பின்பற்றுபவர்கள்

22 டிசம்பர், 2008

சன் செய்தி வாசிப்பாளர்கள் நெற்றியில் ?

சன் டிவியில் நான் பார்க்கும் ஒரே ஒரு நிகழ்ச்சி சன் செய்திகள் தான். எப்போதாவது திரைப்படங்களைப் பார்ப்பேன். இங்கே சிங்கையில் தமிழ்நாட்டுச் செய்திகள் கேட்க ஒரே ஒரு ஒளி/ஒலி வழி என்றால் சன் டிவிதான். விஜய் டிவியும் வரும் அதில் செய்திகள் வாசிப்பது இல்லை. அதனால் வேறு வழியின்றி சன் செய்திகளை பார்க்கும் துர்பாக்கிய நிலையில் பலர் உண்டு.

நேற்று சன்னில் செய்தி வாசிக்கும் பொழுது செய்தியாக 'திண்டுக்கல் சாரதியையும்' சேர்த்தே வாசித்தார்கள், "தமிழ்நாடு திரையரங்கும் எங்கும் கட்டுக்கு அடங்காத கூட்டம், தாய்மார்கள் திரையரங்குக்கு படையெடுக்கின்றனர் என்று சொல்லிவிட்டு....திரையரங்கில் இருந்து வெளியே வருபவர்களின் புகழ்ச்சிகளைக் காட்டினார்கள். வழக்கமாக திரைவிமர்சனத்தில் தான் இதுபோன்று வரும், சன் செய்தியில் இதை விளம்பரமாகக் காட்டினாலும் பாரவாயில்லை, செய்திகளில் ஒரு செய்தியாக இந்த தகவலை, எதோ தமிழ்நாட்டின் மின்சார பற்றாக் குறை தீர்ந்து மக்கெளெல்லாம் ஒளிவெள்ளத்தில் மிதந்து மகிழ்ச்சியை தெர்விக்கும், எதோ ஒரு புரட்சி நடந்தது போல் திண்டுக்கல் சாரதி திரைப்படம் வெளியானதைப் பற்றிய விளம்பரத் தகவலை செய்தியாக நுழைத்துவிட்டனர்.

எல்லோருமே காசு கொடுத்து தான் தொலைக்காட்சி இணைப்பு வாங்குகிறோம், இவர்கள் விளம்பரம் போடவேண்டுமென்றால் செய்திக்கு நடுவே விளம்பரமாகப் போட்டால் வேறு சேனலையாவது மாற்றிக் கொள்ளலாம், ஒரு செய்தியாகவே அதனைப் போட்டது, ஒருவகையான ஏமாற்று, காசு கொடுத்து தானே கனெக்சன் வாங்குறோம், எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்க வேண்டியதும் நாம்தான். எதோ செய்திவாசிக்கிறார்களே என்று பார்த்தால் அந்த நம்பிக்கையையும் மோசடி செய்து...இப்படியெல்லாம் மாறன் சகோதரர்கள் பிழைக்கும் அளவுக்கு முரசொலி மாறன் தன் குடும்பத்தை பிச்சை எடுக்கவச்சிட்டா போய் சேர்ந்தார் என்று நினைக்க வேண்டி இருக்கு.

கடந்த மூன்று மாதமாக முதலிடத்தில் இருக்கும் 'காதலில் விழுந்தேன்' இனி இரண்டாவது இடத்துக்கு போகுமா ? டாப் டென் மூவிஸ் பார்க்கிறவர்கள் சொல்லுங்க :) அப்ப அடுத்து எந்திரன் வரும் வரை முதலிடம் ? சந்தேகமே இல்லை, திண்டுக்கல் சாரதிக்குத்தான்.

எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப் போறாங்களாம், இனி வரும் நாட்களில், நாள்தோறும் செய்தி வாசிப்பாளர்களின் நெற்றியில் 'எந்திரன்' படத்தின் குட்டி ஸ்டில்களை (விளம்பரத்திற்காக) ஒட்டிவிட்டு... படத்தைப் பற்றி நாள் தோறும் (பெரும் எதிர்பார்ப்பு) விளம்பரம் ஏற்படுத்தினாலும் இனி வியப்படைய ஒன்றும் இல்லை.

குறிசொல் : சன் செய்தி விமர்சனம் !

19 கருத்துகள்:

நையாண்டி நைனா சொன்னது…

வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன். இது ஒரு திடீர் பயணமாக அமைந்து விட்ட காரணத்தால் முன் அறிவிப்பு செய்ய முடிய வில்லை. ( என்னமோ என்னை நிறைய பேரு தேடற மாதிரி எனக்கு ஒரு நெனப்பு).

இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
வெளி உலகம் சுற்றி, வலை உலகம் மீண்டு வந்து விட்டேன். இது ஒரு திடீர் பயணமாக அமைந்து விட்ட காரணத்தால் முன் அறிவிப்பு செய்ய முடிய வில்லை. ( என்னமோ என்னை நிறைய பேரு தேடற மாதிரி எனக்கு ஒரு நெனப்பு).

இனி மீண்டும் பதிவுகளும் பின்ணூட்டங்களும் தொடரும்......
//

மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு உங்களை காணும்,கவலையாக இருந்தது, மின் அஞ்சல் கூட அனுப்பினேன். பாதுகாப்பாக இருந்தீர்களா ?

மும்பையில், அருகில் இருந்தவர் அதுபற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்குமே.

நட்புடன் ஜமால் சொன்னது…

\\எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்க வேண்டியதும் நாம்தான்\\

அப்படீன்னு ஒன்னு நிஜமாவே இருக்காண்ணா

நட்புடன் ஜமால் சொன்னது…

\\எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப் போறாங்களாம், இனி வரும் நாட்களில், நாள்தோறும் செய்தி வாசிப்பாளர்களின் நெற்றியில் 'எந்திரன்' படத்தின் குட்டி ஸ்டில்களை (விளம்பரத்திற்காக) ஒட்டிவிட்டு... படத்தைப் பற்றி நாள் தோறும் (பெரும் எதிர்பார்ப்பு) விளம்பரம் ஏற்படுத்தினாலும் இனி வியப்படைய ஒன்றும் இல்லை.\\

இப்படி செய்யாங்காட்டி வியப்பாயிருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//அதிரை ஜமால் said...
\\எதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மாணிக்க வேண்டியதும் நாம்தான்\\

அப்படீன்னு ஒன்னு நிஜமாவே இருக்காண்ணா
//

செய்தி பார்க்கலாம் என்று நினைத்து செய்தி பார்த்தால் பட விளம்பரமே செய்தியாக போட்டால் எரிச்சல் தான் வரும், இவர்கள் விளம்பரத்தை விளம்பர ஸ்லாட்டில் (கமர்சியல் ப்ரேக்) போட்டால் நமக்கு ஒன்றும் இல்லை. அதைத்தான் குறிப்பிட்டேன்

ஜெகதீசன் சொன்னது…

//
எந்திரன் படத்தையும் மாறன் பிரதர்ஸ்தான் தயாரிக்கப் போறாங்களாம், இனி வரும் நாட்களில், நாள்தோறும் செய்தி வாசிப்பாளர்களின் நெற்றியில் 'எந்திரன்' படத்தின் குட்டி ஸ்டில்களை (விளம்பரத்திற்காக) ஒட்டிவிட்டு... படத்தைப் பற்றி நாள் தோறும் (பெரும் எதிர்பார்ப்பு) விளம்பரம் ஏற்படுத்தினாலும் இனி வியப்படைய ஒன்றும் இல்லை.
//

இந்த வரிகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன்!

ஜெகதீசன் சொன்னது…

டாக் ஆப் த யுனிவர்ஸாக இருக்கும் ஒரு படத்தைப் பற்றி செய்திகளில் சொல்வது தவறா? நியாயமாகப் பார்த்தால்,நீங்கள் இதைப் பற்றிச் செய்தி வெளியிடாத சேனல் நியூஸ் ஏசியாவையும், பிபிசி மற்றும் மற்ற சேனல்களையும் கண்டித்துத் தான் பதிவெழுதியிருக்க வேண்டும்...

நையாண்டி நைனா சொன்னது…

ஆமாம்... அனைவரும்... பயந்தே போய் விட்டார்கள்.... எங்கள் வீட்டிலும் வந்து உன் முகத்தையாவது காட்டி விட்டு போ என்று அழாத குறை இல்லை, அழுதே அழைத்து விட்டார்கள்..... அதனால் சென்று வந்தேன்....

தங்களின் அன்பிற்கு என்றும் வணங்கி, பணிகிறேன்

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

அக்னி பார்வை சொன்னது…

இன்னது நீங்க சன் நிவுஸ் பர்கிரிங்கள் வேண தல, கண்ணுக்கு ஆபத்து..

Poornima Saravana kumar சொன்னது…

நேற்று செய்தி பார்த்து விட்டு புலம்பிய என் புலம்பல்களையும் ( இவங்க பண்ற அநியாயத்த கேட்க யாருமே இல்லையா) பதிவில் போட்டதிற்கு நன்றிங்க அண்ணா.. இப்போ வரப் போகும் அனைத்து(கிட்டத்தட்ட) படங்களையும் அவர்களே குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் போல.. இனி செய்தி பார்க்க வேற நல்ல (அப்படி ஏதும் இருந்தா யாரவது எனக்கும் சொல்லுங்களேன்) சேனல் தேட வேண்டியதுதான்..

கோவி.கண்ணன் சொன்னது…

//PoornimaSaran said...
நேற்று செய்தி பார்த்து விட்டு புலம்பிய என் புலம்பல்களையும் ( இவங்க பண்ற அநியாயத்த கேட்க யாருமே இல்லையா) பதிவில் போட்டதிற்கு நன்றிங்க அண்ணா.. இப்போ வரப் போகும் அனைத்து(கிட்டத்தட்ட) படங்களையும் அவர்களே குத்தகைக்கு எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் போல.. இனி செய்தி பார்க்க வேற நல்ல (அப்படி ஏதும் இருந்தா யாரவது எனக்கும் சொல்லுங்களேன்) சேனல் தேட வேண்டியதுதான்..

2:24 AM, December 23, 2008
//

PoornimaSaran,

நேற்று மட்டுமல்ல, முந்தநாள் செய்தியிலும் வந்தது, வானிலை அறிக்கை போல ஒரு மாதம் வாசிப்பாங்க போல, செய்தி நேரம் வேற சேனலுக்கு போய்ட வேண்டியது தான்.

ஆளவந்தான் சொன்னது…

//.இப்படியெல்லாம் மாறன் சகோதரர்கள் பிழைக்கும் அளவுக்கு முரசொலி மாறன் தன் குடும்பத்தை பிச்சை எடுக்கவச்சிட்டா போய் சேர்ந்தார் என்று நினைக்க வேண்டி இருக்கு.//

நாக்க பிடிங்கிக்கிற மாதிரி கேட்டீங்க..

மீரா ஜமால் சொன்னது…

நல்ல வேலை, எங்க வீட்டுல டிஷ் கண்றாவியெல்லாம் எட்டிக்கூட பார்க்காது.




பந்தர் அலி ஆபிதீன்
பரங்கிப்பேட்டை.

பிறன் மணை நோக்காதவன் சொன்னது…

good post. keep it up. Sun TV -kku sariyaana saattai adi

கோவி.கண்ணன் சொன்னது…

//பிறன் மணை நோக்காதவன் said...
good post. keep it up. Sun TV -kku sariyaana saattai adi
//
arasu, பிறன் மணை நோக்காதவன் இன்னும் எத்தனை நாளைக்கு இந்த பெயர் ?

லிட்டில் இந்தியா, தேக்கா, இவையெல்லாம் குறிப்பிடும் நீர் சிங்கை அனானியா ?

பிறன் மணை நோக்காதவன் சொன்னது…

இல்லை ஆனால் அடிக்கடி nice- ல் சிங்கை வருகிற சின்னத் தம்பி. அண்ணா உங்களைப் போல நானும் நடு நிலை தான். நல்ல போஸ்ட்-ஐ தவறாமல் ஊக்கப்ப்படுத்துவது என் வழக்கம். எனக்கும் சன்-ஐ பிடிக்காது.

வால்பையன் சொன்னது…

கலைஞர் தொலைகாட்சியும் சலைத்ததல்ல!

தனக்கு சாதகமான செய்திகளை தான் எல்லா தொலைகட்ட்சியும் தருகிறது!

தவிர்க்க வேண்டியது
சன் செய்தி, ஜெயா செய்தி, கலைஞர் செய்தி

Unknown சொன்னது…

கோவி.கண்ணன் சார்,
இதில் அதிசயப்பட ஒன்றும் இல்லை.
business....business ....business வழக்கமா நடக்கூடியதுதான்.

கலைஞர் டீ.வி. போட்டி ஆனாவுடன் இவர்கள்“திருப்பதி பிரம்மோத்சவம்”
ஒளிப்பரப்பினார்கள்.என் பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்து விட்டது.

ராஜ் டீவியை போட்டுப் படுத்தினார்கள்.இவர்களை கலைஞர் டீ.வி. படுத்தியது.

“அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்”

“முற்ப்கல் செய்யின்”

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்