பின்பற்றுபவர்கள்

15 மே, 2009

மதமல்ல மார்க்கம் !

மதவாதிகளிடம் புழங்கும் சொற்களில் 'மதமல்ல மார்க்கம்' என்று சொல் பெருவாரியாக புழங்கும் சொற்களில் ஒன்றுதான். எல்லா மதங்களுமே இந்தச் சொல்லை பயன்படுத்திவருகின்றன. இதற்குக் காரணம் மதம் என்ற சொல் 'மதம்' அதாவது வெறிபிடித்த என்ற பொருளில் வழங்கப்படுவதாலும் மத நம்பிக்கையின் இன்றைய நிலையும் அதுதான் என்பதாலும் மதம் பற்றி பரப்புரை செய்யும் புதிய சொல்லாடலாக 'மதமல்ல மார்க்கம்' என்ற சொல் வழங்கப்படுகிறது.

உலகில் எந்த ஒரு மதத்தையும் இறைவன் தோற்றுவித்ததாக வரலாறு கிடையாது, மாறாக மதகுருமார்களால் மதமும் அந்த மதத்திற்கான கடவுள்களும் தோற்றுவிக்கப்பட்டன, இயேசு, மகாவீரர், புத்தர் போன்ற மத குருமார்களையே கடவுளாக்கிய மதங்களும் உண்டு. மதப் பரப்புரைகளின் நோக்கம் பற்றி உண்மையைக் கூர்ந்து பார்த்தால் அவை இன ஆளுமையை முன்னெடுக்கும் ஒரு வழிமுறையாக உள்ளதைக் காணலாம். புனித தலங்களில் நடக்கும் மதச் சடங்குகள் பெரும்பாலும் மதங்கள் தோன்றிய அந்த இனத்தவருக்கே முன்னுரிமை குறித்து செய்யப்பட்டும், பிற இனத்தினருக்கு வழிபாட்டு உரிமை என்ற அளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார். ஐரோப்பியர் அல்லாதோர் போப் ஆண்டவராக வரமுடியாது, காஃபாவினும் நுழைந்து தொழும் உரிமை அரபு வம்சாவளிகளுக்கே உரியது மற்றவர்கள் அதைச் சுற்றி வெளியே தொழுகை நடத்தலாம். இந்தியாவிலும் பெரிய இந்துக் கோவில்களில் நடத்தப்படும் சடங்குகள், பூசைகள் பார்பனர்களாலேயே நடத்தப்பெறுவதும், பிறருக்கு மறுக்கப்படுவதும் அதற்கு பாதுகாவலாக ஆகமம், நியமம், பரம்பரை என்கிற கட்டுபாடுகளை வைத்திருப்பதைப் பார்க்கிறோம்.

எந்த இனம் எப்போது தோன்றியது என்று இன்று அறுதி இட்டுக் கூறமுடியாத நிலையில், புழக்கத்தில் இருக்கும், வரலாற்றுடன் தொடர்புடைய, காலத்திற்குள் அடங்கும் மதங்களை இறைவன் வடிவமைத்தான் என்று நம்பலாம் ஆனால் அதை வழியுறுத்திச் சொல்வது நகைப்புக்கிடம். அதனை விமர்சனம் செய்ய யாருடைய அனுமதியும் பெற வேண்டியதில்லை.

மதங்கள் எப்போதும் அது தோன்றிய நாடுகளின், இனங்களின் பழக்க வழக்கங்களை, வாழ்வியல் முறைகளை உள்ளடக்கியது. எதோ ஒரு புதிய மதம் வடதுருவத்தில் தோன்றினால் அதைப் பின்பற்றுபவர்கள் குளிர்காரணமாக குளிரைதாங்கும் ஆடைகள் அணிந்திருப்பார்கள், அந்த மதம் ஒருவேளை மற்ற நாடுகளிலும் பரவினால் மத அடையாளமாக அந்த குளிருடையும் சேர்ந்தே மத விதிமுறையாக பரவும். ஆனால் வெப்ப நாடுகளில் அவை பொருத்தமானதா என்று பார்த்தால் அறிவு விதிப்படி பொருத்தமற்றது. அது வடதுருவ மக்களின் அன்றாட உடை என்ற அளவில் இருக்கிறது என்ற அளவில் மட்டுமே பொருந்தும். இது போல் தான் மதங்களில் இருக்கும் மதம் சார்ந்த அடையாளங்கள் அனைத்தும். ஆனால் இவற்றையெல்லாம் இன்றைய காலத்தில் அறிவியலுடன் முடிச்சுப் போட்டு புனிதம் கற்பிக்கப்படுவதுடன், மறைமுகமாகச் சொல்லப்படும் மனித குல மேன்மைக்கான வழிமுறை என்று இட்டுக் கட்டப்படுவதெல்லாம் அறிவீனம்.

"நல்ல வேளை பன்றிக்காய்ச்சலால் எங்கெளுக்கெல்லாம் ஆபத்து இல்லை...ஏனெனில் நாங்கள் பன்றி இறைச்சி உண்பது இல்லை...இதை 1400 வருடங்களுக்கு முன்பே தீர்க்க தரிசனமாக உணர்ந்ததால் குரானில் பன்றி இறைச்சி தடைசெய்யப்பட்டு இருகிறது" என்றார் ஒரு நண்பர்.

"பறவைக்காய்ச்சல், மாடுகளுக்கு வரும் கோமாரி நோய் பற்றி குரானில் முன்னெச்சரிக்கை எதுவும் கொடுத்து தடை செய்யவில்லை. இல்லை என்றால் கோழி பிரியாணியும், மாட்டு இறைச்சியும் உண்ணும் பாக்கியம் கூட உங்களுக்கு கிடைத்திருக்காது' என்று அந்த நண்பருக்கு சொன்னேன்.

"விதண்டாவாதம்" என்றார்.

"அப்ப அதை வெறும் மத நம்பிக்கை, மதக்கட்டுபபாடு என்று சொல்லிவிட்டுப் போங்கள், அதையும் பன்றிக்காய்சலையும் ஏன் தொடர்பு படுத்துகிறீர்கள்...ஐரோப்பியர்களும், சீனர்களுக்கும் முக்கிய உணவே பன்றி தான்...அது இழிவானது என்று சொல்லித் தடுக்கப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்வதைக் கேட்டு அவர்களுக்கு வருத்தம் ஏற்படாதா ?" என்றேன்

"உங்க பேச்சில் இந்த்துத்துவா வாசனை அடிக்கிறது" என்றார்

அதுக்கு மேல் அவரிடம் விவாதிக்க நானும் விரும்பவில்லை.

இன்னொரு நண்பர்,

"ஐரோப்பிய கிறித்துவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியர்கள் இன்றும் கோவனத்துடன் தான் இருப்பார்கள்" என்றார்

"ஐயா சாமி, கிறித்து பிறப்பதற்கு முன்பே, உலகின் முதல் பல்கலை கழகம் நாளந்தாவில் நம் இந்தியாவில் தான் தொடங்கப்பட்டது, யுவான் சுவாங் மற்றும் பல சீன மாணவர் வந்து தங்கிப் படித்துச் சென்றார்கள்" என்றேன்

******

மதம் அதன் கொள்கைகள் நல்லவையாகவே இருந்துவிட்டுப் போகட்டம், ஆனால் அதைப் பற்றி பெருமை பேசும் போது மறைமுகமாக பிற மதங்களை மட்டம் தட்டுக்கிறோம் என்ற உணர்வும் பிறர் புண்படுவார்கள் என்று பலரும் நினைப்பதே இல்லை. எந்த ஒரு மதத்திலும் தனிச் சிறப்பு இருக்கும், ஆனால் எந்த ஒரு மதத்திற்கு தனிப் பெருமை என்பது இல்லவே இல்லை. மதமில்லா காலத்தில் வாழ்ந்து இறந்தவர்களை நினைத்துப் பார்த்தால் இன்று இருக்கும் மதம் நாகரீக வளர்ச்சியில், இனத்தைக் காக்க வந்து ஒட்ட வைக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும்.

தொடர்புடைய சுட்டி : மதம் - வெறி ?- துவேஷம் ??- அவசரம்??? யாருக்கு???? - லோஷன்

42 கருத்துகள்:

அப்பாவி முரு சொன்னது…

//ஐரோப்பியர்களும், சீனர்களுக்கும் முக்கிய உணவே பன்றி தான்...//

குளிர் பிரதேச நாடுகளில், உடல் சூட்டை தக்கவைக்க கொழுப்பு அதிகமான இறைச்சியை தேடி அதை உணவக்கினான், வெப்பம் அதிகமான இடத்தில் பன்றிக்கறியை உணவாக்கினால் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகமாதலாம் அதை ஒதுக்கினான்.

இதெல்லாம் மதம் தோன்றுவதற்கு முன் வந்த விஷயம்கள்.

அப்பாவி முரு சொன்னது…

//"ஐரோப்பிய கிறித்துவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியர்கள் இன்றும் கோவனத்துடன் தான் இருப்பார்கள்" என்றார்//

அப்பிடியே பாம்பாட்டி, குளிக்காதவ்ங்க, நாகரிகம் இல்லாதவங்க...

இதெல்லாம் சொல்லலையா?

மேசை காலுக்கே துணிபோட்டு வைக்கிற காமாந்தகர்கள் தான் ஐரோப்பியர்.

அப்பாவி முரு சொன்னது…

அதோட தொடர்ச்சி தான் இன்னும் இந்திய அரசாங்க அலுவலகங்களின் மேசைகளுக்கு போர்வை போட்டு வைத்திருக்கிறார்கள்.

வால்பையன் சொன்னது…

//மாடுகளுக்கு வரும் கோமாரி நோய் பற்றி குரானில் முன்னெச்சரிக்கை எதுவும் கொடுத்து தடை செய்யவில்லை. இல்லை என்றால் கோழி பிரியாணியும், மாட்டு இறைச்சியும் உண்ணும் பாக்கியம் கூட உங்களுக்கு கிடைத்திருக்காது' என்று அந்த நண்பருக்கு சொன்னேன். விதண்டாவாதம் என்றார்.//


மதவாதிகள் எப்போதுமே அப்படிதான்!
தனக்கு சாதகமானதை மட்டும் எடுத்து கொள்வார்கள், இது ஏன் இல்லையென்றால் விதண்டாவாதம் தான்!

கண் கட்டிய குதிரை மாதிரியான பயணம் எப்படி சாத்தியமாகிறது அவர்களுக்கு!

வால்பையன் சொன்னது…

//"உங்க பேச்சில் இந்த்துத்துவா வாசனை அடிக்கிறது" என்றார்//

என்னிடம் அனுப்புங்கள்!

எல்லா இந்து கடவுளையும் முதலில் அடித்து கடாசிவிட்டு பிறகு அவர்களது கடவுளுக்கு கடுக்கா கொடுக்கிறேன்!

வால்பையன் சொன்னது…

//ஐரோப்பிய கிறித்துவர்கள் இந்தியாவுக்கு வரவில்லை என்றால் இந்தியர்கள் இன்றும் கோவனத்துடன் தான் இருப்பார்கள்" என்றார்//

பாருங்களேன்! வந்து கொள்ளையடித்து போனதற்கு எப்படியெல்லாம் சப்பை கட்டு கட்டுறானுங்க!

Rajaraman சொன்னது…

\\//"உங்க பேச்சில் இந்த்துத்துவா வாசனை அடிக்கிறது" என்றார்//

என்னிடம் அனுப்புங்கள்!

எல்லா இந்து கடவுளையும் முதலில் அடித்து கடாசிவிட்டு பிறகு அவர்களது கடவுளுக்கு கடுக்கா கொடுக்கிறேன்!//

Convincing ஆக எதிர்வாதம் வைக்க மூளை இல்லையென்றால் தான் இப்படி பதிலடி கொடுப்பார்கள். சரி உங்களிடம் கிறித்துவ வாசனை அடிக்கிறது என்றோ அல்லது இஸ்லாமிய மோப்பு அடிக்கிறது என்றோ கூறினால் இயேசு உருவத்தையோ அல்லது முகமதிய குறியிடயோ அடித்து நொறுக்கிவிட்டு தான் அவர்களுக்கு கடுக்காய் கொடுப்பீரோ. என்ன ஒரு முட்டாள்தனமான வாதம்.

நடுநிலைவியாதி மற்றும் பகுத்தறிவாளன் என்று பீற்றிக்கொள்ள என்னவேண்டுமானாலும் உளறுவதா.

ARV Loshan சொன்னது…

அருமை கோவியாரே.. உறைக்கும்படி உண்மைகளை சொல்லி இருக்கிறீர்கள்..

//எந்த இனம் எப்போது தோன்றியது என்று இன்று அறுதி இட்டுக் கூறமுடியாத நிலையில், புழக்கத்தில் இருக்கும், வரலாற்றுடன் தொடர்புடைய, காலத்திற்குள் அடங்கும் மதங்களை இறைவன் வடிவமைத்தான் என்று நம்பலாம் ஆனால் அதை வழியுறுத்திச் சொல்வது நகைப்புக்கிடம். அதனை விமர்சனம் செய்ய யாருடைய அனுமதியும் பெற வேண்டியதில்லை.//

இதை நான் சொல்லப் போனால் நாத்திகன் என்பார்கள். அல்லது இனத் துவேஷி என்பார்கள். அதற்காக உண்மையை சொல்லாமல் இருக்க முடியுமா?

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

அன்பின் கோவி.கண்ணன்,


அச்சச்சோ, ஊரில் யாரோ ஒரு துலுக்க மதத்தை பின்பற்றும் கடவுள்&கோ (God&Co) வின் விற்பனை பிரதிநிதியிடம் (Sales Executive) சரியாக மாட்டிக்கொண்டீர்கள் போலும்?. பாவம் நீங்கள். நான் துலுக்கன் அல்ல. அதிலிருந்து விலகி முழு முஸ்லிம் (இறைவனுக்கு கட்டுபட்டவன்) ஆக இருப்பவன். ;-),பிறகு இந்த தகவல் பிழைகளை சரி செய்வோம்.

// காஃபாவினும் நுழைந்து தொழும் உரிமை அரபு வம்சாவளிகளுக்கே உரியது மற்றவர்கள் அதைச் சுற்றி வெளியே தொழுகை நடத்தலாம். //

முதலில் காஃபாவின் உள்ளே யாரும் தொழ முடியாது. காரணம். முஸ்லிம்கள் காஃபாவின் திசையை முன்வைத்து தான் தொழ ஆரம்பிப்போம். காஃபாவின் உள்ளே சென்றால் எந்த திசையை முன்னோக்கி தொழுவதாம்? ஸோ யூஸ் லாஜிக் ! Don't commit Cyber Bullying ;-).


ஆனால் காஃபாவின் உள்ளே சென்று வருடத்திற்கு இரண்டு முறை சுத்தப்படுத்துவது அங்குள்ள ஆட்சியாளார்களின் கடமை. கீழே விவரம் விக்கிபீடியாவிலிருந்து..

Cleaning

The building is opened twice a year for a ceremony known as "the cleaning of the Kaaba." This ceremony takes place roughly fifteen days before the start of the month of Ramadan and the same period of time before the start of the annual pilgrimage.

The keys to the Kaaba are held by the Banī Shaybat (بني شيبة) tribe. Members of the tribe greet visitors to the inside of the Kaaba on the occasion of the cleaning ceremony. A small number of dignitaries and foreign diplomats are invited to participate in the ceremony[39]. The governor of Mecca leads the honored guests who ritually clean the structure, using simple brooms. Washing of the Kaaba is done with a mixture of Zamzam and Persian rosewater.[40]மேலும் அதன் அளவே 11.03 m (36.19 ft) by 12.86 m (42.19 ft) தான். பிறகு அதனுள் எத்தனை பேர் நுழைய முடியும் ? சில வெளிநாட்டு விருந்தினருக்கும் அழைப்பு உண்டு. இறைவன் நாடினால் நான் கூட அதில் உட்புக இயலும். ஆனால் அங்கே யாரும் தொழ இயலாது. ஆட்சியாளர்கள் உட்பட. இது தான் உண்மை.


ஊரில் தானே உள்ளீர்கள். நம்ம சூடான் புலி சிவாவும் ஊருக்கு வந்து உள்ளார். மூவரும் சேர்ந்து நாகையில் ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பை நடத்துவோமா? :-))). பலவிஷயங்களைப்பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்துவோம். என்ன தயாரா?with care and love,

Muhammad Ismail .H, PHD,
+91.94420.93300
http://gnuismail.blogspot.com

வால்பையன் சொன்னது…

//இறைவன் நாடினால் நான் கூட அதில் உட்புக இயலும்.//

இறைவன் யாரை கூட்டி சொல்லுவார்! தான் நாடுவதாக?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஊரில் தானே உள்ளீர்கள். நம்ம சூடான் புலி சிவாவும் ஊருக்கு வந்து உள்ளார். மூவரும் சேர்ந்து நாகையில் ஒரு பிரமாண்ட பதிவர் சந்திப்பை நடத்துவோமா? :-))). பலவிஷயங்களைப்பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்துவோம். என்ன தயாரா?//

இஸ்மாயில் சார்,
சிவா ஊரில் இருப்பது சிங்கை திரும்பிய பிறகு தான் தெரியும். உங்களை சந்திக்கும் வாய்ப்பையும் சேர்த்தே இழந்துவிட்டேன்.

மணிகண்டன் சொன்னது…

***
இறைவன் யாரை கூட்டி சொல்லுவார்! தான் நாடுவதாக?
***

என்னைய !

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ அன்பின் வால்பையன்,

// இறைவன் யாரை கூட்டி சொல்லுவார்! தான் நாடுவதாக? //

அதில் உள்நுழைந்தால் தான் முஸ்லிம் ஆக இருக்க முடியும் என்றில்லை. நான் இறைவன் நாடினால் என்று சொன்னதற்கு அர்த்தம் எது ஒன்றும் இறைவனின் நாட்டத்தை பொறுத்தே என அர்த்தம்.

எந்த இறைவன் என குதர்க்கமாக கேட்டால், எந்த ஒரு சக்தி இந்த பிரபஞ்சத்தை படைத்து, அதை நிர்வாகித்து வருகிறதோ அதையே நான் இறைவன் என்கிறேன். அதற்கு அரபு பெயர் அல்லாஹ், கிறிஸ்தவ, யூத பெயர் எலோஹிம், இந்து தத்துவத்தில் பரம்பொருள். உண்ணும் உணவாட அரிசிக்கு ஒவ்வொரு மொழியிலும் ஒரு பெயர் உள்ளபோது அனைத்தையும் படைத்த இறைவனுக்கு இருக்காதா?

பாருங்க, இந்த வால் பையன் அக்கவுன்ட கூகுள்ள லாகின் பண்ணி கமெண்ட் போட ஈரோட்டுல ஒரு அருண் தேவைப்படும் போது இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை காக்காவ தூக்கி வந்து போட்டது ? யோசிங்க அருண் !!!


with care and love,

Muhammad Ismail .H, PHD,

வால்பையன் சொன்னது…

//பாருங்க, இந்த வால் பையன் அக்கவுன்ட கூகுள்ள லாகின் பண்ணி கமெண்ட் போட ஈரோட்டுல ஒரு அருண் தேவைப்படும் போது இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தை காக்காவ தூக்கி வந்து போட்டது ? யோசிங்க அருண் !!!//

நானா, அருணா, வால்பையனா
இந்த பூமியே ஒரு சுண்டைக்காய் இந்த பிரபஞ்சத்தில், 500 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு ப்ளாக்ஹோல் உயிர்ப்புடன் இருப்பதாக தெரிகிறது. ஆனால் எங்கேயும் கடவுளைத்தான் காணவில்லை.

ஒருவேளை பூமிய படச்சுட்டு, மனுசன பார்த்து மாரடைப்பு வந்து செத்துட்டாரோ என்னவோ!

வால்பையன் சொன்னது…

//Convincing ஆக எதிர்வாதம் வைக்க மூளை இல்லையென்றால் தான் இப்படி பதிலடி கொடுப்பார்கள்.//

சரியான முறையில் வாதம் செய்ய தெரியாதவர்கள் தான், நீ அந்த மதம் அதனால் தான் என்னை கிராஸ் கேள்வி கேட்கிறாய் என்பார்கள்.

என்னை போல் மதம், கடவுள் நம்பிகையற்றவர்களுக்கு நீங்கள் அனைவரும் ஒன்று தான்!
இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், இந்துக்கள் என்று தனிதனியாக பார்ப்பதில்லை.
அதில் எது பெருசு, சிறுசு என்ற பாகுபாடும் இல்லை!

அதனால் இப்படி தான் பேசுவோம்!

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ அன்பின் வால்ப்பையன்,


// நானா, அருணா, வால்பையனா
இந்த பூமியே ஒரு சுண்டைக்காய் இந்த பிரபஞ்சத்தில், 500 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் ஒரு ப்ளாக்ஹோல் உயிர்ப்புடன் இருப்பதாக தெரிகிறது. //


1. இந்த பிரபஞ்சத்தில் ஒன்று இல்லை, ஏரளமான கருந்துளைகள் உள்ளது. விவரங்களுக்கு நம் ஜயபாரதனுடைய பதிவுகளை பாருங்கள்.

http://jayabarathan.wordpress.com/2008/10/10/katturai43/


// ஆனால் எங்கேயும் கடவுளைத்தான் காணவில்லை. //


பிறகு நம்ம பிகேபியானந்தாவின் வார்த்தை from www.pkp.in

" ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை "

with care and love,

Muhammad Ismail .H, PHD,

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

டொக் , டொக் , டொக். வால் இருக்கீங்களா? ஆட்டத்தை தொடரலாமா?

வால்பையன் சொன்னது…

//இந்த பிரபஞ்சத்தில் ஒன்று இல்லை, ஏரளமான கருந்துளைகள் உள்ளது. விவரங்களுக்கு நம் ஜயபாரதனுடைய பதிவுகளை பாருங்கள்.//

நான் ஒண்ணே ஒண்ணு தான் இருக்குன்னு சொல்ல வரல!
500 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருப்பது வரை பார்த்தாச்சு!
கடவுளை காணோம்னு சொன்னேன்!

//பிறகு நம்ம பிகேபியானந்தாவின் வார்த்தை//

அவரையும் கடவுளாக்கிட்டிங்களா?

//ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை "//

அப்படியும் சொல்லிகளாமே தவிர, சான்று இருக்குன்னு அர்த்தம் இல்லை சரியா!

Rajaraman சொன்னது…

\\என்னை போல் மதம், கடவுள் நம்பிகையற்றவர்களுக்கு நீங்கள் அனைவரும் ஒன்று தான்!
இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், இந்துக்கள் என்று தனிதனியாக பார்ப்பதில்லை.
அதில் எது பெருசு, சிறுசு என்ற பாகுபாடும் இல்லை!

அதனால் இப்படி தான் பேசுவோம்!//

உங்களைப்பற்றி முழுமையாக தெரியாது. ஆனால் ஒன்று இநத நாத்திக புத்திசாலிதனத்தை உங்களின் குழந்தைகளின் பள்ளி சான்றிதழில் காமிக்க தையிரியம் உண்டா. இதெல்லாம் வெறும் உடான்ஸ். இங்கு இந்த இணைய உல் நுனரசியலில் உங்களை ஆட்டையில் சேர்க்க மாட்டானுங்க என்று வேஷம் கட்டுவது தெரியாதா.

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ அன்பின் வால்பையன்,

நான் ஒன்றும் பிகேபியை கடவுள் ஆக்கவில்லை. அப்ப இஸ்மாயிலானந்தாவாகியாக நானும் கடவுளா? கோவியானந்தாவும் கடவுளா? என்ன கொடுமை இது ?


with care and love,

Muhammad Ismail .H, PHD,

வால்பையன் சொன்னது…

//இநத நாத்திக புத்திசாலிதனத்தை உங்களின் குழந்தைகளின் பள்ளி சான்றிதழில் காமிக்க தையிரியம் உண்டா. //

இதுவரை சாதி சான்றிதழ் தரவில்லை!
மாதமும் குறிப்பிட விருப்பமில்லை என்று தான் சொல்லியிருக்கேன்!

என்னுடய பழைய பதிவுகளில் இது பற்றி பார்க்கலாம்!

நான் வாய் சொல்லில் வீரனல்ல!

அதுக்கு வேற பகுத்தறிவுவாதிங்க இருக்காங்க!

வால்பையன் சொன்னது…

//நான் ஒன்றும் பிகேபியை கடவுள் ஆக்கவில்லை. அப்ப இஸ்மாயிலானந்தாவாகியாக நானும் கடவுளா? கோவியானந்தாவும் கடவுளா? என்ன கொடுமை இது ?.//

என் வாதங்களில் எங்கேயும் இவர் சொன்னார், அவர் சோன்னார்ன்னு உதாரணம் காட்ட மாட்டேன், காரணம் அவர்களும் கடவுளல்லர்!

பின் எவ்வாறு நம்புவது,

சும்மா ஒரு நம்பிக்கை தான் என்றால் கடவுளும் அப்படி தான்!

சும்மாஆஆஆஆஆ......

Rajaraman சொன்னது…

\\இதுவரை சாதி சான்றிதழ் தரவில்லை!
மாதமும் குறிப்பிட விருப்பமில்லை என்று தான் சொல்லியிருக்கேன்!

என்னுடய பழைய பதிவுகளில் இது பற்றி பார்க்கலாம்!

நான் வாய் சொல்லில் வீரனல்ல!

அதுக்கு வேற பகுத்தறிவுவாதிங்க இருக்காங்க!//

வால், உங்களை குறைத்து மதிபிட்டோ அல்லது உங்களை குத்திக்காட்டி புண்படுத்தவோ நான் பின்னூட்டமிடவில்லை. ஆனால் இங்கு உலவிக்கொண்டிருக்கும் நவீன போலி பகுத்தறிவு? வியாதிகளில் நீங்களும் ஒருவராகிவிடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் தான் என் கருத்தை கூறினேன் நன்றி.

வால்பையன் சொன்னது…

உங்கள் அன்புக்கு நன்றி!

நீங்கள் சொல்வது உண்மை தான்!
இப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை இருக்கு ஆனா அவ்வளவா இல்லை என்பது! இருக்கு ஆனா கும்பிடமாட்டேன் என்பது தான் ஃபேஷன்!

நான் அந்த விளையாட்டுகெல்லாம் எனக்கு ஆவாது!

பெரியாரையும் கேள்விகுள்ளாக்க வேண்டும் என்பது தான் என் கருத்து!

மதம் அதன் கடமையை தாண்டி மனிதர்களை ஆல்கொள்ளும் போது அதை பார்த்து கொண்டு எப்படி சும்மா இருப்பது! கேள்வி கேட்போம்! புத்தி வந்தா பார்ப்போம் இல்லாட்டி விட்டுடுவோம்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

கோவை கண்ணன் !
நீங்கள் நாய் வாலை நிமிர்த்தும் வீண்முயற்சியில் ஈடுபடுகிறீர்கள்.
இப்படிப் பலரது கதைகளைக் கேட்டே காது சலித்துவிட்டது.
இவர்கள் வசம் ஒன்றைக் கவனிக்கலாம். மதமோ;மார்க்கமோ கூறும்
அன்பென்பதை மறந்தவராக இருப்பார்கள்.

Muhammad Ismail .H, PHD., சொன்னது…

@ அன்பின் வால்பையன்,

நான் ஒன்றும் பிகேபியை கடவுள் ஆக்கவில்லை. அவரின் வார்த்தையை தான் காப்பி & பேஸ்ட் செய்தேன். அது யாருடையது எனவும் கூறினேன். மற்றவர்களைப் போல் கற்ற இடத்தை மறப்பவனல்ல நான். அவரிடம் இருந்து சுட்டு அதில் என் பெயரை போட்டு அது என்னுடையது என அதற்கு போலி உரிமை கொண்டாடவில்லை. பிறகு கலந்துரையாடல் திசை திரும்புகிறது. அதை மறுபடியும் அதன் திசையில் வைப்போம். மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பிப்போம்.


நீங்கள் இதுவரை பார்ப்பான், மிஷநரி, துலுக்கன் ஆகியவர்களையே பார்த்து இருக்கிறீர்கள் என கருதுகிறேன். ஆனால் பிராமணன், கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியவர்களை பார்த்தது உண்டா? இதுவரை இல்லை என்று நினைக்கின்றேன்.

இந்த பார்ப்பான், மிஷநரி, துலுக்கன் மூவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சொல் ஒன்றாகவும். செயலானது வேறேன்றாகவும் இருக்கும். அது முழுக்க "அவர்களின் நலனை" மட்டுமே சார்ந்ததாக இருக்கும். இதில் போலி பகுத்தறிவாளர்களும் அடக்கம். இவர்களை இணைக்கும் மைய புள்ளி "சுயநலம் மற்றும் பேராசை" .


ஆனால் இந்த பிராமணன், கிறிஸ்தவர், முஸ்லிம் மூவரும் வேறு மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சொல்லும் அது சார்ந்த செயலும் ஒரே போல் இருக்கும். அது முழுக்க "அனைவரது" நலனையும் சார்ந்தே இருக்கும். ஏன் இதில் உண்மையான பகுத்தறிவாளர்களும் அடக்கம். இவர்களை இணைக்கும் மைய புள்ளி "நம்பிக்கை மற்றும் மனிதாபிமானம்" என்ன புரிந்ததா ? யாரையும் இனிமேல் சொல், அது சார்ந்த செயல் இந்த அளவீடுகளின் படி அளக்கவும். உங்களது பழைய அளவீடுகளை தூக்கி போட்டுவிடவும். இதை தான் வள்ளுவர் இப்படி சொன்னார்.


" சொல்லுதல் யார்க்கும் எளிய, அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் "


நான் பிராமணன், கிறிஸ்தவர், முஸ்லிம் அனைத்தும் சேர்ந்த ஒரு பகுத்தறிவான மனிதன். மேல் விவரங்கள் தேவையா? நாங்கள் நடத்தும் இந்த தளமே அனைத்தையும் உங்களுக்கு தெரியப்படுத்தும். http://www.iibc.in/itws/


முடிந்தால் பிகேபி மீள்பதிந்த இந்த பதிவையும் பார்க்கவும். http://gnuismail.blogspot.com/2008/10/blog-post.html உங்களுக்கே விளங்கும்.நான் வீட்டை விட்டு கிளம்பி 2 வாரம் ஆகி விட்டது. "எங்களது" குழந்தை என்னை தேடுகிறானாம். (பின்ன அவன் எனக்கு மட்டுமா குழந்தை, என் மனைவிக்கும் தான் அவன் தான் குழந்தை. என்னுடைய 23 குரோமோசோமும், எனது மனைவியின் 23 குரோமோசோமும் சேர்ந்து தான் அவன் வந்தான். எத்தனையே முறை சும்மா ரீலீஸ் ஆனது. அது எல்லாம் குழந்தை ஆனாதா? ;-)))). அங்கும் அப்படிதான் ;-)))). ஆனால் அதில் என்னுடைய 23 -ல ஒண்ணு y குரோமோசோம். அதனால குழந்தை ஆண். x ஆக இருந்தால் பெண். அவ்வளவுதான்). பாருங்க இயற்கை எவ்வளவு நீதியாக, சரியாக 23+23 போட்டு தன் வேலையை ஆரம்பித்து வைக்கின்றது. மனுசப்பய உரிமையை தவறாக பயன்படுத்தாமல் இருக்க அது சரியாக 50-50 ஷேர் போட்டு தான் தொழில் தொடங்கி இருக்கு. இயற்கையே இப்படி நீதியாக இருக்கும் போது அந்த இயற்கையையே படைத்த இறைவன் எவ்வளவு நீதிமானாக இருப்பான் என கற்பனை பண்ணி பார்க்கவும். மறுபடியும் சொல்கிறேன், " இறைவன் நாடினால்" நாம் மறுபடியும் இங்கே சந்திப்போம். எதுவும் நிச்சயமற்றது. அது தான் உண்மை.
with care and love,
Muhammad Ismail .H, PHD,

வால்பையன் சொன்னது…

//நீங்கள் இதுவரை பார்ப்பான், மிஷநரி, துலுக்கன் ஆகியவர்களையே பார்த்து இருக்கிறீர்கள் என கருதுகிறேன். ஆனால் பிராமணன், கிறிஸ்தவர், முஸ்லிம் ஆகியவர்களை பார்த்தது உண்டா? இதுவரை இல்லை என்று நினைக்கின்றேன்.//

மனிதர்களில் என்ன பாப்பான், பிராமனன், துலுக்கன் ,இஸ்லாமியன்.
அவர்களையெல்லாம் மனிதர்களாக தான் எனக்கு தெரியும். உங்களுக்கு மட்டும் ஏன் மத, சாதி அடையாளங்கள்!

//நான் பிராமணன், கிறிஸ்தவர், முஸ்லிம் அனைத்தும் சேர்ந்த ஒரு பகுத்தறிவான மனிதன்.//

இந்த அடையாளங்கள் இல்லாதவன் தான் மனிதன்! இருந்தால் மனிதனல்ல!

//முடிந்தால் பிகேபி மீள்பதிந்த இந்த பதிவையும் பார்க்கவும். //

முடிந்தால் அதன் சாரம்சத்தை மட்டும் இங்கே கொடுக்கவும்! பத்தி பத்தியா லிங்க் படிக்க எனக்கு நேரமில்லை!

//அந்த இயற்கையையே படைத்த இறைவன் எவ்வளவு நீதிமானாக இருப்பான் என கற்பனை பண்ணி பார்க்கவும். //

இப்படி கற்பனை பண்ணி தான் கற்பனையாக ஒரு கடவுளை உருவாக்கி வச்சிருக்கிங்க!

//இறைவன் நாடினால்" நாம் மறுபடியும் இங்கே சந்திப்போம். எதுவும் நிச்சயமற்றது. அது தான் உண்மை.//

இறைவனை கேட்டு நான் எதையும் செய்யுறதில்லை! நான் இங்கே தான் இருப்பேன்! நீங்க உத்தரவு வாங்கிட்டு வாங்க!

மணிகண்டன் சொன்னது…

****
இறைவனை கேட்டு நான் எதையும் செய்யுறதில்லை! நான் இங்கே தான் இருப்பேன்! நீங்க உத்தரவு வாங்கிட்டு வாங்க!
****

இஸ்மாயில், உங்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டேன். டாய்லெட் போனதுல கொஞ்சம் டிலே ஆயிடுச்சு.

வால்பையன் சொன்னது…

//இஸ்மாயில், உங்களுக்கு உத்தரவு கொடுத்துவிட்டேன். டாய்லெட் போனதுல கொஞ்சம் டிலே ஆயிடுச்சு. //

கடவுள் கக்குசெல்லாம் போவாரா?
சாப்பாடு என்ன சாப்பிடுவார்?

அவரே பயிரிட்டுக்குவாரா?
அவரே சமைச்சுக்குவாரா?

வேடிக்கை மனிதன் சொன்னது…

எல்லா மதங்களும் நல்லனவற்றையே தான் போதிக்கின்றன.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் கடவுளை சென்றடைகின்ற மார்க்கத்தைத் தான் சொல்லித்தந்திருக்கின்றன.

மனிதன் அவற்றை கடைபிடித்து கடவுளை அறிவதற்குத் துப்பில்லை, அதைவிட்டு மற்ற மதத்தை மட்டம் தட்டுவதிலயும், தன் மதத்தை உயர்த்திக் காட்டுவதிலுமே நேரத்தை செலவிடுகின்றனர்.

மேலும் மதங்களை பற்றி முலுமையாக தெரியாதவர்கள் மலிவான பிரசங்கங்கள் செய்ய முயற்சித்ததாலயே பிரச்சினைகள் முலைக்க ஆரம்பித்தன.

என்னைக் கேட்டால் நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராகவாவது இருந்துவிட்டுப்போங்கள், அந்த மதங்கள் சொல்லித்தந்த 5முறை தொழுகைகளோ, பூசை, புனஸ்காரங்கள் பற்றி எல்லாம் கவலை படத்தேவை இல்லை.

உங்கள் வழியில் சக உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல்,அன்பு செலுத்தியும் மனசாட்சிக்கு உட்பட்டு பஞ்ஜமகா பாதகங்களை செய்யாமல் வாழ்ந்து வந்தாலே கடவுள் உஙகளை தேடிவருவார் என்பது என்கருத்து.
(மனம் அது செம்மைப் பட்டால் மந்திரங்கள் செபிக்கத்தேவையில்லை)

நிகழ்காலத்தில்... சொன்னது…

மதமும் மார்க்கமும் ரெடிமேடு சட்டை பேண்ட் மாதிரி.

மிச்சத்தை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்.

Javed சொன்னது…

சகோதரர் கோவி கண்ணன் அவர்களே,

சில முஸ்லிம்கள் தவறான புரிதலோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது இன்னொமொரு சாட்சி. சில தேவையற்ற விஷயங்களுக்காக அவர்கள் பெருமை கொண்டிருக்கிறார்கள் (லோஷன் அவர்களின் பதிவில் சொன்ன 'லாரா இஸ்லாத்துக்கு மாறிய' வதந்தி போன்று) பன்றி காய்ச்சல் எனப்படுவது பன்றிகளை உண்பதால் பரவக்கூடியது அல்ல. அதை வளர்ப்பவரின் மூலம் தொற்றிக்கொள்ளும் ஒரு வியாதியே ஆகும். இதை மிகதெளிவாக ஒரு பிரபலமான இஸ்லாமியா வலைத்தளம் வெளியிட்டுள்ளது. http://muslimmatters.org/2009/04/29/muslims-and-swine-flu/


இஸ்லாம் பன்றி மாமிசத்தை தடை செய்ததற்கு காரணம் அதன் மூலம் பல நோய்கள் பரவுவதே. அதில் பன்ரிக்க்காயச்சலும் அடங்கும். இதை பற்றின மிகத்தெளிவான விளக்கத்தை சகோதரர் அ மு செய்யது தந்திருக்கிறார்.

மேலும் இஸ்லாத்தில் ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்றவை ஹலாலான முறையில் மட்டுமே உண்பதற்கு தகுந்தவை ஆகும். உடனே ஹலால் என்றால் இஸ்லாமிய முறையில் அறுப்பது மட்டுமே என்று ஓன்றல்ல நினைக்க கூடாது. தூய்மையான, உடலுக்கு நன்மை விளைவிப்பதை மட்டுமே மனிதர்கள் உட்கொள்ள வேண்டும் என்கிறது குரான். அது மாமிசமானாலும் சரி, காய்கறிகள் ஆனாலும் சரி.

குரான் 5:3

"(3) (தானகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்;ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீNழு விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன......"

நாம் பள்ளியிலேயே படித்திருக்கிறோம் மூளைக்கைச்சல் பன்றியால் பரப்பப்படுகிறது என்பதை. மேலும் பன்றியின் மாமிசத்தின் அபாயங்களை அறிய சில ஆராய்ச்சிகளின் சுட்டியை தருகிறேன், பாருங்கள்:

http://www.giveshare.org/Health/porkeatdanger.html

Javed சொன்னது…

To appavi muru:

Pork is Necessary as a Heat-forming Food in Winter � Are there not plenty of more healthful animals than hogs to supply all the animal fat necessary? Certainly there are; and, better still, we have the various grains and farinaceaous vegetables, which are abundantly sufficient to furnish all the heat required by man in any latitude.

Our Fathers and Grandfathers Ate Pork, and yet Lived to very Old Age � Ah! yes, my good friend, and you are suffering the penalty of their transgressions. You may not be aware of it yet; but more than likely your old age will not be so free from ills as was theirs. And quite as probably you may even now see in your children the results of your own, as well as your fathers, disregard of the dictates of sound sense in feasting upon the hog. Their frequent sore eyes, sore mouths, tetter, crysipelas, and other eruptions, are all evidences of the scrofula which they have inherited.

நல்லடியார் சொன்னது…

//'மதம்' அதாவது வெறிபிடித்த என்ற பொருளில் வழங்கப்படுவதாலும் மத நம்பிக்கையின் இன்றைய நிலையும் அதுதான் என்பதாலும் மதம் பற்றி பரப்புரை செய்யும் புதிய சொல்லாடலாக 'மதமல்ல மார்க்கம்' என்ற சொல் வழங்கப்படுகிறது.//

மதம் என்றால் "இறைநம்பிக்கையும் வழிபாடும் சார்ந்த நெறிமுறை" என்ற பொருளிலேயே அறியப்படுகிறது. தமிழில் மதத்தைக் குறிக்கும் இன்னொரு சொல் சமயம். சமயத்திற்கு/சந்தர்ப்பத்திற்கேற்ப மாறிக்கொள்ளும் தன்மை இஸ்லாத்தின் இறைக்கோட்பாடுகளில் இல்லை என்பதால்,இஸ்லாம் என்ற நெறியை சமயம் என்பதும் சரியல்ல.

ஆங்கிலத்தில் மதத்தைக்குறிக்க RELIGION,FAITH, CULT, PATH என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.அரபுமொழியில் மதத்தைக் குறிக்கدين/الدين 'தீன்' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.இதன் பொருள் வழிமுறை என்பதாகும்.குர்ஆன் வசனம் (لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ :(109.006 -உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்! என்பதிலிருந்து இஸ்லாத்தை மதம் என்பதைவிட மார்க்கம் என்பதே பொருத்தமானதாகும்.

யானையின் இணைவிழைச்சுக் காலவெறியைக் குறிக்கவும் "மதம்" என்ற சொல் பயன்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் FRENZY,RUT,NYMPHOLEPSY என்ற பதங்களில் குறிக்கலாம்.அதாவது யானைகளுக்கு இனவிருத்திக் காலத்தில் உடலின் ஏழுபாகங்களிலிருந்து எழுவகையான மதநீர் சுரப்பதை எழுமதம் என்பர். இதேசொல் ஒரு நூலாசிரியருக்கு இன்னொருவருடன் ஏற்படும் எழுவகை நிலைப்பாடுகளைக் குறிக்கவும் பயன்படுகிறது. மதம் என்ற சொல்லுக்கு இறுமாப்பு, செருக்கு, வெறி என்ற பொருள்களும் உண்டு.

மதம் என்ற தமிழ்சொல்லுக்கு வெறி என்று மட்டும் பொருள்கொள்வது தமிழில் போதிய ஞானமில்லாதவர் எனக்கருத நேரிடும். யானைக்கு மதம் பிடித்துள்ளது என்றால் இனவிருத்திக்கான வெறிபிடித்து உள்ளது என்றே புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், இனவிருத்தி அல்லாத காலங்களில் யானை நாத்தினாக இருந்தது என்றும் புரிந்து கொள்ள நேரிடும். அதேபோல் வெறிநாயை, மதநாய் என்றும் வெறி கொள்ளத நாயை நாத்திகநாய் என்றும் புரிந்து கொள்ள நேரிடும்! ;-)

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லடியார் said...

மதம் என்றால் "இறைநம்பிக்கையும் வழிபாடும் சார்ந்த நெறிமுறை" என்ற பொருளிலேயே அறியப்படுகிறது. தமிழில் மதத்தைக் குறிக்கும் இன்னொரு சொல் சமயம். சமயத்திற்கு/சந்தர்ப்பத்திற்கேற்ப மாறிக்கொள்ளும் தன்மை இஸ்லாத்தின் இறைக்கோட்பாடுகளில் இல்லை என்பதால்,இஸ்லாம் என்ற நெறியை சமயம் என்பதும் சரியல்ல.

ஆங்கிலத்தில் மதத்தைக்குறிக்க RELIGION,FAITH, CULT, PATH என்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.அரபுமொழியில் மதத்தைக் குறிக்கدين/الدين 'தீன்' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.இதன் பொருள் வழிமுறை என்பதாகும்.குர்ஆன் வசனம் (لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ :(109.006 -உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்! என்பதிலிருந்து இஸ்லாத்தை மதம் என்பதைவிட மார்க்கம் என்பதே பொருத்தமானதாகும்.//

நல்லடியார்,

ஒன்று மாறாமல் இருப்பதாலேயே அதை சமயம் என்று சொல்ல முடியாது என்று சொல்கிறீர்களா ? :) அது வழி அல்லது மார்க்கம் என்று சொல்கிறீர்களா ?
என்னைக் கேட்டால் பழைமை வாதம் கூட மாறாத ஒன்று தான் எனவே பழமைவாதிகளை மார்க்கவாதிகள் என்று சொல்லலாம் என்பேன் :)


//மதம் என்ற தமிழ்சொல்லுக்கு வெறி என்று மட்டும் பொருள்கொள்வது தமிழில் போதிய ஞானமில்லாதவர் எனக்கருத நேரிடும். யானைக்கு மதம் பிடித்துள்ளது என்றால் இனவிருத்திக்கான வெறிபிடித்து உள்ளது என்றே புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், இனவிருத்தி அல்லாத காலங்களில் யானை நாத்தினாக இருந்தது என்றும் புரிந்து கொள்ள நேரிடும். அதேபோல் வெறிநாயை, மதநாய் என்றும் வெறி கொள்ளத நாயை நாத்திகநாய் என்றும் புரிந்து கொள்ள நேரிடும்! ;-)//

மதம் என்கிற சொல்லின் இருபொருள் எனக்கு தெரியும். நாத்திகர் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்களோ அவர்களில் மும்மீன் அல்லாத இஸ்லாமியர்களும், (ஏனைய சிலைவணக்கத்தார்களான காஃபீர்களும், இறைமறுப்பாளர் ஆகிய மூவரும் சேர்ந்தவர்கள் தானே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//mohammed said...

சகோதரர் கோவி கண்ணன் அவர்களே,

சில முஸ்லிம்கள் தவறான புரிதலோடு வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு இது இன்னொமொரு சாட்சி. சில தேவையற்ற விஷயங்களுக்காக அவர்கள் பெருமை கொண்டிருக்கிறார்கள் (லோஷன் அவர்களின் பதிவில் சொன்ன 'லாரா இஸ்லாத்துக்கு மாறிய' வதந்தி போன்று) பன்றி காய்ச்சல் எனப்படுவது பன்றிகளை உண்பதால் பரவக்கூடியது அல்ல. அதை வளர்ப்பவரின் மூலம் தொற்றிக்கொள்ளும் ஒரு வியாதியே ஆகும். இதை மிகதெளிவாக ஒரு பிரபலமான இஸ்லாமியா வலைத்தளம் வெளியிட்டுள்ளது. http://muslimmatters.org/2009/04/29/muslims-and-swine-flu/


இஸ்லாம் பன்றி மாமிசத்தை தடை செய்ததற்கு காரணம் அதன் மூலம் பல நோய்கள் பரவுவதே. அதில் பன்ரிக்க்காயச்சலும் அடங்கும். இதை பற்றின மிகத்தெளிவான விளக்கத்தை சகோதரர் அ மு செய்யது தந்திருக்கிறார்.

மேலும் இஸ்லாத்தில் ஆடு, மாடு, ஒட்டகம், கோழி போன்றவை ஹலாலான முறையில் மட்டுமே உண்பதற்கு தகுந்தவை ஆகும். உடனே ஹலால் என்றால் இஸ்லாமிய முறையில் அறுப்பது மட்டுமே என்று ஓன்றல்ல நினைக்க கூடாது. தூய்மையான, உடலுக்கு நன்மை விளைவிப்பதை மட்டுமே மனிதர்கள் உட்கொள்ள வேண்டும் என்கிறது குரான். அது மாமிசமானாலும் சரி, காய்கறிகள் ஆனாலும் சரி. //
mohammed,

இவை இன்றைக்குச் சொல்லப்படும் காரணமே, பொதுவாக பன்றிகள் மனித மலத்தை உண்ணுபவை என்பது எல்லோருக்குமே தெரியும், அதனால் விலக்கி வைக்கப்பட்டது என்கிற காரணம் வெளிப்படையானது. அதை சுகாதாரக் காரணம் என்று ஒப்புக் கொள்ளலாம். ஆனால் அவையே இன்றைய நிலையும் அல்ல, பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகள் தூய்மையாக வளர்க்கபடுபவை தூய்மையாக பராமறிக்கப்பட்டு வளர்ப்பதால் அதை உண்பவர்கள் உண்ணுகிறார்கள், அது அவர்களின் உணவு பழக்கம், அதை குறைச் சொல்லவும் தாழ்வாகவும் சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. எனக்கு தெரிந்து கோழிகளும் மனித மலம் கிடைத்தால் உண்ணக் கூடியது தான். நானே அதைப் பார்த்து இருக்கிறேன். பன்றி இறைச்சி இஸ்லாம் மதத்தில் தடை செய்யப்படுத்தி இருக்கிறது, குரான் காலத்தில் அரேபியாவில் கோழிகள் இருந்தால் கோழி இறைச்சி தடை செய்யப்பட்டு இருக்கும். கோழிகள் அப்போது இருந்தது என்கிற குறிப்பு அறிந்தால் சொல்லுங்கள். பன்றி மலம் உண்ணுவதால் தடை செய்யப்பட்டு இருக்கிறது அதனால் இஸ்லாமியர்கள் உண்ணுவதில்லை என்பது தானே உண்மை, அதற்கு ஏன் மருத்துவகாரணங்களை கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். பன்றிக்காய்சலால் எந்த ஒரு இனமும் அழிந்ததாக வரலாறு இல்லை, பன்றிக்காய்ச்சல் பறவைக்காய்ச்சல் போன்றே தற்காலிமான ஒன்றுதான்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அறிவே தெய்வம் said...
மதமும் மார்க்கமும் ரெடிமேடு சட்டை பேண்ட் மாதிரி.

மிச்சத்தை கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.

வாழ்த்துக்கள்.
//

யாருக்கும் பொருந்தும் வகையில் கிடைக்கும் என்று சொல்கிறீர்களா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

// வேடிக்கை மனிதன் said...
எல்லா மதங்களும் நல்லனவற்றையே தான் போதிக்கின்றன.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு விதத்தில் கடவுளை சென்றடைகின்ற மார்க்கத்தைத் தான் சொல்லித்தந்திருக்கின்றன.

மனிதன் அவற்றை கடைபிடித்து கடவுளை அறிவதற்குத் துப்பில்லை, அதைவிட்டு மற்ற மதத்தை மட்டம் தட்டுவதிலயும், தன் மதத்தை உயர்த்திக் காட்டுவதிலுமே நேரத்தை செலவிடுகின்றனர்.

மேலும் மதங்களை பற்றி முலுமையாக தெரியாதவர்கள் மலிவான பிரசங்கங்கள் செய்ய முயற்சித்ததாலயே பிரச்சினைகள் முலைக்க ஆரம்பித்தன.

என்னைக் கேட்டால் நீங்கள் எந்த மதத்தை சேர்ந்தவராகவாவது இருந்துவிட்டுப்போங்கள், அந்த மதங்கள் சொல்லித்தந்த 5முறை தொழுகைகளோ, பூசை, புனஸ்காரங்கள் பற்றி எல்லாம் கவலை படத்தேவை இல்லை.

உங்கள் வழியில் சக உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல்,அன்பு செலுத்தியும் மனசாட்சிக்கு உட்பட்டு பஞ்ஜமகா பாதகங்களை செய்யாமல் வாழ்ந்து வந்தாலே கடவுள் உஙகளை தேடிவருவார் என்பது என்கருத்து.
(மனம் அது செம்மைப் பட்டால் மந்திரங்கள் செபிக்கத்தேவையில்லை)
//

அருமையான பின்னூட்டம். நன்றி !

Javed சொன்னது…

\\ பன்றி மலம் உண்ணுவதால் தடை செய்யப்பட்டு இருக்கிறது அதனால் இஸ்லாமியர்கள் உண்ணுவதில்லை என்பது தானே உண்மை\\

சகோதரரே, நீங்கள் இஸ்லாமியர்களின் குரான், ஹதீத் பற்றி நன்கு அறிவீர்கள் என நான் நம்புகிறேன். குரான் என்பது முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகள். இறைவன் மனிதர்களுக்கு எது நல்லதோ அதை அனுமதித்து உள்ளான் , எது தீமையோ அதை தடை செய்துள்ளான் . பன்றி இறைச்சி மட்டுமல்லாது , மது, சூதாட்டம் இன்னும் பல விஷயங்களுக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.

பன்றியின் மாமிசம் அவை எவ்வளவு தூய்மையான இடத்தில் வளர்க்கப்பட்டாலும் அவை கேடு விளைவிப்பது தான் என்பதை நான் அளித்த சுட்டியில் பார்த்தல் அறிந்து கொள்வீர்கள்.

மேலும் நீங்கள் கூறுவது போல் பன்றி கழிவுகளை உண்பதால் மட்டுமே தடை செய்யப்படவில்லை. அது ஒட்டுமொத்தமாக உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஒரு பொருள்.

எல்லா பறவைகளின் இறைச்சியும், கடலில் உள்ள எல்லா தூயமயானவைகளும் மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. பாலூட்டும் மிருகங்களை பொறுத்த வரையில் ஆடு, மாடு, ஒட்டகம், மான், போன்ற உணவை மென்று சாப்பிடுபவை நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

குரான் கூறும் அறிவியல் உண்மைகள் எதுவும் நாங்களாக கற்ப்பனை செய்துகொண்டது இல்லை. பல உண்மைகள் இன்று அறிவியல் வல்லுனர்களால் நிரூபிக்கப்பட்டவை.

http://www.islamguiden.com/arkiv/quran_science.pdf

சகோதரரே , நான் தெளிவாக கூறியுள்ளேன், பன்றிக்கைச்சல் என்பது பன்றியின் இறைச்சியை உண்பதால் பரவவில்லை என்று. அதை முஸ்லிம்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றே பல இஸ்லாமிய இணைய தளங்கள் "நாம் தான் பன்றி சாப்பிடவில்லையே, நமக்கொன்றும் அந்த நோய் வராது" என்று முஸ்லிம்கள் நினைத்து அசட்டையாக இருக்க கூடாதென்று பல இஸ்லாமிய ஊடங்கங்கள் செய்தியை பரப்பி வருகின்றனர்.

இஸ்லாமிய சட்டங்கள் ஒரே ஒரு முக்கிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன: ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு அவை நன்மை பயக்க கூடியதாக இருக்க வேண்டும்.

Javed சொன்னது…

More articles on eating pork:

http://www.squidoo.com/Dangers_of_Pork

It is a fact that pigs are full of parasites irrespective of the place and their condition of breeding. Several diseases, including trichinosis, brain fever, etc are solely attributed to the consumption of pork. Whereas, you wont find any such disease directly transmitted from chicken or any birds to human beings.

Please note, these are the reasons known to human beings as of now so we attribute it to the ban on pork in Islam, but the Almighty GOD knows the best. For His Knowledge is over and above all that we humans know.

PORK — OR THE DANGERS OF PORK-EATING EXPOSED. By J. H. KELLOGG

http://www.giveshare.org/Health/porkeatdanger.html


I am sorry for typing this in English. Please accept my apologies for the same, brother.

கோவி.கண்ணன் சொன்னது…

//mohammed

சகோதரரே, நீங்கள் இஸ்லாமியர்களின் குரான், ஹதீத் பற்றி நன்கு அறிவீர்கள் என நான் நம்புகிறேன். குரான் என்பது முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகள். இறைவன் மனிதர்களுக்கு எது நல்லதோ அதை அனுமதித்து உள்ளான் , எது தீமையோ அதை தடை செய்துள்ளான் . பன்றி இறைச்சி மட்டுமல்லாது , மது, சூதாட்டம் இன்னும் பல விஷயங்களுக்கு இஸ்லாத்தில் தடை உள்ளது.

பன்றியின் மாமிசம் அவை எவ்வளவு தூய்மையான இடத்தில் வளர்க்கப்பட்டாலும் அவை கேடு விளைவிப்பது தான் என்பதை நான் அளித்த சுட்டியில் பார்த்தல் அறிந்து கொள்வீர்கள்.

மேலும் நீங்கள் கூறுவது போல் பன்றி கழிவுகளை உண்பதால் மட்டுமே தடை செய்யப்படவில்லை. அது ஒட்டுமொத்தமாக உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் ஒரு பொருள்.

எல்லா பறவைகளின் இறைச்சியும், கடலில் உள்ள எல்லா தூயமயானவைகளும் மனிதர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. பாலூட்டும் மிருகங்களை பொறுத்த வரையில் ஆடு, மாடு, ஒட்டகம், மான், போன்ற உணவை மென்று சாப்பிடுபவை நமக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

குரான் கூறும் அறிவியல் உண்மைகள் எதுவும் நாங்களாக கற்ப்பனை செய்துகொண்டது இல்லை. பல உண்மைகள் இன்று அறிவியல் வல்லுனர்களால் நிரூபிக்கப்பட்டவை.

http://www.islamguiden.com/arkiv/quran_science.pdf

சகோதரரே , நான் தெளிவாக கூறியுள்ளேன், பன்றிக்கைச்சல் என்பது பன்றியின் இறைச்சியை உண்பதால் பரவவில்லை என்று. அதை முஸ்லிம்கள் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றே பல இஸ்லாமிய இணைய தளங்கள் "நாம் தான் பன்றி சாப்பிடவில்லையே, நமக்கொன்றும் அந்த நோய் வராது" என்று முஸ்லிம்கள் நினைத்து அசட்டையாக இருக்க கூடாதென்று பல இஸ்லாமிய ஊடங்கங்கள் செய்தியை பரப்பி வருகின்றனர்.

இஸ்லாமிய சட்டங்கள் ஒரே ஒரு முக்கிய கோட்பாட்டின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளன: ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு அவை நன்மை பயக்க கூடியதாக இருக்க வேண்டும். //

நண்பர் mohammed,

எனக்கு இறைச்சி உண்ணும் பழக்கம் எதுவும் கிடையாது, எனவே நான் இதை உண்ணுவது / உண்ணக் கூடாது என்கிற உயர்ச்சி / தாழ்ச்சி பற்றி கருத்து ஏதும் இல்லை. உண்பவர்கள் உண்ணுகிறார்கள், பன்றி இறைச்சி மட்டுமல்ல கொழுப்போடு கூடிய எந்த இறைச்சியும் உடலுக்கு தீங்கானது தான். ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமானம் கொழுப்பு உணவுகள் அது சைவமாக கருத்தப்படும் நெய் கூட தவிர்க்கப்பட வேண்டியதே. இன்றைக்கு தாவிர உணவாக இருக்கட்டும், விலங்கு உணவாக இருக்கட்டும் எல்லாம் இரசாயண ஊட்டம் கொடுத்தே வளர்க்கப்படுவதையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், பன்றி இறைச்சியை விட மாட்டு இறைச்சி குறைவான ஆபத்து விளைவிப்பதாக எந்த அறிவியலும் சொல்லவில்லை. மாறாக கொழுப்புகளை தவிர்த்தே உண்ணச் சொல்கிறார்கள். குரான் / இறைவன் சொன்னான் அது சரியாகத்தான் இருக்கும் என்பது வெறும் ஆழ்ந்த நம்பிக்கை மட்டுமே, அதை வழியுறுத்த எந்த முகாந்திரமும் இல்லை. விலங்குகளைப் படைத்ததே மனிதன் உண்ணுவதற்கு என்கிற சித்தாந்தகள் மத நம்பிக்கை மட்டுமே, ஏனெனில் இறை நம்பிக்கை உடைய மற்ற சாரர்கள், ஏனைய உயிரினங்களுக்கும் உலகில் வாழ சம உரிமை இருக்கிறது என்கிறார்கள்.

நீங்களும் பன்றியை உண்ணுங்கள் என்று உங்களை யாரும் எதற்காகவும் வழியுறுத்த முடியாதது போல் மற்றவர்களை நீங்களும் உண்ணாமல் தடுக்க காரணங்கள் கூறுவது முறையற்றதே.

Javed சொன்னது…

\\எனக்கு இறைச்சி உண்ணும் பழக்கம் எதுவும் கிடையாது, எனவே நான் இதை உண்ணுவது / உண்ணக் கூடாது என்கிற உயர்ச்சி / தாழ்ச்சி பற்றி கருத்து ஏதும் இல்லை. உண்பவர்கள் உண்ணுகிறார்கள், பன்றி இறைச்சி மட்டுமல்ல கொழுப்போடு கூடிய எந்த இறைச்சியும் உடலுக்கு தீங்கானது தான். ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க வேண்டுமானம் கொழுப்பு உணவுகள் அது சைவமாக கருத்தப்படும் நெய் கூட தவிர்க்கப்பட வேண்டியதே. இன்றைக்கு தாவிர உணவாக இருக்கட்டும், விலங்கு உணவாக இருக்கட்டும் எல்லாம் இரசாயண ஊட்டம் கொடுத்தே வளர்க்கப்படுவதையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்,\\

இதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனக்கு.

\\பன்றி இறைச்சியை விட மாட்டு இறைச்சி குறைவான ஆபத்து விளைவிப்பதாக எந்த அறிவியலும் சொல்லவில்லை\\

மாட்டிறைச்சியும் அதிக கொழுப்புடையது தான். ஒப்புக்கொள்கிறேன். தக்காளியும், உருளை கிழங்கும், ஆட்டிறைச்சியும், மாட்டிறைச்சியும், கோழியும், எதுவானாலும் அளவுடன் சாப்பிடாவிட்டால் தீமை விளைவிப்பதே. அதை தான் நபிகள் நாயகம் "வயிற்றில் மூன்றில் ஒரு பாகம் நிறையும் அளவே உன்ன வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்கள்.

ஆனால் பன்றியின் இறைச்சி மூலமாக மூளை காய்ச்சல், trichinosis, போன்ற பல நோய்கள் நேரடியாக பரவுகின்றன, இதில் அவை வளர்க்கப்படும் இடம் ஒரு பொருட்டே அல்ல என்பதை நான் அளித்த சுட்டியை கண்டால் விளங்கி கொள்ளலாம்.

\\நீங்களும் பன்றியை உண்ணுங்கள் என்று உங்களை யாரும் எதற்காகவும் வழியுறுத்த முடியாதது போல் மற்றவர்களை நீங்களும் உண்ணாமல் தடுக்க காரணங்கள் கூறுவது முறையற்றதே.\\

யாரையும், எதற்காகவும் வற்புறுத்த முடியாது. நன்மையும் தீமையும் தனி தனியே இருக்கின்றன. விரும்பியவர்கள் நன்மையை தேர்ந்தெடுக்கட்டும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்