பின்பற்றுபவர்கள்

15 பிப்ரவரி, 2008

போங்கைய்யா நீங்களும் உங்க பித்தலாட்டமும் !

எல்லாஞ்சரிதான் தனக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்படப் போகிறது என்று முன்னமே அறியாமல் இருந்தது ஏன் ? இதுக்கு மட்டும் போலிஸ் வேண்டுமா ? ஒரு பரிகார பூஜையில், அல்லது சூனியம் வைத்து கையெழுத்து வாங்கியவனை வெளங்காமல் செய்ய முடியாதா ?

போங்கைய்யா நீங்களும் உங்க சோசிய பித்தலாட்டமும் !

என்னவா ? கிழே படியுங்கள்.

***************

ஜெ. ஜோதிடரை மிரட்டினாரா சசி உறவினர்?
வியாழக்கிழமை, பிப்ரவரி 14, 2008

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜோதிடரான ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்பவரை, சசிகலாவின் உறவினர் மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் துவாரகா காலனியைச் சேர்ந்தவர் ஜோதிடர் ரத்தன் பண்டிட் வெற்றிவேல் (வயது 43). இவர் சென்னை மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரனிடம் இன்று ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், நான் ஜோதிடராக இருக்கிறேன். கடந்த 8ம் தேதி சொந்த ஊரான ஈரோடு சென்றிருந்தேன். கடந்த 10-ந்தேதி காலை 10 மணிக்கு எனக்கு ஏற்கனவே அறிமுகமான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் உறவினர் ராவணன் என்பவர் அங்கு வந்தார்.

சசிகலா என்னை பார்க்க விரும்புவதாகவும், உடனே கோவைக்கு அழைத்து வரும்படி சொன்னதாகவும் கூறினார். அவருடன் காரில் ஏறி சென்றேன். ஆனால் சசிகலா அங்கு இல்லை.

பின்னர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருடன் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் எவ்வளவு சொத்து இருக்கிறது என்று கேட்டார். நான் எனது சொத்து விவரத்தை கூறினேன். உடனே எனது சொத்தை தனது பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்று கூறினார்.

நான் மறுத்தேன். இதையடுத்து என்னை ஆபாசமாக திட்டினார். எழுதி தராவிட்டால் என்னையும் மனைவி, குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். பின்னர் என்னை கோவையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தார்.

ஒரு ஓட்டலில் தங்க வைத்தார். அங்கிருந்து ஒரு பங்களாவுக்கு அழைத்துச் சென்றார். என்னை அடித்து துன்புறுத்தி 10 பத்திர தாள்களிலும், 10 பச்சை காகிதங்களிலும் கையெழுத்து வாங்கிக் கொண்டார். நான் அவர் கூறியபடி 10ம் தேதியை குறிப்பிட்டு கையெழுத்து போட்டேன்.

என்னை மிரட்டி, அடித்து உதைத்து வெற்று பத்திரத்திலும், தாளிலும் கையெழுத்து வாங்கிய சசிகலாவின் உறவினர் ராவணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வெற்றிவேல்.

இந்தப் புகார் குறித்து வெற்றிவேல் கூறுகையில், பத்து வருடங்களுக்கு மேலாக ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் நான்தான் ஆஸ்தான ஜோதிடராக இருந்தேன். ஜெயலலிதா 2001ல் முதல்வர் ஆவார் என்று கணித்துக் கூறியிருந்தேன். அதன்படி அவர் முதல்வர் ஆனார்.

பல்வேறு வழக்குகளிலிருந்தும் விடுதலை ஆனார். இடையில் என் மீது பொறாமை கொண்ட சிலர் செய்த சூழ்ச்சியால் என்னை ஒதுக்கி விட்டார் என்றார் வெற்றிவேல்.

தட்ஸ் தமிழுக்கு ஒரு 'ஓ'

11 கருத்துகள்:

வவ்வால் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said... "நீங்க என்ன சார் சொல்லிக் கொடுத்தீங்க? அதைச் சொல்லுங்க" என்றோம்.

அவர் சொன்னது இங்கே எழுத முடியாத ஒன்று.
//

ரத்னேஷிடம் தனிமடல் எழுதி கேட்டிருந்தால் அது என்னவென்று ஒரு வேளை சொல்லி இருப்பார். உங்களுக்கு தொடர்பில்லாதவர்களைப் பற்றி விருப்பத்தின் பேரில் கருத்து பரிமாறி கொள்ளலாம. யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதால் தப்பு இல்லை. ஆனால் அதையேதான் நினச்சிக்கிட்டு ' அது என்ன வென்று தெரிய' ஆவலாக இருக்கிற மேட்டர் எனக்கு அவலாகிப் போச்சு !

:))

நல்லா இருங்க சாமி !. இன்னிக்கு அதைச் தெரிஞ்சிக்காம உங்களுக்கு துக்கம் வருமா வராதா ?

வவ்வால் சொன்னது…

ஆஹா கோவி , தப்பா காபி பேஸ்ட் பண்ணிட்டேன், உங்க பதிவில் இருந்து ஒரு பேராவை காபி, பேஸ்ட் செய்வதாக நினைத்து அங்கே இருந்து செய்துட்டேன், மாப்பு ...மாப்பு, இருங்க இந்த பின்னூட்டத்தை பிழை திருத்தி மீண்டும் போடுகிறேன்.

வவ்வால் சொன்னது…

கோவி,
செமத்தியா போட்டு தாக்கிட்டிங்க :-))

//எல்லாஞ்சரிதான் தனக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்படப் போகிறது என்று முன்னமே அறியாமல் இருந்தது ஏன் ? இதுக்கு மட்டும் போலிஸ் வேண்டுமா ? ஒரு பரிகார பூஜையில், அல்லது சூனியம் வைத்து கையெழுத்து வாங்கியவனை வெளங்காமல் செய்ய முடியாதா ?

போங்கைய்யா நீங்களும் உங்க சோசிய பித்தலாட்டமும் !

//

பார்த்துங்க கோவி உங்களுக்கு சோசியக்காரவுக எல்லாம் ஒன்னுக்கூடி சூன்யம் வச்சுடப்போறாங்க :-))

அறிவியல் படிச்சவங்க கூட சோதிடம் ஒரு அறிவியல்னு நம்புறாங்க அதான் செம காமெடி, ஏன் இந்த பதிவுலகில் கூட சில சோதிட வல்லுனர்கள்!!?? ரொம்ப பீத்திக்கிறாங்களே பார்த்தது இல்லையா?

எங்கேயோ இருக்க கெரகம் எல்லாம் ஒன்னுக்கூடி மனுச வாழ்வில் நடக்கிற நல்லது கெட்டதை தீர்மானிக்கிற வேலையை தான் செஞ்சுக்கிட்டு இருக்கா, அதுங்களுக்கு வேற வேலை இல்லையா, அப்படியே இருந்தாலும் கோடான கோடி மக்களைப்பற்றிய டேட்டாவை அந்த கெரகம்லாம் எப்படி கையாளுது, அந்த கெரகம்ல வெறும் பொட்டல் மண்ணா தானே கிடக்கு :-))இல்லைனா உறைஞ்சு போன பனிக்கட்டி தான்.

ஆனா பாருங்க இல்லாத 2 கெரகம்லாம் மனுசங்க மேல ஆதிக்கம் செலுத்துது, இத்தினிக்கும் மத்த கெரகத்துல எல்லாம் ஒரு உசுரு கூட இல்லை, ஆனா சக்தி இருக்காம் அதுங்களுக்கு, ஆனா எல்லா மனுசனுக்கும் சோறுப்போட்டு வாழவைக்கிற இந்த பூமி கெரகம் மட்டும் மனுச சாதகத்துல எதுவுமே பண்ணாம இருக்கே ஏன்? பூமிக்கு சக்தி இல்லையா அப்போ?

கோவி.கண்ணன் சொன்னது…

வவ்ஸ்,

முதல் பின்னூட்டம், அதன் மறுமொழி நீக்கனுமா ? வெவராமாக சொல்லுங்க !

வவ்வால் சொன்னது…

கோவி,

நான் முதலில் போட்ட பின்னூட்டத்தை நீக்கி விட்டேன், எனவே இப்போது இது படித்தால் குழப்பலாம், எடுத்து விடலாம், ஆனால் இது படிக்க காமெடியாக இருக்கு என்று நினைக்கிறேன், எனவே இருந்தாலும் தப்பில்லை :-))

அடுத்த சரியான பின்னூட்டம் போட்டேன் வந்ததா அது?

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,

நான் முதலில் போட்ட பின்னூட்டத்தை நீக்கி விட்டேன், எனவே இப்போது இது படித்தால் குழப்பலாம், எடுத்து விடலாம், ஆனால் இது படிக்க காமெடியாக இருக்கு என்று நினைக்கிறேன், எனவே இருந்தாலும் தப்பில்லை :-))

அடுத்த சரியான பின்னூட்டம் போட்டேன் வந்ததா அது?

12:20 PM, February
//

வவ்ஸ்,

திருத்திய பின்னூட்டம் வரவில்லை.

மேலே உள்ளதை அப்படியே விட்டுவிடுகிறேன்,இரத்னேஷ் படிப்பார் என்று நினைக்கிறேன். தமாசாகத்தான் இருக்கு.

வவ்வால் சொன்னது…

//எல்லாஞ்சரிதான் தனக்கு இப்படி ஒரு மோசமான நிலைமை ஏற்படப் போகிறது என்று முன்னமே அறியாமல் இருந்தது ஏன் ? இதுக்கு மட்டும் போலிஸ் வேண்டுமா ? ஒரு பரிகார பூஜையில், அல்லது சூனியம் வைத்து கையெழுத்து வாங்கியவனை வெளங்காமல் செய்ய முடியாதா ?

போங்கைய்யா நீங்களும் உங்க சோசிய பித்தலாட்டமும் !//

கோவி,
போட்டுத்தாக்கிட்டிங்க !

எங்கோ இருக்கும் கெரகத்துக்கு எப்படி மனித வாழ்வை கட்டுப்படுத்தும் சக்தி வந்தது, அப்படியே சக்தி இருக்குனாலும் கோடானு கோடி மக்களுக்கு ஏற்ப எப்படி அவர்களின் பலன்களுக்கு ஏற்ப பிரித்து அருள் கொடுக்கிறது கிரகங்கள், எப்படி கையாளுக்கிறது, அங்கே இருப்பதுலாம் பொட்டல் மண்னும், கல்லும் தான், இல்லைனா உறைப்பனி, அதுல எப்படிக்கட்டுப்படுத்தும் சக்தி வந்தது.

இரண்டு கற்பனைக் கெரகம் கூட சாதக பலன் தருகிறது, ஆனால் இத்தனை மக்களுக்கும் இருக்க இடம் கொடுத்து உணவு தரும் பூமி மட்டும் மனிதனுக்கு சாதக பலன் தர மாட்டேங்குதே, ஏன்? அப்போ பூமி ஒரு கெரகம் இல்லையா , அதுக்கு சக்தி இல்லையா?
மற்ற கெரகத்துல எல்லாம் ஒரு உசுருக்கூட இல்லை அதுக்கே அம்புட்டு சக்தி இருக்கப்போ கோடிக்கணக்கான உயிர்களை உருவாக்கி இருக்க பூமிக்கு எம்மாம் சக்தி இருக்கும், அப்போ ஏன் பூமியை ஆட்டைல சேர்த்துக்கல சோதிடம் :-))

அறிவியல் படித்தவர்களே சோதிடம் அறிவியல்னு மூடத்தனமா நம்புறாங்க , ஏன் இங்கே வலைப்பதிவுல கூட சில so called சோதிட சிகாமணிகள் சோதிடப்பெருமை அளக்குதுங்களே பார்த்தது இல்லையா?

பார்த்துங்க கோவி இப்படிலாம் பதிவு போட்டிங்கன்னு உங்களுக்கு சூன்யம் வச்சுடப்போறாங்க :-))

RATHNESH சொன்னது…

வவ்வால் ஆடியிருக்கும் கண்ணாமூச்சியில் மத்தியானம் படித்த போது எனக்கு முதலில் எதுவுமே புரியவில்லை.

பார்த்தீங்களா நீங்க ஜோதிடம், சூனியம் சம்பந்தமான விஷயங்களைக் கண்டிக்க நினைத்த மாத்திரத்தில் தங்கள் பதிவே குழப்பமாகி விட்டது. இதிலிருந்து கூட உங்களால் அவற்றின் சக்தியை உணர முடியவில்லையா?

பதிவில் சின்ன கிரகம், பெரிய கிரகம் எல்லாத்தையும் பத்தி இருக்கு. எதுக்கப்பா வம்பு? நான் ஒண்ணும் சொல்லப் போறதில்லை.

(பித்துப் பிடித்தவர்களின் ஆட்டம் தானே பித்தலாட்டம்?)குறிப்பிடுகிறீர்கள்?)

சின்னப் பையன் சொன்னது…

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இந்த பதிவுக்கு முதல் பின்னூட்டம் வந்தாச்சா, இல்லையா?

கோவி.கண்ணன் சொன்னது…

//ச்சின்னப் பையன் said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... இந்த பதிவுக்கு முதல் பின்னூட்டம் வந்தாச்சா, இல்லையா?
//

வந்துச்சு, அதுல சின்ன குழப்பம்.
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்