
(நல்ல வேலை தப்பித்தேன்..!)//

அப்படியெல்லாம் தப்ப முடியாது, பரிசல்காரன் படை திரட்டிக்கொண்டு வருகிறார். நன்றாக கும்மி எடுப்பாங்க கவலைப்படாதிங்க. நல்லா சொல்லி வச்சிருக்கேன். நம்ம ஸ்வாமிதான் கூச்சப்படாமல் கும்முங்க என்று!
:)

//ஸ்வாமிக்கு 32 வயது இருக்கும்,//

எனது உடலின் வயதை 4 வருடம் கூட்டி சொல்லியதை வன்மையாக கண்டிக்கிறேன் ;)

பாயும் புலி பார்த்த வயது சொல்லி இருந்தீர்கள், அதில் கூட்டிக் குறைத்துச் சொன்னேன். :)

//அது வெறும் ஆப்பிள் மட்டுமல்ல. ஆப்பிள் டேட்ஸ் என பேரிச்சம் கலந்த கலவை. ஜூஸ் ஈஸ் த சீக்கிரெட் ஆப் மை எனர்ஜி...
:))
//

பேரீச்சம் பழம் பிரம்மச்சாரிகளுக்கு நல்லது அல்ல. சொல்லிப்புட்டேன். அக்கம் பக்கமும் கேட்டுப்பாருங்க !
:)

//கூடிய விரைவில் சிங்கை வரும் யோகம் எனக்கு இருப்பதாக ஓர் மரத்தடி ஜோதிடர் சொன்னார். ;))))
அப்பொழுது உங்களையும் பிற சிங்கை பதிவர்களையும் சந்திக்கிறேன்.//

அப்படியா, 'பிரப்ல ஆன்மிக, சோதிட ஸ்வாமிகள் சிங்கை வருகைன்னு போட்டு பணம் வசூல் பண்ண வசதியாகப் போச்சு ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
சாமி கொடுத்த புத்தகத்த படிச்சிட்டிங்களா?//

இன்னும் இல்லையே....!

//சிங்கை வந்தால் புலிப் பால் குடிக்க நம்மோடு அமர்வாரா> ;>
//

ஓம்கார் ஸ்வாமி ஐயப்ப ஸ்வாமி இல்லை. அதனால் புலிப்பால் விரும்பமாட்டார்

//நானம் கொள்ளாத பெண்ணும்
நக்கல் இல்லாத ஆணும் உறுப்பிட்டதா சரித்திரம் இல்லை.

இது ஸ்சுவாமி சொன்ன தத்துவத்தில் ஒன்னு....
//

ஓ.................ஓ

கோவி.கண்ணன் சொன்னது…

//கிஷோர் said...
நான் கடவுள் இன்று ரிலீஸ் :)
//

எனக்கொரு டிக்கெட்....ப்ளீஸ் !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோவியாரே!
சுவாமிகளை சந்தித்து அழகாகப் பதிவிட்டிருக்கிறீர்கள்.
மனிதம் என்பது நாத்திகவாதியா அல்லது ஆத்திகவாதியா என்று பார்ப்பதில்லை.
இருவரையும் ஒரே தராசின் இரு தட்டுகளிலும் சமமாக வைக்க வேண்டும் என்பது தான்.
சுவாமிகளும் சாதாரணாக எளிமையாகப் பழகுவதாகச் சொல்லி இருக்கிறீர்கள். சுவாமிகள் அப்படித்தான் பழக வேண்டும். அவர்கள் முற்றும் துறந்தவர்கள், பகட்டை விரும்ப மாட்டார்கள்.
இருப்பினும் எனது தமிழுணர்வு நீர்த்துப் போக, சுவாமி ஓம்கார் அவர்களிடம் தாயத்து வாங்கி வந்து உங்களை எனக்குப் போடச்சொன்ன சஞ்சயை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.
சுவாமியும் தமிழுணர்வு உள்ளவராதலால் தான் தாயத்து கொடுத்து அனுப்பவில்லை என்று என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்கிறேன்.
இருப்பினும் தங்கத் தாயத்து கொடுத்தனுப்பினால் பெற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

பரிசல்காரன் சொன்னது…

பக்கத்தில் இருந்தும் எனக்குக் காட்சி தராத ஸ்வாமிகள் உங்களுக்குக் காட்சி தந்ததிலிருந்து ஒரு தத்துவத்தைப் புரிந்துகொண்டேன்.

அடுத்தமுறை கோவை செல்லும்போது (என்)குடும்பத்தோடு அவரைக் காண விழைகிறேன்..

படித்துறை.கணேஷ் சொன்னது…

என்ன நண்பரே, சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டாகிவிட்டதா?!!!

துளசி கோபால் சொன்னது…

//சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டாகிவிட்டதா?!!!//

நியூஸிக் கிளைக்கு நாந்தான் இன்சார்ஜ்!!!

ஏஜன்ஸி எனக்கு மட்டும்தான், இப்பவே சொல்லிட்டேன்:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
//சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டாகிவிட்டதா?!!!//

நியூஸிக் கிளைக்கு நாந்தான் இன்சார்ஜ்!!!

ஏஜன்ஸி எனக்கு மட்டும்தான், இப்பவே சொல்லிட்டேன்:-)
//

பதிவானந்தமயி போய் நியூசி ஓம்காரினி ஆகப் போறிர்கள் !

இப்போதைக்கே வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன். ஆஸி கிளைக்கு எனக்கு ஒரு பொறுப்பு தந்துடனும்.

வாக்காளன் சொன்னது…

போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக, தேஜ்ஸ் ததும்ப இருக்கிறார்.. உங்களு புகைப்பட கலையில் தேர்ச்சி தேவை கோவியாரே.

வாக்காளன் சொன்னது…

profile போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக, தேஜ்ஸ் ததும்ப இருக்கிறார்.. உங்களு புகைப்பட கலையில் தேர்ச்சி தேவை கோவியாரே.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

//ஸ்வாமியின் குடிலுக்கு //

கோவியாரே!
இதெல்லாம் குடிலா??
உங்களுக்கு ஆனாலும் நக்கல் கூட.

மற்றும் ஓங்கார்...பிழைக்கத் தெரிந்தவர்...அருமையான போட்டிலிலாத் தொழிலைத்
தேடியுள்ளார். எந்தப் பொருளாதாரச் சரிவாலும் சரிக்க முடியாத தொழில்.

//சுவாமியின் தோற்ற செழிப்பு;ஆப்பிள் யூஸ்//

ஏதோ;யூனியவிகடனில், குமுதம் ரிப்போட்டரில்.... சூடான பகுதியில் இடம் பிடிக்காமல்
இருந்தால் சரி...

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

பயப்படாமல் பழகலாம்.

!!!!!!!!!!!!!?????????????

வடுவூர் குமார் சொன்னது…

அதன் பிறகு நானும் தொடர்ந்து சொன்னேன். 10 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை.

*******

பத்து நிமிடங்களிலேயே ஸ்டார் தெரியுதே!!!
கொடுத்துவைத்திருக்கிறீர்கள். :-)

Osai Chella சொன்னது…

கோவை ஆர்.எஸ்.புரம் வரை நீங்கள் வந்திருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் சந்தித்திருப்பேன்! என் அலுவலகமும் அங்குதான் இருக்கிறது! அப்படியே ஸ்வாமி ஜீவன் அப்தகம் அவர்களையும் சந்தித்திருக்கலாம் நீங்கள். நிட்சே முதல் நிகிலிசம் வரை, சாக்தம் முதல் அத்வைதம் வரை அலைக்கழித்து கடைசியில் சென் சொல்லும் அல்லது சொல்லாத அல்லது சொல்லாமல் சொல்லிய உண்மைகள் வரை நீங்களும் கலந்துரையாடியிருக்கலாம்!! சரி அடுத்தமுறை வந்தால் சொல்லுங்க. இப்ப வந்ததை சொல்லாமல் விட்டதுக்கும் சேர்ந்து சண்டைபிடித்துக்கொள்ளலாம்! ;-)

priyamudanprabu சொன்னது…

உலகத்தில் யாரும் நாத்திகர்கள் கிடையாது. ஆத்திகர்கள் கெட்டுப் போனதால் நாத்திகர்கள் உருவாகிறார்கள்"
////


மிகச்சரியா சொல்லியுள்ளார்

கோவி.கண்ணன் சொன்னது…

// OSAI Chella said...
கோவை ஆர்.எஸ்.புரம் வரை நீங்கள் வந்திருப்பீர்கள் என்று தெரிந்திருந்தால் நிச்சயம் சந்தித்திருப்பேன்! என் அலுவலகமும் அங்குதான் இருக்கிறது! அப்படியே ஸ்வாமி ஜீவன் அப்தகம் அவர்களையும் சந்தித்திருக்கலாம் நீங்கள். நிட்சே முதல் நிகிலிசம் வரை, சாக்தம் முதல் அத்வைதம் வரை அலைக்கழித்து கடைசியில் சென் சொல்லும் அல்லது சொல்லாத அல்லது சொல்லாமல் சொல்லிய உண்மைகள் வரை நீங்களும் கலந்துரையாடியிருக்கலாம்!! சரி அடுத்தமுறை வந்தால் சொல்லுங்க. இப்ப வந்ததை சொல்லாமல் விட்டதுக்கும் சேர்ந்து சண்டைபிடித்துக்கொள்ளலாம்! ;-)
//

ஓசை செல்லா,

உங்களுக்கெல்லாம் என்னைப் பார்க்க விருப்பம் இருக்குமென்றால்லாம் நான் நினைக்கவில்லை. கோவை வருவதைப் பற்றி திட்டமிடாததால் தேதிக் குறிப்பிடாமல் எனது அலைபேசி எண்களைக் குறிப்பிட்டு பதிவில் எழுதி இருந்தேன்.

இதுகூட நீங்கள் சீரியசாக சொல்லி இருக்கிறீர்களா, நக்கல் அடித்திருக்கிறீர்களா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//வாக்காளன் said...
போட்டோவில் ஓம்கார் நல்ல கலாராக, தேஜ்ஸ் ததும்ப இருக்கிறார்.. உங்களு புகைப்பட கலையில் தேர்ச்சி தேவை கோவியாரே.
//

சரிதான் !!! ட்ரெயினிங்க் எடுக்கனும், போட்டோ எடுக்க அல்ல, போட்டோ ஷாப் பயன்படுத்துவதற்கு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் said...
பக்கத்தில் இருந்தும் எனக்குக் காட்சி தராத ஸ்வாமிகள் உங்களுக்குக் காட்சி தந்ததிலிருந்து ஒரு தத்துவத்தைப் புரிந்துகொண்டேன்.//

திஸ் ஈஸ் டு மச் :) நான் ஆசிவாங்கச் செல்லவில்லை, நண்பரை கண்டு கொள்ளவே சென்றேன்

//அடுத்தமுறை கோவை செல்லும்போது (என்)குடும்பத்தோடு அவரைக் காண விழைகிறேன்..
//

ஷம்போ மகாதேவா...போகும் போது பூவும் புஷ்பமும் வாங்கிச் செல்லுங்க !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தங்கத் தாயத்து கொடுத்தனுப்பினால் பெற்றுக் கொள்வதில் எந்த தயக்கமும் இருக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
//

ஜோதி, தங்க காப்பு போட்டால் உள்ளே போகக் கூட தயார் என்று சொல்லுவிங்க போல, உங்ககிட்ட உசாராக இருக்கனும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// படித்துறை.கணேஷ் said...
என்ன நண்பரே, சிங்கையில் ஆஸ்ரம பிரான்ச் ஆரம்பிக்க ஒப்பந்தம் போட்டாகிவிட்டதா?!!!

4:54 PM, February 06, 2009
//

மாதாஜிகளைக் கொண்டு வந்து சேர்க்க வேண்டியது தங்கள் பொறுப்பு !

கோவி.கண்ணன் சொன்னது…

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...


மற்றும் ஓங்கார்...பிழைக்கத் தெரிந்தவர்...அருமையான போட்டிலிலாத் தொழிலைத்
தேடியுள்ளார். எந்தப் பொருளாதாரச் சரிவாலும் சரிக்க முடியாத தொழில்.//

அப்படியா சொல்றிங்க, அப்ப ஸ்வாமிக்கு நான் தான் ஆஸ்தான சிஷ்யன் !

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
பயப்படாமல் பழகலாம்.

!!!!!!!!!!!!!?????????????
//

:) அவர் ஒரு பிரம்மச்சாரி, சாமியார் என்று நினைக்காமல் நட்புடன் பழகலாம் என்பதைச் சொன்னேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
அதன் பிறகு நானும் தொடர்ந்து சொன்னேன். 10 நிமிடங்கள் சென்றதே தெரியவில்லை.

*******
பத்து நிமிடங்களிலேயே ஸ்டார் தெரியுதே!!!
கொடுத்துவைத்திருக்கிறீர்கள். :-)
//

எங்க தெரியுது, குமார் அண்ணன் கண்ணுல என்னாச்சு பாருங்க !

Osai Chella சொன்னது…

//ஓசை செல்லா,

உங்களுக்கெல்லாம் என்னைப் பார்க்க விருப்பம் இருக்குமென்றால்லாம் நான் நினைக்கவில்லை. கோவை வருவதைப் பற்றி திட்டமிடாததால் தேதிக் குறிப்பிடாமல் எனது அலைபேசி எண்களைக் குறிப்பிட்டு பதிவில் எழுதி இருந்தேன்.

இதுகூட நீங்கள் சீரியசாக சொல்லி இருக்கிறீர்களா, நக்கல் அடித்திருக்கிறீர்களா என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை.//

ஹா ஹா. கோவி நக்கலும் இல்லை.. எங்கூரு குசும்பும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தங்களை நேரில் சந்திக்கும் பொழுது நிறையவிசயங்கள் சூடாகவே இருந்தாலும் அமைதியாக பேசியிருப்பேன்/கேட்டிருப்பேன். என் எழுத்தை வைத்து எடைபோடுவது கருத்தியல் ரீதியாக சரியில்லையென்றாலும் மாற்றுக்கருத்துக்காரர்களுடன் இன்றளவும் உள்ளப்பூர்வமான தொடர்பில் இருப்பவன் என்பதை மாற்றுக்கருத்து நண்பர்கள் (ex- டோண்டு சார்!) மிகவும் நன்றாக அறிவார்கள். மேலும் எனது அலுவலகம் பிஜேபி தலைவர்கள் முதல் இடதுசாரி தோழர்கள் வரை ஒருங்கே சந்திக்கக்கூடிய இடம்!! "உண்மையில்லாதவர்" விசயத்தை தவிர நமக்குள் வேறு பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லாதபோது.. (அல்லது அப்படியே இருந்திருந்தாலும்)நிச்சயம் சந்தித்திருப்பேன்! கோவையின் மக்களுக்கே உரித்தான ஒரு குணம் வந்தவரை மரியாதையாக உபசரிப்பது! சரி விடுங்கள்! அடுத்தமுறை நிச்சயம் சந்திப்போம். காரணம் நிறைய இருக்கிறது! ;-)!

Osai Chella சொன்னது…

அப்புறம் ஒரு சுவாரசியமான விசயம்.. இணையத்தில் நானும், தமிழச்சியும், சுகுணாவும் தாக்கி அடித்துக்கொண்டிருந்த காலம்.. ஆனால் சென்னையில் நான் அய்யனார், சுகுணா மூவரும் ஓரறையில் மிதந்து கொண்டிருந்தோம் எங்கள் விவாதங்களோடு!! நேரில் சந்த்தித்தபோது ஒருவர் மீது கொண்ட பல்வேறு தப்பபிப்பிராயங்கள் மாறிவிடுவது உண்டு! கருத்தியல் ரீதியாகக்கூட! நான் நினைத்ததற்கு சம்பந்தமில்லாமல் நேரில் பார்த்தபோது நிசமாகவே எல்லைகளற்று விளங்கினான் நண்பன் அய்யனார்! சுகுணாவைப்போலவே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்