பின்பற்றுபவர்கள்

28 மே, 2009

சுதர்சனத்தின் நிதர்சனம் !

வழக்கமாக இளங்கோவன் கிளப்பும் 'ஆட்சியில் பங்கு' பீதியைத் தற்போது காங்கிரசின் தமிழக சட்டப் பேரவை தலைவர் சுதர்சனமும் கிளப்புகிறார். இனி திமுக முரண்டு பிடித்தாலும் காங்கிரசின் மைய அரசுக்கு பாதிப்பு இல்லை என்பதால் சட்டப்பேரவை அமைச்சர் அவையில் இடம் பெறும் கோரிக்கை வலுத்துவருகிறது. கடந்த 5 ஆண்டுகள் அடக்கி வாசித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு பங்கு கேட்பது காங்கிரசின் சந்தர்ப்பவாத அரசியலுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. திமுகவிற்கு இது தேவைதான். டெல்லிக்கு படை எடுத்த கருணாநிதி எதிர்பார்த்த அளவுக்கு அமைச்சர் பதவி அறுவடை கிடைக்கததால் முன்கூட்டியே சென்னைக்கு திரும்பினார். வெளியில் இருந்து ஆதரவு என்றெல்லாம் பேசிக் கொண்டார்கள். ஒண்ணும் இல்லை என்பதற்கு பதிலாக எதோ கிடைக்கிறது என்கிற ரீதியில் கிடைத்ததைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

தமிழகத்திலிருந்து முன்பு அமைச்சராக பொறுப்பேற்றவர்கள் தற்பொழுது தோல்வி அடைந்திருந்தாலும், அந்தப் பதவிகள் தமிழகத்திற்கு கிடைத்தால் கட்சிக்கும், தமிழ் நாட்டுக்கும் நல்லது தான். ஆனால் இவை எல்லாம் தேசியவாதிகளிடம் எடுபட வேண்டுமென்றால் மாநில கட்சியின் உதவி இன்றி ஆட்சியைத் தொடர முடியாது என்ற நிலை இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் திமுக பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை சென்ற தேர்தலைவிட கூடுதலாக பெற்றிருந்தாலும் 'வலியுறுத்திக்' கேட்டால் ஆட்சிக்கே ஆப்பு வைத்துவிடுவார்கள்.

தோற்றதன் கடுப்பில் இளங்கோவனின் தூண்டுதலோ அல்லது சுதர்சனம் சரியாகத்தான் அவருடைய கட்சி சார்பில் செயல்படுகிறாரோ திமுகவிற்கு இத்தகைய சந்தர்ப்பவாத அச்சுறுத்தல் தேவைதான். இதே சந்தர்ப்பவாதத்தில் முன்பு காங்கிரசிடம் மத்திய அமைச்சர் பதவிகளை திமுகவும் பெற்றது. காங்கிரசு மேலிட அழுத்தம் தொடர்ந்தால் கருணாநிதிக்கு வேறு வழி இல்லை. காங்கிரசை எதிர்க்க தோன்றிய திராவிட இயக்கம் பரிணாமம் கண்டு 'கை'க்குள் சிக்கி இருப்பதும், 'கை'க்கு பயந்து பதுங்குவதும், சாமரம் வீசுவதும், தும்மை விட்டு விட்டு வாலைப் பிடித்தக் கதையாகி இருக்கும் 'திராவிடக் கூத்து'.

திராவிடம், திராவிடம் என்று பேச என்ன இருக்கு ? திராவிட நிலைப்பாட்டில் ஆதரவு கொடுப்பவர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று.

7 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ஆமாங்க

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

இதுவரை மத்தியில் காங்கிரசுக்கு திமுகவின் ஆதரவு தேவைப்பட்டது.
இனி அது தேவையில்லை. அதனால் தமிழத்தில் ஆட்சியில் பங்கு கேட்பார்கள். கொடுக்காத பட்சத்தில் முதுகில் குத்தினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. திமுகவின்
தோளில் இருப்பவர்கள் முதுகில் குத்துவதற்கு சிரமமா என்ன? அவர்களுக்கு தமிழகத்தில் எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சி இல்லையே? யூஸ் அண்ட் துரோ (கம்) செய்வதில் கை தேர்ந்தவர்கள்.

நையாண்டி நைனா சொன்னது…

கண்ணா....
நீயும் நானுமா கண்ணா... நீயும் நானுமா
......
......
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே.....

* * * * * * * * * * *

இதை நான் உங்களை பார்த்து சொல்லவில்லை அண்ணா.
காங்கிரசும் திமுகவும் ஆடும்
இன்றைய அரசியல் சதுரங்கத்தை சொன்னேன்.

லக்கிலுக் சொன்னது…

தோற்றவர்களின் புலம்பல்கள் ஜெயித்தவர்களுக்கு மகிழ்ச்சியையே தரும்.

தொடர்ந்து புலம்புங்கள் :-)

வால்பையன் சொன்னது…

காங்கிரஸுக்கு தமிழகத்தில் அமைச்சரவையில் இடம் கொடுக்ககூடாது!

ஏன்ன இன்னும் நாம சம்பாரிக்க வேண்டியதே நிறைய இருக்கு!

பேரன், பேத்திங்கன்னு இருக்குற அனைவருக்கும் சேர்த்துட்டு போன போகுதுன்னு எதாவது மக்களுக்கும் தூக்கி போட்டுட்டு போகலாம்!

ராஜா காலத்துல ராஜாவுக்கு பின்னாடி நின்னு சாமரசம் வீசிகிட்டு இருந்து வந்தவங்க பரம்பரைகள் மட்டுமே ந்மக்கு போதும், அவுங்க ஓட்டு எப்பவும் நம்ம பரம்பரைக்கு தான்!

டாக்டர் பையன் படிச்சா தான் டாக்டர்,
ஆனா மந்திரி பையன் மந்திரியாக ஒரு தகுதியும் வேணாம், மந்திரி பையன்னு ஒரு தகுதியே போதும்.

வாழ்க ஜனநாயகம்! வாழ்க கழக தொண்டர்கள்!

மக்களா!
அவுங்கள பத்தி உங்களுக்கு என்ன கவலை?

Sanjai Gandhi சொன்னது…

தேர்தலுக்கு முன் கோவியாரின் ஈழ நாயகி புரட்சித் தலைவி அம்மா அவர்கள் செய்ய முயற்சித்து மண்ணைக் கவ்விய சூழ்ச்சியை?! இப்போது அவரது வலையுலக புதிய அரசியல் வாரிசான கோவியார் முயற்சிக்கிறார். வாழ்த்துகள் கோவிஜி. இதுபோன்ற விஷயத்தில் கூட்டணி பதிவரான ஜோதி சாரும் ஒத்துழைக்கிறார்.

பெப்சி உமா பாஷையில் சொல்ல வேண்டுமெனில் : கீப் ட்ரையிங்.. கீப் ஆன் ட்ரையிங்.. மனச தளரவிடாதிங்க. :))

//காங்கிரசை எதிர்க்க தோன்றிய திராவிட இயக்கம் பரிணாமம் கண்டு 'கை'க்குள் சிக்கி இருப்பதும், 'கை'க்கு பயந்து பதுங்குவதும், சாமரம் வீசுவதும், தும்மை விட்டு விட்டு வாலைப் பிடித்தக் கதையாகி இருக்கும் 'திராவிடக் கூத்து'.//

தர்மம் தனை சூது கவ்வும்.. பின்......... :))

கோவி.கண்ணன் சொன்னது…

/தர்மம் தனை சூது கவ்வும்.. பின்......... :))//

ஒரு எழுத்து விடுபட்டு இருக்கிறது !
:)

சந்தப்பவாத அரசியல்(வாதி) ஆதரவு நிலைகள் கூட அப்படித்தான். பதவிகள் நிலையானது அல்ல என்பதே உண்மை. பாவம் புரியாத உங்களுக்கு பொன் மொழிகள் நினைவு வருவது வியப்பல்ல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்