பின்பற்றுபவர்கள்

21 மே, 2009

இராசீவ் காந்தி நினைவு நாள் !

1990ல் சென்னையில் வில்லிவாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் நண்பர்களுடன் இருந்தேன், இராசீவ் கொலையான மறுநாள் காலையில் தான் தகவல் தெரிந்தது. அப்போதும் பலகட்டங்களாக தேர்தல் நடந்ததால் இறுதிக்கட்ட பிரச்சாரத்திற்கு சென்னை வந்த நிலையில் இது நடந்திருந்தது. பொது வேலை நிறுத்தம் போல் அனைத்துக் கடைகளும் சென்னையில் மூன்று நாட்களுக்கும் மேல் மூடப்பட்டு இருந்தன. ஒரிறி நாளில் கொலையாளிகள் பற்றி துப்பு துலங்கியதாக ஜோல்னா பை வைத்திருந்த ஒருவர், அவருடன் ஒரு பெண், கூடவே இரட்டை சடை போட்டிருந்த சிறுமி ஆகியோரின் படங்கள் வந்தன. மறுநாள் அனைத்து பத்திரிகைகளும் கொலையாளி இப்படி இருப்பான் என்பதாக ஓவியர்கள் வைத்து முக அமைப்புடன் பல்வேறு வேடத்தில் இப்படி இருப்பார்கள் என ஒரு ஆண் பெண் புகைப்படங்களை வெளி இட்டிருந்தன, அதன் பிறகே இவை விடுதலைப் புலிகள் தொடர்பால் நடந்த கொலை என பரவலாகப் பேசப்பட்டது. புகைப்படங்கள் மூலம், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் பெயர், கொலையாளிகள் பெயர் ஆகியவை தெரிய ஆரம்பித்தன. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு நிலையில் இருந்த 90 விழுக்காட்டினார் வெறுக்கத் தொடங்கினார்கள். வழக்கமாக தேசியவாத பம்மாத்தில் உயிர்சாதி சார்பு ஊடகங்கள் பரப்பப்படும் செய்திகளை அப்போது ஊடகங்கள் சார்பு நிலை உடையவை என்று அறியாததால் என்னைப் போல் பலரும் 'அமைதிப் படை அனுப்பி அமைதி ஏற்படுத்த முயன்ற வெள்ளைப் புறாவின் சிறகொடித்து வீழ்த்துவிட்டார்களே' என்று சினந்தோம். கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக அதே போன்ற நினைப்பில் தான் என்னைப் போல் பலரும் இருந்தனர்.

பிறகு சார்புடகம் சாராதோர் எழுதிய கட்டுரைகள் மூலம் ஈழத்தில் அமைதிப் படை என்ற பெயரில் நடத்திய அட்டகாசங்கள் அமிழ்த்தப்பட்ட மனிதனின் மூச்சுத் திணறல் போல் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றாக வெளியே வர வர, என்ன இருந்தாலும் தமிழக மண்ணில் இராசீவ் காந்தி படுகொலை நடந்திருக்கக் கூடாத வரலாற்றுப் பிழை' என்பதாக சிந்தனைகள் மாறியது, அகதிகள் வர வர ஈழத்தவர்கள் மீது பரிதாபம் வரத் தொடங்கியது.
தற்கொலைத் தாக்குதல் என்பது ஒரே நாளில் ஒருவரை மூளை மாற்றம் செய்வதன் மூலம் நடந்திருக்க முடியாது, அதற்கு பின்னால் இருக்கும் பாதிப்புகள் ஒருவரை அந்த நிலை எடுக்கக் காரணமாக இருக்கும் ஞாயங்கள் குறித்தும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையும் ஏற்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழப் பிரச்சனைக்குக் காரணமே அடிப்படை இனவெறியில் சிங்களப் பெரும்பான்மை நடத்திய வெறி ஆட்டமே என்பது புரிந்து கொள்ள்ளப்பட்டது.

சிறுபான்மை பெறும்பான்மை பேசும் முதலாளித்துவ நாடுகளின் நடைமுறையில், சிறுபான்மை மதத்தவர்களை அரசியல் இயக்கங்கள் கண்டு கொள்ளாமல் அவர்களின் ஓட்டுகளில் கவனம் செலுத்திவருவதெல்லாம் பார்க்கும் போது இந்து வெறியின் மூலம் பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை பெற முயலும் பாஜகவிற்கும், சிறுபாண்மையினர் பாதுகாவலராகக் காட்டிக் கொண்டு அவர்களின் வாக்குகளையும், நடுநிலையாளர்களின் வாக்குகளை குறிவைக்கும் காங்கிரசின் அரசியல் செயல்பாடுகளுக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பதால் பலரும் திமுக - பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கும் தள்ளப்பட்டனர்.

காங்கிரசின் தேர்தல் பலமாக, இந்திராகாந்தி படுகொலை, இராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து அவர்கள் அந்த அனுதாபத்தில் ஆட்சியைப் பிடித்தாலும் அடுத்த அடுதத் தேர்தல்களில் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் போகவே தலைமையிலான ஆட்சி என்ற உத்திக்கு மாறி தற்பொழுது கூட்டணிகள் மூலம் ஆட்சியை தக்கவைத்துக் கொள்கின்றனர். நேரடியாகவோ மறைமுகமாகவோ காங்கிரஸ் அரசு தொடர பலமுறை தமிழர்களே காரணமாக இருந்தும் எந்த ஒரு தமிழக காங்கிரசு தலைவரையும் பிரதமர் ஆக்கிப் பார்க்கும் மூடில் காங்கிரசு இருந்ததில்லை. பழிக்கு பழியாக இராசீவ் காந்தி படுகொலை நடந்துவிட்டது, அதையே சாக்கிட்டு ஈழத்தமிழர்களின் கனவான தமிழ் ஈழத்தை உருவாக்கும் முயற்சியில் இருந்தவர்களை முற்றிலும் துடைத்தொழிக்கப் போவதாக அறிவிக்கபப்டாத காங்கிரசின் சபதம் போல் காங்கிரசு தலைமையிலான இந்திய அரசின் முழு ஒத்துழைப்புடன் ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகளும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு விட்டனர். மனித உயிர்களை அத்தனை மலிவாக நினைப்பவர்களுக்கு இராசீவின் உயிர் மட்டும் உயர்வாகத் தெரிவதை எந்த வித மனிதம் என்று எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை. பெரிய ஆலமரம் சாயும் போது அதிர்வுகள் ஏற்படும் என்று இந்திராகாந்தி படுகொலையை தொடர்ந்த காங்கிரச்சாரின் சீக்கிய படுகொலை ஞாயப்படுத்தியவர் இராசீவ் தான்.
காந்தியின் பெயரை பின்னால் வைத்திருப்பதாலேயே யாரும் உத்தமரோ, அமைதி விரும்பிகளாகவோ இருக்க முடியாது என்பதாக வெளிக்காட்டினார்.
டெல்லியில் இருந்த பல இஸ்லாமியர்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணித்தார் சஞ்சய்காந்தி என்கிற குற்றச் சாட்டுகள் இப்போதும் உண்டு. பயிற்சி விமான விபத்தில் பலியாகமல் இருந்தால் சஞ்செய் கூட கொல்லப்பட்டு இருப்பார் என்றே சிலர் சொல்லுவார்கள்.

அதிகாரவர்க்கம் அரசியல், இராணுவ ரீதியாக இரும்புக் கரம் நீட்டும் போது, அதற்கு எதிராக மறைவாக நக்கசல் இயக்கங்கள் தோன்றி அச்சுறுத்தலாக அந்த இரும்புகரத்தின் மீது தொலைவில் இருந்து பெட்ரோல் குண்டுகளை வீசும். அதாவது தீவிரவாதிகளை தோற்றுவிப்பவர்களே அடக்குமுறை ஆட்சியாளர்களும் அவர்களின் செயல்பாடுகளும் தான். இதில் ஞாயம் எது என்று எப்படிச் சொல்ல முடியும் ?

இராசீவ் காந்தி ஆவி மன்னிக்காது என்று பேசும் காங்கிரசார் இனிமேலாவது, ஆவி அரசியல் நடத்துவதை நிறுத்திவிட்டு தங்களால் ஏற்பட்ட பிழைகளை சரிசெய்து கொள்ளவேண்டும். இராசீவ் அரசியல் ரீதியாக எப்படிப் பட்டவராக இருந்தாலும் தகவல் தொழில் நுட்பத் துறைமூலம் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சிக்கு கைக்காட்டி இருக்கிறார். அதன் மூலம் இந்தியர்கள் தொழில் நுட்ப துறையில் அச்சமின்றி அடி எடுத்து வைக்க வழி ஏற்பட்டு இருக்கிறது. நம்மைப் போல் பெரிய நாடு என்றாலும் சீனர்களால் இந்தியர்களை இந்த துறையில் விஞ்சமுடியவில்லை. அதற்கு அடிகோலிட்டவர் இராசீவ் காந்தி. தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றி வளர்ந்தவர்கள் இராசீவ் காந்திக்கு பாராட்டு தெரிவிக்க கடமைப் பட்டவர்கள். அந்த வகையில் இராசீவின் மறைவை ஒட்டிய இந்நாளில் அவருக்கு பாராட்டையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

35 கருத்துகள்:

அபி அப்பா சொன்னது…

வர வர நான் டியூப்லைட்டா ஆகிட்டேன்! திட்டுறீங்களா? பாராட்டுறீங்களான்னு தெரியலை. இதுக்கு தான் மூத்த பதிவர் பதிவெல்லாம் 4 தடவை படிக்கனும்ன்னு பெரியவங்கசொல்லியிருக்காங்க போல இருக்கு!

இருந்தாலும் ராஜீவுக்கு என் அஞ்சலிகள்!

Sanjai Gandhi சொன்னது…

//டெல்லியில் இருந்த பல இஸ்லாமியர்களுக்கு கட்டாய குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சை செய்து கொள்ள பணித்தார் சஞ்சய்காந்தி என்கிற குற்றச் சாட்டுகள் இப்போதும் உண்டு. பயிற்சி விமான விபத்தில் பலியாகமல் இருந்தால் சஞ்செய் கூட கொல்லப்பட்டு இருப்பார் என்றே சிலர் சொல்லுவார்கள்.
//

கட்டுக் கதைகளை யாரும் நம்ப வேண்டாம். நான் டில்லி சென்றதே இல்லை.. நான் எந்த விபத்திலும் பலியாகவும் இல்லை. உயிருடன் தான் இருக்கிறேன். ( ஏண்டா உயிரோட இருக்கன்னு கேக்கறது கேக்குது:) )

கோவி.கண்ணன் சொன்னது…

//கட்டுக் கதைகளை யாரும் நம்ப வேண்டாம். நான் டில்லி சென்றதே இல்லை.. நான் எந்த விபத்திலும் பலியாகவும் இல்லை. உயிருடன் தான் இருக்கிறேன். ( ஏண்டா உயிரோட இருக்கன்னு கேக்கறது கேக்குது:) )

2:18 PM, May 21, 2009
//

ஆகா ஆவி பின்னூட்டம் !
:)

Sanjai Gandhi சொன்னது…

//தற்கொலைத் தாக்குதல் என்பது ஒரே நாளில் ஒருவரை மூளை மாற்றம் செய்வதன் மூலம் நடந்திருக்க முடியாது, அதற்கு பின்னால் இருக்கும் பாதிப்புகள் ஒருவரை அந்த நிலை எடுக்கக் காரணமாக இருக்கும் ஞாயங்கள் குறித்தும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையும் ஏற்பட்டது.//

அல் காய்தா, தாலிபான் உட்பட அனைத்து பயங்கரவாத இயக்கங்களும் சொல்லும் சப்பைக் கட்டு இது. என்னக் காரணத்திற்காகவும் மனிதனை வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உயிரோடு இருப்பவனை எல்லாம் வெடிகுண்டாக்கி கொன்றுவிட்டு யாருக்கு விடுதலை வாங்கித் தருவார்களாம்?

கோவி.கண்ணன் சொன்னது…

//அல் காய்தா, தாலிபான் உட்பட அனைத்து பயங்கரவாத இயக்கங்களும் சொல்லும் சப்பைக் கட்டு இது. என்னக் காரணத்திற்காகவும் மனிதனை வெடிகுண்டாகப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. உயிரோடு இருப்பவனை எல்லாம் வெடிகுண்டாக்கி கொன்றுவிட்டு யாருக்கு விடுதலை வாங்கித் தருவார்களாம்?

2:21 PM, May 21, 2009
//

மரண தண்டனை சட்டங்களை அமுலும் வைத்திருக்கும் எந்த நாட்டிற்கு இப்படிச் சொல்ல உரிமை இருப்பதாகத் தெரியவில்லை. கொலைக்கு கொலை தீர்வாகாது என்பது மரண தண்டனை சட்டங்களுக்கும் பொருந்தும்.

சட்டத்தின் வழி இராணுவம் வழி செய்யப்படுவதிலும் அப்பாவிகள் பலியாகிறார்கள், இதற்கு இதுவரை எந்த இராணுவமும் வெட்கப்பட்டதே கிடையாது. ஜெ பாணியில் போர் என்றால் பொதுமக்களில் சிலர் இறப்பது இயல்பே என்று சொல்லப்படுகிறது. அவரவர் ஞாயம் அவரவர்களுக்கு என்பதையாவது ஒப்புக் கொள்ளுங்கள்
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//அல் காய்தா, தாலிபான் உட்பட அனைத்து பயங்கரவாத இயக்கங்களும் சொல்லும் சப்பைக் கட்டு இது. //

தன்னிச்சையாக சதாமை தூக்கிலிட முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கும் போது அல்கொய்தா அதுவாக முடிவெடுப்பதை நாம் சரி தவறு என்று சொல்லிவிட முடியாது.

சமூக அமைப்பு, சமூகம் ஆதரவு குறைந்த அல்லது இல்லாத அமைப்பு என்ற வகையில் தான் அரசுகளும், தீவிரவாத அமைப்புகளும் இருக்கின்றன.

Sanjai Gandhi சொன்னது…

//தன்னிச்சையாக சதாமை தூக்கிலிட முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கும் போது அல்கொய்தா அதுவாக முடிவெடுப்பதை நாம் சரி தவறு என்று சொல்லிவிட முடியாது.//

இது நல்லா இருக்கே. அமெரிக்கவுக்கு அந்த உரிமை இருப்பதாக நீங்கள் தன் அறிவிக்கிறீர்கள் போல. என்னால் இதை ஏத்துக்க முடியாது. மரணதண்டனை முற்றாக ஒழிக்கப் பட வேண்டியதில்லை. சில குற்றங்களுக்கு அது தேவை. மரணதண்டனைத் என்பது உயிரின் மதிப்புத் தெரியாத அதி பயங்கர மிருங்களின் தவறுக்கு தரலாம். ஆனால் மனிதவெடிகுண்டாக்கப் படுபவன் என்ன தவறுக்காக அவன் உயிரை மாய்க்கப் பணிக்கப் படுகிறான்?.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆனால் மனிதவெடிகுண்டாக்கப் படுபவன் என்ன தவறுக்காக அவன் உயிரை மாய்க்கப் பணிக்கப் படுகிறான்?.//

அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு இராணுவ வீரனும் கூட தற்கொலையாளிதான், எதிரிகளிடம் சரணடைந்தால் நாட்டின் ரகசியம் சிக்கிவிடும், அல்லது தான் சித்திரவதைக்குள்ளாக்கப்படும் நிலை ஒவ்வொரு இராணுவ வீரனுக்கும் உண்டு.

சமூக சார் அமைப்பில் இருந்து பார்த்தால் அரசு செய்வது தான் சரியான நடை முறை என்பது போல் தோன்றும். மற்றபடி பெரிய வேறுபாடு இல்லை.

Raja சொன்னது…

//அதற்கு பின்னால் இருக்கும் பாதிப்புகள் ஒருவரை அந்த நிலை எடுக்கக் காரணமாக இருக்கும் ஞாயங்கள் குறித்தும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையும் ஏற்பட்டது//
இதை அப்படியே வழிமொழிகிறார்கள் சோனியா, ராகுல் மற்றும் ப்ரியங்கா அவர்கள் தரப்பு நியாய வாதத்துக்காக. உங்கள் பதில் என்ன?
இப்படிக்கு,
ராஜா.

Raja சொன்னது…

//அதற்கு பின்னால் இருக்கும் பாதிப்புகள் ஒருவரை அந்த நிலை எடுக்கக் காரணமாக இருக்கும் ஞாயங்கள் குறித்தும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையும் ஏற்பட்டது//
இதை அப்படியே வழிமொழிகிறார்கள் சோனியா, ராகுல் மற்றும் ப்ரியங்கா அவர்கள் தரப்பு நியாய வாதத்துக்காக. உங்கள் பதில் என்ன?
இப்படிக்கு,
ராஜா.

லக்கிலுக் சொன்னது…

ராஜீவ்காந்தி படுகொலை இன்றைக்கும் எனக்கு வருத்தத்தை தரும் ஒரு நிகழ்வு என்பதோடு பின்னூட்டத்தை முடித்துக் கொள்கிறேன்.

ராஜீவ் கொல்லப்பட்டதால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், சமூகநீதிக் காவலர் விபி சிங் ரிட்டையர்டு ஆனதும் தான் மிச்சம்! :-(

Raja சொன்னது…

//மனித உயிர்களை அத்தனை மலிவாக நினைப்பவர்களுக்கு இராசீவின் உயிர் மட்டும் உயர்வாகத் தெரிவதை எந்த வித மனிதம் என்று எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை//

LTTE தலைவர் பிரபாகரன் உயிர் மட்டும்தான் மேலானதா?

கோவி.கண்ணன் சொன்னது…

// Arumugam said...
//அதற்கு பின்னால் இருக்கும் பாதிப்புகள் ஒருவரை அந்த நிலை எடுக்கக் காரணமாக இருக்கும் ஞாயங்கள் குறித்தும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கிற மனநிலையும் ஏற்பட்டது//

இதை அப்படியே வழிமொழிகிறார்கள் சோனியா, ராகுல் மற்றும் ப்ரியங்கா அவர்கள் தரப்பு நியாய வாதத்துக்காக. உங்கள் பதில் என்ன?
இப்படிக்கு,
ராஜா.
//

கொளத்தூர் மணி இராசிவுக்கு நடந்தது மரண தண்டனை என்கிறார். ஈழத்தில் அமைதிப்படையால் சீரழிந்தவர்களை பேட்டிக் கண்டால் அவர்களும் அதைத்தான் சொல்லுவார்கள். நான் ஈழத்தில் பிறந்து பாதிக்கப்பட்டு இருந்தால் நானும் அவ்வாறு சொல்லுவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Arumugam said...
//மனித உயிர்களை அத்தனை மலிவாக நினைப்பவர்களுக்கு இராசீவின் உயிர் மட்டும் உயர்வாகத் தெரிவதை எந்த வித மனிதம் என்று எடுத்துக் கொள்வதென்றே தெரியவில்லை//

LTTE தலைவர் பிரபாகரன் உயிர் மட்டும்தான் மேலானதா?

3:24 PM, May 21, 2009
//

நான் சொன்னதன் பொருள் அனைத்து உயிர்களுமே மலிவானது இல்லை என்பதே.

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்கிலுக் said...
ராஜீவ்காந்தி படுகொலை இன்றைக்கும் எனக்கு வருத்தத்தை தரும் ஒரு நிகழ்வு என்பதோடு பின்னூட்டத்தை முடித்துக் கொள்கிறேன்.
//

பதிவின் மையக்கருத்தும் அதே தான்

//ராஜீவ் கொல்லப்பட்டதால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், சமூகநீதிக் காவலர் விபி சிங் ரிட்டையர்டு ஆனதும் தான் மிச்சம்! :-(
//

அப்படியே வழிமொழிகிறேன்

நையாண்டி நைனா சொன்னது…

ullen anna...

Raja சொன்னது…

//கொளத்தூர் மணி இராசிவுக்கு நடந்தது மரண தண்டனை என்கிறார். ஈழத்தில் அமைதிப்படையால் சீரழிந்தவர்களை பேட்டிக் கண்டால் அவர்களும் அதைத்தான் சொல்லுவார்கள். நான் ஈழத்தில் பிறந்து பாதிக்கப்பட்டு இருந்தால் நானும் அவ்வாறு சொல்லுவேன்.//
அதேதான், அவரவர் நியாயம் அவரவர்க்கு.
'துன்பியல் நிகழ்வில்' ராஜீவ்காந்தி மட்டும் மரணமடையவில்லை. சுற்றியிருந்த நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தார்கள். அவர்கள் குடும்பத்தினரிடம் கேட்டுப் பாருங்கள், என்ன சொல்வார்களென்று. அமைதிப் படையில் சென்றவர்கள் அத்தனை பேரும் நாடு திரும்பவில்லை, இறந்துபோன அப்படையினரின் குடும்பத்தாரிடம் கேட்டுப் பாருங்கள், என்ன சொல்கிறார்களென்று.
நன்றி!
ராஜா.

கோவி.கண்ணன் சொன்னது…

//Arumugam said...
//கொளத்தூர் மணி இராசிவுக்கு நடந்தது மரண தண்டனை என்கிறார். ஈழத்தில் அமைதிப்படையால் சீரழிந்தவர்களை பேட்டிக் கண்டால் அவர்களும் அதைத்தான் சொல்லுவார்கள். நான் ஈழத்தில் பிறந்து பாதிக்கப்பட்டு இருந்தால் நானும் அவ்வாறு சொல்லுவேன்.//
அதேதான், அவரவர் நியாயம் அவரவர்க்கு.
'துன்பியல் நிகழ்வில்' ராஜீவ்காந்தி மட்டும் மரணமடையவில்லை. சுற்றியிருந்த நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தார்கள். அவர்கள் குடும்பத்தினரிடம் கேட்டுப் பாருங்கள், என்ன சொல்வார்களென்று. அமைதிப் படையில் சென்றவர்கள் அத்தனை பேரும் நாடு திரும்பவில்லை, இறந்துபோன அப்படையினரின் குடும்பத்தாரிடம் கேட்டுப் பாருங்கள், என்ன சொல்கிறார்களென்று.
நன்றி!
ராஜா.
//

அமைதிப்படை அமைதிக்காக போய் இருந்தால் நாடு திரும்பி இருக்கும். அவர்கள் வீட்டுப் பெண்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தினால் அவர்கள் சும்மா இருப்பார்களா ?

பதிலுக்கு பதில் வன்முறையை சீக்கிய படுகொலையின் பிறகு ஞாயப்படுத்தும் செயலாக 'பெரிய ஆலமரம் விழும் போது அதிர்வு ஏற்படுவது இயல்பு' என்றெல்லாம் இராசீவ் பேசினார்.

தீப்பெட்டி சொன்னது…

:(

Raja சொன்னது…

ராஜீவ் கொல்லப்பட்டதால் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், சமூகநீதிக் காவலர் விபி சிங் ரிட்டையர்டு ஆனதும் தான் மிச்சம்! :-(//

அதைவிட ஜெயலலிதா தமிழ்நாட்டின் தவிர்க்க இயலா அரசியல் சக்தியாகிப் போனதுதான் மோசம்.

Raja சொன்னது…

பதிலுக்கு பதில் வன்முறையை சீக்கிய படுகொலையின் பிறகு ஞாயப்படுத்தும் செயலாக 'பெரிய ஆலமரம் விழும் போது அதிர்வு ஏற்படுவது இயல்பு' என்றெல்லாம் இராசீவ் பேசினார்.//

அப்ப பாதிக்கப்பட்டவர்கள் பழிக்குப்பழி வாங்கலாம் தவறில்லையென்கிறீர்கள்??

கோவி.கண்ணன் சொன்னது…

//Arumugam said...
பதிலுக்கு பதில் வன்முறையை சீக்கிய படுகொலையின் பிறகு ஞாயப்படுத்தும் செயலாக 'பெரிய ஆலமரம் விழும் போது அதிர்வு ஏற்படுவது இயல்பு' என்றெல்லாம் இராசீவ் பேசினார்.//

அப்ப பாதிக்கப்பட்டவர்கள் பழிக்குப்பழி வாங்கலாம் தவறில்லையென்கிறீர்கள்??
//

அதை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது, தற்பொழுது கொல்லப்பட்ட முப்பதாயிரம் அப்பாவி பொதுமக்களின் உறவினர்களாக எத்தனை தனுக்களும், சிவராசன்களும் தோன்றுவார்களோ ?

என்ன சொல்கிறீர்கள் ?

Raja சொன்னது…

தற்பொழுது கொல்லப்பட்ட முப்பதாயிரம் அப்பாவி பொதுமக்களின் உறவினர்களாக எத்தனை தனுக்களும், சிவராசன்களும் தோன்றுவார்களோ ?

என்ன சொல்கிறீர்கள் ?//


30000 நம்பர் உங்களுக்கு யார் கொடுத்தது?
எதுவாகினும், உங்களுடைய பதில்கள், நான் தமிழர் படுகொலையை ஆதரிப்பதுபோல் தவறான தோற்றத்தைக் கொடுக்கிறது. ஆகையினால் நான் கீழ்கண்ட விளக்கத்துடன் முடித்துக் கொள்கிறேன்.
ராஜீவ் படுகொலை, அதுவும் தமிழ்நாட்டில் வைத்து நிகழ்த்தப் பட்டது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எப்படி தமிழன் என்பதால் நம் உணர்வு துடிக்கிறதோ அதுபோல இந்தியன் என்ற உணர்வும் நமக்கு வேண்டும்.
நன்றி!
ராஜா.

கோவி.கண்ணன் சொன்னது…

//30000 நம்பர் உங்களுக்கு யார் கொடுத்தது?//

பொறுங்க, செஞ்சிலுவை அல்லது ஐநா சார்பில் இதைவிட மிகுதியான நம்பரே கொடுப்பார்கள். BBC சாட்டிலைட் படி மே 6 ல் இருந்து மே 10 வரை மிகப்பெரிய நிலப்பரப்பு திடலாக காட்சி அளிக்கும் படம் வெளி இடப்பட்டது.

எண்ணிக்கை வெளியே தெரிந்துவிடாமல் ஒத்திப் போடும் முயற்சியில் பிராபகரனை முடித்ததாக அறிவித்து போர் முடிந்ததாக தகவல் கசியவிட்டு மீடியாக்களின் கவனம் திருப்பப் பட்டிருக்கிறது

Raja சொன்னது…

பொறுங்க, செஞ்சிலுவை அல்லது ஐநா சார்பில் இதைவிட மிகுதியான நம்பரே கொடுப்பார்கள்.//

ரைட்டு சார். நன்றி!

கோவி.கண்ணன் சொன்னது…

//ராஜீவ் படுகொலை, அதுவும் தமிழ்நாட்டில் வைத்து நிகழ்த்தப் பட்டது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.//

நானும் ஏற்றுக் கொள்கிறேன் என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா ?

அதன் தொடர்பில் பலிக்கு பலியாக அப்பாவிதமிழர்களின் கொலையில் இந்திய அரசு ஈடுபட்டிருப்பதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்

//எப்படி தமிழன் என்பதால் நம் உணர்வு துடிக்கிறதோ அதுபோல இந்தியன் என்ற உணர்வும் நமக்கு வேண்டும்.
நன்றி!
ராஜா.//

தேசியம் பேச, இந்தியம் பேச செத்துப் போனவர்களை வைத்து அரசியல் செய்வதை விட, பக்கத்து மாநிலத்துடன் தண்ணீருக்கு மல்லுக் கட்டும் தமிழனாக முதலில் நினைத்துக் கொள்கிறேன்

Raja சொன்னது…

விவாதம் தொடர்வதில் தங்களுக்கு விருப்பம் என நினைக்கிறேன்.
சரி தொடர்வோம்!

//நானும் ஏற்றுக் கொள்கிறேன் என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறேனா ?

அதன் தொடர்பில் பலிக்கு பலியாக அப்பாவிதமிழர்களின் கொலையில் இந்திய அரசு ஈடுபட்டிருப்பதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்.//

இந்திய அரசோ, அதிகாரிகளோ அவ்வாறு சொல்லவில்லை. நீங்கள்தான் சொல்கிறீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்திய அரசோ, அதிகாரிகளோ அவ்வாறு சொல்லவில்லை. நீங்கள்தான் சொல்கிறீர்கள்.//

இந்திய வெளி உறவு அமைச்சரே இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை செய்ததை ஒப்புக் கொண்ட பிறகு உங்களுக்கு என்ன தயக்கம் ?

Raja சொன்னது…

அப்பாவிதமிழர்களின் கொலையில் இந்திய அரசு ஈடுபட்டிருப்பதைத்தான் குறிப்பிட்டு இருக்கிறேன்//

இதில் உங்கள் தொனி, இந்தியா ஆயுதம் கொடுத்து, இந்திய ராணுவம்தான் போர் நடத்துவது என்று சொல்வது போல் இருந்தது. அதற்குத்தான் எனது முந்தைய பதில்.

//இந்திய வெளி உறவு அமைச்சரே இலங்கைக்கு 'இராணுவ ரீதியான உதவி'களை செய்ததை ஒப்புக் கொண்ட பிறகு உங்களுக்கு என்ன தயக்கம் ?//

தலைவர் பிரபாகரனை உங்களுக்கும், எனக்கும்தான் (அதாவது தமிழர்களுக்கு) பிடிக்கும். காங்கிரஸுக்கோ, தற்போதுள்ள இந்திய அரசுக்கோ அல்ல. இந்திய அரசாங்கத்தைப் பொறுத்தவரை அவர் 'தேடப்படும் குற்றவாளி' (உடனே, என்னை தமிழ் துரோகி என தூற்ற வேண்டாம், இதுதான் அரசு நிலைப்பாடு என்பது வெளிப்படை). அதற்கான நிர்வாக ரீதியிலான உதவிகளை இந்திய அரசு செய்கிறது என்பதை ஒத்துக்கொள்வதில் எனக்கொன்றும் தயக்கமில்லை.
ஆனால் இந்திய அரசு தமிழர்களை படுகொலை செய்கிறது என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புரட்சிக்கவி சொன்னது…

இலங்கை, இந்தியாவிடமிருந்துதான், ஆயுதங்கள் வாங்க வேண்டும் என்றும், சீன பாகிஸ்தானிடமிருந்து வாங்க கூடாது என்றும், கே ஆர் நாராயணனே, உண்மையைப் போட்டுடைத்த போது, இன்னும் இந்தியா நிர்வாக ரீதியிலான உதவிகளைச் செய்கிறது என்று இன்னும் காதில் பூ சுத்தாதீர்கள்.

ராஜீவ், தகவல் தொழில்நுட்பத்திற்கு என்று ஒரு புடலங்காயும் பிடுங்கவில்லை.

கூலி குறைவாக இருக்குமே என்று மேற்கு நாடுகள் போட்ட பிச்சை மட்டுமே தகவ்ல் தொழில்நுட்பம்.

அறிவுடைநம்பி.

Ginger சொன்னது…

" கோவி.கண்ணன் said...
தன்னிச்சையாக சதாமை தூக்கிலிட முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கும் போது
.........."

என்ன உளரல். சத்தாமை இராக்கிய நீதிமன்றம் பல மாதங்கள் கேஸ் நடத்தி, பல நூற்றுக்கணக்கான சாட்சிகளையும் ஆவணங்களையும் காண்பித்து, இராக்கிய 5 நீதிபதிகளால் ஏகோபித்த தீர்மானமாக மரணதண்டனை வழங்கியது. அதற்கு ஆயிரக்கணக்கான இராக்கியர் தெருக்களில் ஆனந்த நடனம் ஆடினர்.
செய்திகளை படிக்காமல் தன்பாட்டுக்கு பேத்துவது சரியில்லை.

http://en.wikipedia.org/wiki/Trial_of_Saddam_Hussein

என்.இனியவன் சொன்னது…

//@Arumugam
இதில் உங்கள் தொனி, இந்தியா ஆயுதம் கொடுத்து, இந்திய ராணுவம்தான் போர் நடத்துவது என்று சொல்வது போல் இருந்தது. அதற்குத்தான் எனது முந்தைய பதில்.//

இவ்வளவு நாளும் எங்கு இருந்தீர்கள்.
அதே தான் நடந்தது.

எவ்வளவு கூறினாலும் விளங்கிக்கொள்ளமறுப்பவர்களுக்கு இனி என்ன சொல்வது?
ம்ம்ம்ம்

இந்தியாவால் 3000 இற்கு மேற்பட்ட ராணுவமும் அவர்களுக்குரிய மருத்துவமும் அனுப்பிவைக்கப்பட்டது.
அதுவும் மருத்துவம் காயப்பட்ட தமிழர்களுக்கு என்ற பெயரில்,
ஆனால் என்ன நடந்தது என்பது ஏற்கனவே தெரிந்த விடயம்.
ஆயுதம் பற்றி சொல்ல தேவை இல்லை.
சீனா, இந்தியா, பாகிஸ்தான் மூன்றும் சேர்ந்து கொடுத்தது.
தமிழரை கொல்வதற்குத்தான் மூவரும் ஒன்று சேர்ந்துள்ளார்கள்..
இனியும் இதைப்பற்றி வாதாடுவதில் பலன் இல்லை.
இனி மக்களுக்கு எப்படி உதவுவது என்பதை யோசிக்க வேண்டும்.


இங்கு பயனுள்ள விவாதம் நடைபெறுகிறது.
http://blog.tamilsasi.com/2009/05/ignore-rumours-about-prabhakaran.html

ஆ.ஞானசேகரன் சொன்னது…

ராஜிவ்காந்தியின் படுகொலை ஒரு வரலாற்று பிழை. அதைவிட இலங்கைக்கு அமைதிப்படையை இந்தியா அனுப்பியதும் மிகப்பெரிய பிழைதான்.. எதுவானாலும் தற்பொழுது நடக்கவேண்டிய நிவாரணம் பற்றி சிந்திப்பதுதான் முக்கியம்...

கோவி.கண்ணன் சொன்னது…

//Ginger 11:59 PM, May 21, 2009
" கோவி.கண்ணன் said...
தன்னிச்சையாக சதாமை தூக்கிலிட முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவிற்கு இருக்கும் போது
.........."

என்ன உளரல். சத்தாமை இராக்கிய நீதிமன்றம் பல மாதங்கள் கேஸ் நடத்தி, பல நூற்றுக்கணக்கான சாட்சிகளையும் ஆவணங்களையும் காண்பித்து, இராக்கிய 5 நீதிபதிகளால் ஏகோபித்த தீர்மானமாக மரணதண்டனை வழங்கியது. அதற்கு ஆயிரக்கணக்கான இராக்கியர் தெருக்களில் ஆனந்த நடனம் ஆடினர்.
செய்திகளை படிக்காமல் தன்பாட்டுக்கு பேத்துவது சரியில்லை.//

Ginger , அவ்வளவு அப்பாவியா நீங்கள். பொம்மை அரசுகள் என்று கேள்விப்பட்டதே இல்லையா ? தெருக்களில் நடனமாடியவர்கள் தானே ? யார் செத்தாலும் ஆடுவதற்கு எந்த நாட்டிலும் கூட்டம் உண்டு.

//http://en.wikipedia.org/wiki/Trial_of_Saddam_Hussein
//

விக்கிப் பீடியாவில் யார் வேண்டுமானாலும் குப்பைப் போடலாம் அதற்கு விக்கிப் பீடியா அனுமதிக்கிறது

Naresh Kumar சொன்னது…

//ராஜீவ் படுகொலை, அதுவும் தமிழ்நாட்டில் வைத்து நிகழ்த்தப் பட்டது ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எப்படி தமிழன் என்பதால் நம் உணர்வு துடிக்கிறதோ அதுபோல இந்தியன் என்ற உணர்வும் நமக்கு வேண்டும்//

தேசப்பற்று என்பது, நாடு என்ன செய்தாலும் சப்பைக்கட்டு கட்டுவது அல்ல!!!, இங்கு கேள்விக்குட்படுத்துவது தவறாகிப்போன சில நடவடிக்கைகளைத்தான்... அது ராஜிவின் கொலையாக இருந்தாலும் சரி, ஈழமக்களுக்கு ஏற்பட்ட அநீதியானாலும் சரி!!!

இப்பவே அமைதிப்படை ஒன்னுமே பண்ணலைங்கற ரேஞ்சுக்கு வரலாற்றை மாத்தி எழுத ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் கொஞ்சம் நாள் போனா அவ்ளோதான், ஈழப்போராட்டங்கிற ஒன்னே நடக்கலைன்னு சொன்னாலும் சொல்லுவாங்க...

நரேஷ்
www.nareshin.wordpress.com

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்