பின்பற்றுபவர்கள்

14 மே, 2009

திவாலாகும் வாக்கு வங்கிகள் !

வாக்காளனின் தேவை சமூக மாற்றம், நாடு விடுதலைப் பெற்ற பிறகு குறிப்பாக தமிழகத்தில் காங்கிரசு ஆட்சிக்கு மாற்றாக திராவிட சித்தாந்தம் முன்வைக்கப்பட்டது பண்ணையார் முறை தலைமைத்துவமும், காங்கிரசு ஆட்சி அதற்கு ஆதரவாக இருப்பதும் மக்கள் முன் வைக்கப்பட்டது, கல்வி / வேலை வாய்ப்பு / தாய்மொழி / சமத்துவம் ஆகியவற்றை முன்வைத்து திராவிட சித்தாந்தம் திகவில் இருந்து பிரிந்த அரசியல் கட்சியாக திமுக என்னும் கட்சி உருவானது. 10 ஆண்டுக்குள் பெரும் வளர்ச்சி பெற்று காங்கிரசை தமிழக சட்டமன்ற தலைமை ஆக்கிரமிப்பில் இருந்து துறத்தி அடித்தது. பாமரனும் கட்சிப் பதவியையும் அதன் மூலம் அரசு துறைகளை வழி நடத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்ததால், திமுக விற்கு பெரும் வரவேற்பும், அதன் மூலம் நேர்மையாளர், எளிமையானவர் என்று சொல்லப்பட்ட காமராசரும் கூட காங்கிரசு என்கிற கட்சியிலேயே தொடர்ந்ததால் தோற்கடிக்கப்பட்டார்.

அண்ணாவிற்கு பிறகு தேர்தல் களம் கண்ட திமுகவில் கருணாநிதி பொறுப்பேற்ற பிறகு திமுக உடையவே எம்ஜிஆர் தலைமையில் அதிமுக ஏற்பட்டது. அடுத்த அடுத்த தேர்தலில் திராவிட சித்தாந்தம், திராவிடக் கொள்கைகள் ஆகியவற்றில் நீக்கு போக்கும், நீர்த்து போதலும் இரு கட்சிகளிலுமே ஏற்பட்டது, அதன் காரணமாக காங்கிரஸ் எதோ ஒரு திராவிடக் கட்சிகளில் இணைந்து கூட்டாகவே தேர்தலை சந்தித்து வந்திருக்கிறது. காங்கிரசுக்கு மாற்று என்று மக்கள் முன் முழங்கிய முன்வைக்கப்பட்ட திராவிடக் கட்சி(கள்) காங்கிரசுடனேயே கை கோர்த்து களம் கண்டன. இதில் ஓரளவு சமரசம் ஏற்பட்டாலும் திராவிட மற்றும் காங்கிரசுக்கு தேசிய அறைகூவலாக, பாஜக விஸ்வரூபம் எடுத்து வளர்ந்து வந்தது. வேறு வழியின்றி, திராவிட, காங்கிரசு, கம்யூனிஸ்டுகள் இணைய வேண்டிய காலகட்டத்திற்கு பாஜக இக்கட்சிகளை தள்ளிவிட்டது.

பாஜகவிற்கு எதிர்ப்பு என்பதை மக்கள் முன் தெளிவாக, பயம் கொடுத்து சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு இந்த கட்சிகள் சென்றன. திராவிட - காங்கிரஸ் சித்தாந்த முரண்பாட்டை முழுப்பூசனிக்காயக மறைக்க கிடைத்த இலைச் சோறாக 'மதவாதம்' என்ற சொல்லாடலை மக்கள் முன் வைத்தனர். ஊருக்குள் புதிய திருடன் நுழைந்தால் பழைய திருடர்கள் தொழில் பாதிப்பு அடைவதை உணர்ந்து இணைந்து புதிய திருடனை காட்டிக் கொடுப்பது போல், பாஜக மதவாதக் கட்சி என்று மக்கள் முன் திராவிட, காங்கிரசு, கம்யூனிச (தமிழக கட்சிகளை மட்டும் குறிப்பிடுகிறேன்) பயம் காட்டி தங்கள் நிலையை தக்க வைத்துக் கொள்ள முயன்றன. இராசீவ் மரணத்திற்கு பிறகு, காங்கிரசின் நரசிம்ம ராவ் ஆட்சிக்கு பிறகு பாஜக பெரிய வளர்ச்சி பெறவே, மூப்பனாரின் தமாக திமுகவை ஆதரிக்க, எஞ்சி இருந்த சில்லரை காங்கிரசு காரர்கள் அதிமுகவை ஆதரிக்க அந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது, குஜ்ரால் / தேவகவுடா (?) தலைமையில் ஏற்பட்ட மத்திய அரசில் தாமக உட்பட பல உதிரிக்கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன, அதுவும் குறுகிய காலம், பிறகு ஜெ-வின் ஆதரவுடன் பாஜக ஆட்சி ஏற்பட்டு கவிழ்ந்தது.

அதுவரை மதவாத பாஜக என்று கூறிவந்த திமுக, 'பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல' என்ற ஒரு ஸ்டேட் மெண்ட் கொடுத்துவிட்டு பிஜேபியிடன் கூட்டணி அமைத்து ஆட்சியிலும் 5 ஆண்டுகள் பதவி பெற்றது. பின்னர் பாஜக செல்வாக்கு சரியவே காங்கிரசுடன் இன்று வரை ஒட்டிக் கொண்டு இருக்கிறது. ஜெ காங்கிரசு கூட்டணிக்கு முயன்றார். திமுகவுக்கு - காங்கிரசுக்கும் அப்படி என்ன ஸ்பெக்டரம் பந்தமோ இணை பிரியாமல் தற்போதைய தேர்தல் முடிவு வரை தொடர்கிறார்கள்.

********

இதெல்லாம் எதுக்கு எழுதினேன் ?

அதாவது கட்சி / கொள்கைகள் என்றெல்லாம் எந்த ஒரு கட்சிக்கும் தொண்டர்களாக சேருபவர்கள் அக்கட்சியின் தொடக்க காலத்தில் மட்டுமே, திமுக உடைந்த போது அதிமுகவிற்கு தொண்டர் அளவில் வந்தவர்களும் / அங்கேயே இருந்தவர்களும் அவர்களின் வாரிசுகளில் சிலரும் தான் இன்று வரை அடிப்படட தொண்டர்களாக வாக்கு வங்கியாக தொடர்கிறார்கள். அதிலும் பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சாதிக் கட்சிகள் தொடங்கப்பட்ட பிறகு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் ஹவாலா அளவுக்கு ஓட்டை விழுந்துவிட்டது.

இவர்களுக்கே இப்படி என்றால் காங்கிரசுக்கு வாக்கு வங்கிகள் என்பது மூப்பனார் காலத்து சில பெருசுகளும், அவர்களின் சொத்துக்களை காக்கும் பேரன்களுமே மிச்சம், புதியவர்கள், இளைஞர்கள், பெண்கள் பெரும அளவில் காங்கிரசின் கொள்கை பிடித்து கடந்த முப்பது ஆண்டுக்குள் காங்கிரசுக்கு வந்தவர்கள் என்றால் தமிழகத்தைப் பொறுத்த அளவில் சில ஆயிரங்கள் என்ற அளவில் இருக்கும், மூப்பனாருக்கு பிறகு இளைஞர்கள் காங்கிரசில் சேருவதற்கான எந்த ஒரு கொள்கையோ கவர்ச்சியோ இருந்தது இல்லை. அதிமுக ஜா - ஜெ என்று பிரிந்ததால், அந்த தேர்தலில் தனித்து களம் கண்ட காங்கிரசு 25 சட்ட மன்ற இடங்களைப் பெற்றது. அது நடந்து 20 ஆண்டுகள் ஆகிறது. தற்போதைய நிலையில் அதிமுக, திமுகவைத் தவிர எந்த ஒரு கட்சியும், தனித்து நின்றால் ஒரு இடம் பெருவது கூட அரிதே, முதல் முறை என்பதால் வி.காந்து மட்டும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

தமிழகத்தின் எந்த ஒரு தொகுதியிலும் இருக்கும் வாக்களர்களில் 50 விழுக்காட்டிற்கும் மேல் ஒரே கட்சிக்கு வாக்களிப்பர்கள் இல்லை. அதுவே இன்றைய நிலைமை. கட்சித்தொண்டர்கள் என்று பார்த்தால் அதிமுக, திமுக கட்சிகளுக்கே 10 விழுகாடு இருந்தால் அதுவே மிகுதி, காங்கிரசு ? உங்க அக்கம் பக்கம் வீட்டுக் காரங்க அல்லது தெருவில் எத்தனை காங்கிரசு காரர்கள் என்று தேடிப்பாருங்க விரல் விட்டே எண்ணிவிடலாம்.

பாமகவை மட்டுமல்ல, காங்கிரசையும் திமுக, அதிமுக கட்சிகள் முதுகில் ஏற்றிக் கொள்ளவில்லை என்றால் தமிழகத்தில் காங்கிரசும் காணாமல் போகும். தமிழகத்தில் காங்கிரசுக்கு உயிர் தண்ணீர் ஊற்றிவருபவர்கள் திராவிடக் கட்சியினர் தான். திராவிடக் கட்சிகளுகே தமிழகத்தில் வாக்கு வங்கிகள் சிறுசேமிப்பு திட்டம் போல் பிழைப்பை ஓட்டி வருகின்றன. இதில் காங்கிரசுக்கு வாக்கு வங்கி ? எங்காவது குக்கிராமத்தில் இருந்தால் உண்டு :)

சோற்றுக்கே வழி இல்லாமல், அடிமைப்பட்டால் தான் பெரும் புரட்சி ஏற்பட வேண்டும் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என்று வாக்காளர்கள் அனைவருமே ஒன்று போல் சிந்தித்து வாக்களிப்பாளர்கள், அப்படி பட்ட நிலையில் மக்கள் நிலை இல்லை. தங்களுக்கு பெரிய அளவில் வாக்குவங்கிகள் இருப்பதாக அரசியல் கட்சிகள் சொல்வது ஏமாற்ற வேலை, இன்றை ஓட்டுக்கள் அனைத்துமே நோட்டுகளாலும், சாதி, மதத் தலைமையினாலும், சில நடுநிலையாளர்களின் ஊழல் எதிர்ப்பு என முவ்வகையில் தீர்மாணிக்கபடுகின்றன. பெரும்பான்மை சாதியினர் இருக்கும் ஊர்களில் சிறுபான்மையினரைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைக்கும் நிலைக்கு எந்த ஒரு பெரிய கட்சிகளும் தயாராக இல்லை, ரிஸ்க் எடுப்பதும் இல்லை.

தற்போதும், எப்போதும் அனைத்து கட்சிகளுமே, தேர்தலில் பணத்தில் விளையாடுவதும், கூட்டங்களுக்கு லாரிகளில் ஏற்றிச் செல்வதுடன், மூன்று வேளை உணவுடன், பிரியாணி கொடுத்து, நாள் ஊதியம் கொடுத்து மக்களை அழைத்துச் செல்வதிலிருந்தும், முடிந்த அளவு மாபெரும் கூட்டணி என்று காட்ட முயல்வதிலிருந்தே வாக்கு வங்கிகள் திவாலாகி வருவது கண்கூடு.

3 கருத்துகள்:

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

திமுக ஆரம்பித்து 18 ஆண்டுகள் கழித்து காங்கிரசை வூட்டுக்கு அனுப்பியது.
தா.ம.க என்று குறிப்பிட்டுள்ளது பழைய டி.ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகமா?
மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசா? :P

காங்கிரஸ் காரர்களை மட்டம் தட்டி, விசயகாந்தை ஆதரித்து திராவிட இயக்கத்தை சீண்டி, அதிமுக, திமுகவின் கொள்கைத் தங்கத்தை உரசிப்பார்த்து இட்ட இடுகையாக இருப்பதால் வன்மையாக ஆதரிக்க வேண்டும் என்று நினைத்து விசயகாந்தால் வெளி நடப்பு செய்கிறேன்.:P

//"திவாலாகும் வாக்கு வங்கிகள் !"//

ஆமாமா!
இப்பவெல்லாம் வாக்கு வங்கியை நம்பி ஒன்னும் பண்ண முடியாது!
வங்கியை நம்புனாத்தான் உண்டு!
அங்க தான் பணம் இருக்கும். அதுவும் சுவிசு வங்கிதான் சாமியோ!
அதுக்குதான் கணக்கு வழக்கு தேவைப்படாது!
பக்கத்துல பிணத்தை போட்டுக்கிட்டு எட்டுநாளைக்கு கட்டுச்சோறு திங்க பழகிட்டான் தமிழன்!
இந்த தேர்தல் முடிவை பணமும்,தமிழனின் நன்றி மறவாத் தன்மையும் நிர்ணயிக்கும் என்பதை வெக்கம் மானம் சூடு சொரணையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
பணத்தை வாங்கிகிட்டு ஓட்டு போடுறவங்க, வேற எதாவது செய்து பிழைக்கலாம், பணம் கொடுக்குறவங்களும் தான். இதுக்கு :P
தேவை இல்லை

ramalingam சொன்னது…

நேற்றுக்கூட தயாநிதி மாறன் இலங்கைப் பிரச்னை தேர்தலைப் பாதிக்காது என்று சிரித்துக் கொண்டே பேட்டி அளிக்கிறார். பாதிப்பது,பாதிக்காதது இருக்கட்டும். உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறது? எப்படி சிரித்துக் கொண்டே பதில் சொல்ல முடிகிறது?

MBW சொன்னது…

Hello Mr. Govi Kannan, I have seen your articles. All interesting. I am Prakash. Now I am in Singapore. May I know your email id? So that I can contact you through that. My email id is: vpraku@gmail.com. Thanks. Prakash.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்