பின்பற்றுபவர்கள்

24 டிசம்பர், 2008

சூடான இடுகை குளிர்காயும் பதிவர்கள் !

நான்கு பதிவர்கள் எழுதிய இடுகைகள் சூடான இடுகைப் பகுதியில் காட்டப்படுவதில்லை என்ற தகவலை கடந்த ஒருவாரம் தமிழ்மண சூடான இடுகைப் பகுதியையும், பதிவர்களின் பதிவுகளின் வாசகர் வருகைக் கணக்கையும் வைத்து எழுதி இருந்தேன்.

சூடான இடுகையில் திரட்டப்படாததால் தமிழ்மணத்தை கண்டிப்பதாகவோ, அதற்காக வருத்தப்படுவதாகவே நான் குறிப்பிடவில்லை. மற்ற மூன்று பதிவர்களும் அவ்வாறே சொல்லிவிட்டார்கள். லக்கிலுக் 'கவலைப்படவில்லை' என்றார், அவதூறு ஆறுமுகமும் 'புதியவர்கள் வாய்ப்பு பெறட்டுமே' என்று வெளிப்படையாக சொல்லியாதாக வட்டாராச் செய்திகள் அறிவிக்கின்றன, டோண்டு இராகவன் பெயரிலி மீது குற்றச் சாட்டுகளைச் சொல்லி முடித்துக் கொண்டார். ஆக நால்வருமே இதற்காக வருத்தப்படவில்லை.

ஆனால் சிலப்பதிவர்கள் இந்த பிரச்சனையில் நாங்களெல்லாம் அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், ஒப்பாறி வைப்பதாகவும் எழுதுகிறார்கள்.

தமிழ்மணமும் சில "மூத்தபதிவர்களின்" அநாகரீகமும்! - வரூண்

பிரபல பதிவர்களே, ஒப்பாரி வைப்பதை நிறுத்துங்கள் - காட்டாமணக்கு

சூடான இடுகைப் பகுதியில் நீக்கப்பட்ட பதிவர்கள் 3 - 4 ஆண்டுகளாக எழுதுபவர்கள், சூடான இடுகைப் பகுதியே கடந்த ஆண்டுதான் தமிழ்மணத்தில் உருவாக்கப்பட்டது, அதற்கும் முன்பே தொடர்ந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சூடான இடுகைப் பகுதி சில நாட்கள் தற்காலிகமாக இல்லை என்ற நிலையிலும் எழுதிக்கொண்டு தான் இருந்தனர். தற்பொழுது நீக்கப்பட்ட பிறகும் எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பதிவர் வருண் என்பவர் தனது இடுகையில், அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்றும், இதற்கு இவர் சொல்லும் காரணம், 'வெறி நாய், சொறி நாய் என்றெல்லாம் தலைப்பு வைத்தால் அது அநாகரீகம் இல்லையா ? என்று கேட்கிறார்

எந்த ஒரு வசைச் சொல்லும் கூட சொல்லப்படுபவரின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் அநாகரீகம் இல்லை என்பதே நவீன சித்தாந்தம், சேரியில் இருப்பவன் 'ங்கோத்தா.........' என்று தான் திட்டுவான், சேரியைப் பற்றி இலக்கியம் எழுதுபவர் அதையும் பதிய வைத்தாகவேண்டும், பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைப் பற்றி எழுதுபவர் அங்கு நடக்கும் அசிங்கங்களை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதவேண்டும், அங்கெல்லாம் நாகரீகம் மனதில் கொண்டு எழுதினால், இயல்பை பதிய வைக்கவே முடியாது. ஜ்யோராம் சுந்தரின் காமக் கதைகள் பதிவுகள் அந்தக் கண்ணோட்டத்தில் தான் எழுதப்படுகிறது.

செய்தித்தாள்களில் தலைப்பை வைத்துதான் செய்திகள் ஈர்க்கப்படுகின்றன. வாசகர்களை ஈர்பதற்கு, அதை தவறாக செய்தி ஊடகங்கள் பயன்படுத்துவது போலவே பதிவர்களும் நடந்து கொள்கிறார்கள், சுண்டி இழுக்கும் தலைப்பை வைத்து மொக்கைப் பதிவுகளைக் கூடப் போடலாம், எழுதுபவர் யாரென்றால்லாம் பார்க்க மாட்டார்கள் என்பதற்காகவே 'சொறிநாய்...வெறிநாய்' பதிவை பதிவர் வட்டத்திற்காக எழுதினேன்.

"சொறிநாய் வெறிநாய்" என்ற தலைப்பில் யாரையோ திட்டுவதாகவே புரிந்து கொண்டு பதிவர்கள் அந்த பதிவைப் பலர் படித்தனர், அதுவும் சூடான இடுகைக்கு வந்தது, நான் அந்த பதிவில் சொல்லி இருந்ததும் அதுதான். தலைப்பை வைத்து ஆர்வத்தினால் மொக்கை பதிவுகளைக் கூட சூடாக்குவது படிப்பவர்கள் தான், வெறும் தலைப்புக்கு முதன்மைத்துவம் கொடுப்பதை நிறுத்தினால் தரமான இடுகைகள் படிக்கப்பட்டு சூடான இடுகைக்கு வரும் என்பதைத் தான் அந்த பதிவின் மூலம் சுட்டினேன். அந்த பதிவில் எதாவது அநாகரீகம் இருப்பதாகச் சுட்டினால் வருத்தம் தெரிவித்து அந்த இடுகையை நீக்குகிறேன்,

******

'சூடான இடுகையில் நீக்கம்' குறித்த பதிவில் தமிழ்மணம் சிலபதிவர்களை நீக்கி இருக்கிறது, யார் யார் நீக்கப்பட்டர்கள் என்ற தகவலைக் கூடச் சொல்லவில்லை என்று மட்டும் தான் குறித்திருந்தேன் அன்றி... தமிழ்மணம் எப்படி அவ்வாறு நடந்து கொள்ளலாம் என்றெல்லாம் கேள்வி கேட்கவில்லை, சூடான இடுகையில் இடம் பிடிக்கவும் அலையவும் வில்லை.

'நாங்கள் அலைகிறோம்' என்று எதைவைத்து மனம் போன போக்கில் எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. இவர்களின் செயல் சுய விளம்பரம் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. இதுபோன்று செய்வதில் கிடைப்பது ஓர் நாள் விளம்பரம் தான், அடுத்தவாரம் அதையெல்லாம் பதிவர்கள் மறந்துவிடுவார்கள்.

சூடான இடுகையில் இருந்து நீக்கியதால் நான் உட்பட யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஓர் நாள் விளம்பரத்திற்கு ஆசைப்பட்டு சூடான இடுகை அலைவதாகவும், அநாகரீகமாக நடந்து கொள்வதாகவும், தொடர்ந்து பொய்யான ஊகங்களை வெளியிட்டு குளிர்காய்பவர்கள் காயலாம். எது அநாகரீகம், எது தேவையற்ற ஒப்பாறி என்பது பதிவர்களுக்கு தெரியும்.

27 கருத்துகள்:

நட்புடன் ஜமால் சொன்னது…

அப்படீன்னா இன்னான்னே தெரியாத என்னை போன்றோர்...

உங்கள் பதிவுகளை படித்து கொண்டுதான் இருக்கிறோம்.

விமர்சனத்திற்கு உள்ளாவது ஒரு நல்ல எழுத்தாலருக்கு கிடைத்த சன்மானமாகவே நான் நினைப்பதுண்டு.

அண்ணா - நீங்க எழுதுங்க - நாங்க படிக்கிறோம்.

கிரி சொன்னது…

ஐயோயோயோ! ஏம்பா! யாராவது இதை நிறுத்துங்க!

இப்படி சூடு சூடுன்னு தலைப்பு வைத்து எல்லோரும் இது பற்றியே பதிவுகளே எழுதி சூடான இடுகையில் இது பற்றியே இனி இருக்கும் போல! தலை சுத்துது

தமிழ்மணம் நிர்வாகத்திற்கு ஒரு வேண்டுகோள்! தயவு செய்து இதற்க்கு ஒரு முடிவு கட்டுங்கள் ..இனியும் தாங்க முடியாது...

கிரி சொன்னது…

//கிரி said...
ஐயோயோயோ! ஏம்பா! யாராவது இதை நிறுத்துங்க!//

அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லிடாதீங்க :-))

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
//கிரி said...
ஐயோயோயோ! ஏம்பா! யாராவது இதை நிறுத்துங்க!//

அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்னு சொல்லிடாதீங்க :-))
//

கிரி,
இது தொடர்பில் இல்லை என்றாலும், பிறவற்றில் என்னை இழுப்பவர்களுக்கு ஒருமுறை மரியாதைக்காக பதிலோ, விளக்கமோ சொல்லுவேன், அதன் பிறகு கண்டுகொள்ளவே மாட்டேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
ஐயோயோயோ! ஏம்பா! யாராவது இதை நிறுத்துங்க!

இப்படி சூடு சூடுன்னு தலைப்பு வைத்து எல்லோரும் இது பற்றியே பதிவுகளே எழுதி சூடான இடுகையில் இது பற்றியே இனி இருக்கும் போல! //

கிரி,

இது சூடான இடுகையில் வராது :)

இராம்/Raam சொன்னது…

:))

ILA (a) இளா சொன்னது…

இதுவும் கடந்து போவும். விருதுக்கு தயாராகிக்குங்க.

ILA (a) இளா சொன்னது…

ஒரே விசயத்தை பல பேரு பல விதமா எழுதினா மொக்கையாம்..
நாந்தான் சொல்றேன். உங்க வேலைய பாருங்கய்யா. எழுதறதுக்கு விசயமில்லாதவங்க வேலைய்யா அது.

கோவி.கண்ணன் சொன்னது…

//ILA said...
இதுவும் கடந்து போவும். விருதுக்கு தயாராகிக்குங்க.
//

விருதா ?

அப்படியெல்லாம் இதுவரை நினைக்கல.

ILA (a) இளா சொன்னது…

//:))//
இராம், சிரிப்பான் போடுறதுக்கும் விவஸ்தை இருக்கு.

கிரி சொன்னது…

//பிறவற்றில் என்னை இழுப்பவர்களுக்கு ஒருமுறை மரியாதைக்காக பதிலோ, விளக்கமோ சொல்லுவேன், அதன் பிறகு கண்டுகொள்ளவே மாட்டேன்//

கோவி கண்ணன் மற்றவர்கள் தங்கள் கருத்துக்களை கூறுவதை தடுக்க முடியாது. நீங்கள் தற்போது விளக்கம் அளிப்பது போல அவர்கள் (வருண், காட்டாமணக்கு மற்றும் பலர்) தங்கள் எண்ணங்களை தெரிவிக்கிறார்கள், இதில் அவர்களை குறை கூற முடியாது. இதை நீங்கள் ஒரு விமர்சனமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதை போல மேலும் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம், தெரிவிப்பார்கள். பிரச்சனை உள்ள போது அது பற்றிய விவாதங்கள் வருவது தவிர்க்க முடியாதது தானே! ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விளக்கம் கூறினால் என்ன ஆவது? இது மேலும் இது பற்றி தொடராமல் முடித்து வைக்க கூடிய ஒரே நபர் தமிழ்மண நிர்வாகம் மட்டுமே!

ஜெகதீசன் சொன்னது…

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
இன்னும் எத்தனை நாள் தான் இதைப் பத்தி எழுதிக்கிட்டே இருப்பீங்க????

Athisha சொன்னது…

எழுத மேட்டர் இல்லாதவய்ங்க எதையாவது எழுதிட்டு போறாய்ங்க விடுங்க.

வருண் சொன்னது…

***பதிவர் வருண் என்பவர் தனது இடுகையில், அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்றும், இதற்கு இவர் சொல்லும் காரணம், 'வெறி நாய், சொறி நாய் என்றெல்லாம் தலைப்பு வைத்தால் அது அநாகரீகம் இல்லையா ? என்று கேட்கிறார்***

கோவி:

இது அநியாயம்! LOL

நீங்கள் மேலே சொன்னது உங்கள் கற்பனை.

நான் யார் பெயரையும் என் இடுகையில் சொல்லவில்லை!

என்பதிவில் உங்கள் பெயரோ,அல்லது வெறிநாய் சொரிநாய் போன்ற வார்த்தகளோ இல்லை :)

வாழ்க உங்கள் கற்பனைவளம்! ;-)

Cheers!

கோவி.கண்ணன் சொன்னது…

// வருண் said...
***பதிவர் வருண் என்பவர் தனது இடுகையில், அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்றும், இதற்கு இவர் சொல்லும் காரணம், 'வெறி நாய், சொறி நாய் என்றெல்லாம் தலைப்பு வைத்தால் அது அநாகரீகம் இல்லையா ? என்று கேட்கிறார்***

கோவி:

இது அநியாயம்! LOL

நீங்கள் மேலே சொன்னது உங்கள் கற்பனை.

நான் யார் பெயரையும் என் இடுகையில் சொல்லவில்லை!

என்பதிவில் உங்கள் பெயரோ,அல்லது வெறிநாய் சொரிநாய் போன்ற வார்த்தகளோ இல்லை :)

வாழ்க உங்கள் கற்பனைவளம்! ;-)

Cheers!
//

உங்கள் பதிவில் இல்லாவிட்டால் என்ன ?

உங்கள் தலைப்பில் அநாகரீகமாக நடந்து கொள்வதாகத்தானே குறிப்பிட்டு இருக்கிறீர்கள்,

//நான் யார் பெயரையும் என் இடுகையில் சொல்லவில்லை!//

நான் தமிழக முதல்வரைத் தான் திட்டுகிறேன், கருணாநிதியைச் சொல்லவில்லை என்பது போல் இருக்கு.

//என்பதிவில் உங்கள் பெயரோ,அல்லது வெறிநாய் சொரிநாய் போன்ற வார்த்தகளோ இல்லை :)

வாழ்க உங்கள் கற்பனைவளம்! ;-)//

கற்பனையா ? சொல்வதற்கு முன்பு கற்பனை செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கற்பனையும் இல்லை, பெண்பனையும் இல்லை,

//வருண் said...
t v r அவர்களே!

பல தரமான பதிவர்களின் பதிவுகள் சூடான இடுகையில் வருவதில்லை. சொறிநாய் தெருநாய் என்று எழுதுகிற பதிவெல்லாம் வந்து குவிந்துகொண்டு இருந்தது.

//

இது தொடர்பாக உங்களுடன் லாவணி பாட விருப்பம் இல்லை.

வால்பையன் சொன்னது…

சூடான இடுக்கையை பற்றி சூடான விவாதம் நடக்கும் போல!

உபதகவல்: நேற்று என் இடுகை சூடானது

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் said...
சூடான இடுக்கையை பற்றி சூடான விவாதம் நடக்கும் போல!

உபதகவல்: நேற்று என் இடுகை சூடானது
//

அப்படியா ? உங்க பதிவை வச்சு விக்னேஷுக்கு 2 ஆம்லேட் போட்டுக் கொடுங்க, பசிக்கிறதாம்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்......
இன்னும் எத்தனை நாள் தான் இதைப் பத்தி எழுதிக்கிட்டே இருப்பீங்க????

11:41 AM, December 24, 2008//

அடுத்த ஆண்டு வரை எழுதிக் கொண்டு இருப்பேன் :)


// அதிஷா said...
எழுத மேட்டர் இல்லாதவய்ங்க எதையாவது எழுதிட்டு போறாய்ங்க விடுங்க.
//

அத நான் சொன்னா அத வச்சி 'இவருக்கு எழுத மேட்டர் இருக்காக்கும்' என்று இரு பதிவு போடுவாய்ங்க :) எதுக்கு வம்பு.

இராம்/Raam சொன்னது…

// ILA said...
//:))//
இராம், சிரிப்பான் போடுறதுக்கும் விவஸ்தை இருக்கு.//

:))

கோவி.கண்ணன் சொன்னது…

/ILA said...
ஒரே விசயத்தை பல பேரு பல விதமா எழுதினா மொக்கையாம்..
நாந்தான் சொல்றேன். உங்க வேலைய பாருங்கய்யா. எழுதறதுக்கு விசயமில்லாதவங்க வேலைய்யா அது.
//

இளா,

உங்க 'இஞ்சினியர் மாமா' சூடாகிவிட்டார் :)

இராம்/Raam சொன்னது…

மேலே போட்ட ஸ்மைலிஸ்'க்கும் வெவஸ்தை இருக்கா விவ்ஸ்??

கோவி.கண்ணன் சொன்னது…

இளா / ராம் (எல்லோராம் இல்லை)

அடுத்து உங்க 2 பேருக்கும் சண்டையா ? க்யுக் க்யுக் கமான்....கமான்!
:)

Unknown சொன்னது…

.//சூடான இடுகையில் திரட்டப்படாததால் தமிழ்மணத்தை கண்டிப்பதாகவோ, அதற்காக வருத்தப்படுவதாகவே நான் குறிப்பிடவில்லை. மற்ற மூன்று பதிவர்களும் அவ்வாறே சொல்லிவிட்டார்கள். லக்கிலுக் 'கவலைப்படவில்லை' என்றார், செந்தழல் ரவி, 'புதியவர்கள் வாய்ப்பு பெறட்டுமே' என்று வெளிப்படையாக சொல்லிவிட்டார், டோண்டு இராகவன் பெயரிலி மீது குற்றச் சாட்டுகளைச் சொல்லி முடித்துக் கொண்டார். ஆக நால்வருமே இதற்காக வருத்தப்படவில்லை.//

நான் இல்லை. அவர்கள்தான் என்கிறீர்கள்.

சரியே.

அவர்களுக்காகத்தான் பல பதிவர்கள் உசுப்பேத்தப் பட்டிருக்கிறார்கள் என தெரிந்தால் நலம்.

தம் செயலில் பிரதிபலிப்புக்கு தாம் உடந்தையில்லாவிடினும்கூட, விளைவுக்கு சிலர் பொறுப்பேற்பர்.

நசரேயன் சொன்னது…

மார்கழி மாச குளிருக்கு இது உதவியா இருக்குமா?

குடுகுடுப்பை சொன்னது…

சூடான இடுகைக்காக வதந்தி பதிவு அதுக்கு பதில் பதிவு அப்புரம் மூ.ப வுக்கு எதிர்பதிவு.இதெல்லாம் தரமான பதிவு.
சூடான இடுகைக்கு எழுதப்பட்டாலும் கொஞ்சம் நாகரீகம் கடைபிடிக்கப்படலாம்.

அது சரி(18185106603874041862) சொன்னது…

ஆச்சரியமாக இருக்கிறது...உங்கள் பதிவுடன் (முதல் முறையாக) நான் முழுவதும் ஒத்துப்போகிறேன்!

இப்படி எழுதக்கூடாது...அப்படி எழுதக்கூடாது...என்று ஆரம்பித்தால் கடைசியில் இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை!

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

மார்கழி மாதக் குளிருக்குக் கொஞ்சம் இதமாக இருந்துவிட்டுப் போவட்டுமே!

அந்தப் பதிவுகளால் உங்களுக்கு, உங்கள் எழுத்துக்கு அல்லது வேறுவகையில் ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என்றால் கண்டிப்பாகத் தவறுதான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்