பின்பற்றுபவர்கள்

1 டிசம்பர், 2008

மும்பை தாக்குதல் "சோ" த்தனமான பதில்கள்

கேள்வி : மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் பற்றி

சோ : அரசு செயல் இழந்துவிட்டதைத் தான் காட்டுகிறது, சோனியா காந்தி தலைமையிலான அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்

கேள்வி : மலேகான் குண்டு வெடிப்பு பற்றி

சோ : மும்பை தாக்குதல் நடப்பதற்கு காரணமே மத்திய அரசு மலேகான் குண்டு வெடிப்பைப் பற்றி தேவைக்கு அதிகமான ஆர்வம் காட்டியதால் தான் நடந்திருக்குமோ என்று கருதுகிறோன்

கேள்வி : என்ன சொல்கிறீர்கள், இதற்கும் அதற்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு தெரியுமா ?

சோ : தொடர்பு இருப்பது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை, மலேக்கான் பற்றிய விசாரணையையே செய்து கொண்டு இருந்ததால் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த ஸமயத்தைப் பயன்படுத்தி மும்பைக்குள் நுழைந்துவிட்டார்கள்

கேள்வி : பொடா சட்டம் இருந்தால் மும்பை தாக்குதலை சமாளித்து இருக்க முடியும் ?

சோ : உலக அரசியல் பார்வையாளர்கள் கூட அப்படித்தான் சொல்கிறார்கள், பாஜக அரசியல் தலைவர்களும் அதைத்தான் சொல்கிறார்கள். பொடா சட்டம் இருந்திருந்தால் தீவிரவாதிகள் உள்ளே நுழைய பயப்பட்டு அப்படி பாகிஸ்தான் திரும்பி இருப்பார்கள், பொடா சட்டத்தை எடுத்த தைரியம் தான் இந்த துணிகர செயலைச் செய்ய தூண்டப்பட்டு இருக்கிறது

கேள்வி : காங்கிரஸ் அரசு இப்பொழுது நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதே ?

சோ : எங்கே கட்டுக்குள் கொண்டுவந்தார்கள், தீவிரவாதிகளுக்கு சாப்பிட இரண்டு நாள்களுக்கு மேல் உணவு கிடைக்கவில்லை, உடல் பலம் குறைந்தது அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் போனதால் அவர்களை அழிக்க முடிந்தது, கட்டுக்குள் கொண்டு வந்திருந்தால் 200 உயிர்கள் வரை போய் இருக்குமா ?

கேள்வி : ராஜ் தாக்ரேவின் ஆட்கள் தீவிரவாதிகளை முறியடித்திருக்கலாமே ?

சோ : ராஜ் தாக்ரேவின் வேலையே மும்பையில் அன்னியர் நுழையக் கூடாது என்பது தானே, அதைத் தீவிரவாதிகள் எளிதாக செய்கிறார்கள் என்பதை அறிந்த ராஜ் தாக்ரே அவர்களை எப்படி தடுப்பார் ? தீவிரவாதிகளின் ஆன்ம சாந்திக்கு ராஜ் தாக்ரே ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொள்ள எனக்கும் அழைப்பு வந்திருக்கிறது. நான் கலந்து கொள்வதைப் பற்றி நான் இன்னும் முடிவு செய்யவில்லை

கேள்வி : இந்தியாவின் மீது நடைபெறும் தொடர் தாக்குதலை நிறுத்துவது பற்றி ?

சோ : ஏன் மோடி, ஜெயலலிதா போன்றோர் பிரதமர் ஆகக் கூடாது ? என தற்பொழுது தான் மக்கள் ஸிந்திக்க ஆரம்பித்து இருக்கிறார்கள், இது ஒரு நல்ல ஆரம்பமாகத் தெரிகிறது. மோடி பிரதமர் ஆனால் இந்தியாவிற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து விரைவில் துக்ளக்கில் கட்டுரைகள் வெளிவரும்

கேள்வி : தமிழ்நாட்டிலும் இதுபோல் தாக்குதல்கள் நடக்குமா ?

சோ : திமுகவும், திராவிடக் கட்சிகளும் விடுதலைப் புலிகளை ஆதரிக்கின்றனர், விடுதலைப் புலிகளால் தமிழகத்திலும் இது போல் நடக்கலாம்.

பின்குறிப்பு : "சோ" த்தனமான என்றால் கேணைத் தனமான என்ற பொருள் அல்ல.

24 கருத்துகள்:

விஜய் ஆனந்த் சொன்னது…

:-)))...

அருண் சொன்னது…

//பின்குறிப்பு : "சோ" த்தனமான என்றால் கேணைத் தனமான என்ற பொருள் அல்ல.//

’கோவி’த்தனமான என்ற பொருளா?

அருண் சொன்னது…

எதை எல்லாம் கிண்டல் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லயா?

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண் said...
எதை எல்லாம் கிண்டல் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லயா?
//

விவஸ்தை கெட்டவங்களுக்கு இலவச வகுப்பு நடத்துங்களேன்.

tamilnadunews சொன்னது…

ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..
ஹா..ஹா..ஹா..

அருண் சொன்னது…

//விவஸ்தை கெட்டவங்களுக்கு இலவச வகுப்பு நடத்துங்களேன்.//

வாங்க. உங்களுக்கு தான் முதல் அழைப்பு.

அருண் சொன்னது…

கண்டிப்பா attend பண்ணுங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண் said...
கண்டிப்பா attend பண்ணுங்க.
//

நானும் அதுக்குத்தான் கேட்டேன். நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு வாங்க.

அருண் சொன்னது…

//நானும் அதுக்குத்தான் கேட்டேன். நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு வாங்க.//

ஆமாங்க. உங்களைப் போன்ற விவஸ்தை கெட்டவங்களுக்கு நடத்தனுமில்லயா?

ஜெகதீசன் சொன்னது…

:)))

கோவி.கண்ணன் சொன்னது…

//அருண் 2:37 PM, December 01, 2008
//நானும் அதுக்குத்தான் கேட்டேன். நல்ல பயிற்சி எடுத்துக் கொண்டு வாங்க.//

ஆமாங்க. உங்களைப் போன்ற விவஸ்தை கெட்டவங்களுக்கு நடத்தனுமில்லயா?
//

அதான் வருகிறேன் என்று சொல்லிவிட்டேனே, நன்றாக பயிற்சி எடுத்துவரவும்

Great சொன்னது…

இதில் சோத்தனம்(கேணத்தனம்) குறைச்சலாகத்தான் இருக்கு.
முழுசா வேணும்னா துக்ளக் தான் படிக்கணுமோ??

பழனி வேல் ராஜா க சொன்னது…

Very nice

அக்னி பார்வை சொன்னது…

உஙளுக்கு விஷ்யம் தெரியாத கோவி.கண்ணன்,

மோடி கிருஷ்னரின் பத்தவது அவதாரமான ’கல்கி’. அவர் பிரதமராகி, நியத்தை கலிகலாத்தில் காப்பாற்றுவார்..

இதெல்லம் தெரியாமலிருந்தால், அவ்வளுவுத்தான்..உஙளுக்கு சொர்கத்தில் இடமில்லை..

-----------------------------

பதிவு ‘சோ’க்காக இருந்தது

சி தயாளன் சொன்னது…

//பதிவு ‘சோ’க்காக இருந்தது//

அதே. அதே...

muthukumaran சொன்னது…

ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்க பதக்கம் வாங்கிய அபினவிர்க்கு (abhinav bindra) 6 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது அரசாங்கம்..
இத்தனைக்கும் அவர் ஏற்கனவே பணக்காரர்..

ஆனால் மும்பை தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான எங்கள் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 5 லட்சம்.. பாதுகாப்புக்கு படை வீரர்களின் மதிப்பு அவ்வளவு தானா?

பாதுகாப்பு படை வீரரின் உயிரின் மதிப்பு 5 இலட்சம்.. ஆனால் ஒலிம்பிக் தங்கத்தின் மதிப்பு 6 கோடியா????????....

சிந்திப்போம்..

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

சோ என்று மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக இடப்பட்ட பதிவு.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

//பின்குறிப்பு : "சோ" த்தனமான என்றால் கேணைத் தனமான என்ற பொருள் அல்ல.//

ஆமா ஆமா உண்மை தான்.

நசரேயன் சொன்னது…

சோ வே சொன்ன மாதிரி இருந்தது

Darren சொன்னது…

"சோ" த்தனமான என்றால் கேணைத் தனமான என்ற பொருள்.

HAHAHA..Nice Post

கோவி.கண்ணன் சொன்னது…

//Dharan 3:07 AM, December 02, 2008
"சோ" த்தனமான என்றால் கேணைத் தனமான என்ற பொருள்.

HAHAHA..Nice Post
//

"சோ" த்தனமான என்றால் கேணைத் தனமான என்ற பொருள் 'அல்ல' ன்னு தானே போட்டு இருகேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நசரேயன் said...
சோ வே சொன்ன மாதிரி இருந்தது

1:55 AM, December 02, 2008
//

நசரேயன், அவரு எவ்ளோ பெரியவர் அவரை பார்த்து அவரு போல எழுதுறது, நாக பாம்பைப் பார்த்து மண்புழு படம் எடுக்க முயன்றது போலத்தான் இருக்கும்

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...
சோ என்று மழை பெய்து கொண்டிருக்கும் நேரத்தில் சரியாக இடப்பட்ட பதிவு.
//

வெளிச்ச பதிவரே ?

மழை எங்கே பெய்தது ? உங்க ஆத்துக்கிட்டேயா ?

நவநீதன் சொன்னது…

நீங்க காமெடி கூட பண்ணுவீங்களா....!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை
"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்