பின்பற்றுபவர்கள்

23 மே, 2009

30 ஆயிரம் புலிகளைக் கொன்றது இராணுவம் ?

புலிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்துவிட்டது என்று சொல்லிய இலங்கை இராணுவம், போர் பகுதியைப் பார்வையிட ஊடகங்களுக்கும், பொதுசேவை அமைப்புகளுக்கும், ஐநாவுக்குமே மறுப்பு தெரிவிப்பது ஏன் ?

கிட்டதட்ட 30 பொதுமக்கள் வரை இராசாயண குண்டு மூலம் கொன்றொழிக்கப்பட்டதாக தெரிகிறது, மிகப் பெரிய சர்வதேச போர் குற்றத்தில் இருந்து தப்பிக்க பிரபாகரனைக் கொன்றதாக நாடகம நடத்தப்பட்டுள்ளது.

இந்த சாவு எண்ணிக்கைத் தெரிந்துவிட்டால் உலகநாடுகளின் கண்டனங்களுக்கு ஆளாகவேண்டி இருக்கும்,

முகாம்களில் உள்ளவர்கள் உண்மையை வெளியே செல்லிவிடுவார்கள் என்கிற அச்சம்

30 ஆயிரம் உடல்களை அப்புறப்படுத்த கால அவகாசம் எடுத்துக் கொள்ளவேண்டும், அத்தனை உடல்களையும் புதைத்தால் என்றாவது ஒரு நாள் தோண்டி எடுக்கப்பட்டு உண்மைகள் வெளியே வரலாம் என்பதால் மொத்தமாக தடையங்கள் அனைத்தையும் அழிக்க குறுகிய கால அவகாசம் தேவைப்படும்.

ஆகிய காரணங்களே போர் பகுதிகளை பார்வையிட பாதுகாப்பு காரணங்களைக் காரணம் காட்டி தடை செய்திருக்கிறார்கள். துரோகி கருணா தைரியமாக அங்கு சென்று வர முடிகிறதென்றால் ஏனென்று கேட்க அங்கு நாதிஇல்லை, பாதுகாப்பு ஆபத்துகள் இல்லை என்று தானே பொருள்.

கொல்லப்பட்ட அனைவருக்கும் புலிகளின் ஆடைகளை மாட்டிவிடும் அளவுக்கு ஆடைகள் கையிருப்பு இருந்தால் 30 ஆயிரம் புலிகளை நாங்கள் போரில் கொன்றோம் என்று சொல்லி இருப்பார்கள்.

இராசீவ் காந்தி கொலைக்கு பலிவாங்கும் விதமாக சோனியா காந்தியின் உத்தரவின் பேரிலேயே இந்திய அரசு இலங்கை அரசின் துணை இராணூவம் போலவும், இந்திய நாட்டு பிரச்சனை போலவும் முனைப்புடன் செயல்பட்டதாக பல்வேறு தரப்பும் சொல்லப்படுவதில் உண்மை இல்லாமல் இருக்கவில்லை.

அமைதிப் படைகள் என்ற பெயரில் நடந்த கொடுமைகளைக் கண்டு புறப்பட்ட சிவராசனும், தனுவும் இந்தியாவில் ஊடுறுவி வெற்றிகரமாக ஒரு படுகொலை நடத்தி இருப்பதைப் பார்க்கும் போது, ஈழத்தமிழர்களின் பெரும்பான்மையினரின் கனவான தமிழ் ஈழக் கனவையும், 30 ஆயிரம் பொதுமக்களை அழித்த பிறகு, மீண்டும் வரலாறு திரும்பும் விதமாக எத்தனை சிவராசன்கள், தனுக்கள் வரப்போகிறார்களோ ?

பொம்மை அரசை ஏற்படுத்தி சதாமை தூக்கிலிட்டு ஈராக்கில் அமைதி திரும்புவதாக கூறிய அமெரிக்க இராணுவம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கேயே தான் இருக்கிறது, இருக்கும் நிலையிலும் ஈராக்கில் தற்கொலை தாக்குதல் நடக்காத நாளே இல்லை, அமெரிக்க இராணுவம் வெளி ஏறிவிட்டது என்று அறிந்தாலே மீண்டும் ஈராக்கில் இனக்கலவரம் பெரிதாகவே வெடிக்கும். எந்த ஒரு மூன்றாவது நாடும் தலையிட்டு ஒரு நாட்டிற்குள் அமைதியை ஏற்படுத்திவிடவே முடியாது, வரலாற்றில் இருந்து இந்தியாவும், எந்த நாடுகளும் பாடம் படிக்கவில்லை. விடுதலைப் புலிகளை அழிப்பதை வரவேற்கும் விதமாக இலங்கை அரசுக்கு ஆதரவாக கொண்ட இந்தியா, பின்னர் இலங்கைக்குள் தற்கொலை படை தாக்குதல் நடவாமல் இருக்க கொழும்பில் வாழும் அப்பாவி சிங்களன் உட்பட ஏனைய பொதுமக்களுக்கு எந்த விதமான பாதுகாப்பை கொடுக்கும் ?

பழிக்கு பழி என்று பாதிகப்பட்டவர்களின் உறவினர்களாக தன்னிச்சை குழுக்கள் தோன்றி இந்திய அரசியல்வாதிகளை குறிவைத்தால் இந்தியாவல் என்னேரமும் விழிப்பாக இருக்க முடியுமா ?

இலங்கைப் போரில் இந்திய தலையீடு கொள்ளிக்கட்டையை தலையில் சொறிந்து கொண்டதாகவே தெரிகிறது.

33 கருத்துகள்:

ILA (a) இளா சொன்னது…

இந்தியாவ மட்டும் ஈழத்தமிழர்கள் நம்புனாங்க, இருக்கிற ஒன்னு ரெண்டு உசுரை புடுங்கிறுவாங்க. இந்தியா 500 கோடி குடுக்குதாம்ல. எவன் திங்கப்போறானோ? நம்ம மக்களுக்கா போவப்போவுது?

யூர்கன் க்ருகியர் சொன்னது…

காங்கிரஸ் தலைவர்களுக்கு பாதுகாப்பு - செய்தி

Bumba சொன்னது…

இலங்கை போர் குற்றம் - இந்தியா நிராகரிப்பு (9x news)

Raja சொன்னது…

//அமைதிப் படைகள் என்ற பெயரில் நடந்த கொடுமைகளைக் கண்டு புறப்பட்ட சிவராசனும், தனுவும் இந்தியாவில் ஊடுறுவி வெற்றிகரமாக ஒரு படுகொலை நடத்தி இருப்பதைப் பார்க்கும் போது,//

Do you proud of this?

boopathy perumal சொன்னது…

"வடக்கு கொடுக்கிறது தெற்கு வாங்குகிறது" டயலாக் என்ன ஆச்சு

வடக்கு அடிக்கிறது,,, தெற்கு தேம்புகிறது (பம்முகிறது)

Raja சொன்னது…

//மீண்டும் வரலாறு திரும்பும் விதமாக எத்தனை சிவராசன்கள், தனுக்கள் வரப்போகிறார்களோ ? //

No issue for any number of Dhanu, etc.. as long as their target is not in India.

கோவி.கண்ணன் சொன்னது…

//Arumugam said...
//அமைதிப் படைகள் என்ற பெயரில் நடந்த கொடுமைகளைக் கண்டு புறப்பட்ட சிவராசனும், தனுவும் இந்தியாவில் ஊடுறுவி வெற்றிகரமாக ஒரு படுகொலை நடத்தி இருப்பதைப் பார்க்கும் போது,//

Do you proud of this?

11:47 AM, May 23, 2009
//

நான் தகவலாகத்தான் சொன்னேன். அதை அவர்களே தவறு, துன்பியல் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

நான் இந்திய தேசியத்திற்கு எதிரானவன் அல்ல, ஆனால் அதே காரணத்தினால் இந்தியா (அரசியல் கட்சியில் ஆட்சியாளர்கள்) செய்வதையெல்லாம் சரி என்று சொல்லும் தினமலர் வாசகனும் அல்ல.

நாகூரான் சொன்னது…

//அமைதிப் படைகள் என்ற பெயரில் நடந்த கொடுமைகளைக் கண்டு புறப்பட்ட சிவராசனும், தனுவும் இந்தியாவில் ஊடுறுவி வெற்றிகரமாக ஒரு படுகொலை நடத்தி இருப்பதைப் பார்க்கும் போது,//

வணக்கம் ஐயா,
மேலே உள்ள 'வெற்றிகரமான' என்ற வார்த்தை கண்டனத்திற்கு உரியது.
எனது கண்டனங்கள்!
ராசீவ் எடுத்தது ஒரு அரசியல் முடிவு. அதில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக தண்டிப்பீர்களா? அப்படி பார்த்தால் மாற்று கருத்துகள் உடைய எல்லா தமிழ் தலைவர்களையும் கொலை செய்த பிரபாகரனுக்கு என்ன தண்டனை? ஆயுதம் தூக்கி போராடினால் இழப்புகள் அதிகமாக இருக்கும், அவர்களுக்கும், அவர்களை ஆதரித்த மக்களுக்கும்! ஏற்று கொள்ள வேண்டும்! ஆயுதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று வந்து விட்டு இழப்புகளுக்கு அஞ்சுவதா? எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஈழ தமிழன் கண்டித்திருக்க வேண்டாமா?
தவறான பாதைக்கு போனதல்லாமல், அந்த மக்களுக்கு தன்னை ஆதரிப்பதை தவிர வேறு வழி இல்லாமல் வைத்த பிரபாகரனே இவ்வளவு குழந்தைகள், பெண்கள் எல்லோருடைய சாவுக்கும் காரணம்! பொதுமக்கள் பிணை வைப்பவன் (குழந்தைகள், பெண்கள்)மணிதனா? நல்ல தலைவனா? நானாக இருந்திருந்தால் அந்த நிலை வந்ததுமே எங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று போரை நிறுத்திவிட்டு, என் நெற்றியல் துப்பாக்கியை ஏந்தியிருப்பேன்! அரசியல் ரீதியாக 30 வருடங்கள் போராடியிருந்தால் இந்நேரம் விடிந்திருக்கும்!

Raja சொன்னது…

//ராசீவ் எடுத்தது ஒரு அரசியல் முடிவு. அதில் தவறுகள் நடந்திருக்கலாம். அதற்காக தண்டிப்பீர்களா? அப்படி பார்த்தால் மாற்று கருத்துகள் உடைய எல்லா தமிழ் தலைவர்களையும் கொலை செய்த பிரபாகரனுக்கு என்ன தண்டனை?//

மிக நியாயமான கேள்வி. நான் இதை கேட்க சங்கடப்பட்டேன்(/பயப்பட்டேன்). நீங்கள் கேட்டு விட்டீர்கள், நன்றி.
ராஜா.

கோவி.கண்ணன் சொன்னது…

//மிக நியாயமான கேள்வி. நான் இதை கேட்க சங்கடப்பட்டேன்(/பயப்பட்டேன்). நீங்கள் கேட்டு விட்டீர்கள், நன்றி.
ராஜா.//

யாருடைய தலைமையில் அவர்களுக்கு பலத்த உயிரிழப்பு ஏற்பட்டதோ அதற்கு மரண தண்டனைக் கொடுத்ததாகத் தான் கொளத்தூர் மணி உட்பட்டோர் சொல்லுகின்றனர்.

பேரழிவு கெமிக்கல் வெபன்ஸ் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் ஈரக்கில் புகுந்து ஆட்சியை அகற்றி,
சதாம் உசேனை தூக்கிலிட்டதற்கு ஜார்ஜ் புஷ்சை தண்டிக்கவேண்டும் என்கிறவர்களுக்கு உங்களின் பதில் என்ன ?

நாகூரான் சொன்னது…

pls do allow the wordpress bloggers to comment on your post, now your settings allows bloggers only!
thanks

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆயுதம் தூக்கி போராடினால் இழப்புகள் அதிகமாக இருக்கும், அவர்களுக்கும், அவர்களை ஆதரித்த மக்களுக்கும்! ஏற்று கொள்ள வேண்டும்! ஆயுதம் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று வந்து விட்டு இழப்புகளுக்கு அஞ்சுவதா? எல்லை தாண்டிய பயங்கரவாத்தை ஈழ தமிழன் கண்டித்திருக்க வேண்டாமா?
//

எது பயங்கரவாதம் என்பதில் பல கருத்துக்கள் இருக்கிறது நண்பரே, அமைதி வழியில் பிரிந்து செல்கிறோம், அல்லது போராடுகிறோம் என்கிற மக்களை ஒடுக்குவதற்கு இராணுவத்தைத் தான் பயன்படுத்துகிறது அரசுகள். அரசுகள் செய்வது சரியாகவும், அதுவே தனிப்பட்ட குழுக்கள் செய்தால் தவறாகவும் தெரிவது ஏன் ?

இந்திய விடுதலை பெற்றதில் அமைதி வழியில் போராடிய காந்திக்கு இருக்கும் அதே பங்கு ஆயுதம் ஏந்தி போராடிய நேதாஜிக்கு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?

நேதாஜி ஒரு தீவிரவாதி அவரை இந்திய மக்கள் இன்றும் வெறுக்கிறார்கள் என்று இந்திய அரசை அறிவிக்க சொல்ல உங்களால் முடியுமா ?

Raja சொன்னது…

//யாருடைய தலைமையில் அவர்களுக்கு பலத்த உயிரிழப்பு ஏற்பட்டதோ அதற்கு மரண தண்டனைக் கொடுத்ததாகத் தான் கொளத்தூர் மணி உட்பட்டோர் சொல்லுகின்றனர்.//

கொளத்தூர் மணியே சொல்லிட்டாரா?? அப்ப சரியாகத்தான் இருக்கும்.
என்னா ஸார்..... 'கொளத்தூர் மணி' ராஜீவுக்கு சமமானவரா? அல்லது பிரபாகரனுக்குத்தான் சமமானவரா? அவர் ஏதாவது சொல்லிட்டுப் போராரு, நீங்க என்ன சொல்றீங்க?

கோவி.கண்ணன் சொன்னது…

//பொதுமக்கள் பிணை வைப்பவன் (குழந்தைகள், பெண்கள்)மணிதனா? நல்ல தலைவனா? நானாக இருந்திருந்தால் அந்த நிலை வந்ததுமே எங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று போரை நிறுத்திவிட்டு, என் நெற்றியல் துப்பாக்கியை ஏந்தியிருப்பேன்! அரசியல் ரீதியாக 30 வருடங்கள் போராடியிருந்தால் இந்நேரம் விடிந்திருக்கும்!
//

"பொதுமக்களை பிணை வைத்தான் "என்று அங்கு முகாமில் அடைபட்டுள்ள தற்பொழுது சிங்கள இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களை சுதந்திரமாக சொல்ல வைக்க முடியுமே, ஏன் முடியவில்லை ?

அவர்களைப் பார்க்கக் கூட வெளியே உள்ளவரகளை அனுமதிப்பது இல்லை என்பதே உண்மை.

போர் நடந்து கொண்டிருக்கும் போது பிரபாகரன் சொன்னான், மிரட்டினான் என்பதற்காக வன்னியை விட்டுவிட்டு முல்லைத் தீவுக்கு சென்றார்களா மக்கள் ? பொதுமக்களுக்கு ஒரு தலைவன் எதிராக நடந்து கொண்டால் அவனை அழிப்பதற்கு எதிரி இராணுவத்தின் தேவையே இருக்காது, அதை நொடிப் பொழுதில் செய்துவிடுவார்கள் மக்கள், ஏனெனின்றால் அவர்களுக்கு தலைவனின் அன்றாட நடவெடிக்கைகள் அனைத்தும் தெரியும். சும்மா தினமலர் வகையறா ஊடகங்கள் எழுதிவருவதை இங்கே வந்து கொட்டாதீர்கள்

கோவி.கண்ணன் சொன்னது…

//கொளத்தூர் மணியே சொல்லிட்டாரா?? அப்ப சரியாகத்தான் இருக்கும்.
என்னா ஸார்..... 'கொளத்தூர் மணி' ராஜீவுக்கு சமமானவரா? அல்லது பிரபாகரனுக்குத்தான் சமமானவரா? அவர் ஏதாவது சொல்லிட்டுப் போராரு, நீங்க என்ன சொல்றீங்க?

2:27 PM, May 23, 2009
//

இதில் நான் சொல்ல என்ன இருக்கு ? பாதிக்கப்பட்டர்கள் சொல்லும் கருத்தைத்தான் இங்கே எழுதிவருகிறேன். நான் ஈழத்தமிழனாகப் பிறந்து எனக்கும் ஒற்றைக் கண் சிவராசனுக்குப் போனது போல் ஒரு கண் போய் இருந்தால் கொளத்தூர் மணி சொல்வதைத் தான் நானும் சொல்வேன். உங்களுக்கும் அதே போல் காலோ கையோ போய் இருந்தால் நீங்களும் அதையே தான் சொல்லுவீர்கள்

நாகூரான் சொன்னது…

// பேரழிவு கெமிக்கல் வெபன்ஸ் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் ஈரக்கில் புகுந்து ஆட்சியை அகற்றி,
சதாம் உசேனை தூக்கிலிட்டதற்கு ஜார்ஜ் புஷ்சை தண்டிக்கவேண்டும் என்கிறவர்களுக்கு உங்களின் பதில் என்ன ?//

இந்த 21ம் நூற்றாண்டில் போர் வெறி பிடித்திருக்கும் ஒரே நாடு அமெரிக்கா! இந்த நூற்றாண்டில் வேறு யாரும் போர் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்! அமெரிக்காவே அப்படித்தான் இயங்கி கொண்டிருக்கிறது. நாட்டாமை நல்ல நாட்டாண்மையாக இருந்தால் ஊருக்கு நல்லது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், உலகமே வேடிக்கை மட்டுமே பார்த்தது ஈராக் விசயத்தில்! அவர்களை தண்டிக்க வேண்டும் முடிந்தால்! என் கருத்து இது என்று தெளிவாக முடிவெடுத்து செயல்பட்டவர்கள் பரவாயில்லை உ.ம் சோனியா, ஜெயலலிதா! இந்த வீல் சேர் வில்லனின் (பட்டம் உதவி யாரோ ஒரு பதிவர்!) துரோகத்தை என்ன பண்ணுவது?

Raja சொன்னது…

//இதில் நான் சொல்ல என்ன இருக்கு ? பாதிக்கப்பட்டர்கள் சொல்லும் கருத்தைத்தான் இங்கே எழுதிவருகிறேன். நான் ஈழத்தமிழனாகப் பிறந்து எனக்கும் ஒற்றைக் கண் சிவராசனுக்குப் போனது போல் ஒரு கண் போய் இருந்தால் கொளத்தூர் மணி சொல்வதைத் தான் நானும் சொல்வேன்.//

கொளத்தூர் மணி எத்தரப்பிலும் பாதிக்கப்பட்டவரல்ல. அது சார்ந்த கருத்தில்தான் நான் சொல்லியிருந்தேன்.

//எனக்கும் ஒற்றைக் கண் சிவராசனுக்குப் போனது போல்//

இது தேவையில்லை என்பது என் கருத்து.

//உங்களுக்கும் அதே போல் காலோ கையோ போய் இருந்தால் நீங்களும் அதையே தான் சொல்லுவீர்கள்//

கண்டனத்துக்குரியது!

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
////உங்களுக்கும் அதே போல் காலோ கையோ போய் இருந்தால் நீங்களும் அதையே தான் சொல்லுவீர்கள்//

கண்டனத்துக்குரியது!//

பேச்சுக்கு சொன்னதுக்கே உங்களுக்கு கோவம் பொங்குது, நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை என்றால் உயிர், உடமை, உறவுகளை இழந்து நிற்பவர்கள் ஆயுதம் தூக்குவதிலும், பழிக்கு பழிவாங்க நினைப்பதிலும் தவறு என்ன ?

நாகூரான் சொன்னது…

// போர் நடந்து கொண்டிருக்கும் போது பிரபாகரன் சொன்னான், மிரட்டினான் என்பதற்காக வன்னியை விட்டுவிட்டு முல்லைத் தீவுக்கு சென்றார்களா மக்கள் ? பொதுமக்களுக்கு ஒரு தலைவன் எதிராக நடந்து கொண்டால் அவனை அழிப்பதற்கு எதிரி இராணுவத்தின் தேவையே இருக்காது, அதை நொடிப் பொழுதில் செய்துவிடுவார்கள் மக்கள், ஏனெனின்றால் அவர்களுக்கு தலைவனின் அன்றாட நடவெடிக்கைகள் அனைத்தும் தெரியும். சும்மா தினமலர் வகையறா ஊடகங்கள் எழுதிவருவதை இங்கே வந்து கொட்டாதீர்கள்//

ஐயா, தினமலர் மேல் உங்கள் வெறுப்புக்கு என்னை பொறுப்பாக்காதீர்கள்! எனது வீட்டில் குடியிருக்கும் 2 இலங்கை தமிழர்களிடம் தினமும் பேசி கொண்டிருக்கிறேன், மக்களை எந்த நேரத்திலும் வெளியேற அவர்கள் அனுமதித்து கிடையாதாம்! உறுதியான தகவல்!
hi, r u at home? or in pasir ris beach? கிளம்புற நேரமாயிருக்குமேன்னு நினைத்தேன், வரலாமான்னு பார்க்கிறேன், காரசாரமாக இருக்கும்தானே?
என்ன நான் ஒரு குடிகாரன், குடிச்சுகினே கலந்துக்க அனுமதி உண்டா? இல்ல உத்தம தமழ் பதிவர்களுக்கு மட்டுமா?
நன்றி, wordpress மேட்டருக்கு!

கோவி.கண்ணன் சொன்னது…

//கொளத்தூர் மணி எத்தரப்பிலும் பாதிக்கப்பட்டவரல்ல. அது சார்ந்த கருத்தில்தான் நான் சொல்லியிருந்தேன். //

அவர் பாதிக்கப்படவில்லை, ஆனால் அவர்களுக்காக பேசுவதில் என்ன தவறு ? யாருடைய சார்புக்காக இந்த போரில் இந்தியா தலையிட்டது ?

ஒரு இந்தியன் உதைவாங்கும் போது நீங்கள் பாதிக்கப்படவில்லை என்றால் பேசாமல் செல்வீர்களா ?

உங்களுக்கு முன்பே ஒருவர் அடிபட்டு கிடந்தாலும் அப்படித்தான் நினைப்பீர்களா ?

Raja சொன்னது…

//கோவி.கண்ணன் said...
////உங்களுக்கும் அதே போல் காலோ கையோ போய் இருந்தால் நீங்களும் அதையே தான் சொல்லுவீர்கள்//

கண்டனத்துக்குரியது!//

பேச்சுக்கு சொன்னதுக்கே உங்களுக்கு கோவம் பொங்குது, நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை என்றால் உயிர், உடமை, உறவுகளை இழந்து நிற்பவர்கள் ஆயுதம் தூக்குவதிலும், பழிக்கு பழிவாங்க நினைப்பதிலும் தவறு என்ன?//

எனக்கு ஒன்னும் கோவம் பொங்கல ஸார்.
விவாதத்தில் Personal Touch சேக்க வேணாம்னு நினைச்சேன், வேறொண்ணுமில்லை.
ராஜீவைக் கொன்ன மாதிரி, உங்கள் குடும்பத்தில் ஒருவரை கொன்றிருந்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீர்கள் என்று கேட்டால், உங்களுக்கு கோவம் பொங்குமா ஸார்?

மன்னிக்கவும், நீங்கள் கேட்டது தவறில்லையென்றால், நான் கேட்டதிலும் தவறில்லை.

நாகூரான் சொன்னது…

// பேச்சுக்கு சொன்னதுக்கே உங்களுக்கு கோவம் பொங்குது, நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை என்றால் உயிர், உடமை, உறவுகளை இழந்து நிற்பவர்கள் ஆயுதம் தூக்குவதிலும், பழிக்கு பழிவாங்க நினைப்பதிலும் தவறு என்ன ? //

ஒரு தனிமனிதன் ராசீவை பழிவாங்குவது வேறு. அவனை மட்டுமே அது பாதிக்கும். ஒரு நாட்டின் தமிழினத்திற்கே தலைவனாக இருக்கும் ஒருவன் அரசியல் சாதக பாதகங்களை அலசாமல் சிறுபிள்ளைதனமாக நடந்து கொண்டதன் விளைவு, ஈழபோரின் முடிவு!
பழிக்கு பழி வாங்குவதில் என்ன தவறா.....?!!!!!!

Sanjai Gandhi சொன்னது…

//கிட்டதட்ட 30 பொதுமக்கள் வரை இராசாயண குண்டு மூலம் கொன்றொழிக்கப்பட்டதாக தெரிகிறது, //

சிங்கள அரசின் கைக்கூலி கோவி கண்ணன் ஒழிக. 30 பேரை தான் சிங்கள ராணுவம் ரசாயன குண்டு மூலம் கொன்றதா? என்ன ஒரு விஷமப் பிரச்சாரம்?. உங்களால் எப்போதுமே உண்மையை எழுத முடியாதா கோவியாரே?

Sanjai Gandhi சொன்னது…

கோவியாரின் ஆசைப் படி இந்திய மண்ணில் நடக்கப் போகும் வெற்றிகரமான படுகொலைகளைக் காண காத்திருப்போம். :)

அப்படியே பெயர் பட்டியலையும் சொல்லிட்டிங்கன்னா வெற்றிகரமான படுகொலைகள் செய்யப் போகிறவர்களுக்கு சவுகரியமாக இருக்குமே கோவியாரே.. :))

Sanjai Gandhi சொன்னது…

//நேதாஜிக்கு இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா ?//

இதில் எதற்கு நேதாஜியை இழுக்கிறீர்கள். நேதாஜி, மாற்றுக் கருத்து கொண்ட எந்த தலைவரை கொன்றார்? எந்த மக்களை பயமுறுத்தி அடிமைகளாக வைத்திருந்தார். எத்தனை சிறுவர்களை ஆயுதம் ஏந்த வைத்தார்? எத்தனை மனித வெடிகுண்டுகளை உறுவாக்கினார்?

நேதாஜி ஆயுதம் தாங்கிப் போராடியிருந்தாலும் அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து செல்லவும் இந்தியாவில் தலைவர்கள் இருந்தார்கள். இந்த 2 வகைப் போராட்டமும் தான் இந்திய விடுதலைக்குக் காரணம். ஆனால் இலங்கையில் இப்படியா விடுதலைப் போர் நடக்கிறது? ஏன் பிரபாகரனைப் பற்றிப் பேசும் போது நேதாஜியை ஒப்பிட்டு அவரை அசிங்கப் படுத்துகிறீர்கள்?

Sanjai Gandhi சொன்னது…

//யாருடைய தலைமையில் அவர்களுக்கு பலத்த உயிரிழப்பு ஏற்பட்டதோ அதற்கு மரண தண்டனைக் கொடுத்ததாகத் தான் கொளத்தூர் மணி உட்பட்டோர் சொல்லுகின்றனர்//

உங்க கிட்ட இருக்கிற கெட்ட பழக்கமெ இதான் கோவியாரே. கருத்து சொல்றதென்னவோ நீங்க தான். அதன் அடிப்படையில் கேள்வி கேட்டா கொளத்தூர் மணி சொன்னாக, சன் டிவியில திருமாவள்வன் சொன்னாக விடும்மா மின்னல்னு எஸ் ஆய்டறிங்க. தெரியாமக் கேட்கிறேன். இவர்களென்ன ஈழத் தமிழர்களா இல்லை விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களா? இவர்களின் கருத்தை ஏன் ஈழத்தமிழர் கருத்து என்பது போல் சித்தரிக்கிறீர்கள்? பதநாபன் சொன்னார், நடேசன் சொன்னார் ,ஆண்டன் பால சிங்கம் சொனனார் அல்லது இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள் சொன்னார்கள் என்று சொல்லுங்கள். ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தின் பேசும் இவர்கலெல்லாம் சொன்னால் அது அதிகாரப் பூர்வமானதா? ஏன் இதர்கு எதிரான கருத்து கொண்டவர்கள் சொன்னால் மட்டும் ஏற்றுக் கொள்வதில்லை? அவர்களை ஏன் மெற்கோல் காட்டுவதில்லை.?

Samuel | சாமுவேல் சொன்னது…

/////இராசீவ் காந்தி கொலைக்கு பலிவாங்கும் விதமாக சோனியா காந்தியின் உத்தரவின் பேரிலேயே இந்திய அரசு இலங்கை அரசின் துணை இராணூவம் போலவும், இந்திய நாட்டு பிரச்சனை போலவும் முனைப்புடன் செயல்பட்டதாக பல்வேறு தரப்பும் சொல்லப்படுவதில் உண்மை இல்லாமல் இருக்கவில்லை./////

கொஞ்சம் உனர்ச்சி வசப்படாமல யோசிச்சு பார்க்கவும், நீங்க எழுதினத படிச்சா, இந்திய ராணுவமே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரி எழுதிருக்கீங்க, இதை நம்ப தயாராக இல்லை.

ராஜீவ் கொலைக்கு பலி வாங்கனும்னு காங்கிரஸ் ஆட்சி நினைசிருந்தா, தமிழ்நாட்டில் உள்ள LTTE ஆதரவளர்களை ஏன் இவ்வளவு நாள் விட்டு வைத்திருக்கவேண்டும், இங்கு LTTE ஆதரவு தரும் தலைவர்களுக்கு இவ்வளவு வருடத்தில் எந்த ஒரு பிரச்சினையும் வரல்லையே ? வை.கோ உள்ள தூக்கி வச்சாங்க ஒன்றறை வருஷம், யாரு வச்சா ?நளினி தூக்கு தண்டனை மன்னிப்பு யார் கொடுத்தா , ஏன் கொடுக்கணும் ?

இந்தியா அண்டை நாட்டில் அமைதி எதிர்பார்ப்பது உண்மை தான், பிரபாகரனை ஒரு தீவிரவாதினு சொல்லியாச்சு, அப்போ யாரும் குரல் ஒன்னும் குடுத்த மாதிரி தெரியலை, இப்ப மட்டும் எப்படி சார் ஒரு நாடு ஒரு திவிரவாதிக்கு ஆதரவா செயல்படும் ?

கோவி.கண்ணன் சொன்னது…

சாமி & சஞ்செய்

உங்க கிடிக்கிபிடியான கேள்வியப்படிச்சுட்டு, பதில் சொல்லத் தெரியாமல் திணறுவதற்கு பதில் அன்னை சோனியாவின் காங்கிரசு கட்சியில் சேர்ந்து பணியாற்றலாம் என்று இருக்கிறேன்.

ஸ்ஸப்பா கண்ணைக் கட்டுதே,

தூங்குறவன் மாதிரி நடிக்கிறவனைக் கூட எழுப்பலாம், கோமாவில் இருப்பவர்களையும், செத்தவர்களையும் எழுப்பவே முடியாதாம்.

Sanjai Gandhi சொன்னது…

மிஸ்டர் டகால்ட்டி பாண்டி, திரும்ப திரும்ப ஒரே மேட்டரை எழுதத் தெரியுது இல்ல. கேள்வி கேட்டா பதிலும் சொல்லனும்.. தூங்குறோம்.. நடிக்கிறோம்னு டகால்டி விட கூடாது.

//அன்னை சோனியாவின் காங்கிரசு கட்சியில் சேர்ந்து பணியாற்றலாம் என்று இருக்கிறேன்.//

தயவு செய்து இந்த அவமானம் மட்டும் காங்கிரசுக்கு வேண்டாம்.

//தூங்குறவன் மாதிரி நடிக்கிறவனைக் கூட எழுப்பலாம், கோமாவில் இருப்பவர்களையும், செத்தவர்களையும் எழுப்பவே முடியாதாம். //

இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ, உங்களுகு கன கச்சிதமா பொருந்தும். :)

Samuel | சாமுவேல் சொன்னது…

மிஸ்டர் கோவி கண்ணன் ...
கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியவில்லை !
இதில் இவர் பதிவு தூங்குரவனை எழுப்புதுன்ற தற்புகழ்ச்சி வேறு ...

கோவி.கண்ணன் சொன்னது…

//கொஞ்சம் உனர்ச்சி வசப்படாமல யோசிச்சு பார்க்கவும், நீங்க எழுதினத படிச்சா, இந்திய ராணுவமே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரி எழுதிருக்கீங்க, இதை நம்ப தயாராக இல்லை.//

நம்புங்கள் என்று நான் எதையும் எழுதல. இலங்கை இராணுவதற்கு பெங்களூர் உட்பட பல இடங்களில் பயற்சிக் கொடுத்தது செய்தித்தாள்களிலும் வந்திருக்கிறது, வன்னி, முல்லைத் தீவு நிலங்களில் போராளிகளின், பொதுமக்கள் நடமாட்டத்தையும் இந்திய இராணுவ ரேடார்கள் தான் 'காட்டிக்' கொடுத்ததாக வெளி உறவு துறை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆதரம் ? கூகுளில் தேடினால் கிடைக்கும். கொலையாளிகள் எப்பொழுது ஆதரமெல்லாம் வைத்துக் கொண்டு கொலை செய்வார்கள் ? இருந்தாலும் உண்மைகள் என்றாவது வெளிப்படுவது உண்மைதானே.


//ராஜீவ் கொலைக்கு பலி வாங்கனும்னு காங்கிரஸ் ஆட்சி நினைசிருந்தா, தமிழ்நாட்டில் உள்ள LTTE ஆதரவளர்களை ஏன் இவ்வளவு நாள் விட்டு வைத்திருக்கவேண்டும், இங்கு LTTE ஆதரவு தரும் தலைவர்களுக்கு இவ்வளவு வருடத்தில் எந்த ஒரு பிரச்சினையும் வரல்லையே ? வை.கோ உள்ள தூக்கி வச்சாங்க ஒன்றறை வருஷம், யாரு வச்சா ?நளினி தூக்கு தண்டனை மன்னிப்பு யார் கொடுத்தா , ஏன் கொடுக்கணும் ? //

இந்திய அரசியல் சட்டம் இத்தாலியில் இருந்து எழுதப்பட்டால், ஒப்புதல் அளிக்கப்பட்டால் நீங்கள் செல்வது போல் செய்து பார்த்தார்கள், அப்படியும் அடக்குமுறையைக் காட்ட சீமான், அமீர், நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோரை உள்ளே வைத்துப் பார்த்தனர், நீதிமன்றத்தின் நெற்றியடித்தீர்பால் வெளியே வந்தார்கள். வெளிப்படையாக நடவெடிக்கை எடுத்திருந்தால் தான் நம்புவேன் என்றீர்கள் என்றால் ஆட்சியாளர்களை குறிப்பாக சோனியா அம்மையாரை ஒரு முட்டாளாகவே நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றே பொருள். ஊழல் பேர்வழிகள் மேடையில் நல்லவர்கள் போல் தானே முழங்குகிறார்கள், என்றாலும் ஒரு நாள் உண்மை வெளியே வந்துவிடுகிறது அல்லவா, அது போல் தான். இவ்வளவு அப்பாவித்தனமான கேள்வி என்பதால் தான் பதில் சொல்லி என் நேரத்தை வீன் செய்ய விரும்பவில்லை. இருந்தாலும் பின்னூட்டியதற்கு மிக்க நன்றி !

//இந்தியா அண்டை நாட்டில் அமைதி எதிர்பார்ப்பது உண்மை தான், பிரபாகரனை ஒரு தீவிரவாதினு சொல்லியாச்சு, அப்போ யாரும் குரல் ஒன்னும் குடுத்த மாதிரி தெரியலை, இப்ப மட்டும் எப்படி சார் ஒரு நாடு ஒரு திவிரவாதிக்கு ஆதரவா செயல்படும் ?//

அப்படி என்றால் காஷ்மீரில் 'அமைதி' திரும்ப முயற்சிக்கும் பாகிஸ்தானை கட்டியணைத்து அவர்களை எல்லைகளை திறந்துவிட வேண்டியது தானே ?

Samuel | சாமுவேல் சொன்னது…

நம்புங்கள் என்று நான் எதையும் எழுதல. இலங்கை இராணுவதற்கு பெங்களூர் உட்பட பல இடங்களில் பயற்சிக் கொடுத்தது செய்தித்தாள்களிலும் வந்திருக்கிறது, வன்னி, முல்லைத் தீவு நிலங்களில் போராளிகளின், பொதுமக்கள் நடமாட்டத்தையும் இந்திய இராணுவ ரேடார்கள் தான் 'காட்டிக்' கொடுத்ததாக வெளி உறவு துறை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். ஆதரம் ? கூகுளில் தேடினால் கிடைக்கும். கொலையாளிகள் எப்பொழுது ஆதரமெல்லாம் வைத்துக் கொண்டு கொலை செய்வார்கள் ? இருந்தாலும் உண்மைகள் என்றாவது வெளிப்படுவது உண்மைதானே.


//--செய்திகளில் வேற விஷயம் குட கேள்வி பட்டேன் , அதாவது ஸ்ரீலங்கா ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களை விட , LTTE இனால் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்று ........
அப்புறம் இன்னொன்று ராடர் கருவி பத்தி கொஞ்சம் படிச்சிட்டு எழுதுங்க, அது பொதுமக்கள் நடமாட்டத்தை எல்லாம் சொல்லாது ..அப்படி ஒரு ராடர் நீங்க தான் கண்டுபுடிக்கணும் .....//


//ராஜீவ் கொலைக்கு பலி வாங்கனும்னு காங்கிரஸ் ஆட்சி நினைசிருந்தா, தமிழ்நாட்டில் உள்ள LTTE ஆதரவளர்களை ஏன் இவ்வளவு நாள் விட்டு வைத்திருக்கவேண்டும், இங்கு LTTE ஆதரவு தரும் தலைவர்களுக்கு இவ்வளவு வருடத்தில் எந்த ? //

இந்திய அரசியல் சட்டம் இத்தாலியில் இருந்து எழுதப்பட்டால், ஒப்புதல் அளிக்கப்பட்டால் நீங்கள் செல்வது போல் செய்து பார்த்தார்கள், அப்படியும் அடக்குமுறையைக் காட்ட சீமான், அமீர், நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோரை உள்ளே வைத்துப் பார்த்தனர், நீதிமன்றத்தின் நெற்றியடித்தீர்பால் வெளியே வந்தார்கள். வெளிப்படையாக நடவெடிக்கை எடுத்திருந்தால் தான் நம்புவேன் என்றீர்கள் என்றால் ஆட்சியாளர்களை குறிப்பாக சோனியா அம்மையாரை ஒரு முட்டாளாகவே நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்றே பொருள். ஊழல் பேர்வழிகள் மேடையில் நல்லவர்கள் போல் தானே முழங்குகிறார்கள், என்றாலும் ஒரு நாள் உண்மை வெளியே வந்துவிடுகிறது அல்லவா, அது போல் தான். இவ்வளவு அப்பாவித்தனமான கேள்வி என்பதால் தான் பதில் சொல்லி என் நேரத்தை வீன் செய்ய விரும்பவில்லை. இருந்தாலும் பின்னூட்டியதற்கு மிக்க நன்றி !

.../// சீமான் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் போல இருக்கு. நல்ல வேலை அத்வானி ப்ரிதமரா இல்லை , அப்படி இருந்திருந்தா....பிரபாகரன் ..இலங்கை ..ராமர் பாலம் ..ராமர்...என்று எப்படியாவது ஒரு முடிச்சு போட்டுறிப்பீங்க போல இருக்கு ...//////

//இந்தியா அண்டை நாட்டில் அமைதி
..
அப்படி என்றால் காஷ்மீரில் 'அமைதி' திரும்ப முயற்சிக்கும் பாகிஸ்தானை கட்டியணைத்து அவர்களை எல்லைகளை திறந்துவிட வேண்டியது தானே ?

//...நான் கேட்ட கேள்விக்கு மாற்று கேள்வி ..சரி , ஆனால் என்ன கேட்கிறீர்கள் என்று சுத்தமா புரியலை .காஷ்மீர் அண்டை நாடு ..இல்லை சார் ..அது நம்ம நாடு , அதில் அமைதி கிடைக்க, பாகிஸ்தான்கு குடுக்கணும்னு சொல்றீங்களா ?..//

பெயரில்லா சொன்னது…

i love sammy and sanjay!

கோவி ஐயா, தங்களின் நிலை பரிதாபமானது, உணரச்சிவசபட்ட நிலையில் இருப்பது புரிகிறது. நாம் எல்லோரும் தமிழர்கள், மாற்று கருத்துக்கள் அறிவுப்பூர்வமாக சிந்திக்கும்போது வரும். உணரச்சிவசபட்ட நிலையில் இருப்பவரகள் அறிவுப்பூர்வமான கருத்துகளை நிராகரிக்கவே செய்வார்கள். ஈழ தமிழர்களுக்கு தேவை நமது அனுதாபம் இல்லை, அவர்களுக்கு உரிமையை பெற்று தருவதாகும், அதற்கு அவர்களுக்கு விழிப்பூட்ட வேண்டும், அரசியல் பண்ண கற்று கொடுக்க வேண்டும், புலம்பல், கண்ணீர், அழுகை, ஆத்திரம் அனுதாபம் இதெல்லாம் சும்மா, அவர்களுக்கு தேவை இல்லை.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்