பின்பற்றுபவர்கள்

5 பிப்ரவரி, 2008

சீனப் புத்தாண்டு!

ஆசியான் வட்டாரத்தில் சீனர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் இருக்கிறது, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் சீனர்கள் பெரிய அளவில் வசிக்கிறார்கள். இந்த நாடுகளில் சீனர்களின் புத்தாண்டுகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அறிவிப்பார்கள். சீனப் புத்தாண்டு முறை சந்திரமுறை புத்தாண்டு என அழைக்கப்படுகிறது. அதாவது சந்திரன் நாள்காட்டி முறையை பயன்படுத்துகிறார்கள். முன்பு நமக்கு ஏப்ரல் 14ல் ஒரே தேதியில் தமிழ்ப்புத்தாண்டு வந்தது போல் சீனப் புத்தாண்டு வராது. எப்போதும் பிப்ரவரி மாதத்தின் 2 ஆவது அல்லது 3 ஆவது வாரத்தில் எதாவது ஒரு தேதியில் வரும். இந்த ஆண்டு பிப்ரவரி 7, 8 தேதிகளில் சீனப் புத்தாண்டு வருகிறது.

சீனர்களுக்கு சீனப்புத்தாண்டே மிகப்பெரிய பண்டிகை. அதனால் நாம் நம் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதை இந்திய புத்தாண்டு என்பது போல் நினைப்பார்கள். தீபாவளி என்றால் அவர்களைப் பொருத்து இந்திய புத்தாண்டு. :)

ஆண்டுமுழுவதும் சீனர்கள் காத்திருப்பது இந்த புத்தாண்டு விழாவிற்குத்தான். சீனப்புத்தாண்டின் முதல் நாள் போது சீனர்கள் குளிக்க மாட்டார்களாம், அதிர்ஷ்ட தேவதை அழுக்கோடு சென்று விடும் என்ற நம்பிக்கை போல இருக்கிறது. இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் மூட நம்பிக்கை குறித்த பற்றியத்தில் பெரிய வேறுபாடு கிடையாது. சாமிக்கு நிறையவே பயப்ப்படுவார்கள். சூதாட்டம், லாட்டரி போன்றவற்றில் மிகுந்து செலவளிப்பார்கள். புத்தாண்டுக்கு முன்பே பழைய சாமான்களை எடுத்து வெளியில் போட்டுவிட்டு புதிதாக வாங்கிக் கொள்வார்கள்.

சீனப்புத்தாண்டின் மற்றொரு சிறப்பு அம்சம், சீனப்புத்தாண்டை மதச்சார்பற்று அனைத்து சீனர்களும் கொண்டாடுவார்கள். வாழ்த்துகளை பரிமாரிக் கொள்வதும் சிவப்பு பையில் ( ரெட் பாகெட்) புதிய பணத்தாள்களைப் போட்டு பரிசளிக்கும் வழக்கம் முதன்மையாக கடைபிடிக்கப்படுகிறது. அலுவலகம் போன்ற இடங்களில் மேலாளர்களுக்கு ஆரஞ்சு பழங்களை பரிசளிப்பார்கள். புத்தாண்டின் போது சீன முதலாளிகள் தங்கள் நிறுவனத்திற்கு ஒருவாரம் விடுப்பு விட்டுவிடுவார்கள்.

சீனப்புத்தாண்டின் போது 'சீனா டவுன்' எனப்படும் சீனர்களின் பொருள்கள் விற்கும் இடங்கள் அவை எந்த நாட்டில் இருந்தாலும் நன்றாக அலங்காரம் செய்து வைத்திருப்பார்கள்.

சீனப் புத்தாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு விலங்கின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு எலி ஆண்டு என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 12 விலங்குகளின் பெயர்களில் ஆண்டுகள் வழங்கப்படுகின்றன. எலி ஆண்டு திரும்பவம் வருவதற்கு 13 ஆண்டுகள் ஆகும்.

5 கருத்துகள்:

-L-L-D-a-s-u சொன்னது…

//முன்பு நமக்கு ஏப்ரல் 14ல் ஒரே தேதியில் தமிழ்ப்புத்தாண்டு வந்தது போல//

அது..

//சீனப்புத்தாண்டை மதச்சார்பற்று அனைத்து சீனர்களும் கொண்டாடுவார்கள்.//
ரொம்ப பொறாமையாக இருக்கிறது ..

குலவுசனப்பிரியன் சொன்னது…

//தீபாவளி என்றால் அவர்களைப் பொருத்து இந்திய புத்தாண்டு. :)//
வடக்கத்திக் காரர்களும் தீபாவளியன்று புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாரிக் கொள்வதை பார்த்திருக்கிறேன்.

Unknown சொன்னது…

கோவி.கண்ணன்,

gong xi fang cai :)

சிவப்பு கவரில் பணம் அனுப்பவும் :)

pudugaithendral சொன்னது…

வடக்கில் குஜராத்ட்தியர்களுக்கு தீபாவளி அன்று புத்தாண்டு.

மராத்தியர்கள் தெலுங்கு, கன்னடர்களுடன் சேர்ந்து புத்தாண்டு கொண்டாடுவார்கள்.

தெலுங்கு, கன்னடப் புத்தாண்டு-யுகாதி

மராட்டி புத்தாண்டு - குடி போட்வா.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கோவி.கண்ணன்,

gong xi fang cai :)

சிவப்பு கவரில் பணம் அனுப்பவும்//

ஆகா!
Gong Xi Fa Cai! -->சரி

Gong Xi! Gong Xi!! Xie Xie Nee! Ang Pao Na lai!!(Red Pocket)

தமிழர்கள் அனைவரும் ஒன்றாக கொண்டாடும் பண்டிகையாக தமிழர் திருநாள் இருக்க வேண்டும் என்பது நம் விருப்பம்.


அன்புடன்,
ஜோதிபாரதி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்