பின்பற்றுபவர்கள்

22 டிசம்பர், 2008

திமுக ஆட்சிக்கு இளங்கோவன் மறைமுக மிரட்டல் !

தமிழகத்தின் வெளி கோஷ்டியால் சத்தியமூர்த்தி பவன் முதல்முறையாக தாக்கப்பட்டதற்கு இளங்கோவன் ஆவேசம் அடைந்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகளின் சத்திய மூர்த்தி பவன் முற்றுகை தெரிந்ததே. வழக்கமாக காங்கிரஸ் கோஷ்டிகளால் தான் சத்திய மூர்த்தி பவன் ரண களப்படும், அந்த பெருமைக்கு இழுக்கு போல் முதல் முறையாக விசி அமைப்பினர் அங்கு சென்று ஆர்பாட்டம் நடத்தி இருக்கின்றனர். இது போல் நிகழ்வே இதற்கு முன் நடந்தது இல்லை என்ற ரீதியில் இளங்கோவன் அறிக்கை விட்டுள்ளார்.

அதாவது "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த காங்கிரஸ் என்ன செய்லாம் என்று யோசனை செய்ய வேண்டி இருக்கும்" என்கிறார்

நல்ல யோசனை செய்யலாம், மும்பை தாக்குதல் கூட பொறுப்பற்ற மத்திய உளவு படையின் மெத்தனத்தால் நிகழ்ந்த பயங்கரமே இதற்கும், சேர்த்து யோசனை செய்து தனக்குத்தானே ஆட்சியை கலைத்துக் கொள்ளலாம்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியும், செல்வாக்கும் பிஜேபிக்கு எதிரான (போலி) மதச் சார்பின்மையினரால் பாதுகாப்பளிக்கப்பட்டு வருகிறது

******

காங்கிரஸ் கட்சி இலங்கையில் சிங்களர்களால் தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்று நம்புகிறதா ? அப்படி இல்லை என்றால், ஈழத்தமிழர்களைக் காப்பாற்றப் போகும் இராமன் யார் ?

வெண்ணை திரண்டுவரும் நேரத்தில் சோனியாவே மறந்த ராஜிவ் ஆன்மாவை குடுவைக்குள் அடைத்து வைத்துக் கொண்டு அதைச் சொல்லி தமிழக மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தைத் தவிர தமிழக காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை. இவர்களின் அதிதீவிர தமிழீழ எதிர்ப்பு ( நாங்க எதிர்க்கவில்லை என்று சொல்லுவாங்க, ஆயுதப் போராட்டம் இன்றி தமிழீழம் சாத்தியமே இல்லை) தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு முகவரி இல்லாமல் செய்யப் போவது உறுதி. காங்கிரசுடன் கூட்டணி சேரும் கட்சிகளும் இதே காரணத்தால் ஒதுக்கப்படலாம், திமுக காங்கிரஸ் கூட்டை மறுபரிசீலனை செய்வது நல்லது. காங்கிரசிடம் கூட்டணி இல்லை என்றால் கலைஞர் இன்னேரம் பெரிய அளவில் போராட்டமாக கொண்டு சென்று இருப்பார் என்றே நினைக்கிறேன். காங்கிரஸ் திமுகவிற்கு தேவை இல்லாத சுமை. கூட்டணியில் இருந்து கழட்டிவிட்டால் நல்லது, எப்படியும் காங்கிரசிலிருந்து ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்டா கோஷ்டிகள் தனியாக வந்து ஆதரிக்கும், அது போதும் :) காங்கிரசுக்கு பணிந்து போகும் திமுக அரசியல் பலருக்கும் எரிச்சலையே தருகிறது. ஒட்டுமொத்த தமிழகமே ஓரணியில் நின்றால் காங்கிரசால் என்ன செய்ய முடியும் ?

எத்தனை நாளைக்குத்தான் செத்துப் போனவங்க பெயரைச் சொல்லி பொழைப்பை ஓட்டுவாங்களோ ! இந்திராகாந்தி மறைவிற்கு பிறகாவது காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்திடமிருந்து மீண்டு இருந்தால், இராஜிவ் காந்தி ஆன்மா பற்றி பேசத் தேவை இல்லாதிருந்திருக்கும். முதலில் காங்கிரஸ் விடுதலை அடையட்டம் அதன் பிறகு இந்திய நலன் பற்றி பேசுவது நலம்.எனது இடுகைகள் எதுவும் சூடான இடுகைப் பகுதியில் வராது

10 கருத்துகள்:

ஜெகதீசன் சொன்னது…

//
எனது இடுகைகள் எதுவும் சூடான இடுகைப் பகுதியில் வராது
//
இந்தப் பிரச்சாரம் ஏன்?

நட்புடன் ஜமால் சொன்னது…

\\அதாவது "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த காங்கிரஸ் என்ன செய்லாம் என்று யோசனை செய்ய வேண்டி இருக்கும்" என்கிறார்\\

அண்ணேன் உண்மையில் சிரித்தேன்.

வருத்தம் கொள்ள வேண்டாம்

நட்புடன் ஜமால் சொன்னது…

\\எத்தனை நாளைக்குத்தான் செத்துப் போனவங்க பெயரைச் சொல்லி பொழைப்பை ஓட்டுவாங்களோ ! இந்திராகாந்தி மறைவிற்கு பிறகாவது காங்கிரஸ் கட்சி நேரு குடும்பத்திடமிருந்து மீண்டு இருந்தால், இராஜிவ் காந்தி ஆன்மா பற்றி பேசத் தேவை இல்லாதிருந்திருக்கும். முதலில் காங்கிரஸ் விடுதலை அடையட்டம் அதன் பிறகு இந்திய நலன் பற்றி பேசுவது நலம்.\\

இதுக்காகவே கொல்லுவாய்ங்க போல

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
//
எனது இடுகைகள் எதுவும் சூடான இடுகைப் பகுதியில் வராது
//
இந்தப் பிரச்சாரம் ஏன்?
//

அது வந்து........து....சனிக்கிழமை என் பதிவை படிக்காதவர்களுக்கு தகவல்.

மதிபாலா சொன்னது…

முதலில் காங்கிரஸ் விடுதலை அடையட்டம் அதன் பிறகு இந்திய நலன் பற்றி பேசுவது நலம்.

//

இது மேட்டரு. மொதல்ல அவனவன் ஒழுக்கத்த பாக்கோணும்.

சும்மா நச் கமெண்ட்டு தல.

சஞ்சய் சார் - பார் யுவர் கமென் ட்ஸ் ப்ளீஸ்.!

நையாண்டி நைனா சொன்னது…

Present Sir...

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

கோமான்கள் வீட்டு கோவூர் கழுதை தங்கபாலு!
பெரியார் குடுப்பத்தில் பிறந்த பெரண்டை இளங்கோவன்!
வேலூரில் பிறந்த வெறிநாய் வேறு!
காங்கிரஸ் கட்சியை சவக்குழிக்குள் அனுப்பாமல் விடாது கழுதை!

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

////முதலில் காங்கிரஸ் விடுதலை அடையட்டம் அதன் பிறகு இந்திய நலன் பற்றி பேசுவது நலம்.////
///வெளி கோஷ்டியால் சத்தியமூர்த்தி பவன் முதல்முறையாக ///


உண்மை
:-)))))

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
கோமான்கள் வீட்டு கோவூர் கழுதை தங்கபாலு!
பெரியார் குடுப்பத்தில் பிறந்த பெரண்டை இளங்கோவன்!
வேலூரில் பிறந்த வெறிநாய் வேறு!
காங்கிரஸ் கட்சியை சவக்குழிக்குள் அனுப்பாமல் விடாது கழுதை!
//

ரொம்ப கோவமாக இருக்கிங்க, காங்கிரஸ் அவ்வளவு சீக்கிரம் சவக்குழிக்குள் போகாது, முதலில் கோமா.......

கோவி.கண்ணன் சொன்னது…

நையாண்டி நைன, மற்றும் இராதாகிருஷ்ணன் ஐயா
நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்