பின்பற்றுபவர்கள்

27 பிப்ரவரி, 2008

விஎஸ்கேவுக்கும் எனக்கும் போலி விவகாரத்தில் முட்டல் ? டோண்டு ராகவனின் புரட்டல் குமட்டல் !

திரு டோண்டு ராகவனுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு, அவரே அவ்வாறு எழுதச் சொல்லவில்லை என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். எழுதியவர் யார் என்று என்ன எழுதினார் என்ன என்பதும் எல்லோரும் அறிந்தது தான், அவரது மகளை வைத்து போலி ஆட்டத்தில் கலந்து கொண்டு ஆடியவருக்கு மன்னிப்பு வழங்கிட்டேன் என்று சொல்லிவிட்டார். என்மீதான அவர் விமர்சனங்களை புறம்தள்ளுகிறேன். அதற்கு மேல் மதிப்பு கொடுத்து பதில் சொல்லத் எனக்கு தேவை இல்லை. அது பற்றி என்மீது மதிப்பு எவரும் கேட்டால் பதில் சொல்லத் தயங்க மாட்டேன்.

திரு டோண்டு ராகவன் போகிற போக்கில் எனது நண்பர் வீஎஸ்கே ஐயாவை தேவை இன்று தனது இட்டுக்கட்டுதலுக்கு இழுத்து இருக்கிறார். நட்பில் தொடர்புள்ளவர்களை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அதைச் செய்து கொண்டிருப்பது தான் அந்த கூட்டம். மூர்த்தி மட்டும் தான் நட்பை கேவலப்படுத்தினார் என்று சொல்லிக் கொள்பவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள். இதற்கு மேல் அந்த பிறவிகள் பிரச்சனை எழுப்பும் போது எனது சாட்டில் உள்ளவற்றை ஸ்கீர்ன் சாட் எடுத்துப் போட்டே காட்டுவேன். அதில் எனக்கு மூர்த்திதான் போலி என்பது தெரியுமா ? இவர்களில் யார் யார் விடாது கருப்புடன் என்ன பேசினார்கள் என்பதெல்லாம் உண்டு. என் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்காக திரும்பவும் சொல்கிறேன். மூர்த்தி போலியா ? போலி மூர்த்தியா என்பது எனக்கு தெரியாது. விடாது கருப்புவிற்கு எழுதிய பாராட்டில் விடாது கருப்பு சார்பில் மூர்த்திதான் பேசினார் என்று சொல்லி இருக்கிறேன். மூர்த்தியை எங்கே எப்போது சந்தித்திருக்கிறேன். அதன் பிறகு தொடர்பு இருக்கிறது என்றும் சொல்லி இருக்கிறேன். என்னைப் பற்றி ஊகமாக சாதிபற்றி எழுதியதைப் பற்றி எனக்கு வருத்தம் இருந்தாலும் விடாது கருப்பு கலைப்பு என்றதால் பாராட்டியே உண்மையையே எழுதினேன்.

இதில் கடுப்படைந்தோர் இதுகாறும் மூர்த்திதான் போலி என்ற கட்டமைப்பை வைத்திருந்தது போலவும் அதனால் அந்த பிம்பம் உடைந்துவிட்டது போலவும் என்மீது காழ்பை உமிழ்கிறார்கள். இவர்கள் யோக்கிதை அம்பலப்பட்டுப் போனதால் என்மீது கற்பனையாக் எதையாவது எழுதிவைக்கிறார்கள். அதில் ஒன்று அமுகவை நான் நடத்துவதாம். அமுக பாஸ்வேர்ட் என்னிடம் இருந்தது உண்மை, மகேந்திரன் இன்னும் சிலரும் சேர்ந்து உருவாகியதாகச் சொல்லி இந்தியா செல்லும் போது கொடுத்துச் சென்றார். அதன் பிறகு எனக்கு வேண்டாம் என்று சொல்லி பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள் என்று சொல்லிவிட்டேன்.

என்னிடம் இருந்திருந்தால் 'கருத்து கந்தசாமி' என்ற பதிவு மூன்றாவது முறையாக செந்தழல் ரவி எழுதிய போது அதனை அனுமதித்து இருப்பேனா ? அதை அனுமதித்தே இருந்தாலும் அல்லது அதில் என்னைப் பற்றியும் எனது நண்பர்களைப் பற்றியும் இருக்கும் பின்னூட்டங்களை அழிக்காமல் விட்டு இருப்பேனா ?

மூர்த்திக்கு நான் பயப்படுவதாக எனது நண்பர் விஎஸ்கே என்னிடம் சாட்டில் உரையாடிய போது எனக்கு மனவருத்தம் வந்தது உண்மைதான். அதுபற்றி அவருக்கு எழுதிய கடிதங்களை இங்கே இணைக்கிறேன். அந்த கடிதத்தின் பிறகு நான்கு மாதங்கள் வீஎஸ்கே ஐயாவுடன் தொடர்பு வைத்துக் கொள்ளாமலே இருந்தேன். பிறகு மறுபடியும் எப்போதும் போலவும் தான் பேசுகிறோம். இந்த கடிதத்தில் மூர்த்தியும் போலியும் ஒரே ஆள் என்பதில் எனக்கு தெளிவு இல்லை என்றே சொல்லி இருக்கிறேன். இது திட்டமிட்டு எழுதிய கடிதம் இல்லை என்பதால், மற்றவற்றை படிப்பவர்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

show details 9/17/07

அன்புள்ள விஎஸ்கே ஐயா,

ஒரு ஆத்திக அன்பருக்கு பதவி, படிப்பு, அந்தஸ்து, வயது இவை அனைத்தும் இருந்தாலும் இறைவனுக்கு முன்பு நிற்கும் போது இவை அனைத்திற்கும் எந்த பொருளும் இல்லை. அது போலவே நட்பு என்ற எதையும் எதிர்பார்காத தூய அன்பிற்கும் முன்பும் இவை அனைத்தும் செல்லுபடியாகாது.

DR_சங்கர்_குமார்: அவர் அவன் தனியா தெரிஞ்சுது

10:21 PM பயம் கலந்த மரியாதை புரிந்தது
me: குப்பை
புண்னாக்கு
புடலங்காய்
உங்களிடம் சொன்னதற்கும் என்னை செருப்பால் அடிக்கனும்
DR_சங்கர்_குமார்: இவ்வளவு கோபம் வருவதே அது உண்மை என சொல்லுகிறது


நீங்கள் அவரை போலி என்று நம்புவது உங்கள் கருத்து அதில் எனக்கு எந்த புண்ணாக்கு காழ்ப்பும் கிடையாது. ஆனால் 'பயம் கலந்த மரியாதை' என்று நீங்கள் சொல்ல வருவது எதைக் குறிக்கிறது ? போலி என்பவனின் ஆபாசம் பதிவுலகமே அறிந்தது. அதில் எனக்கு பங்கு இருப்பது போன்ற நீங்கள் நினைப்பதிலிருந்தே நானும் அதில் ஒரு அங்கம் என்ற உங்கள் ஆழ்மன அபத்த நம்பிக்கையின் குரலாக அது ஒலிக்கிறது. மேலோட்டமாக நட்பு என்ற பெயரில் பழகிக் கொண்டே இது போன்ற அபாண்டங்களை சுமத்தியதில் எனக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுநாள் வரை தாங்கள் இப்படி ஒரு அவநம்பிக்கை வைத்துக் கொண்டு என்னுடன் நீங்கள் நட்பு பாராட்டுவதில் என்ன பயன் இருக்கிறது ? இது போலியான ஒன்று.

அதைவிட 'உண்மையைச் சொல்வதால் உனக்கு கோபம் வருகிறது' என்று தம் இழித்துக் கூறியதற்கு மேலும் சப்பைப் கட்டுவது அதைவிட கேவலம். நீங்கள் என்ன கடவுளா ? என் மனதை அறிந்து கொண்டு அதில் புதையுண்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறீர்களோ ?

நீங்கள் என்னை 'வேசி மகன்' என்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இதற்கு நான் கோபப்பட்டால் உண்மை சுடுவதால் கோபம் கொள்கிறேன் என்று பொருளா ? அல்லது மவுனமாக சிரித்தால் 'ஆம் நான் வேசி மகன்' தான் என்று ஒப்புக் கொள்கிறேன் என்று பொருளா ? எப்படி பதில் சொன்னாலும் நம்பிக்கை குறித்த உங்கள் கேள்வியே இழிவு படுத்திப் பார்ப்பதுதானே ?

பொதுவில் அவரை குற்றம் சுமத்தியவர்களும் சரி, என்னை அதில் தொடர்பு படுத்தியவர்களும் சரி எனக்கு கருப்புடன் தொடர்பு இருக்கிறது, நலவிரும்பி என்றுதான் சொன்னார்களேயன்றி நான் அவருக்கு அல்லக்கையாக செயல்படுகிறேன் என்றோ, வாசமாக சிக்கிக் கொண்டேன் என்றோ இட்டுக்கட்ட முயற்சிக்கவில்லை. அவர்கள் சொன்னவை அனைத்தும் நானே என்பதிவில் கருப்புடன் தொலைப்பெசி தொடர்ப்பு வைத்திருப்பதை
வெளிப்படையாக சொல்லியதத வைத்துதான்.
என்னைப் பற்றி நன்கு அல்லது ஓரளவுக்கு அறியாதவர்களுக்கே என்மீதான சந்தேகம் என்பது அவரிடம் தொடர்பு கொண்டுள்ளவன் என்ற அளவில் மட்டுமே. அவர்களே அவரை போலி என்று நம்பினாலும் அந்த போலியின் ஆபாச நடவடிக்கையில் எனக்கு தொடர்பு இருப்பதாக ஒருவரும் சொல்லவில்லை. 'பயம் கலந்த' என்ற ஒற்றை சுடுசொல்லில் ஒரு பெரும் குற்றத்தை என்மீது சுமத்தும் அளவுக்கு உங்களிடம் அவநம்பிக்கையாகவோ, போலி வேடமிட்டோ எப்பொழுது நான் நடந்து கொண்டேன் ?

சொன்னதையும் சொல்லிவிட்டு உங்கள் சொற்களை தற்காக்க என் மீதே மறுபழியாக 'உண்மையாக இருப்பதால் தான் கோபம் கொள்கிறேன்' என்று சொல்வது அபத்ததின் உச்சம். இதற்காக நான் மன்னிப்புக் கேட்கச் சொல்லவில்லை. குறைந்த பட்சம் சொன்னது தவறு என்றாவாது சொல்லி இருக்கவேண்டும். நீங்கள் உண்மையானவராக இருந்தாலும் உங்களிடம் நேர்மை இருப்பதில்லை என்பதற்கு இதைவிட என்னால் ஒரு நல்ல உதா'ரணம்' காட்ட முடியுமா ?

நான் பார்பனியத்தை என்பதில் சாடுவதென்பது என்றோ ஒருநாள் அதுபற்றி பேசப்படும் போது மட்டுமே. என்றும் அதே உணர்விலும், உறங்கும் போதும் பார்பனீய காவலாளியாக செயல்படும் தாங்கள் தான் நட்பின் ஊடே அதை அளவுகோலாகக் கொண்டுவருவதைப் பற்றி சுயபரிசோதனைச் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் பார்பனர் அல்லாதவர்களுடன் நல்ல முறையில் பழகுகிறேன் என்பதெல்லாம் பார்பனியத்தைக் கட்டிக் காக்க மட்டுமே பயன்படும் வெளிவேசம்.

எதற்காக இதைச் சொல்கிறேன். போலி என்பவன் பார்பன எதிரி என்று அவனே சொல்லி இருக்கிறான். அவனையும் என்னையும் தொடர்பு படுத்தி நட்பையும் பனையம் வைக்கும் உங்கள் மனநிலையில் மேற்கண்டதை நான் காண்கிறேன். என்பதால் என்கருத்தாக உங்களுக்கு இதைச் சொல்லாமல் இருக்க முடியாது.

இப்படி உடைத்துச் சொல்கிறானே, நம் தகுதியை மறந்துவிட்டு ஒரு இழிபிறவியிடம் நட்பு கொண்டுவிட்டோம் என்று நீங்கள் நினைத்தால் முதல் பத்தியை திரும்பவும் படியுங்கள்.

நீங்கள் சொன்னது தவறு என்று உணராத போது, நாம் பழசை மறந்துவிடுவோம் என்று ஒருவருக்கு ஒருவர் பல் இளிப்பது என்பது நட்பின் ஊடான ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் நம்பிக்கைக்கு செய்யும் உண்மையான துரோகம். நான் தயாராக இல்லை.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்
Blogger Sites :
http://kaalangkal.blogspot.com
http://govikannan.blogspot.com


கோவி.கண்ணன் to DR_சங்கர்_குமா., விஎஸ்கே
show details 12/10/07 Replyஅன்புள்ள அப்பா,

இந்த இரு சொல் நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்பது பொருள் தராது. கோபம் மைனஸ் என்று மட்டுமே பொருள் கொள்ளலாம். நீங்கள் 'நான் பயப்படுவது' குறித்து உங்கள் பார்வையில் சொன்னது உண்மையோ பொய்யோ.... அது போன்ற கர்பனையில், உள் உணர்வில் நான் பிறரைச் ஒருவேளைச் சொன்னால்.... சொன்னது பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் நானெல்லாம் அதற்கு மன்னிப்பு கேட்பதற்கு தயங்கியதில்லை. நான் உங்களை மன்னிப்பு கேட்கக் கூட சொல்லவில்லை. அப்படி சொல்வது உங்கள் மீதான மதிப்பை நானே குறைத்துவிடுவது போன்றதுதான். அது போல் சிந்திபவனே அல்ல. சொன்னது தவறு என்ற ஒருவார்த்தை ஒரே ஒரு வார்த்தை மட்டுமே எதிர்ப்பார்த்தேன். நீங்கள் என்னை மதிக்கவேண்டும் என்று நினைப்பதில்லை... எனக்கும் உணர்வுகள் இருப்பதை ஒப்புக் கொண்டால் போதும் என்று நினைப்பவனே... மனித மனம் உணர்வுகளால் உழல்வதுதானே... அதுவும் நாம் ஒருவரை ஒருவர் புரிந்தவர் என்று எனக்குள் நானாகவே கொண்ட எண்ணம் தான்.

எல்லோரும் சராசரி ஆட்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் நீங்கள் மட்டும் மாறுபட்டவர் என்று நினைப்பது என் தவறாக கூட இருக்கட்டும்.

எதோ ஒரு காரணத்தில் பெற்றோர்கள் மீது காரணமே இல்லாமல் கோபம் கொள்கிறபிள்ளைகள் தானாகவே சமாதானமாக போகவேண்டும் என்று ஒரு தாயோ, தந்தையோ நினைப்பதில்லை. முடிந்த அளவுக்கு சமாதானப்படுத்த முயன்று அந்த குழந்தையை இயல்புக்கு கொண்டுவருவார்கள். இதெல்லாம் இரத்தம் தொடர்பு இருந்தால் தான் உண்மையோ ? போனால் போ..... நீயாக வந்தால் வா...நான் கவலைப்படவில்லை...எனது இயல்பு வாழ்கை பாதிப்படையாது......என்று சொல்லும் அளவுக்கு, நினைக்கும் அளவுக்கு என்மீதான வெறுப்புகள் உள்ளுக்குள் இருந்தால் அன்றி, ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்புக் கூட சாத்தியம் இல்லாமல் போகி இருக்குமோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. மூத்தோர் வளைந்தால் உடைந்துவிடுவார்களோ ?

நான் மரணத்திற்கு கூட பயப்படுவதில்லை. நாம் பயந்தாலும் அது நம்மை விடப் போவதில்லை. வேறு எதற்காவது பயப்படுகிறேன் என்றால் அடுத்த நொடி மரணம் நிகழ்ந்துவிட்டால் என்மீது வெறுப்புள்ளவர்கள், என்னை வெறுப்பவர்கள் இரண்டுமே என் மரணத்திற்கு பிறகு எனக்கு இருக்கக் கூடது, இவையெல்லாம் எப்போதுமே சரியாக வைத்திருக்க வேண்டும்.. என்பதற்காக மட்டுமே பயப்படுகிறேன். என்னை நினைப்பவர்கள் எவராக இருந்தாலும் என்னை நேசித்துக் கொண்டிருப்பவர்களாகவே இருக்க வேண்டும். அந்த சூழல் இல்லாமல் போய்விடக் கூடாது என்பதற்காக மட்டுமே பயப்படுகிறேன்.

அடுத்த நாள் வாழ்க்கை யாருக்குமே நிச்சயம் இல்லை என்பது எனக்கும் பொருத்தமானதுதான், அதனாலேயே
என்னால் வெறுக்கப்படுபவர்கள்...என்னை வெறுப்பவர்கள் இரண்டுமே என் வாழ்க்கையில் இருக்கக் கூடாது என்றே எப்போதும் நினைக்கிறேன். சில சமயம் சிலரிடம் மட்டும் காலில் விழுவதால் மட்டுமே இவை சாத்தியம் என்றால் அதையும் செய்யத் தயங்கியதில்லை.

உங்கள் குடும்பத்தாருக்கும் குறிப்பாக அம்மாவுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

உங்கள் மீது குற்றம் சொல்ல வேண்டும் என்றோ, என் தரப்பை ஞாயப்படுத்த வேண்டுமென்பதற்கான தன்னிலை விளக்கம் இல்லை இது. நாமே தேடிக் கொண்ட அன்புக்கு குழிவெட்டி புதைக்க முடியாது என்பதை எல்லாக் காலமும் நன்கு உண்ர்ந்தவன். உங்களிடம் மட்டுமல்ல பலரிடம், நான் சந்தித்த... பழகிய பலரிடமும் என் மீது குறையில்லாவிட்டாலும் பழியை நானே போட்டுக் கொண்டிருக்கிறேன். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. நல்லோர்க்கு எல்லாவற்றிலுமே நன்மை இருப்பது போல் இந்த கால இடைவெளி எனக்கு மேலும் சில நல்லுள்ளங்களை அடையாளம் காட்டி இருக்கிறது.

--
பழகிய நாள் முதல்,
என்றும் உங்கள் மீதான அன்புடன்,

கோவி.கண்ணன்
Blogger Websites :
http://govikannan.blogspot.com
http://kaalangkal.blogspot.com

*********************

TiS Foundation USA to me
show details 12/10/07 Reply


அன்புக் கண்ணா,
எனக்குக் கோபமே வராது என்பதும், பிடித்தவரை நான் எப்போதும் கோபிப்பதில்லைஎன்பதும் என் மகனுக்குத் தெரியாமல் இருக்கமுடியாது என நான் உறுதியாக நம்புகிறேன்.
பயப்படுகிறேன் என்றா சொன்னேன்? பயம் கலந்த மரியாதையா எனத்தான் கேட்டேன்.
அது பிடிக்கவில்லையென, "கேவலமய்யா" என ஒரு மடல் வந்த போது நான் அதிர்ந்து தான் போனேன் என்பதே உண்மை.
'அப்படி இல்லை' என ஒரு மறுமொழி வந்திருந்தால் உடனே தயங்காமல் மன்னிப்பே கேட்டிருப்பேன்.
"பிடிக்கவில்லை" என்பதற்கு நான் என்ன செய்ய முடியும். இனி அதைச் சொல்லாமல் இருந்திருப்பேன்.
அதன் மூலம் அது தவறு என ஒப்புக் கொள்ளாவிட்டால், இனி தொடர்பு வேண்டாம் என முறித்துக் கொண்டு போனது நானல்லவே.
அதற்கும் கூட என் அன்பான முரட்டுக் கண்ணா என ஒரு பதில் மடல் எழுதினேன்.
எனக்கு எப்போதும் உன் மீது துளிக்கூட கோபம் இல்லை.
கண்ணில் பட்ட போதெல்லாம் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி என் அக்கறையை அக்கரையில் இருந்து காட்டிக் கொண்டுதான் இருக்கிறேன். என் தேவைகளுக்கு உன்னை அணுகவும் தயங்கவில்லை. என் பேத்தியின் பிறந்த நாளையும் நினைவில் வைத்து வாழ்த்திணேன்.
மற்ற பதிவுகளுக்கு முன்னைப்போல் சுதந்திரமாக மறுமொழி எழுத மனம் வரவில்லை. மேலும், 'சித்தர்' பதிவில் மும்முரமாக இருந்ததால் வரமுடியவில்லை.
அலுவலில் இருந்தும் தமிழ்மணத்துக்கு வர முடியாமல் போயிற்று.
மேலும் பதிவுகளின் தலைப்பும் வரச் சொல்லி அழைக்கவில்லை!!:))

மற்றபடி என் அன்பு எப்போதும் போலவேதான் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என் முரட்டுக் கண்ணா!
நல்லுறவுத்தொடர் கிடைத்து இயல்பாகப் போய்க்கொண்டிருக்கிறது என அறிந்து மகிழ்ச்சி. நானும் ஒரு நல்லுறவாகவே எப்போதும் இருப்பேன்.
"உறவுகள் வளர்ந்தது. எனக்குள்ளே அதில்
பிரிவுகள் என்பது இருக்காதே."

பழையபடி வா! பழகிட வா!
:))))))))))))))))))))))))))))))))))))))))
- Show quoted text -

கோவி.கண்ணன் to TiS
show details 12/10/07 Reply


இட் ஈஸ் ஓகே......!

நான் உணர்ச்சி வசப்பட்டு எழுதவில்லை....ஒருவாரமாகவே எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன் இன்று எழுதினேன். எப்போதும் அடி எடுத்து வைக்கும் பாக்கியம் எனக்கே கிடைக்கிறது போலும். :) பிறகு தொலைப்பேசி அட்டை வாங்கி வந்து இந்த வாரத்துக் குள் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறேன்


உடனடி பதிலுக்கு மிக்க நன்றி !

*****************************

நட்பை கேவலப்படுத்தும் நாய்களுக்கு இந்த இடுகையைப் படித்தாவது நட்பின் உன்னதத்தை புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவேளை மூர்த்தி தான் போலி என்று இருந்தாலும் நான் அது தெரிந்திருந்தால் அவரை கண்டிப்பேன் என்றே நினைத்திருக்கலாம். அந்த அளவு என்மீது மதிப்பு வைத்திருப்பவருக்கு 'அவர் தான் போலி' என்று என்னால் சான்றிதழ் வழங்க முடியாது. முடிந்தால் அவரும் அவருக்கு எதிரானவர்களும் முட்டிக் கொள்ளட்டும், எனக்கும் இந்த விவகாரத்திற்கும் தொடர்பே இல்லை. மூர்த்தியை சந்தித்தி இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அவர் தான் போலியா என்பது செந்தழல் ரவிக்கு தெரிந்திருக்கலாம். விடாது கருப்புடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓசை செல்லாவுக்கும், திராவிட தமிழர்கள் குழுமத்தில் இருந்த போது நண்பர் குழலிக்கு தெரிந்திருக்கலாம். விடாதுகருப்பாக சாட்டியபோதும் சரி, மூர்த்தியாகச் சாட்டியபோதும் சரி அவர் தன்னை போலி என்று சொல்லிக் கொண்டது கிடையாது. எனக்கு உறுதியாக தெரியாத ஒன்றை எவர்பொருட்டும் 'ஆம்' என்று சொல்ல என்றுமே என் மனசாட்சி இடம் கொடுக்காது.

மூர்த்தி போலி டோண்டு என்று நான் தெரிந்தே பழகியதாக எங்கேயும் எவரிடமும் ஆதாரம் கிடையாது.

எனக்கும் எனது நண்பர் விஎஸ்கேவுக்கு நடந்த தனிப்பட்ட உரையாடலை நான் இங்கு இணைப்பதால் எனக்கும் வீஎஸ்கே ஐயாவுடன் ஆன நட்பிலும் பாதிப்பு இல்லை.

11 கருத்துகள்:

PAISAPOWER சொன்னது…

அவனவன் துண்டக்காணோம் துணியக் காணோம்னு நேரமில்லாமல் அல்லாடும்
போது உங்களை போன்றவர்கள் சப்பை மேட்டருக்கெல்லாம் மாய்ந்து மாய்ந்து பதிவு போடுவதை பார்க்கும் போது பொறாமையாகவே இருக்கிறது....

ம்ம்ம்ம்...நீங்களெல்லாம் ரொம்பவே கொடுத்து வைத்தவர்கள் சாமீ...

SurveySan சொன்னது…

தல சுத்துதுங்க.

நான் உங்க எடத்துல இருந்து, என்னோட நண்பன் எவனாவது இந்த மாதிரி கலீஜா எழுதரான்னு சந்தேகம் வந்திருந்தா, நேர்ல போய் கேட்டு க்ளியர் பண்ணியிருப்பேன்.
அப்படி எழுதுவது ஊர்ஜீதமாயிருந்தால், செவிட்லயே கொடுத்திருப்பேன்.

நீங்க என்ன பண்ணியிருக்கணுங்கரது உங்க தனிப் பட்ட விருப்பம் ;)

எல்லாம் நன்மைக்கே!

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) சொன்னது…

தந்தை மகனிடம் ஒரு முறை செய்த செலவுக்கு கணக்கு கேட்டாராம் அதற்கு மகன் நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்தால் கணக்கு கேட்க மாட்டீர்கள் நம்பிக்கை இல்லையெனில் நான் கொடுக்கும் எந்தக் கணக்கினாலும் உபயோகம் கிடையாது என்று கூறினாராம்.

மனிதன் தவறு என்று தெரிந்து எந்த விஷயமுமே செய்வதில்லை கொலை செய்பவன் கூட அதனை செய்யும் சமயம் தவறு என்று தெரிந்தால் செய்ய மாட்டான். அவனைப் பொறுத்த வரை அவன் செய்வது சரியே அதனால் தான் அதனை செய்கிறான்.

இந்த விவகாரத்தில் உங்கள் எதிராளிகள் சில தவறு செய்தாலும் அவர்களுடைய நோக்கம் சரியாக இருப்பதால் அதனை நியாயப் படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய இலக்கு எதிராளியை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்றே இருக்கிறது அதனை நடைமுறைப் படுத்துவது சரியான முறையா இல்லையா என்பதில் கவலை இல்லை.

சில காலம் முன்பு வரை எதிராளியின் எதிரியும் இப்படியே இருந்தான் என்று இதனை பார்த்து வரும் பலர் அறிவர்.

வல்லவன் வாழ்வான் என்ற நம்பிக்கையில் நடக்கும் பலப்பரிட்சை நடக்கிறது இங்கே அதுவும் வலைப் பதிவுகள் என்ற அற்பமான ஒன்றுக்காக. இதில் நீங்கள் தேவையில்லாமல் வேலியில் செல்லும் ஓணானை மடியில் எடுத்து விட்டுக் கொள்கிறீர்கள். இந்த விவகாரத்தில் மேலும் எந்த விதமான பதிவுகளோ இல்லை இது குறித்து எந்த விதமான விவாதங்களிலோ ஈடுபடாதீர்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

தான் தான் வல்லவன் என்று நினைத்து கொண்டிருந்த ஒருவன் இன்று அல்லல் படுகிறான். தான் தான் வல்லவன் என்று இன்னொருவன் இன்று நினைத்து கொண்டு செயல்படுகிறான்.

இதில் இருவருமே தாங்கள் செய்வது சரி என்று நினைத்து தான் செயல்படுகிறார்கள்.

அவர்களுடைய புனிதப் போரில் உங்களை பலி கொடுக்க நினைக்கிறார்கள் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதில் அக்கறை குறைவே அவர்களுக்கு. வெற்றி ஒன்றே குறி.

அமைதியாக எல்லாவற்றையும் கவனியுங்கள் அதுவே நலம்.

அருண்மொழி சொன்னது…

கோவியாரே,

VSK டோண்டுவின் பதிவில் பின்னூட்டம் இட்ட பிறகும் இப்படி ஒரு தனிப்பதிவு தேவையா? முடிந்தால் இந்த பதிவை நீக்கவும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண்மொழி said...
கோவியாரே,

VSK டோண்டுவின் பதிவில் பின்னூட்டம் இட்ட பிறகும் இப்படி ஒரு தனிப்பதிவு தேவையா? முடிந்தால் இந்த பதிவை நீக்கவும்.

3:48 PM, February 27, 2008
//

அருண் மொழி,

எனக்கும் விஎஸ்கே ஐயாவுக்கும் உள்ள நட்பை எவருக்கும் விளக்கிப் புரியவைக்க முடியாது. இதை இங்கு எழுதி இருப்பதால் அவரோ நானோ காயம் அடையப்போவதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//SurveySan said...
தல சுத்துதுங்க.

நான் உங்க எடத்துல இருந்து, என்னோட நண்பன் எவனாவது இந்த மாதிரி கலீஜா எழுதரான்னு சந்தேகம் வந்திருந்தா, நேர்ல போய் கேட்டு க்ளியர் பண்ணியிருப்பேன்.
அப்படி எழுதுவது ஊர்ஜீதமாயிருந்தால், செவிட்லயே கொடுத்திருப்பேன்.

நீங்க என்ன பண்ணியிருக்கணுங்கரது உங்க தனிப் பட்ட விருப்பம் ;)

எல்லாம் நன்மைக்கே!
//

சர்வேஷன்,

அவரிடம் போலி நீங்களா ?இல்லையா ? என்று பலமுறை கேட்டு இருக்கிறேன், அதுபற்றி சென்ற இடுகைக்கும் சென்ற இடுகையில் சொல்லி இருக்கிறேன்.

அவருடன் சாட்டில் பேசிய ஸ்கீர்ன் ஷாட் வேண்டும் என்றால் உங்கள் மின் அஞ்சலைக் கொடுங்கள் அனுப்பி வைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர்களுடைய புனிதப் போரில் உங்களை பலி கொடுக்க நினைக்கிறார்கள் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதில் அக்கறை குறைவே அவர்களுக்கு. வெற்றி ஒன்றே குறி.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள், "பிரச்சினை வெளிப்படையாக வெடிக்கும்போது என்னோட சிலரின் நட்புகள் பலியாகும் என்று எதிர்பார்த்தே தான் இருந்தேன்." என்று என்னிடம் சொல்லிவிட்டு செய்தார்

வவ்வால் சொன்னது…

கோவி,

யார் , யார் தவறு செய்தார்கள், என்பது போன்ற பிரச்சினையின் ஆழத்திற்குள் செல்ல விரும்பவில்லை, சகப்பதிவர் என்ற முறையில், அமைதியாக இருங்கள், நடப்பது நடந்து விட்டு போகட்டும், யாரும் உங்களை கெட்டவர்/ நல்லவர் என்று சொல்லப்போவதால் வாழ்கையில் பெரிதாக மாற்றம் வந்துவிடப்போவதில்லை.

எது சொன்னாலும் நாம் என்னவாக இருக்கிறோமோ அதுவாக தான் இருக்கபோகிறோம் அடுத்தவர் கூற்றுக்கு அங்கே இடம் இல்லை.

just enjoy the blogging!

Unknown சொன்னது…

அன்பின் ஜிகே.

//அவர்களுடைய _____ போரில் உங்களை பலி கொடுக்க நினைக்கிறார்கள் நீங்கள் நல்லவரா கெட்டவரா என்பதில் அக்கறை குறைவே அவர்களுக்கு. வெற்றி ஒன்றே குறி.
அமைதியாக எல்லாவற்றையும் கவனியுங்கள் அதுவே நலம்.//

தொடர்ந்து அவதானித்து வருகிறேன். மேலுள்ளதே என் விருப்பமும்.

இருவருக்கும் நண்பன் என்ற முறையில் 'உங்களுக்கும் டாக்டருக்கும் இடையே உள்ள நட்பும் பாசமும் எப்போதும் தொடரும். தொடரட்டும்' என வாழ்த்துகிறேன்..

அன்புடன் சுல்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
அன்பின் ஜிகே.


தொடர்ந்து அவதானித்து வருகிறேன். மேலுள்ளதே என் விருப்பமும்.

இருவருக்கும் நண்பன் என்ற முறையில் 'உங்களுக்கும் டாக்டருக்கும் இடையே உள்ள நட்பும் பாசமும் எப்போதும் தொடரும். தொடரட்டும்' என வாழ்த்துகிறேன்..

அன்புடன் சுல்தான்.
//

சுல்தான் ஐயா,

மிக்க நன்றி,

நான் இதையெல்லாம் சொல்லாவிட்டால் நட்பின் 'ஆழம்' எத்தகையது என்று எவரும் தெரிய வாய்ப்பில்லை. எனக்கும் வீஎஸ்கே ஐயாவுக்கும் உள்ள நட்பை எவராலும் கெடுக்க முடியாது.

SurveySan சொன்னது…

//அவருடன் சாட்டில் பேசிய ஸ்கீர்ன் ஷாட் வேண்டும் என்றால் உங்கள் மின் அஞ்சலைக் கொடுங்கள் அனுப்பி வைக்கிறேன்.//

thats ok.

நம் அனைவரது சிறுபிள்ளைத் தனங்களும் நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.

தலசுத்தல் நிக்கல இன்னும் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்