பின்பற்றுபவர்கள்

11 பிப்ரவரி, 2008

ஆதிவாசிகளும் அற்புதமனிதர்களும் !

பதிவு நண்பர் டிபிசிடி அவர்களின் இல்லத்தினருடன் என் இல்லதாரும் இணைந்து இல்லச் சுற்றுலாவாக மலேசியாவில் உள்ள கேமரான் ஹைலாண்ட்ஸ் எனப்படும் ஊட்டி போன்ற குளிர் மலை பகுதிக்கு சுற்றுலா சென்ற பொன்னான அனுபவம் கிடைத்தது. அங்கு சென்ற போது ஆதிவாசிகளின் இருப்பிடமான 'ஓராங் அஸ்லி கம்போங்' என்னும் சுற்றுலா தலத்துக்குச் செல்லலாம் என்று நண்பர் சொன்னார். கோவண ஆண்கள், அரை நிர்வாண பெண்கள் எல்லாம் இருப்பது போல் சில விடுதிகளில் அவர்களின் படங்களை வைத்திருந்தார்கள். சரி அங்கு செல்லலாம் என்று சென்றோம். போகும் வழியில் அந்த ஆதிவாசி ஆண் ஒருவரை பார்த்தோம். நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார். அதன் பிறகு இன்னும் உள்ளே சென்றதும் மலை பகுதியின் சரிவில் மேலும் கீழுமாக மரவீடுகளில் ஆதிவாசிகள் வசித்து வந்தனர். ஆனால் ஆதிவாசி என்பதற்கான அடையாளம் முகத்தில் தெரிந்தது மற்றபடி உடைகள் போன்ற பலவற்றில் அவர்கள் ஆதிவாசியாக இருந்ததில் இருந்து நடை உடை பாவனைகளை மாற்றிக் கொண்டு மற்றவர்களைப் போல் மாறிவிட்டிருந்தார்கள். மேலும் அவர்களிடம் விசாரித்தால் இன்னும் அதே கோலத்தில் இருப்பவர்களை சந்திக்க முடியும். மிருக காட்சி சாலைக்குச் சென்று விலங்குகளை வேடிக்கைப் பார்பது போன்றே மனிதர்களை வினோதமாக வேடிக்கைப் பார்க்க வந்திருந்த செயலை நினைத்து முடிவை மாற்றிக் கொண்டு வெட்கப்பட்டு திரும்பினோம்.

சுற்றுலா முடிந்து திரும்பும் வழியில் மலைச் சாலைக்கு அருகிலேயே ஒரு குடில் அமைத்து அங்கு ஆதிவாசி ஒருவர் புகைப்படம் எடுக்க காட்சி தந்தார். சிலர் வாகனத்தை நிறுத்துவிட்டு அவருக்கு பணம் கொடுத்துவிட்டு அருகில் நின்று நிழல்படம் எடுத்துக் கொண்டார்கள். சென்று வந்ததன் நினைவாக இருக்கட்டுமே
என்று நானும் நண்பரும் அந்த ஆதிவாசிக்கு சில மலேசிய வெள்ளிகளை கொடுத்துவிட்டு அந்த ஆதிவாசி இளைஞரின் தோள் மீது கைபோட்டுக் கொண்டு புகைப்படம் எடுத்தோம், பெயர் மைக்கேல் ஜாக்சனாம். ஓரளவுக்கு 'தாங்க்ஸ்' போன்ற சில ஆங்கிலச் சொற்களை சொன்னார். அவர்களின் முன்னோர் பயன்படுத்திய கருவிகளை இயக்கிக் காட்டினார். அதாவது விசம் தோய்த அம்பை நீளக் குழாயின் அடிப்பகுதி துளைவழியாக வாயால் ஊதி, அது இலக்கு நோக்கி பாய்வதைக் காட்டினார். மேலும் சில ஆதிவாசி இளைஞர்கள் அங்கு இருந்தார்கள். ஆனால் ஒரே ஒரு இளைஞர்தான் ஆதிவாசியின் உடையில் இருந்தார். மற்றவர்கள் நம்மையும் எல்லோரைப் போன்ற உடைகளில் சற்று அழுக்கான உடைகளில் இருந்தனர். நிழல்படம் எடுக்க அனுமதி கேட்டால் எவரும் தயங்கவில்லை.

அங்கிருந்து நகர்ந்ததும், இந்த இளைஞர் உண்மையிலேயே ஆதிவாசி பிரிவை சேர்ந்தவர் தானா ? அல்லது பொருத்தமாக வேடமணிந்து பயணிகள் பார்வைக்காக அரசாங்கமே அல்லது பயணிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு பிழைப்பு நடத்தலாம் என்பதற்காக எவராவது இதுபோன்று நாடகமாக நடத்துகிறார்களா எனக்கு ஐயமாகவே இருக்கிறதென்றேன். நண்பர் அந்த ஆதிவாசி இளைஞர் மற்றும் அங்குள்ளவர்களின் முகத்தை வைத்துப் பார்த்தால் அவர் ஆதிவாசி இளைஞர் தான் என்றார். மற்றபடி அவர்கள் அந்த உடையை இங்கே பயணிகள் பார்வைக்காக மட்டுமே அணிந்திருக்கிறார் என்று புரிந்தது. ஓரளவு சரிதான். வெறும் கோவணத்துடன் அந்த கடும் குளிரில் ஆதிவாசிகள் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

ஆதிவாசிகளின் நிலையை உயர்த்த வேண்டும் என்று நினைக்காமல் அரசுகள், அவர்களின் நிலங்களை சுற்றுலாத்தலமாக ஆக்கியது மட்டுமின்றி, ஆதிவாசிகளை பொதுமக்கள் காட்சிப் பொருளாக பார்பதைப் சுற்றுலாவில் ஒரு இடமாக வைத்திருப்பதற்கு அவைகள் உண்மையில் வெட்கப்படவேண்டும். அதுபோன்ற சுற்றுலா மையங்களை அமைத்து எங்கள் நாடு பழம்பெருமை மிக்கது என்று பறைச்சாற்றும் அதே நேரத்தில் இன்னும் முன்னேறாத மக்கள் இங்கு இருக்கிறார்கள், அவர்களின் இடங்களை அறிவிப்பின்று ஆக்கரமித்துக் கொண்டோம் என்று சொல்லாமல் விட்டதையும் அரசுகள் மறைக்க முடியவில்லை.

எல்லோரும் மனிதர்கள் தான் ஆதிவாசிகளை விநோதமாக பார்க்கும் நமது முன்னேறிய நாகரீகத்தில் கூடத்தான் அரைகுறை ஆடை நடனங்களும் நடக்கின்றன. அவர்கள் உடலை மறைத்துக் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் விநோதமாக இருப்பார்கள் அதை ரசிக்கலாம் என்று செல்லும் நமது மனது நிர்வாணம் ஆகிவிட்டது. எரிப்பது போல் பார்த்த இளைஞர் பார்வையின் பொருள் இன்னும் நாங்கெளென்ன உங்களுக்கெல்லாம் காட்சிப் பொருளா ?' என்று கேட்பது அங்கேயே புரிந்தது. சுற்றுலா முடிந்து திரும்பும் வழியில் ஆதிவாசியை நிழல்படம் எடுத்த போது, அவனும் நம்மினம் தான் என்று நினைத்தப்படி கொஞ்சம் கூட தயங்காமல் அவன் தோள்மீது இருவருமே கைபோட்டு படம் எடுத்துக் கொண்டோம். ஆதி மனிதர்களை காட்சிப் பொருளாக பார்க்கும் சமூகத்தில் தான் வாழ்கிறோம், அதில் நானும் ஒரு அங்கமாக இருக்கிறேன். வெட்கமாகத்தான் இருந்தது. ஆதிவாசிகளை காட்சிப் பொருளாக்கி சுற்றுலா வழிகாட்டிகளும் நிறையவே சம்பாதிக்கின்றனர். அவர்களின் நிலை மாறவேண்டும். அல்லது அவர்களின் விருப்பத்திற்கேற்று வாழ்வதற்கான வழி அமைத்துக் கொடுக்காவிட்டாலும் அவர்களின் சுதந்திரத்தை பரிக்காமல் இருந்தாலே போதும்.

நாம் வாழும் இயந்திர வாழ்க்கையை மறந்து, இதுபோன்ற இடங்களுக்கு மகிழ்வைத் தேடி இரண்டு நாள் சுற்றுலா சென்று ஆற்றிக் கொள்ளும் நம்மைவிட அவர்கள் எவ்வளவோ மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்.

35 கருத்துகள்:

மங்களூர் சிவா சொன்னது…

//
எரிப்பது போல் பார்த்த இளைஞர் பார்வையின் பொருள் இன்னும் நாங்கெளென்ன உங்களுக்கெல்லாம் காட்சிப் பொருளா ?' என்று கேட்பது அங்கேயே புரிந்தது
//
மனசு கனக்குது.

TBCD சொன்னது…

சுருக்கமா முடிச்சிட்டீங்களே பயணக்குறிப்பை.

ஆச்சர்யப்படக்கூடிய விசயங்கள், இந்த ஊதுக் குழலில் அம்பெறியும் வித்தை, எந்தவொரு தொடர்பும் இல்லாமல், உலகெங்கும் இருக்கும் ஆதிவாசிகளிடம் காணப்படுவது.

ஆதி மனிதன் தோன்றியது ஒரு இடத்தில் தான் என்பதை நிருபிக்க இன்னும் ஓர் சான்று.

இப்படியிருக்கையில், காலில் இருந்து தோன்றினான், அக்குளில் இருந்து தோன்றினான் என்று ஒரு கூட்டம் ஜல்லியடிக்கிறது.

வந்தேறி என்று தூற்றுகிறார்கள் என்றுக் கூப்பாடு போடுகிறது.

மனிதன் பயணப்பட்டே, இத்தனை தூரம் பரவியிருக்க வேண்டும். அப்படி பயணப்பட்டாலும், மற்றவர்களை அழித்து, ஒழித்து, ஒடுக்கி வாழ நினைக்காமல், ஒன்றி வாழ்ந்திருந்தால், உலக வேறு மாதிரியாகத் தான் இருந்திருக்கும்.

மங்களூர் சிவா சொன்னது…

//
அவனும் நம்மினம் தான் என்று நினைத்தப்படி கொஞ்சம் கூட தயங்காமல் அவன் தோள்மீது இருவருமே கைபோட்டு படம் எடுத்துக் கொண்டோம்
//

க்ரேட்

மிக நல்ல சிந்திக்க வேண்டிய பதிவு.

கோவி.கண்ணன் சொன்னது…

//

மங்களூர் சிவா said...
மனசு கனக்குது.
//

சிவா,

உங்க மனசு உங்களிடம் இல்லை என்று கேள்விபட்டேன். பின்னே எப்படி ?
:)

துளசி கோபால் சொன்னது…

அவுங்களும் நம்மப்போல மனுசங்கதானே?
அதை ஏன் மறந்தோம்னு நினைக்கும்போது நமக்கே வெக்கமாப்போயிருது.

ஆஸ்ட்ராலியாவிலும் ஆதிவாசிகள் சில இடங்களில் டிட்ஜெரிடோ என்னும் குழலை ஊதிக்கிட்டு உக்கார்ந்திருப்பாங்க. ஆனால் நம்மை மாதிரிதான் உடை அணிஞ்சுப்பாங்க. அவுங்க கலையை மட்டும் ரசிச்சிட்டு வரலாம்.

மங்களூர் சிவா சொன்னது…

//
கோவி.கண்ணன் said...

சிவா,

உங்க மனசு உங்களிடம் இல்லை என்று கேள்விபட்டேன். பின்னே எப்படி ?
//

எக்சேஞ்ச் ஆஃபர்ல வேற ஒருத்தவிங்க மனச வாங்கி வெச்சிருக்கம்ல அது கனக்குது!!

ஸ்ஸப்பாஆஆஆ

வடுவூர் குமார் சொன்னது…

படத்தில் எங்கே அந்த இன்னொரு ஆதிவாசி??
:-))
நானும் ஆதிவாசி தான்,மனிதன் வராத இடத்தில் தங்கியிருந்தால்.

TBCD சொன்னது…

அதுவும் இல்லாமல், அந்த கிராமத்துக்குப் போகும் வழியில்...


ஒரு பெண்மனியிடம், ஓராங்க் அசுலி கிராமத்துக்குச் செல்லும் வழி என்றுக் கேட்டேன், அப்போது, தான் கவணித்தேன், அந்தப் பெண்ணும், ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர் என்று.

அவர் அதில் பெருமைப்பட்டுக் கொண்ட மாதிரி தெரியவில்லை.

அவர்களாவது, 50% அபப்டியே இருக்கிறார்கள்..

தமிழகத்தின் பூர்வ குடிகள்...
எங்கேயிருக்கீறார்கள்..

உலகெங்கும், கூலி வேலை செய்துக் கொண்டு...

அவர்களின் சுயமரியதையயை மழுங்கடிக்கப்பட்டு,
கேவலப்படுத்தப்பட்டு..

அந்தளவில் மலேசிய அரசு..
பரவாயில்லை..

ஆதிவாசிகளை அப்படியேயாவது இருக்கவிட்டுளதே... :(

குசும்பன் சொன்னது…

//நாம் வாழும் இயந்திர வாழ்க்கையை மறந்து, இதுபோன்ற இடங்களுக்கு மகிழ்வைத் தேடி இரண்டு நாள் சுற்றுலா சென்று ஆற்றிக் கொள்ளும் நம்மைவிட அவர்கள் எவ்வளவோ மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்.//

இயற்கையோடு இயைந்து வாழ்பவர்கள் எப்பொழுதுமே மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்!

குசும்பன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
சிவா,

உங்க மனசு உங்களிடம் இல்லை என்று கேள்விபட்டேன். பின்னே எப்படி ?
:)//

ஓ அந்த மேட்டர் மலேசியாவரை தெரிஞ்சு போச்சா? ரைட்டு !
இதுக்கு மேலே அவர் பர்சனல் மேட்டரில் நாம் தலையிடுவது முறையாக இருக்காது அதனால் விட்டுவிடலாம்!!!

(கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு (பங்கு சந்தை இல்லை) வந்துதானே ஆகனும்:)))

வவ்வால் சொன்னது…

கோவி,
சுற்றுலாவிலும் கருத்தைத்தேடி இருக்கிங்களே ... பெரிய ஆள் தான்!ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தை மறுப்பதற்கில்லை, அரசே அறிவித்து அவர்களை ஒரு காட்சிப்பொருளாக ஆக்கியது தவறே.அதை ஒரு மலைவாசஸ்தலம் என்ற அளவில் பிரபல படுத்தலாம் அரசு.

மேலும் ஆதிவாசிகளுக்கு அரசு உதவிகளும் செய்ய வேண்டும், செய்கிறதா? இல்லை என்றால் பிழைப்பை தேடி நகருக்கு வந்து தங்கள் இயல்பை தொலைக்க நேரிடும். அவர்கள் ஊரிலே படிப்பு வேலை வழங்கி முன்னேற்றலாம்.

இந்திய அரசு செய்வதெல்லாம் காகிதத்தோடு சரி, உண்மையில் அதன் பயன் தேவையானவர்களுக்கு போய் சேர்வதே இல்லை. மலேசிய அரசு எப்படி?
----------------------
tbcd,

//ஆச்சர்யப்படக்கூடிய விசயங்கள், இந்த ஊதுக் குழலில் அம்பெறியும் வித்தை, எந்தவொரு தொடர்பும் இல்லாமல், உலகெங்கும் இருக்கும் ஆதிவாசிகளிடம் காணப்படுவது.

ஆதி மனிதன் தோன்றியது ஒரு இடத்தில் தான் என்பதை நிருபிக்க இன்னும் ஓர் சான்று.//

கோண்டுவானா லேண்ட் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு, ஆதியில் உலகில் இருக்கும் மொத்த நிலப்பரப்பும் ஒரே துண்டாக இருந்தது என்றும் பின்னர் , வெடிப்புற்று தனி தனியாக பிரிந்து இப்போதைய கண்ட அமைப்புகள் உருவானதாக சொல்வார்கள்.

அப்படி ஒரே நிலப்பரப்பாக இருந்த போது தான் மனித இனம் தோன்றியது, அவர்களிடம் அதனால் பொதுவான சில அடிப்படைப்பண்புகள் எல்லா இடத்திலும் காணப்படும், மொழியில் கூட சில ஒற்றுமைகள் உண்டு என்றெல்லாம் சொல்வார்கள்.

மனிதன் பயணப்பட்டான் என்பதை விட கண்டங்களே பயணப்பட்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

பாச மலர் / Paasa Malar சொன்னது…

//சுருக்கமா முடிச்சிட்டீங்களே பயணக்குறிப்பை//

இன்னும் பலவும் விரிவாகப் பேசுங்கள்..

ஆதிவாசிகள் காட்சிப் பொருளாய் இன்னும் நாம் பார்க்கிறோம் என்னும் போது மனம் கனக்கத்தான் செய்கிறது..

கென்யாப் பழங்குடியினர் குடியிருப்பைப் பார்த்து வரும்போது இதுதான் தோன்றியது எனக்கும்..ஆனாலும் அவர்களுக்கு ஓரளவு பணம் கொடுக்க முடிந்ததே என்ற திருப்தி இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//TBCD said... சுருக்கமா முடிச்சிட்டீங்களே பயணக்குறிப்பை.//

டிபிசிடி ஐயா, இப்படியெல்லாம் சொல்லி இதுக்குமேல் எழுதாதே என்று சிக்னல் கொடுப்பது புரியாமல் இல்லை. :) முயற்சிதான் செய்யமுடியும் மிஸ் ஆனால் நான் பொறுப்பு இல்லை.
:))

//ஆச்சர்யப்படக்கூடிய விசயங்கள், இந்த ஊதுக் குழலில் அம்பெறியும் வித்தை, எந்தவொரு தொடர்பும் இல்லாமல், உலகெங்கும் இருக்கும் ஆதிவாசிகளிடம் காணப்படுவது.

ஆதி மனிதன் தோன்றியது ஒரு இடத்தில் தான் என்பதை நிருபிக்க இன்னும் ஓர் சான்று.

இப்படியிருக்கையில், காலில் இருந்து தோன்றினான், அக்குளில் இருந்து தோன்றினான் என்று ஒரு கூட்டம் ஜல்லியடிக்கிறது.

வந்தேறி என்று தூற்றுகிறார்கள் என்றுக் கூப்பாடு போடுகிறது.

மனிதன் பயணப்பட்டே, இத்தனை தூரம் பரவியிருக்க வேண்டும். அப்படி பயணப்பட்டாலும், மற்றவர்களை அழித்து, ஒழித்து, ஒடுக்கி வாழ நினைக்காமல், ஒன்றி வாழ்ந்திருந்தால், உலக வேறு மாதிரியாகத் தான் இருந்திருக்கும்.//

நீங்கள் சொல்வது சரிதான். ஆதிவாசிகளில் அமெசான் காட்டுக்குள் இருப்பவர்களுக்கும், ஆசிய ஆதிவாசிகளுக்கும் பழக்கவழகங்களில் வேறுபாடு இல்லை.

எல்லோருமே இரண்டு காலுக்கு இடையில் தான் பிறந்தோம். முகத்தில் இருந்து பிறப்பதெல்லாம் எச்சியும் சளியும் தான். எனக்கு தெரிந்து முகத்தில் இருந்து எவரும் பிறக்கவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...
க்ரேட்

மிக நல்ல சிந்திக்க வேண்டிய பதிவு.
//

பொறுப்பான பாராட்டுக்கு பொறுப்பான நன்றி !

உட்கார்ந்து சிந்திக்கவேண்டிய பதிவு என்று சொல்கிறீர்கள், சரிதானே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
அவுங்களும் நம்மப்போல மனுசங்கதானே?
அதை ஏன் மறந்தோம்னு நினைக்கும்போது நமக்கே வெக்கமாப்போயிருது.//

துளசி அம்மா,
இந்த இடுகையை எழுதும் போது நீங்கள் முன்பு ஒரு பதிவில் (டாட்டூ) ஆதிவாசிகள் பற்றி அக்கரையுடன் எழுதியது ( அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை பற்றிய தகவல்கள் ) நினைவுக்கு வந்தது.

//ஆஸ்ட்ராலியாவிலும் ஆதிவாசிகள் சில இடங்களில் டிட்ஜெரிடோ என்னும் குழலை ஊதிக்கிட்டு உக்கார்ந்திருப்பாங்க. ஆனால் நம்மை மாதிரிதான் உடை அணிஞ்சுப்பாங்க. அவுங்க கலையை மட்டும் ரசிச்சிட்டு வரலாம்.
//

ஆதிவாசி கலைகள் என்ற பெயரில் நம்ம ஊரில் குறவன் குறத்தி வேடமணிந்தவர்களின் அருவெருப்பான நடனமும், சினிமா காரர்களின் பாம்பு நடனமும் இருக்கிறதே... அதற்கு ஆதிவாசிகள் அரைநிர்வாணத்துடன் ஆடும் நடனம் எவ்வளவோ மேல்.

கோவி.கண்ணன் சொன்னது…

//மங்களூர் சிவா said...

எக்சேஞ்ச் ஆஃபர்ல வேற ஒருத்தவிங்க மனச வாங்கி வெச்சிருக்கம்ல அது கனக்குது!!

ஸ்ஸப்பாஆஆஆ
//

சிவா, இன்னொரு சந்தேகம்,

ஆண்களுக்கு பல இதயாமா ? திருப்பி வாங்கமலே பலரிடம் கொடுத்துவிடுகிறார்களே எப்படி ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
படத்தில் எங்கே அந்த இன்னொரு ஆதிவாசி??
:-))
நானும் ஆதிவாசி தான்,மனிதன் வராத இடத்தில் தங்கியிருந்தால்.
//

குமார்,

இன்னொரு ஆதிவாசி நான் தாங்க. :)

உங்களுக்கு தனிமெயிலில் அனுப்பி வைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//குசும்பன் said...
கோவி.கண்ணன் said...
சிவா,

உங்க மனசு உங்களிடம் இல்லை என்று கேள்விபட்டேன். பின்னே எப்படி ?
:)//

ஓ அந்த மேட்டர் மலேசியாவரை தெரிஞ்சு போச்சா? ரைட்டு !
இதுக்கு மேலே அவர் பர்சனல் மேட்டரில் நாம் தலையிடுவது முறையாக இருக்காது அதனால் விட்டுவிடலாம்!!!

(கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு (பங்கு சந்தை இல்லை) வந்துதானே ஆகனும்:)))

1:10 PM, February
//

குசும்பன்,

கத்திரிக்காய் முற்றிவிட்டால் எந்த சந்தைக்குப் போனாலும் யாரும் வாங்க மாட்டாங்க, வத்தல் போடலாம். அம்புட்டுதான். உதாரணம் தவறு.
:)

எங்க தலையை கலாய்த்தால் விட்டுவிடுவோமா ?

Unknown சொன்னது…

//மிருக காட்சி சாலைக்குச் சென்று விலங்குகளை வேடிக்கைப் பார்பது போன்றே மனிதர்களை வினோதமாக வேடிக்கைப் பார்க்க வந்திருந்த செயலை நினைத்து முடிவை மாற்றிக் கொண்டு வெட்கப்பட்டு திரும்பினோம்.//
நல்ல முடிவு. நல்ல பதிவு.
நாங்கள் குடும்பத்துடன் ஊட்டி சென்ற போது நாங்களும் படமெடுத்துக் கொண்டோம். ஆனால் உண்மையில் என் பிள்ளைகளுக்கு நான் காண்பித்தது - அவர்கள் வசிக்கின்ற வீடுகள் குளிரிலிருந்து அவர்களுக்கு எப்படி பாதுகாப்பாய் இருக்கிறது. அவர்கள் எந்த மாதிரி வணக்க முறைகளைக் கொண்டிருந்தார்கள் போன்றவைதான். மனிதக் காட்சி சாலைகளாக இல்லாமல், நாகரீகம் தோன்றிய வரலாறு அறிய, அறிவு முதிர்ச்சிக்கு அவை தேவைதான்.

சமீபத்தில் பிபிசியில் இந்தோனேசியாவில் பழங்குடிகளை மனிதக்காட்சியாக பயன்படுத்த பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததை காட்டியிருந்தார்கள். சற்றேறக்குறைய நீங்கள் சொன்னதேதான்.

கையேடு சொன்னது…

//ஆதிவாசிகளை காட்சிப் பொருளாக்கி சுற்றுலா வழிகாட்டிகளும் நிறையவே சம்பாதிக்கின்றனர். அவர்களின் நிலை மாறவேண்டும். அல்லது அவர்களின் விருப்பத்திற்கேற்று வாழ்வதற்கான வழி அமைத்துக் கொடுக்காவிட்டாலும் அவர்களின் சுதந்திரத்தை பரிக்காமல் இருந்தாலே போதும்.

நாம் வாழும் இயந்திர வாழ்க்கையை மறந்து, இதுபோன்ற இடங்களுக்கு மகிழ்வைத் தேடி இரண்டு நாள் சுற்றுலா சென்று ஆற்றிக் கொள்ளும் நம்மைவிட அவர்கள் எவ்வளவோ மகிழ்வாகத்தான் இருக்கிறார்கள்.//

மிகவும் உண்மையான வார்த்தைகள்..
----------------
ஆதிவாசிகள் குறித்தான ஒரு பதிவு ஒன்றை எழுத வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஒரு எண்ணம் (மட்டும்) இருந்தது. இனி அது தேவையில்லை என்றே நினைக்கிறேன். உங்கள் பதிவின் சுட்டி மட்டும் கொடுத்துவிடலாம். (ஆனாலும் இவ்வளவு சோம்பல் கூடாதுதான்.. என்ன செய்வது...)

இந்த அரசாங்க உதவி என்பது அவர்களை நகரத்துவாசிகளாக மாற்றுகின்ற முனைப்பிலில்லாமல், அவர்களுக்கான வாழிடங்களை அவர்களுக்கு உரிமையுள்ளதாக (பட்டா) மாற்றிக்கொடுத்தாலே பெரிய உதவியாக இருக்கும்.
தொழிற்சாலைகள் என்ற பெயரில், அவர்கள் வாழுகின்ற காடுகளுக்கு நடுவே வேலி போடுவது, குறுக்கே சுவர் எழுப்புவது போன்ற பல பிரச்சனைகளில் நில உரிமை கோரமுடியாத நிலையிலேயே அவர்கள் இருப்பதற்கு, நிர்பந்திக்கப்பட்டிருக்கின்றனர்.

அதைவிட மிகவும் தவறான ஒன்று, அவர்களுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஒரு பரிதாப எண்ணத்திலேயே அவர்களை அனுகுவது.

இந்திய அரசு சார்பில் மானுடவியல் ஆராய்ச்சிக்காக அந்தமான் சென்று ஆராய்ந்த ஒரு 75 வயது பெண்மணியுடன் உரையாடும் வாய்ப்பு கிட்டியது அவர் கேட்ட ஒரு கேள்வி மிகவும் சிந்திக்க வைத்தது.

ஐந்து நபருள்ள ஒரு குடும்பம் சுற்றுலாவிற்காக ஒரு கடற்கரைக்கோ அல்லது அன்றாடம் வீட்டிலோ ஒரே நாளில் ஒரு குப்பைத் தொட்டி அளவிற்கான குப்பைகளை உண்டு செய்கின்றனர். ஆனால் 100 நபர்கள் அங்கே ஒன்றாக ஒரே கிராமமாகவே வாழ்கின்றனர் அவர்கள் ஏன் குப்பைகளை உருவாக்குவதில்லை?? அவர்களது சமூகத்தில் குப்பைகளை உருவாக்குவதுமில்லை எரிவதுவதுமில்லை என்கிறார். மேலும் அரசாங்கம் அவர்களுக்கு என்ன வகையான கல்வி முறையை வகுக்க வேண்டும், எனப் பல புதிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது.

உங்கள் பதிவு மீண்டும் அவற்றை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது... நெடிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்..

கோவி.கண்ணன் சொன்னது…

சுல்தான் ஐயா,

பாராட்டுக்கு நன்றி !

//சமீபத்தில் பிபிசியில் இந்தோனேசியாவில் பழங்குடிகளை மனிதக்காட்சியாக பயன்படுத்த பழங்குடிகள் எதிர்ப்பு தெரிவித்ததை காட்டியிருந்தார்கள். சற்றேறக்குறைய நீங்கள் சொன்னதேதான்.//

ஆதிவாசிகளை கேலிப் பொருளாக்கிக் கொண்டுள்ள நவநாகரீக சமூகத்தைக் குறித்து ... இந்த இடுகையின் தலைப்பைக் கூட சற்று மாற்றி ஆதிவாசிகளும் அற்பமனிதர்களும் என்று வைத்திருக்கலாம்.
:)
:(

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
கோவி,
சுற்றுலாவிலும் கருத்தைத்தேடி இருக்கிங்களே ... பெரிய ஆள் தான்!ஆனாலும் நீங்கள் சொன்ன கருத்தை மறுப்பதற்கில்லை, அரசே அறிவித்து அவர்களை ஒரு காட்சிப்பொருளாக ஆக்கியது தவறே.அதை ஒரு மலைவாசஸ்தலம் என்ற அளவில் பிரபல படுத்தலாம் அரசு.

மேலும் ஆதிவாசிகளுக்கு அரசு உதவிகளும் செய்ய வேண்டும், செய்கிறதா? இல்லை என்றால் பிழைப்பை தேடி நகருக்கு வந்து தங்கள் இயல்பை தொலைக்க நேரிடும். அவர்கள் ஊரிலே படிப்பு வேலை வழங்கி முன்னேற்றலாம்.
//

வவ்ஸ்,

பாராட்டுக்கு நன்றி. கூடவே டிபிசிடிக்கு பிட்(டு) தகவலையும் ஒன்றிச் சென்றிருக்கிறீர்கள். நல்ல தகவல். நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//கையேடு said... உங்கள் பதிவு மீண்டும் அவற்றை நினைவுக்கு கொண்டுவந்துவிட்டது... நெடிய பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்..//

கையேடு அவர்களே,

நெடிய பின்னூட்டத்தில் அரி(றி)ய தகவல்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி.
ஆதிவாசிகளின் காட்டை அழித்து அம்மணமாக்கியது நாம் தான். :(
சுற்றுப்புற சூழல்களையும் கெடுத்து வருகிறோம்.

வீரப்பன் வேட்டை என்ற பெயரில் காவலாளிகள் நடத்திய அடாவடியில் மலைவாழ்மக்கள் பட்ட துன்பங்களை 'சோளகர் தொட்டி' என்ற நூலில் படித்தபோது ஆதிவாசிகள் மீது பரிவு ஏற்பட்டது.

RATHNESH சொன்னது…

கனமான பதிவு கோவி.கண்ணன்.

தம்மைத் தேடி யாராவது வருவதை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? விருமபாத வண்ணம் ஆக்கி இருப்பது தேடிச் சென்ற பழைய கும்பல்கள் தானே?

நம்மவர்களில் பலர் ஆதிவாசிகள் குடியிருப்பு, கோவா கடற்கரை போன்ற இடங்களுக்குச் செல்வதே 'கறந்த இடத்தை நாடுதே கண்கள்; பிறந்த இடத்தைத் தேடுதே பேதை நெஞ்சம்' என்கிற அரிப்பில் தான்.

அரைகுறை ஞானத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களும், நகைச்சுவை என்கிற பெயரில் வக்கிரமாக்கப்பட்ட காட்சிகளும் தான் ஏற்கெனவே சஞ்சலத்தில் இருக்கும் சராசரி மனங்களைக் கெடுத்து வைத்திருப்பதே. அத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்தவர்களின் சில்மிஷ வேலைகள் தான் வெளி ஆட்கள் மீதே அவர்களுக்கு வெறுப்பை உண்டுபண்ணி இருக்கும். எவ்வளவு வேதனையான வெட்கப்பட வேண்டிய உண்மை இது!

மற்றபடி அவர்களுக்கென்று இருக்கும் கலாச்சாரத்தில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் செய்ய முடிகிற ஒரே உதவி அவர்களை அவர்களாக வாழ விடுவதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

கலாச்சாரம் கட்டுப்பாடு ஆயிரம் திட்டங்கள் கழுதை குதிரை என்று பேசித் திரியும் நாகரீகப் போலிகள் நிறைந்த நாகர வாழ்க்கையில் மக்கள் தொகைப் பெருக்கம், வியாதிகள் போன்றவை கட்டுக்குள் இல்லை. அவர்கள் கட்டுக் கோப்பாய் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள் என்பது நாம் தான் அவர்களிடம் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ண வைக்கிறது.

பதிவின் தலைப்பு கூட "ஆதிவாசிகள் தான் அற்புத மனிதர்கள்" என்று இருந்திருக்கலாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
கனமான பதிவு கோவி.கண்ணன்.
//

ரத்னேஷ்,

இந்த இடுகைக்கு உங்கள் பின்னூட்டம் வரும் என்று எதிர்பார்த்து நடு இரவு வரை விழித்திருந்தது வீன் போகவில்லை. இதெல்லாம் ரொம்ப ஓவரா ?
:))

//தம்மைத் தேடி யாராவது வருவதை விரும்பாதவர்கள் இருக்க முடியுமா? விருமபாத வண்ணம் ஆக்கி இருப்பது தேடிச் சென்ற பழைய கும்பல்கள் தானே?
//

நண்பர் டிபிசிடியும், சுல்தான் அவர்களும் ஆதிவாசிகள் - அவர்களை நாம் சென்று காட்சிப் பொருளாக பார்பதை விரும்பவில்லை என்பதை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

நம் நாட்டிற்கு வரும் வெள்ளைக்காரர்கள் பிளாட்பார வாசிகளை படமெடுப்பதைப் பார்த்து 'அவலங்களை காட்சிப்படுத்த படமெடுக்கிறார்கள்...என ' எரிச்சல் அடைந்திருக்கிறேன். அதே போன்ற உணர்வு ஆதிவாசிகளுக்கு இருக்கும் என நினைக்கிறேன்.

//நம்மவர்களில் பலர் ஆதிவாசிகள் குடியிருப்பு, கோவா கடற்கரை போன்ற இடங்களுக்குச் செல்வதே 'கறந்த இடத்தை நாடுதே கண்கள்; பிறந்த இடத்தைத் தேடுதே பேதை நெஞ்சம்' என்கிற அரிப்பில் தான்.//

மறுக்க முடியாத உண்மை. அவர்களுக்கு உதவுபவர்களை விட 99.99% வேடிக்கை பார்க்கச் செல்பவர்களே அதிகம்.

//அரைகுறை ஞானத்துடன் எடுக்கப்பட்ட திரைப்படங்களும், நகைச்சுவை என்கிற பெயரில் வக்கிரமாக்கப்பட்ட காட்சிகளும் தான் ஏற்கெனவே சஞ்சலத்தில் இருக்கும் சராசரி மனங்களைக் கெடுத்து வைத்திருப்பதே. அத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்தவர்களின் சில்மிஷ வேலைகள் தான் வெளி ஆட்கள் மீதே அவர்களுக்கு வெறுப்பை உண்டுபண்ணி இருக்கும். எவ்வளவு வேதனையான வெட்கப்பட வேண்டிய உண்மை இது!//

மேலும் இடுகைக்கு சிறப்பு சேர்க்கும் கருத்து. நன்றி !

//மற்றபடி அவர்களுக்கென்று இருக்கும் கலாச்சாரத்தில் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் செய்ய முடிகிற ஒரே உதவி அவர்களை அவர்களாக வாழ விடுவதைத் தவிர வேறென்ன இருக்க முடியும்?

கலாச்சாரம் கட்டுப்பாடு ஆயிரம் திட்டங்கள் கழுதை குதிரை என்று பேசித் திரியும் நாகரீகப் போலிகள் நிறைந்த நாகர வாழ்க்கையில் மக்கள் தொகைப் பெருக்கம், வியாதிகள் போன்றவை கட்டுக்குள் இல்லை. அவர்கள் கட்டுக் கோப்பாய் ஆரோக்கியமாய் இருக்கிறார்கள் என்பது நாம் தான் அவர்களிடம் வாழ்க்கை முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எண்ண வைக்கிறது.

பதிவின் தலைப்பு கூட "ஆதிவாசிகள் தான் அற்புத மனிதர்கள்" என்று இருந்திருக்கலாம்
//

இயற்கை வளம் குறித்த உங்கள் இடுகைகளை படிக்காவிட்டால் இந்த இடுகையை எழுதி இருப்பேனா என்பது சந்தேகம் தான். மிக்க மகிழ்ச்சி.

துளசி கோபால் சொன்னது…

இதோ இன்னொரு தலைப்பு:'ஆதிவாசிகள் என்ற அற்புதமனிதர்கள்'

துளசி கோபால் சொன்னது…

இதோ இன்னொண்ணு:

'ஆதிவாசிகளும், அற்ப மனிதர்களும்'

oru Eelath thamilan சொன்னது…

வேடிக்கை பார்ப்பது தவறுதான். இருப்பினும் யாராவது அவர்களைச் சந்திக்கக்ககூடியவர்கள் சந்தித்து உரையாட வேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை வெளி உலகம் அறியுமாறு செய்ய வேண்டும்.

அது உலகம் தன்னைத்தான் திருத்த உதவும்.

நீங்கள் அவர்களை சந்தித்தது சரி.
அவர்களைப்பற்றி விரிவாக எழுதாமல் விட்டதுதான் தவறு.ஒரு ஈழத்துத் தமிழன்

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இதோ இன்னொண்ணு:

'ஆதிவாசிகளும், அற்ப மனிதர்களும்'
//

துளசி அம்மா,

நான் சுல்தான் ஐயாவுக்கு போட்ட பின்னூட்டத்தை சரியாக படிக்கவில்லை.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
இதோ இன்னொரு தலைப்பு:'ஆதிவாசிகள் என்ற அற்புதமனிதர்கள்'
//

துளசி அம்மா,

நியூஸி, ஆஸியில் உள்ள பழங்குடியினர் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும், அவர்களைப் பற்றி எப்போது எழுதப் போகிறீர்கள் ?

ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

துளசி கோபால் சொன்னது…

oops............

மிஸ் ஆகிருச்சு.

வகுப்பிலே
கவனக்குறை
டீச்சருக்கு
:-)

கோவி.கண்ணன் சொன்னது…

//oru Eelath thamilan said...
வேடிக்கை பார்ப்பது தவறுதான். இருப்பினும் யாராவது அவர்களைச் சந்திக்கக்ககூடியவர்கள் சந்தித்து உரையாட வேண்டும். அவர்களின் விருப்பு, வெறுப்புக்களை வெளி உலகம் அறியுமாறு செய்ய வேண்டும்.

அது உலகம் தன்னைத்தான் திருத்த உதவும்.

நீங்கள் அவர்களை சந்தித்தது சரி.
அவர்களைப்பற்றி விரிவாக எழுதாமல் விட்டதுதான் தவறு.

ஒரு ஈழத்துத் தமிழன்
//

ஈழத்துத் தமிழன் ஐயா,

பயண வழிகாட்டித்தான் அவர்களிடம் உரையாட முடியும், நமக்கெல்லாம் மொழி இடற் இருக்கிறது.

அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள அங்கேயே தங்கி இருந்து பழகினால் மட்டுமே அறிய முடியும்.

உங்களுக்கு மேலும் தகவல் தேவைப்பட்டால் இணைய விக்கியில் தகவல் கொட்டிக் கிடக்கிறது படித்துப் பாருங்கள் Orang_Asli

bala சொன்னது…

//நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார்//

கோவி.மு.கண்ணன் அய்யா,

ஏன் எரிப்பது போல் பார்க்க மாட்டார்?பாத்தாக்க நம்மளை விட இன்னும் கேவலமா நாகரீகமில்லாத திராவிட ஆதிவாசிங்க மாதிரி இருக்காங்க;இந்த மூஞ்சிகள் நம்ம வந்து இப்படி பரிதாபமா பாக்கறாங்களேன்னு கோபம் வருமா வராதா,சொல்லுங்கய்யா.

பாலா

கோவி.கண்ணன் சொன்னது…

// bala said...
//நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார்//

கோவி.மு.கண்ணன் அய்யா,

ஏன் எரிப்பது போல் பார்க்க மாட்டார்?பாத்தாக்க நம்மளை விட இன்னும் கேவலமா நாகரீகமில்லாத திராவிட ஆதிவாசிங்க மாதிரி இருக்காங்க;இந்த மூஞ்சிகள் நம்ம வந்து இப்படி பரிதாபமா பாக்கறாங்களேன்னு கோபம் வருமா வராதா,சொல்லுங்கய்யா.

பாலா
//

ஜயராமன் சார்,

லக்கி லுக் எதோ பதிவு போட்டு இருக்கார் பார்த்தேளா ?

பரவாயில்லை விடுங்கோ, இதெல்லாம் சகஜம் தானே. யாரை வச்சு காமடி பண்ண முடியும், நாம அறிஞ்சாவா தெறிஞ்சவாவை வைச்சுத்தானே பண்ண முடியும்.

***

என்ன சொன்னேள், நீங்க வேண்டுமானால் பஞ்சகச்சமும் காதுல ஒத்த்தப்பூவும் வெச்சுண்டு போங்கோ பகவானே வந்துட்டார் என்று ஆதிவாசிகள் காலில் விழுந்தாலும் விழுவார்.

இன்னிக்கு எத்தனை ஸ்ரீராம ஜெயம் எழுதினேள் ? அங்கே வடமொழி சுலோகத்துக்கு பொருள் விளக்க பதிவு எதும் உள்ளதா ? மீனிலும் நாறினவன் படிக்க ஆவலாக உள்ளது.

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//bala said...
//நம்மைப் போலவே உடை அணிந்திருந்தார். எரிப்பது போலப் பார்த்தார்//

// Alandur, Tamil Nadu arrived from techtamil.in on "காலம்: புது ப்ளாக்கர் - குறிசொற்கள், குறிசொற்களின் பட்டியல் அமைத்தல்"//

ஜயராமன் சார்,

கிண்டியும் ஆலந்தூரும் பக்கம் பக்கம் என்றால் யாரும் நம்ம மாட்டேன்கிறா, இன்னொருதரம் எட்டிப் பார்த்துட்டு போங்கோ !
:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்