பின்பற்றுபவர்கள்

7 டிசம்பர், 2008

டிச 6 : தேன்கூட்டில் கல் எறிவதற்கு முன் ...

இஸ்லாமியர்களில் தீவிரவாதிகளை உருவா(க்)கிய நாள் தான் டிச 6. அந்த நிகழ்வுகளைத் தடுக்காமல் இருந்ததற்காக காங்கிரசிற்கும் இதில் பங்கு உண்டு. ஆட்சி பறிபோய்விடப் போகிறது என்ற பயத்தில் மறைந்த நரசிம்மராவ் கண் எதிரே நடந்த இந்த சமத்துவ இடிப்பை தடுக்காமல் இருந்துவிட்டார். கரசேவை என்ற பெயரில் தமிழ்நாட்டிலிருந்தும் செங்கற்கள் அனுப்பப்பட்டது. அதற்கு அம்மாவும் ஆசி கொடுத்தனுப்பினார். 1992 டிச 6 அந்த பயங்கரம் நடந்த அன்று நான் ஹைதராபாத்தில் தான் இருந்தேன். ஊரடங்கு சட்டம் போடவில்லை என்றாலும் நகரே மயான அமைதியில் இருந்தது. போகும் வரும் வாகனங்களெல்லாம் சோதனைக் குட்படுதப்பட்டது. பெரிய விரும்பத்தகாத (அசம்பாவிதங்கள்) நிகழ்வுகள் எதும் அங்கு நடைபெறவில்லை. மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வந்தது நகரம்.

1992 டிசம்பர் 6 க்கு பிறகு ஒவ்வொரு ஆண்டிலும் இந்தியாவிற்கு 'திக்' 'திக்' நாளாகவே டிச 6 இருப்பதை அனைவரும் அறிவோம், அன்றைய நாள் பேருந்து பயணம் செய்பவர்கள், தொடர்வண்டி பயணம் செய்பவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அச்சத்துடனேயே பயணம் செய்கிறார்கள். இவை ஏன் ? ஏன் ? தனிமனித சுதந்திரத்தையே இழந்து ஆடையையும் அவிழ்த்து சோதனை செய்யும் இந்த அவமானம் பொதுமக்களுக்குத் தேவையா ? இதைத் தூண்டியவர்கள் இதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள். அடிப்பட்ட பாம்பும் சீறுவது இயற்கைத் தானே ?

பெரும்பாண்மை என்கிற திமிரில் பாபர் மசூதியை இடித்த கயவர்கள் இதையெல்லாம் இப்போதாவது நினைத்துப் பார்க்கிறார்களா ? என்றால் அதுவும் இல்லை, அதன் பிறகும் அங்கங்கே ஒரிசா பயங்கரம், கோத்ரா சம்பவம் என மேலும் மேலும் இதைத் தூண்டிவிடுவதன் மூலம் மதவெறி அணையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். சிறுபான்மையினராக இருப்பவர்கள் என்ன செய்வார்கள் ? துடிப்புள்ள இளைஞர்கள் பழிக்கு பழிவாங்கவேண்டும் என்று தான் துடிப்பார்கள். 1992 க்கு பிறகு முஸ்லிம் அமைப்புகள் பல தோன்றியதற்கு இதுவே காரணம். ஆர்எஸ்எஸ் என்று ஒரு அமைப்பாக இருந்த இந்து சார்ப்பு அடிப்படை வாதம், சங்கர்பரிவார், பஜ்ரங்தள் போன்ற பெயர்களிலும் சிவசேனா, பாஜக என அரசியல் அமைப்புகளாகவும் வளர்ந்துவிட்டன. இதே வளர்ச்சியில் இஸ்லாமிய அமைப்புகளில் சிமி மற்றும் ஏனைய அமைப்புகள் உருவாகிவிட்டன.

மோடி போன்ற அரசியல்வாதிகளில் ஆசிர்வாதத்துடன் நடைபெறும் பயங்கரவாதங்களை எதிர்கொள்ள தீவிரவாதத்தை கையில் எடுப்பதையும் அதை மறைவாக தயார் செய்யும் நிலைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். டிச 6 இஸ்லாமியர்கள் அவமானம் அடைந்த நாளாகவே அவர்களுக்குச் சொல்லப்பட்டு பழிக்கு பழிவாங்கும் நடவெடிக்கைகளுக்கு தூபம் போடப்படுகிறது. யார் காரணம் ? ஒருவரின் இருப்பிடம் தேடி வீடுபூந்து ஒருவரை அடிக்கிறோம், அவர் நம்மை தேடிவந்து அடிக்காவிட்டாலும் நாளை நாம் அந்த வழியாக போனால் சலாம் போட்டு தேனீர் கொடுத்து விருந்து வைப்பாரா ?

டிசம்பர் 6 கேடுகெட்ட செயலால் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான், தூண்டிவிட்ட தலைவர்களும் அதனை ஆதரித்த அரசுகளும் போலிஸ் பாதுகாப்பில் இருப்பார்கள். இதுபோன்ற இருபக்க தீவிரவாத அமைப்புகள் மோதிக்கொண்டால் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்ளவேண்டியது தானே, ஏன் பொதுமக்களை கொல்லவேண்டும் ? இந்த கேள்வி இஸ்லாமிய அமைப்புகளுக்கும் எழுந்திருக்கலாம் அதனால் தான் டிச 6 தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் பெரிய அளவில் நடக்கவில்லை. அப்படி நடந்துவிட்டால் பொதுமக்கள் அனைவருமே இஸ்லாமியரின் செயலாக அதனை கருத ஆரம்பித்துவிடுவர் என்றே அடக்கிவாசிக்கின்றனர். மற்றபடி அதனை மறந்திருக்க மாட்டார் என்பதை அரசும் நம்புவதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்கிறது.


(பாபர் மசூதி இடிப்பு கரசேவைக்கு ஆர்வமுடன் சென்ற "சாதுக்கள்" மேலும் படங்களுக்கு...)

டிசம்பர் 6,

பொது இடங்களில் அரசுக்கு பாதுகாப்பு செலவுகள் கூடுதலாகும் நாள் (பொதுமக்கள் வரிப்பணம்)

பொதுமக்கள் அச்சம் அடையும் நாள் (குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றை செய்ய முடியாமல் போவது)

அரசியல்வாதிகள் பாதுகாப்புடன் இருக்கும் நாள். (கூடுதல் பாதுகாப்பு...அரசு வரிப்பணம்)

இந்த டிசம் 6 இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு / நினைவு நாளாக அறிவிக்கலாம். அட மூடர்களே, அடுத்தவர் உடைமை என்னும் தேன்கூட்டிற்குள் கல் எறியும் முன், இனியாவது கேடுகெட்ட செயலைச் செய்யும் முன், பொதுமக்கள் பின்னாளில் சந்திக்கப் போகும் தீமைகளையும், அவதிகளையும் நினைத்துப் பாருங்கள். ஆனால் இதுபற்றி விழிப்புணர்வு ஊட்டாமல் ஆண்டுக்கு ஆண்டு ஊடகங்களால் டிசம்பர் 6 ஐப் பற்றி பதிய வைப்பதெல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகளால் எங்கும் குண்டு வெடிக்கலாம் என்பது மட்டுமே.

சென்ற ஆண்டு கட்டுரை இங்கே

9 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்..

pinnuttam unkal vaarthaikale

கோவி.கண்ணன் சொன்னது…

//pinnuttam unkal vaarthaikale//

புரியலை, நான் சொல்வதற்கு மாறாக எதும் நடந்து கொண்டேனா ?

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி கண்ணன், நீண்ட காலத்திற்கு பிறகு எனது பின்னூட்டம் இங்கே.

உங்கள் பதிவில் இட்ட படம் (சாதுக்கள் இருப்பது) பாபர் மசூதி பகுதி அல்ல. கும்பமேளா மைதானம். பின்புறம் அக்பர் கோட்டை தெரிவதை காணலாம்.

மேலும் இந்துத்துவ சாதுக்கள் சென்றார்கள் என்பதற்கு சாட்சிகள் இருந்தாலும், அயோதியா ஓர் அரசியல் மேடை. அதில் சில ஆன்மீகவாதிகள் பலியானார்கள் என்பது உண்மை. அயோத்தியா பற்றி பல உண்மைகள் தெரிந்து கொள்ள அங்கு ஒருமுறை சென்று வாருங்கள். புரியும். தென்னிந்தியாவை சேர்ந்த யாரும் மத பிரச்சனையின் வலியையும் மாதிப்பையும் முற்றிலும் உணர்ந்தவர்கள் அல்ல.

எனது கருத்து இது தான். ஆன்மீக விஷயங்களையும், படங்களையும் ஆய்வுக்கு பிறகு வெளியிடுங்கள். இது எனது கோரிக்கையும் கூட

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

உங்கள் சிந்தனையில் என்ன உள்ளதோ..அதை பதிவுலும் பார்க்கமுடிந்தது..என்று பாராட்டவே அப்படி எழுதினேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி கண்ணன், நீண்ட காலத்திற்கு பிறகு எனது பின்னூட்டம் இங்கே.//

அதற்கு காரணமெல்லாம் கேட்கமாட்டேன். :)

//உங்கள் பதிவில் இட்ட படம் (சாதுக்கள் இருப்பது) பாபர் மசூதி பகுதி அல்ல. கும்பமேளா மைதானம். பின்புறம் அக்பர் கோட்டை தெரிவதை காணலாம்.//

ஸ்வாமி ஓம்கார்,

நான் இணைத்துள்ள இணைய பக்கதில் இருந்த படத்தைத் தான் நான் இணைத்தேன், அதில் நிர்வாணமாகவே இருந்ததில் சிறு எடிட் செய்து போட்டேன்.

நீங்கள் சுட்டிய பிறகு, மீண்டும் இணையத்தில் தேடியபோது அவை போன்றவை கும்பமேளா படங்கள் என்று தெரிந்தது. சுட்டியதற்கு நன்றி !

//மேலும் இந்துத்துவ சாதுக்கள் சென்றார்கள் என்பதற்கு சாட்சிகள் இருந்தாலும், அயோதியா ஓர் அரசியல் மேடை.//

அரசியலும் (மத)ஆன்மீகமும் ஒன்றை ஒன்று தீர்மாணிப்பவை. அயோத்தியா வெறும் அரசியல் மேடை அல்ல :)

//அதில் சில ஆன்மீகவாதிகள் பலியானார்கள் என்பது உண்மை.//

ஈயடிக்கிற இடத்திற்கு எறும்பு செல்லலாமா ? அவர்களை ஆன்மீகவாதிகள் என்று சொல்கிறீர்களா ?

//அயோத்தியா பற்றி பல உண்மைகள் தெரிந்து கொள்ள அங்கு ஒருமுறை சென்று வாருங்கள். புரியும்.//

ஐயையோ... இராமாயண இராமனே அங்கு இருக்கிறான் என்று சொன்னாலும் அங்கு செல்லும் ஆர்வம் எனக்கு இல்லை. ஏனென்றால் இராமயணம் காட்டும் ராமன் பற்றி எனக்கு உயர்ந்த எண்ணம் கிடையாது. ராமன் இருக்கிறான் ஆனால் இராமாயணம் காட்டும் ராமன் அல்ல. அந்த இராமனை நான் அறிவேன்.

//தென்னிந்தியாவை சேர்ந்த யாரும் மத பிரச்சனையின் வலியையும் மதிப்பையும் முற்றிலும் உணர்ந்தவர்கள் அல்ல.//

நல்லவேளை இங்கே மதம் என்றே தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறீர்கள், ஆன்மிகம் என்று சொல்லவில்லை. ஆன்மீகவாதிகளுக்கு இராமரானாலும் பாபரானாலும் ஒன்றுதானே.

//எனது கருத்து இது தான். ஆன்மீக விஷயங்களையும், படங்களையும் ஆய்வுக்கு பிறகு வெளியிடுங்கள். இது எனது கோரிக்கையும் கூட
//
ஆன்மிகம் என்பது தனிமனித உணர்வுகள் தான். அவரவர்க்கு மாறுபடும். எனவே எது சரி என்று சொல்லமுடியாது. ஒன்றே என்றிருந்தால் ஷங்கரர் வழி, இராமனுஜர் வழி என்றெல்லாம் இருக்குமா ? இதில் பெரிதாக ஆராய ஒன்றும் இல்லை. ஆனால் அவர்களைப் பற்றி எழுதும் போது அவற்றைப் பற்றி அறிந்து எழுதலாம் ஏனெனில் அது வரலாறு.

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
உங்கள் சிந்தனையில் என்ன உள்ளதோ..அதை பதிவுலும் பார்க்கமுடிந்தது..என்று பாராட்டவே அப்படி எழுதினேன்
//

நன்றி ஐயா !

Muthu சொன்னது…

ஓம்கார் ஸ்வாமிகள் இன்னும் கொஞ்சம் வெலாவாரியாக சொன்னால் நாங்களும் நாலு விசயம் தெரிஞ்சிக்குவோம் :)

சிநேகிதன் அக்பர் சொன்னது…

கோவி சார்
நான் கடந்த இரு வருடமாக பதிவுகளை வாசிக்கிறேன்

உங்களின் இந்த பதிவு அப்பாவி மக்களின் உள்ளத்தின் பிரதிபலிப்பு.

நான் சௌதியில் ப‌ணி புரிகிறேன், இங்கு நாங்க‌ள் ம‌த‌ம் பாராம‌ல் இந்திய‌ர்க‌ளாக‌வே வாழ்கிறோம்.
நான் ஒரு முஸ்லிம் ஆனால் எனக்கு எல்லா நாண்பர்களும் உண்டு
நாலு ஊருக்கு போய் வ‌ந்த‌வ‌ர்க‌ளுக்கு பொதுவாக‌ ம‌த‌ம் ஒரு இடையூறு அல்ல‌
ம‌த‌ம் ந‌ம‌க்கு வ‌ழி க‌ட்ட‌ ப‌ய‌ன்ப‌டுகிறது அர‌சிய‌ல் ஆக்க‌ அல்ல.

அரசியல்வாதிகளே அன்றாட‌ வாழ்க்கைக்கு கஷ்ட‌ப‌டும் ம‌க்க‌ளுக்கு வ‌ழிக‌ட்டுவ‌த‌ற்கு ப‌தில் க‌ஷ்ட‌த்தை மேலும் அதிகமாக்காதீர்க‌ள்

விரைவில் வலைபதிவு எழுதுகிறேன்.

நன்றி.

tamiloviya சொன்னது…

//இஸ்லாமியர்களில் தீவிரவாதிகளை உருவா(க்)கிய நாள் தான் டிச 6.//

மூல காரணத்தை சரியாக படம்பிடித்துள்ளீர்கள் கோவி. கண்ணன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்