பின்பற்றுபவர்கள்

19 மே, 2009

ஆண்கள் இனி அணிய வேண்டியதில்லையாம் ! (18+)

திருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை.

தற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை. ஆனால் 18+ வயது வந்தவர்கள் மாத்திரை பயன்படுத்துவது ரிஸ்க் தான். :)

தகவல் இங்கே,

Published in : ஆரோக்கியம், உடலே நலமா?


மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் க‌ல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.

மேலும் படிக்க...


பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)

20 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

இதனை பற்றி நானே பதிவிட நினைத்திருந்தேன் ...


\\பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை\\


தவறான கூற்று ...

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
இதனை பற்றி நானே பதிவிட நினைத்திருந்தேன் ...
//

ஆஹா... ஜமால் கோட்டை (ரயின் கோட்டை அல்ல) விட்டுட்டியே !
:)

\\பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை\\


தவறான கூற்று ...
//

தடை இல்லை என்பதற்கு எதாவது மேற்கோள் காட்டுங்கள்.

சென்ஷி சொன்னது…

//பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)//

ஹா..ஹா..ஹா..

ஆமா. இந்த மேட்டரை உங்களுக்கு சொன்னது யாரு?!

நட்புடன் ஜமால் சொன்னது…

இல்லாத ஒன்றுக்கு என்ன அண்ணே மேற்கோள் ...


கருத்துடை அனுமதிக்கபட்ட ஒன்றே.


மக்கள் தொகை கூடுகின்றது என்ற பொய்யான கூற்றுக்காக தடை செய்வது தவறு

மக்கள் தொகை அதிகமாகின்றது என்பது சுத்த பொய் ...

சுரண்டல் அதிகமாகின்றது

இலட்சோப இலட்ச மக்கள் பட்டினியாக இருக்க, அரசியல் வியாதியர்களின் வீடுகளில் 10 பேருக்கும் மேர்ப்பட்டோருக்கான உணவு ஒருவருக்காக தயார் ஆகின்றது, இது நம் நாட்டின் நிலை மட்டும், இன்னும் ஐரோப்பியர்கள், அரேபியர்கள் இன்னும் இன்னும் ...

பகிர்ந்தளிக்கும் தன்மை, திறமை இங்கு போதவில்லை.

இன்னும் தரிசு நிலங்களே உலகில் அதிகம்.

சில இடங்களில் மட்டும் கட்டிடம் கட்டிக்கொண்டு அங்கே வாழ இடமில்லை, நெருக்கடி இப்படியாக குற்ற சாட்டுகள் நீண்ட வண்ணமேயுள்ளன

வாழ்வாதாரங்கள் கூட இல்லாமல் பலர் வாடுகையில், சொகு வாழ்க்கை தேடுபவர்கள் செய்யும் இட்டுகட்டு தான் மக்கள் தொகை அதிகம் எனும் கூற்று ...

கோவி.கண்ணன் சொன்னது…

ஜமால், சென்ஷி

நான் அறிந்தவரையில் நிரந்தர கருத்தடை இஸ்லாமிற்கு எதிரானது என்றே கேள்விப்பட்டேன்.

இது தற்காலிகமானது என்ப்தால் லூசுல் விட்டுவிடுவோம் !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

தற்காலிகம் / நிரந்தரம். அபூ முஹை
on 15 Jul 2005 at 11:05 am
20

இரண்டு குழந்தைகளுக்கு மேல் வேண்டாம் என்று wichita அவர்கள், குடும்பக் கட்டுப்பாடு பற்றி இங்கே வலியுறுத்திருக்கிறார். வறுமையை ஒழிப்பதற்கு குடும்பக் கட்டுப்பாடு மிக அவசியம் என்பதையும் கோடிட்டு சொல்லியிருக்கிறார்.

வறுமைக்குக் காரணம் மக்கள் தொகை அல்ல என்பது, மக்கள் தொகை அதிமான இன்றைய காலத்தில் உணவுப் பொருட்கள் மிகத் தாராளமாகவே கிடைத்து கொண்டிருப்பது நிரூபிக்கிறது. குடும்பக் கட்டுப்பாடு செய்தால் வறுமை நீங்கிவிடும் என்பது போலிப் பிரச்சாரம் என்பதை விளங்கலாம்.

இஸ்லாம் தற்காலிகக் கருத்தடையை அனுமதித்து, நிரந்தரமான கருத்தடையை அனுமதிக்கவில்லை! அதிலும் வறுமைக்காக கருத்தடை செய்வதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ள வில்லை!"
நாள் தோறும் அதையே தொடர்ந்தால் அது நிரந்தரம் தானே ?
:)

நட்புடன் ஜமால் சொன்னது…

\\நாள் தோறும் அதையே தொடர்ந்தால் அது நிரந்தரம் தானே ?\\

ஆஹா! அண்ணே!

நீங்கள் சொல்லியிருப்பது என்னவென்று தங்களுக்கே விளங்குதுதானே ...

எது எப்படியோ!

தற்காலிக தடைக்கு தடையில்லை ...

நட்புடன் ஜமால் சொன்னது…

\\இது தற்காலிகமானது என்ப்தால் லூசுல் விட்டுவிடுவோம் !\\

அண்ணே! அக்ரீட் ...

கோவி.கண்ணன் சொன்னது…

//நட்புடன் ஜமால் said...
\\நாள் தோறும் அதையே தொடர்ந்தால் அது நிரந்தரம் தானே ?\\

ஆஹா! அண்ணே!

நீங்கள் சொல்லியிருப்பது என்னவென்று தங்களுக்கே விளங்குதுதானே ...

எது எப்படியோ!

தற்காலிக தடைக்கு தடையில்லை ...
//

என்னது விளங்கவில்லையா ?

இரண்டு குழந்தை பிறகு மனைவிக்கு மாதவிலக்கு நிற்கும் (மெனோபாஸ்) வரை தொடர்ந்தால் அது தற்காலிகமா ? நிரந்தரமா ? அதைத்தான் குறிப்பிட்டேன்.

ஜியா சொன்னது…

//கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)//

அபூதீன் இல்ல??

Aboo Shakir சொன்னது…

தற்காலிகம் என்பது withdrawal அல்லது கரு உண்டாகாமல் தவிர்த்துக்கொள்ளுதல்.
நிரந்தரமாக கர்ப்பப்பையை நீக்குவதோ ஆண்கள் sterilize செய்துக்கொள்வதோ தடை செய்யப்பட்டது. இஸ்லாம் mutilation செய்வதை தடை செய்கிறது.
அதே நேரம் கரு உண்டாகி விட்டால், அதை தக்க மருத்துவ காரணமின்றி அழிப்பது கொலை செய்யும் பாவமாகும்.
‍‍
நன்றி,
அபூ ஷாகிர்

Unknown சொன்னது…

//
திருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை.

தற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை
//

Unkalai pontorukkaaka thaan CONDOM CONDOM... advertisement TV-l poodukiraarkal.. paarththu thirunthavum.

வேடிக்கை மனிதன் சொன்னது…

//நான் அறிந்தவரையில் நிரந்தர கருத்தடை இஸ்லாமிற்கு எதிரானது என்றே கேள்விப்பட்டேன்.//

இஸ்லாமிய நன்பர்களின் வாயிலாக நானும் மேற்கூரிய செய்தியை கேட்டதுண்டு

Javed சொன்னது…

For a detailed explanation:

http://www.missionislam.com/family/familyplanning.htm

முதலாவது: இஸ்லாத்தில் குழந்தைகள் அதிகமாக பெற்றுக்கொள்ள அனுமதியும், ஊக்கமும் உள்ளது. வறுமைக்கு பயந்து இஸ்லாத்தில் கருச்சிதைவு செய்வதோ, நிரந்தர கருத்தடை செய்வதோ ஹராமாகும். குரானில் கூறப்பட்டது- "வறுமைக்கு பயந்து பிள்ளைகளை கொள்ளாதீர் என்ற கருத்தாகும்"

இரண்டாவது: கருவை சுமக்கும் பெண்மணிக்கு இயலவில்லை என்றாலோ அவள் கருவுறுவது அவள் உடல்நலத்தை வெகுவாகோ குறைக்கிறது என்றாலோ அவள் நிரந்தர கருத்தடை செய்துக்கொள்ளலாம். ஏனெனில் இறைவன் ஒருவரின் சக்திக்கு மீறி அவரை சோதிப்பது இல்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//mohammed said...
For a detailed explanation:

http://www.missionislam.com/family/familyplanning.htm

முதலாவது: இஸ்லாத்தில் குழந்தைகள் அதிகமாக பெற்றுக்கொள்ள அனுமதியும், ஊக்கமும் உள்ளது. வறுமைக்கு பயந்து இஸ்லாத்தில் கருச்சிதைவு செய்வதோ, நிரந்தர கருத்தடை செய்வதோ ஹராமாகும். குரானில் கூறப்பட்டது- "வறுமைக்கு பயந்து பிள்ளைகளை கொள்ளாதீர் என்ற கருத்தாகும்"

இரண்டாவது: கருவை சுமக்கும் பெண்மணிக்கு இயலவில்லை என்றாலோ அவள் கருவுறுவது அவள் உடல்நலத்தை வெகுவாகோ குறைக்கிறது என்றாலோ அவள் நிரந்தர கருத்தடை செய்துக்கொள்ளலாம். ஏனெனில் இறைவன் ஒருவரின் சக்திக்கு மீறி அவரை சோதிப்பது இல்லை.
//

mohammed,

இந்த இடுகையை இஸ்லாம் நம்பிக்கை தொடர்பான விவாதமாக கொண்டு செல்ல விருப்பமில்லை, மாத்திரை கண்டு பிடித்தவர் இஸ்லாமியர் என்பதால் நான் அறிந்திருந்த தகவலை பின்குறிப்பாக இணைத்தேன்.

'இஸ்லாமியர் அமைப்புகள்' என்று கூறி இருக்கிறேன். இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்டதாக குறிப்பிடவில்லை. இஸ்லாமிய அமைப்புகள் என்றால் அதில் பழமை வாத அமைப்புகளும் உண்டு என்பதும் உண்மைதானே.

நீங்கள் கூறிய கருத்தை ஒட்டி எனது கருத்து, பெற்றோர்கள் மிகுதியாகப் பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் மீது வறுமைகளும், செழுமைகளும் இரக்கம் காட்டுவதில்லை என்பதும் உண்மை.

மக்கள் தொகை இருக்கும் அளவுக்கு விளை நிலங்களோ, வசிப்பிடங்களோ இல்லை அல்லது அவை அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீனாவில் கருத்தடை அமுலில் இருக்கவில்லை என்றால் அந்த நாடு இன்று வறுமைப்பிடியில் இருக்கும்.

Javed சொன்னது…

\\\\'இஸ்லாமியர் அமைப்புகள்' என்று கூறி இருக்கிறேன். இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்பட்டதாக குறிப்பிடவில்லை. இஸ்லாமிய அமைப்புகள் என்றால் அதில் பழமை வாத அமைப்புகளும் உண்டு என்பதும் உண்மைதானே.\\


சகோதரர், உங்கள் பல பதிவுகளில் சில இஸ்லாமிய அமைப்புகளோ நண்பர்களோ செய்த தவறையே சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். நிச்சயமாக சில முஸ்லிம்களின் தவறான போக்கையும், இஸ்லாத்தில் இந்த சட்டங்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்று நீங்கள் கேள்வி கேட்பதையும் மிகவும் வரவேற்கிறேன்.

\\நீங்கள் கூறிய கருத்தை ஒட்டி எனது கருத்து, பெற்றோர்கள் மிகுதியாகப் பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் மீது வறுமைகளும், செழுமைகளும் இரக்கம் காட்டுவதில்லை என்பதும் உண்மை.\\

நீங்கள் கூறுவது சில நேரங்களில் உண்மையாக இருக்கலாம். ஆனால் எனக்கு தெரிந்த, என்னுடைய குடும்பத்தில் உள்ள பல பேர் நான்கு, ஐந்து பிள்ளைகளை பெற்றும் பண பிரச்சினைகளை எளிதாகவ்எ கையாளுகின்றனர் . (அவர்கள் எல்லாம் காய் கறி போன்ற வியாபாரம் செய்பவர்களே ). அடிப்படை என்னவென்றால் இஸ்லாத்தில் நிறைய பிள்ளைகளை பெற அனுமதியும ஊக்கமும் உள்ளது, என்னால் சமாளிக்க இயலும் என்பவர்கள் சமாளிக்கின்றனர். இயலாது என்பவர்கள் தற்காலிக கருத்தடையை பயன்படுத்தி வேறு வகையில் சமாளிக்கின்றனர். அவ்வளவே.

\\மக்கள் தொகை இருக்கும் அளவுக்கு விளை நிலங்களோ, வசிப்பிடங்களோ இல்லை அல்லது அவை அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீனாவில் கருத்தடை அமுலில் இருக்கவில்லை என்றால் அந்த நாடு இன்று வறுமைப்பிடியில் இருக்கும்\\

நீங்கள் கூறுவது போன்று மக்கள் தொகை பேருக்கும் தான் வறுமைக்கு காரணம் என்றால் ஆபிரிக்க கண்டத்தில் வறுமை இருக்காதே? கருத்தடையை தடை செய்துள்ள நாடுகள் மட்டுமே வறுமையின் பிடியில் இருக்குமே. சீனாவில் வறுமையே இல்லை என்று கூற முடியுமா?

http://www.guardian.co.uk/world/2008/nov/17/china-poverty-united-nations-growth

இப்படி கருத்தடை செய்து, குழந்தை பேறையும் தள்ளிப்போட்டு, குடும்ப அமைப்பு சிதைந்த மேலை naadugalin தற்போதைய பிரச்னை என்னவென்று தெரியுமா? Ageing Population. இன்றைய MBA வகுப்புகளில் மிக அதிகமான அளவில் பேசப்படும் ஒன்று. இதில் மிகதெளிவாக இந்தியாவிற்கு அட்வண்டகேஸ் உள்ளன.

http://www.guardian.co.uk/society/joepublic/2009/apr/24/ageing-population-impact
www.nutraingredients.com/Consumer-Trends/Japan-s-ageing-population-rich-opportunity-for-West
www.thefsforum.co.uk/Documents/whitepapersreports/Public/ageingpopulation.pdf

VANJOOR சொன்னது…

அதிகமாக குழந்தைகள் பெற்றுக்கொள்வது முஸ்லீம்களா?


விடியோ வழியாக‌ காணுங்க‌ள்.குடும்ப கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது?

வால்பையன் சொன்னது…

ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களுக்காக இருந்தாலும் சரி மாத்திரை வடிவ கருத்தடை சாதனங்கள் பக்கவிளைவை ஏற்ப்படுத்தலாம் என்பது எனது கருத்து!

காண்டம் உபயோகித்தலே சிறந்தது!

ILA (a) இளா சொன்னது…

பின்குறிப்பு ரொம்ப அவசியங்களா? ஒரு பதிவர் இருக்கார். அவர் இப்படி பண்ணி பண்ணித்தான் பேரைக் கெடுத்துகிட்டாரு. எல்லாத்தையும் மதம், சாதின்னு சேர்த்து சொல்லனும்னு அவசியம் இல்லையே. பிகு’க்கு என் கண்டனங்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
பின்குறிப்பு ரொம்ப அவசியங்களா? ஒரு பதிவர் இருக்கார். அவர் இப்படி பண்ணி பண்ணித்தான் பேரைக் கெடுத்துகிட்டாரு. எல்லாத்தையும் மதம், சாதின்னு சேர்த்து சொல்லனும்னு அவசியம் இல்லையே. பிகு’க்கு என் கண்டனங்கள்
//

உங்களுக்கு எப்படியோ தெரியாது, எனக்கெல்லாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மருந்தை குடிக்கும் போது எப்போதும் குரங்கு ஞாபகம் வரும் :)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்