பின்பற்றுபவர்கள்

31 மே, 2009

தமிழீழம் மலரும் !

உசுப்பேற்றி உசுப்பேற்றி ரணகளம் ஆகிக் கொண்டிருந்ததை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, இன்னும் எஞ்சி இருப்போரை அழிக்கும், தூண்டும் சொற்களான 'தமிழீழம் மலரும்' என்பதை படிக்கும் போது வெறுப்பும், விரக்தியும் மிஞ்சுகிறது. காலத்தின் கட்டாயத்தில் எதுவும் நடக்கட்டும், இப்போது காலத்தின் கட்டாயம் காயத்தை குணப்படுத்துவது தான். உயிருக்கும், உடைமைக்கும், உறவுகளை தொலைத்தவர்களுக்கு சாய்ந்து கொள்ளத் தோள். போர்கள வீரவசனத்திற்கான காலம் முடிந்துவிட்டது. எஞ்சி இருப்போரையாவது காப்பதற்கு முடிந்தவரை உரிமைக் குரல் கொடுப்போம், நம்பிக்கையான உலக அமைப்புகள் மூலம் உதவிகள் செய்யும் திட்டம் வெளியிடப் பட்டால் கைகளாக இணையுவோம். சுனாமி பேரைச் சொல்லி சுருட்டியது போல், ஈழத்தமிழர்களின் கண்ணீரைக் காசாக்கிக் கொள்ளும் திடீர் நலக்குழுக்கள், தனிநபர்கள் பணம் வசூல் செய்யப் புரப்படுவார்கள். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உலக அளவில் செஞ்சிலுவை சங்கம் போன்ற நம்பிக்கை உடைய அமைப்புகள் மூலமாக மட்டுமே உதவி செய்ய முன்வருவது இந்த நேரத்தில் சரியான உதவியாக அமையும்.

தமிழீழம் மலரும், மலரவேண்டும் என்பதே தமிழுணர்வாளர்கள் அனைவரின் விருப்போம், ஆனால் அந்த விருப்பதை இப்போதும் திணிப்பதால் இழப்பு எண்ணிக்கையை கூடுதலாக்குவது தவிர்த்து வேறொன்றும் நடைபெறப் போவதில்லை. மனமும் வலியும் போன்று நெருப்பும் புகையும் ஒன்றை ஒன்று சார்ந்தது. இப்போதைக்கு நாம் அதை ஊதிவிடாமல் இருப்பதே நல்லது. தண்ணீர் வேட்கையில் தவிப்பவர்களிடம் 'நாளை உனது தாகம் தீரும்' என்று நம்பிக்கை ஊட்டிக் கூறுவது இன்றைய தாகம் தீர்ப்பதற்கான தீர்வல்ல.

33 கருத்துகள்:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

//தண்ணீர் வேட்கையில் தவிப்பவர்களிடம் 'நாளை உனது தாகம் தீரும்' என்று நம்பிக்கை ஊட்டிக் கூறுவது இன்றைய தாகம் தீர்ப்பதற்கான தீர்வல்ல.//

நானும் அப்படித்தான் நினைக்கின்றேன்

cherankrish சொன்னது…

Hello kovikannan..
நல்ல மாற்றம்.
இப்பொழுதுதான் சரியாக உணரத்தொடங்கியிருக்கிறீர்கள.;.விரிவாக எழுதலாமே?.ஓரு இந்தியத்தமிழனாக இந்திய கோணங்கி அரசியல்வாதிகளின்(நான் எல்லோரையும் சொல்லவில்லை) பேச்சுக்களை கேட்டுவந்த 'புலிக்குப்பிறந்தது பூனையாகுமா" போன்ற தலைப்புகளில் எழுதும் குமுதம் போன்ற பத்திரிகைகளைப்படித்து மட்டுமே இலங்கைப்பிரச்சினை பற்றி கருத்துவெளியிடும் சராசரி இந்தியப்பதிவர்களிடமிருந்து மாறுபட்டு; உங்களிடமிருந்து சரியான கோணத்திலிருந்து ஒரு கருத்து வரத்தொடங்கியிருக்கிறது.நல்ல பதிவாக விரிவாக எழுதுங்கள்

ராஜ நடராஜன் சொன்னது…

//உலக அளவில் செஞ்சிலுவை சங்கம் போன்ற நம்பிக்கை உடைய அமைப்புகள் மூலமாக மட்டுமே உதவி செய்ய முன்வருவது இந்த நேரத்தில் சரியான உதவியாக அமையும்.//

உதவுவதற்கு ஒருங்கிணைக்கும் அமைப்பு தேவை.தற்போதைய தேவை மக்கள் நலனே.

வேகநரி சொன்னது…

பொறுப்புள்ள பதிவு.
//உலக அளவில் செஞ்சிலுவை சங்கம் போன்ற நம்பிக்கை உடைய அமைப்புகள் மூலமாக மட்டுமே உதவி செய்ய முன்வருவது இந்த நேரத்தில் சரியான உதவியாக அமையும்.//
வழிமொழிகிறேன்.

Sanjai Gandhi சொன்னது…

நல்ல வேளை.. வழக்கம் போல உசுப்பேத்தும் பதிவோ என்று நினைத்தேன். வெரி குட். ஆமோதிக்கிறேன்.

Sanjai Gandhi சொன்னது…

பாராட்டுகள் கோவியாரே.. உங்கள் மனமாற்றத்திற்கு. இன்னும் பலரும் மாறானும். சயந்தனின் சமீபத்திய பதிவை படித்து நிறைய பேர் மனம் மாறி இருப்பதாகத் தெரிகிறது. அங்கே அவதிப் படும் மக்களின் கோணத்தில் யோசிப்பது தான் ஆரோக்கியமான விஷயம். அங்கே முகாம்களில் அவதிப் படும் அப்பாவி மக்கள் விருப்பம் எதுவாயினும் அதையே ஆதரிப்போம்.

நிகழ்காலத்தில்... சொன்னது…

//காலத்தின் கட்டாயத்தில் எதுவும் நடக்கட்டும், இப்போது காலத்தின் கட்டாயம் காயத்தை குணப்படுத்துவது தான்//

காலமே அனைத்துக்கும் தீர்வு,
காலமே அனைத்திற்கும் மருந்திடும்

வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//$anjaiGandh! 12:44 PM, May 31, 2009
பாராட்டுகள் கோவியாரே.. உங்கள் மனமாற்றத்திற்கு. இன்னும் பலரும் மாறானும். சயந்தனின் சமீபத்திய பதிவை படித்து நிறைய பேர் மனம் மாறி இருப்பதாகத் தெரிகிறது. அங்கே அவதிப் படும் மக்களின் கோணத்தில் யோசிப்பது தான் ஆரோக்கியமான விஷயம். அங்கே முகாம்களில் அவதிப் படும் அப்பாவி மக்கள் விருப்பம் எதுவாயினும் அதையே ஆதரிப்போம்.
//

உங்கள் மற்றைய பின்னூட்டங்கள் ஓகே. ஆனால் இது போன்ற அறிவுரைகள் தேவையற்றது, ஈழத்தமிழர்கள் விடும் சாபம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் 'ஆவிகளுக்கு' விமோசனம் கிடைக்கவே கிடைக்காது.

சாவு வீட்டில் ச'ந்தோசமாக சிரிப்பது பற்றிய' பாடம் யாரும் ரசிப்பது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

சஞ்செய்,

கொலைகாரர்களும், அவர்களது ஆதரவாளர்களும் துக்கம் விசாரிப்பது ஆரோக்கியமான மன மாற்றமா ?

Sanjai Gandhi சொன்னது…

நீங்கள் என்ன ஈழத் தமிழர்களின் அதிகாரப் பூர்வ பிரதிநிதியா? உங்கள் பதிவு போதைக்கு அவர்களின் சடலங்களைப் பயன்படுத்துகிறீர்கள். அவர்களின் ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் உங்கள் ஹிட் கௌண்டரில் ஒரு எண் ஏற பயன்படுத்திக் கொள்கிறீர்கள். கொலைகாரர்களை விட மோசமானவர்கள் நீங்கள். நீங்கள் என்னை நோக்கி கேள்வி கேட்பது நகைச்சுவை.

துப்பாக்கிகளும் பீரங்கிகளும் போர் விமானங்களும் கொடுத்த சீனாவை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட்கள் இலங்கைத் தமிழருக்காக போராட்டம் நடத்திய போது எங்கோ போனிங்க?

அதென்ன துக்கம் விசாரிப்பது? இலங்கைத் தமிழர் துன்பம் பத்தி உங்கள் பதிவில் பின்னூட்டமிட்டால் உங்களிடம் துக்கம் விசாரிப்பதாக அர்த்தமா? உங்களுக்கும் அந்த மக்களுக்கும் என்ன சம்பந்தம்? உங்கள் நடிப்புக்கு நான் ரசிகன் இல்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்ன ஒருவர் ஈழம் பெற்றுத் தருவேன் என்று சொன்னால் அது மனமாற்றமாம். அவருக்கு ஓட்டுப் போடுங்கன்னு பிரச்சாரம் செய்வாங்களாம். ஒரு சாதாரனக் குடிமகன் அந்த மக்கள் துன்பம் பற்றிப் பேசினால் கொலைகார ஆதரவாளன் துக்கம் விசாரிக்கிறானாம். அது மன மாற்றமா என ஒரு கேள்வி.

உங்களுக்கெல்லாம் யார் தான் ஈழ மக்களின் பிரதிநிதி அதிகாரம் கொடுத்தார்களோ தெரியவில்லை. உங்கள் வார்த்தையிலே பார்த்தாலும் நானாவது துக்கம் விசாரிக்கிறேன். உயிர்பலியிலும் கண்ணீரிலும் விளம்பரம் தேடவில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

சஞ்செய் நான் நடிக்கிறேனா ? இல்லையா ? என்பதை எனது 3 ஆண்டுகள் எழுத்தைப் படித்து வருபவர்களுக்குத் தெரியும், கூட்டணி மாறும் போது கொள்கை மாற்றிக் கொள்ளும் ஒரு அரசியல்வாதியின் என்மீதான விமர்சனம் என்னை எந்த விதத்திலும் பாதிக்காது.

திரும்பவும் சொல்கிறேன், கொலைகாரர்கள் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்வதை யாரும் ரசிப்பது இல்லை. அதைச் சொல்ல பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஒரு சாதாரனக் குடிமகன் அந்த மக்கள் துன்பம் பற்றிப் பேசினால் கொலைகார ஆதரவாளன் துக்கம் விசாரிக்கிறானாம். //

உங்கள் மற்ற எழுத்துக்களை நான் விமர்சனம் செய்யவில்லை. ஒரு குடிமகனுக்கு காங்கிரசு முகமும் இருப்பதால் அப்படிப் பேசினால் என்ன தவறு ? அப்பாவிகள் அழிகிறார்கள் என்று இத்தனைநாளும் என் போன்றவர்கள் தொடர்ந்து ஓலமிட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இழப்பு எண்ணிக்கையை சொல்லும் போது துக்கம் விசாரிப்பது போல் பேசுவது என்னவிதமான நாகரீகம்.

எந்த ஒரு ஈழத்தமிழனையாவது காங்கிரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம் என்று கட்டுரை எழுதச் சொல்லுங்கள் உங்களால் முடிகிறதா பார்ப்போம்.

Sanjai Gandhi சொன்னது…

//திரும்பவும் சொல்கிறேன், கொலைகாரர்கள் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்வதை யாரும் ரசிப்பது இல்லை. அதைச் சொல்ல பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை.//

மீண்டும் சொல்கிறேன். எனக்கு அரசியல் சான்றிதழ் கொடுக்கும் தகுதி உங்களுக்கு இல்லை. சாராயத்திற்கு(போதைக்கு) மட்டுமே பிணத்தின் முன் ஆடுபவர்கள் கொலைகாரர் யார் என்பதை அறிவிக்க முடியாது.அவர்கள் குடி போதையில் உளறுவதை கேட்க வேண்டிய அவசியம் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//மீண்டும் சொல்கிறேன். எனக்கு அரசியல் சான்றிதழ் கொடுக்கும் தகுதி உங்களுக்கு இல்லை. சாராயத்திற்கு(போதைக்கு) மட்டுமே பிணத்தின் முன் ஆடுபவர்கள் கொலைகாரர் யார் என்பதை அறிவிக்க முடியாது.அவர்கள் குடி போதையில் உளறுவதை கேட்க வேண்டிய அவசியம் சவ ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இல்லை.//

உங்களுக்கான அரசியல் சான்றிதழ் நீங்களே கொடுத்துக் கொண்டுள்ளது வைத்துக் கொண்டது தான், நான் புதிதாக எதையும் சொல்லவில்லை.

Sanjai Gandhi சொன்னது…

//எந்த ஒரு ஈழத்தமிழனையாவது காங்கிரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம் என்று கட்டுரை எழுதச் சொல்லுங்கள் உங்களால் முடிகிறதா பார்ப்போம்.//

இணையத்தில் எழுதும் இரண்டு இலக்க ஈழத்தமிழர்கள் தவிர வேறு எந்த ஈழத் தமிழனுக்கும் கோவி கண்ணன் என்றால் யாரென்றே தெரியாது. ஆனால் திருமாவளவனைத் தெரியும். அவர் காங்கிரசின் விசுவாசி என்று சொல்லி இருப்பதாக நினைவு. மேலும் ஈழ மக்களின் துன்பங்களைப் பற்றிப் பேச நான் காங்கிரஸ் உறுப்பினர் அட்டைடை தூக்கி எறிந்துவிட்டு வர வேண்டியதும் இல்லை. காங்கிரஸ்காரன் ஈழத் தமிழர் பற்றிப் பேச வேண்டாம் என்று அங்கு முகாம்களில் வதைபடும் மக்கள் ( புலம் பெயர் சுகவாசி ஈழத்தமிழர் இல்லை) சொல்லட்டும். அடுத்த நொடி என் காங்கிரஸ் அடையாளங்களை விட்டு அவர்களுக்காகப் பேசத் தயார்.

கண்ணா.. சொன்னது…

may i come in??

கண்ணா.. சொன்னது…

//உலக அளவில் செஞ்சிலுவை சங்கம் போன்ற நம்பிக்கை உடைய அமைப்புகள் மூலமாக மட்டுமே உதவி செய்ய முன்வருவது இந்த நேரத்தில் சரியான உதவியாக அமையும்//

உண்மை....

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சஞ்சய் கோவி,
நீங்கள் இருவரும் ஒருவர் காலை இன்னொருவர் வாருவதிலிருந்து தெரிகிறது உங்கள் தமிழர் முகவரி. தமிழர்களை அப்படித்தானே அடையாளம் காண வேண்டியிருக்கிறது.
போதும் விட்டுவிடுங்கள்!
நட்புடன்,
ஜோதிபாரதி.

கோவி.கண்ணன் சொன்னது…

//$anjaiGandh! said...
//எந்த ஒரு ஈழத்தமிழனையாவது காங்கிரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம் என்று கட்டுரை எழுதச் சொல்லுங்கள் உங்களால் முடிகிறதா பார்ப்போம்.//

இணையத்தில் எழுதும் இரண்டு இலக்க ஈழத்தமிழர்கள் தவிர வேறு எந்த ஈழத் தமிழனுக்கும் கோவி கண்ணன் என்றால் யாரென்றே தெரியாது. //

நான் உலக அளவில் புகழடைந்துவிட்டேன் என்று எங்காவது கூறி இருக்கிறேனா ?அப்பறம் எதுக்கு குதிக்கிறிங்க ?

//ஆனால் திருமாவளவனைத் தெரியும். அவர் காங்கிரசின் விசுவாசி என்று சொல்லி இருப்பதாக நினைவு. //

ஆமாம் சொன்னாரு சொன்னாரு, தேர்தல் முடிவு அறிவிப்புகள் வரத் துவங்கியதும் சன் டிவியில் அமர்ந்து தமிழக காங்கிரசு தலைவர்களின் தோல்வி முகத்திற்கு ஈழத்தமிழர்களை மிகவும் அதிகமாக சீண்டியதும் காரணமாக இருக்கலாம் என்று சொன்னார். எதுக்கும் மற்றவர்களிடமும் கேட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள்

//மேலும் ஈழ மக்களின் துன்பங்களைப் பற்றிப் பேச நான் காங்கிரஸ் உறுப்பினர் அட்டைடை தூக்கி எறிந்துவிட்டு வர வேண்டியதும் இல்லை. //

ஈழம், ஈழத்தமிழர்கள் என்பது ஒரு நிலைப்பாடு, அதற்கு அட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலும் வேறு வேறு கருத்துகள் இருக்க முடியுமா ? உங்கள் காங்கிரசு காரர்களில் எத்தனை பேர் தமிழ் ஈழம் கிடைக்க வேண்டிய ஒன்று என்று சொல்கிறார்கள் ? பிறகு எப்படி அட்டையோடு ஒரு கருத்தும் அட்டை இல்லாமல் ஒரு கருத்தும் இருக்க முடியும் ? போங்க போங்க. இழவு வீட்டில் வந்து திரும்பவும் உங்கள் 'தர்ம' சிந்தனைகளை வாரி வழங்காதீர்கள்

//காங்கிரஸ்காரன் ஈழத் தமிழர் பற்றிப் பேச வேண்டாம் என்று அங்கு முகாம்களில் வதைபடும் மக்கள் ( புலம் பெயர் சுகவாசி ஈழத்தமிழர் இல்லை) சொல்லட்டும். அடுத்த நொடி என் காங்கிரஸ் அடையாளங்களை விட்டு அவர்களுக்காகப் பேசத் தயார்.//

முதலில் ராசபச்சே முகம்களை பார்வையிட வெளி உலகினரை அனுமதிக்கட்டும். அந்தக்குரல் வெளியே கேட்கக் கூடாது என்பதில் தானே இலங்கை அரசு செயல்படுகிறது, அதற்கும் ஐநாவில் ஆதரவளித்து வந்திருக்கிறது காங்கிரஸ் ஆட்சி செய்யும் இந்திய அரசு. பிறகு எப்படி அடுத்த நொடி, நிமிடம் பற்றியெல்லாம் பேச முடியும்

முத்துகுமரன் சொன்னது…

தமிழீழம் மலரும் என்பது விடுதலைக்கான வார்த்தை. மக்கள் அவலம் களையப்படும் வரை அதற்கான தேவையும் இருந்து கொண்டே இருக்கும்.

சஞ்சய்,

திருமாவளவன் காங்கிரசு விசுவாசி என்று சொல்லவில்லை, தேர்தல் புறக்கணிப்பு அரசியலில் இருந்து தேர்தல் அரசியலுக்கு வந்தபோது வரவேற்றவர் மூப்பனார். அதை நாங்கள் மறக்கவில்லை என்றே சொன்னார். நன்றி மறவாது குறிப்பிட்டதை காங்கிரசின் கொள்கைகளுக்கான அங்கீகாரமாக கருதுவிடக்கூடாது.

ஈழ மண்ணில் சிந்தப்பட்ட ரத்தங்களில் யாருடைய கரங்கள் இருந்தது என்று காலம் மெய்ப்பிக்கும். ஈழ மக்கள் மீதான உங்கள் தனிப்பட்ட பரிவை/ மனித நேயத்தை காங்கிரசின் மனிதநேயமாக பொதுமைப்படுத்துவதே ஏற்கவியலததாக இருக்கிறது.

இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களுக்கு பட்டுக்கம்பளம் விரித்து ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததோடு இந்தியா ''அணி சேரா நாடுகள்'' என்று நேரு அமைத்த உன்னதமான அணியை, ஈழத்தமிழன அழிப்பிற்கு பச்சைகொடி காட்டுவதாக மாற்றியிருக்கிறதே, முடிந்தால் அதைத் தட்டிக்கேளுங்கள்.

வேகநரி சொன்னது…

//தமிழீழம் மலரும் என்பது விடுதலைக்கான வார்த்தை.//

முத்துகுமரன், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று தான் புலிகள் இலங்கைத் தமிழர்களை இவ்வளவு கொடிய அவலத்தில் இறுதியாக கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர். உங்கள் உசுப்பேத்தல்கள் இலங்கையில் வாழும் தமிழர்களிடம் இனி ஒரு போதும் எடுபடாது. நீங்கள் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

முத்துகுமரன் சொன்னது…

thequickfox

உங்கள் உண்மையான அக்கறைக்கு நன்றி. இலங்கைத் தமிழர்களா? ஈழத்தமிழர்களா என அவர்கள் முடிவு செய்வார்கள்.

தமிழ் சொன்னது…

தமிழீழம் என்பதை காலத்தின் கைகளில் விட்டு விடுவோம்.
வலியிலும் வேதனையிலும் தவிக்கும் மக்களின் நலனே இப்பொழுதை உடனடி தேவை.அதற்கான உதவிகளை எடுப்போம்

அபி அப்பா சொன்னது…

கோவியாரே! நீங்க நல்ல எழுத்தாளர்! மூத்த பதிவர். ஆனா நீங்க அதிமுக விசுவாசி என்றும் குபீர் ஈழ ஆதரவாளன் என்பதும் சமீபத்திய உங்க இடுகைகள் காண்பிச்சு கொடுத்து விட்டனவே? ஏன் அழகா வாழைப்பழத்தில் ஊசியை நுழைக்கலாமே!

தம்பி இறந்துவிட்டார் என முதல் அஞ்சலி போட இது என்ன தசாவதாரம் ரிலீசா?முதல் பதிவு போட!

பின்ன தம்பிக்கு நீரிழிவுன்னு போட்டு வாங்கி கட்டிகிட்டீங்க!

உண்மை தெரியாம உளர கூடாது. இதே ஸ்டாலின், திருமா, நெடுமாறன், பாரதிராஜா, வ.மு. சேதுராமன் அய்யா, சீமான், உட்பட 17 பேர் சொல்லட்டும் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று. பின்ன ஒத்துக்கறோம்.

பேசாம இன்றைய தலைப்பு செய்திக்கு வாங்க உங்க பதிவுக்கு சேதி கிடைக்கும்!

வெத்து வேட்டு சொன்னது…

ஈழ தமிழர்களின் இன்றைய இழி நிலைக்கு விடுதலை புலிகளே முழுகாரணம்..யாரவது அந்த முட்டாள் பிரபாவை கேட்டார்களா ஊர் உலகம் எல்லாம் போய் கொலை பண்ணி தமிழீழம் பெற்று தா என்று... ஒன்றா இரண்டா கொலைகள் அவன் தமிழீழம் என்ற பெயரால் பண்ணியது..அந்த பாவமே இன்று தமிழர்களை அழிக்கிறது..

கோவி.கண்ணன் சொன்னது…

//அபி அப்பா said...
கோவியாரே! நீங்க நல்ல எழுத்தாளர்! மூத்த பதிவர். ஆனா நீங்க அதிமுக விசுவாசி என்றும் குபீர் ஈழ ஆதரவாளன் என்பதும் சமீபத்திய உங்க இடுகைகள் காண்பிச்சு கொடுத்து விட்டனவே? ஏன் அழகா வாழைப்பழத்தில் ஊசியை நுழைக்கலாமே!//

அரைவேக்காட்டுத்தனமான புரிதல் எதன் அடிப்படையில் சீமான் போன்றார் ஜெ வை ஆதரித்தார்களோ அதன் அடிப்படையில் தான் நானும் ஆதரவு பதிவுகள் எழுதினேன். உங்கள் அகராதியில் ஈழதமிழ் ஆதரவளர்கள் என்று யார் யாரைச் சொல்லுகிறீர்கள் என்று ஒரு பட்டியல் கொடுங்களேன்.

//உண்மை தெரியாம உளர கூடாது. இதே ஸ்டாலின், திருமா, நெடுமாறன், பாரதிராஜா, வ.மு. சேதுராமன் அய்யா, சீமான், உட்பட 17 பேர் சொல்லட்டும் பிரபாகரன் உயிருடன் இல்லை என்று. பின்ன ஒத்துக்கறோம். //

பிரச்சனை பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றி அல்ல

//பேசாம இன்றைய தலைப்பு செய்திக்கு வாங்க உங்க பதிவுக்கு சேதி கிடைக்கும்!//

போங்க போய் போடுங்க, அஞ்சா நெஞ்சன் அடுத்தவீட்டுக் கஞ்சன் என்று யார் வேண்டாம் என்றது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வெத்து வேட்டு said...
ஈழ தமிழர்களின் இன்றைய இழி நிலைக்கு விடுதலை புலிகளே முழுகாரணம்..யாரவது அந்த முட்டாள் பிரபாவை கேட்டார்களா ஊர் உலகம் எல்லாம் போய் கொலை பண்ணி தமிழீழம் பெற்று தா என்று... ஒன்றா இரண்டா கொலைகள் அவன் தமிழீழம் என்ற பெயரால் பண்ணியது..அந்த பாவமே இன்று தமிழர்களை அழிக்கிறது..
//

சந்தர்பவாதிகளால் ஒருவர் தோற்கடிக்கப்பட்டல் அவரின் செயலே தவறானது என்பது அரைவேக்காட்டுத்தனமான புரிதல். யார் எந்த ஆயுதத்தை எடுப்பது என்பதை எதிரிகள் தான் தீர்மாணிக்கிறார்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//திகழ்மிளிர் said...
தமிழீழம் என்பதை காலத்தின் கைகளில் விட்டு விடுவோம்.
வலியிலும் வேதனையிலும் தவிக்கும் மக்களின் நலனே இப்பொழுதை உடனடி தேவை.அதற்கான உதவிகளை எடுப்போம்
//

பதிவை மிகச் சரியாக புரிந்து கொண்டதற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//thequickfox said...
//தமிழீழம் மலரும் என்பது விடுதலைக்கான வார்த்தை.//

முத்துகுமரன், புலிகளின் தாகம் தமிழீழ தாயகம் என்று தான் புலிகள் இலங்கைத் தமிழர்களை இவ்வளவு கொடிய அவலத்தில் இறுதியாக கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர். உங்கள் உசுப்பேத்தல்கள் இலங்கையில் வாழும் தமிழர்களிடம் இனி ஒரு போதும் எடுபடாது. நீங்கள் இணையத்தில் எழுதிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

5:36 PM, May 31, 2009
//

சந்தர்பவாதம் என்பது வரலாற்றில் எங்கெல்லாம் இருக்கிறது என்பதை எல்லாம் தெரிந்து கொண்டு உங்கள் கருத்துக்களை இட்டால் நல்லது.

எந்த ஒரு கொள்கையும், நிலைப்பாடுகளும் சந்தர்பவாதிகளினாலும் தோற்கடிக்கப்படும், வெள்ளைக்காரன் கையில் இந்தியா வீழ்ந்ததும் அப்படியே.

கோவி.கண்ணன் சொன்னது…

//இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல்களை, போர்க்குற்றங்களுக்கு பட்டுக்கம்பளம் விரித்து ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததோடு இந்தியா ''அணி சேரா நாடுகள்'' என்று நேரு அமைத்த உன்னதமான அணியை, ஈழத்தமிழன அழிப்பிற்கு பச்சைகொடி காட்டுவதாக மாற்றியிருக்கிறதே, முடிந்தால் அதைத் தட்டிக்கேளுங்கள்.

4:27 PM, May 31, 2009
//
முத்துகுமரன்,

மீனுக்கு தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டுபவர்களுக்கு விளக்கம் கொடுப்பது தேவையா ?

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

உங்களை ஒரு தொடர்பதிவில் இணைத்துள்ளேன்..இடுகையைப் பார்க்கவும்.

கட்டபொம்மன் சொன்னது…

எனது வலைப்பூவில் முதலில் பின்னுட்மிட்டவர் நீங்கள்தான்.

அப்படியே நம்ம பக்கமும் வந்துட்டு போங்க

கட்டபொம்மன் kattapomman.blogspot.com

Ginger சொன்னது…

நீங்க இந்துராம், சோ வை என்ன வெணா திட்டலாம், ஆனால் அவங்க ஈழவர்களை உசுப்பேத்தவில்லை, வீண் வாக்குகள் கொடுக்கவில்லை, போரை கிஞ்சித்தும் உற்சாகப் படுத்தவில்லை.

அந்த அளவுக்கு அவர்களை புகழவேண்டும், அவங்க அட்வைச் படி போயிருந்தால் 60,000 தமிழ் உயிர்கள் மிச்சமாக இருக்கும், யாரும் முகாம்களில் சாவு வேதனையை அனுபவிக்க மாட்டார்கள், 500,000 தமிழர்கள் வெளிநாட்டுக்கு போகாமல் ஈழ ஜனத்தொகையை அதிகரித்திருப்பார்கள்.
இப்போ ஈழ ஜனத்தொகை ரொம்ப முறைவாக போய், இனிமே `இன தேசம்` பேசுவதற்கு வழி இல்லை - இதற்கு திராவிட அரசியலை ஈழவர்கள் நன்றி சொல்லலாம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்