பின்பற்றுபவர்கள்

17 பிப்ரவரி, 2008

மீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் !

கட்சி ஆரம்பிக்கும் போது திராவிட கட்சிகளின் தொண்டர்களைக் குறிவைத்து கட்சியின் பெயராக தேமுதிக அதாவது தேசிய முற்போக்கு 'திராவிடக் கழகம்' என்று பெயர் வைத்தார் வி.காந்த். அண்ணன் கட்சிப் பெயரிலேயே தேசியமும் திராவிடமும் பேசுகிறார் பாருங்கள் எல்லாம் வசதிக்காகத்தான். எம்ஜிஆர் கூட தனது கட்சியை அ.இ. ( அனைந்து இந்திய) அதிமுக என்று வைத்தார், அதைக் கொஞ்சம் மாற்றி 'அனைத்து இந்திய' என்றால் தேசியம் தானே, அதனால் 'தேசியம்' தழுவிய பெயராக வைத்தார் வி.காந்த். இப்போவவது நம்புங்கப்பா, 'விஜயகாந்த் ஏன் தன்னை எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்கிறார்' என்று. எனக்கு ஒன்னும் வயிற்றெரிச்சல் இல்லை. நல்ல இருக்கட்டும். :). முன்னோட்டம் இல்லாமல் பதிவெழுதினால் என்ன சொல்கிறோம் என்று புரியவில்லை என்பார்கள். விசயத்துக்கு வருவோம்.

மீனுக்கு தலை, அதாவது
விஜயகாந்த் வெளிப்படையாக அரசியல் பேசிய காலத்தில் இருந்தே திமுக சார்பாக இருந்தவர். சில நேரங்களில் கலைஞர் தனக்கு அரசியல் ரோல் மாடல் என்று கூறிக் கொண்டவர். பொதுமேடையில் கலைஞரின் காலைத் தொட்டு கும்பிட்டு உபிகளின் நெகிழ்சியை நுகர்ந்திருக்கிறார். தன்னை ஒரு திராவிடப் பற்றாளன், கொள்கையாளன் என்று தான் இதுவரைக் காட்டிக் கொண்டார். கட்சியின் பெயரிலும் திராவிடம் இருக்கிறது. கட்சி ஆரம்பித்தபோது ராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்து விபூதி சகிதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி துவக்கவிழா ஒரு 'இந்து திருவிழா' போன்றே நடந்தது. பலதரப்பு மக்களையும் இந்துக்களை குறிவைக்கும் உத்தியோ. நல்லா வளரட்டுமே. :)

பாம்புக்கு வால், அண்மையில் நடுவன் அமைச்சர் அருண்குமாரை விமானத்தில் சந்தித்தப்போது தன் குடும்பம் 'காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது, அப்பா, தாத்தா எல்லோரும் காங்கிரஸ், நானும் மூப்பனாரோடு நெருக்மாக இருந்தவன். எதிர்கால அரசியல் இளைஞர்கள் கையில் இருக்கிறது, தமிழகத்தில் என் பின்னால் இளைஞர்கள் திறள்கிறார்கள், தேசிய அளவில் காங்கிரசில் ராகுல் காந்திக்கு பின்னால் இளைஞர்கள் திறள்கிறார்கள். தேமுதிகவின் கொள்கை(?)யும் காங்கிரஸ் போன்றதுதான். எனவே நாம் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம்' என்று சொல்லி இருக்கிறார். காமராஜருக்கு பின் கோட்டையை பிடிக்காத காங்கிரசுக்கு விஜயகாந்தின் ஆசை வார்த்தை 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி' கனவு கோட்டையை ஏற்படுத்தி இருக்கிறது. தாரளமாக கூட்டணி அமையுங்கய்யா. நல்லா இருங்க.
:)


***

தனித்து 2011ல் கோட்டையைப் பிடிக்கும் வி.காந்தின் கனவு 2016க்கு தள்ளிச் சென்றுவிட்டது போல் தெரிகிறது. 2011ல் தங்கள் ஆட்சி என்று சரத்குமார் கூறிக் கொண்டிருக்கிறார். ஷங்கர் முதல்வன் பகுதி 2 எடுத்தால் இவர்கள் யாரையாவது ஒருவரை வைத்து எடுக்கலாம். இந்த பத்திக்கு முன்பே இடுகை முடிந்துவிட்டது. :)))

4 கருத்துகள்:

RATHNESH சொன்னது…

கொஞ்சம் வேறுபடுகிறேன் நண்பரே.

சோ தலைமையில் ஒரு குழுவே வேலை செய்கிறது பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியை உடைக்க.

பாஜகவுக்குக் கொடுக்கப்பட்டுள்ள பணி, இன்னும் கொஞ்சம் கட்சிகளைக் கூட்டி வந்தால் உங்களுடன் கூட்டணி பற்றி யோசிக்கலாம் என்பது.

தேமுதிகவிடம் சொல்லப்பட்டிருப்பது இரண்டு கோணங்களில். ஒன்று அதிமுக, தேமுதிக, பாமக, மதிமுக, (தேசிய இமேஜுக்காக)பாஜக என்று முயன்றால் 40-லும் ஜெயிக்கலாம். அல்லது காங்கிரஸைக் கூட்டி வாருங்கள்; பாஜகவைக் கழற்றி விடலாம்.

வரப்போகிற தேர்தலில் தேமுதிகவிற்கு இருக்கும் நெருக்கடி இன்னொருமுறை தனித்து நின்று சதவீதக் கணக்கு சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது என்பது. ஓரளவுக்காவது மரியாதை நிலைக்கும் வண்ணம் சீட் தரும் கூட்டணி அவசியம். கருணாநிதி இதயத்தில் வேண்டுமானால் இடம்தருவார்; ஜெயலலிதாவைப் பொருத்தவரை ஆரம்பகால பாஜகவிற்கே ஐந்து சீட் கொடுத்து வளர்த்து விடத் தயங்காதவர் என்பதால் அங்கே வாய்ப்புகள் அதிகம்.

இறுதியில் இருக்கப்போவது இரண்டே கூட்டணி தான். ஏனென்றால் இரண்டு தேசியக் கட்சிகளுக்குமே தமிழகத்தில் இருந்து 40-ம் வேண்டும் என்கிற நிலை.

விஜய்காந்த் மீனுக்குத் தலை காட்டவில்லை. இன்றைய தேசிய தேர்தல் நீரோட்டத்தில் அவர் தான் தூண்டில் புழு.

G.Ragavan சொன்னது…

அட.... எந்த அரசியல்வாதிங்க இப்ப கோளுகையோட இருக்காங்கன்னு நீங்க விஜயகாந்த் கிட்ட மட்டும் எதிர்பாக்குறீங்க? ஹா ஹா ஹா நீங்க வேற... இவ்வளவு அப்பாவியால்லாம் இருக்காதீங்க. :)

கருப்பன் (A) Sundar சொன்னது…

//
தன்னை ஒரு திராவிடப் பற்றாளன், கொள்கையாளன் என்று தான் இதுவரைக் காட்டிக் கொண்டார். கட்சியின் பெயரிலும் திராவிடம் இருக்கிறது. கட்சி ஆரம்பித்தபோது ராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்து விபூதி சகிதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி துவக்கவிழா ஒரு 'இந்து திருவிழா' போன்றே நடந்தது. பலதரப்பு மக்களையும் இந்துக்களை குறிவைக்கும் உத்தியோ. நல்லா வளரட்டுமே. :)
//

அப்படியானால் திராவிடர்கள் எல்லாம் நாத்திகர்களாக இருக்க வேண்டும் என்கிறீர்களா??

PRABHU RAJADURAI சொன்னது…

பிராந்தியக் கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்ற கருத்து விவாதிக்கப்பட்ட பொழுது, இந்திரா செய்தாலும் செய்வார் என்று அவருக்கு பயந்து எம்ஜிஆர் அதிமுக என்ற தனது கட்சியினை அ இஅதிமுக என்று மாற்றினார்!

சரிதானே!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்