பின்பற்றுபவர்கள்

19 மே, 2009

பிரபாகரன் கொல்லப்பட்டதாக பொய் பரப்பபடுவது ஏன் ?

நேற்று தேசியத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி கேட்டு தமிழ் உணர்வாளர்களும், ஈழ ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தது உண்மைதான். இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழில் சன் செய்தி முதற்கொண்டு 'பிரபாகரன் போரில் மரணமடைந்ததாக தகவல் வெளியிட்டது' இருப்பினும் இந்த செய்தியின் நம்பகத்தன்மை குறித்து யாதொரு படத்தொகுப்பும் வெளி இடப்படவில்லை. அனைத்து ஊடகங்களுமே இலங்கை இராணுவ செய்தியை மேற்கோள்காட்டியும், அவர்கள் அளித்த தகவலை வைத்தும் செய்தி வெளி இட்டார்கள்.

போர் என்றால் பிரபாகரன் ஒரு ஏகே 47 வைத்துக் கொண்டு சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராடியாதைப் போல் நினைத்துக் கொண்டு இருக்கிறோம், அப்படி பார்த்தால் இராஜபக்சேவும், பொன்சேகாவும் ஆளுக்கொரு துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டு போர்களத்தில் இருக்க வேண்டும் அல்லவா. பிரபாகரன ஈழ போராட்டத்தின் தலைவர், போர் உத்திகளை, போர் முறைகளை வகுத்து அதனை வழிநடத்த பயிற்சி கொடுத்துக் கொண்டு நிலமைகளை அனுக்கமாக கவனித்து வரும் தகவல்களை சேகரித்து போர் உத்திகளை மாற்றுவதற்கு பாதுகாப்பான ஒர் இடத்தில் இருந்து கொண்டு அதனை செய்து கொண்டிருப்பார். இவைதான் அனைத்து போராட்டக் குழுவிலும் நடைமுறை.

முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் சாலைகள் இருக்கிறதா என்பதே ஐயம் தான். பிரபாகரன் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட செய்திகளில் வீரப்பனை சுடப்பட்டது போல் ஆம்புலன்சில் தப்பிச்செல்ல இருந்த போது சுட்டதாகச் சொல்லுவது பூச் சுற்றப்பட்ட செய்தியாகத்தான் தெரிகிறது. போர் நடக்கும் இந்த 6 மாதத்திற்கும் மேலான காலங்களில் போர்களத்தில் பிரபாகரன் இருப்பது போல் விடுதலை புலிகளும் எந்த படத்தையும் வெளி இடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொண்டால், பிரபாகரன் பற்றிய செய்திகள், திரிக்கப்பட்ட அல்லது உள்நோக்கம் கொண்ட தகவலாகவே தெரிகிறது.

இப்படி செய்வதால் என்ன லாபம் ? பொய்யான கொண்டாட்டத்திற்கு சிங்களர்களை தூண்டி பிறகு உண்மை வெளியே தெரிந்தால் அவமானமாக இருக்காதா ? அது சிறிய அவமானம் தான். ஏனெனில் விடுதலை புலிகளைக் கொல்வதாகச் சாக்கிட்டு ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் அப்பாவி பொதுமக்களை மூன்று நாட்களுக்குள் அழித்ததாக தகவல் கசிவதால் ஐநா அந்த இடங்களை பார்வை இட வேண்டும் என்று இலங்கை அரசை நெருக்குவதால், 'இது இறுதி தாக்குதல், பிரபாகரனை அழிக்க எடுத்த நடவடிக்கை' என்று சொல்லிவிட்டால் போர் குற்றத்தில் இருந்து தப்பிவிடலாம் என்று சிங்கள அரசு கணக்கிட்டு பொய் பரப்புவதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

அதுமட்டுமல்ல இன்னும் போரைத் தொடர பல்வேறு சிங்களர்களுக்கு ஒப்புதல் இருப்பது போல் தெரியவில்லை. இருபக்கமும் பெரிய உயிரழப்பு ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க முதற்கொண்டு பள்வேறு நாடுகள் சுட்டிக் காட்டும் உள்நாட்டு போர் ஏற்படும் அச்சம் இருப்பதால், போர் முடிந்துவிட்டதாகவும், பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் இனிப்பான செய்தியாக அதை வெளி இடுவதன் மூலம் கலகங்களை தவிர்த்துவிட சிங்கள அரசு நினைத்திருக்கக் கூடும். இதில் இருபக்கமும் புரிந்துணர்வு, பொதுமக்கள் இழப்பையும், கலகங்களையும் கணக்கிட்டு சமரசம் ஏற்பட்டு இருப்பதால் தானோ என்னவோ விடுதலைப் புலிகளும் துப்பாக்கிக்கு ஓய்வு கொடுத்துவிட்டதாக தன்னிச்சையாக அறிவித்திருப்பதாக ஊகிக்க முடிகிறது.

இராஜபக்சே மண்ணை முத்தமிட்டாரா ? கவ்வினாரா ? உண்மைகள் ஒரிரு நாளில் வெளியாகலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கிடையே வருகிற 22 ஆம் தேதி ஐநாவின் கண்காணிப்புக் குழு போர் பகுதிக்குள் சென்று பார்வை இட இருக்கிறது.




இந்த வேளையில் சிலர் கருத்து என்ற பேரில் 'இவ்வளவு பேர் இழப்பிற்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதத்தைக் கீழே போடுவதை முன்கூட்டியே செய்திருந்தால் இழப்பை தவிர்த்திருக்கலாமே... ஏன் செய்யவில்லை' என்பது போல் வழக்கமாக விடுதலைப் புலிகள் மீது இருக்கும் வெறுப்பை கருத்தாக வெளியிட்டு ஈழ ஆதரவாளர்களை ஆமாம் சாமி போட வைக்க முடியுமா என்றெல்லாம் முயலுகிறார்கள். இவர்களைப் போல் ஆசாமிகள் நாட்டின் இராணுவத் தலைமையில் இருந்தால் எதிரி நாடு போர் தொடுக்கும் வருவதாக செய்தி வந்தாலே 'பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் ' என்று சாக்கு கூறி வடிவேலு புலிகேசி பாணியில் மக்களை எதிரிநாட்டு இராணுவத்திற்கு விருந்து வைத்துவிட்டு நாட்டை விட்டு ஓடிவிடுவார்கள் போலும்.

15 கருத்துகள்:

உடன்பிறப்பு சொன்னது…

நேற்றைய இடுகை ரொம்ப ரொம்ப யோசிச்சு போட்ட மாதிரி தெரியுது, நிச்சயமா எங்களால அந்த அளவுக்கு எல்லாம் யோசிக்க முடியாது

VSK சொன்னது…

நடந்த நிகழ்வுகளைப் பற்றிய செய்தி எதுவுமே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை.
கொஞ்சம் ஆழமாகக் கவனித்தால், வீஎஅப்பன் சாவில் நிகழ்ந்த நிகழ்வுகளையே இலங்கை மறு ஒலிபரப்பு செய்திருப்பது தெரியவரும்!

செத்தவரின் உடலை ஏனய்யா இதுவரை காண்பிக்கவில்லை.
பொய் பரப்புரைகளை நம்ப்ப வேண்டாம்!

தமிழ் சொன்னது…

நன்றி நண்பரே

supersubra சொன்னது…

whatever be the truth I request all eelam people not to believe tamil politicians any more. you have to continue your struggle on your own until it is achieved may be in a different path.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நானும் இதேதான் நினைத்தேன்..

இரா. வசந்த குமார். சொன்னது…

அன்பு கோவி.கண்ணன்...

நீங்களும் நேற்று கொஞ்சம் யோசித்து பதிவு எழுதியிருக்கலாம், அதுவும் அப்படி ஒரு தலைப்பு வைத்து...! நல்லவேளை, நீக்கி விட்டீர்கள்.

Sanjai Gandhi சொன்னது…

டிபிசிடி சொன்ன மாதிரி இனி அவசரக் குடுக்கை என்ற பெயரை அவசரக் கோவி என்று மாத்திடலாம்.

வேகநரி சொன்னது…

இப்படி பதிவு எழுதிய நீங்கள் தான் நேற்று வேறு ஒரு பதிவு போட்டிர்கள் உண்மையிலேயே நீங்கள் பொய் பரப்பு என்று நினைத்தால் அது என்ன இராஜபக்சே மண்ணை முத்தமிட்டாரா ? கவ்வினாரா ? உண்மைகள் ஒரிரு நாளில் வெளியாகலாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்பது. உங்களுக்கே நம்பிக்கையில்லை.

சில தினங்களுக்கு முன்பு புலிகள் ஆயுதத்தைக் கீழே போடசம்மதித்ததை முன்பே செய்திருந்தால் அப்பாவி பொதுமக்கள் அழிவையும் துன்பங்களையும் தடுத்திருக்கலாமே!

கோவி.கண்ணன் சொன்னது…

//சில தினங்களுக்கு முன்பு புலிகள் ஆயுதத்தைக் கீழே போடசம்மதித்ததை முன்பே செய்திருந்தால் அப்பாவி பொதுமக்கள் அழிவையும் துன்பங்களையும் தடுத்திருக்கலாமே!

4:16 AM, May 20, 2009
//

ஆமாம், வீட்டிற்குள் பொறுக்கிகள், ரவுடிகள் நுழைந்தவுடனேயே பொண்டாட்டியை அவனுக்கு கூட்டிக் கொடுத்துவிட்டால் தானும் தப்பித்துவிடலாம், அவளையும் கொன்றுவிட மாட்டார்கள்.

நல்ல பலமாக யோசிக்கிறிங்க, உங்களைப் போல் புத்திசாலித்தனமாக யோசிப்பவர்களுக்காகத்தான் பதிவில் கடைசி பத்தியை சேர்த்திருக்கிறேன்.

விரர்களுக்கு உங்களைப் போல் யோசிக்கத் தெரியாது

வஜ்ரா சொன்னது…

பிரபாகரன் உயிருடன் இருப்பது நிஜம் தான் என்று நிரூபணமாகும் வரை பிராபகரன் இறந்துவிட்டான் என்ற பொய்யை நான் நம்புவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Vajra said...
பிரபாகரன் உயிருடன் இருப்பது நிஜம் தான் என்று நிரூபணமாகும் வரை பிராபகரன் இறந்துவிட்டான் என்ற பொய்யை நான் நம்புவேன்.
//

வாங்க சார்,

சும்மா பெரியவா மேல கேஸ் போட்டுட்டுட்டாள், காஞ்சி சங்கர இராமனும் சாகவில்லை என்று யாராவது நிரூபித்தால் நல்லா இருக்கும் தானே ?

வஜ்ரா சொன்னது…

கோ.க,

காஞ்சி பெரியவருக்கும் பிரபாகரனுக்கும் ஏன் முடிச்சு போடனும் என்று நினைக்கிறீர்கள் ? நான் பார்ப்பானன் அல்ல. காமகோடி புத்தகம் வாங்கிப்படிக்கும் அளவுக்கு வேலையில்லாமல் இருப்பவனும் அல்ல. சங்கர் ராமன் என்பவன் இருந்தாலும் செத்தாலும் எனக்குக் கவலையில்லை. So, stop putting a red herring.

பிரபாகரன் இறந்ததால் தமிழகத்தில் பலருக்கு வரும்படி நின்றுவிட்டது உண்மை. அவர்கள் கோபம், விரக்தி எல்லாம் ஞாயமானது தான், பாவம், வரும்படி நின்று விட்டதே! புலிகள் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் useful idiots களில் நீங்களும் ஒருவர் என்றால் அது என் பிரச்சனை அல்ல.

பிரபாகரன் பெயரைச் சொல்லி அரசியலில் பிழைப்பு நடத்திய கேவலமானவர்கள் இன்று இந்திய நாடாளுமன்றத்திலிருந்து இந்தியர்களால் குறிப்பாக தமிழர்களால் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இதைவிட (உங்களைப்போன்ற) புலி ஆதரவாளர்களுக்குச் செருப்படி கொடுக்க யாராலும் முடியாது.

உங்கள் பிரச்சனை இது தான்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறான் என்றால் போர்களத்தை விட்டு ஓடிய "மாவீரன்" என்றாகிவிடும்.

செத்துவிட்டான் என்றால் தமிழ் விடுதலை புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்றாகிவிடும்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழிக்கிறீர்கள். போதாத குறைக்கு பிரபாகரன் இறப்புச் செய்தி வேறு இடி மாதிரி வந்து விழுந்துத்
தொலைத்துவிட்டது.

உங்களை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. After all எவ்வளவு நாளைக்குத்தான் இந்த பொய்ப் பிரச்சார திராவிட இனவாதம் வாழும் ?

உங்களுடைய மற்றொரு பிரச்சனை உங்கள் கோபாட்டை நம்பாதவர்கள் அனைவரும் இனவாதிகள்/ஃபாசிஸ்டுகள் என்று நம்புவது. இந்தியாவில் உங்கள் கோட்பாட்டை நம்பாதவர்கள் ஆரிய இனவாதிகள்/அடி வருடிகள்/இந்து ஃபாசிஸ்டுகள். சிரி லங்காவில் சிங்களவர்கள் எல்லாம் சிங்கள இனவாதிகள்/ஃபாசிஸ்டுகள். நீங்கள் மட்டும் மகா யோக்கியர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

// Vajra said...
கோ.க,

காஞ்சி பெரியவருக்கும் பிரபாகரனுக்கும் ஏன் முடிச்சு போடனும் என்று நினைக்கிறீர்கள் ? நான் பார்ப்பானன் அல்ல. காமகோடி புத்தகம் வாங்கிப்படிக்கும் அளவுக்கு வேலையில்லாமல் இருப்பவனும் அல்ல. சங்கர் ராமன் என்பவன் இருந்தாலும் செத்தாலும் எனக்குக் கவலையில்லை. So, stop putting a red herring.//

இந்து ஆதரவாளர்களுக்கும் பெரியவாளுக்கும் தொடர்பே இல்லையா. அவ்வ்வ்வ் ! காங்கிரஸ் தவிர்த்து பிரபாகரன் பற்றிய எதிர்கருத்து உடைவர்கள் எல்லோரும் அந்த தேசியவாத பம்மாத்து என்னும் அந்த இணைப்பில் தானே இருக்கிறார்கள்.

//பிரபாகரன் இறந்ததால் தமிழகத்தில் பலருக்கு வரும்படி நின்றுவிட்டது உண்மை. அவர்கள் கோபம், விரக்தி எல்லாம் ஞாயமானது தான், பாவம், வரும்படி நின்று விட்டதே! புலிகள் சம்பளம் கொடுத்து வைத்திருக்கும் useful idiots களில் நீங்களும் ஒருவர் என்றால் அது என் பிரச்சனை அல்ல.//

பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் காடு களனி வைத்துக் கொண்டு விவாசயம் செய்து கள்ளமார்க்கட்டில் விற்று வரும்படி பார்த்தார்கள், அதற்கு உதவியர்கள் பிரபாகரன் ஆதராவாளர்கள் என்று சொல்லி இருக்கலாம்.

ஒரு சொட்டுப் பெட்ரோல் செல்வது கூட நின்றுவிட்ட நிலையில் விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டு ஆதரவாளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்று சிங்கள இரத்னாக்களிடம் கேட்டுச் சொல்லுங்க

//பிரபாகரன் பெயரைச் சொல்லி அரசியலில் பிழைப்பு நடத்திய கேவலமானவர்கள் இன்று இந்திய நாடாளுமன்றத்திலிருந்து இந்தியர்களால் குறிப்பாக தமிழர்களால் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.//

அது ஒரு சாக்குத்தான், அதற்கு முன்பு இந்த பிடிங்கள் பிரதமர் பதவி என்று தேசியவாதம் பேசும் எந்த ஒரு குள்ள நரியும் தமிழர்களை தலை நிமிர்த்திவிட முயன்றதில்லை.

//இதைவிட (உங்களைப்போன்ற) புலி ஆதரவாளர்களுக்குச் செருப்படி கொடுக்க யாராலும் முடியாது. //

புலி ஆதரவு புலி ஆதரவு என்று திமுகவை ஓரம் கட்டியவர்கள், அதன் தயவிலேயே காலை நக்கி ஆட்சி நடத்தி பிழைப்ப நடத்துவதைவிட ஈனத்தனமா ?

//உங்கள் பிரச்சனை இது தான்.

பிரபாகரன் உயிருடன் இருக்கிறான் என்றால் போர்களத்தை விட்டு ஓடிய "மாவீரன்" என்றாகிவிடும்.//

மாவீரனா ? இல்லையா ? என்பதை பிரபாகரன் மறைவு குறித்து அச்சத்துடன் 'பிரபாகரன் ஒருவேளை இருந்து தொலைத்துவிட்டால்' என்று தொடைநடுங்கும் கும்பல்களிடம் தான் கேட்கவேண்டும்.

//செத்துவிட்டான் என்றால் தமிழ் விடுதலை புலிகள் இயக்கம் அழிந்துவிட்டது என்றாகிவிடும்.//

அப்படியா ? இதற்கு ஈழத்தமிழர்கள் எவரேனும் பதில் சொல்லுவார்கள்

//மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் முழிக்கிறீர்கள். போதாத குறைக்கு பிரபாகரன் இறப்புச் செய்தி வேறு இடி மாதிரி வந்து விழுந்துத்
தொலைத்துவிட்டது.//

எங்கிருந்து எந்த நேரத்தில் தாக்குதல் வரும் என்று நடுங்குபவர்களிடம் சென்று இதைச் சொல்லிப் பாருங்கள்.

//உங்களை நினைத்தால் எனக்குப் பாவமாக இருக்கிறது. After all எவ்வளவு நாளைக்குத்தான் இந்த பொய்ப் பிரச்சார திராவிட இனவாதம் வாழும் ?//

பார்பன பாசிசம் இருக்கும் வரை

//உங்களுடைய மற்றொரு பிரச்சனை உங்கள் கோபாட்டை நம்பாதவர்கள் அனைவரும் இனவாதிகள்/ஃபாசிஸ்டுகள் என்று நம்புவது. இந்தியாவில் உங்கள் கோட்பாட்டை நம்பாதவர்கள் ஆரிய இனவாதிகள்/அடி வருடிகள்/இந்து ஃபாசிஸ்டுகள். சிரி லங்காவில் சிங்களவர்கள் எல்லாம் சிங்கள இனவாதிகள்/ஃபாசிஸ்டுகள். நீங்கள் மட்டும் மகா யோக்கியர்கள்.//

இப்படி தனக்குத்தானே ஒப்புக் கொண்டால் மாற்றிச் சொல்லுவார்கள் என்கிற நப்பாசையா ? மூளை உள்ளவர்கள் அனைவரும் அறிவுள்ளவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள முயற்சியுங்கள். அது தான் அறிவுடையோர்க்கு அழகு

வஜ்ரா சொன்னது…

ஒரு சொட்டுப் பெட்ரோல் செல்வது கூட நின்றுவிட்ட நிலையில் விடுதலைப் புலிகள் தமிழ் நாட்டு ஆதரவாளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்று சிங்கள இரத்னாக்களிடம் கேட்டுச் சொல்லுங்க
ஐயா, பிரபாகரனுக்கு எவ்வாறு ஒரு புரட்சி நடத்தப்பணம் கிடைத்தது என்று எல்லோருக்கும் தெரியும். அரசுக்கு எதிரான புரட்சி என்றால் சும்மாவா ? 30 வருசம் வாங்கித்தின்று விட்டு கடைசி 30 நாட்கள் வாங்கவில்லையே என்று சொல்வது எங்கப்பன் குதிருக்குள் இல்லையே என்று எனக்குக் கேட்கிறது.

அப்படியா ? இதற்கு ஈழத்தமிழர்கள் எவரேனும் பதில் சொல்லுவார்கள்
புலிகளின் பினாமி ஊடகங்கள் சொல்வதையெல்லாம் மறு ஒளிபரப்பு செய்வதால் ஒரு பிரயோசனமும் இல்லை.

பார்பன பாசிசம் இருக்கும் வரை
பிறகு...பார்ப்பானர்கள் இருக்கும்வரை என்பீர்களா ?

ஃபாசிசம் என்பதன் உண்மையான பொருள் அறியும் வரை நீங்கள் இந்த கோட்பாட்டிற்கு அதரவு தருவீர்கள் என்று நான் பாசிடிவாக எடுத்துக்கொள்கிறேன்.

மூளை உள்ளவர்கள் அனைவரும் அறிவுள்ளவர்கள் என்பதை ஒப்புக் கொள்ள முயற்சியுங்கள். அது தான் அறிவுடையோர்க்கு அழகுஅப்படியா...எதையோ சொல்லவந்து எதோ வந்துவிட்டது என்று நினைக்கிறேன்..எல்லோருக்கும் மூளை உள்ளது. ஒரு சிலர் தான் அதை சரியாகப்பயன் படுத்துகிறார்கள். ஆகவே அவர்களை ஆறிவாளிகள் என்கிறோம்.

சரி. உங்களுக்கும் தான் மூளை யிருக்கிறது ஆனால்...

அஹோரி சொன்னது…

சொந்த உறவுகள் கற்பழிக்க படும்போது நிரோத்தும் , வயாகிராவும் வங்கி குடுக்கும் பக்குவம் உள்ளவர்கள் அறிவாளிகள் அல்ல. ஐந்தறிவு ஜென்மங்கள்.

அம்பது ரூவா பிரியாணிக்கும் நூறு ரூவா காசுக்கும் அலையும் நாய்கள் இன்று நேற்றல்ல 'காமராஜரை' தோற்கடித்த நாளிலிருந்து உண்டு.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்